Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேனிலவுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_78376725_010653975-1.jpg

 

சுவீடிஷ் பிரசையான  அனியிக்கும், பிரித்தானியப் பிரசையான டிவானிக்கும், அவர்களது கோடீஸ்வர குடும்பங்கள் பார்த்து பேசி நிச்சயதார்த்தம் செய்து, ஒருவருக்கு ஒருவர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவர்கள் போன்ற இவர்களின் கனவு திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பாம்பே நகரில்  மிக தட புடலாக நடந்தது. 
 
dewani_2671646b.jpg
 
இரு வாரக் கொண்டாடங்களின் பின்னர் தம்பதிகள் தென் ப்பிரிகாவிற்கு தேனிலவு கிளம்பிச் சென்றார்கள்.
 
ஆனால் அது ஒரு கோர முடிவைத் தரப் போகும் ஒன்றாக இருக்கும் என அவர்கள் குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை.
 
_78721450_78721449.jpg
வண்டி ஓட்டுனர் சோலா தோங்கா
 
2010 ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி, தாம் தங்கி இருந்த, மிகவும் வசதிகள் கூடிய ஹோட்டலில், கடைசியான இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு தம்பதிகள், இரவில், ஊர் சுத்திப் பார்க்க கிளம்பினார்கள். 
 
முன்னதாக, அவர்களை விமான நிலையத்தில் இருந்து, 5* கோட்டலுக்கு அழைத்து வந்த ஓட்டுனர், சோலா தோங்கா என்பவர், அவர்கள் கேட்டுக் கொண்ட படி மீண்டும் இரவு வந்து வண்டியினை ஓட்ட, தென் ஆபிரிக்காவின், ஆபத்துகள் நிறைந்த பகுதிகள் ஊடாக வண்டி சென்ற போது, வழியில் மறிக்கப் பட்ட வண்டியில் ஏறிய இருவர், கணவர் டிவானியை வெளியே இழுத்து தள்ளி விட்டு, மனைவி செரீனுடன் வண்டியை கடத்தி சென்றனர்.
 
பொலிசார் தேடிய போது, வண்டியுடன் செரீன் உடல், துவக்குச் சூட்டில் இறந்த நிலையில், மறுநாள் காலை, கண்டு பிடிக்கப் பட்டது. 
 
அழகிய மணப்பெண், தேனிலவில் இறந்த செய்தி, உலெகெங்கும் பத்திரிகை தலையங்கமானது.
 
_78079629_78079628.jpg
 கடத்தல் பங்காளி குவாபே
 
_78376683_024376257-1.jpg
 கொலையாளி மஜினி
நடந்த உண்மை என்ன என்பதே எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி. இதனை அறிய இரு குடும்பங்களும் தவித்த போது, உலகம் முழுவதும் உண்டான ஆர்வத்தினால், தனது உல்லாசப் பயண துறையினை, பாதுகாக்க வேண்டிய நிலையில் தென் பிரிக்க அரசு தள்ளப் பட்டது.
 
மனைவியினை பலிகொடுத்து, பெரும் சோகமாக இங்கிலாந்து திரும்பினார் டிவாணி.
 
விரைவில் பொலிசார் கடத்தல், கொலையாளிகளை கைது செய்தார்கள். முதல் முதலாக நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில், எடுத்த எடுப்பிலேயே, போலீஸ் அதிகாரி, கணவர் டிவாணி தான் இந்த கொலைக்கான ஏற்பாடுகளை செய்தார் என தாம் கண்டறிந்துள்ளதாகவும், 'ஒரு குரங்கு இங்கிலாந்திலிருந்து இங்கே வந்து, எமது மண்ணில் தனது மனைவியினை கொலை செய்வித்து வெளியேறி விட்டது. அது எங்கே போனாலும் விடப் போவதில்லை. பிடித்து வந்து நீதி வழங்குவோம் என முழங்கினார்'. 
 
