Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது – மாவை சேனாதிராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ரிஸ்க் எடுத்து விதை போட்டது 3 வருடம் முன்பு.
இப்போ மரம் வளர்ந்து பழம் தொங்குது .........
இனி அவர்கள் புடுங்கி சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்.
 
சில அரசியல் மேதைகள்.
இப்போதைய உலக அரசியலில் உக்ரைனில் பிரச்சனை  கஷ்மீரில் குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் அதிர்கிறது. இப்போதைய அரசு சரியான நேரத்தில் காயை நகர்த்துகிறது. இதுதான் இந்தியாவிற்கு முநேற்றத்தை கொடுக்கும் அது இது என்று எழுதி கொட்டி விடுவார்கள். 
வாசிப்பவர்களும் ஜோசியம் மாதிரி .....
உண்மைதான் உக்ரைனில் பிரச்சனை ....
காஸ்மீரில் குண்டு வெடிக்கிறது. எல்லா சர்வதேச அரசியலையும் அலசி ஆராய்ஞ்சு ஒரு கட்டுரை வரைஞ்சு இருக்கிறார் என்று. தங்கள் அரசியல் அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டியதுதான். 

நீங்க வேற...

மேதைகளின் கட்டுரைகள் பாதியிலேயே படுத்துவிடுகின்றன.... :(  :(

  • Replies 75
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் எப்படி முன்வர முடியும்?
எந்த வழிமுறையை நீங்கள் நம்புகிறீர்கள்?

ஒரு பிரச்சினை பற்றி இரண்டு தரப்பு பேசும்போது வெற்றிகரமாக அந்த பேச்சுவார்த்தை அமைய முதல்படியாக அமைவது:

  1. இரண்டு தரப்பும் தமக்கு பொதுவாக உள்ள பிரச்சினைகள் பற்றியும்,
  2. அவற்றிற்கு  இரண்டு தரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் பற்றியும்

    பேசுவதே ஆகும். இந்த அணுகுமுறைக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் முதல் வெற்றியை இருதரப்பும் ஒன்றாக பெற்று அதை அடிப்படையாக வைத்து தமது உறவை உறுதிப்படுத்துவதாகும். 

வெற்றி வெற்றிகளை பிறப்பிக்கும் என்று ஆங்கிலத்தில் success breeds success சொல்வார்கள்.

தமிழில் இதற்கு எதிர்மாறானதை "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று சொல்வார்கள்.

ஆகவே பேச்சுவார்த்தையை இரு தரப்பும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் விடயங்களில் ஆரம்பித்தால் நிச்சயமாக அது முதல் கோணலாக, ஆரம்பமே தோல்வியாக அமையும். இவற்றிற்கான சில உதாரணங்களாக

தமிழர் தரப்பு:

  • போர்க்குற்ற விசாரணை 
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி
  • சுய நிர்ணைய உரிமையை தா
  • இராணுவத்தை வெளியேற்று

என்று கேட்பதும்

ஸ்ரீ லங்கா அரசு:

  • தமிழ் ஈழத்தை கைவிடு
  • சிங்களத்தை படி
  • நடந்த போர்க்குற்றங்கள மறந்து போ
  • இறந்து போன மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூராதே

என்று கேட்பதும் அமையும்.

சீன, இந்திய, அமரிக்க வல்லரசுகளின் மேலாதிக்க போட்டியில் இலங்கை பகடைக்காயாக இருப்பது சிங்கள மக்களுக்கு பல்லாண்டுகளாக ஒரு பெரிய சிக்கல். இந்த சிக்கலில் தமிழர்களின் வகிபாகத்தை சிங்கள மக்கள் தேசத்துரோகமாகவே பார்க்கிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து விடுபட இலங்கை என்ன செய்யலாம் என்பது பற்றி சிங்கள தலைவர்களுடன் தமிழ் மக்கள் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது முதல்படியாக அமையும்:

  1. இன்று கொடுத்த கடனை வைத்து சீனா இலங்கை அரசை கட்டுபடுத்துகிறது. இந்த கடனை குறைக்க வணிக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கி புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது சிங்கள மக்களுக்கும் பெரும் பயன்தரும் ஒரு விடயமாகும். கடன் குறைந்தால் சீனாவின் கட்டுப்பாடு குறையும்.
  2. சீனாவின் தயவில் இன்று வாழ்பவர்கள் போர்க்குற்றவாளிகள். இவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் சீனாவின் ஆதிக்கம் குறையும். இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களை தலைவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்துக்கு போர்க்குற்றவாளிகள் காரணம் என்றும் அந்த ஆதிக்கத்தை அகற்ற தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவதையும் வெளிப்படையாக தலைவர்கள் தமது பங்களிப்பாக முன்வைக்க வேண்டும்.
  3. இந்தியாவின் ஆதிக்கம் குறைய முதலமைச்சர் போல வெளிப்படையாகவே இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து இலங்கை பிரச்சினையை வேறுபடுத்திக்கொள்ள வேண்டும். இதனை மற்ற தமிழர் தலைவர்களும் முன்வந்து செய்ய வேண்டும். தமிழர்களை இந்தியாவே தனது தேசிய நலனுக்காக இன்றுவரை பலிகொடுப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் இந்தியாவின் திட்டத்தில் விருப்பமில்லாத பங்குதாரர்கள். அவர்கள் தமிழர்களை இன்று கொன்றழிப்பது இந்தியாவினதும் சீனாவினதும் திட்டத்தின் படியாகும் என்பதை தமிழர்கள் தாம் புரிந்து கொண்டு அதை வெளிப்படையாக தெரிவிக்க தயங்க கூடாது.  ( முன்னர் நடைபெற்ற கலவரங்கள் எல்லா நாட்டிலும், இனங்களிலும் இடம்பெறுபவை. நல்ல அரசாங்கம் அதனை கட்ட்ப்படுத்தலாம். அந்த கலவரங்களுக்கு இந்த வல்லாதிக்க போட்டி காரணம் அல்ல. )  இந்த வல்லரசுகளின் மேலாதிக்க அழிவில் இருந்து சிங்கள மக்களும் தமிழர்களும் இணைந்து விடுபட இவ்வாறான வெளிப்படையான கருத்துக்கள் பயனுள்ளவையாக அமையும். முதலமைச்சரின் வழிகாட்டலை ஏனைய தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
  4. இவ்வாறாக கட்டியெழுப்பப்படும் உறவில் உருவாகும் அரசு ஆதாரம் உள்ள போர்க்குற்றவாளிகளை சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதற்கு முதலில் தமிழர் - சிங்களவர்  அரசியல் உறவு உறுதியாக வேண்டும்.

சமாதனாப் பேச்சுகளீன் போதும் பலர் வந்து நல்லெண்னம், புரிந்து உணார்வு சர்வதேச அரசியல் என்றூறு சொன்னார்கள், இப்போது மீண்டும் சொல்கிறார்கள்.

