Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறங்கியர் கலாசார மண்டபம் திறப்பு

Featured Replies

 
a1(22).jpg
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடைக் கிராமத்தில் 'பறங்கியர் கலாசார மண்டபம்' நேற்று ஞாயிற்றுக்கிழமை  (26)  திறந்துவைக்கப்பட்டது. 

ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இதை முன்னிட்டு இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.  

போர்த்துக்கல் நாட்டிலிருந்து வருகைதந்த பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளான  ஜொஸ் லூயிஸ் நொப்ரே, கலாநிதி பெர்னாண்டோ டி லா வியேற்றர் நொப்ரே ஆகியோர் உட்பட பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
a2(22).jpg
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், பறங்கியரும் சோனகர்போல் தமிழ்படித்து தமிழ் சமூகத்தினருடன்தான் வாழ்ந்து வருகின்றனர். சிங்களம் படித்து சிங்களவர்களுடன் வாழ்ந்ததில்லை. :o

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், பறங்கியரும் சோனகர்போல் தமிழ்படித்து தமிழ் சமூகத்தினருடன்தான் வாழ்ந்து வருகின்றனர். சிங்களம் படித்து சிங்களவர்களுடன் வாழ்ந்ததில்லை. :o

இல்லை,

மாத்தறை பகுதியில் பலர். மகிந்தர் மனைவி, பறங்கி வம்சாவளி. ஏன் மகிந்தர் கூட கலவன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை,

மாத்தறை பகுதியில் பலர். மகிந்தர் மனைவி, பறங்கி வம்சாவளி. ஏன் மகிந்தர் கூட கலவன் தான்.

அடடா, சுப்பிரமணிய சுவாமிக்குக்கூட இந்த விடயம் தெரியாமல் போய்விட்டதே. தங்களது சொந்தங்கள் என்று அவர் குறிப்பிட்டாரே....!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, பறங்கியர் எல்லேரும் சிங்களத்தில்தான் படிப்பார்கள், பொதுவாக ஆங்கிலம் நன்கு கதைப்பர்கள். இவர்களை dutch burger எனவும் அழைப்பர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலும் சில பறங்கியர் இருந்தவர்கள்.
ஒருவர் என்னுடன் படித்தவர். நன்றாக தமிழும், ஆங்கிலமும் கதைப்பார்.
சிங்களம் துப்பரவாக தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் பேசத்தெரிந்த அனைவரும் அறிவாளிகள் என்ற எண்ணம் என்னிடம் வலுவாக இருந்தது. அதனை முதலில் உடைத்தவர்கள் மட்டுநகரிலுள்ள பறங்கியர்களே. நான் வேலைபார்த்த தொழிற்சாலையில் வேலையாட்கள் தரத்தில் பறங்கியர்களும் இருந்தார்கள். ஆங்கிலம் அந்தமாதிரி. சரளமாகக் கதைப்பார்கள். ஆங்கில அறிவுள்ள இவர்கள் ஏன் இப்படி அடிமட்ட வேலை செய்கிறார்கள் என எண்ணினேன். பின்புதான் தெரிந்தது அவர்கள் 2ம் 3ம் வகுப்புக்குமேல் படித்தில்லை. சிலருக்கு எழுதப் படிக்கக் கூடத் தெரியாது. அதேநேரம் படித்துப் பட்டம்பெற்று அதிகாரிகள் தரத்திலும் பலர் இருந்தார்கள். எங்களுடன் தமிழில் கதைப்பார்கள். சிங்களம் எல்லோருக்கும் தெரியாது. அவர்கள் தங்களுக்குள்  பேசிக்கொள்ளும் போர்த்துக்கீச மொழி எங்களுக்குப் புரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை, பறங்கியர் எல்லேரும் சிங்களத்தில்தான் படிப்பார்கள், பொதுவாக ஆங்கிலம் நன்கு கதைப்பர்கள். இவர்களை dutch burger எனவும் அழைப்பர்கள் 

 

எங்கு எந்த சமூகத்தில் வாழ்கின்றார்களோ அதற்கேற்ப சாய்ந்து வாழ்பவர்கள் செம்படையர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எமது வருங்காலச் சந்ததியும்... ஒரு ' பறங்கி' இனம் மாதிரி... ஆகி விடக்கூடாது என்பதற்காகவாவது எமக்கு ஒரு நாடு தேவை என்ற எண்ணம், கொழும்பனின் பதிவைப் பார்த்த பின்னர் என்னுள் ஏற்பட்டது! :o

  • கருத்துக்கள உறவுகள்
பறங்கியர் போர்துகீசி மொழி பேசுவார்கள் என இன்றுதான் அறிந்து கொண்டேன். ஒருவேளை இப்பொழுது இம்மொழி இலங்கையில் ஆழிந்துபோய் இருக்கலாம்.
 
மலாய் மொழியும் இப்பொழுது இல்லை. இதுவும் காலப்போக்கில் அழிந்துவிட்டது.
 
முன்பு இலங்கை வானொலியில் மலாய் மஞ்சரி எனும் ஓர் நிகழ்ச்சி ஒலிபரப்புவார்கள்.
 

