Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் ஆடையில் இந்துக்கடவுள் : இந்துமத அமைப்புகள் கண்டனம் (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்:-

 “இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள். பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல.

இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.

amezon.jpg

amezon1.jpg

amezon2.png

amezon3.jpg

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=629243557818425625#sthash.Ct9miVOZ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சொன்னார். இப்ப லெக்கிங்ஸில் இருக்கின்றார். பார்க்க எனக்கும் பக்தி வருகின்றது. :wub:

அந்த கடவுளை அப்படியே மூலஸ்தானத்தில் வைத்து கும்பிடலாம்  பக்தி மேலிட்டால் அதை அடைய நினைக்கலாமோ.

லெக்கிங்ஸ்சில் இந்துக் கடவுளின் உருவம்: எதிர்ப்புக்குப் பின் நீக்கியது அமேசான்
 
இந்து மதக் கடவுள்களின் படங்களைக் கொண்டு டிசைன் செய்யப்பட்ட லெக்கிங்ஸ் வகைகள் பட்டியலை அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியது.

அமெரிக்காவின் வாஷிங்டனின் சியேட்டிலை தலைமையாகக் கொண்ட சர்வதேச மின் வணிக நிறுவனமான அமேசான், இணையத்தின் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தனது சொந்த தயாரிப்பான அமேசான் கிண்டில், கிண்டில் ஃபயர், ஃபயர் டிவி, செல்போன்கள், உடைகள் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து இணைய வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நிலையில், ஆடை வகைகளையும் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் யிஸ்ஸாம் பிராண்ட் வரிசையில், பெண்கள் அணியும் லெக்கிங்ஸ்களை இந்து மதக் கடவுள்களின் ஓவியங்களைக் கொண்டு வடிவமைத்துள்ளது. இதில் பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி படங்களை விதவிதமான முறையில் டிசைன் செய்து விற்பனைக்கான ரகங்களை தனது இணையதளத்தில் பட்டியலிட்டிருந்தது அமேசான் நிறுவனம்.

அமெரிக்காவில் இந்த லெக்கிங்ஸ் பலரது வரவேற்பை பெற்று இருந்தாலும், இதற்கு இந்து மத அமைப்புகளின் சார்பில் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.

அமெரிக்காவில் செயல்படும் உலகளாவிய இந்து மதச் சமூகம் என்ற அமைப்பு, 'இந்துக் கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ள லெக்கிங்ஸ் பட்டியலை தங்களது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜன் சேத் மற்றும் இந்து அமைப்பு ஆதரவாளர்கள் அமேசான் நிறுவனத்துக்கு எதிராக குரல் எழுப்பினர்.

'இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள். பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்துக் கடவுள்களின் படங்களை சித்தரித்து வடிவமைக்கப்பட்ட லெக்கிங்ஸ் பட்டியலை தனது இணையதளத்திலிருந்து அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6503232.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக் கடவுள்மார் குடுத்து வச்சது அவ்வளவுதான். கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டவிடுகிறான்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சொன்னார். இப்ப லெக்கிங்ஸில் இருக்கின்றார். பார்க்க எனக்கும் பக்தி வருகின்றது. :wub:

இப்படி நான் எழுதினால் ............

"மத உணர்வை தூண்டும்" விடயமாக கருத படுகிறது. எனக்கு கடவுள் மீதே நம்பிக்கை இல்லை. நான் ஏன் மத உணர்வை தூண்ட வேண்டும்?

உலகில் பெரும்பாலான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் .... மத உணர்வை தூண்டுவது நல்ல விடயம்தானே??

