Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்..

 

பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுடன், உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், பயத்துடன், ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி என்று அழுத நாள் இன்று போல இருக்கிறது..

 

ஏழாம் நாள் தண்ணீர் வார்த்ததும்.. ஹப்பா.. இதோட தொலைஞ்சுது தொல்லை என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்றதுக்கு முன்னாலேயே.. அடுத்த மாசம்.. அப்பாவின் சாறன்.. அம்மம்மாவின் நூல் சேலை, அப்புச்சியின் வேட்டியென பழந்துணிகள் என் அலுமாரியின் அடித்தட்டில் இடம்பிடிக்க.. முதல் கொஞ்ச மாதங்கள் அம்மா சுற்றித் தருவதும்.. நான் கட்டிக் கொள்வதும்.. அது விலகிவிடாமல் பதுமை போல நடப்பதும்.. கறைகள் உடைகளில் பட்டுவிடாமலிருக்க சட்டையை உயர்த்தி, அன்டர்ஸ்கேட் படுமாறு கதிரையில் இருப்பதும்.. மாதவிடாய் நாள் வரப்போகிறது என்றதுமே என் ஸ்கூல் பாக்கினுள் ஒரு துணிக்கட்டு புத்தகங்களோடு இடம்பிடித்துவிடும்.. புதிதாய் பெரியவளானதால், அதிக உதிரப்போக்கு இருக்கும் என்று சொல்லியே நாப்கின்களைப் பாவிக்க அம்மா விடவில்லை..

 

அந்த துணி மூட்டையை கட்டியதால் நடக்கையில் இரு தொடைகளும் உரசுவதால் வரும் வலியும்.. அரை சிவந்து போய்.. ஏன் காயங்களும் வந்து.. அதற்கு தேங்காயெண்ணெய் பூசிக்கொண்டு.. காலை விரித்தபடி படுத்த நாட்களும்.. அப்போதெல்லாம்.. மாதா மாதம்.. எங்கள் சலவைக்காரரிடம் காசு கொடுத்து பழந்துணிகள் வாங்கி அம்மா சேமித்து வைப்பா.. அடடா.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதைக் கட்டணுமோ என்று நினைத்து கவலைப்பட்ட போதுதான்.. 90 ம் ஆண்டு. இரண்டாம் கட்ட ஈழயுத்தம்.. ஒளித்து வைத்திருந்த நகைகள், சான்றிதழ்களைக்கூட விட்டுவிட்டு, உயிரைக் கையில் பிடிததபடி, ஹெலிக்கொப்டர்கள் மேலே சுட்டபடி பறக்க, முந்திரி மரப்பற்றைகளுக்குள்ளும், மாமரங்களுக்குள்ளும் ஒளிந்து ஓடி அகதிமுகாமைத் தஞ்சமடைந்த நாட்கள்..

 

கையில் மாற்றுத்துணி கூட இல்லாமல் இருந்த வேளையில், மரணித்த மனித உடல்களையும், குண்டுச் சத்தங்களையும், ஷெல்களின் அதிர்வுகளையும், துப்பாக்கிச் சன்னங்களையும் பார்த்து.. எனது நான்காவது மாதவிடாய் குறித்த நாளுக்கு முன்பாகவே ஓர் இரவில் வந்துவிட்டது.. நாங்கள் ஓடிச் சென்று இருந்த இடமோ முருகன் கோயில்.. அதைச் சுற்றி ஆமிக்காரன்கள்.. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில்.. கடவுள் விட்ட வழியென்று அங்கே தங்கிவிட்டோம்.. அப்பாவின் சாரன் கிழிக்கப்பட்டு.. அதை மரங்களின் மறைவில் சொருகிக் கொண்டு அழுதழுது தூங்கிப் போய்விட்டேன்.. அடுத்தநாள்.. கொசகொசவென்று இருந்த இந்தத் துணியை அவிழ்த்து வீசிவிட்டு புதியதுணியை சுற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த போதுதான்.. இருக்கிற துணியைத்தான் பாவிக்க வேணும் அம்மு.. இதை அப்படியே இந்த டிசு பாக்கில் சுற்றி வை.. இரவு கழுவலாம் என்றார் அம்மா.. க..ழு..வ..லா..ம்.. இரவு வந்தது.. கோயிலின் கோடியில் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கென ஓலையால் ஒரு தட்டி செய்து வைத்திருந்த இடத்தில், ஒரு வாளித் தண்ணீருடன் சென்றோம்.. அம்மா தண்ணீர் ஊற்ற.. அந்த இரத்தத்தின் வெடுக்கு நாற்றத்தை பொறுக்க முடியாமல் அழுதுகொண்டே.. கைகளால் கசக்கி கசக்கி.. கழுவி, அதை அந்தக் கோடிக்குள் ஒளித்துக் காயவைத்தோம்.. இருந்த ஒரு கழிவறைக்குள் செல்வதற்கு ஒரு வரிசை.. இல்லையென்றால்.. மறைவிடங்களில் பதுங்கிக் கொள்ள வேண்டியது தான்.. மாதவிடாயுடன் எங்கு வெளியே செல்வது.. சிறுநீர் கழிப்பதே பெரிய கொடுமையாய் கழிந்த அந்த நாட்கள்.. கேட்டவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த எங்கள் அம்மா அப்பாவுடன். நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காய் வரிசையில் நின்று வெளிநாட்டு, உள்நாட்டு ஸ்தாபனங்கள் கொடுத்த உடைகள், உணவுகளை கூனிக்குறுகி வாங்கும் போது.. இதோடு கொஞ்சம் புதிய உள்ளாடைகளும், நாப்கின்களும் தரமாட்டாங்களா என்று நினைத்துக்கொண்டது இன்னும் ஞாபகமிருக்கிறது..