எங்கு எந்த சமூகத்தில் வாழ்கின்றார்களோ அதற்கேற்ப சாய்ந்து வாழ்பவர்கள் செம்படையர்கள்.

 

 

 
கள்ளர்கள் என்று சொல்கிறீர்கள்   :lol:   :D

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

பறங்கியர் மேல் ஏன் இவ்வளவு குரோதம், நக்கல், நையாண்டி?

பறங்கியர், ஐரோப்பியர்+தமிழர்/அல்லது சிங்களவர் கலப்பின் வழி வந்தவர்கள். சிலரின் மூதாதைகள் போத்துகீசர், சிலருக்கு டச்சுக்காரர் மிகச்சிலருக்கு பிரித்தானியர். தீவில் எங்கே வாழ்ந்தார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மொழி கலாச்சாரம் மாறு பட்டது.

Firangi என்ற வடமொழித்திரிபே பறங்கி.

இலங்கையில் இனவாதத்துக்கு முதலில் பலியானவர்கள் இவர்களே. ஒதுக்கப்பட்ட போது எம்மை போல எதிர்க்காமல் அவுஸ்ரேலியா பக்கம் ஒதுங்கி விட்டனர்.

இப்பவே கணிசமான புலம்பெயர் பிள்ளையள் கூடித்திரியுறது கறுப்பின, போலந்து வெள்ளையினப் பையன்களோட. அண்மையில் ஒரு கனடா தமிழ் பெண்ணும் அவரின் வெள்ளைகாதலனும் இணையத்தை கலக்கு கலக்கு என்று கலக்கி இருந்தார்கள்.

நாளைக்கு புலம் பெயர் சமூகமும் ஒரு பறங்கி இனமே.

பழிப்பு படலயில்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில்,
அவர்கள் குரல் கொடுக்க முடியாத, பாவப் பட்ட சமூகம்.
ஒல்லாந்தன், இங்க்கீலாதான் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்து
 தங்கள் நாட்டுக்கு போகும் போது, இவங்ககளையும்... கூட்டிக் கொண்டு போயிருருக்கலாம்.
நாளைக்கு,,, சிங்களவன் கலியாணம், தமிழச்சியை கலியாணம் கட்டிப் போட்டு, வரலாற்றை மாத்துவன்.
இது.. தான், நாட்டிலை, நடக்குது,+.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.afropedea.org/sri-lankan-kaffirs

இதையும் படித்துப்பாருங்கள். இலங்கை கறுப்பினத்தவரை பற்றியது.

அரபின் காபிர் (நம்பிக்கை இலாதவன்) (முஸ்லீமென்றால் நம்பிக்கை உடைவன் -காபிர் எதிர்பதம்)

ஆபிரிக்காவின் தெற்கே வாழ்ந்த இஸ்லாத்தில் நம்பிக்கை அற்ற, கறுப்பரை, ஆபிரிக்காவின் வடக்கே வாழ்ந்த அரபிகள் காபிர் என்றனர்.

இது போத்துகீசில் காப்ரே என்றாகி

சிங்களத்தில் காப்பிரி என்றும்

தமிழில் காப்பிலி எனும் ஆகியதாம்.

என்ன வினோதமான உலகு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ரோபர் மாதம் 26 ம் திகதி எப்படி இலங்கையில் பறங்கியர் தினமானது

என யாரும் அறியத்தந்தால்விளங்கிக்கொள்ளலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நிறைய பறங்கிகள் இருக்கிறார்கள்.நல்லாத தமிழ் கதைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பறங்கியர் மேல் ஏன் இவ்வளவு குரோதம், நக்கல், நையாண்டி?

 

நாளைக்கு புலம் பெயர் சமூகமும் ஒரு பறங்கி இனமே.

பழிப்பு படலயில்.

இந்தத் திரியின் பதிவிலோ, பின்னூட்டங்களிலோ குரோதம், நக்கல், நையாண்டி எதுவுமே துலங்கவில்லை தங்கள் பின்னூட்டமே அதனைச் சொல்லிநிற்பதுபோல் தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கலவன், செம்படையன், கள்ளன், பெரும்பாலும் 2ம் வகுப்பு படிதவர்கள், இடத்துகேற்ப வாழ்பவர்கள்....எல்லாம் என்னவாம்?

பாம்புதின்னிகள் எண்டு மட்டும் சொல்லவில்லை அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

கலவன், செம்படையன், கள்ளன், பெரும்பாலும் 2ம் வகுப்பு படிதவர்கள், இடத்துகேற்ப வாழ்பவர்கள்....எல்லாம் என்னவாம்?

பாம்புதின்னிகள் எண்டு மட்டும் சொல்லவில்லை அவ்வளவே.

 

என் குறையை அறைந்து காட்டிய கோசன் சே அவர்களுக்கு நன்றி. இருந்தும் தமிழனுக்குத் தமிழன்மேலுள்ள குரோதம், நக்கல், நையாண்டியோடு ஒப்பிடுகையில் இது வெறும் தூசியே. பலநூறு ஆண்டுகளின் பின்பு தோன்றிய ஒரு தமிழனைப்பற்றிய சில தமிழர்களின் பதிவுகளும், ஊட்டங்களும் அதற்குச் சான்றாகும். :blink:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.