Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

sanath_jeyasurya_lyca.jpg

லைக்கா நிறுவனத்தின் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான கட்டுக்கதையை புலம்பெயர் ஊடகங்கள் அவிழ்த்துவிட்டு அம்பலமான சம்பவம் தெரிந்ததே. லைக்காவைத் தேசிய விரர்களாக முயன்றதன் பின்னால் உள்ள அசிங்கம் இப்போது வெளியாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் சண்டே டைம்ஸ் இல் வெளியான பத்தி ஒன்றும் இதன் பின்னணியைத் தெளிவுபடுத்துகின்றது.

அலிபாபாவின் திருடர்களின் எண்ணிக்கையில் ஒன்பது நபர்கள் குறைவான லைக்காவின் குழு ஒன்று மாலைதீவில் விடுமுறையக் களிப்பதற்காகச் சென்றுள்ளது. கத்தியில் கொத்திய பணத்தைக் கொண்டாட மாலைதீவின் என்ற Four Seasons நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமுமாக நடத்தப்பட பார்ட்டியில் முறுக்கேறிய நரம்புகளோடு லைக்காவும் 31 சீடர்களும் மாலைதீவு விமாமத்தை வந்தடைந்ததனர். விடுதியில் ஆகக் குறைந்த விலையில் உள்ள அறையின் ஒரு இரவிற்கான விலை $1600 என்பது தேசிய அசிங்கங்களுக்காக தரப்படும் தகவல்.

மாலை தீவிலிருந்து கொழும்பு சென்று கொழும்பிலிருந்து லண்டனுக்குப் பயணம் செய்வதே லைக்காவின் திட்டம். அதன்படி கொழும்பிற்கு வந்தடைந்த லைக்கா குழு கட்டுனாயக்க விமான நிலையத்தில் கடை விரித்தது.கொழும்பிலிருந்து லண்டன் புறப்படுவதற்காக கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரித்திருந்த குழுவிற்கான விமானப் பயண நேரம் மதியம் 1 மணி.

சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான பங்காளிகளான 31 லைக்கா பேர்வளிகளும் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இலேயே பயணம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டனர். அந்த விமாங்களில் 31 பேருக்கு Business Class இல்லாத காரணத்தால் கத்தி பசிபிக் விமானம் ஒன்றை சிறீ லங்கன் ஏர்லைன்ஸ் ஒழுங்கு செய்து கொடுத்தது.

அங்கு வர்த்தக தங்குமிடத்திலேயே -Business Class Lounge- லைக்காவின் பணம் உள்ளே ஊற்றிய ஐந்து நட்சத்திர கசிப்பு வேலை செய்ய ஆரம்பிக்க விமான நிலையம் மீன் மார்க்கட்டாகக் காட்சியளித்தது என்று கண்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

உள்ளிருந்த ஐந்து நட்சத்திரக் கசிப்போடு விமானத்தினுள் நுளைந்த லைக்காவும் 31 உம் விமானத்தினுள் தமது தர்பாரை ஆரம்பித்தனர். விமானப் பணிப்பெண்கள் கழுகுகளிடம் அகப்பட்ட கோழிக்குஞ்கள் போலத் திண்டாடினர்.

நிலைமையை அவதானித்த விமானத்தின் கப்டன் அவர்களில் பெட்டிபடுக்கைகளோடு விமனத்தை விட்டு இறங்குமாறு பணித்தார்.

மாலைதீவில் பார்டி நடத்திவிட்டு கொழும்பு ஊடாக லண்டன் திரும்பிய பார்ட்டியில் முன்னை நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவரும் இன்றைய கிரிகட் தெரிவுச்சபையின் தலைவருமான சனத் ஜெயசூரிய M.P மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்சின் சந்தைப்படுத்த முகாமையாளரான அரைத் தமிழர் ஜே.பி.ஜெயசீலன் ஆகியோர் அடங்கியிருந்தனர். ராஜபக்ச குடும்பத்தின் அல்லக்கையான சனத் ஜெயசூரியாவையும், தனது முதலாளிகளில் ஒருவரான ஜே.பி.ஜெயசீலனையும் சேர்த்தே விமானத்தை விட்டு வெளியேறுமாறு காப்டன் பணித்தார்.

