Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா)

பிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின.

விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிந்தன. அந்த அல்லக்கைகளும், கும்பலில் கோவிந்தாவாக இந்திய இலக்கை பணத்துக்காக குடுத்த காசுக்கும் கூடுதலாக நல்லா கூவின. We want tamil eelam, Our leader piraapakaran, எங்கள் தலைவன் சூரிய தேவன் எனக் கூவியபோது, விடுதலை புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் இவங்களின் குள்ளநரி கூவலினை பிரித்தறியமுடியவில்லை அல்லது பிரித்து அறிய முதல் அனைத்தும் முடிந்து விட்டது அல்லது வஞ்சக புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியாளர்கள் யாரென இனங்காண முடியவில்லை அல்லது புலிகளின் தலைமை வஞ்சகரின் வஞ்சக புகழ்ச்சியில் வீழ்ந்து கிடந்தது..

அதற்கிடையில் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் புலிகளின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவிவிட்டன. இதுவே பின்னாளில் புலிகளுக்குள் பல் வேறு மட்டங்களிலும் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த குழப்பங்களுக்கும் காரணமாகும்.

ஒரு சிறிய உதாரணம் புலிகளின் வாகனப் பொறுப்பாளர் குட்டி , அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வன் ,மற்றும் பாப்பா போன்றவர்களின் உறவினர்கள் பலர் EPDP அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தனர், இந்த உறவினர்கள் மூலமாக இலங்கை இந்திய புலனாய்வு மையங்கள் EPDP இன் துணையுடன் ஊடுருவ முயன்றன, இம்முயற்சி 1995 களில் சுவிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்த மேற்ச் சொன்ன புலிகளின் தலைவர்களின் உறவினர்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பின்னாளில் தினமுரசு பத்திரிகையில் (1995ல்) அற்புதனால் சூட்சுமமாக சொல்லப் பட்டது.

குட்டி என்ற புலிகளின் வாகனப் பொறுப்பாளர் பற்றிப் பார்ப்போம். கிழக்கு போராளிகள் மனமுறிவுக்கும் பிரதேசவாதம் அதன் மூலம் தலை தூக்கவும் குட்டியின் நடவடிக்கைகள் பெருமளவில் உதவின. வன்னி முறியடிப்புச் சமர் மற்றும் ஓயாத அலைகள் ஜெயந்தன் படையணி உட்பட்ட கிழக்கு படையணிகள் குட்டியிடம் இருந்து ஒழுங்கான வழங்கல்களை பெறவில்லை (உணவு போன்ற பொருட்கள்) மற்றும் போராளிகள் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றும் பொருட்களை சேகரிக்கும் பணி வாகனத்துறையிடம் கொடுக்கப் பட்டபோது போராளிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கூட போராளிகளின் எதிர்ப்பை மீறியும் வலோத் காரமாக பறித்துச் செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஜெயந்தன் படையணி குட்டியின் வாகன அணியை பின் தொடர்ந்து புதுக் குடியிருப்பில் வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்ததது.

போலி தலைமைத்துவ விசுவாசம் மூலமாக தம்மை இயக்கத்துக்குள் தகவமைத்துக் கொண்ட குட்டி போன்ற இவர்களால் இயக்கம் பலத்த பாதிப்புகளை சந்திக்கப் போகின்றனர், என்பதை புலிகள் தலைமை உணராமல் விட்டது ஆச்சிரியமே.

2002 இல் வந்த சமாதானம் குட்டி போன்றோருக்கு இயக்கத்துக்குள் இலங்கை அரசுக்கு ஊடுருவலை மேற் கொள்ள வசதி ஏற்படுத்தும் தருணம் நன்றாகவே அமைந்தது, 2005 இல் குட்டி கொழும்பில் கடத்தப்பட்டதாக செய்தி வருகிறது. ஆனால் குட்டி கடத்தல் நாடகத்தை தானே நிகழ்த்தினார். கோடிக்கணக்கான புலிகளின் பணத்தோடு கடத்தல் நாடகமாடிய குட்டி கொழும்பில் இலங்கை அரச புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இருந்து 2009 புலிகள் அழியும் வரை தனது காட்டி கொடுப்புகளை செய்து கொண்டிருந்தார்.

தனக்கு நெருக்கமான பல போராளிகள் மூலமாக மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொண்டு இலங்கை அரசுக்கு தகவல்களை வழங்கினார். புலிகள் எதிர் சமர் , ஊடுருவல் சமர் என்பவற்றைச் செய்யும் முயற்சிகள் எல்லாம் குட்டியும் குட்டியை போன்ற இன்னும் சந்தர்ப்பவாத தொங்கு தசைகளின் ஊடுருவல் தகவல் மூலம் இலங்கை அரசுப் படைகள் பெற்று கொண்டன.