எங்களுடைய (ஈழதமிலரகளின்) வாழ்வில் இந்துமதம் இன்றி அமையாதது. எங்களுடைய வாழ்வில் நாளும் நாளும் அது எதோ ஒரு தாக்கத்தை உண்டுபண்ணி கொண்டே இருக்கும். ஈழத்தில் இருக்கும் முஸ்லிம்களை கூட அது பதித்து வருகிறது. காரணம் ஈழதமிழர்களின் ஆதிமதம் இந்துதான் மற்றவை எல்லாம் இடையில் வந்தவை. எமது முதியோர் மதத்தை பெருதும் மதித்தும் ...... ஒரு மிதவாத பக்தியுடனும் வாழ்ந்து வந்துள்ளார்கள். எங்களுடைய வாழ்வு என்பது இந்த மூல சிந்தனையின் அத்திவாரத்தில் இருந்தே கட்டபட்டது. அவர்களுடைய கால கட்டத்திலும் அவர்களுடைய அறிவுசார் நிலையிலும் அது சரியானதாக இருந்திருக்கலாம். இப்போ உலகம் மாறிவிட்டது நாம் நுகர்வு சந்தையில் வீழ்த்த பட்டுள்ளோம். முன்பு இல்லாத பலவேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம். வாழ்வு நிலை என்பது முற்றிலும் மாறிவிட்டது. முதியோர் தம்மிடம் இருந்த அறிவியலை வைத்தே மதத்தை அதை சார்ந்த கதைகளை உருவாக்கினார்கள். இப்போ மனிதன் நவகிரகங்களில் சென்று இறங்கிவிடுகிறான். ஒருபிள்ளை பிறக்கும்போது நவகிரகங்களின் அதிர்வலைகள் அந்த பிள்ளையின் உடலில் ஏற்படுத்தும் உணர்வளைகலைகளை விட ஆஸ்பத்தரியில் இருக்கும் ஒரு மின்குமிழ் ஏற்படுத்தும் அதிர்வலைகள் ஆயிரம் மடங்கு அதிகமனாவை. அதநூடுதான் இனி மதத்தை பார்க்கமுடியும் பார்க்கவேண்டும். மதங்களை மனிதர்களுக்கு பயன் உள்ளதாக மாற்றீடு செய்யவேண்டும். எமது சமூகம் சார்ந்து சிந்திக்கும்போது இந்து மதத்தை விட்டு விட முயாது ....... பெரும்பாலான மனிதர்களை குருடர்கள் ஆக அது வைத்திருக்கும்போது அதை விடுத்து சமூகம் சார்ந்து நகரமுடியாது. சிலருக்கு இது புரியவில்லை .... எனக்கு கற்பனையில் ஒரு வடிவத்தை தருகிறார்கள் அந்த கற்பனை உருவம் பேசும் கருத்தாக எனது கருத்தை விளங்கி கொள்கிறார்கள். அதனால் பல கருத்தை நிர்வாகம் தூக்கிவிடுவதொடு சில மிரட்டல் வேலைகளையும் செய்கிறார்கள். 10 வெற்று கருத்துக்கள் இருக்கும்போது 11 ஆவது கருத்து வெற்று கருத்தை சார்ந்துதான் இருக்கும். மேலே இருக்கும் 10 வெற்று கருத்தை அப்படியே வைத்துகொண்டு 11 ஆவது கருத்தில் நீதி நியாயம் தேடுவது ஒரு கருத்து களத்தில் ஆரோக்கியமானதாக இருக்காது. பொதுக்களம் என்று ஒன்றை திறந்து வைத்துகொண்டு கருத்தாடல் தமது எண்ணம் சார்ந்தே  இருக்கவேண்டும் என்று எண்ணி கொள்கிறார்கள்.

இப்போது இந்து கடவுள்களை இப்படி செய்திருக்கிறார்கள் ..... இது கடவுள்களுக்கு உணமைய்லேயே அவமானமா? இது இந்து மதத்தை அவமதிக்கிறதா? இந்து மதத்திற்கு இலவச விளம்பரம் ஆவதால் இதை  புறக்கணிக்க தேவை இல்லை?? இருந்தாலும் புறக்கணிக்கவே வேண்டும்.

இப்படி எதாவது ஒரு ஆக்கபூர்வ கருத்தை எந்த ஒரு இந்துபிரானும் இங்கே பதியபோவதில்லை. எனது நிலைப்பாடு இப்போதைய இந்துமதம் வெறும் ஏமாற்று மதமாக இருக்கிறது .... இதை இப்படியே தொடர முடியாது.... தொடர்வதானால் சில மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். ஆக இந்துமதம் எங்கெல்லாம் சமூகத்தை பாதிக்கும் காரணியாக இருக்கிறதோ ...... அங்கெல்லாம் எனது சுட்டிகாட்டலும் இருந்து கொண்டே இருக்கும். எனது நிலைப்பாடு பிழையானது .... எமது மதம் மிகவும் புனிதமானது என்று கருதுபவர்கள். அதன் புனிதம் பற்றிய மூல ஆதரங்களுடன் எனது கருத்தை நிராகரிக்க வேண்டும். பதிலாக நிர்வாகம் எனக்கு எச்சரிக்கை விடுகிறது .......(மிகவும் நகைப்பாக இருக்கிறது) இதில் நிர்வாகத்திற்கு வேலையே இல்லை...... கருத்தாடல் பண்பு தவறி போகலாம் வார்த்தைகள் சமூக அல்லது யாழ் கள விதிமுறை தாண்டி போகலாம்.  அதை காரணம் காட்டி அதை நீக்குவது எனபது வரவேற்க கூடியது. இது எந்த காரணமும் இல்லை கருத்து காணமல் போயிருக்கும் வெறும் பித்தலாட்டம் மட்டுமே இருக்கிறது.

