Jump to content

சுறா புட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தேவையானவை

 

சுறா மீன் –அரை கிலோ 

வெங்காயம் –கால் கிலோ 

பூண்டு – 150 கிராம் 

பச்சை மிளகாய் – 5 

இஞ்சி – 1 துண்டு 

கறிவேப்பிலை – சிறிதளவு 

கொத்தமல்லி – சிறிதளவு 

மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் 

எண்ணெய் – தேவையான அளவு 

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

-

 

செய்முறை

 

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும்.

சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். 

அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாசனை போன பிறகு மெத்தென வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

பூண்டு அதிகம் சேர்த்து கொண்டால் சுறாமீனில் இருக்கும் வாய்வு தொல்லை நீங்கி விடும்

 

- See more at: http://www.tamilula.com/recipes/68/method/sura-pittu-225#sthash.UEjnSdpW.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஏன் சுறாப்புட்டு என புட்டு  சேர்க்கப்பட்டது

 

எனக்கு சுறா என்றால் நல்ல விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஏன் சுறாப்புட்டு என புட்டு சேர்க்கப்பட்டது

எனக்கு சுறா என்றால் நல்ல விருப்பம்

தமிழகத்தில், சுறாவறைக்குப் பதில், சுறாப்பிட்டு என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் 'பால் சுறா' தான் உபயோகிக்க வேண்டும்!

 

எங்கட ஊரில இதைச் 'சுறா வறை' என்று தான் கூறுவார்கள்!

 

இளம் தாய் மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் விசேடமாகச் செய்து கொடுப்பார்கள்!

 

அதனால் தான் 'பால் சுறா' என்ற பெயர் வந்ததோ தெரியாது. :D

 

img_0770_copy_1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுறா வறைதான். எனக்குத் தெரிய வல்வெட்டித்துறை மக்கள் புட்டு என்பர் இதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தேவையானவை

 

சுறா மீன் –அரை கிலோ 

வெங்காயம் –கால் கிலோ 

பூண்டு – 150 கிராம் 

பச்சை மிளகாய் – 5 

இஞ்சி – 1 துண்டு 

கறிவேப்பிலை – சிறிதளவு 

கொத்தமல்லி – சிறிதளவு 

மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் 

எண்ணெய் – தேவையான அளவு 

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

-

 

செய்முறை

 

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும்.

சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். 

அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாசனை போன பிறகு மெத்தென வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

பூண்டு அதிகம் சேர்த்து கொண்டால் சுறாமீனில் இருக்கும் வாய்வு தொல்லை நீங்கி விடும்

 

- See more at: http://www.tamilula.com/recipes/68/method/sura-pittu-225#sthash.UEjnSdpW.dpuf

 

 

உவ்வளவுத்துக்கும் மொத்தச்செலவு எவ்வளவு வரும்?  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை, சுறா வறை என்றுதான்... நாமும் கூறுவோம்.
நல்ல சுவையாக, இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

 

உவ்வளவுத்துக்கும் மொத்தச்செலவு எவ்வளவு வரும்?  :(

 

கனக்க செலவு, ஆகாது குமாரசாமி அண்ணா.
செய்முறையில்... குறிப்பிட்டுள்ள படி சமைத்தால்....  10 € தான் வரும்.
ஆனால்... அரை கிலோ சுறாவில் செய்து, மினக்கெடுவதிலும் பார்க்க.... ஒரு கிலோ சுறாவில் செய்யுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை பிட்டு அல்லது வெள்ளை சோறுக்கு அந்த மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதற்க்கு இங்கு பிடிக்கப்படும் சுறாவை விட ஆசிய நாடுகளில் பிடிக்கப்படும் வெண் சுறாதான் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும்.
 
இணைப்புக்கு நன்றி பிழம்பு.   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனுடன், தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து இறக்கினால் அருமையோ, அருமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.