Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்கின்றது மிரட்டல்! அனந்தி அச்சம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகளைக்கேட்பது ரொம்ப  சுலபம்..

உங்க கருத்து ஒன்றை இங்கு பார்த்தேன்

பருதி  அண்ணரின் சிலை உடைப்புக்கு நீங்கள் எழுதிய வரிகள்.

போதும்........... :(

அந்தக்கருத்துக்கு மன்னிப்புக்கேட்டால்  தொடர்ந்து பேசலாம்.....

பருதி பற்றிய அந்த பதில்தான்

இன்றும் என் கருத்து

எக்காரணம் கொண்டும் அதற்கு

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம்

இல்லை

பிரான்ஸ் ரவுடிகளை வளர விட்டமையால்

கொடுத்த விளைவுகளை

அண்மையில் புரிந்து கொண்டு இருக்கும்

இனியவது விழித்துக் கொண்டு

பாம்புக் குழு, பருதிக் குழு மற்றும்

இவற்றுக்கு நிதியுதவி செய்யும்

உங்களை போன்ற வியாபாரிகள் குழு மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த திரியினை திசை திருப்ப விரும்பவில்லை.

என் கருத்தினை மட்டுக்கள் நீக்கிய பின் அதையொட்டி

கருத்து எழுதிய உங்களால்

என் மேலே உள்ள கருத்தினையும்

எழுத வேண்டி வந்தது

நீக்கிய கருத்தொன்றை

மேற்கொள் காட்டிய நீங்கள்

யாழிடம் மன்னிப்பு கேட்கலாம்

Edited by வைரவன்

  • Replies 55
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்விகளைக்கேட்பது ரொம்ப  சுலபம்..

உங்க கருத்து ஒன்றை இங்கு பார்த்தேன்

பருதி  அண்ணரின் சிலை உடைப்புக்கு நீங்கள் எழுதிய வரிகள்.

போதும்........... :(

அந்தக்கருத்துக்கு மன்னிப்புக்கேட்டால்  தொடர்ந்து பேசலாம்.....

அவர் தனது செயல்களில்

நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்

அதை நீங்கள் உணருங்கள்

விமர்சனம் வைக்கலாம்

ஆனால் குண்டுச்சட்டிக்குள் தான் எல்லோரும் உளணும் என்பது சரிவராது...

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்... (பழமொழிமட்டுமே. பிறகு இதற்கும் விமர்சனம் வேண்டாம்)

அவர் தனது செயல்களில் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்தால் நுளம்பு குத்துவதற்கெல்லாம் ஊரை கூப்பிடமாட்டாரே. பாதுகாப்பு பிரிவினர் வாகனத்தை பரிசோதனை செய்தார்கள், வாகனத்தை படம் எடுத்தார்கள், சாரதியை விசாரித்தார்கள், போரடச்சென்று அனந்தி குழந்தைகளுடன் மரநிழலின் கீழ் தங்கவேண்டி வந்தது. இவ்வளவுதான் முறைப்பாடு.

பாப்பரசர் என்ன பக்கத்து வீட்டு சுப்பையாவா? பாப்பரசர் ஏதாவது நாட்டுக்கு விஜயம் செய்யும்போது எப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இவருக்கு தெரியாதா? இவ்வாறான சூழ்நிலையில் எதேச்சையாக தான் செய்த செயல்களின் விளைவுகளிற்கு குய்யோம், மாயோ என தனக்கு மிரட்டல், அச்சமாய் உள்ளது என்று அனந்தி கூறினால் அது நகைப்புக்கிடமானது இல்லையா? இவ்வளவு பயந்தாங்கொள்ளி ஏன் போராடப்போனார்? தான் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் என்பதால் போராட்டம் செய்யும்போது தனக்கு வி.ஐ.பி மரியாதை கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாரா?

குண்டுச்சட்டிக்குள் கிடந்து உருளுவது அனந்தியா அல்லது நீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி என்று தெரியவில்லை

யாழ்பாணத்தில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளில் வராத அனந்தி பற்றிய செய்திகள் எல்லாம் தமிழ் வின்னுக்கும் பதிவுக்காரர்களுக்கும் மட்டும் உடனே கிடைகின்றது?

பதிவு போன்ற குழுவாதம் பேசும், பிடிக்காதவர்கள் மீது துரோகி முத்திரை குத்தும்  இணையப்புரட்ச்சியாளர்கள் மட்டும் அனந்தி ஊடக உறவு வைத்து இருக்கின்றார் போலும்

சிங்கள பேரினவாத அரசுக்கு அனந்தி போன்றவர்களின் இருப்பு பலமாகத் தேவை.

