Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கடவுச் சீட்டுடையவர்கள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது.

பாதுகாப்பு அமைச்சிடம் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலை காரணமாக இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடிய அவசியம் கிடையாது என பாதுகாப:பு அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடையவர்கள் வடக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு பொருட்கள் எடுத்துச் செல்வது தொடர்பில் நிலவி வந்த கட்டுப்பாடுகளையும் புதிய அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

வெடிபொருட்கள், இராணுவச் சீருடைக்கு நிகரான உடுதுணிகள், ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களும் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே வடக்கிற்கும் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115609/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்துவிட்டு நம்ம சம்மந்த குஞ்சுகள் ஆகா பாலும் தேனும் ஓடுது என இன்னைக்கு இரவு புல்லா அடிபடபோகுதுகள் கடவுளே  :icon_mrgreen:நல் அறிவை குடுக்கமாட்டாயா அவர்கள்க்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் டக்கி இருந்திருந்தா ரத்தம் ஆறா ஓடியிருக்கும் இப்ப அப்படி இல்லையே எனும் தேவானந்த பக்த கேடிகள் குமுறல் கேட்கிறது. கடவுளே வந்தாலும் இவர்க்கு நல்ல புத்தியை கொடுக்க முடியாது :)

வெளிநாட்டு பிரஜைகளுக்கு யாழ்ப்பாணம் செல்ல தடையை மகிந்த அரசு கொண்டுவந்த போது அதற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியவர் இந்த கோசான். யாழ் கள உறவுகள் அந்த தடை தவறானது என்று கருத்து எழுதிய  போது தடைக்கு ஆதரவாக மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கிய அதே கோசான் இப்போது அந்த தடையை மைத்திரி நீக்கிய போது  தடை  நீக்கத்தை ஆதரித்து மைத்திரியை புகழ்கிறார். அப்படியானால் இவரது கொள்கை என்ன? எஜமான் என்ன செய்தாலும் ஆதரவு தான். தற்போது இவர்களது எஜமான் மைத்திரி. நாளையே மீண்டும் மகிந்த வந்து தடையை கொண்டுவந்தால் அதையும் இவர்கள் ஆதரிப்பார்கள்.  இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

goshan_che Posted 01 November 2014 - 09:47 PM

18 வயதுக்கு மேற்ப்பட்ட எந்த இனத்தை சேர்ந்த வெளிநாட்டில் பிறந்தவையும் அனுமதி எடுக்கோணும் அண்ணை. உங்கள் பிள்ளைக்கும், பாட்டி தாத்தா இலங்கையில் ஓய்வு வாழ்வுக்கு சென்றிருக்கும் வெள்ளைத்தோலர்களின் பேரப்பிள்ளைகளும் சட்டத்தின் முன் சமமே.

இதெல்லாம் அற்ப லாபங்களுக்காக பிறந்த நாட்டின் பிரஜா உரிமையை தூக்கி எறியும் போது யோசிச்சிருக்கணும்.

goshan_che Posted 01 November 2014 - 02:17 AM

கனடாவுக்கு, அமெரிக்காவுக்கு, மலேசியாவுக்கு விசா "கிடைத்தால்" -போகலாம்.

இங்கதான் இருக்கு சங்கதி. இவர்கள் தமக்கு வேண்டப்படாத வெளிநாட்டவருக்கு விசாவே கொடுக்க மாட்டாங்கள். ஒரு கம்யூனிஸ்ட் அமெரிகாவுக்குப் போக முடியுமா?

கூட்டமைப்பு சுரேஸ்தான் கனடாவுக்குப் போக முடியுமா?

ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத முல்லா போகமுடியுமா? முடியாது.

இலங்கை அப்படி செய்யாமல் கிட்டத்தட்ட எல்லோர்க்கும் ET கொடுக்கிறது. தமது நாட்டுக்கு ஆப்படிப்பாவர்களை மட்டும் வடக்குக்கு போகவிடாமல் தடுக்கிறது.

goshan_chePosted 01 November 2014 - 01:38 AM

இலங்கையில் பிறந்த தற்போதைய வெளிநாட்டு பிரஜைகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. இந்த நடைமுறை வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கே.

இந்தியாவுக்கு வீசா எடுத்தால், கஸ்மீர், அந்தமான், லட்சதீவு மணிப்பூர் உட்ப கிட்டத்தட்ட 10 மாநிலங்களுக்கு போக முடியாது.
சீனாவில் சீனர்களே மாகாணம் விட்டு மாகாணம் போக அனுமதி எடுக்கணும்.

இவ்வளவு ஏன் ஜேர்மனியிலே தஞ்சம் கோரியவர்கள் கவுன்சில் விட்டு கவுன்சில் போக முடியாது.

இதை சொன்னா நம்மளை கைக்கூலி என்பீர்கள்.

