Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் கொள்கை முற்றாக மேற்கு சார்ந்து போவதல்ல. மேற்குலகை பகைக்காமல் போவது. அதன் மூலம் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிங்கள ஆளும் தரப்பை பாதுகாத்துக் கொள்வது. அதேவேளை இந்திய.. சீன உறவுகளையும் அவர் தொடர்ந்து பேணிக் கொள்வார்.

 

மேற்குலகின் பொதுவான குற்றச்சாட்டு.. மனித உரிமை மீறல்கள் மற்றும்.. நீதித்துறை சீர்கேடு.. ஊடக சுதந்திரம். இவற்றை மைத்திரி உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை வெளிப்படையாக எடுப்பார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளின் குறைந்த பட்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தான் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதாகக் காட்டியும் கொள்வார். அது மேற்குலகை பகைக்காத போக்கை வளர்க்க அவருக்கு உதவும். அதன் மூலம் சர்வதேச அளவில் சிறீலங்கா எதிர்நோக்கும் போர் குற்ற.. மனித உரிமைகள் விவகாரத்தில் இருந்து அது விடுபட அல்லது அழுத்தங்களை குறைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு.. மேற்குலக நாடுகளில் இருந்தான நிதி உதவிகளை வெளிப்படையாகக் கோர அது உதவும்.

 

இதன் மூலம் சிறீலங்காவின் பொருண்மிய சிக்கலையும் சமாளிக்கலாம்.

 

மைத்திரி.. ரணில் போடும் கணக்கு இதுதான்.

 

அங்கின தமிழர்களுக்கு இனப்பிரச்சனை தீர்வு.. அதுஇது என்று ஒன்றும் உருப்படியாக அமையாது. மேற்குலகம் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு மனித உரிமை மீறல்கள். இனப்பிரச்சனை என்ற ஒன்றை அவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்துவதில்லை. மாறாக ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் சமாதானத்தோடு வாழுதல் என்பது தான் மேற்குலகிற்கு சிறீலங்கா தொடர்பில் அமையக் கூடிய கொள்கை. இதன் மூலமே.. சிறீலங்காவில் இன நெருக்கடியை தீர்வின்றி.. வைத்துக் கொள்ள முடியும். சிறீலங்கா ஆளும் தரப்பை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இனப்பிரச்சனை உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு அதனை நோக்கி தீர்வுக்கு போக மேற்குலகமோ.. இந்தியாவோ விரும்பாது. அதன் மூலம் தங்களின் தலையீடுகள் சிறீலங்காவில் இல்லாமல் போவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். இனப்பிரச்சனை என்று வெளியில் ஏற்றுக் கொள்ளாத வகைக்கு அங்கு இனப்பிரச்சனை இருக்கனும்.. இதுதான் மேற்குலகின் தேவை.

 

மைத்திரியை ரணிலை பொறுத்த வரைக்கும்.. விடுதலைப்புலிகள் அற்ற இன்றைய சூழலில்... இந்த மேற்குல நிலைப்பாடு சிங்களவர்களுக்கு சாதகமானது.. என்பதால்.. அவர்கள் மேற்குலக அழுத்தங்களை குறைக்கக் கூடிய அளவுக்கு விட்டுக்கொடுப்புகளை செய்வார்கள். அதனை தான் இப்போ நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இதன் மூலம் தமிழ் மக்களின் எந்த ஒரு அரசியல்..சமூக.. பொருண்மிய அபிலாசையும் பூர்த்தியாகப் போவதில்லை. அதுவும் கூட்டமைப்பு போன்ற ஆமாப் போடும் அரசியல் சக்திகளின் ராஜதந்திரம்.. ரணில் மைத்திரிக்கு.. மேற்குலகிற்கு எந்த சவாலையும் தரப்போவதில்லை. அவர்களுக்கு ஆகக்குறைந்ததை கொடுத்தே திருப்திப்படுத்தலாம் என்று மேற்படி தரப்புகள் திடமாக நம்புகின்றன. கூட்டமைப்பும் அந்தளவுக்கு பலவீனமான கொள்கைகளோடு தான் உள்ளது. அதன் எல்லாத்தையும் கைவிடுவோம்.. கொள்கை.. மேற்படி தரப்புக்களுக்கு நல்ல சாதகமாக உள்ளது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • Replies 77
  • Views 6k
  • Created
  • Last Reply

1465236_659178424186354_5377928523622497

 

கோப்பிலிருந்து...

Edited by BLUE BIRD

ஈழத்திருமகன் நன்றி உங்கள் பொறுமையான,பொறுப்பான பதிலுக்கு.உங்களிடம் ஒரு கேள்வி தற்போதைய மைத்திரி அரசு அமெரிக்க,மேற்கு சார்பு நிலை எடுத்திருக்கிறது. இது இலங்கைக்கு,ஈழத்திற்கு நல்லதா?..இது நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தமிழருக்கு நன்மை பயக்கும் என எதிர் பார்க்கிறீர்களா?