முன்பின் தெரியாத வண்டி ஓட்டுனரினை சந்தித்த 30 நிமிடங்களுக்குள் மனைவியினை கொலை செய்யுமாறும், அதற்காக 15,000 தென் ஆபிரிக்க ராண்ட் (£1,000) தர ஒப்பந்தம் பேசியதாகவும் பொலிசார் சொன்னார்கள். 
 
அதிர்ந்து போயின இரு குடும்பங்களும். டிவானி குடும்பமோ, தென் ஆபிரிக்க அரசு தனது நாட்டின், பல கோடி டாலர் வருமானம் கொண்ட சுற்றுலாதுறையினை  பாதுகாக்க டிவானியினை பலிக் கடாவாக்க முயல்வதாக சொல்ல, பெண்ணின் குடும்பமோ  பொலிசார் சொல்வதனை பெரிதாக எடுத்து, டிவாணி தான் கொலை சூத்திரதாரி என தீவிரமாக நம்பியது. 
 
இதனிடையே, டிவானி, அதி தீவிர மன அழுத்தம் காரணமாக மன நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். அவர் வேண்டுமென்றே நடிப்பதாக பெண்ணின் குடும்பமும், தென் ஆபிரிக்க பொலிசாரும் சொன்னார்கள்.
 
டிவானி, மன நோய் வைத்திய சாலையில் இருக்கும் போது, அவரது gay பின்னனி, பழைய வாழ்க்கை, அவர் வில்லனாக இருப்பாரோ என யோசிக்க வைக்கும் அளவுக்கு  நார், நாராக அலசப்பட்டது.
 
ஐரோப்பா, ஸ்கண்டினேவியா, ஆசியா, ஆபிரிக்கா என பல கண்டங்கள் சம்பந்தப் பட்ட ஒரு மிகவும் விசித்திரமான ஒரு வழக்காக இது அமைந்து விட்டது. 'Trail by media' எனும் பத்திரிகையுலகின் விசாரணையில் இவர் தான் கொலைக்கான சூத்திரதாரி என முடிவு கட்டப் பட்டது.
 
இவரினை, விசாரணைக்காக தென் ஆபிரிக்காவிற்க்கு நாடு கடத்தலாம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்மானம் எடுக்க, பிரித்தானிய உள்துறை செயலர், நாடு கடத்தும் பிரமாணத்தில் கை எழுத்து  இட இவ்வருட ஏப்ரல் மாதமே அவர் தென் ஆபிரிக்கா விசாரணைக்கு அனுப்ப பட்டார். 
 
இன்றைய தீர்ப்பின் படி அவர் நிரபராதியாக நாடு திரும்புகிறார்.
 
மிகவும் சிக்கலான வழக்காக கருதப் பட்டாலும் 'common sense' படி கணவர் டிவானி, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் படவேண்டும் எனும் இன்றைய தீர்ப்பு சரியானது என உறுதியாக சொல்ல முடியும்.
 
வரும்....

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

டிவானி  யாழிலும் வந்திட்டாப் போல.... என்னமோ நடக்குது உலகத்தில. நாங்க தான் ஒன்னும் தெரியாம.. இன்னும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கம் போல...!! :lol:

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வரும்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி... நீங்க கதைச் சொல்லுங்க. இடைல எவ்வளவோ இருக்கே சொல்ல. இணைப்பை நீக்கிட்டம். நீங்களும் நீக்கிடுங்க. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

டிவானி  யாழிலும் வந்திட்டாப் போல.... என்னமோ நடக்குது உலகத்தில. நாங்க தான் ஒன்னும் தெரியாம.. இன்னும் குழந்தைப் பிள்ளையாவே இருக்கம் போல...!! :lol:

 

நாலு வருடம் கழித்து டிவானி யாழுக்கு வந்தாலும் முதல் வாசகனாய் முந்திய தங்களுக்குப் பாராட்டுக்கள்!!. :rolleyes:

 

மேலும் எழுதலாம், அதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் நாதமுனி அவர்களின் ஆர்வத்தைக் கெடுக்க விரும்பவில்லை.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், 

 

முடிந்த அளவில் மொழி பெயர்த்து ஒரு கதை சொல்லுவம் எண்டால்... . ********

 

இதுக்குள்ள கொண்டுவந்து கதை முடிவை சொன்னால் என்னத்தை சொல்ல...... படித்த நீங்கள் விளங்கி ஒதுங்கி இருக்க வேண்டாமோ?..... முடிக்கும் வரையாவது ?