அனந்தி போன்றவர்களால் தான் தமிழ் மக்களை சிந்திக்க விடாது உணர்ச்சி அரசியல் செய்யலாம்

சனாதிபதித் தேர்தலிலும் அனந்தி பற்றி சிங்கள மாற்று ஊடகங்கள் நியாயமான சந்தேகங்களை முன்வைத்ததுக்கு அனந்தி இன்று வரைக்கும் பதில் சொல்லவில்லை

ரவிராஜ் போன்று மிதமான காத்திரமானவர்களை கொன்று குவித்த அரசு

அனந்தி போன்றவர்களை ஒரு போதும் ஒன்றும் செய்யாது

உங்கள் கருத்தோடு 200 வீதம் உடன்படுகின்றேன்.

யாழ். ஊடகங்களை விடுங்கள். கொழும்பில் உள்ள ஊடகங்களில் கூட மேற்படி செய்தி வெளிவரவில்லை.

பதிவு, தமிழ்வின் போன்ற ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களை உசுப்பேத்தும் விதமான செய்திகளைத்தான் வெளிவிடுகின்றன.

யாழ். களத்தில் யாவும் தமக்குத்தான் தெரியும் என்று கருதி பதிவு இடுபவர்கள் கூட செய்தியின் நம்பகத்தன்மை தொடர்பாக ஆராய முற்படாமல் இருப்பது வேதனைக்கு உரியது.

செய்தியின் நம்பகத்தன்மையினை ஆராயாமல் உடனடியாக களத்தில் கருத்து எழுதுபவர்கள் இனியாவது செய்திகளை ஆராய்ந்து எழுதுங்கள் எனது வேண்டுகோள்.

செய்தியினை முதலில் ஆராய்ந்துவிட்டு கருத்து எழுதுங்கள். இல்லை எனில் யாவும் விழழுக்கு இறைத்த நீராகிவிடும்.

எனக்கு என்னவோ உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் மேற்படி இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றனவோ எனத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் நல்லா உறைக்கிறமாரி எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

ரிங்கோவிடம் மட்டும் நாகரீக உரையாடலை எதிர்பார்க்க வேண்டாம். வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தோடு 200 வீதம் உடன்படுகின்றேன்.

நன்றி

ஆனால் அரசியல் கருத்துகளில் நானும் நீங்களும் 100 வீதம் வேறுபடுகின்றோம்

போராளிகளையும் மாவீரர்களையும் விமர்சிக்கின்றேன்

என்று ஒரு போதும் அவர்களை தூற்றியது கிடையாது

ஆனால் நீங்கள்

என் கடுமையான விமர்சனங்கள் எல்லாம்

உசுப்பேத்துகின்றவர்கள் மீதும்

மக்களை ஏமாற்ற முனையும்

அனந்தி போன்றவர்கள் மீதும்

புலம்பெயர் தேசங்களில்

போராடங்களில் குளிர் காய்ந்தவர்கள்

மீதும் தான்

ஒரு காலத்தில்

'பரபரப்பாகவும்' 'விறுவிறுப்பாகவும்'  பத்திரிகையை

கொண்டு செல்ல

பல உசுப்பேத்தும் கட்டுரைகளை

எழுதியவர்களில் நீங்களும்

ஒருவர் என்று நம்புகின்றேன்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் பிழை என எந்த இடத்திலும் நான் கூற வரவில்லையே.

அவர்கள் கைக்கொண்ட வழிமுறைகள்தான் பிழை என வாதாடுகின்றேன்.

அதாவது, அரசியல் மயப்படுத்தாமல் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டமே மக்களிடம் தொடர்ச்சியாக ஆதரவினைப் பெறமுடியாமல் போய் அவர்கள் அழிந்தார்கள்.

அதேபோன்று புலத்தில் இருந்து கொண்டு ஒரு சாரார் தொடர்ந்தும் புலிகள் செய்தது சரி, தொடர்ந்தும் அவர்கள் வருவார்கள் என்கின்ற கற்பனையில் இருப்பவர்களை நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன்.

என்னைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகளுக்குப் பின்னைய அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

சரி-பிழைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன்றைய தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், அதனையே புலத்தில் உள்ள புலிப் பினாமிகள் பிளவுபடுத்தி வேடிக்கை பார்ப்பது சரி என நீங்கள் வாதிடுவீர்களா?