ஏன் என்டால் என்னைப் பொறுத்த வரை அமெரிக்கா இலங்கையில் கால் பதிக்கப் பார்க்கும்.எனக்குத் தெரிந்த வரை அவர்கள் கால் பதித்த எந்த நாடும் உருப்பட்ட சரித்திரம் இல்லை.அமெரிக்கா வந்து திருகோணம்லையில் இருந்து விட்டால் கடைசி வரைக்கும் அதை விட்டுப் போகப் போவதுமில்லை.எமக்கு ஒரு தீர்வு கிடைக்கப் போறதுமில்லை.இது எல்லாம் என்னுடைய கருத்துக்கள் சரியாகவோ,பிழையாகவோ இருக்கலாம்.இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?...நன்றி

நேற்று மைத்திரியின் வெற்றிக்காக வக்காலத்து வாங்கியவர்கள் எல்லாம் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றார்கள்

 

:unsure: ம்..

 

இது எனது சொந்தக் கருத்து மட்டுமே. அமெரிக்கா இலங்கையில் காலூன்ற வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்திய பெருங்கடலில் டியூகோ கிரேசியா தீவுகளில் (Diego Gracia) அமெரிக்கா மிக வலுவான கடற்படை மற்றும் அதி நவீன விமான படை தளத்தை நிறுவி சிலகாலங்கள் ஆகிவிட்டன. புவியின் தூர அளவுகளில் இலங்கை இத்தீவுகளிற்கு, மிகக் கிட்டிய தூரத்தில் இருக்கிறது. நான் அறிந்து கொண்ட வரையில், இலங்கை மீனவர்கள் இந்த தீவுகளுக்கு அண்மையில் திருட்டு தனமாக சென்று வருவதாகவும் அறிந்து கொண்டேன். சீனா இதை முறியடிக்கும் விதமாக ஹம்பாந்தோட்ட வில் சில வேலைகளில் ஈடுபட்டிருப்பது யாவரும் அறிந்ததே. மேலும் இதன் தாக்கம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவை பாதிக்கும்.

 

அடுத்தது, எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இன்னொருவர் தர முடியாது. அவை முற்று முழுதாக எம்மையும் எமது எதிராளிகளையும் சார்ந்து இருக்கின்றன. இது ஒரு தனி மனிதனாலோ, அல்லது குழுக்களாலோ தனித்து கொண்டுசெல்லகூடியவை அல்ல. மக்கள் சக்தியும், தீர்கமாக சிந்திக்கும் தலமைத்துவமும், வெறுமனே வார்த்தைகளில் வர்ணனை செய்யாமல் காரியத்தில் சாதிக்கும் இளையோர் பட்டாளமும் தேவை. வெறுமனே போர்க்குணம் மட்டும் எம்மை மீட்கும் என்பது கனவு. எமது இளையோர் சகல துறைகளிலும் துளிர்க்க வேண்டும். சமூக கட்டமைப்புக்குள் தம்மை மீளிணைத்து ஓர் ஆக்க சக்தியாக வர வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. இவ்வாறு ஆக்கசக்தியாக வர விடாமல், அதை சிதைக்கும் வேலைகளை இராணுவம் கன கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. இளையவர் இதை உய்த்துணர்ந்து அதனில் இருந்து விலகுவது மிக நன்மை பயக்கும்.

 

இதில், இன்னொரு ஆயுத போர் எமக்கு பேரழிவை தரும். அதன் பழுவை தாங்கக்கூடிய வலிமை எம்மக்களுக்கு தற்போது இருக்கும் என நான் நினைக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள நாம் தான் போராட வேண்டும்.என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.நன்றி உங்கள் நேரத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Eelathirumagan.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ஒருதிரில வாத்தியார் கேட்ப்பார், இன்னொரு திரியில நெடுக்கர் இன்னொன்றில் மருது.

எல்லார்க்கும் சொல்லி முடிஞ்சு பார்தா நீங்க. ஒப்பீட்டு ரீதியில் மகிந்த வருவதை விட மைத்திரி வருவது கிட்டிய நோக்கிலும் தூர நோக்கிலும் தமிழ் மக்களுக்கு நன்மையாய், ஒப்பீட்டளவில், இருக்கும். நடக்கும் விடயங்கள் அதையே கோடிகாட்டுகிறன.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில கொஞ்சப் பேர் கிளம்பி இருக்கினம். க.களத்திலயும்,திண்ணையிலையும் தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்ட மாதிரி கதை விடுகிறது.விளக்கம் கேட்டால் வாயை மூடிக் கொண்டு இருக்கிறது.எதாவது தெரிஞ்சால் தானே பதில் சொல்லுவதற்கு. ஒன்றும் தெரியாட்டில் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாம்.தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளவும் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா,

யாழில் எல்லோரிடமும் திட்டு வாங்கி, வாங்கி, யார் யாரைத்திட்டினாலும் நமக்கு தொப்பியை எடுத்து போடுவது பழக்கமாயீட்டு.

மன்னிச்சுகோங்க. தவிர உங்களிடம் வாயை கொடுத்து யாழில் பலரின் டவுசர் கிழிபட்டதை நான் பல முறை கண்டிருக்கிறேன். எனவே இத்துடன் எஸ்சாகிரேன்.