உலகின் பணக்காரக் கும்பலொன்று பயணிக்கும் விமானத்தில், அந்த விமானத்தின் பயணச்சீட்டுப் பங்களார்களையே விமானத்தை விட்டு வெளியேற்றுவதா என்று 31 பேரும் கப்டனை எதிர்க்க ஆரம்பித்தனர். தொலைபேசி அழைப்புக்கள் பறந்தன. ராஜபக்ச குடும்பம், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் என்று யார் சொல்லியும் கேட்க மறுத்த கப்டன், இவர்கள் பயணம் செய்தால் ஏனைய பயணிகளுக்கு ஆபத்து என்று உறுதியாகக் கூறினார். லைக்காவையும் 31 பெருமக்களையும் விமானத்தில் அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார்.

பணத்திற்கு இணைய ஊடகங்கள், தேசிய சீமான்களை வாங்கியது போன்று பைலட் கப்டனை வாங்க முடியவில்லை. அப்போது தான் விலைபோகாத மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று லைக்காவும் 31 உம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இக்கும்பலை இறக்குவதற்காக விமானம் 2மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பையும் கப்டன் பயணிகளுக்கு விடுத்திருந்தார்.

இறுதியில் லைக்கா குழு விமானத்தை விட்டு இறங்கி துண்டைக்காணோம் துணியை காணோம் என்று பெட்டி படுக்கைகளையும் தூக்கிக்கொண்டு ஒட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சிறீ லங்கன் ஏர்லைன்சின் முக்கிய புள்ளியும் சேர்த்தே கப்டன் கடாசியிருக்கிறார்.

1 மணிக்குப் புறப்பட வேண்டிய விமனம் 2 மணித்தியாலமும் 20 நிமிடமும் தாமதமாக 3:20 இற்கே கொழும்பிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

தனது முதலாளிகள் ஒருவரையும், ராஜபக்சவிற்கு நெருக்கமான இலங்கை அரச அடியாள் ஒருவரையும் எந்த அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் ஏனைய லைக்காக்களோடு சேர்த்து விமானத்தை விட்டு வெளியேற்றிய கப்டன் செந்தூர்செல்வன் தமிழர். இங்கு பணத்திற்கு விலைபோகாத செந்தூர்செல்வனே சுப்பர் ஸ்டார். கத்தி படத்தின் வேர்ஷனை உண்மையிலேயே நிகழ்த்திக்காட்டியவர்.

விமான நிலையத்தினுள் இறக்கப்பட்ட லைக்கா குழுவிலிருந்த ஆங்கில வெள்ளைக் கூலி ஒன்று மறுகணமே தமக்கு மீண்டு செல்ல விமானம் வேண்டும் என்று அடம்பிடிக்க லைக்காவிற்கு ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தே கசிப்பு அசிங்கத்தைத் தேசிய அசிங்கமாக்கும் வேலை ஆரம்பமானது.

ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி மற்றும் லைக்காவின் பணம் வழங்கும் பட்டியலிலுள்ள ஊடகங்கள் லைக்கா உரிமையாளஎ சுபாஸ்கரன் இலங்கையில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற குண்டைத் தூக்கிப் போட்டு மக்களை மந்தைகளாக்கின.

உடனடியாகவே செய்தியை உள்வாங்கிக்கொண்ட சீமானும் விசில்களும் முக நூலில் சுபாஸையும் லைக்காவையும் தேசியத் தலைவகளாக்கும் முயற்சியில் இறங்கின.

பணத்திற்காக தமிழ்ப் பேசும் மக்களின் கண்ணீரையும் அவலங்களையும் குருதியையும் விலைபேசும் இக் கும்பல்களை என்னென்பது? தம்மைச் சுற்றி மாபியா வியாபாரப் பேரரசைத் தேசியத்தின் பேரால் உருவாக்கிக்கொள்ளும் இச் சமூகவிரோதக் கும்பல்கள், எதற்கெடுத்தாலும், பிரபாகரன், புலிகள், மக்களுக்காக மரணித்த போராளிகள் போன்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அதன் ஆழத்தில் பணத்தைச் சுருட்டிக்கொள்வதே இந்த ஊடக மாபியாக்களின் அடிப்படை நோக்கம். இவர்களின் பண வெறிக்கு ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் பலியிடப்படுகிறது. இதுவரை கால தியாகங்களும் இழப்புக்களும் பயன்பட்டுப் போகின்றன.