இவ்வளவும் இப்போது மகிந்த அடக்குமுறையாளன் என்று பிரசங்கம் வைக்கும் கோசான் எழுதியது

அது வேற வா

 கோசான்     அது வேற வாய் இது நாற வாய்

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரியில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முற்றாக வாசித்து உணரும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பது கண்கூடு.

அங்கே ஏன் திடேரென்று இப்படி ஒரு தடை எனும் போது - நீங்கள் பலர் உங்கள் வழமையான இனவாத பல்லவியை பாடினீர்கள். இல்லை இதில் வேறு ஏதோ காரணம் இருக்கு என்றும், இப்படி தடை வேறும் பலநாடுகளிலும் இருக்கு என்றும் சுப்பனுக்கும் குப்பனுக்கும் எடுத்துக்காட்ட சொன்ன கருத்துகள் அவை.

அதை புரியாமல் - capacity குரைவோ தெரியவில்லை - எதோ நான் மகிந்த தடையை கொண்டு வந்தது நல்லது எண்ட மாரி எழுதினேன் எண்டு புசத்துகிறீர்கள்.

உங்கள் எல்லோரையும் விட, என் முதல் நாள்தொட்டு, மகிந்த மீதும், டக்கி மீதும், கருணா மீதும், ஏனைய இனவாதிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை வைப்பவன், வைத்தவன் நான்.

முட்டாள்களுடன் விவாதிப்பதில் ஒரு பலனுமில்லை

அவர்கள் உன்னை தம்நிலைக்கு கொண்டுவந்து, பின் சுலபாமக வென்று விடுவார்கள் எனும் ஆங்கிலப் பழமொழி சரியாத்தானிருக்கு.

தவிரவும் காலப்போக்கில் அந்த தடைக்கான உண்மை காரணம் ( போர்குற்றவிசாரணை ஆதரம் தேடலை முடக்கல்)என்னெ என்று வேறு ஒரு திரியில் எழுதியுள்ளேன். வேலை மினக்கெட்டு, அரவரிப்பிள்ளையள் போல, கோசான் அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார் எண்டு, பொன்னான நேரத்தை மண்ணாக்கும் பேர்வழிகள் அதையும் தேடிப்பார்க்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வீட்டுக்குப் போவதற்கு ஒருவர் தடை விதிக்கின்றார்.
இன்னொருவர் போகலாம் தடை இல்லை என்கின்றார்.
நாளை இன்னுமொருவர் இல்லை நீங்கள் போக முடியாது எனலாம்.
இதற்கெல்லாம் புழகாங்கிதம் அடைய முடியாது.

என்னுடைய வீட்டுக்குப் போவதற்கு ஒருவர் தடை விதிக்கின்றார்.

இன்னொருவர் போகலாம் தடை இல்லை என்கின்றார்.

நாளை இன்னுமொருவர் இல்லை நீங்கள் போக முடியாது எனலாம்.

இதற்கெல்லாம் புழகாங்கிதம் அடைய முடியாது.

சரியா சொன்னிங்கள் வாத்தியார்.. என்னுடைய வீட்டுக்கு நான் போகவேணும் என நினைத்தால் இந்த தடை ஒரு காரணமாக இருக்காது.

தொன்னூறுகளில் இருந்திராத தடைகளா? 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் புளங்காகிதம் யாரும் அடையவில்லை. இந்த மாதம் 8 திகதியிலிருந்ததை விட இது ஒரு முன்னேற்ற கரமான நிலை என்று நிம்மதி அடையலாம். அவ்வளவே.

தவிர எப்போதும் சிங்களவன் அடிக்கிறான் என்று எதிர்மறையாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், தெற்கில் இருந்து வரும் நல்ல சமிக்ஞைகளை ஆதரித்து மேலும் ஊக்குவிப்பதே, நாம் எதிர்பார்க்கும் தீர்வை அடையும் வழி.

எதற்கெடுத்தலும் உங்களை உயர் நிலையில் வைத்து கொண்டு மற்றவர்களை குப்பன் சுப்பன் என்று மட்டம் தட்டுவது உங்களை பாணி. உங்கள் இரட்டை வேடத்த்தை மற்றவர்கள் மனிதர்கள் அறிவார்கள்.உறவுகளான அந்த மனிதர்களுக்காக உங்கள் பழைய பதிவை சுட்டிகாட்டினேன். எப்படியும் உங்களை விட்டுகொடுக்காமல் நீங்கள் எழுதவது சகஜம் தானே. அன்று திரி முழுவதும் அதற்கு வக்காலத்து வாங்கிவிட்டு அதை மறுத்து வேதாந்தம் பேசி மழுப்புகிறீர்கள். ஆனால் வாசகர்கள் அறிவார்கள் இதை.

பச்சோந்திகளுடன் விவாதம் செய்வது அழகல்ல என்பது சரிதான்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இதில் புளங்காகிதம் யாரும் அடையவில்லை. இந்த மாதம் 8 திகதியிலிருந்ததை விட இது ஒரு முன்னேற்ற கரமான நிலை என்று நிம்மதி அடையலாம். அவ்வளவே.