நேற்று நிழலி அவர்கள் எனது கருத்தில் இருந்து ------- என்ற ஒரு சொல்பிரயோகத்தை நீக்கியதுடன் என்னை எச்சரிக்கையும் செய்திருந்தார்..... வரவேற்க கூடியது.

காரணம் 1 அந்த ------ கொண்டது என்பது என்னால் ஆதாரத்துடன் நிருபிக்க பட்டு இருக்கவில்லை.

காரணம் 2 அந்த கூட்டம் ----------- என்பது எனது கருத்தில் நிருபிக்க படவில்லை.

காரணம் 3 வெறும் அவதூறு சொல்பிரோயகமாக என்னால் பாவிக்க பட்டிருந்தது.

ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் களத்திற்கு அது களங்கம் ஏற்படுத்தும் எனபதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால்........

அர்ஜுன் என்று ஒரு உறுப்பினர் புலிகளை மொக்கு கூட்டம்  என்று அதே திரியில் 10 20 தடவை எழுதிவருகிறார். இது எந்த வகையில் அடங்குகிறது என்பது புரியவில்லை. எனது பதில் கூட அப்படியான ஒரு கருத்துக்கு கொடுத்த பதிலாக இருந்தது. ஒருவருடைய கருத்துக்கு பதில் தரும்போது பதில் அந்த கருத்தை பிரதிபலித்தே இருக்கும். இது கூட புரியாத ஒருவர் எப்படி மட்டுறுத்த முடியும்?

இதில் நிறைய எழுதலாம் ஆனால் ........ எழுதாமல் இருப்பது நன்று.

கிருபனை போல எனக்கும் நல்ல பக்தி வருகிறது.... என்று சொல்ல வந்தேன்.

இன்னொரு வடிவில் சிந்தித்து பார்த்தேன் .... அண்மையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்து வருகிறது(எப்போதும் இப்படிதான் இருந்தது இப்போ செய்திகளில் வர தொடக்கி இருக்கிறது) அதை தடுக்க இது உதவலாம் என்று தோன்றுகிறது. அதுகும் பெண்களின் தொடைகளில் பிள்ளையார் இருப்பதால் இந்து மத அடியார்கள் பக்தி மயக்கத்தில் மனம் மாறிவிடுவார்கள். பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கா வாய்ப்பிருக்கிறது.

Edited by நிழலி
அவச் சொல் நீக்கம்

ஆ,, ஆ,
 
மருதர்,
 
வந்தாச்சா. இந்தவிசயம் எண்டோன்ன, வந்து பாயப் போட்டு படுக்க வேண்டியது தான்.
 
சரி வந்ததுதான் வந்தியள், இரண்டு சொல்லு, புத்தரைப் பத்தியும சொல்லிப் போடுங்கோ.
 
உங்களுக்குப் பிடிக்காத மதத்தினை பத்தி பேச, நீங்கள் சார்ந்த மதத்தினை, அடையாளப் படுத்தக் கூடிய பெயருடன் வருவதே நேர்மை, கண்ணியம் மிக்கது.
 
same side goal போடுகீறீர்கள் என்று அடுத்தவர் நினைப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்தனம்.
  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதமாக இருந்தாலும்.. அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனதைப் புண்படுத்தும் படியான இந்த அடாவடிகள் நிறுத்தப்பனும். ஐநா மதச் சுதந்திரத்தை வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடிக்க.. கடுமையான சட்டங்கள் இயற்றப்படனும்..!! இவ்வாறான செயற்பாடுகள் கூட மனிதர்களிடையே குரோத எண்ணத்தை வளர்ப்பவையாக அமைகின்றன..!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனானப்பட்ட அமேசனே லெக்கிங்ஸைத் தூக்கினாப் பிறகு யாழ் களம் மட்டும் ஏன் இந்துக் கடவுளரை அவமதிக்கும் லெக்கிங்ஸ் படக்களை விட்டுவச்சிருக்குது! :o

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருக்கும் கால்கள் ஒரு ஆண் உடையதாக கூட இருக்கலாம்.
தலைப்பு பெண்களின் ஆடைகளில் ....
அக ஒரு சரியான முடிவு எடுக்கும்வரை படங்கள் இருப்பதே நன்று.