இவர்களைப் புறக்கணிப்பதும் மக்கள் சார்ந்த உண்மையை உலகிற்குச் சொல்வதும் இன்று ஒவ்வொருவரதும் கடமை. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மட்டுமல்ல, தேசியத்தின் பேரால் பிழைப்பு நடத்தும் பண வெறியர்களும் அவர்களின் வலையமைப்புக்களும் கூட தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றன.

http://inioru.com/?p=42659

லைக்காவின் பயணம் – சுப்பர் ஸ்டாரும் சொத்திகளும் கசிப்புத் தேசியமும்

மாலைதீவில் பார்டி நடத்திவிட்டு கொழும்பு ஊடாக லண்டன் திரும்பிய பார்ட்டியில் முன்னை நாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவரும் இன்றைய கிரிகட் தெரிவுச்சபையின் தலைவருமான சனத் ஜெயசூரிய M.P மற்றும் சிறிலங்கன் ஏர்லைன்சின் சந்தைப்படுத்த முகாமையாளரான அரைத் தமிழர் ஜே.பி.ஜெயசீலன் ஆகியோர் அடங்கியிருந்தனர். ராஜபக்ச குடும்பத்தின் அல்லக்கையான சனத் ஜெயசூரியாவையும், தனது முதலாளிகளில் ஒருவரான ஜே.பி.ஜெயசீலனையும் சேர்த்தே விமானத்தை விட்டு வெளியேறுமாறு காப்டன் பணித்தார்.

http://inioru.com/?p=42659

 

இந்த செய்தியில் உள்ளவாறு ஜெயசூரியா உண்மையில் இந்த விமானத்தில் இருந்தாரா? அல்லது அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தாரா?

 

ஜெயசூரியா அந்த நேரம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் இருந்ததாக செய்திகள் சொல்கிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=629443591129640316

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148083-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88/

 

இதில் எதை நம்புவது?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வைச்சிருக்கின்ற கூட்டம் எல்லாம் பரபரப்புக்காக எதையாவது எழுத வேண்டியது தான்...அவன் தன்ட காசில்ல பார்ட்டி வைச்சால் என்ன?, கூத்தடிச்சால் என்ன?...லைக்காவுக்கு கொஞ்சமும் சளைக்காத கூட்டம் தான் இந்தக் கூட்டமும்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதை நீங்கள் நம்பியே ஆகவேணும் :D

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா பொறுக்கிக்கூட்டமும் அவர்கள் வாந்தியெடுப்பதை திருவாசகமாகக் கொண்டாடும் தமிழ்த்தேசிய மொத்த வியாபாரிகளும் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

சீமான், புலம்பெயர் லைக்காப் பினாமிகள், இவர்கள்போன்றோர் அல்லிராசா சுபாஸ்கரணை இப்போ புதிய பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்திப்பிடித்தெல்லோ கதைக்கினம்.

 

இங்க உள்ளதுகள் நன்றாக விசிலடிக்கவும் இடுப்பில் கை வைத்தபடி அதன்கீழ்ப்பகுதியை பின்னால் இருக்குக்கும் படம்பாக்கவந்த பெண்களுக்கு அசிங்கமாக அசைவுசெய்யச் சந்தர்ப்பம்தந்த கடவுளாகவெல்லோ லைக்காக் குஞ்சு சுபாஸ்கரனைப் பார்க்கின்றனர்.

 

களவெடுத்த கதை, திருடப்பட்ட இசை, ஆட்டைபோட்ட சண்டைக்காட்சிகள் இவைகளில் அனைத்தும் இருந்தாலும் கத்தி படத்தைப் பார்த்துப் பிறவிப்பயனடைவோம்.

 

லைக்கா இல்லை ராஜபக்ஸ வீட்டு நாயும் படமெடுக்கலாம் எதிர்க்கமாட்டோம், அங்கே வன்னியில் யாருக்காவது நீங்கள் பொரி உருண்டையாவது வாங்கிக்கொடுத்தால் தூ      ......ளே

 

 

பெரும் 'பரபரப்பை' ஏற்படுத்திய லைகா காறற்றை கைதுக்கு பின்னாலை உள்ள கதை இது தானாம்....

