Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி ரசித்த நகைச்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ரசித்ததில் உருப்படியான சிலவற்றில் இதுவும் ஒன்று...பாவம் பேய்களை விரட்டுவது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கனும் பையங்களுக்கு..!

முதலில் உங்களுக்குதான் கத்துக்கோணும் நெடுக்கால போவான் சார்

நாங்க பேய் கறுப்பு கடுப்பு அதுகளோட பழகிறதில்லையே..! :D:icon_idea:

  • Replies 265
  • Views 33.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்கிற காரணத்தை டாக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உன் கணவர் என்ன சொல்லுகிறார்?

டாக்டரை மாற்ற சொல்லுகிறார்!

உன் டாக்டர் என்ன சொல்லுகிறார்?

கணவனை மாற்ற சொல்லுகிறார்.

+ + + + +

நானும், என் புருஷனும் ஒரே தட்டுல தான் சாப்பிடுவோம்.

பிறகு ஏன் பிரிஞ்சிங்க..?

தட்டை யார் கழுவுறதுங்குற சண்டையில தான்.

??????

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்கிற காரணத்தை டாக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உன் கணவர் என்ன சொல்லுகிறார்?

டாக்டரை மாற்ற சொல்லுகிறார்!

உன் டாக்டர் என்ன சொல்லுகிறார்?

கணவனை மாற்ற சொல்லுகிறார்.

டாக்டரை மாத்திறதுதான் சரி கறுப்பி அக்கா...காரணம் என்னெண்டு கேட்டியள் என்றால் உந்த டாக்டருக்கு

நவீன தொழில்நுட்ப அறிவில்லை. ரெஸ்ரியுப் பேபி இருக்கே. அம்மா கூட காசுக்கு வாங்கலாம்.

+ + + + +

நானும், என் புருஷனும் ஒரே தட்டுல தான் சாப்பிடுவோம்.

பிறகு ஏன் பிரிஞ்சிங்க..?

தட்டை யார் கழுவுறதுங்குற சண்டையில தான்.

??????

பேசாம யூஸ் அண்ட் துறோ..பயோ டிகிரேடபிள் பிளேட்டில சாப்பிடுங்க..சண்டையும் வராது..சூழலும் மாசுபடாது.

அது சரி கறுப்பி அக்கா இவற்றை எங்க சுடுறீங்க என்றதை எப்ப போடப்போறீங்க..! :P :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் எங்கே சுட்டது எண்டு போடமுடியாது நொடுக்கு சார். இங்கு போடுவது சுட்டது மட்டும் இல்லை எங்களவர் சொல்லக்கேட்டது, வாழ்க்கையில் கண்டது, வாசித்தது, பிறமொழி நாட்டாவர் சொன்னது...........................................................

................................................................................

...................... இப்படி நீளமா போகுது. அதுதான் தலைப்பில் போட்டன் ரசித்த நகைச்சுவைகள் எண்டு

நீங்கள் உங்கள் கதையில் யானைக்கு பதில் புலி, என்று சொல்லி இருந்தால், நான் அந்த 4 எறும்புகளையும் ஸ்ரீலங்காவின் இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் என்று சொல்லி இருப்பேன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விழா.

தலைமை ஏற்ற மந்திரி இவ்வாறு உரையாற்றினார்..

" நம்ம இந்தியாவிலே எங்கேயோ ஒரு பொம்பள 10 வினாடிக்கு 1 பிள்ளை வீதம் பெத்துக்கிட்டு இருக்கா".

வெகுண்டெழுந்த சர்தார் கத்தினார்.."மந்திரி அய்யா, அவளை உடனே கண்டுபிடிச்சு புள்ள பெக்குறதை நிறுத்தச் சொல்லுங்க..!".

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழேயுள்ள படத்தில் எத்தனை ஆட்கள் நிற்கிறார்கள் என முதலில் எண்ணிக்கொள்ளவும். மீண்டும் ஐந்து வினாடிக்குப் பிறகு மறுபடியும் எண்ணவும்.

வித்தியாசம் ஏதும் உள்ளதா?

change7jwoq3.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மப்பிலை விசயம் தெரியாமல் இந்தப்பக்கம் வந்துட்டன் .எதுக்கும் எல்லாம் அடங்கினப்பிறகு வந்து............................ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புதருக்குள் விழுந்துவிட்ட பந்தை எடுக்கச்சென்ற லதா ஒரு தவளை பொறியில் மாட்டியிருந்ததைக் கண்டாள். இவளைக்கண்டதும் தவளை சொன்னது, "பெண்ணே, என்னை இப்பொறியிலிருந்து விடுவித்தாயென்றால் உனக்கு மூன்று வரங்கள் தருவேன்." மகிழ்ந்துபோன லதா தவளையை விடுவித்ததும் அது சொன்னது, "ஆனால், நீ கேட்கும் வரங்கள் மூன்று மடங்காக உன் கணவனுக்கு வழங்கப்படும், சம்மதமா?"

