Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு:

Featured Replies

அப்ப உங்களுக்கும்

சம்மந்தர் கும்பலுக்கும் தமிழீழம் வேண்டாமா?

தலைவர் மாவையார் யுக்க சம்மந்தன் யார் முடிவெடுக்க? ?

எந்த தூதரகத்தில் தண்ணி

பாட்டி கொடுக்கிறாங்க எண்டு காத்திருந்து முதலால அங்க போய் கிளாச கையில வைச்சுக்கொண்டு நிக்கும் சம்மந்தருக்கு தமிழ் மக்களின் சார்பாக ஒழுங்கா முடிவெடுக்க முடியுமா?

சொந்த மக்கள் அவுஸ் வருவதை வெறுக்கும் உங்களுக்கு ,திருகோணமலை மக்கள் வாக்களித்து தெரிவு செய்தவரை விமர்சிக்க தகுதி இருக்கா

நீ முதலில் உன்னை திருத்து சமூகம் தானாக திருந்தும்

  • Replies 54
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் என்ற போர்வையில் கள்ளமா நுழைந்தால் எதிர்க்க தான் செய்வம்...........

சம்மந்தர் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பில் என்ன பதவி வகிகின்றார் முடிவை எடுக்க?

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை தான் அவர் தான் முடிவெடுக்க முடியும்

வெறிக்குட்டி சம்மந்தர் எப்பிடி முடிவெடுக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழும் தமிழர்களின் தற்பொழுதை ஏக பிரதிநிதிகளாக இருக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவ கட்சி என்ற முறையில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை மாவை சேனாதிராஜா தான் எடுக்க முடியுமே தவிர..... சம்மந்தரோ இல்லது மக்களை சந்திக்காமல் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரான சிங்களத்தின் அதி தீவிர விசுவாசியாக இருக்க கூடிய சுமந்திரனோ எடுக்க முடியாது......

அகதிகள் என்ற போர்வையில் கள்ளமா நுழைந்தால் எதிர்க்க தான் செய்வம்...........

சம்மந்தர் இப்போ தமிழ் தேசிய கூட்டமைப்பில் என்ன பதவி வகிகின்றார் முடிவை எடுக்க?

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை தான் அவர் தான் முடிவெடுக்க முடியும்

வெறிக்குட்டி சம்மந்தர் எப்பிடி முடிவெடுக்கலாம்?

 

80% வீதமான சனம் அகதி என்று கள்ளமாகத்தான் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா என்று புலம் பெயர்ந்தது. அந்த சனங்கள் முந்தினதாலை நல்லவர்கள் இவர்கள் கெட்டவர்களா? 

 

கடைசில மறத்தமிழன், வீரத்தமிழன் எல்லாம் கள்ளத்தோணி தமிழராக்கி முடிந்தது போராட்ட வரலாறு. 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கள்ள தோணி கள்ள அகதிகளை பற்றி தனியொரு திரி திறவுங்கள் விவாதிக்கலாம் அனால் ஆட்டுக்க மாட்ட கொண்டு வந்து விட்டு நிர்வாகத்தின் வெட்டுக்கு ஆளாக நான் தயாராக. இல்லை நிற்க இப்போ கள்ள படகுகள் வருவதை எமது மதிப்புக்குரிய ஆஸ்திரேலியா அரசு முற்றிலும் நிறுத்தி ரொம்ப நாளாச்சு

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டு பட்டால்..... :(  :(  :(

தம்பிமார்

அமைதியாக

இன்றைக்கு என்ன தேவை

என்ன செய்யணும்

அதை எழுதுங்கள்.................

இந்த கள்ள தோணி கள்ள அகதிகளை பற்றி தனியொரு திரி திறவுங்கள் விவாதிக்கலாம் அனால் ஆட்டுக்க மாட்ட கொண்டு வந்து விட்டு நிர்வாகத்தின் வெட்டுக்கு ஆளாக நான் தயாராக. இல்லை நிற்க இப்போ கள்ள படகுகள் வருவதை எமது மதிப்புக்குரிய ஆஸ்திரேலியா அரசு முற்றிலும் நிறுத்தி ரொம்ப நாளாச்சு

:D

 

நிங்கள் எழுதினதுக்குத்தான் நான் பதில் எழுதினேன். இருந்தாலும் பிறிதொரு தலைப்பில் எனது கருத்தை சொல்ல முயலுவேன்.