வடக்கு-கிழக்கு மக்களின் அரசியலுக்குள் நாம் தலையிடுவது சரி என வாதிடுவீர்களா?

புலத்தில் உள்ள புலிப்பினாமிகளால் தமிழ்நாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து பிரபாகரன் இருக்கின்றார் என தொடர்ச்சியாக கூறுமாறும் அதேபோன்று தேவையற்ற விதத்தில் அவர்களைப் பயன்படுத்தி போராட்டங்களை நடத்தத் தூண்டுவதும் சரி என வாதாடுவீர்களா? (இதில் பணம் வாங்காமல் அன்றும் என்றும் தொடர்ச்சியாக எமக்கு ஆதரவு தருபவர்கள்: அறிவுமதி, வைகோ, கொளத்தூர் மணி, சுப வீரபாண்டியன்)

வடக்கு-கிழக்கு மக்களுக்கு நாம் தார்மீக ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அவர்களை எமது நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்வது எந்த வகை நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் நல்லா உறைக்கிறமாரி எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

ரிங்கோவிடம் மட்டும் நாகரீக உரையாடலை எதிர்பார்க்க வேண்டாம். வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறார்.

வைரவன், இங்கு நல்ல அடி வாங்கி, பேர் ரிப்பேராகி போன ஆள்....

வேறு... பெயரில், வந்திருக்கிறார்.

"புதிய, மொந்தையில்.... பழைய கள்ளு"

இது, கூடத் தெரியாமல்.. அரசியல் ஆருடம் கூற வெளிகிட்ட உங்களையோ..., உங்கள் கருத்துக்களையோ, வாசித்துப் பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் போராட்டம் பிழை என எந்த இடத்திலும் நான் கூற வரவில்லையே.

அவர்கள் கைக்கொண்ட வழிமுறைகள்தான் பிழை என வாதாடுகின்றேன்.

அதாவது, அரசியல் மயப்படுத்தாமல் விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டமே மக்களிடம் தொடர்ச்சியாக ஆதரவினைப் பெறமுடியாமல் போய் அவர்கள் அழிந்தார்கள்.

அதேபோன்று புலத்தில் இருந்து கொண்டு ஒரு சாரார் தொடர்ந்தும் புலிகள் செய்தது சரி, தொடர்ந்தும் அவர்கள் வருவார்கள் என்கின்ற கற்பனையில் இருப்பவர்களை நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன்.

என்னைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகளுக்குப் பின்னைய அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

சரி-பிழைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன்றைய தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், அதனையே புலத்தில் உள்ள புலிப் பினாமிகள் பிளவுபடுத்தி வேடிக்கை பார்ப்பது சரி என நீங்கள் வாதிடுவீர்களா?

வடக்கு-கிழக்கு மக்களின் அரசியலுக்குள் நாம் தலையிடுவது சரி என வாதிடுவீர்களா?

புலத்தில் உள்ள புலிப்பினாமிகளால் தமிழ்நாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து பிரபாகரன் இருக்கின்றார் என தொடர்ச்சியாக கூறுமாறும் அதேபோன்று தேவையற்ற விதத்தில் அவர்களைப் பயன்படுத்தி போராட்டங்களை நடத்தத் தூண்டுவதும் சரி என வாதாடுவீர்களா? (இதில் பணம் வாங்காமல் அன்றும் என்றும் தொடர்ச்சியாக எமக்கு ஆதரவு தருபவர்கள்: அறிவுமதி, வைகோ, கொளத்தூர் மணி, சுப வீரபாண்டியன்)

வடக்கு-கிழக்கு மக்களுக்கு நாம் தார்மீக ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அவர்களை எமது நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்வது எந்த வகை நியாயம்?

நிர்மலன் விடுதலைப்புலிகளின் பின்னரான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.

சம்பந்தரின் அரசியலை ஆதரிக்கும் நீங்கள் அவர் சரியான பாதையில்தான் செல்கின்றார் என நம்புகின்றீர்களா?

தங்களுக்கென நாட்டை மட்டுமல்ல அதன் உட்கட்டமைப்பையும் அமைத்து வைத்திருந்த விடுதலைப்  புலிகளின் பின்னரான அரசியல்

சிங்களத்துடனான இணக்க அரசியலாக இருக்க முடியுமா?