தமிழ் திருமகன் உங்கள் எழுத்தும் கருத்தும் அருமையிலும் அருமை. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள சொல்லலை கோசான்

  • கருத்துக்கள உறவுகள்

"புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்"

 

மஹிந்தா சும்மா விட்டிட்டுப் போகவில்லை.

 

http://www.cp24.com/world/sri-lankan-government-to-investigate-alleged-coup-attempt-1.2182868

 

"People should know about the dangerous situation that existed and Rajapaksa's coup to bury the country's democracy," said Samaraweera, adding that the new government's first task would be "to probe this coup and reveal to the country what really took place."

Read more: http://www.cp24.com/world/sri-lankan-government-to-investigate-alleged-coup-attempt-1.2182868#ixzz3OWwqFy2x

தெனாலி,மற்றும் மைத்திரியை ஆதரிக்கும் அனைவருக்கும் முடிந்தால் இதற்கு நேர்மையக பதில் சொல்லுங்கள்.
 
இந்த தேர்தலில் மைத்திரியை கொண்டு வந்ததன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கப் போறது என்ன?
 
 
தமிழர்கள் மீதான அடக்குமுறை சற்று குறையும். மைத்திரி அரசு மேற்கோடு ஒரு மென்போக்கையே கடைப்பிடிக்க முயலும். இதன் காரணமாக கோத்தா பாணி அடாவடித்தனங்கள் குறைய வாய்ப்பு இருக்கும். முதல் கட்டமாக இராணுவ ஆளுனர் மாற்றப்பட்டிருக்கிறார். 
 
 
மகிந்தாவோட இருந்து வந்த மைத்திரி விலையேற்றத்தை உண்மையிலேயே குறைப்பார் என நம்புகிறீர்களா?{குறைத்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்.)
 
மைத்திரியை பின்னால் நின்று ஆட்டப்போவது ரணில். ரணிலின் பொருளாதார கொள்கை முற்றுமுழுதாக மேற்கு சார்ந்தது ரணில் பிரதமராக இருந்த முன்னைய ஆட்சிகளில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியதில் பெரும் பங்கு அவருடையது. மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல வரிச்சலுகைகளும் உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை நம்பியும் மக்கள் வாக்களித்திருப்பர். 
 
விலையேற்றம் தான் மகிந்தாவை அகற்றி மைத்திரியைக் கொண்டு வரக் காரணம் என்டால்,அந்த விலையேற்றம் சிங்கள மக்களை பாதிக்கவில்லையா?
 
விலையேற்றம் மட்டுமல்ல. மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரப்போக்கான ஆட்சியும் காரணம் .
 
ஏன் மைத்திரியால் சிங்கள பகுதிகளில் வாக்குகளை அள்ள முடியவில்லை? பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் மகிந்தாவை வெல்ல முடியவில்லை?
 
சிங்கள rural areas இல் மகிந்தவை அசைக்க முடியவில்லை. காரணம் அந்த மக்களை 60 வருடமாக ஆட்சியாளர்கள் மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். புலிகளை அழித்த தமது மன்னரை அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டுக்கொடுக்கப்போவது இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழ் தேசிய விண்ணர்களே கிணத்துக்குள்ள இருந்து ஒரே பல்லவியை இன்னும் பாடும் போது கிராம புற சிங்கள மக்களிடம் நாம் அந்த அரசியல் அறிவை எதிர்பார்க்க முடியாது தானே? 
 
குடும்ப ஆட்சியை தடுப்பது தான் மைத்திரி போன்றவர்களது நோக்கம் என்டால் அந்த குடும்ப ஆட்சி பாதிக்கப் போவது சிங்களவரையும் சேர்த்து தானே!.அப்படி இருக்கும் போது ஏன் பெரும்பான்மை சிங்களவர் மகிந்தாவுக்கு வோட்டு போட்டார்கள்?
 
புற நகர் பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் சற்று விழிப்படைந்ததால் தான் மைத்திரியால் வெல்ல முடிந்தது.  இருப்பினும் புலிகளை வென்று சிங்கள தேசியம் என்றுமில்லாதவாறு எழுந்து நிக்க செய்த மகிந்தவை அவர்கள் இலகுவில் விட்டுக்கொடுக்க போவதில்லை. அவர்களின் வரலாற்றில் மகிந்தவிக்கு ஒரு மிக முக்கிய இடம் இருக்கும். 
 
மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பியது மூலம் தமிழர்கள் அவருக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா?
 
ஆம்
 
ஆம்,என்டால் இந்த தண்டனை போதுமா?
 
நிச்ச்சயமாக இல்லை. இறுதிப்போரில் தமிழ் மக்கள் அழிவுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் புலிகள் உட்பட. 
 
நான் தமிழ்ர்கள் தங்களுக்குத் தெரியாமலே மகிந்தாவை தப்ப விட்டுட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
இனி மேல் மகிந்தா மேல் போர் குற்ற விசாரனை முன்னெடுக்க முடியுமா?
 