ஊர் இரண்டு பட்டால்..... :(  :(  :(

 

 

ஏன் அன்னை சொல்லவந்ததை பாதில நிப்பாட்டிநிங்கள்? 

 

தெரியுது தெரியுது 

 

மனசில அருவி மாதிரி கொட்டினாலும் எழுதவேண்டு வெளிக்கிட்டால் வார்த்தை முட்டுது.  :D

 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
எந்த வேட்பாளரும் தனது வெற்றியை உறுதி செய்வதில்தான் குறியாக இருப்பார்கள்.
கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கா விட்டாலும் மைத்ரி வெல்லும் சாத்தியம் 60% vs 40% வீதத்தில் இருக்கிறது.
 
கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு கொடுப்பது என்றால் எப்போதோ எதிரணியுடன் சேர்ந்திருக்க வேண்டும். ஒரு சில தமிழ் மக்கள் நலன்களை முன்னிறுத்தி அவர்களுடன் ஒரு கூட்டு வைத்திருக்க முடியும். அவர்களுக்கு ஆதரவாக பிராச்சாரத்தில் எப்போதோ இறங்கி இருக்க வேண்டும். இது எதிரணியினர்  எதிரணி சார்பு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை முன்னிலை படுத்தி இருக்கும்.
 
(கூட்டமைப்பிற்கு தெரிவு செய்ய கூடிய ஒரே ஒருவர் மைத்திரிதான். கூட்டமைப்பு (ஐயா சம்மந்தன்) மைத்திரிக்கு ஆதரவாக இறுதியில் அறிவிக்கும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் நேற்றைக்கு முன்பு. ஆக ஏன் இதை கூட்டமைப்பு இதை முற்கூட்டி செய்யவில்லை?  வீணான அரசாங்க சார்பு இராணுவ கெடுபிடிகள் தம்மை நோக்கி (ஐயா சம்மந்தன்) வராமல் இருப்பதோடு. மைத்த்ரியின் வெற்றியின் சாத்தியம் உறுதி செய்யபடுவதும் அவதானத்திற்கு உட்படுத்தி பின் தமிழர் தலைவர் மேடைக்கு வருகிறார்)
 
தமிழ் மக்கள் நலன் இங்கே முன்னிறுத்தபடவில்லை தங்களின் பாதுகாப்பு வசதியான வாழ்விற்கு பாதகம் வராமல் மிக கவனமாக பார்த்து. இறுதியாக மைத்திரியிடம் இருந்து கைமாற சாத்தியம் ஆக இருக்கும் சில பெட்டிகளை தமதாக்கி இப்போ மேடைக்கு வருகிறார் தமிழர்கள் தலைவர் ஐயா சம்மந்தன் அவர்கள்.
 
நாளை மைத்திரிக்கு கொடுக்கும் ஆதரவால் ....
நேற்று மைத்திரிக்கு கொடுக்காத ஆதரவால் ...
தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மை தீமைகள் என்ன ? 
ஐயா சம்மந்தனுக்கு கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன ? என்பதை இன்னும் ஆழமாக ஆராய முடியும்.
 
இப்போ கூட்டமைப்பும் தமிழர் ஆதரவும் எதிரணிக்கு வேண்டாத பெண்டாட்டிதான். வேண்டாதா பெண்டாட்டியுடன் எவனும் சமரசம் பேச போவதில்லை. ஆனால்  இவள் எனது பெண்டாட்டி என்பாதால் கிடைக்க போகும் தற்காலிக நிவாரணங்களை யாரும் தவறவிட போவதும் இல்லை. 
தமிழ் மக்களின் வாக்கு பெறுமதியை தமது சொந்த சொவ்காரிய வாழ்விற்காக கேலிக்கூத்தாக்கி இருக்கிறது கூட்டமைப்பு. 
 
 
ஆனாலும் மகிந்த சேனாதிபதி ஆகுவதே தமிழர்களுக்கு உண்மையில் நன்மை பயிட்கும். இது தற்போதைய உலகில் என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்தால்தான்  புரியும். அல்லது போனால் அவர் கத்தி வைத்திருக்கிறார். இவர் புத்தகம் வைத்திருக்கிறார் என்ற வெளி பிரச்சார வேஷத்தை விவாதம் ஆக்கி  அதில் இருந்து ஒருவரை  தேர்வு செய்வதென்றால் மைதிரியைதான் தேர்வு செய்ய முடியும்.
இங்கே யாழ் களத்தில் எழுதும் பலருக்கே உலகில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. அதற்கே வசதி இல்லாதவர்கள்தான் வாக்கு சாவடிக்கு போக போகிறார்கள்  இவர்கள் யாரும் மகிந்தவிற்கு வாக்கு போட போவதில்லை. அவர்கள் டிவி ரேடியோ தமது சொந்த கண்ணால் பார்த்த காட்சிகளை பார்த்தே  மைத்திரிக்கு வாக்கு போட போகிறார்கள்.
 