வரம் கிடைத்தால்சரிதான் என்று சம்மதித்து முதல் வரத்தைக் கேட்டாள் லதா. "நான் உலகிலேயே மிகப்பெரிய அழகியாக வேண்டும்."

தவளை சொன்னது, "செய்கிறேன். ஆனால் உன் கணவன் உன்னைவிட மூன்று மடங்கு அழகில் சிறந்து விளங்குவான். மற்றப் பெண்கள் அவன் அழகில் மயங்குவர். சம்மதமா?"

"சம்மதம். எப்படியிருந்தாலும் நான் தானே உலகப்பேரழகி. அதனால் அவர் என்னை மட்டுமே விரும்புவார்", என்றாள் லதா. அதுபோலவே அவள் தவளையால் பேரழகியானாள். பெருமகிழ்ச்சியில் திளைத்த அவளிடம், "சரி உன் இரண்டாவது வரம் என்ன?", கேட்டது தவளை. "நான் உலகிலேயே பெரும் பணக்காரியாகவேண்டும்", என்றாள் லதா. தவளை அவளிடம் மறுபடியும், "உன் கணவன் உன்னைவிட மூன்றுமடங்கு பணக்காரனாவான், பரவாயில்லையா?" என்றது. லதா தவளையிடம், "அவர் என் கணவன் என்றபடியால் அவர் பணமும் என் பணம்தானே? ஆகவே சம்மதம்.", என்றாள். அவள் விருப்பப்படியே பெரும் பணக்காரியானாள்.

"மூன்றாவது வரம் என்ன?", கேட்டது தவளை. நன்றாக யோசித்துவிட்டுத் தன் கணவனின் கதையை முடிக்க நினைத்த லதா சொன்னாள், "எனக்கு மெல்லிய மாரடைப்பு வரவேண்டும்!"

---------------------------------------------------------------------------------

சரி பெண் உறுப்பினர்களே! உங்களுக்கான கதை மேலே உள்ள பகுதியுடன் முடிவடைகிறது. கீழே வாசிக்கவேண்டாம். ஆண் உறுப்பினர்களே! கீழே தொடர்ந்து படியுங்கள்.

அவளது மூன்றாவது வரமும் வழங்கப்பட்டது. அதன்படி, லதாவின் கணவனுக்கு மூன்று மடங்கு மெல்லிய மாரடைப்பு வந்தது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை இப்படி முடிச்சிட்டிங்களே.

முடிவை ஆண்கள் வாசிக்க வேண்டாம் எண்டு போட்டிருக்கலாம்

வாசித்த பின் அவர்கள் தான் மனைவி விசயத்தில் அவதானமாய் இருப்பினம் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘‘டாக்டர்! நீங்க தெய்வம்!’’

‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’

‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.

நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்

பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’

‘‘காமெடி படம் பார்க்க ஒரு ஸீட் தள்ளி உங்க மனவிய உட்கார வெச்சிருக்கீங்களே, ஏன்?’’

‘‘சொந்தப் பிரச்சனையத் தள்ளிவெச்சுட்டு,

கொஞ்ச நேரம் சிரிக்கலாமேன்னுதான்!’’

‘‘தலவர் ஜெயிச்சா, நூத்தியெட்டு தேங்காய் உடக்கிறதா சாமிகிட்ட வேண்டி இருக்காரு!’’

‘‘‘தோத்ப்போனா?’’

‘‘நூத்தியெட்டு சோடா பாட்டில் உடப்பாராம்!’’

‘‘டாக்டர்! நீங்க தெய்வம்!’’

‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’

‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.

நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்

பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’

‘‘காமெடி படம் பார்க்க ஒரு ஸீட் தள்ளி உங்க மனவிய உட்கார வெச்சிருக்கீங்களே, ஏன்?’’

‘‘சொந்தப் பிரச்சனையத் தள்ளிவெச்சுட்டு,

கொஞ்ச நேரம் சிரிக்கலாமேன்னுதான்!’’

‘‘தலவர் ஜெயிச்சா, நூத்தியெட்டு தேங்காய் உடக்கிறதா சாமிகிட்ட வேண்டி இருக்காரு!’’

‘‘‘தோத்ப்போனா?’’

‘‘நூத்தியெட்டு சோடா பாட்டில் உடப்பாராம்!’’

கறுப்பி அக்கா எப்படி நீங்கள் இவ்வளவு அறிவாக கதைக்கிறீங்கள் நான் கொஞ்சநாளா வராமல் எல்லாரும் அறிவாளிகள் ஆகிவிட்டாங்கள் போல

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா எப்படி நீங்கள் இவ்வளவு அறிவாக கதைக்கிறீங்கள் நான் கொஞ்சநாளா வராமல் எல்லாரும் அறிவாளிகள் ஆகிவிட்டாங்கள் போல

:P :P :P

ஆகா யம்முக்கு இப்ப உன்மை எல்லாம் விளங்குது :P

கறுப்பி அக்கா எப்படி நீங்கள் இவ்வளவு அறிவாக கதைக்கிறீங்கள் நான் கொஞ்சநாளா வராமல் எல்லாரும் அறிவாளிகள் ஆகிவிட்டாங்கள் போல

:P :P :P

யமுனா கற்பூரந்தான் :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்... இன்னைக்கு எவன்

மண்டையைப் போடப் போறான்னு தெரியலை..!’’