அடுத்தது த தே கூட்டமைப்புத்தான் ஈழத்தமிழ் மக்களின் சரியான தெரிவு. இதை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் விடும் தவறுகளை நாங்கள் என்ன, யாரும் விமர்சிக்கலாம் அல்லவா?

 தேர்தல்  என வந்தால் எங்கள் ஆதரவும் கூட்டமைப்புக்குத்தான்.

ஆனால் கூட்டமைப்பு எதிர் த தே ம முன்னணி என வரும் போது

அவர்களின் சிந்தனையுடன் பலரும் சேர்ந்து செலவதாலும்

அவர்கள் கூட்டமைப்பை எதிர்ப்பதற்கான காரணங்கள் சரியாக இருப்பதாலும் நாங்களும் அவர்களை ஆதரிக்கின்றோம்.

சம்பந்தர் சுமந்திரன் இல்லாத நிலையில் கட்டாயம் த தே ம முன்னணியும் கூட்டமைப்பில் இணைவது நிச்சயம்.

நான் அவர்களுடைய பேச்சாளன் அல்ல.அவர்களுடைய நிலைமையைப் புரிந்து கொண்டவன்.

 வளர்ந்து வரும் இளம்  அரசியல்வாதிகளின் கருத்தைச் செவிமடுத்துக் கேட்பதே  முதிர்ந்த அரசியல்வாதிக்கான அழகும் பண்பும் ஆகும். அதை விடுத்து நீங்கள் சின்னப்பிள்ளைகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் என்ன முடிவு எடுக்கின்றோமோ அதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் வாயைப் பொத்துங்கள். அல்லது கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள் என்பது ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகா?  இதுதான் கூட்டமைப்புப் பிளவுப்ட்டதற்கான முக்கிய காரணம்.

சம்பந்தரின் பின்னால் இருக்கும் ஒரு சுயநல (அரசியல்)வாதியான சுமந்திரன் எப்படிக் கூட்டமைப்புக்குள்  வந்தார். மக்களா அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லாவற்றையும் மக்களின் முதுகில் போட்டு அவர்களைப் பாரம் சுமக்க வைக்க முடியாது. பாரம் அதிகமாகும் போது மக்களே உதறிவிடுவார்கள்

உங்கள் கருத்தின்படி புலம் பெயர்ந்தவன் எல்லாம் அண்டை நாட்டவன்.

ஈழத்தில் இருக்கும் அரசியல் நிலைமைக்குள் தலையைக் காட்டக்கூடாது. இது எப்படி நியாயம்  ஆகும்.

அங்கிருப்பவர்கள் எங்களுக்கும் சேர்த்துத்தான்   அரசியல் செய்கின்றனர். நாங்கள் அவர்களுக்காவும் எங்கள் அண்ணன் தம்பி ஆகியோருக்குமாகவும் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பார்கள்.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் புலம்பெயர்ந்தவன் என்பதற்காக நாங்கள் ஒரு போதும் வாயை மூடமுடியாது.

கூட்டமைப்பின் ஈழ அரசியல் பிழையான வழியில் செல்கின்றது என்றால் முதற் குரல் புலம்பெயர்ந்தவனிடம் இருந்துதான் வரும்.வரவேண்டும்.

பிரபாகரன் இருக்கின்றார் இல்லை என்பதைவிட புலம் பெயர்ந்தவன்

பணம் கொடுக்கின்றான் என்பதையும் விட தமிழக உறவுகளும் தலைவர்களும் எங்களுக்காக் குரல் கொடுப்பது அவசியம்.

அவர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கையில் ஒரு அரசியல்த் தீர்வும் ஈழத்தில் கிடைக்கப் போவதில்லை.

ஈழம் ஒன்றும்  தமிழ்நாடு  இல்லை சினிமா  காட்டி  ஆட்சி பிடிக்கவும் அரசியல் பண்ணவும் எவர் வந்தாலும் போனாலும் இருந்தாலும் அந்த மக்கள் பிரபாகரன் என்னும் விருட்சத்தின்  நிழலில் இருந்தவர்கள் எவர்களுக்கு  தெரியும் எங்க விடவேணும் எங்க  பிடிக்க  வேணும் என்று ,இங்கு இருந்து இணைய  செய்தியை  பார்த்திட்டு கூட்டமைப்பை  பேசி பயன் இல்லை சம்மந்தன் ஐயாகும்  தெரியும் கூட்டமைப்பு  இல்லாமல்  தனித்து  தமிழரசு கட்சியா  தேர்தலில் நின்றால்  முடிவு  எப்படி  இருக்கும்  என்றும் ,ஆனால்  என்ன  கூட்டமைப்பில் உள்ள பலருக்கு ஆசை  அதன்  தலைவர் பதவியை  பிடிப்பதில்  தான் இருக்கே தவிர மக்களுக்கு ஏதாவது  செய்யவேணும் என்னும்  தூர நோக்கு குறைவா இருக்கு ,உள்  வீட்டு  விமர்சனங்கள்  அதனால் தான் எழுகிறது .