மகிந்த‌ ஆட்சியில் இருந்திருந்தா போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்திருக்க முடியுமா?
 
மகிந்தா மீது சர்வதேசம் விசாரனையை முன்னெடுக்க மைத்திரி அரசு விடுமா?
 
சர்வதேச விசாரணையை எந்த சிங்கள அரசும் விடாது. 
 
மகிந்தா மட்டும் தான் குற்றவாளியா?...சரத்தும்,மைத்தியும் நிரபராதியா?
 
அவர்களும் குற்றவாளிகள். 1989-90 காலப்பகுதியில் அப்பாவி தமிழர்களை கொன்ற சுரேஸ்ஸும் குற்றவாளி. கட்டாய ஆட்சேர்ப்பு, இறுதிபோரில் தப்பி ஒட முயன்ற தமிழரை சுட்ட புலிகளும் குற்றவாளிகள்.
 
மைத்திரி,சந்திரிக்கா,ரனில் கூட்டனி மூலம் தமிழர்களுக்கு ஏதாவது நிரந்தர தீர்வு வரும் என எதிர்பார்க்கிறீர்களா?
 
இது கூட்டமைப்பின் கையில் தான் உள்ளது. மகிந்த ஆட்சியை விட இவர்கள் ஆட்சியில் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.
 
நீங்கள் குறுகிய கால லாப அடிப்படையில் அதாவது விலையேற்றத்தை குறைப்பார் போன்ற அடிப்படை விசயத்தை வைத்திரி மைத்திரி வந்தது ந்ல்லது என சொல்கிறீர்கள்.நான் நீண்ட கால அடிப்படையில் மகிந்தா ஆட்சியில் இருந்தால் தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வு வரும் என்ட அடிப்படையில் என் கருத்தை வைத்தேன்.
 
தமிழர்களோடு ஒப்பிடுகையில் சிங்களவர்கள் எவ்வளவோ புத்திசாலிகள்.அவர்கள் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாலும் கூட மகிந்தாவை ஆட்சியை விட்டு துரத்த வேண்டும் என்டு நினைக்கவில்லை.அவர்கள் நீண்ட கால அரசியல் நலன்களையே கருத்தில் எடுக்கிறார்கள்.
 
இப்ப நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கூறுங்கள். வெளிநாட்டில் சுகமாக வாழ்ந்துகொண்டு நாட்டில் கலகங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடிக்க வேண்டும் ரத்த ஆறு ஓடவேண்டும் என எதிர்பார்ப்பது முறையா? அடுத்தவன் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பது கேவலமான சிந்தனை இல்லையா. ரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டில் நீங்கள் குடும்பத்துடன் சென்று வாழ தயாரா? இதற்கு மகிந்த வரவேண்டும் என்று விரும்பிய தேசிய வீரர்கள் எவரும் பதிலளிக்கலாம். அடிக்கொரு ராணுவம் இருப்பதையும் எம் பெண்களின் படுக்கை அறை வரை அவர்கள் சென்று வருவதையுமா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.?
 
மைத்திரி தங்கத்தட்டில் தீர்வு தருவார் என்று தாயக தமிழர் உட்பட எவரும் நினைக்கவில்லை. அங்கிருக்கும் மக்களுக்கு மூச்சு விட ஒரு சந்தர்ப்பம் வேண்டும் அதை தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து விசிலடிக்க காத்திருப்பவர்களுக்கு இது விளங்க வாய்ப்பில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா,

யாழில் எல்லோரிடமும் திட்டு வாங்கி, வாங்கி, யார் யாரைத்திட்டினாலும் நமக்கு தொப்பியை எடுத்து போடுவது பழக்கமாயீட்டு.

மன்னிச்சுகோங்க. தவிர உங்களிடம் வாயை கொடுத்து யாழில் பலரின் டவுசர் கிழிபட்டதை நான் பல முறை கண்டிருக்கிறேன். எனவே இத்துடன் எஸ்சாகிரேன்.

தமிழ் திருமகன் உங்கள் எழுத்தும் கருத்தும் அருமையிலும் அருமை. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

 

நீங்கள் பொறுப்புடன் பல திரிகளில் பதில் அளித்துவிட்டீர்கள் 
இதற்கு நேரத்தை செலவழித்து பதில் அளிக்க வேண்டாம்.
 
மேலே இருப்பது உங்கள் நம்பிக்கை மட்டுமே.
 
நான் சொன்னதுதான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது நிகழும்.
அலரிமாளிகைக்கு நாளை கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து தேநீர் அருந்தி நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் அதற்கான எல்லா நகர்வுகளையும் இந்த அரசு செய்யும் அப்படி என்று சொல்வதால் சிங்களவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.
 
அப்படி ஒன்று நடக்கும்போது நீங்கள் அதை தலைப்பு செய்தியாக்கி அதை பெரிதுபடுத்தி எழுதுவீர்கள்.
அதெல்லாம் நாடக காட்சிகள் மட்டுமே.
 