ஆ,, ஆ,
 
மருதர்,
 
வந்தாச்சா. இந்தவிசயம் எண்டோன்ன, வந்து பாயப் போட்டு படுக்க வேண்டியது தான்.
 
என்ன பிள்ளையாகுட்டியா?
மதமா கடவுளா?
எந்த பிரச்சனையும்  இல்லை. இப்பிடி ஏதாவது இடம் கிடைத்தால் அடிச்சு கலைக்குமட்டும் வந்து படுத்துகிரதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் முழங்கால், தொப்பூழ், இடை மற்றும் டெல்ட்டா பிரதேசம் என்பனவற்றின் பரிமாணங்களை வைத்துப் பார்க்கும்போது இது பெண்ணின் கால்கள்தான் என என்னால் உறுதிபடக்கூற முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சைவ சமயத்தை ஒரு இளிச்சவாய் மதம் என நினைத்து விட்டனர். அப்படியல்ல!!!!! எதையும் தாங்கும் மனம் கொண்டது சைவமதம். :icon_idea:
 
ஆதியும் அந்தமுமில்லாத சைவம் சிவனேயென்று தன்பாட்டிலிருக்க.... கிறிஸ்துவும் அல்லாவும் நடாத்தும் அமைதியான உலகப்போர் நடக்கின்றதே!!!! இதை யாரறிவார்????? :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

amezon3.jpg

லெக்கிங்ஸ்சில், கடவுளின் படத்தை போடாமல்,
ரீ- சேட்டில் படங்களை போட்டால், பார்த்து ரசிக்கலாம்.

இவ்வாறான கடவுள் படங்கள் சில வருடங்களுக்கு முன்பே பிக்கினியில் வந்து விட்டது தமிழ்சிறி. நீங்கள் இதுவரை பார்க்காது ஆச்சரியமே.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களை இடிக்கும்போது வராத கண்டனம் இந்த சப்பை மேட்டருக்கு வந்திருக்கு.

மருது நீங்கள் தூற்றி எழுதுவது இந்துமதத்தை - அதை சார்ந்த ஒருவன் செய்யும் பிழையை நீங்கள் மதத்தில் ஏற்றுகிறீர்கள்...

அர்ஜூன்/நான் புலியை பிழை சொல்லுவது (அர்ஜூன் அல்லது நான் ஒருகாலமும் மறைக்கவில்லையே தான் புலிகளின் செயல்களை எதிர்ப்பதை) போல் நீங்கள் "இந்து மதத்தை" தான் தூற்றுகிறீர்கள்..ஒரு நிறுவனமோ..பாதுகாவலரோ என்று எதுவும் அற்ற மதத்தை தான் மதம் பரப்பும் கிருத்தவ மிசனரிகள் கணக்காக குறை கூறுகிறீர்கள்........அதில் பிழை செய்தவனை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அல்ல...நீங்கள் கூறுவது எல்லாம் இந்துமதமே அவனை திருடு/பெண்களை/சிறுமிகளை வன்கொடுமை செய் என்பது போல......அத்தோடு கிருத்துவமதமே ஏதோ உலகை உய்விக்கவந்த மதம் போலும் பிரச்சாரம் செய்கிறீர்கள்....தேவைஎன்றால் நீங்கள் எழுதியவையை எப்படி தொணிக்கின்றன என மற்றவர்களிடம் கேளுங்கள்....

நியானி: ஒருமையில் விளித்து எழுதியவை திருத்தப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5(2088).jpg

இது போன்று சிலுவையுடன் கூடிய படங்களை கூகுளில் தேடினேன் கிடைக்கவில்லை. காணவில்லை.....தரவேற்றப்படவில்லை......அனுமதிக்கவில்லை......அல்லது என்னவென்பது?????

  • கருத்துக்கள உறவுகள்

5(2088).jpg

இது போன்று சிலுவையுடன் கூடிய படங்களை கூகுளில் தேடினேன் கிடைக்கவில்லை. காணவில்லை.....தரவேற்றப்படவில்லை......அனுமதிக்கவில்லை......அல்லது என்னவென்பது?????