நேரே சொல்லுங்கள்

ஆனந்தியை பலி கொடுக்கணும் என்று.....

தமிழர்கள்

தமது இன்றைய நிலை சார்ந்து அடக்கி வாசிக்கிறார்கள்

அவர்கள் எதையும் மறக்கவில்லை

மன்னிக்கவுமில்லை

அவர்களுக்காக தமது உயிரைக்கொடுத்தோரின் உறவுகளை

எவரும் தண்டித்துவிட முடியாது

காலம்வரும் வரையே

சில மௌனங்கள் தொடரும்..............

அனந்தியை பலிகுடுக்க அங்கே என்ன வேள்வியா நடக்குது?

இந்த நிலை மாறவேனறும் என்று சொன்னதுக்கு உங்களுக்கு இப்பிடியா படுது?

அனந்தியை பப்பாவில் ஏத்தாமல் விட்டால் நல்லது.

சம்பந்தரின் அரசியலை ஆதரிக்கும் நீங்கள் அவர் சரியான பாதையில்தான் செல்கின்றார் என நம்புகின்றீர்களா?

தங்களுக்கென நாட்டை மட்டுமல்ல அதன் உட்கட்டமைப்பையும் அமைத்து வைத்திருந்த விடுதலைப்  புலிகளின் பின்னரான அரசியல்

சிங்களத்துடனான இணக்க அரசியலாக இருக்க முடியுமா?

அடுத்தது த தே கூட்டமைப்புத்தான் ஈழத்தமிழ் மக்களின் சரியான தெரிவு. இதை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் விடும் தவறுகளை நாங்கள் என்ன, யாரும் விமர்சிக்கலாம் அல்லவா?

இதுதான் ஜனநாயகம். யாரும் விமர்சிக்கலாம்.
 
இந்த ஜனநாயக உரிமையைத்தான் கோசன் சே, அர்ஜுன் (இவரது வார்த்தைப் பிரயோகங்கள் தப்பு) போன்றவர்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள். ஏன் அதை மறுக்கிறீர்கள்.
 
கூட்டமைப்பை விமர்சனத்துக்குள்ளாக்கலாம். ஆனால் புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர்கள்
 
உங்கள் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நமது இப்போதய நிலையில் யாவரும் சேர்ந்துதான் தேரை இழுக்க வேண்டும். தேர்ச்சில்லு பழுதடைந்தால் அதனை திருத்தி இழுப்போம். இல்லை சில்லில் பழுதில்லை இப்படியேதான் இழுப்போம் என்றால் தேர் நகரப்போவதே இல்லை.

வைரவன் நல்லா உறைக்கிறமாரி எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

ரிங்கோவிடம் மட்டும் நாகரீக உரையாடலை எதிர்பார்க்க வேண்டாம். வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறார்.

-------------------------- முதலில் இவர் நாகரீகமாக உரையாட கற்றுக் கொள்ளட்டும். யாழ்களத்தில் அறிமுகமான போதே புலம் பெயர் புண்ணாக்குகள் என்று ஒரு சமூகத்தை ஒரு முறைக்கு பலமுறை கேலி பண்ணியவர் இவர். சில நாட்களுக்கு முன்பு கூட புலம் பெயர் வாலுகள் என்று எழுதியவர் இவர்.

Edited by நிழலி
யாழ் உறுப்பினர்களுக்கிடையில் மட்டும் தெரிய வேண்டிய விடயம்; பொது அரங்கில் தவிர்க்கவும்

அனந்தி அரசியலை விடுங்கம்மா, உங்களுக்கு அரசியல் அறிவே இல்லைங்க. மகிந்த மாத்தையாட்டை பணம் வாங்கினியளா ஓட்டுப் போட வேண்டாம் எண்டு பரப்புரை செய்ய.