ஆனால் எம்மில் பலர் பிரதேசவாத உணர்வோடு அனைத்தையும் கருணா மட்டுமே காட்டிக் கொடுத்ததாக பேசுகின்றனர். இதை இலங்கை அரசும் நன்றாகவே விரும்புகிறது. கருணாவே காட்டி கொடுப்பாளன் என அழுத்திச் சொல்வதன் மூலம் கிழக்கையும் வடக்கையும் இனம் சார்ந்து ஒடுக்கு முறைக்கு எதிராக ஓன்று சேர்ந்து போராடுவதை தடுக்கும் உத்தி பின்னப்படுகிறது.

ஆக இப்படிப் பட்ட சுத்து மாத்துகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் உரித்தான குட்டி இப்போ எங்கே????? …………

2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருக்கும் புலிகளை அங்குள்ள புலம் பெயர் தமிழர்களை அழிக்கும் அல்லது கட்டுப் படுத்தும் புதிய திட்டத்தோடு பிரான்ஸ் இல் இருந்து புலிகளின் பிரமுகராக வலம் வருகிறார் குட்டி. இம்முறை பிரான்ஸ் இன் மாவீரர் தினக் கொண்டாட்டத்தில் யாரும் இவரை கண்டீர்களா?

france_ltte.jpg

மேல் சொன்ன விடயங்கள் தவறு என புலிகளின் (??…) பிரதி நிதிகள் மறுப்பார்களா? ஆக குட்டி போன்ற சிலருக்கு பிரபாகரன் இருப்பதாக கூறவேண்டும். ஏனெனில் இன்னுமொரு புரட்சிகர தலைமை தோன்றாமல் இருக்கச் செய்ய வேண்டிய அனைத்தையும் இந்திய இலங்கை புலனாய்வு மையங்கள் செய்யும், அப்படிச் செய்ய குட்டி போன்றோரின் பங்களிப்பு தேவைப்படும். அத்துடன் இன்னுமோர் தலைவன் வந்தால் தங்களது தலைக்கு குறிவைக்கப்படும். ஆக இவர்களுக்கு எல்லாம் பிரபாகரன் என்ற பெயர் வேண்டும்.

பிச்சை புண்ணை காட்டி பிச்சை எடுப்பது போல மாவீரர்களையும் பிரபாகரனையும் காட்டி பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மாவீரர்களை மாசு படுத்தாதீர்கள்.

இந்த வெட்கங் கெட்ட பிச்சைகாரர்களுக்கு பிச்சை போடுவதை எந்த சுய சிந்தனை உள்ள எந்த தமிழர்களும் செய்ய மாட்டார்கள் இனிமேல் செய்யவும் கூடாது.

பிரபாகரன் சூரியத்தேவன் என்பதுவும் அவன் உயிர் வாழ்கிறான் அவன் வந்த பின் மீண்டும் ஆயுத போர் தொடங்கும் என்பதும், பிரபாகரனை திட்டித் தீர்க்கும், அபகீர்த்தியை உண்டாக்கும் பிரச்சாரங்களும் பலதடவைகளில் ஒரு இடத்தில் இருந்து வருகிறது. உண்மையை விசுவாசிப்போர் மக்கள் நலன் உள்ளோர் தெளிவுள்ளோராக இருந்து பொது சிந்தனை ஊடாக சமூகப் போலிகளை இனங்காண வேண்டும், மக்களுக்கு இனங் காட்டவும் வேண்டும்.

புரட்சிகர மக்கள் கூட்டத்திற்கு பிரபாகரன் மாவீரன். பூ(ஞ்)ச்சாண்டிகளுக்கு பிரபாகரன் வாழும் சூரியத் தேவன். இதுதான் இன்றைய நிலை.

(கருத்துக்களும் விபரங்களும் முழுமையாகக் கட்டுரையாளரைச் சார்ந்ததே…இனியொரு… பொறுப்பல்ல)

http://inioru.com/?p=42979

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரிகள் "இனியொரு" இணையத்தளத்தின் சமயோசித சிந்தனையைக் காட்டுகின்றன.. :D

உண்மையை சொல்லப்போனால் எனக்கு தலைவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்று தெரியாது.

ஆனால் இப்படியான கட்டுரைகள் தொடர்ந்தும் எழுதப்பட்டு தலைவர் உயிருடன் இல்லை என்று நிறுவ பலர் முயல்வதாலேயே தலைவர் உயிருடன் உள்ளார் என மனம் நம்ப சொல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வேண்டுமானாலும் கட்டுரையாளராகலாம்.. ஆய்வாளர்களாகலாம்...விமர்சிக்கலாம்... ஆனால் செயற்பாட்டாளர்கள் தேவையான நேரத்தில் ஆய்வாளர்களம் விமர்சகர்களும் யாருக்கு ஆலோசனை வழங்குகின்றனர்?