மைத்திரி என்ன செய்யவேண்டும் என்பது கூட மைத்திரியால் நிர்ணயிக்க முடியாத அளவில் 
திரைமறைவில் இருந்து காட்சிகளை பணமே இயக்கி கொண்டிருக்கும். 
 
மைத்திரி ஆட்சி வரும்போது இதுதான் நடக்கும் என்றுதான் நான் சொல்லி வந்தேன்.
கீழ் உள்ள திரி நான் எழுதியது ஒருமுறை பாருங்கள்.
 
உங்களுடைய வாதம் சரியானது 
வாதமாக பார்க்கும்போது.
பணத்தை மீறி எதுவுமே செய்யமுடியாத நிலையில் அமெரிக்காவே தள்ளாடுகிறது.
நான் நீங்கள் சேனாதிபதி ஆனாலும் நிலைமை அதுதான். 
எல்லோரைப்போலவும் நீங்களும் அதை பெரிதுபடுத்தவில்லை .... அல்லது உங்களுடைய வாதத்திற்கு முரணாகும் என்பதால் அதை மறந்ததுபோல் இருக்கிறீர்கள்.
(பலருக்கு புலிவாந்தி எடுப்பது கொள்கை என்பதால் அதை செவனவே செய்கிறார்கள். நீங்கள் அரேங்கேறும் அரசியல் காட்சிகள் பற்றி தெளிவாக எழுதுகிறீர்கள்  ஆனால் இயக்குனர்களை மறைக்கிறீர்கள்)  

 

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151919-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/

எங்கே ரதி அக்கா? அடுத்தவனை பதில் சொல்லு பதில் சொல்லு என்டிட்டு நீங்கள் பதில் சொல்லாமல் எஸ்ஸாகிடீங்கள்.
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?  :lol:

தமிழ்மக்களை காலம் காலமாக கொன்று குவித்த சிங்கள இராணுவத்தையோ சிங்கள பேரினவாத்த்தையோ காட்டிக் கொடுக்க மைத்திரி முன்வர மாட்டார். அதை அவர் ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டார். அவர் தனது சொந்த இன இராணுவத்தை அவர்கள் என்ன அக்கிரமம் செய்திருந்தாலும் காட்டிகொடுக்கமாட்டார் ஏனென்றால் அவர் பெயர் தெனாலி அல்ல. அவர பெயர் மைத்திரி.

Edited by trinco

தமிழ்மக்களை காலம் காலமாக கொன்று குவித்த சிங்கள இராணுவத்தையோ சிங்கள பேரினவாத்த்தையோ காட்டிக் கொடுக்க மைத்திரி முன்வர மாட்டார். அதை அவர் ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டார். அவர் தனது சொந்த இன இராணுவத்தை அவர்கள் என்ன அக்கிரமம் செய்திருந்தாலும் காட்டிகொடுக்கமாட்டார் ஏனென்றால் அவர் பெயர் தெனாலி அல்ல. அவர பெயர் மைத்திரி.

 

நிச்சயமாக. மைத்திரி சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளை ஏற்றுக்கொள்வதால் தெனாலி புலிகளில் கோடூரங்களை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவரெல்லாம் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் தெனாலியின் கொள்கை. அது கொத்துக்குண்டு போட கட்டளையிட்ட கோத்தாவானாலும் சரி கட்டாய ஆட்பிடிப்பு செய்த எழிலனானாலும் சரி. இருவருமே எனக்கு ஒன்றுதான். 

நிச்சயமாக. மைத்திரி சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளை ஏற்றுக்கொள்வதால் தெனாலி புலிகளில் கோடூரங்களை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவரெல்லாம் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் தெனாலியின் கொள்கை. அது கொத்துக்குண்டு போட கட்டளையிட்ட கோத்தாவானாலும் சரி கட்டாய ஆட்பிடிப்பு செய்த எழிலனானாலும் சரி. இருவருமே எனக்கு ஒன்றுதான். 

 

பல ஐரோப்பிய நாடுகளில் யுத்த சூழ்நிலை இல்லாத தற்போதைய நிலையிலும் கட்டாய இராணுவசேவை நடைமுறையில் வைத்திருக்கும்போது ஒரு விடுதலை இயக்கம் பாரிய யுத்த சூழ்நிலையில் கட்டாய இராணுவ சேவையை செய்ததை குற்றமாக மீ்ண்டும் மீண்டும்  கூறுகின்றீர்கள். தமிழ் மக்கள் மீது கொத்து குண்டு வீசிய போது அமைச்சரைவில் இருந்து அதற்கு அங்கீகாரம் கொடுத்த மைத்திரியை ஏற்று கொண்டஉங்களால் தமிழ் இயங்கங்ள் மீது மட்டும் தொடர்ந்தும் வக்கிரம்   பாராட்ட முடிகிறது. ஏனென்றால் அவர்கள் எஜமானர்கள் எம்மை அழிக்கும் உரிமை உள்ளவர்கள்  என்று நீங்கள் ஏற்று கொண்டதனால். உண்மையில் தெனாலியின் கொள்கை சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது அல்ல என்பது தெனாலியின் பதிவுகளில் வாசிக்கும் எவராலும் உணரக்கூடியது. சும்மா எங்களை ஏமாற்ற சிங்களத்தை கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. மைத்திரி சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகளை ஏற்றுக்கொள்வதால் தெனாலி புலிகளில் கோடூரங்களை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவரெல்லாம் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் தெனாலியின் கொள்கை. அது கொத்துக்குண்டு போட கட்டளையிட்ட கோத்தாவானாலும் சரி கட்டாய ஆட்பிடிப்பு செய்த எழிலனானாலும் சரி. இருவருமே எனக்கு ஒன்றுதான். 