 

விடுங்கப்பா... எனது ஆர்வமே போட்டுது... :huh:

 

நாதமுனியார்.. உங்கள் ஆர்வம் போதலுக்கு சரியான காரணம் ஏதுமில்லை. நாங்கள் செய்தியின் ஆங்கில இணைப்பையும்.. முழு செய்தியின் ஒரு வரியையும் தான் இணைத்திருந்தோம். அதை இட்டு ஆர்வம் போனதாகச் சொல்வது.. ரெம்ப ஓவர்.

 

மேலும்.. இது இப்போ பிபிசியிலும்.. அப்டேட் ஆகிக் கொண்டிருப்பதால் தான் இங்கு இணைக்கப் பிரியப்பட்டோம். மற்றும்படி.. இதற்குள்.. படிப்பு.. . ********  போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் எங்களுக்கு உடன்பாடில்லை..! :icon_idea:

---------

 

 

நியானி: மேற்கோளிலும் கருத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Edited by நியானி

நாதமுனி நாதமுனி நல்லபிள்ளை நீங்க நல்லபிள்ளை நீங்க தொடங்கின கதையை நீங்களே முடிச்சிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நாதமுனி ஒரேயடியா எழுதி முடிப்பதை விட்டு என்ன தொடரும் வேண்டிக்கிடக்கு ????

  • கருத்துக்கள உறவுகள்

தேனிலவுக் கொலை....

 

தொடருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்று கண்ணு மூக்கு வாய் வைத்து செம சூப்பரா இருக்குமென்று ஒரு கதை படிக்க வந்தால் இங்கையும் பிரச்சனையா? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வழக்கு
 
image-1-for-sunday-mirror-pics-19-12-201
 
1. 2010 நவம்பர் 13 ம் திகதி முற்பகல் தென் ஆபிரிக்காவின், கேப் டவுன் பகுதியில் வந்து இறங்கினார்கள் தம்பதிகள். அவர்களை சந்தித்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுகின்றார் டிரைவர் தோங்கா.
 
அவரையே மீண்டும் இரவு வந்து தம்மை இரவு நேர நகரத்தினை சுத்திக் காட்டுமாறு கேட்கின்றனர்.
 
2. அவர்கள் நகரத்தினை சுற்றி வரும் போது, வண்டி ஓரிடத்தில், துப்பாக்கி வைத்திருந்த இருவரால் மறிக்கப்பட, கணவர் இழுத்து வெளியே விடப் பட்டு, வண்டி, அனியுடன் கடத்தி செல்லப் பட்டது. மறுநாள் 14ம் திகதி காலை அனியின் குண்டு துளைத்த உடலுடன் வண்டி கண்டு பிடிக்கப் பட்டது.
 
3. நவம்பர் 16, டிவானி, தென் ஆபிரிக்காவில் இருந்து அனியின் உடலுடன் வெளியேறினார். அன்றைய தினமே கொலையாளி மஜினி கைதானார். மறுநாள் இவர் மீதான குற்றசாட்டு சுமத்தப் பட்டது.
 
4. நவம்பர் 18, கடத்தல் பங்காளி குவாபே கைதானார். 
 
5. நவம்பர் 20 கார் டிரைவர் தோங்கா கைதானார். SAR 15,000 (£1,000) க்கு தனது மனைவியினை தீர்த்துக் கட்டுமாறு, டிவானி தந்த contract காரணமாகவே கொலைக்கு ஏற்பாடு செய்ததாக, குறைந்த தண்டனை பெறும் நோக்கிலான 'plea bargain' மூலம் அரச சாட்சி ஆனார். டிசம்பர் 7ம் திகதி, குறைந்த தண்டனையாக 17 வருடங்கள் வழங்கப் பட்டது.
 