நானும் தான்.

10(1554).jpg

டிசைனருக்கு ஆனாலும் குறும்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான கடவுள் படங்கள் சில வருடங்களுக்கு முன்பே பிக்கினியில் வந்து விட்டது தமிழ்சிறி. நீங்கள் இதுவரை பார்க்காது ஆச்சரியமே.

இதுவரை... "பிகினி" அணிந்த பெண்களை, நிமிர்ந்து பார்த்ததே இல்லை.

இனி இதற்காகத் தன்னும், உற்றுப் பார்க்க வேண்டும். ருல்பன். :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

மருது நீங்கள் தூற்றி எழுதுவது இந்துமதத்தை - அதை சார்ந்த ஒருவன் செய்யும் பிழையை நீங்கள் மதத்தில் ஏற்றுகிறீர்கள்...

அர்ஜூன்/நான் புலியை பிழை சொல்லுவது (அர்ஜூன் அல்லது நான் ஒருகாலமும் மறைக்கவில்லையே தான் புலிகளின் செயல்களை எதிர்ப்பதை) போல் நீங்கள் "இந்து மதத்தை" தான் தூற்றுகிறீர்கள்..ஒரு நிறுவனமோ..பாதுகாவலரோ என்று எதுவும் அற்ற மதத்தை தான் மதம் பரப்பும் கிருத்தவ மிசனரிகள் கணக்காக குறை கூறுகிறீர்கள்........அதில் பிழை செய்தவனை பற்றி நீங்கள் குறிப்பிடுவது அல்ல...நீங்கள் கூறுவது எல்லாம் இந்துமதமே அவனை திருடு/பெண்களை/சிறுமிகளை வன்கொடுமை செய் என்பது போல......அத்தோடு கிருத்துவமதமே ஏதோ உலகை உய்விக்கவந்த மதம் போலும் பிரச்சாரம் செய்கிறீர்கள்....தேவைஎன்றால் நீங்கள் எழுதியவையை எப்படி தொணிக்கின்றன என மற்றவர்களிடம் கேளுங்கள்....

நியானி: ஒருமையில் விளித்து எழுதியவை திருத்தப்பட்டுள்ளன.

இந்துமதம்(சைவமதம்) சீர்திருத்தம் பெறவேண்டும் அது என்னுடைய பாட்டன் பூட்டி சொத்து. நீங்கள் எப்படி விளங்கிரீர்கள் என்பதற்கு நான் பொறுப்பாளியாக இருக்க முடியாது. அனால் நான் எழுதுவதில் தூற்றல் அல்லது வீண் பழி என்பன இருந்தால் அவற்றை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதும்போது. அதை பற்றி விவாதிக்கலாம். வெறுமன நீங்கள் போடும் பழிகளுக்கு நான் எப்படி பதில் கூற முடியும் ?
 
இந்துமதம் எத்தனை மக்களை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பார்பானின் சாதிய வெறியை மதத்தினுடாக அப்படியே உள்வாங்கி கொண்டவர்களால் எத்தனை எளியவர்கள் எள்ளி நகை ஆடபடுகிரார்கள் என்பது உங்களுக்கு புரியுமா?
எத்தனை பெண்கள் பள்ளி பாடங்களை தொடர முடியாது இடை நிறுத்தி போயிருப்பார்கள்?
 
கண்கெட்ட பக்தியால் இன்று ஊர் முழுதும் கோவில் கோபுரங்கள் மட்டும் எழுகின்றன அதே ஊரில் எத்தனை ஏழைகள் உணவின்றி தவிக்கிறார்கள்? எமது மதம் என்ன சொல்கிறது என்ற அடிப்படை அறிவுகூட அற்று ஆடு மாடுகள் போல் அலைகிறார்கள். 
இந்த கூட்டத்தால்தான் இன்று இந்த மதம் இப்படி சாக்கடையில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது.
பணத்தை கொடுத்து அர்ஜனை செய்துவிட்டால் .......... அப்படியே கடவுள் அருள் தருவார் என பார்ப்பான்  ஏமாற்றி வைத்திருக்கிறான். கண்ட கண்ட காடைகளையும் கயவர்களையும் அருள்புரிந்து காப்பாற்ற  கடவுள் என்ன லூசனா ?? கடவுளை எந்த அளவிற்கு அவமதிக்கலாமோ  அந்த அளவிற்கு அவமதிக்கிறார்கள்.
வெறும் கண்கெட்ட பக்தியால் தான் இன்று எத்தனையோ அருமைகளை தன்னகத்தே கொண்டிருந்த மதம்  வெறும் போலி சாமிகளை  உருவாக்கும் ஒரு ஒடுகாலக மாறியிருக்கிறது.
 