அனேகமாக சுளகு தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என்றுமாம் என்று சொல்வார்கள்.
இவரை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
யார் எவர் என்ற பேதம் இல்லாது நீதி எனது கொள்கை என்பவரை ..... நான் உலகில் முதன் முதலில் காண்கிறேன்.
ஒரே பரவசமாகவும் .... சந்தோசம் கட்டுக்குள் இல்லாத மகிழ்ச்சி வெளியில் ..... கடவுள் பூமிக்கு வந்துவிட்டாரா ??
அப்படி என்று ஒரு சந்தேகமும் கூட எழுந்து நிற்கிறது.
இதை எனது முகநூலில் பதிந்துவிட்டேன் ...
நண்பர்களுக்கு தொலைபேசி அடித்து கூறி வருகிறேன் ...
பலர் நம்ப மறுக்கிறார்கள் ..... உடனேயே இந்த பதிவை பிரதி எடுத்து ஈமெயில் போட்டு கொண்டு இருக்கிறேன்.
 
நண்பர்களே இந்த நல்ல செய்தியை நீங்களும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீதி பேச ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்வான செய்தியை உலகெங்கும் பரப்புங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இனவாத சகதியில் சிக்கி, இனவாததுக்கு பதில் இனவாதமே என்று வாழும் மக்கட் கூட்டத்துக்கு, தென்னாலியின் கூற்று அதிசயமாகவே தெரியும். நம்ப கடினமாயுமிருக்கும்.

ஆனால் நேர்த்தியான சிந்தை என்பது ஒன்றும் அப்படி அதிசயமான விசயமில்லை. உங்கள் கருத்தின் ஆழம் மிகப்பெரியது தென்னாலி, குண்டுச்சட்டியே உலகம் என்று வாழ்பவர்களுக்கு இது புரிய நியாயமில்லை.

கண்ணுக்கு முன்னால தெனாலி சொன்னது நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை .

 

விட்ட குறை தொட்ட குறையாக அது அனந்தியையும் அது தொத்துது அது. பாவம் :(

  • கருத்துக்கள உறவுகள்
பூமியில் நல்லது செய்ய வந்தவன் எல்லோரும் கொல்ல பட்டுதான் இருக்கிறார்கள்.
 
ஜேசு 
காந்தி 
பிரபாகரன் 
என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும் .............. 
  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு,

காந்தி,

பிரபாகரன்......

சிவ சிவா...கலி முத்திடித்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசு,

காந்தி,

பிரபாகரன்......

சிவ சிவா...கலி முத்திடித்து.

அது 2000 ஆண்டுக்கு முன்னேமே முத்திட்டுது 
அதுதான் ஒரு கன்னத்தில் அறையும்போது மறு கன்னத்தையும் காட்டிய ஜேசுவையும் போட்டு தள்ளினார்கள்.

பல ஐரோப்பிய நாடுகளில் யுத்த சூழ்நிலை இல்லாத தற்போதைய நிலையிலும் கட்டாய இராணுவசேவை நடைமுறையில் வைத்திருக்கும்போது ஒரு விடுதலை இயக்கம் பாரிய யுத்த சூழ்நிலையில் கட்டாய இராணுவ சேவையை செய்ததை குற்றமாக மீ்ண்டும் மீண்டும்  கூறுகின்றீர்கள். தமிழ் மக்கள் மீது கொத்து குண்டு வீசிய போது அமைச்சரைவில் இருந்து அதற்கு அங்கீகாரம் கொடுத்த மைத்திரியை ஏற்று கொண்டஉங்களால் தமிழ் இயங்கங்ள் மீது மட்டும் தொடர்ந்தும் வக்கிரம்   பாராட்ட முடிகிறது. ஏனென்றால் அவர்கள் எஜமானர்கள் எம்மை அழிக்கும் உரிமை உள்ளவர்கள்  என்று நீங்கள் ஏற்று கொண்டதனால். உண்மையில் தெனாலியின் கொள்கை சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது அல்ல என்பது தெனாலியின் பதிவுகளில் வாசிக்கும் எவராலும் உணரக்கூடியது. சும்மா எங்களை ஏமாற்ற சிங்களத்தை கண்டிப்பது போல் நடிக்க வேண்டாம்.