6. 2012 ஆகஸ்ட் 8ம் திகதி கடத்தல் தொடர்பாக குற்றத்தினை ஒப்புக் கொண்ட கடத்தல் பங்காளி குவாபே 25 வருடங்களும், அதே ஆண்டு நவம்பர் 19 அன்று கொலையாளி மஜினிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது. 2013 ல் மூளையில் உண்டான கட்டி காரணமாக அவ்வாண்டு இறுதியில் மரணமடைந்தார் கொலையாளி மஜினி.
 
Xolile-Mngeni.jpg
கொலையாளி மஜினி
 
டிவானி ஒரு போதும் இவர்கள் இருவரையும் சந்திக்க வில்லை 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆபிரிக்காவுக்கு ஒருக்காக் கொலிடே போகவேணும் என்று இருக்கிறன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்று

Shrien-Dewani-meeting-Zola-Tongo.jpg

 

டிவானி, டிரைவர் ஹோட்டல் முதலாவது சந்திப்பு 

 

தனது மனைவியை வியப்பூட்ட வைக்கும் வகையில் ரகசியமாக, தான் ஏற்பாடு செய்த 'ஹெலி' பயணத்திற்காக, மனைவிக்கு தெரியாமல் டிரைவர் தோங்க்காவை தான் சந்தித்ததும், அட்வான்ஸ் பணம் கொடுத்ததும், அது தொடர்பான தொலைபேசி தொடர்புகளுமே, தான் கொலைக்கு contract கொடுத்து பணம் தந்தாக, தென் ஆபிரிக்க பொலிசாரும், கார் டிரைவர் தோங்க்காவும் முடிச்சுப் போடுவதாக டிவானி சொன்னார்.

 

உண்மையிலேயே இந்த நூலிலையிலேயே, டிவானி மீதான அரச தரப்பு குற்றசாட்டு தொங்கி கொண்டிருந்தது. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆபிரிக்காவுக்கு ஒருக்காக் கொலிடே போகவேணும் என்று இருக்கிறன். :lol:

 

ஏதாவது கான்ட்ராக் இருந்தால் சொல்லுங்கோ. இத மாதிரி சொதப்பாம வடிவா முடிச்சுத் தருவோம்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image-8-for-editorial-pics-24th-july-201

தந்தையுடன்
 
  
எதிர்தரப்பு வாதம்
 
1. மாதம் SAR30,000 சம்பாதிக்கும் கார் டிரைவர் தோங்கா, மூன்று பேர் பங்கிடக் கூடிய மிகச் சிறிய தொகைக்கு, SAR15,000 க்கு, ஒரு கொலை செய்ய முன்வர வேண்டிய தேவை இல்லை.
 
2. ஒரு 30 நிமிட சந்திப்பில் கொலை contract ஒன்றினை எடுத்து உடனே அதனை செய்து முடிக்கும் கிரிமினல் background தோங்காவுக்கு இருக்க வில்லை.
 
3. ஹோட்டல் நிர்வாகத்துடன், பாதுகாப்பு குறித்து அறிவுரை பெறு முன்னர், தோங்காவுடன் இரவு நகர் சுத்தல் குறித்து பேசியதுடன், விலை கூடிய ஹெலி டூர் குறித்தும் பேசியதால், அவர் Travel Agent பிசினஸ் செய்யும்  மொண்டே மொபொலோம்போ  எனும் இன்னுமொரு நபரை தொடர்பு கொண்டிருகின்றார்.
 
4. இந்த நபர் அரச தரப்பு  சாட்சியாக டிவானி, தோங்கோ, மற்றும் இருவரையும் காட்டிக் கொடுத்து இருக்கின்றார். பதிலாக அவர் வழக்கில் இழுக்கப் படவில்லை.
 
_78954427_e950f7cc-32c3-4535-b5ab-0e10ae
Monde Mbolombo
 
5. உண்மையில் இவரே சதியின் சூத்திரதாரி. இவர் தோங்கோ விற்க்கு தெரியாமல். கடத்தல் ஏற்பாடு செய்து, பணம் பறிக்க முயன்றிருக்கின்றார். ஹெலி டூர் போகும் பாட்டியானால் பணம் பெயரும் என கணக்கு போட்டிருகின்றார்.
 