  • கருத்துக்கள உறவுகள்

போராடுகிறார் என்றால் அவரது தவறுகள் சுட்டிக்காட்டப்படக்கூடாதா? அவர் விமர்சனத்திற்கு அப்பால் பட்டவரா?

மேலே இணைக்கப்பட்ட எதிரி என்கின்ற ஊடகத்தின் இணைப்பில் அவர் போராடச்சென்று மரநிழலின்கீழ் தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. போராடப்புறப்பட்டவர் கஸ்டங்கள் வரும் என்று எதிர்பாராமல் வி.ஐ.பி மரியாதை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டா போராடச்சென்றார்?

2009 காலத்தில் குஞ்சு குறுமாண், சிறுவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் கடும்குளிரில் காலை, மாலை, இரவென தெருக்களில் நின்று போராடினார்களே. அப்போது எத்தனை அவதிப்பட்டார்கள். மரநிழலின் கீழ் ஒரு நாள் தங்குவது அதைவிட கடினமானதா?

புதிய அரசாங்கம் ஏதும் உருப்படியாய் செய்து கிழிக்குமா என்பது வேறுவிடயம். ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து நாளைந்து நாட்களிலேயே பெரியதோர் மாற்றத்தை அனந்தி சசிதரன் எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? 

அவர்  சொல்லவருவது

ஆட்சி  மாறியிருக்கு

ஆனால் புலநாய்வாளர்களோ

இராணுவமோ

காவல்த்துறையோ சிறிதும் மாறவில்லை

ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கே

அதுவும் பாப்பரசரைச்சந்திக்கவே இது தான் நிலை என்றால்...??

என்பது தான்............ :(

இனி  நீங்கள் இவ்வாறு தான் எழுதிக்கொண்டிருப்பீர்கள்

மைத்திரியின் அனைத்து கொடுமைகளுக்கும் வக்காலத்து வாங்குவீர்கள்

இது எதிர்பார்க்கப்பட்டது தான்....

தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

பல அமைப்புகள் தீவிர அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் தமிழ் மக்கள் அரவணைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே அதற்கான செயற்பாடு அவர்களிடமிருந்தது, அவர்கள் இல்லாத இடத்தை மிதவாத அரசியலில் த தே கூ சிறப்பாக செயற்படுகிறது என்றே நினைக்கிறேன், பல தமிழ் அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர்கள் செயற்பட்டமை உள்ளமையாலே இன்னிலை நீடிக்கிறது,சிலர் கூறலாம் இது விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி அதனால் தான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது இக்கலத்திற்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன், அனந்தி கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது, ஆனால் இந்த கருத்தை அனந்திக்கெதிராக சொல்வதற்கு எனக்கு எந்த தராதரமும் இல்லை. அவர் மிக நீண்டகாலமாக மக்கள் விடுதலைக்கு துடிப்பான முறையில் பங்களிப்பு செய்தவர் அதனால் இந்த அரசியல் மாற்றம் புரிந்து கொள்ள அவருக்கு சில காலம் எடுக்கும். சம்பந்தர் பொது அரங்கில் பேசுவதும் கட்சிக்குள் எதேச்சாதிகாரமாக செயற்படுவது போல் தெரிந்தாலும்,அவர் தனது வரலாற்றுக்கடமையை உணர்ந்தே செயற்படுகின்றார் என்றே தோன்றுகிறது,தமிழ் மக்களின் விடிவிற்காக அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதமின்றி ஒரே அணியாக செயற்பட முன்வர வேண்டும் அதன் முதன் அங்கமாக யாழ் கள அன்பர்கள் அரோக்கியமான வகையில் கருத்தாட வேண்டும்.

Edited by vasee

பல அமைப்புகள் தீவிர ...... அரோக்கியமான வகையில் கருத்தாட வேண்டும்.

வசி நியாயமான கருத்துக்கள் - நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அக்காவிடம் வாகனம் இருக்கிறதா?...கொஞ்ச காலம் சைக்கிளிலில் போனா

  • கருத்துக்கள உறவுகள்

அவா கைதடிச்சந்தி வரைக்கும் வாகனத்தில் போய், அங்கால அரை கிலோமீட்டர் சைக்கிள் ஓடுறவ.