 

ஐரோப்பிய நாடுகளில் முறையான ராணுவ/தற்பாதுகாப்பு பயிற்சி எடுப்பதற்கும் வன்னியில் 13-14 வயது சிறுவர்களை 2 நாள் பயிற்சியோட முன்னரங்குக்கு கொண்டு போய் நிறுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்குது அண்ணை. சரி கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு சாட்டு. இறுதி நேரத்தில தப்பி போக முயற்சித்த மக்களை சுட்டதற்கு என்ன சாட்டு சொல்லபோறீங்கள்?
நான் எப்போதாவது சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாவோ தமிழர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்டோ எழுதியிருக்கிறனா? நிரூபித்தால் யாழ் களத்தை விட்டு நிரந்தரமாக செல்ல நான் தயார். சிங்கள பேரினவாதம் தங்களை குறை கூறுபவர்களை எல்லாம் புலிகள் என்று கூறுவார்கள். அதே மாதிரி உங்களை போன்றவர்கள் புலிகளை குறை கூறினால் அவர்களை சிங்கள அரசின் கைகூலி, அடிமைகள் என்கிறீர்கள். இருவருமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். எந்த வித்தியாசமும் இல்லை. 
 

 

அனேகமாக சுளகு தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என்றுமாம் என்று சொல்வார்கள்.
இவரை பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
யார் எவர் என்ற பேதம் இல்லாது நீதி எனது கொள்கை என்பவரை ..... நான் உலகில் முதன் முதலில் காண்கிறேன்.
ஒரே பரவசமாகவும் .... சந்தோசம் கட்டுக்குள் இல்லாத மகிழ்ச்சி வெளியில் ..... கடவுள் பூமிக்கு வந்துவிட்டாரா ??
அப்படி என்று ஒரு சந்தேகமும் கூட எழுந்து நிற்கிறது.
இதை எனது முகநூலில் பதிந்துவிட்டேன் ...
நண்பர்களுக்கு தொலைபேசி அடித்து கூறி வருகிறேன் ...
பலர் நம்ப மறுக்கிறார்கள் ..... உடனேயே இந்த பதிவை பிரதி எடுத்து ஈமெயில் போட்டு கொண்டு இருக்கிறேன்.
 
நண்பர்களே இந்த நல்ல செய்தியை நீங்களும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீதி பேச ஒருவர் வந்துவிட்டார் என்ற மகிழ்வான செய்தியை உலகெங்கும் பரப்புங்கள்.

 

 

உலகத்தில நிறைய பேர் என்னை மாதிரி இருக்கினம் ஐயா. இடைக்கிடை கிணத்தை விட்டு வெளியே எட்டி பாருங்கோ

ஆனாலும் காந்தியையும் பிரபாகரனையும் ஒரே லிஸ்டில போட உங்களால மட்டும் தான் முடியும்  :lol:  :lol:

 

ஐரோப்பிய நாடுகளில் முறையான ராணுவ/தற்பாதுகாப்பு பயிற்சி எடுப்பதற்கும் வன்னியில் 13-14 வயது சிறுவர்களை 2 நாள் பயிற்சியோட முன்னரங்குக்கு கொண்டு போய் நிறுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்குது அண்ணை. சரி கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு சாட்டு. இறுதி நேரத்தில தப்பி போக முயற்சித்த மக்களை சுட்டதற்கு என்ன சாட்டு சொல்லபோறீங்கள்?
நான் எப்போதாவது சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாவோ தமிழர் அடிமைகளாக இருக்க வேண்டும் என்டோ எழுதியிருக்கிறனா? நிரூபித்தால் யாழ் களத்தை விட்டு நிரந்தரமாக செல்ல நான் தயார். சிங்கள பேரினவாதம் தங்களை குறை கூறுபவர்களை எல்லாம் புலிகள் என்று கூறுவார்கள். அதே மாதிரி உங்களை போன்றவர்கள் புலிகளை குறை கூறினால் அவர்களை சிங்கள அரசின் கைகூலி, அடிமைகள் என்கிறீர்கள். இருவருமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். எந்த வித்தியாசமும் இல்லை. 

 

யுத்தம் நடைபெறாத சமாதான தற்போதைய  காலத்திலும்  அங்கீகரிக்கபட்ட ஐரோப்பிய நாடுகள் முறையாக சட்ட திட்டங்களுடன் கட்டாய இராணுவ பயிற்சியை செய்கின்றன. அந்த ஐரோப்பிய நாடுகளில் தமது இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தல் ஆக்கிரமிப்பு வந்த போதெல்லாம் நிலைமையை உணர்ந்து அசாதாரண ஏற்பாடுகளுடன்  அந்த நாடுகளின் மக்கள் ஆக்கிரமிப்பு எதிராக அர்பணிப்புடன் போராட்டத்தை செய்து வெற்றி பெற்றனர் என்பது வரலாறு எமக்கு உணர்த்தும் பாடம். ஏன் இன்று கூட  வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ஒன்று வருமானால் அதை எதிர்த்து சம்பிரதாய சட்ட திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தீரத்துடனும் அர்பணிப்புடனும்  தமது தாய் நாட்டிற்காக போராடி ஆக்கிரமிப்பாளர்களை வெற்றி பெறும் வல்லமை மேற்கு நாடுகளுக்கு உண்டு. ஏனெனில் அந்த நாடுகளில் தெனாலிகள் இல்லை. நீங்கள்  ஐரோப்பியராக பிறந்திருந்தால் நண்பர்கள் இல்லாமல் கஷ்ரப்பட்டிருப்பீர்கள். தமிழராக பிறந்ததால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி தாமதத்திற்கு மன்னிக்கவும்.இதுக்கு எல்லாம் கருத்து எழுத பயந்தால் நான் எப்பவோ யாழை விட்டு ஓடி இருக்க வேண்டும்.