அடுத்து வரும் பத்தாண்டில் ...........
இனபிரச்சனை என்று ஒன்று இருந்தது என்று கூட தெரியாமல் தமிழ் பிரதேசங்களில் ஒரு பௌத்த வெறி மெதுவாக படரும். சிங்கள குடி ஏற்றம் மிக தீவிரமாக படரும். தற்போதைய நேரடி இராணுவ பிரசன்னம் இல்லாதுபோய் இராணுவம் சாதரான மக்கள் போல் குடியேறுவார்கள் (உளவு இலாகா)  அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் வியாபார இஸ்தாபனங்கள் பின்புலத்தில் அரசினால் அரசு சார் தனியார் நிறுவனங்களினால் நிறுவப்படும். போக்குவரத்து (transport) விடயம் மிகவும்  பாரிய அளவில் புதுபிக்கபடும் யாழில் இருந்து காலையில் கொழும்பிற்கு வேலைக்கு சென்று மாலை யாழ் திரும்பும் நிலைக்கு வரும். யாழில்  சிங்கள  திரை  அரங்கு ஒன்று எப்படியும் வரலாம். மரணமோ நோயோ ஐயா சம்மந்தன் அவர்களை கூத்து கட்டும் தலைவர் பதவியில் இருந்து தூக்கும். பின்பு அந்த பொறுப்பை  யாரிடம் கொடுப்பது என்பதை சிங்களம் வரும் ஆண்டில் இருந்தே தீர்க்கமாக முடிவெடுத்து நகர்ந்து அதை அவர்களே முடிவு செய்வார்கள்.
(தமிழர்கள்) ஆளும் சாக .......  இருமலும் நிற்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

முன்னமே மைத்திரியை ஆதரித்திருந்தால் நாட்டைப் பிரிக்க சதி என்று மகிந்த தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கும். கிராமப்புற சிங்களவரின் ஆதரவை மகிந்த தன்பக்கம் தக்க வைத்திருப்பார். அதனால் முடிவை கூட்டமைப்பினர் தள்ளிப் போட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஐந்தாம் திகதி முடிவை அறிவித்தால் மகிந்தவுக்கு பிரச்சாரத்துக்கு வேண்டிய கால அவகாசம் கிடைக்காது. இந்த ஐடியாவை அஜீத் தோவல் கும்பல் சொல்லிக் குடுத்திருக்கும் என நினைக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமே மைத்திரியை ஆதரித்திருந்தால் நாட்டைப் பிரிக்க சதி என்று மகிந்த தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கும். கிராமப்புற சிங்களவரின் ஆதரவை மகிந்த தன்பக்கம் தக்க வைத்திருப்பார். அதனால் முடிவை கூட்டமைப்பினர் தள்ளிப் போட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஐந்தாம் திகதி முடிவை அறிவித்தால் மகிந்தவுக்கு பிரச்சாரத்துக்கு வேண்டிய கால அவகாசம் கிடைக்காது. இந்த ஐடியாவை அஜீத் தோவல் கும்பல் சொல்லிக் குடுத்திருக்கும் என நினைக்கிறேன். :lol:

இதனால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம் ? 

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம் ?

என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை.. ஆனால் இந்தியத் தரப்புக்கு லாபம்.. மேற்குலகுக்கு லாபம். சீனாவுக்கு நட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
நுணலும் தன் வாயால் கெடும்! கூட்டமைப்பின் வாயால் யார் கெடுவார்?
 
mahidha_Sampanthan..jpg
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தே ஆகுவது என்று விடாப்பிடியாக நிற்கிறது. நாங்களும் இவ்விடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வேண்டாம்... வேண்டாம்... என்று எழுதி விட்டோம்.
 
கெடுகுடி சொற்கேளாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்று வெளிப்படுத்தப் போவதாக கூட்டமைப்பு கச்சை கட்டி நிற்கிறது. ஐயா! எங்களுக்கென்ன? யார் வென்றாலும் ஒன்று தான். எனினும் யார் வென்றால் நல்லது என்று தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். 
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தால் மட்டுமே தமிழ் மக்கள் அதன்படி நடப்பார்கள் என்று எதுவும் கிடையாது. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பதென்று வெளிப்படுத்தப் போகும் அறிவிப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் நிலைப்பாடு கூட்டமைப்பு வாய் திறக்காமல் இருக்க வேண்டுமென்பதாகும். 
 