 

மூன்று மாதங்கள் நரக வாழ்க்கையின் பின்னர்.. உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தஞ்சமாய் சென்ற போது.. நினைத்த வேளையில் கழிவறைக்குள் சென்று.. கறைகளைக் கழுவி, உள்ளாடை மாற்றுகையில் ஏற்பட்ட அந்த உணர்ச்சியை என்னவென்று சொல்ல.. ஆயிற்று.. இரண்டு வருடங்களின் பின் எங்கள் சொந்த வீட்டின் உடைந்த கூரையின் கீழ் குடியிருக்க வந்தபோது.. கழிவறையைச் சுற்றி, கோடிகட்டக்கூடாது என்று சொன்னதனால்.. திரும்பவும்.. இராக்குளியல், இராக்கழுவல் என்று நாட்கள் கழிந்த வேளையில் தான்.. நான் படும் கஷ்டம் பொறுக்க முடியாமல், ஊரெங்கும் தேடி, ரெடிமேட் நாப்கின்களை அம்மா வாங்கிக் கொடுத்தார்.. அதை அணிந்த அந்த முதல் நாள்.. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது போல அத்தனை ஒரு ஆறுதல்.. அம்மா இதைக் கழுவத் தேவையில்லை என்று சொன்னதும்..

 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சேமித்து வைத்த நாப்கின்களை எல்லோரும் தூங்கிய பின் மறைவாக வெட்டிய குழிக்குள் ஆழப்புதைத்துவிடுவதும் என ஓரிரண்டு ஆண்டுகள் ஓடிச் சென்றன.. படித்து முடிந்ததும் தலைநகரில் தனிமை வாசம்.. இத்தனை நாட்களும் அம்மா வாங்கிக் கொடுக்க அணிந்தது போய்.. நானே கடைக்குச் சென்று நாப்கின் தாருங்கள் என்று கேட்பதற்கு சங்கோஜப்பட்டு, அம்மா என்னைப் பார்க்க வரும் நேரத்தில் எல்லாம் இரண்டு மூன்று பாக்கெட்கள் வாங்கி ஸ்டாக் செய்து வைத்த நாட்கள்.. சுப்பர் மார்க்கட்கள் வந்த பின் மறைந்து போனது.. கைப்பையில் மாதவிடாய் வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்னே இடம்பிடிக்கும் நாப்கின்கள்.. இப்போது டாம்பொன்களாகிவிட்டது..

 