திருமுருகன் மிகத் தெளீவாக மேற்குலகின் பாத்திரம் என்ன என்பதைச் சொல்லி இருக்கிறார். புலிகளை வெளீயேற்றும் முயற்சி சனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே தொடங்கி விட்டது. இதை விகிலிக்ச் தகவல்கள் உறூதி செய்து இருக்கின்றன. 

நலன்களில் நகரும் உலகில் இந்தியா என்ன சொல்கிறாதோ அது தான் தமிழருக்குக் கிடைக்கும். பா ஜா கா மோடி அரசு கொடுப்பதை வாக்கிங் கொண்டு இருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சிங்களா பவுத்தபேரினவாதாம் அதற்குக் கூட செவி சாய்க்காது. மகின்த போய் மைத்ரி வரலாம், ஆனால் சிங்கள பேரினவாதாம் , தமிழருக்கு சுய அரசை என்றுமே கொடுக்காது.

மீண்டும் இன்னொரு தேர்தலும் வரும் அப்போது மைத்ரிக்குப் பதில் இன்னொரு புதிய தலைவர் வருவார்.

நாமாகப் போராடாமல் எதுவும் நடக்கப்போவதில்லை. டீல் போடுவதற்கு எம்மிடம் இப்போது எதுவும் இல்லை. எம்மிடம் இருக்கும் மக்கள் பலத்தைத் திரட்டி ஈழம், தமிழ் நாடு , புலம் எனப் போராடாமல் எதுவும் சாத்தியப் படப் போவதில்லை. அதுவரை இப்படியே தான் கூட்டமைப்பு இழுபடும், ஒரு உறுதியான,  மதியூகம் மிக்க ஒரு தலைவன் வரும் வரை.

ஈழத்தமிழர் 12% ஆக இருந்து அதில் போராட கூடியவர்கள் எல்லாம் வன்னி போரில் மரணித்து விட்டார்கள். வெளிநாட்டுக்கு வந்தவர்களில் திரும்பி போய் போரடக்கூடியவர்கள் இலங்கை ராணுவம் திரட்டக்கூடியவர்களுடன் ஒப்பிடுகையில் சிறு துளி.

இலங்கை இராணுவத்தில் உள்ள (கருணா, பிளாட், இபிடிபி) தமிழர்கள் முள்ளிவாய்க்கால் போரில் இலங்கை அரசுக்கு வெற்றி பெற்று கொடுப்பதில் குறிப்பிட தக்க பங்காற்றி இருக்கிறார்கள். ஆகவே எத்தனை பேருடன் போராட போகிறீர்கள்? முன்னாள் போராளிகள் பலர் இன்று இலங்கை இராணுவ வீரர்கள்.

தமிழ்நாட்டுத்தமிழர் அடையாள போராட்டம் தான் நடத்துவார்கள். முள்ளிவாய்க்கால் நடந்த போது பார்க்கவில்லையா? மேலும் அவர்களில் பல தலைவர்கள் இந்திய அரசின் திட்டத்துக்கு ஈழத்தமிழரை பலி கொடுக்க என்றே திட்டமிட்டு பயன்படுத்தப்படுபவர்கள்.

அவர்களை நம்பி தான் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. இன்னமும் இந்தியா அழித்து முடிக்கும் வரை அழிந்து போகிறோம் என்று நிற்பவர்கள் அழிந்து போவதை யாரும் தடுக்க முடியாது. நடைமுறை சாத்தியமில்லாத விரக்தியான கருத்துக்கள் பயனற்றவை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், சம்பந்தன், சுமேந்திரன் போன்றவர்கள் சிங்களவர் - தமிழர் என்ற இனவாத சிந்தனைக்க்கு மேல் சென்று புவியியல் வல்லாதிக்க சாணக்கிய வியூகங்களை புரிந்து கொண்டு ஈழத்தமிழர்  பகடைக்காய்களாக  அழிவதை இனிமேலாவது தடுக்க வேண்டும்.

Edited by Jude

போராடுவது என்பது ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே அல்ல. யார் எவர் வந்தாலும் வீதியில் இறங்கிப் போராடாமல் ஒன்றுமே  நடக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய காணொளி ஆனாலும் எத்தனைபேர் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. மீள் இணைப்பிற்கு நன்றி நொச்சி.

குறிப்பாக 40:00 நிமிடங்களில் இருந்து தமிழகத்தில் நடைபெறுவது குறித்து பேசுகிறார். ஜெயலலிதாவை முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பதை 2011 இல் சொல்லியிருக்கிறார். ஹிலரி கிளின்ரன் ஜெயாவை சந்தித்த விடயமும் ஞாபகத்துக்கு வருகிறது.

இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் மகிந்தவா மைத்திரியா என்கிற கேள்வி எழாது.. :D

உண்மைதான் இசைக்கலைஞனவர்களே,
இதனை எத்தனைபேர் கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிலவிடயங்களை ஆய்வுரீதியாக முன்வைக்கின்றார். இதில் உடன்பாடு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.அரசியல் ரீதியான தெளிவென்பது பட்டறிவின்வாயிலாகவும் கருத்தியல் ரீதியிலான(உடன்பாடு-எதிர்மறை) உரையாடல் வாயிலாகவும் ஏற்படுவது.அதற்கானதொரு வெளியை விவாதத்தை ஏற்படுத்த முனையும் தரப்புகளை உள்வாங்கவோ ஊக்கப்படுத்தவோ தயாரில்லாத சூனியவெளியாக எமது அரசியல் இயங்குதளம் நகர்கிறது.அதன் விளைவாகக்கூடச் சரியோ தவறோ த.தே.கூ ஒரு முடிவை எடுக்கமுடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம்.
 
நாமே எமக்கொரு வட்டத்தைக் கீறிவிட்டு நிற்போமாயின் இன்றைய இந்த இரண்டும்கெட்டான்  நிலையான தலைமைத்துவ இடைவெளியைச் சிங்கள பேரினவாதம் சரியாகப் பயன்படுத்தும். அதற்கான எல்லா வாய்ப்பகளும் திறந்தே உள்ளது. எனவே இதனை எதிர்கொள்ளும் வகையிலே தாயகம் +தமிழகம்+ புலம் என்ற மூன்று சக்திமையங்களும் தத்தமது வளங்களுக்கேற்ப ஒன்றாக அணிவகுத்துத் சரியான திட்டமிடலொன்றின் மூலம் சிங்களத்தை எதிர்கொள்ள முனைய வேண்டும். அதனூடாகவே நாம் அனைத்துலக சக்திகளையும் எதிர்கொள்ள முடியும்.  