‘‘இதோ பாருங்க சிஸ்டர்... ஆபரேஷன்

தியேட்டர்ல நின்னுக்கிட்டு இப்படியெல்லாம்

மெகா சீரியலைப் பத்திப் பேசக் கூடாதுன்னு

எத்தனை தடவை சொல்றது...?’’

‘‘போர்க்களத்தில் முள் குத்தியதால்

மன்னர் துடிக்கிறார்!’’

‘‘யாரிடமாவது குண்டூசி வாங்கி

முள்ளை எடுப்பதுதானே?’’

‘‘வேண்டாம். போர்க்களத்தில்

பின்வாங்கினோம் என்ற

அவப்பெயர் வந்துவிடும்!’’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குரங்கு அடிக்கடி தலையை சொறியுது. ( ஆதிவாசி சார் யை நினைச்சுடாதீங்க)

தமிழனின் பெருமை

நபர்1- அடேய் தமிழனின் பெருமை உனக்கு என்ன தெரியும் அந்தக்காலத்திலேயே நீராவியில புட்டு,இடியப்பம் அவிச்சாக்கள் நாங்கள்

நபர்2- ஓம் எனக்கு தெரியும் வெள்ளைக்காரன் நீரவியை வச்சு கப்பல் ஒட்டீட்டான் ரயில் ஒடீட்டான் எங்கட சனம் இன்னும் புட்டும் இடியப்பமும் அவிக்குது

சரி நானும் - ஒண்ணு எடுத்து விடுறன்:

கொஞ்சம் மாத்தி...!

சர்தாஜி ஒருவர் - ஏப்ரல் ஓராம் திகதியில...

அதுதாங்க - முட்டள்கள் தினம்...

இன்னிக்கு -யாரையாவது ஏமாத்தணும் என்னு நினைச்சாராம்........

ஒரு பஸ்ல ஏறினாராம்...

இந்த ஊருக்கு போகணும் - டிக்கட் கொடுன்னு- நடத்துனர்கிட்ட கேட்டாராம்!

அவரும் கொடுத்தாராம்!

உடன சர்தாஜி விழுந்து விழுந்து சிரித்தாராம்...

நடத்துனரர்: ஏன் இப்பிடி சிரிக்கிறீங்க?

சர்தாஜி: நல்லா ஏமாந்திட்டியா- எங்கிட்டதான் - பஸ் பாஸ் இருக்கே!!

ரசிச்சது:மாலைசுடர் ல! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பிராமணாள் ஜோக் கேள்விப் பட்டதுண்டோ!

ஒரு பல் வைத்தியரிடம் ஒரு பிரஞ்சுக்காரன் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் பிரஞ்சுக்காரனிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது ஒரு விலை உயர்ந்த வைன் போத்தல் மருத்துவமனை வாயிலில் கிடந்தது.

அடுத்த நாள் ஒரு முஸ்லீம் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் முஸ்லீமிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது ஒரு கூடை மாட்டிறைச்சி பிரியாணி மருத்துவமனை வாயிலில் வைக்கப் பட்டிருந்தது

அதற்கு அடுத்த நாள் ஒரு பிராமணன் வைத்தியம் பார்த்துவிட்டு காசு கொடுக்கும் போது, நான் பிராமணனிடம் காசு வாங்கு வதில்லை என்று வைத்தியர் கூறினார் அடுத்த நாள் வைத்தியர் மருத்துவமனைக்கு வரும்போது பல பிராமணர்கள் மருத்துவமனை வாயிலில் இலவசமாக மருத்துவம் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

Edited by இளங்கோ

குடிகாரன் ஒருவனிடம் ஒருவர் போய்கேட்கிறார் ஏன் அண்னை நீங்க குடிச்சு குடிச்சு உடம்பை கெடுகிறீங்க என

அதுக்கு குடிகாரன் சொன்னான் ஒரே கவலை தம்பி என

அப்படி என்ன கவலை என அவர் கேட்க அவர் சொன்னாராம் இப்படி குடிச்சு குடிச்சு உடம்பை கெடுக்கிறன் என கவலைதான் தம்பி எண்டானாம் அந்த குடிகாரன்

பி.கு-இது சின்னப்புவிடம் கேட்கப்பட்டதல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் துணுக்குகளும் அழகு :lol:

ஆகா யம்முக்கு இப்ப உன்மை எல்லாம் விளங்குது :P

:lol::lol::D:lol:

யமுனா கற்பூரந்தான் :P :P :P

அப்படி யார் வதந்தியை கட்டினது

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::D:lol:

நான்தான் இப்ப என்ன அதுக்கு :P அது சரி எங்கே கொஞ்நாளா ஆளை ககானோம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குரங்கு அடிக்கடி தலையை சொறியுது. ( ஆதிவாசி சார் யை நினைச்சுடாதீங்க)

யாராவது சொல்லுங்களன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.