6. இந்த கடத்தலை செய்தவர்களுக்கு, பெண்ணின் அழகு வேறு விதமாக சிந்திக்க வைக்க, பலாத்கார முயற்சி நடந்து இருக்கிறது. பெண்ணின் கீழ் உள்ளாடை முழங்கால் அளவுக்கு இழுத்து விடப் பட்டு இருந்தது. இடுப்பின் இரு ஓரங்களிலும் இந்த உள்ளாடையினை மேலிருந்து கீழே இழுத்த கைகளின் நிக அடையாளத்தினால் உண்டான காயங்கள் இருந்திருக்கின்றன.
 
7. துப்பாக்கியை (பரலை) இடது கையால் மறைத்த படி, வலது கையால் புடுங்க முனைந்திருக்க வேண்டும். அதேவேளை கொலைஞரோ, பெண்ணை பலாத்காரம் செய்வதில் குறியாக இருந்திருக்க வேண்டும். இந்த இழுபறியில் துப்பாக்கி வெடிக்க, பெண்ணை அப்படியே விட்டு விட்டு, அவர்கள் ஓட்டம் பிடித்து இருக்க வேண்டும். பலாத்காரத்துக்கு முன்னரே, துப்பாக்கி முனையில், கொள்ளை நடந்திருக்க வேண்டும்.
 
8. குண்டு இடது கையின் உள்ளங்கையினூடு புகுந்து, இடது மார்பின் மேலாக சிராய்தபடி கழுத்தின் முக்கிய நரம்பினை வெட்டி சென்று மரணத்தினை உண்டாக்கி உள்ளது. இது ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு  எதிரான போராட்டம். துப்பாக்கி தவறுதலாக வெடித்து உள்ளது. பெண்ணின் மணிக்கூடு, வைர நெக்லஸ், handbag, blackberry phone என்பன களவு எடுத்து செல்லப் பட்டன. 
 
9.பொலிசார் வேண்டுமென்றே இந்த விடயங்களை தவிர்த்து, மனைவியினை இழந்தவரை, சந்தேக நபர் ஆக்கப் பார்கின்றனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆபிரிக்காவுக்கு ஒருக்காக் கொலிடே போகவேணும் என்று இருக்கிறன். :lol:

ஆத்துக்காரரும் வாறாரா
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு

 

1. இந்த வழக்கில், அரச தரப்பு சாட்சியாகி தண்டனை குறைவாகப் பெற்ற கார் டிரைவர் மட்டுமே டிவானியை, சந்தேக நபராக்கும் சாட்சி. இது நம்பத் தகுந்தல்ல. மேலும் இவரது சாட்சியத்தில் பல குளறுபடிகள். பொய் எங்கே முடிந்து, உண்மை எங்கே தொடங்குகின்றது என கண்டறிவதே மிகவும் கடினமானது.

 
2. அரச தரப்பு, டிவானி தானாக கூண்டு ஏறி, தன் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றசாட்டுகளை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்த்து, அவர் மீதான குற்றசாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் சென்று நிரூபிக்க தவறி விட்டது.
 
3. மொண்டே மொபொலோம்போ உடனடியாக கைது செய்து அவரது பங்கு குறித்து விசாரணை நடாத்த வேண்டும்.
 
4. இந்த வழக்கினை தொடர்ந்து நடத்துவது unsafe என்பதால், இம்மன்று   டிவானியை விடுதலை செய்கின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

----

சுவீடிஷ் பிரசையான  அனியிக்கும், பிரித்தானியப் பிரசையான டிவானிக்கும், அவர்களது கோடீஸ்வர குடும்பங்கள் பார்த்து பேசி நிச்சயதார்த்தம் செய்து, ஒருவருக்கு ஒருவர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவர்கள் போன்ற இவர்களின் கனவு திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பாம்பே நகரில்  மிக தட புடலாக நடந்தது. 

-----

 

எங்கோ... பிறந்து, எங்கோ இணைந்து,  எங்கோ திருமணம் செய்து.....