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ராஜதந்திரம் என்பது மேற்கும் இந்தியாவும் விரும்பும்  அரசியல் திட்டங்களுக்கு அமைவாக எம்மை தயார் படுத்துவதேயாகும்.சம்பந்தர் ஐயா இந்தியாவின் திட்டம் இல்லாமல் இலங்கையில் காலடி வைக்க மாட்டார்.  :)
தமிழர்களுக்கான வெற்றிகள்  இனிமேல் deal களினால் மட்டுமே சாதுரியமாக பெற முடியும்.

நாங்கள் எங்களிடம் உள்ள பலம் என்பதை உலகிற்கு காட்டாமல்.. ஒரு டீலும் சரிவராது.

முன்னர் எம்மிடம் ஆயுதங்கள் இருந்தன. உலகம்.. அதற்கு பயந்துதோ இல்லையோ.. பிராந்தியத்தில் அது தனக்கு தன்னிச்சையாக நகர்வுகளுக்கு..அச்சுறுத்தலாக அமையும் என்று அஞ்சியது.

இன்று அப்படி எதுவும் இல்லை. இந்த நிலையில்.. உலகம்.. சிங்களவனை விட்டு தமிழனோடு.. டீல் போடும் எந்த தேவையையும் கொண்டிருக்கவில்லை. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

இந்த நிலையில்.. சம்பந்தன்.. மாவை.. விக்னேஸ்வரன்.. எவர் மற்றவர்கள் குட்ட குனிந்து கொடுத்தாலும்..எதனாலும்.. எமக்கு நன்மை இல்லை.

எமது மக்கள் தங்கள் இருப்பை.. விருப்பை.. வெறுப்பை காட்ட வேண்டிய ஒரு களமாக இந்தத் தேர்தலை பாவிக்க வேண்டும். அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்.. உலகிற்கும் ஒரு வலுவான செய்தியை சொல்ல வேண்டும். அந்த வகையில்.. மக்கள்.. சிங்கள தேசிய தலைமைகளை நிராகரித்து வாக்களிப்பதே நல்லது..!!!! :icon_idea:

இந்த வலுவான செய்தியின் வலுவை எவ்வளவு என்று எப்படி தீர்மானிப்பீர்கள்?

போராடுவது என்பது ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே அல்ல. யார் எவர் வந்தாலும் வீதியில் இறங்கிப் போராடாமல் ஒன்றுமே  நடக்கப் போவதில்லை.

வீதியில் இறங்கி இதுவரை போராடவில்லையா?

அப்படி போராடி கிடைத்த பலன் என்ன?

உண்மையில் ஆயுதப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பல கோடி  மணித்தியாலங்களையும் பணத்தையும் உயிர்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

வீதியில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மணித்தியாலங்களாக போராடி இருக்கிறார்கள்.

இவை உரிய பயனை இன்றுவரை தரவில்லை.

இவற்றோடு ஒப்பிடும் பொது பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட்ட மணித்தியாலங்கள் மிகவும் குறைவானவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சினை பற்றி இரண்டு தரப்பு பேசும்போது வெற்றிகரமாக அந்த பேச்சுவார்த்தை அமைய முதல்படியாக அமைவது:

  1. இரண்டு தரப்பும் தமக்கு பொதுவாக உள்ள பிரச்சினைகள் பற்றியும்,
  2. அவற்றிற்கு  இரண்டு தரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் பற்றியும்

    பேசுவதே ஆகும். இந்த அணுகுமுறைக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் முதல் வெற்றியை இருதரப்பும் ஒன்றாக பெற்று அதை அடிப்படையாக வைத்து தமது உறவை உறுதிப்படுத்துவதாகும். 

வெற்றி வெற்றிகளை பிறப்பிக்கும் என்று ஆங்கிலத்தில் success breeds success சொல்வார்கள்.

தமிழில் இதற்கு எதிர்மாறானதை "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று சொல்வார்கள்.

ஆகவே பேச்சுவார்த்தையை இரு தரப்பும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் விடயங்களில் ஆரம்பித்தால் நிச்சயமாக அது முதல் கோணலாக, ஆரம்பமே தோல்வியாக அமையும். இவற்றிற்கான சில உதாரணங்களாக

தமிழர் தரப்பு:

  • போர்க்குற்ற விசாரணை 
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி
  • சுய நிர்ணைய உரிமையை தா
  • இராணுவத்தை வெளியேற்று

என்று கேட்பதும்

ஸ்ரீ லங்கா அரசு:

  • தமிழ் ஈழத்தை கைவிடு
  • சிங்களத்தை படி
  • நடந்த போர்க்குற்றங்கள மறந்து போ
  • இறந்து போன மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூராதே

என்று கேட்பதும் அமையும்.

சீன, இந்திய, அமரிக்க வல்லரசுகளின் மேலாதிக்க போட்டியில் இலங்கை பகடைக்காயாக இருப்பது சிங்கள மக்களுக்கு பல்லாண்டுகளாக ஒரு பெரிய சிக்கல். இந்த சிக்கலில் தமிழர்களின் வகிபாகத்தை சிங்கள மக்கள் தேசத்துரோகமாகவே பார்க்கிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து விடுபட இலங்கை என்ன செய்யலாம் என்பது பற்றி சிங்கள தலைவர்களுடன் தமிழ் மக்கள் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது முதல்படியாக அமையும்:

  1. இன்று கொடுத்த கடனை வைத்து சீனா இலங்கை அரசை கட்டுபடுத்துகிறது. இந்த கடனை குறைக்க வணிக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கி புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது சிங்கள மக்களுக்கும் பெரும் பயன்தரும் ஒரு விடயமாகும். கடன் குறைந்தால் சீனாவின் கட்டுப்பாடு குறையும்.
  2. சீனாவின் தயவில் இன்று வாழ்பவர்கள் போர்க்குற்றவாளிகள். இவர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் சீனாவின் ஆதிக்கம் குறையும். இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களை தலைவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்துக்கு போர்க்குற்றவாளிகள் காரணம் என்றும் அந்த ஆதிக்கத்தை அகற்ற தமிழ் மக்கள் இணைந்து செயற்படுவதையும் வெளிப்படையாக தலைவர்கள் தமது பங்களிப்பாக முன்வைக்க வேண்டும்.
  3. இந்தியாவின் ஆதிக்கம் குறைய முதலமைச்சர் போல வெளிப்படையாகவே இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து இலங்கை பிரச்சினையை வேறுபடுத்திக்கொள்ள வேண்டும். இதனை மற்ற தமிழர் தலைவர்களும் முன்வந்து செய்ய வேண்டும். தமிழர்களை இந்தியாவே தனது தேசிய நலனுக்காக இன்றுவரை பலிகொடுப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் இந்தியாவின் திட்டத்தில் விருப்பமில்லாத பங்குதாரர்கள். அவர்கள் தமிழர்களை இன்று கொன்றழிப்பது இந்தியாவினதும் சீனாவினதும் திட்டத்தின் படியாகும் என்பதை தமிழர்கள் தாம் புரிந்து கொண்டு அதை வெளிப்படையாக தெரிவிக்க தயங்க கூடாது.  ( முன்னர் நடைபெற்ற கலவரங்கள் எல்லா நாட்டிலும், இனங்களிலும் இடம்பெறுபவை. நல்ல அரசாங்கம் அதனை கட்ட்ப்படுத்தலாம். அந்த கலவரங்களுக்கு இந்த வல்லாதிக்க போட்டி காரணம் அல்ல. )  இந்த வல்லரசுகளின் மேலாதிக்க அழிவில் இருந்து சிங்கள மக்களும் தமிழர்களும் இணைந்து விடுபட இவ்வாறான வெளிப்படையான கருத்துக்கள் பயனுள்ளவையாக அமையும். முதலமைச்சரின் வழிகாட்டலை ஏனைய தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
  4. இவ்வாறாக கட்டியெழுப்பப்படும் உறவில் உருவாகும் அரசு ஆதாரம் உள்ள போர்க்குற்றவாளிகளை சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதற்கு முதலில் தமிழர் - சிங்களவர்  அரசியல் உறவு உறுதியாக வேண்டும்.