எங்களுடைய கலை கலச்சாரம் பண்பாடு எல்லாம் சைவமதத்துடன் தான் ஒன்றி கிடக்கிறது. சைவ மதம்போல்  இன்னொரு மதம் தமிழராகிய எமக்கு சரிபட்டுவராது. எங்களுடைய (கட்டிட) கலை (மேளம்) இசை என்று  எல்லாமும் சைவ கோவில்களில் மட்டுமே இருக்கிறது.
 
அடுத்தவனை இன்னொருவன் எய்த்து பிழைக்க ...... இன்னொருவனின் முதுகில் ஏறி சவாரி செய்ய மதத்தை பாவிப்பதை  அனுமதிக்க முடியாது.
ஒரு சிலர் செய்யும் தவறு இல்லை .............. பிரித்து பிரித்து வேறு வேறு தவறுகளை கண்கெட்ட பக்தர்கள் யாவரும் செய்துகொண்டுதான்  இருக்கிறார்கள். சமூகத்தில் இருக்கும் எல்லா ஒழுக்கவீனத்திட்கும் மதம் ஒரு  முக்கிய காரணமாக இருக்கிறது. போலிகள் சாமிகள் வேடம்போட பெரிதும் துணை போகிறது.
 
இந்த களத்தில்கூட சரிபிழை பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. எனக்கு ஞானஸ்தானம் தந்து ஒருமாதிரி கிறிஸ்த்தவன்  ஆக்கிவிட்டால்.............. யாரும் பாதிரிகள் செய்யும் பாவங்களை காட்டி எனது வாயை அடைத்துவிடலாம் என்றுதான்  துடிக்கிறார்கள். மதங்கள் எல்லாமே மனிதர்களால் உருவாக்கபட்டவை. கடவுளை  நான் துளியளவும் நம்புவதில்லை .............. அடுத்தவனை எய்த்து பிழைக்க அதை ஒரு ஊன்று கோலாக  பாவிக்கிறார்கள். ஆனால் முன்பு வந்த ஞானிகளுக்கு மக்களுக்கு நல்லதை எப்படி புரியவைப்பது  என்று தெரியவில்லை  அதனால் கடவுளை பயன்படுத்தி இருக்கிறார்கள். நபிகள் அந்த காலத்திலேயே  கிருமிகள்  பற்றி அறிவை கொண்டு இருந்திருக்கிறார் ...... நினைத்து பார்க்க விஜப்பாக இருக்கிறது. கடவுளை ஒரு நாளில் மூன்று முறை  துதியுங்கள் துதிக்கு முன்பு உடலை கழுவி சுத்தம் செய்யுங்கள் என்று  அதனால்தான் சொல்லிவைத்தார். இன்று சவூதி அரேபியாவில் கிடக்கும் சுயநல பேய்களுக்கு மதம் ஒரு கேடா? ஜேசு அப்பத்தை 8 ஆக பிரித்து உண்டாராம் ............... வத்திகானில் பலநூறு கோடி செலவில்  வாழ்ந்துகொண்டு  பிரச்சாரம் செய்கிறார்கள் ........... இதே உலகில் நாளும் எத்தனை சிறுவர்கள் உணவின்றி  சாகிறார்கள்?
 
இவன் அவனை சாடுவதும் ............. அவன் இவனை சாடுவதும் மதம் பிடித்த பேர்களுக்கு மட்டுமே உரித்தானது. கடவுளின் பெயரால் எத்தனை பேர் கொல்லபடுகிறார்கள்? எந்த கடவுள் கொலை செய் என்று சொல்கிறது? மதம் பிடித்த பேர்களுக்கு நான் எழுதுவது புரிய போவதில்லை. 
அதற்காக எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கு இல்லை. ஒரு பத்து வருடம் கழித்து ஒருவன்  சிந்திக்க தொடங்கினாலே போதும்.......... ஔவன் கூட சிந்திக்கவில்லை என்றால் கூட எனக்கு தோல்வி என்று ஏதும் இருக்க போவதில்லை. கேவலங்களுக்கு துணை போகவில்லை என்ற மகிழ்ச்சி எனக்கு  உரித்தாகும். 
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்று சிலுவையுடன் கூடிய படங்களை கூகுளில் தேடினேன் கிடைக்கவில்லை. காணவில்லை.....தரவேற்றப்படவில்லை......அனுமதிக்கவில்லை......அல்லது என்னவென்பது?????