தென் ஆபிரிக்காவில்,  கொலைசெய்யப்பட்ட.... அனியி  மிகவும் பரிதாபத்துக்குரியவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Shrien-and-Anna-Dewani-CCTV.jpg

இரவு நகர்வலத்துக்கு கிளம்பிய தம்பதிகள் 

 

video-undefined-1BD5E265000005DC-224_636

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவர் மேல் சந்தேகம் வந்த காரணம்:

1415979706492_wps_24_Anni_Dewani_s_paren

 

 
மனைவி கொலையான மூன்றாம் நாள், உடலுடன் UK கிளம்பு முன்னர், ஓட்டுனர் தோங்கோவை சந்திக்கிறார் டிவானி. அவரது கையில் (பேசிய) பணம் உள்ள ஷாப்பிங் பாக் உள்ளது.
 
இருவருமாக டோயலேட் உள்ளே செல்கின்றனர்.
 
நான்கு நிமிடத்தில் வெளியே வரும்போது,  பணம் உள்ள ஷாப்பிங் பாக் தோங்கோவிடம் கைமாறி உள்ளது.
 
பணம் எதற்காக ரகசியமாக கை மாறியது? மனைவி இறந்த பின், கொடுக்க வேண்டிய தேவை என்ன? இதுவே நான்கு ஆண்டு கால தீராத தலைவலியாக டிவானி மேலும், அவரது மனைவி குடும்பம் மேலும் விழுந்தது.
 
யாழ் கள உறவுகளே, இப்போது உங்கள் அபிபிராயங்களுடன் வாருங்கள்.
 
1415948295401_wps_1_Dewani_video_Credit_
பணத்துடன் காத்து இருக்கின்றார், டிவானி
 
article-2119895-1251DED7000005DC-965_634
பணத்துடன் வெளியேறுகின்றார் தோங்கோ
 
நெடுக்கர்,
 
தவறாக நினைக்க வேண்டாம். ஒரு ஆர்வக் கோளாறு. அதுதான்..... 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுக் கொலையாளிகளா?

 

Main-DewaniZola.jpg

 

 

 

நீதிமன்றில் தோங்கோ,  டிவானி

 

ad_148016554.jpg

 

எனது அபிபிராயமும் வரும்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளைதான் சதித்திட்டம் தீட்டியவர் என நினைக்கிறேன்..

1) தென்னாபிரிக்கா இன்னமும் ஒரு வில்லங்கமான நாடு.. சில இடங்க் மட்டுமே ஓரளவு பாதுகாப்பானவை.. இரவில் போவதென்றால் மிகுந்த அவதானம் தேவை.. இந்த விவரங்கள் ஒரு வாகன ஓட்டுநருக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் அழைத்துச் சென்றுள்ளார்.

2) மாப்பிளையை காரில் இருந்து இறக்கி விட்ட விடயம். இவர் ஒரு சாட்சி என்பதால் இவரையும் மேலே அல்லவா அனுப்பியிருப்பார்கள்!!?

3) விடுதியை விட்டு வெளியேறும் தம்பதிகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை.

4) பணம் கைமாறிய விடயம்.

ஆகவே மாப்பிளை குற்றவாளி என யாழ்கள ஜூரிகளாகிய நாங்கள் தீர்ப்பளிக்கிறோம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கேஸ் தொடங்கின ஆரம்பத்தில் பார்த்தது இப்ப என்ன நடக்குது என்றே தெரியாது...நாதமுனிக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு டிவானி மீது தான் சந்தேகம். அவர் ஒரு ஓரின சேர்க்கையாளார்.திருமணத்தின் பின்னர் மனைவியுடன் உடல் உறவு கொள்வதில் பிரச்சனை இருந்திருக்கலாம்.பெரிய பணக்காரர் வெளியே தெரிந்தால் அவமானம்.ஆகவே வாடகைக் கொலையாளி மூலம் காரியத்தை முடித்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கேஸ் தொடங்கின ஆரம்பத்தில் பார்த்தது இப்ப என்ன நடக்குது என்றே தெரியாது...நாதமுனிக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு டிவானி மீது தான் சந்தேகம். அவர் ஒரு ஓரின சேர்க்கையாளார்.திருமணத்தின் பின்னர் மனைவியுடன் உடல் உறவு கொள்வதில் பிரச்சனை இருந்திருக்கலாம்.பெரிய பணக்காரர் வெளியே தெரிந்தால் அவமானம்.ஆகவே வாடகைக் கொலையாளி மூலம் காரியத்தை முடித்து விட்டார்.