விரிந்து கிடக்கும் கடமைகளை செய்ய வெளியே வந்து செயற்படாத எந்த விமர்சகர்களைப்பற்றியும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இவர்களில் சிலரைத் தான் " வைக்கோல் பட்டறை நாய் போல" என்பார்களோ? 

உண்மையில் தேசியத்தலைவர் இருக்கின்றாரா ? இந்த கேள்விக்கு இப்ப விடை தேவையில்லை . அறியவும் முற்படவில்லை . பெரிய உணமையை தலைவர் அறிந்த பின்னர் எமது போராட்டத்தை புலம்பெயர் இளம் சமுதாயத்திடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான வழிகளை அமைத்துக்கொண்டு இருக்கின்றார் (எல்லாருடைய நம்பிக்கைகளிலும்) . இதனை விரும்பாதவர்கள் தான் இந்தமாதிரியான கட்டுரைகளை எழுதிகொண்டிருக்கின்றர்கள் . இலங்கையில் ஆட்சி மற்றம் வரப்போகுது கருணாவுக்கு எங்க தப்புவது என்று வழி தெரியவில்லையோ . 
 
இளையவர்களின் முயற்சியில் தான் புலிகளின் தடை நீக்கம் சாத்தியமானது . இதனை தான் தலைவர் சரியாக இனங்கண்டு ஒப்படைத்துள்ளார் .
  • கருத்துக்கள உறவுகள்

குட்டியும்  நானும் - 

S.G.ராகவன் (கனடா) என்பது தான் சரியான தலைப்பு..

 

 

யார் வேண்டுமானாலும் கட்டுரையாளராகலாம்.. ஆய்வாளர்களாகலாம்...விமர்சிக்கலாம்... ஆனால் செயற்பாட்டாளர்கள் தேவையான நேரத்தில் ஆய்வாளர்களம் விமர்சகர்களும் யாருக்கு ஆலோசனை வழங்குகின்றனர்?

விரிந்து கிடக்கும் கடமைகளை செய்ய வெளியே வந்து செயற்படாத எந்த விமர்சகர்களைப்பற்றியும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இவர்களில் சிலரைத் தான் " வைக்கோல் பட்டறை நாய் போல" என்பார்களோ? 

 

இவர்களில் சிலரைத் தான் " வைக்கோல் பட்டறை நாய் போல" என்பார்களோ?

 

அதே..

உண்மையை சொல்லப்போனால் எனக்கு தலைவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்று தெரியாது.

ஆனால் இப்படியான கட்டுரைகள் தொடர்ந்தும் எழுதப்பட்டு தலைவர் உயிருடன் இல்லை என்று நிறுவ பலர் முயல்வதாலேயே தலைவர் உயிருடன் உள்ளார் என மனம் நம்ப சொல்கிறது.

 

எனக்கும் அதே எண்ணம் தான், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்போர் சும்மா இருக்கீனம் ஆனால் இறந்து போனார் என்போர் தான் அதை நிரூபிக்க ஓடித்திரியீனம், அது ஏனோ

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அதே எண்ணம் தான், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்போர் சும்மா இருக்கீனம் ஆனால் இறந்து போனார் என்போர் தான் அதை நிரூபிக்க ஓடித்திரியீனம், அது ஏனோ

 

ஆதாரம் கேளுங்கோ

அல்லது

பகிரங்கமாக  ஒரு இடத்தில் விளக்கு வைக்கச்சொல்லுங்கோ...

 

அவர்களும் ஓடிவிடுவார்கள்..... :(  :(  :(

முதலில் வெளியில் வந்து யாழில்தான்  அங்கத்தவர் ஆகப்போகின்றார் என்றுதான் கேள்வி .

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் உங்களுக்கு இப்படியான செய்திகள் உடனேயே எட்டி விடும். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் கேளுங்கோ

அல்லது

பகிரங்கமாக  ஒரு இடத்தில் விளக்கு வைக்கச்சொல்லுங்கோ...

 

அவர்களும் ஓடிவிடுவார்கள்..... :(  :(  :(

இதை நீங்கள் ஒரு சவாலாகச் சொன்னதாக நினைத்துக்கொள்கின்றேன்.

அவர்கள் எல்லாம் மிரட்டிக் கலைத்து விரட்டப்படுவார்கள் என்பதால் பகிரங்கமாக வருவதேயில்லை. பிறகு எப்படி ஓடுவதாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் ஒரு சவாலாகச் சொன்னதாக நினைத்துக்கொள்கின்றேன்.

அவர்கள் எல்லாம் மிரட்டிக் கலைத்து விரட்டப்படுவார்கள் என்பதால் பகிரங்கமாக வருவதேயில்லை. பிறகு எப்படி ஓடுவதாம்!