மக்களுக்குப் பூச்சுத்துறாவாம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்  சொல்லவருவது

ஆட்சி  மாறியிருக்கு

ஆனால் புலநாய்வாளர்களோ

இராணுவமோ

காவல்த்துறையோ சிறிதும் மாறவில்லை

ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கே

அதுவும் பாப்பரசரைச்சந்திக்கவே இது தான் நிலை என்றால்...??

என்பது தான்............ :(

இனி  நீங்கள் இவ்வாறு தான் எழுதிக்கொண்டிருப்பீர்கள்

மைத்திரியின் அனைத்து கொடுமைகளுக்கும் வக்காலத்து வாங்குவீர்கள்

இது எதிர்பார்க்கப்பட்டது தான்....

தொடருங்கள்..

புலநாய்வாளர்கள், காவல்துறை ஆட்சி மாற்றத்தின் சுமார் நான்கைந்து நாட்களில் எப்படி மாறியிருக்க வேண்டும் என்று அனந்தி அவர்கள் நினைக்கின்றார்? பரிசுத்த பாப்பரசர் வரும்போது நாடுமுழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20,000 பொலிசார் பணியில் அமர்த்தப்பட்டிருக்ககூடாதா? 3,000 பொலிசார் மடுப்பகுதியில் பணியில் அமர்த்திருக்கப்படக்கூடாதா? பாப்பரசரின் பாதுகாப்பை கண்காணிக்க புலநாய்வாளர்கள் மடுப்பகுதியில் விசாரணைகள் மேற்கொண்டிருக்கக்கூடாதா?

உலகிலுள்ளதொரு சிறிய தீவில் மாகாண சபை உறுப்பினராய் தேர்வு செய்யப்பட்ட அனந்தி அவர்களே பாப்பரசரின் வருகையின் போது தனக்கு ஏற்பட்ட சிறிய அசெளகரியங்களுக்கு (அவரது எதேச்சையான நடவடிக்கைகளினால்) தனது பதவியைக்காட்டி  இவ்வளவு பீலா காட்டினால், உலகெங்கும் பலகோடி மக்களினால் புனிதராக போற்றிக் கொண்டாடப்படும், உலகின் அதி  முக்கிய பிரமுகர்களில் ஒருவரான பரிசுத்த பாப்பரசரின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவரது பாதுகாப்பை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையைச்செய்வதில் தவறு ஏது?

தாயகத்தை நேசிக்கின்றேன் என்று கண்மூடித்தனமாக தலையாட்டி பழகாதீர்கள். இது உங்களுக்கும் கூடாது, தனது சிறிய தவறுகளைத்திருத்தி எதிர்காலத்தில் பல சேவைகளை செய்யக்கூடிய அனந்தி சசிதரன் போன்றதொரு வளர்ந்துவரும் மக்கள் பிரதிநிதிக்கும் கூடாது. இப்போது சிறிய தவறுகள் திருத்தப்படாவிட்டால் முள்ளிவாய்க்கால் முடிவுபோன்று எக்கச்சக்கமான பிரச்சனையில் சிக்கும்போது அழுது, புலம்பி ஆகப்போவது ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல அமைப்புகள் தீவிர அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் தமிழ் மக்கள் அரவணைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே அதற்கான செயற்பாடு அவர்களிடமிருந்தது, அவர்கள் இல்லாத இடத்தை மிதவாத அரசியலில் த தே கூ சிறப்பாக செயற்படுகிறது என்றே நினைக்கிறேன், பல தமிழ் அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவர்கள் செயற்பட்டமை உள்ளமையாலே இன்னிலை நீடிக்கிறது,சிலர் கூறலாம் இது விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி அதனால் தான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது இக்கலத்திற்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன், அனந்தி கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது, ஆனால் இந்த கருத்தை அனந்திக்கெதிராக சொல்வதற்கு எனக்கு எந்த தராதரமும் இல்லை. அவர் மிக நீண்டகாலமாக மக்கள் விடுதலைக்கு துடிப்பான முறையில் பங்களிப்பு செய்தவர் அதனால் இந்த அரசியல் மாற்றம் புரிந்து கொள்ள அவருக்கு சில காலம் எடுக்கும். சம்பந்தர் பொது அரங்கில் பேசுவதும் கட்சிக்குள் எதேச்சாதிகாரமாக செயற்படுவது போல் தெரிந்தாலும்,அவர் தனது வரலாற்றுக்கடமையை உணர்ந்தே செயற்படுகின்றார் என்றே தோன்றுகிறது,தமிழ் மக்களின் விடிவிற்காக அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதமின்றி ஒரே அணியாக செயற்பட முன்வர வேண்டும் அதன் முதன் அங்கமாக யாழ் கள அன்பர்கள் அரோக்கியமான வகையில் கருத்தாட வேண்டும்.