 

 

இதுக்குத்தான்

சொந்தமச்சான் மச்சாளைக்கட்டுங்கள் என்றால்

நம்ம கதையை  யார் கேட்கிறார் இப்போ...?? :D  :D ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எனது அபிப்பிராயம்
 
இந்த வழக்கினை நான் யாழ் களத்திற்க்கு கொண்டு வந்ததுக்கு காரணம் இதில் இருந்த ஒரு peculiarity (ஒரு அந்நிய அல்லது வினோதமான நிலை). புதுமனைவியினை தேனிலவு காலத்தில் கொலை செய்ய வேண்டிய தேவை ஒருவருக்கு வர காரணம் இருக்க முடியாது. காப்புறுதி இழப்பீடு பெற என்று கூற முடியாது. அவ்வளவு விரைவில் காப்புறுதி கிடைக்காது. மேலும் இருவருமே கோடீஸ்வர குடும்பங்களை சார்ந்தவர்கள். ஆகவே அந்த தேவை இருந்திருக்க முடியாது. 
 
டிவானி, அடிப்படையில் ஒரு ஓரின சேர்க்கையாளர். ஆண் விபசாரிகளிடம் போகுமளவுக்கு 'ஆண்மோகம்' கொண்டவர்.
 
மணப்பெண் அனியோ, சாதாரமான ஒரு ஆசிய பெண். இவர் தனது நண்பியுடன் தினம் தோறும் தொடர்பில் இருந்தார். டிவானி தொடர்பில் தனது மனக் குமுறல்களை அவருக்கு தெரியப் படுத்திக் கொண்டு இருந்தார். அதாவது, தன்னை நெருங்குவது இல்லை, தொடுவது இல்லை என்ற கவலைகளுடன், இவர் உடல் உறவுக்கு தயாரான ஆண் மகன் தானோ என்ற கவலை அவரை ஆட்கொள்ளத் தொடங்கி இருந்தது. இதனால் சில வாக்குவாதங்களும் இது தொடர்பில் நடந்து இருகின்றன. இது தம்பதிகளிடையே சில அமைதியீனங்களை உண்டாக்கி உள்ளன.
 
எனினும்,இதன் காரணமாக ஒரு கொலை, அதுவும் அவ்வளவு விரைவாக, தேனிலவு காலத்தில், முன்பின் அறிமுகமில்லா இடத்தில்,  முன்பின் அறிமுகமில்லா, ஆட்கள் மூலம் செய்ய வேண்டிய அவசியம் இருந்ததா என்ற கேள்வி எழுகின்றது.
 
இருவரும், மேல் நாடுகளில் வசிப்பவர்கள். ஆகவே பிடிக்காவிடில் விலகுவது, சிரமமான விடயம் இல்லை.
 
ஆகவே என்ன நடந்து இருக்கும்?
 
டிவானி, எல்லோரும் எண்ணுவது போல, கொலைக்காக பணம் கொடுத்திருக்க மாட்டார். மாறாக, இவர் ஓரின சேர்க்கை(யாளர்) குறித்த பேச்சு வார்த்தை நடத்தி இருக்கக் கூடும். ஒரு ஆண் விபசாரி குறித்தும் கேட்டு இருக்கலாம். 
 
தோங்காவிற்கு, இது ஒரு வித்தியாசமான கோரிக்கையாக இருந்திருக்கும். ஒருவர் அதுவும் தேனிலவில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கோருவது அவருக்கு புதியதாக இருந்திருக்கும். மேலும் இது தொடர்பில் உடனடியாக ATM மூலம் பணம் எடுத்து அட்வான்ஸ் கொடுத்தவுடன், ஆகா, சரிதான், நல்ல காசு பார்க்க வேண்டியதுதான் என அடுத்த திட்டங்களை போட்டிருப்பார்.
 