நிலைமை இதுவாகவிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை வெளியிடப் போவதாகக் கூட்டமைப்பு கூறுவதற்குள் ஏதோ ஒரு தந்திரம் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு விடுத்த அறிவிப்பு தென் பகுதியில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதென்பது தெரிந்த விடயம். 
 
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்புக் கூறியதை மாற்றியமைத்து பிரசாரம் செய்யப்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறினால் ஏற்புடையது. ஆனால் எதிர்வரும் 8-ந் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் அதே பிழையை விடுவதென்றால் அதனைப் பிழையன்று எப்படிக் கூறமுடியும்? 
 
மாறாக ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு உள் நோக்கத்துடன் செயற்படுகிறது என்றே கூறவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­சவை ஆதரிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை விட்டால் இதற்கு மைத்திரிபால சிறிசேன தரப்பு வேறு ஒரு வடிவம் கொடுக்கும். 
 
அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான சாத்தியப்பாடுகள் சங்கடப்படும். தவிர, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தால் அந்தோ கதிதான். 
 
முஸ்லிம்களும் மைத்திரி பக்கம்; தமிழர்களும் மைத்திரி பக்கம் என்னருமை சிங்கள மக்களே! வீரத் தலைவன் துட்டகைமுனுவின் பரம்பரையில் வந்த சிங்களப் பெருங்குடிகளே! தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தால் நாளை உங்கள் கதி என்ன? என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ கேட்பார். 
 
அந்தக் கேள்விக்கு சிங்கள மக்கள் பதில் அளிக்க ஒரு இரவுப்பெழுது போதும். மறுநாள் 8-ந் திகதி தமிழர்களும் முஸ்லிம்களும் ஆதரித்தவர் படுதோல்வி என்பதாக தேர்தல் முடிவு அமையும். அதேநேரம் மகிந்த ராஜபக்ச­ மீண்டும் ஜனாதிபதியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் கூடியிருந்து தேநீர் அருந்தவும் முடியாமல் போகும். 
 
ஆகையால், தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லிவிட்டு மெளனமாக இருக்க வேண்டும். இல்லை முஸ்லிம் கட்சிகள் போல நாங்களும் ஆதரவை அறிவிப்போம் என்றால், நுணல் (தவளை) தன்வாயால் கெடும் என்பது போல; கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவோர் கூட்டமைப்பின் வாயால் கெடுவர் என்றாகி விடும்.
 
-வலம்புரி-

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை.. ஆனால் இந்தியத் தரப்புக்கு லாபம்.. மேற்குலகுக்கு லாபம். சீனாவுக்கு நட்டம்.

இவர்களை எப்படி கட்டி மேய்ப்பது என்பது சீனாவிற்கு நன்றாக தெரியும். 

பல ஆப்ரிக்க நாடுகளில் ஏற்கனவே மண்கவ்வ வைத்திருக்கிறது சீனா.

 

இவர்களிடமும் இப்போது உள்ளே பெரிதாக சரக்கு ஒன்றும் இல்லை.
 
அமெரிக்காவை பொருத்தவரை ராபர்ட் ப்ளேக் இன் தனிப்பட்ட முடிவுகள்தான் இலங்கையில் இதுவரை இருந்தது. அதில் அமெரிக்க இலாபம் என்று எதையும் அடையவில்லை அவர் மட்டும் சில சிங்கள அழகிகளை அடைந்தார்........... அது அப்படிதான் தொடரும்.
பாரிய முதலீடு என்று வரும் மேற்கு தனியார் நிறுவனங்கள் தமது சொந்த லாபத்தை வைத்தே நகரும் (முதலீட்டுக்கு உத்தரவாதம் தேவை என்பதால்தான் அரசு பின்புலத்தில் அவர்களுக்கு தேவை). 
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எப்படி கட்டி மேய்ப்பது என்பது சீனாவிற்கு நன்றாக தெரியும். 

பல ஆப்ரிக்க நாடுகளில் ஏற்கனவே மண்கவ்வ வைத்திருக்கிறது சீனா.

 

இவர்களிடமும் இப்போது உள்ளே பெரிதாக சரக்கு ஒன்றும் இல்லை.