அடுத்தவனின் முதுகில் ஏதும் சொறிய கிடைக்காதா ???
இப்படியான நிலையில்தான் மத வெறி இருக்கிறது.
 
அந்த படங்களில் நிறைய (சித்திர) கலை அம்சம்கள் இருக்கின்றன .... அதனால்தான் இதை வடிவமைத்தவர் பாவித்திருப்பார். இப்படி இந்து மதத்திற்கு எதிராக இது இருக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.(இது என்னுடைய தனிபட்ட எண்ணம்) 
கூகிளில் தேடி அதை வடிவமைத்தவருக்கு .......
நான் ஒரு இந்து .... உங்களுடைய இந்த செயல் என்னை மிகவும் மனம் வருந்த செய்திருக்கிறது அப்படி என்று ஒரு ஈ மெயிலை போட்டால் இவளவு பயன் கொடுக்கும்?
 
சிலுவை போட்ட லேக்கின்ஸ்தான் ............. இந்துமதத்தை பாதுகாக்கும். என்ற நிலையில் இந்துக்கள் இருந்தால்?? 
நான் அந்த கேவலமான மதத்தை பற்றி எழுத எவளவு இருக்கும்???

இந்துமதம்(சைவமதம்) சீர்திருத்தம் பெறவேண்டும் அது என்னுடைய பாட்டன் பூட்டி சொத்து. நீங்கள் எப்படி விளங்கிரீர்கள் என்பதற்கு நான் பொறுப்பாளியாக இருக்க முடியாது. அனால் நான் எழுதுவதில் தூற்றல் அல்லது வீண் பழி என்பன இருந்தால் அவற்றை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதும்போது. அதை பற்றி விவாதிக்கலாம். வெறுமன நீங்கள் போடும் பழிகளுக்கு நான் எப்படி பதில் கூற முடியும் ?
 
இந்துமதம் எத்தனை மக்களை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பார்பானின் சாதிய வெறியை மதத்தினுடாக அப்படியே உள்வாங்கி கொண்டவர்களால் எத்தனை எளியவர்கள் எள்ளி நகை ஆடபடுகிரார்கள் என்பது உங்களுக்கு புரியுமா?
எத்தனை பெண்கள் பள்ளி பாடங்களை தொடர முடியாது இடை நிறுத்தி போயிருப்பார்கள்?
 
கண்கெட்ட பக்தியால் இன்று ஊர் முழுதும் கோவில் கோபுரங்கள் மட்டும் எழுகின்றன அதே ஊரில் எத்தனை ஏழைகள் உணவின்றி தவிக்கிறார்கள்? எமது மதம் என்ன சொல்கிறது என்ற அடிப்படை அறிவுகூட அற்று ஆடு மாடுகள் போல் அலைகிறார்கள். 
இந்த கூட்டத்தால்தான் இன்று இந்த மதம் இப்படி சாக்கடையில் வீழ்ந்துகொண்டு இருக்கிறது.
பணத்தை கொடுத்து அர்ஜனை செய்துவிட்டால் .......... அப்படியே கடவுள் அருள் தருவார் என பார்ப்பான்  ஏமாற்றி வைத்திருக்கிறான். கண்ட கண்ட காடைகளையும் கயவர்களையும் அருள்புரிந்து காப்பாற்ற  கடவுள் என்ன லூசனா ?? கடவுளை எந்த அளவிற்கு அவமதிக்கலாமோ  அந்த அளவிற்கு அவமதிக்கிறார்கள்.
வெறும் கண்கெட்ட பக்தியால் தான் இன்று எத்தனையோ அருமைகளை தன்னகத்தே கொண்டிருந்த மதம்  வெறும் போலி சாமிகளை  உருவாக்கும் ஒரு ஒடுகாலக மாறியிருக்கிறது.
 
எங்களுடைய கலை கலச்சாரம் பண்பாடு எல்லாம் சைவமதத்துடன் தான் ஒன்றி கிடக்கிறது. சைவ மதம்போல்  இன்னொரு மதம் தமிழராகிய எமக்கு சரிபட்டுவராது. எங்களுடைய (கட்டிட) கலை (மேளம்) இசை என்று  எல்லாமும் சைவ கோவில்களில் மட்டுமே இருக்கிறது.
 