நீங்கள் நேரமெடுத்து யோசித்து எழுதியதை அவதூறு பண்ணும் எண்ணம் உண்மையில்  இல்லை.....
 
தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று எழுதினீர்கள்.
எப்படி ?  எனும்போது ...
இரு பகுதியும் பரஸ்பரம் பேச வேண்டும் என்கிறீர்கள்.
(ஆக ஒரு கை அசைந்து பலன் இல்லை என்பதை நீங்களும் ஏற்று கொள்கிறீர்கள்)
 
சிங்கள பேரினவாதம் பற்றி மிக குறைவாக எடைபோட்டு வைத்திருக்கிறீர்கள். தமிழர்களிடம் இருந்து ஆயுத போராட்டம் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று இப்போது.
சிங்கள பாராளுமன்றம் பாதுகாப்பு செலவுக்கு எவளவு ஒதுக்குகிறது?
எவளவு ஆயுதங்களை கடந்த வருடம் இறக்குமதி செய்திருக்கிறார்கள் தெரியுமா?
 
நாங்கள் வலிக்குது வலிக்குது என்று எவ்ளவும் கத்தலாம் அவர்கள் விடபோவதில்லை. எந்த அடக்குமுறை சிந்தனையும் அப்படி அடிபணிந்தது இல்லை.
 
நீங்கள் எழுதிய வழிமுறை (எழுத்தில்) சாத்தியமானது. 
நிஜத்தில் (நடைமுறை) சாத்தியமற்றது.
 
தமிழர்கள் விட்டுகொடுக்க எதுவுமே இல்லை....
ஆயுதம் ஒன்றுதான் 2009இற்கு முன் இருந்தது அதையும் உலக சண்டியர்களை உதவிக்கு கூட்டிவந்து களைந்து விட்டார்கள்.
இனி எதுவுமே இல்லை.
 
இனியும் புதிய யுத்திகளை பாவித்து புதிய வடிவ போராட்டம் ஒன்றுதான் சிங்கள பேரினவாதிகளை முடக்கும்.
நீங்கள் எவளவு குனிந்தாலும்  குட்டு ஒன்றுதான் அவர்களிடம் இருந்து கிடைக்கும்.
தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களை(இருபகுதி)  ஒருமுறை கேட்டு பாருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றோடு ஒப்பிடும் பொது பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபட்ட மணித்தியாலங்கள் மிகவும் குறைவானவை.

கூட்டமைப்பு மகிந்தவுடன் கதவை பூட்டியும் பூட்டாமலும் பல சுற்றுக்கள் பேசின. எதுவும்  நடக்கவில்லை. கூட்டமைப்பை சிங்கள அரசு ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என தெரிகிறது. இந்த லட்சணத்தில் யார் போய் சிங்கள அரசுடன் மணிக்கணக்கில் பேசி தீர்வை பெறுவது. ஒரு ஜனநாயக நாடு என்று சொல்பவர்களிடம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்புக்கு உள்ள மதிப்பு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Edited by nunavilan

அருமையான கருத்துக்கள் ஜூட். (சில வற்றில் எனக்கு உடன் பாடு இல்லையெனிலும்)

மேற்குலகம்  இவ்வாறு  நகர்கிறது என்பதும் வெறும் ஊகமே.. :(  :(  :(

சந்திரிக்கா, ரணில் ஒன்றுசேர்ந்தது, உள்ளிருந்து மைத்திரியை வெளியே எடுத்தது என்பதெல்லாம் ஒரு coordination  இல்லாமல் நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்களா. 
 
அதைவிட இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தவென்று பல செயற்பாடுகளை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. இது சம்பந்தமாக செய்திகள், கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இந்து பசுபிக் சமுத்திரங்கள் சந்திக்கும் இடத்தில் அவுஸ்திரேலியாவில் அமெரிக்கா பெரிய கடற்படை முகாம் ஒன்றைப் போட உள்ளர்கள்.
 
இதைவிட மஹிந்த மேற்கு நோக்கி அடிக்கடி சொல்லும் குற்றாச்சாடுகள்...
 
கடைசியாக நோர்வே முன்னெடுத்த பேச்சுவார்த்தை நடவடிக்கையையும் மறந்து விட்டீர்கள். நோர்வே மேற்குலகில் தான் இருக்கிறது.  :D
  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று எழுதினீர்கள்.

எப்படி ?  எனும்போது ...
இரு பகுதியும் பரஸ்பரம் பேச வேண்டும் என்கிறீர்கள்.
(ஆக ஒரு கை அசைந்து பலன் இல்லை என்பதை நீங்களும் ஏற்று கொள்கிறீர்கள்)

இலங்கை அரசு ஏன் பேச விரும்பவில்லை என்று நாம் பார்க்க வேண்டும்.

நாம் எதை பற்றி பேச கேட்கிறோம்?

  1. இராணுவத்தை அகற்று.
  2. சுய நிர்ணய உரிமை வேண்டும்
  3. போர்க்குற்றவாளிகளை விசாரணை செய்.

இவற்றை பற்றி பேச கேட்கிறோம். ஸ்ரீ லங்கா அரசு இவற்றை பற்றி பேச விரும்பவில்லை.

ஆகவே 'முதல் கோணல், முற்றிலும் கோணல்.' ஆகி பேச்சுவார்த்தை நடக்க சாத்தியமே இல்லாமல் போகிறது.