எந்தவொரு சங்கோஜமுமின்றி.. இன்று கடைக்குச் சென்று டாம்பொன்கள், நாப்கின்கள், பான்ரி லைனர்களை கூடையில் வைத்து பில் கவுன்டருக்கு சென்று கொடுக்க முடிகிறது.. ஆனாலும்.. இன்றும்.. எனது நாட்டில் எத்தனை பெண்கள் இன்னும் திறந்த வெளி முகாம்களுக்குள்ளும், அகதி முகாம்களுக்குள்ளும், சிறைகளுக்குள்ளும் இருக்கிறார்கள்.. அவர்களும் என்னைப் போலதானே இந்தக் கஷ்டங்களை எதிர்கொள்வார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியுதில்லை.. நிவாரணங்களாக பருப்பும், அரிசியும், வெளியாடைகளும் கொடுக்கும் ஸ்தாபனங்கள், தனிநபர்கள்.. உள்ளாடைகள் பற்றியோ.. நாப்கின்களின் தேவைகள் பற்றியோ அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்பது சுடும் உண்மை.. அனுபவித்ததால், வலி தெரிந்ததால் சொல்கிறேன்.. இன்றும்.. வெளிச்சத்தை எதிர்பார்த்து விட்டத்தை நோக்கி வெறுமனே உட்கார்ந்து இருக்கும் எங்கள் பெண்களுக்கு மாதவிடாய்த் துணி கழுவுவதிலிருந்தாவது விடுதலை கொடுங்களேன்.. thanks-http://avalpakkam.com/?p=2297

Edited by நிழலி
வரிகளில் இடைவெளி விட

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் இந்தவகையான வேதனைகளில் இருந்து நாங்கள் தப்பவில்லை அகதிமுகாம்களில் கிடைத்த சீரழிவை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் கனக்கிறது. வெளிப்படையாக பேசமுடியாத விடயமாக இரகசியமாக எங்களுக்குள் மட்டுமே சகித்து கொள்ள வேண்டிய கட்டாயமாக அன்றைய வாழ்வு நகர்ந்துள்ளது. வெளிப்படையாக பேசும் பதிவு.  இணைப்புக்கு நன்றி புலவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மாதவலி என்றவுடன் மாத இறுதி பட்ஜெட் பிரச்சினையாக்கும் என்று நினைச்சிட்டன்.

எல்லாவற்றையும் சிறப்பாகப் படைத்த கடவுள் இதுக்கும் ஒரு சிறந்த தீர்வை கொடுத்திருக்கலாமே.. ஏன் இப்படி செய்துவிட்டார்..?!

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் எழுதத் தயங்கும் ஒரு விடயத்தை ஈழத்து பெண் எழுதியிருப்பது ஆச்சரியத்திற்குரியதும்,பாராட்டுக்குரியதுமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கடந்து வந்த பாதைகளில் இப்படியான பல அவலங்களைச் சந்தித்தும் கேட்டும் பார்த்தும் இருந்தாலும் இதுவரை நாம் எடுத்துவரத் தயங்கிய விடயங்களை துணிவுடன் எடுத்து வந்த எம் இணைய நண்பியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்.

பலர் எழுத தயங்கும் ஒரு விடையத்தை எழுதியவருக்கு பாராட்டுக்கள்.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஓரளவு பரவாயில்லை. தாயகத்தில் உள்ளவர்களுக்கு இன்னமும் இந்த பிரச்சினை உள்ளது.

போர்க்காலத்தில் மற்றும் அகதிமுகாம் வாழ்வில் பெண்கள், பெண்போராளிகள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருப்பார்கள், அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக யாருமே வெளியில் பகிர விருப்பப் படாத விடையம்..துணிந்து எழுதியவருக்கு நன்றிகள்.அந்தப் பெண் அனுபவித்த, அனுபவிக்கும் துயரின் தாக்கம் எழுத வைத்திருக்கிறது.இதுவும் மனிதப் பிறப்புக்களுக்கு பொதுவாக பெண்களுக்கு இருக்கும் உபாதைகளில் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தவிர்க்க  முடியாமல் வந்து போகும் இயற்கை உபாதை.அதனை அனுபவிப்பவர்களுக்கு,அனுபவித்தவர்களுக்கு  மட்டுமே அதன் தாக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்..கொஞ்சம் நீண்ட நேரம் சிந்திக்க தூண்டினால் இவை எல்லாம் எப்போ கடந்து போகும் என்று மனம் நினைக்கும்.ஆனாலும் இன்னும் ஊரில் வறுமைக்குள் வாழும் மக்களை நினைக்கும் போது நமக்கு ஏற்படும் கஸ்ரங்கள் எல்லாம் சிறு விடையங்களே.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒருவரைத்தவிர கருத்தெழுதியவர்கள் அனைவரும் பெண்கள்.அல்லது இசையும் பெண்ணே தெரியவில்லை.உலகில் உள்ள எல்லா ஆண்களுக்கும் கட்டாயம் குறைந்தது ஒரு பெண்ணுடன் ஆவது தொடர்பிரக்கும் அவர்கள் தாயாக,தாரமாக,தங்கையாக ,அக்காவாக ,நண்பியாக இருக்கலாம்.அவர்கள் போர்க்காலத்தில் பட்ட அவலம்தான் இது.அவர்கள் குண்டு மழைக்கும் நடுவிலும்.உணவு,உடை.உறைவிடம் பாதுகாப்பு இவற்றை விட இதுவும் இவர்களுக்கு முக்கியமான ஒரு பெரும் பிரச்சனை அதனைத் துணிந்து அந்தப் பெண்மணி எழுதியிருக்கிறார்.ஆண் சிங்கங்கள் எங்கே போய் விட்டார்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒருவரைத்தவிர கருத்தெழுதியவர்கள் அனைவரும் பெண்கள்.அல்லது இசையும் பெண்ணே தெரியவில்லை.