அடுத்தவனை இன்னொருவன் எய்த்து பிழைக்க ...... இன்னொருவனின் முதுகில் ஏறி சவாரி செய்ய மதத்தை பாவிப்பதை  அனுமதிக்க முடியாது.
ஒரு சிலர் செய்யும் தவறு இல்லை .............. பிரித்து பிரித்து வேறு வேறு தவறுகளை கண்கெட்ட பக்தர்கள் யாவரும் செய்துகொண்டுதான்  இருக்கிறார்கள். சமூகத்தில் இருக்கும் எல்லா ஒழுக்கவீனத்திட்கும் மதம் ஒரு  முக்கிய காரணமாக இருக்கிறது. போலிகள் சாமிகள் வேடம்போட பெரிதும் துணை போகிறது.
 
இந்த களத்தில்கூட சரிபிழை பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. எனக்கு ஞானஸ்தானம் தந்து ஒருமாதிரி கிறிஸ்த்தவன்  ஆக்கிவிட்டால்.............. யாரும் பாதிரிகள் செய்யும் பாவங்களை காட்டி எனது வாயை அடைத்துவிடலாம் என்றுதான்  துடிக்கிறார்கள். மதங்கள் எல்லாமே மனிதர்களால் உருவாக்கபட்டவை. கடவுளை  நான் துளியளவும் நம்புவதில்லை .............. அடுத்தவனை எய்த்து பிழைக்க அதை ஒரு ஊன்று கோலாக  பாவிக்கிறார்கள். ஆனால் முன்பு வந்த ஞானிகளுக்கு மக்களுக்கு நல்லதை எப்படி புரியவைப்பது  என்று தெரியவில்லை  அதனால் கடவுளை பயன்படுத்தி இருக்கிறார்கள். நபிகள் அந்த காலத்திலேயே  கிருமிகள்  பற்றி அறிவை கொண்டு இருந்திருக்கிறார் ...... நினைத்து பார்க்க விஜப்பாக இருக்கிறது. கடவுளை ஒரு நாளில் மூன்று முறை  துதியுங்கள் துதிக்கு முன்பு உடலை கழுவி சுத்தம் செய்யுங்கள் என்று  அதனால்தான் சொல்லிவைத்தார். இன்று சவூதி அரேபியாவில் கிடக்கும் சுயநல பேய்களுக்கு மதம் ஒரு கேடா? ஜேசு அப்பத்தை 8 ஆக பிரித்து உண்டாராம் ............... வத்திகானில் பலநூறு கோடி செலவில்  வாழ்ந்துகொண்டு  பிரச்சாரம் செய்கிறார்கள் ........... இதே உலகில் நாளும் எத்தனை சிறுவர்கள் உணவின்றி  சாகிறார்கள்?
 
இவன் அவனை சாடுவதும் ............. அவன் இவனை சாடுவதும் மதம் பிடித்த பேர்களுக்கு மட்டுமே உரித்தானது. கடவுளின் பெயரால் எத்தனை பேர் கொல்லபடுகிறார்கள்? எந்த கடவுள் கொலை செய் என்று சொல்கிறது? மதம் பிடித்த பேர்களுக்கு நான் எழுதுவது புரிய போவதில்லை. 
அதற்காக எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எனக்கு இல்லை. ஒரு பத்து வருடம் கழித்து ஒருவன்  சிந்திக்க தொடங்கினாலே போதும்.......... ஔவன் கூட சிந்திக்கவில்லை என்றால் கூட எனக்கு தோல்வி என்று ஏதும் இருக்க போவதில்லை. கேவலங்களுக்கு துணை போகவில்லை என்ற மகிழ்ச்சி எனக்கு  உரித்தாகும். 

இது வாஸ்த்தவமான கருத்து...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வடிவாய்.... தேடவில்லை என்று, நினைக்கின்றேன். :D

கையோடை எங்கடை அல்லாவும் பொறுத்த இடத்திலை பொசிஷன் குடுக்கிற படங்களையும் இணைச்சியளெண்டால் எல்லாம் சமதர்மாய் வந்துடும்.... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கையோடை எங்கடை அல்லாவும் பொறுத்த இடத்திலை பொசிஷன் குடுக்கிற படங்களையும் இணைச்சியளெண்டால் எல்லாம் சமதர்மாய் வந்துடும்.... :D  :D  :D

நான் இந்த, விளையாட்டுக்கு... வரேல்லை. :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.