ஒரு பிரச்சினை பற்றி இரண்டு தரப்பு பேசும்போது வெற்றிகரமாக அந்த பேச்சுவார்த்தை அமைய முதல்படியாக அமைவது:

  1. இரண்டு தரப்பும் தமக்கு பொதுவாக உள்ள பிரச்சினைகள் பற்றியும்,
  2. அவற்றிற்கு  இரண்டு தரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் பற்றியும் 
    பேசுவதே ஆகும். இந்த அணுகுமுறைக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் முதல் வெற்றியை இருதரப்பும் ஒன்றாக பெற்று அதை அடிப்படையாக வைத்து தமது உறவை உறுதிப்படுத்துவதாகும். 

வெற்றி வெற்றிகளை பிறப்பிக்கும் என்று ஆங்கிலத்தில் success breeds success சொல்வார்கள்.

தமிழில் இதற்கு எதிர்மாறானதை "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று சொல்வார்கள்.

சீன, இந்திய, அமரிக்க வல்லரசுகளின் மேலாதிக்க போட்டியில் இலங்கை பகடைக்காயாக இருப்பது சிங்கள மக்களுக்கு பல்லாண்டுகளாக ஒரு பெரிய சிக்கல். இந்த சிக்கலில் தமிழர்களின் வகிபாகத்தை சிங்கள மக்கள் தேசத்துரோகமாகவே பார்க்கிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து விடுபட இலங்கை என்ன செய்யலாம் என்பது பற்றி சிங்கள தலைவர்களுடன் தமிழ் மக்கள் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது முதல்படியாக அமையும்:

  1. இன்று கொடுத்த கடனை வைத்து சீனா இலங்கை அரசை கட்டுபடுத்துகிறது. இந்த கடனை குறைக்க வணிக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கி புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது சிங்கள மக்களுக்கும் பெரும் பயன்தரும் ஒரு விடயமாகும். கடன் குறைந்தால் சீனாவின் கட்டுப்பாடு குறையும். 

Edited by Jude

ஜூட் நீங்கள் கூறும் விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. உண்மையில் இந்த விடயங்கள் 50 களில் மெத்த படித்த தமிழ்த்தலைமைகளால் சிந்தித்து இருக்க வேண்டிய விடயங்கள். தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம் படித்தவர்கள் இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பக்கா சுயநலவாதிகளாக இருப்பதுதான். தற்போது கூட அதில் முன்னேற்றம் இல்லை. தங்களை மேதாவிகளாக காட்டி கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று எழுதினீர்கள்.

எப்படி ?  எனும்போது ...

இரு பகுதியும் பரஸ்பரம் பேச வேண்டும் என்கிறீர்கள்.

(ஆக ஒரு கை அசைந்து பலன் இல்லை என்பதை நீங்களும் ஏற்று கொள்கிறீர்கள்)

கூட்டமைப்பு மகிந்தவுடன் கதவை பூட்டியும் பூட்டாமலும் பல சுற்றுக்கள் பேசின. எதுவும்  நடக்கவில்லை.

எதுவும் நடக்க்கவில்லை. ஆகவே பேசி பயன் இல்லை என்று இலங்கை அரசு பேசவில்லை.

ஏன் எதுவும் நடக்கவில்லை?

ஒரு பிரச்சினை பற்றி இரண்டு தரப்பு பேசும்போது வெற்றிகரமாக அந்த பேச்சுவார்த்தை அமைய முதல்படியாக அமைவது:

  • இரண்டு தரப்பும் தமக்கு பொதுவாக உள்ள பிரச்சினைகள் பற்றியும்,
  • அவற்றிற்கு  இரண்டு தரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் பற்றியும் 

    பேசுவதே ஆகும். இந்த அணுகுமுறைக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் முதல் வெற்றியை இருதரப்பும் ஒன்றாக பெற்று அதை அடிப்படையாக வைத்து தமது உறவை உறுதிப்படுத்துவதாகும். 

  • வெற்றி வெற்றிகளை பிறப்பிக்கும் என்று ஆங்கிலத்தில் success breeds success சொல்வார்கள்.
  • தமிழில் இதற்கு எதிர்மாறானதை "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று சொல்வார்கள்.

    ஆகவே பேச்சுவார்த்தையை இரு தரப்பும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் விடயங்களில் ஆரம்பித்தால் நிச்சயமாக அது முதல் கோணலாக, ஆரம்பமே தோல்வியாக அமையும். இவற்றிற்கான சில உதாரணங்களாக

    தமிழர் தரப்பு:

  • போர்க்குற்ற விசாரணை 
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி
  • சுய நிர்ணைய உரிமையை தா
  • இராணுவத்தை வெளியேற்று

இது 'முதல் கோணல்'. ஸ்ரீ லங்கா அரசு இவை பற்றி  ஏன் பேச போகிறது? அவர்களுக்கு அதனால் என்ன பயன்?

ஒரு பிரச்சினை பற்றி இரண்டு தரப்பு பேசும்போது வெற்றிகரமாக அந்த பேச்சுவார்த்தை அமைய முதல்படியாக அமைவது:

  • இரண்டு தரப்பும் தமக்கு பொதுவாக உள்ள பிரச்சினைகள் பற்றியும்,
  • அவற்றிற்கு  இரண்டு தரப்புக்கும் பயனுள்ள தீர்வுகள் பற்றியும் 

    பேசுவதே ஆகும். இந்த அணுகுமுறைக்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் முதல் வெற்றியை இருதரப்பும் ஒன்றாக பெற்று அதை அடிப்படையாக வைத்து தமது உறவை உறுதிப்படுத்துவதாகும். 

  • ஆகவே எதை பற்றி நாம் வெற்றிகரமாக பேச முடியும்?

    சீன, இந்திய, அமரிக்க வல்லரசுகளின் மேலாதிக்க போட்டியில் இலங்கை பகடைக்காயாக இருப்பது சிங்கள மக்களுக்கு பல்லாண்டுகளாக ஒரு பெரிய சிக்கல். இந்த சிக்கலில் தமிழர்களின் வகிபாகத்தை சிங்கள மக்கள் தேசத்துரோகமாகவே பார்க்கிறார்கள்.

    இந்த சிக்கலில் இருந்து விடுபட இலங்கை என்ன செய்யலாம் என்பது பற்றி சிங்கள தலைவர்களுடன் தமிழ் மக்கள் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வது முதல்படியாக அமையும்:

    • இன்று கொடுத்த கடனை வைத்து சீனா இலங்கை அரசை கட்டுபடுத்துகிறது. இந்த கடனை குறைக்க வணிக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கி புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது சிங்கள மக்களுக்கும் பெரும் பயன்தரும் ஒரு விடயமாகும். கடன் குறைந்தால் சீனாவின் கட்டுப்பாடு குறையும்.

     இதை பற்றி நாம் பேசினோமா? இல்லையே?

    கூட்டமைப்பு மகிந்தவுடன் கதவை பூட்டியும் பூட்டாமலும் பல சுற்றுக்கள் பேசின. எதுவும்  நடக்கவில்லை. கூட்டமைப்பை சிங்கள அரசு ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என தெரிகிறது. இந்த லட்சணத்தில் யார் போய் சிங்கள அரசுடன் மணிக்கணக்கில் பேசி தீர்வை பெறுவது.

    ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுப்பதில் எமக்கிருந்த பொறுமையும் விடாமுயற்ச்சியும் விருப்பும் இந்த பிரச்சினையை பேசி தீர்வு காண முயற்சிப்பதில் இல்லையே?

  • எத்தனை ஆயிரம் உயிர்கள் போயின இந்த ஆயுதப்போராட்டத்தில்?
  • எத்தனை முறை முயற்சி செய்தோம்?
  • எத்தனை கோடிகளை இழந்து போனோம்?
  •  ஆனால் இந்த சிக்கலான பிரச்சினையின் பொதுவான காரணிகளுக்கு பேசி  தீர்வு காண மட்டும் எமக்கு அந்த பொறுமையோ விடாமுயற்சியோ இல்லை. ஏன்? 

    சிங்கள பேரினவாதம் பற்றி மிக குறைவாக எடைபோட்டு வைத்திருக்கிறீர்கள். தமிழர்களிடம் இருந்து ஆயுத போராட்டம் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று இப்போது.

    சிங்கள பாராளுமன்றம் பாதுகாப்பு செலவுக்கு எவளவு ஒதுக்குகிறது?

    எவளவு ஆயுதங்களை கடந்த வருடம் இறக்குமதி செய்திருக்கிறார்கள் தெரியுமா?

    நாங்கள் வலிக்குது வலிக்குது என்று எவ்ளவும் கத்தலாம் அவர்கள் விடபோவதில்லை. எந்த அடக்குமுறை சிந்தனையும் அப்படி அடிபணிந்தது இல்லை.

    நீங்கள் எழுதிய வழிமுறை (எழுத்தில்) சாத்தியமானது. 

    நிஜத்தில் (நடைமுறை) சாத்தியமற்றது.

    தமிழர்கள் விட்டுகொடுக்க எதுவுமே இல்லை....

    ஆயுதம் ஒன்றுதான் 2009இற்கு முன் இருந்தது அதையும் உலக சண்டியர்களை உதவிக்கு கூட்டிவந்து களைந்து விட்டார்கள்.

    இனி எதுவுமே இல்லை.

    இனியும் புதிய யுத்திகளை பாவித்து புதிய வடிவ போராட்டம் ஒன்றுதான் சிங்கள பேரினவாதிகளை முடக்கும்.

    நீங்கள் எவளவு குனிந்தாலும்  குட்டு ஒன்றுதான் அவர்களிடம் இருந்து கிடைக்கும்.

    தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களை(இருபகுதி)  ஒருமுறை கேட்டு பாருங்கள்.

     ஆயுத கொள்வனவுக்கு பல காரணங்கள் இருக்க கூடும்.

  • இரகசிய ஆயுத வியாபாரத்தில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கலாம்.
  • லஞ்சம் ஊழல் காரனாமாக இருக்கலாம்.
  • வல்லரசுகளின் புவியல் ஆதிக்க போட்டியில் இலங்கை இன்னமும் பகடைக்காயாக இருக்கும் நிலையில் அதில் இருந்து விடுபடுவது பற்றி தமிழர் அக்கறை கொள்ளாமல் இன்னமும் இந்திய மேலாதிக்கத்துக்கு துணை போவதால் இந்தியாவின் துணையுடன் தமிழர் மீண்டும் அழிவு போரில் ஈடுபடும் சாத்தியம் பற்றிய பயமாக இருக்கலாம்.

ஆனால் இவற்றை காரணமாக வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மறுத்து தமிழ் மக்களின் அழிவை உறுதிப்படுத்துவது அறிவார்ந்த செயல் அல்ல.

இன்னமும் இந்த பிரச்சினையை சிங்களவர் - தமிழர் பிரச்சினையாக பார்ப்பதே எமது முக்கியமான தவறாகும்.

மாறாக

  1. இது இந்திய - சீன- அமரிக்க வல்லரசுகளின் ஆதிக்க போட்டி.
  2. இதில் தமிழர் தரப்பு இந்திய வல்லரசின் திட்டத்துக்கு துணை போய் அழிந்து போய்க்கொடிருக்கும் இனம்.
  3. சிங்களவரை பொறுத்த அளவில் இது தமிழரின் தேச துரோகம்.

ஆகவே எம்முடன் பேசும் பொது சிங்கள தலைவர்கள் இவ்வாறன நிலைப்பாட்டுடன் தான் பேசுகிறார்கள் என்பதை அறிந்து எம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும்.  தேச துரோகிகள் என்று அவர்கள் பார்க்கும் நிலையில் இராணுவத்தை எடு என்று கேட்டால் நடக்குமா? இந்திய - சீன- அமரிக்க வல்லரசுகளின் ஆதிக்க போட்டியில் இருந்து விடுபட இதுவா நாம் வழங்கும் பங்களிப்பு? இதனால் தான் அவர்கள் பேச மறுக்கிறார்கள்.

அருமையான கருத்துக்கள் ஜூட். (சில வற்றில் எனக்கு உடன் பாடு இல்லையெனிலும்)

ஈசன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Edited by Jude

//வீதியில் இறங்கி இதுவரை போராடவில்லையா?

அப்படி போராடி கிடைத்த பலன் என்ன?//

ஈழத்தில் உள்ளவர்கள் இதுவரை பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடவில்லை, வடக்கையும், கிழக்கையும் மேற்கையும், மலையகத்தையும் இணைக்கும் பலம் எவரிடமும் இல்லை. எல்லோரும் வேறு யாரோ எமக்கு வாங்கித் தருவார்கள் ஏண்றே இருக்கிறார்கள். முள்ளீவாய்க்காலின் போது புலத்தில் எழுந்த மக்கள் எழுச்சியே இன்று அய் நா வரை செல்ல முடிந்தது. ஆனால் அன்று ஈழத்திலும், தமிழகத்திலும் பெருமளாவில் மக்கள் திரண்டிருந்த்தால் முள்ளீவாய்க்கால் அவலத்தைத் தடுத்து இருக்கலாம். தி மு க அரசு இதில் மத்திய அரசுடன் சேர்ந்தே மாணாவர் போராட்டத்தை ஒடுக்கியது.

டிவினீசியாவிலும், மற்றைய தேசங்களீலும் மக்கள் பெருமளாவில் கிழர்ந்தெழுந்ததாலேயே மாற்றம் நிகழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் நீங்கள் கூறும் விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. உண்மையில் இந்த விடயங்கள் 50 களில் மெத்த படித்த தமிழ்த்தலைமைகளால் சிந்தித்து இருக்க வேண்டிய விடயங்கள். தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம் படித்தவர்கள் இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பக்கா சுயநலவாதிகளாக இருப்பதுதான். தற்போது கூட அதில் முன்னேற்றம் இல்லை. தங்களை மேதாவிகளாக காட்டி கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

நன்றி நண்பரே. எல்லோராலும் எல்லாம் முடிவதில்லை. அயன்ஸ்ரைன் கூட தவறான விஞ்ஞான விளக்கங்களை கொடுத்திருக்கிறார். நம்மால் முடிந்ததை செய்வோம்.