அடப்பாவிகளா.. விட்டால் எனக்கு ஆப்ரேஷன் பண்ணி விட்டிடுவாங்கள் போலை இருக்கே.. :unsure: ஏன் புலவர் இந்தமாதிரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒருவரைத்தவிர கருத்தெழுதியவர்கள் அனைவரும் பெண்கள்.அல்லது இசையும் பெண்ணே தெரியவில்லை.உலகில் உள்ள எல்லா ஆண்களுக்கும் கட்டாயம் குறைந்தது ஒரு பெண்ணுடன் ஆவது தொடர்பிரக்கும் அவர்கள் தாயாக,தாரமாக,தங்கையாக ,அக்காவாக ,நண்பியாக இருக்கலாம்.அவர்கள் போர்க்காலத்தில் பட்ட அவலம்தான் இது.அவர்கள் குண்டு மழைக்கும் நடுவிலும்.உணவு,உடை.உறைவிடம் பாதுகாப்பு இவற்றை விட இதுவும் இவர்களுக்கு முக்கியமான ஒரு பெரும் பிரச்சனை அதனைத் துணிந்து அந்தப் பெண்மணி எழுதியிருக்கிறார்.ஆண் சிங்கங்கள் எங்கே போய் விட்டார்கள்????

 

ஆண்களை வந்து என்ன செய்ய சொல்கிறீர்கள்...கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு தமாசுக்கு எழுதினால் இப்பிடி நொந்து போய் விட்டீங்களே இசை!!!! நானும் ஆண்தான் எனக்கென்ன என்று இந்தக் கட்டுரையை இணைக்காமல் விட்டால் இந்த அவலங்கள் பலருக்கும் தெரியாமல் போய் விடும்.யாயினி. அத்துடன் நிவாரணங்கள் கொடுக்கும் சமூக அமைப்புக்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இந்த சமூக இயக்கங்களில் பெண்களை விட ஆண்களே கூடுதலாக இருக்கின்றார்கள். அந்த ஆதங்கத்தில்தான் எழுதினேன்.

போன தலைமுறை பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தது. இப்பொழுது தொலைக்காட்சி புண்ணியத்தில் கிராமத்தில் கூட நல்ல மாற்றம் தென்படுகிறது.

 

இயற்கையின் படைப்பில் சில விடயங்கள் கொஞ்சம் விதிவிலக்கானவை ... மாதவிலக்கும் அப்படியே ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவாக  கணவனாக  பெண்களின் வலியை  உணர்ந்து கொஞ்சம் அனுசரனையாகா   இருக்கலாம் தானே .. உமக்கு ஏலா விட்டால்    நான் கோப்பி போட்டு தருகிறேன். இன்று சமைக்கக் வேண்டாம் ,  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்  என்று  அவர்களது  அசதியை உணருங்கள்  .. சொல்லி பாருங்கள். அவர்களது  உள்ளத்தில் உச்சத்தில்  நிற்பீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவாக கணவனாக பெண்களின் வலியை உணர்ந்து கொஞ்சம் அனுசரனையாகா இருக்கலாம் தானே .. உமக்கு ஏலா விட்டால் நான் கோப்பி போட்டு தருகிறேன். இன்று சமைக்கக் வேண்டாம் , கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும் என்று அவர்களது அசதியை உணருங்கள் .. சொல்லி பாருங்கள். அவர்களது உள்ளத்தில் உச்சத்தில் நிற்பீர்கள் :lol:

இன்றிலிருந்து இன்னும் கூடுதல் அக்கறை எடுக்கிறேன் அக்கா
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவாக  கணவனாக  பெண்களின் வலியை  உணர்ந்து கொஞ்சம் அனுசரனையாகா   இருக்கலாம் தானே .. உமக்கு ஏலா விட்டால்    நான் கோப்பி போட்டு தருகிறேன். இன்று சமைக்கக் வேண்டாம் ,  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்  என்று  அவர்களது  அசதியை உணருங்கள்  .. சொல்லி பாருங்கள். அவர்களது  உள்ளத்தில் உச்சத்தில்  நிற்பீர்கள் :lol:

 

கோப்பி 'கப்' வடிவாய்க் கழுவினீங்களோ? 