 

 

Dash, on 02 Dec 2014 - 11:22 PM, said:snapback.png

எனக்கும் அதே எண்ணம் தான், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்போர் சும்மா இருக்கீனம் ஆனால் இறந்து போனார் என்போர் தான் அதை நிரூபிக்க ஓடித்திரியீனம், அது ஏனோ

 

இதற்கான பதிலே அது...

 

ஆட்டுக்கை

மாட்டை விடவேண்டிய  அவசியம் தங்களுக்கு ஏன் வரணும்  கிருபன்....?

 

கருத்து வரட்சி  என்றால் மீண்டும் வரவும்.....

 

இங்கு துரத்துவோம்

வெருட்டுவோம்

கலைப்போம்

அழிப்போம்

என்று எழுதுபவர்கள் மீது தங்கள் பார்வை படுவதே இல்லையே  ஏன் என் மீது மட்டும்...? :(  :(  :(

மென்மையானவர்  என்பதாலா???

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dash, on 02 Dec 2014 - 11:22 PM, said:snapback.png

 

இதற்கான பதிலே அது...

 

ஆட்டுக்கை

மாட்டை விடவேண்டிய  அவசியம் தங்களுக்கு ஏன் வரணும்  கிருபன்....?

 

கருத்து வரட்சி  என்றால் மீண்டும் வரவும்.....

 

இங்கு துரத்துவோம்

வெருட்டுவோம்

கலைப்போம்

அழிப்போம்

என்று எழுதுபவர்கள் மீது தங்கள் பார்வை படுவதே இல்லையே  ஏன் என் மீது மட்டும்...? :(  :(  :(

மென்மையானவர்  என்பதாலா???

இரண்டுக்குமான பதிலைத்தான் வைத்திருந்தேன்.

விளக்கு வைக்காமல் செய்வதும், கேக் வெட்டுவதும் ஒன்றுக்குள் ஒன்றித்த அரசியல்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

நேரே வந்து ஆதாரத்துடன் பேசுங்கோ....

சும்மா  மற்றவர்களுக்கு பின்னால் நின்று பச்சை போடவேண்டாம்....

 

தயவுசெய்து

நீங்கள் நம்பும் ஆதாரங்களையாவது முன் வையுங்கோ....

தெளிவு பெறலாம்

அதைவிடுத்து

உங்கள் அரசியல் மற்றும் சுயநலதேவைகளுக்காக.....

உங்களுக்கு வேண்டப்படாதவர்களை தூற்ற......

தலைவரை துணைக்கு அழைக்காதீர்கள்..... :(  :(  :(

விசுகு! தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்கின்ற உண்மையை அறவித்த ஊடகங்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாதா?

மற்றது, ஒருவர் இறந்து விட்டார் என்பதற்கான மறுப்பு அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமே தவிர, அவர் இறந்ததற்கான ஆதாரத்தை காட்டு என்பது அல்ல!

மகிந்த தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காகவும், இங்கே உள்ளவர்கள் தங்கள் சுயநல அரசியலை முன்னெடுப்பதற்காகவும் உருவாக்கிய பொய்யை தொடர்ந்து காப்பாற்றி வருகின்ற நீங்கள் உண்மையிலேயே மென்மையானவர்தானா என்பது கேள்விக்கு உரியது.

  • கருத்துக்கள உறவுகள்

2009 மேயில் விடுதலைப்புலிகளின் போராட்டம்  மௌனிக்கப்படுகின்றது.
சில நாட்களின் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்

உயிருடன் பத்திரமாக இருக்கின்றார் என்ற அறிக்கை வருகின்றது.
சில மணித்துளிகளின் பின்னர் தலைவர் இறந்து விட்டார் என்ற அறிக்கை வருகின்றது. :wub: 

 

வெளி நாடு சென்ற மகிந்த நாடு திரும்புகின்றார். :rolleyes:
இந்தியா ஆதாரத்தைக் கேட்கின்றது.
இல்லை என்றது சிங்கள அரசு.  
விடுதலைப் புலிகளின் தலைவரைப் போரில் கொன்ற சிங்களப் படைகள்

அவருடைய உடலை நந்திக்கடலில் அழித்து விட்டார்கள் என்று அறிக்கை விடுகின்றார். :o
இன்றுவரை யாராலும் எந்த ஆதாரத்தையும் கொடுக்கமுடியவில்லை.

தலைவர் பிரபாகரன் தமிழ்  மக்களின் எழுச்சி
அடுத்த தலைவன் பிறக்கும் வரை தமிழர்களின் எழுச்சி
பிரபாகரன் என்ற உயிர் மூச்சிலேயே தங்கியிருக்கும்.
அந்த உயிர்மூச்சை  நிறுத்த யாராலும் முடியாது. :icon_idea:  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.