 

அமெரிக்காவை பொருத்தவரை ராபர்ட் ப்ளேக் இன் தனிப்பட்ட முடிவுகள்தான் இலங்கையில் இதுவரை இருந்தது. அதில் அமெரிக்க இலாபம் என்று எதையும் அடையவில்லை அவர் மட்டும் சில சிங்கள அழகிகளை அடைந்தார்........... அது அப்படிதான் தொடரும்.

பாரிய முதலீடு என்று வரும் மேற்கு தனியார் நிறுவனங்கள் தமது சொந்த லாபத்தை வைத்தே நகரும் (முதலீட்டுக்கு உத்தரவாதம் தேவை என்பதால்தான் அரசு பின்புலத்தில் அவர்களுக்கு தேவை).

சீன ஆதரவு அல் பஷாரிடம் இருந்து தெற்கு சூடானை பிரிய வைத்ததில் முக்கால்வாசி எண்ணை வளத்தை கைக்குள் போட்டுக்கொண்டுள்ளார்கள்.. இதனைப் பாருங்கள்.

http://www.eia.gov/countries/cab.cfm?fips=su

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இராணுவ நோக்கம் கொண்டது; கடல்வழிகளுக்கு அனுகூலம் செய்யும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்கிறார்கள். இந்தத் தேர்தலில் மகிந்தர் வெற்றி பெற்றால் சீனா தக்கவைத்துக் கொண்டுள்ளது எனலாம்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆதரவு அல் பஷாரிடம் இருந்து தெற்கு சூடானை பிரிய வைத்ததில் முக்கால்வாசி எண்ணை வளத்தை கைக்குள் போட்டுக்கொண்டுள்ளார்கள்.. இதனைப் பாருங்கள்.

http://www.eia.gov/countries/cab.cfm?fips=su

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இராணுவ நோக்கம் கொண்டது; கடல்வழிகளுக்கு அனுகூலம் செய்யும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்கிறார்கள். இந்தத் தேர்தலில் மகிந்தர் வெற்றி பெற்றால் சீனா தக்கவைத்துக் கொண்டுள்ளது எனலாம்.

இதில் கூட சீனா தோற்றதாக கொள்ள முடியாது.
ஏற்கனவே எண்ணை உற்பத்தியில் சூடான் இருக்கிறது ...
தென் சூடான் 2012இல் தான் தவள தொடங்குகிறது. அடி பாதாளத்தில் இருந்து யார் அதிக அளவில் வெளியில் பம் பண்ணுகிறார்கள் என்பதுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். அடி கீழ் நிலப்பரப்பில் கிட்டதட்ட இரு பகுதியும் ஒரே வளத்தில் இருந்துதான் எடுக்க போகிறார்கள்.
 
நோர்வே க்கு தெரியாது நோர்வேயின் கடல்பகுதியில் இருந்து ரஷ்ய கனகாலமாக எண்ணை கடலுக்கு கீழாலே எடுத்துவந்தது. அதை அமெரிக்கா காட்டி கொடுத்த பின்பும் அவர்கள் தமது கடல் பரப்பில் கிணறடித்து இப்போதும் நோர்வேயின் எண்ணையைதான் எடுக்கிறார்கள். இனி நோர்வே ஒன்றும் செய்ய முடியாது இனி அந்த பகுதியில் யார் கூடுதலாக பம் பண்ணுகிறார்கள் என்பதுதான் லாபத்தை கொடுக்கும்.
எண்ணெய் குழாய் அடிப்பது தனியார் நிறுவனங்கள் பெரிய செலவு செய்து குழாய் அடிக்கும்போது அது எதிர்பார்ர்க்கும் லாபத்தை கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். 
 
எல்லா இலக்கங்களும் வெள்ளை சந்தை விபரம் பற்றியது.
கறுப்பு சந்தையில் சூடான் எவளவு எண்ணை விற்கிறது என்பது யாருக்கு தெரியும்?
 
1991இல் இருந்து 2003 வரை ஈராக் கறுப்பு சந்தையில்தான் எண்ணை விற்று வந்தது. கோபி அனானின் மகன் முதன்மையான கொள்வனவாளர்களில் ஒருவர். 
 
சீனா போடும் விதையை பக்குவமாக எந்த போர் உரசல் முரண்பாடுகளும் இன்றி மரமாக்கிதான் வருகிறது. 
எங்கடை ஆட்கள்தான் போகும் இடமெல்லாம் சண்டியர்போல் ட்ரில்லியன் டாலர் செலவில் போர்செய்து வெறும் கையுடன் வாறது. 