 

Captain Fantastic: Drunken UK Rajahs brought down to earth View(s):

 

The high-flying Rajahs who made it big in Europe post-1983 selling mobile telephones and buying influence got their just desserts when their boorish behavior came to an abrupt halt onboard SriLankan Airlines Flight 503 to London on the October 29 (last Wednesday).

Cartoon1.jpgThe Rajahs from the UK, all 31 of them, and all of Lankan origin except for the kiddos, were on a holiday to the Four Seasons hotel in the Maldives. The cheapest room at the Four Seasons is more than US$ 1,600 (Rs. 208,000) a night. The bunch of them all arrived in Sri Lanka and proceeded to the Maldives on a SriLankan Airlines flight. Also on the same flight and at the Four Seasons was former Sri Lankan cricket captain and national selections committee chairman, Sanath Jayasuriya, MP and the national carrier’s Marketing Manager G.P. Jayaseelan. They were all having a good time, mainly at the bar.
The holiday turned sour when the party started making their way back ‘home’ in Britain.

The ‘party’ had arrived at the Bandaranaike International Airport from Male and turned the Business Class Lounge into a fish market with their loud talk. The elders were boozing as if there was no tomorrow and the kids were running around screaming as if their parents owned the darn airport.
Then it was time to board the flight to London on Flight UL 503 at 1300 hours. The aircraft was an Airbus leased from Cathay Pacific and it could accommodate the 31 passengers in the business class. The usual SriLankan Airbus doesn’t have that many seats in the Business Class. The boorish behaviour continued unabated; by now the cabin crew headed by Chief Purser GihanWickramaratne onboard the airline getting concerned at the way some of the passengers were misbehaving.

Talk-at-the-cafe-spectator1.jpgWhereupon, the Captain of the Airbus showed up and quickly sized up the situation. He was going nowhere with this bunch of sozzled rowdies. He ordered them off the plane saying, and quite rightly so, that he was not going to endanger the other passengers nor disturb their comfort with their presence on board.
The Rajahs who own not only a mobile telephone company but also are into the airline ticketing business might have thought they owned the airline as well. One cannot blame them for thinking that way. They had access to the top echelons of the airline. Money talks, after all — in some quarters. They were on their Lyca mobile phones calling London; calling SriLankan Airlines hot-shots, MPs (who were dropping names of VVIPs). The Captain was asked to ‘take off’, mind you by senior executive officers of the airline, but he was firm in his decision. No way was he going to risk the flight.

Passengers onboard the flight were informed of the delay over the PA system. “There are some passengers who are drunk,” said the steward.
The Rajahs came to realise that money can’t buy everybody. They had been brought down to earth and grounded. Like lame tigers, with tails between their legs all 31 had to disembark, collect their baggage and go find a suitable place to stay until they got themselves on another flight.
UL Flight 503 left for London at 1520 hours — more than two hours late due to this incident — and just made it at Heathrow before ‘curfew’ time in London (flights cannot get into London after 9 p.m.)

Hats off to Capt. S. Senthoorselvan who refused to budge in the face of immense pressure — not so much from the passengers as from high officials of the national airline. Tailpiece to the story is that these folks are tipped to get the GSA (General Sales Agency) for the national airline in Britain. What with a senior official from the airline about to join them after November 25 as their CEO.

நன்றி :  http://sundaytimes.lk/141102/columns/captain-fantastic-drunken-uk-rajahs-brought-down-to-earth-125667.html

 


லைகா காறரை இறக்கி விட்டவர் தமிழ் விமானியாம். 

 

மனிசன் எந்தக் கேசிலை உள்ளை போகப் போகுதோ தெரியேல்லை..

லைக்கா பொறுக்கிக்கூட்டமும் அவர்கள் வாந்தியெடுப்பதை திருவாசகமாகக் கொண்டாடும் தமிழ்த்தேசிய மொத்த வியாபாரிகளும் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

சீமான், புலம்பெயர் லைக்காப் பினாமிகள், இவர்கள்போன்றோர் அல்லிராசா சுபாஸ்கரணை இப்போ புதிய பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்திப்பிடித்தெல்லோ கதைக்கினம்.

 

இங்க உள்ளதுகள் நன்றாக விசிலடிக்கவும் இடுப்பில் கை வைத்தபடி அதன்கீழ்ப்பகுதியை பின்னால் இருக்குக்கும் படம்பாக்கவந்த பெண்களுக்கு அசிங்கமாக அசைவுசெய்யச் சந்தர்ப்பம்தந்த கடவுளாகவெல்லோ லைக்காக் குஞ்சு சுபாஸ்கரனைப் பார்க்கின்றனர்.