சிங்களவரின் பெரும் தேசிய வாதாம் என்பது தர்க்க ரீதியாக அணூக முடியாத ஒரு கூட்டு மன நோய். இதனை மிக அருகில் இருந்து கண்டவன் நான். எனக்குப் பல சிங்கள நண்பர்கள், இருக்கிறார்கள். சிங்களவருடன் பழகிய எவருக்கும் நான் சொல்வது விளங்கும்.

இதில் ஜூட் சொல்லும் விடயங்கள் டக்கிளச் முதல் பழைய பல தமிழ்த் தலைவர்களும் செய்து விட்டார்கள். இவர்கள் எல்லோரையுமே சிங்களாவர்கள் எவ்வாறு நடாத்தினார்கள் என்பது வரலாறு.

இன்னும் ஒரு வருடத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்து விடும், அதன் பின்னர் இந்தத் திரியை மீழப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் உள்ளவர்கள் இதுவரை பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடவில்லை, வடக்கையும், கிழக்கையும் மேற்கையும், மலையகத்தையும் இணைக்கும் பலம் எவரிடமும் இல்லை. 

வீதியில் இறங்கி போராடாமல் ஆயுதம் ஏந்திவிட்டார்கள் என்கிறீர்களா? 

முள்ளீவாய்க்காலின் போது புலத்தில் எழுந்த மக்கள் எழுச்சியே இன்று அய் நா வரை செல்ல முடிந்தது. 

இல்லை நாரதர், சீனாவின் இலங்கை மீதான வல்லாதிக்க வெற்றி தான் ஐ.நா. வரை கொண்டு சென்றுள்ளது. அமெரிக்க அரசு தான் ஐநா விற்கு இந்த பிரச்சினையை முதலில் மேக்ஸ்சிகோ மூலமும் பின்னர் வேறு நாடுகள் மூலமும் தொடர்ச்சியாக எடுத்து வந்தது. பின்னர் நேரடியாக களம் இறங்கியது. இங்கு அமெரிக்காவில் எந்த போராட்டமும் பெரிதளவில் தமிழர்களால் முன்னெடுக்க படவில்லை. கனடாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன. கனடிய அரசு பேசவே மறுத்தது.

ஆனால் அன்று ஈழத்திலும், தமிழகத்திலும் பெருமளாவில் மக்கள் திரண்டிருந்த்தால் முள்ளீவாய்க்கால் அவலத்தைத் தடுத்து இருக்கலாம். தி மு க அரசு இதில் மத்திய அரசுடன் சேர்ந்தே மாணாவர் போராட்டத்தை ஒடுக்கியது.

ஆம். இந்த வீதி போராட்டங்கள் அப்படித்தான் முடிவுக்கு வரும். சில வெற்றி பெற்ற போராட்டங்களுக்கு பின்னால் வல்லரசுகளின் தேவைகள் இருந்திருக்கின்றன. இலங்கையில் அப்படி இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவை இருக்கவில்லை. மாறாக விடுதலை புலிகளை முடிவுக்கு கொண்டுவரும் தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. 

வீதியில் இறங்கி போராடாமல் ஆயுதம் ஏந்திவிட்டார்கள் என்கிறீர்களா? 

இல்லை நாரதர், சீனாவின் இலங்கை மீதான வல்லாதிக்க வெற்றி தான் ஐ.நா. வரை கொண்டு சென்றுள்ளது. அமெரிக்க அரசு தான் ஐநா விற்கு இந்த பிரச்சினையை முதலில் மேக்ஸ்சிகோ மூலமும் பின்னர் வேறு நாடுகள் மூலமும் தொடர்ச்சியாக எடுத்து வந்தது. பின்னர் நேரடியாக களம் இறங்கியது. இங்கு அமெரிக்காவில் எந்த போராட்டமும் பெரிதளவில் தமிழர்களால் முன்னெடுக்க படவில்லை. கனடாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன. கனடிய அரசு பேசவே மறுத்தது.

ஆம். இந்த வீதி போராட்டங்கள் அப்படித்தான் முடிவுக்கு வரும். சில வெற்றி பெற்ற போராட்டங்களுக்கு பின்னால் வல்லரசுகளின் தேவைகள் இருந்திருக்கின்றன. இலங்கையில் அப்படி இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவை இருக்கவில்லை. மாறாக விடுதலை புலிகளை முடிவுக்கு கொண்டுவரும் தேவை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. 

//வீதியில் இறங்கி போராடாமல் ஆயுதம் ஏந்திவிட்டார்கள் என்கிறீர்களா? //

வன்னியில் உள்ளாவர்கள் மட்டுமே ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்களின் எண்ணீக்கை என்பது மொத்த தமிழரின் சனத் தொகையின் 20 சதவிகிதம் கூட வராது.

அமெரிக்காவோ மேற்குலகோ போர்க்குற்றம் பற்ரிப் பேச இரண்டு ஆண்டுகள்  எடுத்தது. அதற்கு முன்னரே புலம் பெயர் மக்கள் போராடத் தொடங்கி விட்டனர். அய் னாவுக்கு முதலே டப்ளீண் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை பற்றிய ஆவணாத்தைத் தயாரித்து விட்டது. குறீப்பாக சனல் நான்கு கொண்டு வந்த்த ஆவணாங்கள் மேற்குலகை நெருக்கடிக்குள் தள்ளீவிட்டன. மீண்டும் விகிலீக்ச் தகவல்களைப் பார்த்தால் தெரியும் சிரிலங்கா அமரிக்காவின் நடவடிக்கை தமக்குப் புரியவில்லி என்றூ சொல்லி உள்ளதை. அதன் பின்னரே சிறீலங்கா மேலும் சீனாவுடன் தமது உறவை வலுப்படுத்தியது. இதன் பின்னரே மேற்குலகம் , போர்க் குற்றம் என்னும் விடயத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. மேற்குலகை இந்த நிலைக்கு நகர்த்தியது புலம் பெயர் மக்களின் அரசியல் நடவடிக்கையே. இதனை உணர்ந்தே ராஜபக்ச அரசு சீனாவின் மேல் சாய்ந்தது. இல்லை எனில் அதற்கு அதற்கான தேவை என்ன?  சிங்கள ஆட்ச்சியாளர்கள் மூடர்கள் அல்ல. அதனாலேயே ரணீல் கூட சீனவை கைவிட முடியாத நிலையில் இருக்கிறார். இவை எல்லாம் புலம் பெயர் தமிழர், தமிழ் நாட்டுத் தமிழரின் போராட்டத்தின் விழைவுகள். கனேடிய அரசு உடனடியாகப் பேசவில்லை, ஆனால் பின்னர் பல அதிரடி நவடிக்கைகளை சர்வதேச ரீதியாக எடுத்தது. இன்று கனேடியப் பாராளுமன்றில் ஒரு தமிழர் இருக்கிறார், எல்லாக் கட்ச்சிகளூமே தமிழரின் வாக்குக்களை நம்பியே இருக்கின்றன. இதனை சிறீலங்கா அரசும் பலமுறை சொல்லி உள்ளது.