அப்ப உங்களுக்கும்

சம்மந்தர் கும்பலுக்கும் தமிழீழம் வேண்டாமா?

தலைவர் மாவையார் யுக்க சம்மந்தன் யார் முடிவெடுக்க? ?

எந்த தூதரகத்தில் தண்ணி

பாட்டி கொடுக்கிறாங்க எண்டு காத்திருந்து முதலால அங்க போய் கிளாச கையில வைச்சுக்கொண்டு நிக்கும் சம்மந்தருக்கு தமிழ் மக்களின் சார்பாக ஒழுங்கா முடிவெடுக்க முடியுமா?

 

இதென்னடா வம்பா போச்சு...அவுஸ்திரேலியாவும் எங்களின்ட நாடு இங்க எங்களுக்கு பின்னால வேறு ஒரு தமிழனும் வரப்படாது பிறகு எங்களுக்கு தமிழீழமும் வேணும். எங்களை தவிர வேறு  யாரும் அவுஸுக்கு வந்து நல்லா வாழவும் கூடாது..அதே நேரம் நாட்டிலையும் நிம்மதியா வாழாமல் தமிழீழத்துக்கு போராட வேணும். வெளிநாடுகளில நிறைய தேசிய குத்தகைதாரர் இந்த கொள்கையோட தான் இருக்கினம்.  :wub:
 
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அங்கிருக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர். நாட்டில் வாழும் மக்கள் முடிவெடுக்கட்டும் சம்பந்தரின் சொல்லை கேட்டு வாக்களிப்பதா இல்லையா எண்டு. வேறு நாட்டை தமது நாடு என்று பெருமை பேசுபவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுக்க தேவை இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் தலைவர் மாவை இருக்கும் போது சம்மந்தர் சுமந்திரன் கும்பல் கருத்து கூறலாமே தவிர முடிவெடுக்க முடியாது.....

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களின்... சுத்துமாத்து, இந்தத் தேர்தலுடன் சந்திக்கு வந்துவிடும்.
இனியும்... அவர்கள் அவிக்கும் பருப்பு தமிழ்மக்களிடம் வேகாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை ? தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ? என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 வருடம் ஒரு இனத்தின் வாழ்வை பின்தள்ளுவது .....
துப்பாக்கி ஒன்றில் இருக்கும் ஒரு தோட்டாவை ஒருவரின் தலைக்குள் முன் தள்ளுவது .....
 
அரசியல் 
படுகொலை.
 
அல்லது 
 
"அரசியல் படுகொலை" இப்படி என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள். இருந்தும் அது சரி தவறு என்ற நிலைபாடும் தொடர்கிறது. 
 
தமது சொந்த வாழ்விற்கு ஒரு இனத்தையே கொள்ளை கொலை செய்கிறார்கள்.
இந்த இனக்கொலையை ஒரு பகுதி சரி என்று சொல்கிறது.
 
நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்கு தண்டனை கூடாது என்று ஒரு கூட்டம் ஊர்வலம் போகுது.  

கட்சியின் தலைவர் மாவை இருக்கும் போது சம்மந்தர் சுமந்திரன் கும்பல் கருத்து கூறலாமே தவிர முடிவெடுக்க முடியாது.....

 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மாவை அல்ல. இந்த அடிப்படை விடயமே தெரியவில்லை இதுக்குள்ள எவர் என்ன செய்யலாம் என்டு ஓடர் வேற.
நீங்கள் மேலும் தமிழர்கள் அவுஸுக்குள்ள வராமல் விரட்டியடிப்பதில் உங்கள் கவனத்தை செலுத்துவது நல்லது.  
கூட்டமைப்பினருக்கும் அங்கிருக்கும் தமிழர்களுக்கும் தெரியும் அவர்கள் நாட்டு அரசியல் முடிவுகளை எடுக்க‌...

Edited by தெனாலி

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தை நிர்வாகம் தொடர்ந்து தூக்குவதால் உங்களுக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தை நிர்வாகம் தொடர்ந்து தூக்குவதால் உங்களுக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகின்றோம்.....

நீங்க ஒரு ஜீனியஸ் பாஸ் அது இவர்களுக்கு புரியுதில்லை.

என்னுடைய கருத்தையும் நிர்வாகம் தொடர்ந்து தூக்குவதால் உங்களுக்கு எதிர்த்து பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.