 

களவெடுத்த கதை, திருடப்பட்ட இசை, ஆட்டைபோட்ட சண்டைக்காட்சிகள் இவைகளில் அனைத்தும் இருந்தாலும் கத்தி படத்தைப் பார்த்துப் பிறவிப்பயனடைவோம்.

 

லைக்கா இல்லை ராஜபக்ஸ வீட்டு நாயும் படமெடுக்கலாம் எதிர்க்கமாட்டோம், அங்கே வன்னியில் யாருக்காவது நீங்கள் பொரி உருண்டையாவது வாங்கிக்கொடுத்தால் தூ      ......ளே

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றவன் ஆதரிக்கப்படுவான். இது இயல்பு. அதுதான் லைகா விடயத்திலும்.

http://www.gnanam-fo....org/gallery-2/

புலம்பெயர் தேசத்து குழுக்கள் கோஷ்டிகள் ந க அரசுகள் போருக்கென்று பணம் சேர்த்து ஆட்டையைப் போட்டவர்கள் எவரேனும் தாயகத்தில் அறக்கட்டளைகளை நிறுவி போரால் பாதிக்கப்பட்டவர்களுக்க உதவினார்களா? லைக்கா செய்யுமளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் பத்தில் ஒரு பங்கைத் தன்னிலும் செய்தார்களா? இல்லாத போது லைக்காவை விமர்சிக்க எந்த அடிப்படைத் தகுதியும் இவர்களுக்கு கிடையாது.

லைக்கா புலம்பெயர் தேசத்தில் தனது வியாபாரம் மூலம் சம்பாதிக்கும் லாபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்கின்றது. தேசீயத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ பாதிக்கப்பட்ட மக்களின் பெயரைச்சொல்லி லாபம் பார்க்கின்றார்கள். அடயாளம் தேடுகின்றார்கள்.

லைக்கா பொறுக்கி என்றால் அதை சொல்பவர்கள் அதைவிட பல பத்துமடங்கு மோசமானவர்கள். அவர்களை எப்படி அழைப்பதென்பதற்கு இனித்தான் வார்த்தை கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.

------

இனி ஒரு இணையத்தின் ஊடக மபியா பாசிஸ்டுகள் சமூக விரோத கும்பல்கள் என்ற வார்த்தை ஜாலங்கள் எல்லாம் படிப்பதற்கு பந்தாவாக இருக்கலாம் தவிர நடைமுறை யதார்த்தம் என்பது வேறு. நடமுறை யதார்த்தத்தில் இவர்களது காச்சு மூச்சு கத்தல்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றவன் ஆதரிக்கப்படுவான். இது இயல்பு. அதுதான் லைகா விடயத்திலும்.

விடுதலைப்புலிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வழிகளில்உதவினார்கள் (உதாரணம் : செஞ்சோலை). ஆனால் நீங்கள் அதையெல்லாம் விட்டு நீங்கள் அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டிக்காட்டுபவர்கள், பின் ஏன் அல்லிராஜாவின் உதவிகளை (tax evasion இற்காக செய்வதை) மேற்கோள் காட்டுகிறீர்கள், அதற்கு 2 likes வேறு. அவ்களின் உதவிகள் tax deductible இல்லை என்றால் தெரியும் அவர்களின் வண்டவாளம்.

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில போறவங்களின் முடிச்சை அவுக்கலாம் அதே தெருவில இருக்கிற வழிப்பிள்ளையாருக்கு. ஒரு தேங்கா அடிச்சால் போதுன் என்பதுபோல் இருக்குது உறவுகள் கருத்து.

 

தவிர புலம்பெயர்ந்த தமிழன் புலத்துத் தமிழனது வாழ்வாதாரத்துக்கான முழுப்பொறுப்பையும் லைக்கா சுபாஸ்கரனுக்குத் தாரைவாத்துக்கொடுத்திட்டினம். அப்பதானே நீச்சல் குலத்தோட மான்சன்களும் உலங்குவானூர்து அணிவகுப்புடன் சாமத்தியவீடும் செய்து புளகாங்கிதம் அடையலாம்.