மேற்குலகம் பல இடங்களீல் மக்களீடம் தோற்றிருக்கிறது, வியட்னாம், இராக், இன்று கியுபா. மேற்குலகம் மாறும் நிலமைகளுக்க்கு ஏற்ப தமது கொள்கைகளை மாற்றி இருக்கிறது. அந்த மாற்றங்கள் மக்கள் போராட்டங்களில் இருந்தே தொடங்கின. உலகின் வரலாறு இவ்வாறு தான் எழுதப்படுகிறது .எமது போராட்டமும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வலுவான செய்தியின் வலுவை எவ்வளவு என்று எப்படி தீர்மானிப்பீர்கள்?

ஜனநாயகம்.. வாக்குரிமையை கேலிக்கூத்தாக பாவிக்கும்.. இந்தியா.. சிறீலங்கா போன்ற 3ம் தர ஜனநாயக நாடுகளில்.. மக்கள் வாக்குகள் மூலம்..வலுவாகச் சொல்லக் கூடிய செய்தி.. எல்லாரையும் நிராகரிப்பதே.

தமிழ் மக்கள் வாக்கைப் போடுங்கோ.. எல்லாத்தையும் செல்லுபடியற்ற வாக்காகப் போடுங்கோ. இதன் மூலமும்.. தமிழ் மக்களின் வாக்கு பலத்தை காட்டலாம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு ஏன் பேச விரும்பவில்லை என்று நாம் பார்க்க வேண்டும்.

நாம் எதை பற்றி பேச கேட்கிறோம்?

  1. இராணுவத்தை அகற்று.
  2. சுய நிர்ணய உரிமை வேண்டும்
  3. போர்க்குற்றவாளிகளை விசாரணை செய்.

இவற்றை பற்றி பேச கேட்கிறோம். ஸ்ரீ லங்கா அரசு இவற்றை பற்றி பேச விரும்பவில்லை.

ஆகவே 'முதல் கோணல், முற்றிலும் கோணல்.' ஆகி பேச்சுவார்த்தை நடக்க சாத்தியமே இல்லாமல் போகிறது.

அப்ப அவர்களுக்கு விருப்பமான பேச்சாக ...
எப்படி அடிமைகளாக இருந்தால் உங்களுக்கு பிடிக்கும்????
அப்படி என்று பேச வேண்டும் என்றா சொல்ல வருகிறீர்கள் ?
 
இரு பிரச்சனை பட்ட பகுதிகள் பேசி ஒரு முடிவை எடுப்பதென்றால் .... இருக்கும் பிரச்சனை பற்றிதானே பேச வேண்டும்.
நீங்கள் சொன்ன எல்லா விடயங்களையும் விட்டல் கூட போய்  1972இல் நிற்போம்....
அங்கு என்ன ஆயுத போராட்டமா இருந்தது. எல்லாம் பேசி முடிந்த விடயங்கள்தான் இருக்கிறது. 

மகா வம்சம்தான் முதல் கோணல்.
அந்த  கோணல் பற்றி பேசித்தான் முடிவை எட்ட முடியும்.
மகா வம்சம் கோணல் என்ற இடத்தில் இருந்து பேச எந்த சிங்களவன் முன்னுக்கு வருவான்?? 

மகா வம்சம்தான் முதல் கோணல்.
அந்த  கோணல் பற்றி பேசித்தான் முடிவை எட்ட முடியும்.
மகா வம்சம் கோணல் என்ற இடத்தில் இருந்து பேச எந்த சிங்களவன் முன்னுக்கு வருவான்?? 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏதோ தப்பாக இயங்குவது போலவும்

சிங்களவர் பெரும்  உத்தமர்கள்

அவர்கள் மனம் நோகாத படி பேசணும் என்பது போலவும்

சிங்களவர்கள் உச்சி குளிர்ந்து தமிழரை ஏற்றுக்கொள்ளும்படி நடக்கவேண்டும் என்பது போலவும் எழுதுகிறார்கள்.....

60 வருட அனுபவத்தை தமிழன் மறக்கலாம்

சிங்களம் மறக்காது

இதுவரை எதையுமே தராத சிங்களம்

வெற்றியின் களிப்பிலுள்ள இன்றையநிலையில் 

ஆடிப்பாடி கறக்கலாம் என்பது பேதமை...

விட்ட குற்றங்களை

தமிழர்கள் ஒன்றுமையாக கயிறுகளாக இறுக்கினால் மட்டுமே ஏதாவது சாத்தியம்..

https://www.youtube.com/watch?v=kbARCfiKXlc#t=146

இலங்கை அதிபர் தேர்தல் குறித்து மே பதினேழு இயக்கம் கோரிக்கை

http://youtu.be/kbARCfiKXlc

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்
    • ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுப்பதில் எமக்கிருந்த பொறுமையும் விடாமுயற்ச்சியும் விருப்பும் இந்த பிரச்சினையை பேசி தீர்வு காண முயற்சிப்பதில் இல்லையே?
    • எத்தனை ஆயிரம் உயிர்கள் போயின இந்த ஆயுதப்போராட்டத்தில்?
    • எத்தனை முறை முயற்சி செய்தோம்?
    • எத்தனை கோடிகளை இழந்து போனோம்?
    •  ஆனால் இந்த சிக்கலான பிரச்சினையின் பொதுவான காரணிகளுக்கு பேசி  தீர்வு காண மட்டும் எமக்கு அந்த பொறுமையோ விடாமுயற்சியோ இல்லை. ஏன்? 

    ஜூட், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், பாலா அண்ணா , சம்பந்தர் ஐயா இவர்கள்  பொறுமையின் பூட்கைகள் மட்டுமல்ல அறிவாளிகள். மொழிகளில் செழிமை மிக்கவர்கள்.இவர்கள் வெவ்வேறு சிங்கள தலைவர்களுடன் வெவ்வேறு சூழ்நிலையில் பேசியுள்ளார்கள். இவ்வளவு பேரையும் சிங்கள தலைமைகள் தட்டிக்களிக்கவில்லை என மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள். இதற்கு ஏறத்தாள 60 வருடங்கள் எடுத்தது.இன்னும் ஒரு 60 வருடங்கள் பேசி சிங்களவரிடம் ஏமாற்றுப்படலாம் என்கிறீர்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.