அன்று மதியம் ஹோட்டலில்  சந்தித்தபோது, கீழத் தேய நாட்டு ஓட்டுனர் செட்டியில் இருக்கும் அழகினை பார்த்தால், தோங்கா கூட ஒரு ஓரின சேர்க்கையாளராக, அன்றைய இரவுக்கு முன், டிவானி உடன் சேர்ந்து இருந்திருக்கலாம்.  
 
Shrien-Dewani-meeting-Zola-Tongo.jpg
 
இந்த விதமான, கீழ்த்தர நடவடிக்கைகள் மூலம் அவர் தனது அழகிய மனைவியின் மதிப்பினை, கெளரவத்தினை அந்த பெண் அறியாமலே நாசமாக்கி இருப்பார். (made others to think her cheaply).
 
அதாவது தனது கணவரின் இந்த பழக்கங்கள் அவருக்கு தெரிந்து இருக்கும் என்று அடுத்தவர் நினைக்கையில், தென் ஆபிரிக்கா போன்ற கீழைத்தேய நாடுகளில் இந்த எண்ணம் மோசமான மதிப்பீடுகளையும,  விளைவுகளை உண்டாக்கும். (குடிகாரனின் மனைவிக்கு கிடைக்கும் மோசமான மரியாதை போன்று)
 
ஆபிரிக்காவில், ஓரினசேர்க்கை இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை. உகாண்டாவில் இதற்கு மரண தண்டனை விதிக்கப் படுகின்றது.  
 
ஆகவே இவர்கள், இந்த பெண்ணை கடத்தி வைத்து, சட்டத்தினை, அல்லது சமூக பழக்க வழக்கங்களை காட்டி பணம் கறக்க திட்டம் இட்டு இருக்கலாம்.
 
ஆனால், கடத்தல் காரர்களின், அவசரமோ, பெண்ணின் போராட்டமோ மரணத்தில் முடிந்து விட்டது.
 
மூன்றாம் நாள் பணம் கைமாறிய போது, தோங்கா, தன்னைப் போல் வண்டியனை இழந்த ஒரு victim ஆகவே, டிவானிக்கு தெரிந்திருப்பார். ஆகவே கொடுக்கப் பட்ட பணம் அவரது ஆண் விபசார சேவைக்கு ஆக இருந்து இருக்கலாம். தோங்கா, ஆறாம் நாள் தான், டிவானி அங்கிருந்து கிளம்பிய 3ம் நாளே கைதானார். தரப் பட்ட பணம் கொலைக்கு என்றார்.
 
(பணம் கைமாற டோயலட் ஏன்? வெளியிலேயே கொடுத்திருக்கலாமே. நாலு நிமிடம் எதற்கு ? என்ன நடந்தது?)
 
தோங்கா இது குறித்து வெளிப் படையாக சொல்ல முடியாத ஒரு நாட்டில் வாழ்கிறார். அதேவேளை டிவானிக்கு கூட இது, வெளியே தெரிவது, (தேனிலவு போன இடத்தில்) குடும்ப, நண்பர்கள் அளவில் ஒரு பெரும் மானப் பிரச்சனையாக இருந்திருக்கலாம்.  
 
அவரது தங்கை சொல்கிறார்: உனக்கு உன்னை பற்றி தெரிந்திருக்கும் என்ற வகையில், ஏன் எனது அக்காவின் வாழ்வினை நாசமாக்கத் துணிந்தாய் ? உனக்கு சாதாரண வாழ்க்கை சரிவராது என்றால் ஏன் திருமணம் செய்தாய்?
 
ஆக அப்பாவிப் பெண், ஒரு பரதேசிப் பயலின் ரகசியமான இரட்டை வாழ்வினால் கொல்லப் பட்டார். சட்டம் கோட்டை விட்டாலும், தெய்வம்..... நின்று அறுக்கும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.