 

யாராவது யாரிடமும் களவெடுத்துக் காட்டிக்கொடுத்து போர்க்குற்றவாளிகள் முகத்தில் வெள்ளைப்பெயின்ட் அடித்து அவர்களைக் காப்பாத்தி உத்தம புத்திரர்களாக்கி வாழும்நாடுகளில் பெறும் வருமானத்துக்கு வரி ஏய்ப்புச் செய்து தென்னகத்துச் சினிமாப்பிரபலங்கள் கணக்கில் வராத காசில் ரசிகர்மன்றம் அமைத்து பாலாபிசேகம் பண்ணவும் இரண்டுகிராம் தங்கத்தில் தாலிவாங்கிக் கொடுத்து கலியானம் கட்டிவைத்தும் தையல் மெசின் கொடுத்தும் பிறவிப்பயன் அடைவதுபோல்,

 

வரிஏய்புச் செய்து வள்ளல் பட்டம் கட்டிக்கொள்ள இளிச்சவாயர்களாகப் புலத்துமக்கள்தான் கிடைத்தார்கள், அவர்களுக்கு விசிலத்து உற்சாகமூட்டித் தங்களைத்தாங்களே கிள்ளிப்பார்க்கவும் பக்கத்திலிருப்பவரை சொறிஞ்சுவிடவும் இங்கையும் ஒரு பஜனைக்கூட்டம்.

 

அந்தக்காலத்து மித்திரன் பத்திரிகைபோல் மஞ்சள் பத்திரிகை நடாத்தும் லங்கஶ்ரீ இணையத்தளம் போன்ற வகையறாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

Edited by Elugnajiru

எழுஞாயிறு, உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பசித்தவனும் உதவி செய்பவனும் அதைத் தட்டி விடுபவனும் அதற்கு வியாக்கினம் சொல்பவனும் பசித்தவனுக்கும் பாடம் எடுப்பவனும் நாமே. இந்த வட்டத்திலிருந்து இப்போதைக்கு நாம் மீழ்வதற்கு நம்பிக்கையில்லை. எமக்கு அடுத்த சந்ததியாவது ஒருவேளை புதிய சிந்தனைகளோடு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போரின் வடுக்களை சுமந்து கொண்டு வறுமையிலும் கஸ்டத்திலும் வாடும் உறவுகள் இலங்கை அரசிடம் உதவி பெறக்கூடாது பெற்றால் துரோகிகள், இந்தியா அரசின் உதவிகள் பெறக்கூடாது, பிரித்தானியா அரசின் உதவிகள் பெறக்கூடாது, சீனாவின் யப்பானின் அமெரிக்காவின் பாகிஸ்தானின் உதவிகள் பெறக்கூடாது ஏனெனில் இவை இலங்கைக்கு போரில் உதவியவை, அப்புறம் இலங்கையில் களப்பணியில் ஈடுபடும் ****கரம் போன்று பல அமைப்புகள் அவை எவையாய் இருந்தாலும் இலங்கையில் இறங்கி உதவிப்பணிகளில் ஈடுபடுவதால் அவைக்கு இலங்கை அரசின் தொடர்பில்லாமல் அங்கு செயல்பட முடியாது எனவே அவற்றிடமும் உதவி பெறக்கூடாது, அந்த அமைப்புகளும் எம் மக்களுக்கு உதவக்கூடாது, லைக்கா போன்ற தனிப்பட்டவர்களின் உதவிகளும் அவர்களின் தனிப்பட்ட நடத்தைகள் பரிசோதிக்கப்படும் இடத்து சரியாக இல்லாவிடில் ஈழத்தமிழர்கள் பெறக்கூடாது.....

 

ஆனால் துரதிஸ்டவசமாக துயருறும் எம் மக்களுக்கு உதவுவோர் வட்டத்தில் இவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் இந்த உதவுபவர்களின் தகுதிகளை பற்றி கதைப்போர் பாரிய அளவில் உதவக்கூடிய நிலையில் இல்லை... வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்த உதவுவோர்கள் பற்றிய விதிகளை எழுதுபவர்களின் சிந்தனைப்போக்கு அம்மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை இவர்கள் எழுதும் விதிகளுக்கு உட்பட்டே சாவதாய் இருந்தால் கூட அம் மக்கள் சாக வேண்டும் என்பதாக இருக்கிறது.....  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.