நான் எங்கே ரத்த ஆறு ஓட‌ வேண்டும் என்று எழுதினேன்?...மகிந்தா தொடர்ந்து இன்னும் 7,8 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.சிங்களவரே மகிந்தாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வெளிக்கிட்டால் அதன் மூலம் தமிழருக்கு ஒரு தீர்வு/விடிவு பிறக்காதா என்ட எண்ணத்தில் எழுதினேன். அதில் என்ன பிழை இருக்கிறது. நாட்டில் கலகம் என்று வந்தால் தமிழ்ரும் பாதிப்படையத் தான் போகின்றார்கள்.ஆனால் அதன் மூலம் ஒரு விடிவு கிடைத்தால் அதுவும் நிரந்தரமான,நல்ல தீர்வாக அமைந்தால் தமிழர்களுக்கு நல்லது தானே!

ஒரு கதைக்கு நாளைக்கே ஜரோப்பாவில் 3ம் உலக மகா யுத்தம் தொடங்கினால்,லண்டனை விட்டுட்டு ஓட முடியுமா?...யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.உயிர் எப்போது போகும் என்று இருக்குதோ அப்போது போகும்.

எனக்கு இனி இல்லையென்ற நல்ல உத்தியோகம் தந்து,அல்லது வருமானம் தரக் கூடிய வகையில் நீங்கள் வழி செய்து தந்தீர்கள் என்டால் நான் ஊருக்கு போய் நிம்மதியாய் இருப்பேன். அப்படி போய் இருக்கும் போது மகிந்தாவுக்கு எதிராக கலகம் செய்யக் கூடிய நிலை வந்தால் சந்தோசமாய் பங்கு பெற்றுவேன்.ஏனென்டால் இது எல்லா மக்களுமாய் சேர்ந்து அரசுக்கு எதிராக ஒன்றினைந்து செய்யும் புரட்சி.கட்டாயம் வெற்றி பெரும் என்ட நம்பிக்கை இருக்குது.தவிர நான் ஒருத்தரையும் இங்கே இருந்து கொண்டு போய் புரட்சி செய் என்று கட்டாயப்படுத்தவில்லை.என்னைப் பொறுத்த வரை மக்கள் புரட்சி என்பது மக்கள் தாங்களாகவே அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழுவது.

மைத்திரி காலத்தில் சிங்கள் ஆமி பெண்களது படுக்கையறையை எட்டிப் பார்க்காதா?...இல்லை என நீங்கள் உத்தரவாதம் தந்து அதன் படியே அவர்கள் நடந்தால் மிக்க மகிழ்ச்சி.

எல்லாத்தையும் விட நான் நினைத்தது மகிந்தா ஆட்சியில் தொடர்ந்து இருந்தால் அவர் மீது அழுத்தங்களை பிரயோகித்து,போர் குற்றவாளியாக்கி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்பதே எனது எண்ணம்.காரணம் மகிந்தா சீன சார்பு கொள்கையுடையவர் இந்த காரணத்திற்காகவே மேற்கு நாடுகளும்,இந்தியாவும் அவருக்கு எதிராகவே இருப்பார்கள்.ம்கிந்தாவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் எப்படியும்,எதாவது காரணத்திற்காக அவரைத் தண்டித்திருப்பார்கள் என்பதே என் கருத்து.இப்போது எதாவது விசாரனை எனத் தொடங்கினால் மகிந்தா உடனே மைத்திரியையும்,சரத்தையும் மாட்டப் பார்ப்பார்.அந்த ஒரு காரணத்திற்காகவே மைத்திரி இந்த போர் குற்ற விசாரனைக்கு எல்லாம் அனுமதி கொடுக்காது.

கடைசி நேரத்தில்,தவிர்க்க முடியாத சூழ்நிலையில் புலிகள் கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டது உண்மை தான்.புலிகளின் தலமை மு.வாய்க்காலில் மாண்டு போனார்களே!. சாதரண போராளிகள் இன்னும் கூட வதை முகாம்களில் சித்திரவதை இன்னும் அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்...இனி மேல் யாருக்கு புலிகளில் தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்?...சிங்களவன் கூட இப்படியான கதைகள் கதைக்க மாட்டான். சிங்களவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கச் சொன்னால் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?...மன்னிக்க வேண்டும் உங்களது கருத்துக்களை பார்த்தால் எந்த சிங்களவருக்குமே தண்டனை கொடுக்க கூடாது என்ட நோக்கத்தினை கொண்டவர் போல் இருக்கிறது.

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.