உங்களைப்போல் பலர் சேர்ந்து அனந்தி சசிதரனை பப்பாவில் ஏற்றிவிட்டீர்கள். உங்களுக்கு அனந்தி சசிதரன் தவறான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றார் என்று தெரிகின்றது, ஆனால் அதேசமயம் அவரது அணுகுமுறைக்கெதிராக கருத்து கூறுவதற்கு உங்களுக்கு ஒரு தராதரமும் இல்லை என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் இதற்கு ஒரு பரிகாரம் செய்யலாம். அனந்தி சசிதரனுக்கு ஒரு கோயில் கட்டி பூசை செய்து கும்பிடலாம். ஓம், கிரீம், அனந்தி சசிதரன் சுவாகா நமக! நம ஓம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவா கைதடிச்சந்தி வரைக்கும் வாகனத்தில் போய், அங்கால அரை கிலோமீட்டர் சைக்கிள் ஓடுறவ.

மக்களுக்குப் பூச்சுத்துறாவாம் :)

அனந்தி கைதடிச்சசந்தி வரை மட்டும் இல்லை, நல்லூர் கந்தன் கோயில்வரை வாகனத்தில் போய், அதன் பிறகு நல்லூர் கோயிலின் உள்வீதியிலும், வெளிவீதியிலும் மூன்று தடவைகள் உருண்டு பிரதிட்டை செய்துவிட்டு தனது அலுவலகத்திற்கு செல்லட்டும். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

சைக்கிளில் ஓடிச்செல்லட்டும், சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்லட்டும், சைக்கிளை தலையில் வைத்துக்கொண்டு நடந்து செல்லட்டும். இவை எல்லாம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தெரிவுகள். இதை வைத்து அவர் மக்களிற்கு பூச்சுத்திறார், சரம் கட்டுறார் என்று ஏன் நையாண்டி?

ஒரு நிமிடமாயினும் அந்த நேரத்தை வாகனத்தில் செல்லாது துவிச்சக்கரவண்டியில் சென்றால் அது சுற்றுச்சூழலுக்கு நல்லது. மேற்கத்தைய நாடுகளில் சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கு இப்படியான காரியங்களில் அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஈடுபடுவது வழமை. இதையே அனந்தி செய்தால் அது ஏன் உங்களுக்கு சுத்துமாத்து போல் தெரிகின்றது. வாகனத்தில் போவதற்கு அவருக்கு உரிமை இல்லையா? 

விமர்சனங்கள் தேவை. அவை தவறுகளை திருத்துவதற்கு உதவுவனவாயும், ஆரோக்கியமானவையாகவும் இருக்கவேண்டும். வெறும் நையாண்டி மூலம் எம்மை நாமே தரமிறக்கி கிளுகிளுப்படைவது தவிர வேறு ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அக்காவிடம் வாகனம் இருக்கிறதா?...கொஞ்ச காலம் சைக்கிளிலில் போனா

யாழ்பாணத்திலிருந்து மன்னாருக்கு சைக்கிளில் போறதா?

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி,

சைக்கிளில் போனால் போகட்டும் ஆனால் அதை ஆள் வச்சு படம் எடுத்து விளம்பரம் செய்வானே?

நான் மட்டும் உங்களில் ஒருத்தி சைக்கிளில் போறேன் என்ற பூச்சுத்தல் தானே இது?

வாகனத்தில் போறதில் ஒரு தப்புமில்லை. ஏன் கைதடிச் சந்தில இறங்கி உறவினர் கொண்டு வரும் சைக்கிளில் ஓடி மாகணசபை வரை போக வேண்டும்?

இதுதான் பம்மாத்து. சுற்றுசூழல் பற்றி அனந்தியே சொல்லவில்லை, நீங்கள்தான் புதுக்காரணம் சொல்கிறீர்கள்.

ஒருக்கா போனடிச்சு கேட்டுப்பாருங்கோ

அனந்தி அப்படி செய்தார் என்பதற்கு ஆதாரம் இந்த திரியில் நீங்கள் முலம் சொன்ன பொய். தான் சொன்ன பொய்யையே தனக்கு ஆதாரமாக கூறும் விந்தை மனிதர் நீங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.