 

பால் பொங்கி வெளியால தள்ளினதோ? 

 

இறைச்சி கழுவிப்போட்டு வெட்டினிங்களோ? அல்லது வெட்டிப்போட்டுக்  கழுவினீங்களோ? :o 

 

எத்தனை வெங்காயம் போட்டனீங்கள்?

 

 

இந்தப் பிரச்சனைகளிலும் பார்க்க, இண்டைக்குத் தமிழ்க்கடையில 'சாப்பாடு' வாங்கிக் கொண்டு வாறன் எண்டு சொல்லுறது தான்... என்னால் செய்யக்கூடிய பெரிய உதவி! :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவாக  கணவனாக  பெண்களின் வலியை  உணர்ந்து கொஞ்சம் அனுசரனையாகா   இருக்கலாம் தானே .. உமக்கு ஏலா விட்டால்    நான் கோப்பி போட்டு தருகிறேன். இன்று சமைக்கக் வேண்டாம் ,  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்  என்று  அவர்களது  அசதியை உணருங்கள்  .. சொல்லி பாருங்கள். அவர்களது  உள்ளத்தில் உச்சத்தில்  நிற்பீர்கள் :lol:

இதைத்தான் நாங்கள் ஒவ்வொருநாளும் செய்து வாறமே.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாங்கள் ஒவ்வொருநாளும் செய்து வாறமே.. :icon_idea::D

 

 

இசை நீங்கள் ( பல்கலைக்   கழக ) பரீட்சையில்  பாஸ் :D . நல்ல ஒரு குடும்பம் பல் கலைக்  கழகம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்ணின் துணிவு பாராட்டப்பட வேண்டியது. எமது நாட்டில் தாயாலேலே பல விடயங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதில்லை. வேம்படிக்கு வரும் பெண்களே அப்படி எனில் மற்றவர்களைச் சொல்லி வேலை இல்லை. நாம் ஒருநாள் நெற்போல் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஒரு பெண்ணின் துணி கழன்று விழுந்துவிட்டது. எமக்கெல்லாம் அதிர்ச்சி. ஊசி குத்திக்கொண்டு வர மறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். அத்தோடு மாதவிடாய் நாட்களில் விளையாடக் கூடாது என்று கூடத் தாய் அவளுக்குக் கூறவில்லைப் போல. உடனே நாம் எல்லாம் கொஸ்டலில் இருந்து படிக்கும் பெண்ணை அவளுடன் விட்டுவிட்டுச் சென்றுவிட்டோம். அவள் அங்கு கூட்டிச் சென்று வேறு துணி கொடுத்து அவளை அழைத்து வந்தாள். பிரேக் நேரமாதலால் அவள் ஒருவருக்கும் சொல்லாமல் வீட்டுக்கும் போய்விட்டாள். திரும்ப வர மூன்று நாட்களானது. 

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒருவரைத்தவிர கருத்தெழுதியவர்கள் அனைவரும் பெண்கள்.அல்லது இசையும் பெண்ணே தெரியவில்லை.உலகில் உள்ள எல்லா ஆண்களுக்கும் கட்டாயம் குறைந்தது ஒரு பெண்ணுடன் ஆவது தொடர்பிரக்கும் அவர்கள் தாயாக,தாரமாக,தங்கையாக ,அக்காவாக ,நண்பியாக இருக்கலாம்.அவர்கள் போர்க்காலத்தில் பட்ட அவலம்தான் இது.அவர்கள் குண்டு மழைக்கும் நடுவிலும்.உணவு,உடை.உறைவிடம் பாதுகாப்பு இவற்றை விட இதுவும் இவர்களுக்கு முக்கியமான ஒரு பெரும் பிரச்சனை அதனைத் துணிந்து அந்தப் பெண்மணி எழுதியிருக்கிறார்.ஆண் சிங்கங்கள் எங்கே போய் விட்டார்கள்????

 

இசையையும் உங்களையும் போற்றத்தான் வேண்டும் அண்ணா. இவ்வளவு துணிவு மற்றவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.