தவிர எப்போதும் சிங்களவன் அடிக்கிறான் என்று எதிர்மறையாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், தெற்கில் இருந்து வரும் நல்ல சமிக்ஞைகளை ஆதரித்து மேலும் ஊக்குவிப்பதே, நாம் எதிர்பார்க்கும் தீர்வை அடையும் வழி.

தெற்கிலிருந்து வரும் சமிக்ஞை வடக்கே செல்லவில்லை.

அது மேற்கிற்க்குக் காட்டும் அவலக்குரல் போல இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கே பாதிப்பின் உண்மை முகம்  தெரியும்.

சரியா சொன்னிங்கள் வாத்தியார்.. என்னுடைய வீட்டுக்கு நான் போகவேணும் என நினைத்தால் இந்த தடை ஒரு காரணமாக இருக்காது.

தொன்னூறுகளில் இருந்திராத தடைகளா? 

மிஸ்ரர் சூறாவளி தொண்ணூறுகளில் யுத்த காலத்தில் இலங்கை அரசும், விடுதலை புலிகளும் போட்ட தடையை பற்றி இங்கு யாரும் பேசவில்லை. யுத்தம் முடி்ந்து  ஐந்து வருடத்தின் பின்னர் மகிந்த அரசால் போடபட்டு ஜனநாயக விரோத தடையை பற்றி தான் பேசுகிறோம். மகிந்தவின் தடைக்கு வக்காலத்து வாங்கியவர்களே தடை நீக்கம் தொடர்பாக புளகாங்கிதம் அடைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

நான் உயர்வுசிக்கலில் எழுதுகிறேன் என்கிறீர்கள். ஆனால் நீங்களோ எங்கே யாரை நான் குப்பன் சுப்பன் என்று சொன்னாலும், ஓடிவந்து தொப்பியை போட்டுக்கொண்டு, வறுத்தெடுக்கிறீர்கள். இது உங்களின் தாழ்வுசிக்கலாய் இருக்குமோ என்று ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை?

நான் முதலே சொன்னபடி, நான் சொல்லும் விடயங்கள் பல ஒண்டுமே உங்களுக்கு பிடிபடவில்லை என்பது உங்கள் பதில்களை பார்க்க அப்பட்டமாக புரிகிறது. நானும் உங்களை அதிகம் நொந்து கொள்வதில்லை. எல்லாம் எல்லாருக்கும் விளங்கும் நெறி எதிர்பார்க்க முடியாதுதானே.

நீங்களாக என்னுடன் பேசிப்பயனில்லை எனும் முடிவுக்கு வந்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் என் கருத்துகளுக்கு இடையே பாய்ந்து குழப்ங்காசி வேலை செய்வது, அநாகரீகமாக திட்டுவது இவற்றை செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னிங்கள் வாத்தியார்.. என்னுடைய வீட்டுக்கு நான் போகவேணும் என நினைத்தால் இந்த தடை ஒரு காரணமாக இருக்காது.

தொன்னூறுகளில் இருந்திராத தடைகளா? 

ஒரு நாட்டினூடாக இன்னொரு நாட்டுக்குச் செல்வதற்கும் ( நான் வன்னியை இலங்கை இழந்திருந்த காலத்தைப்பற்றிச் சொல்கின்றேன்)

ஒரு நாட்டில் அவர் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது சூறாவளி :)

ரிங்கோ,

நான் உயர்வுசிக்கலில் எழுதுகிறேன் என்கிறீர்கள். ஆனால் நீங்களோ எங்கே யாரை நான் குப்பன் சுப்பன் என்று சொன்னாலும், ஓடிவந்து தொப்பியை போட்டுக்கொண்டு, வறுத்தெடுக்கிறீர்கள். இது உங்களின் தாழ்வுசிக்கலாய் இருக்குமோ என்று ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை?

நான் முதலே சொன்னபடி, நான் சொல்லும் விடயங்கள் பல ஒண்டுமே உங்களுக்கு பிடிபடவில்லை என்பது உங்கள் பதில்களை பார்க்க அப்பட்டமாக புரிகிறது. நானும் உங்களை அதிகம் நொந்து கொள்வதில்லை. எல்லாம் எல்லாருக்கும் விளங்கும் நெறி எதிர்பார்க்க முடியாதுதானே.

நீங்களாக என்னுடன் பேசிப்பயனில்லை எனும் முடிவுக்கு வந்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் என் கருத்துகளுக்கு இடையே பாய்ந்து குழப்ங்காசி வேலை செய்வது, அநாகரீகமாக திட்டுவது இவற்றை செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

நீங்கள் சொல்லும் விடயங்கள் எனக்கு நன்றாக விளங்கியுள்ளது. அதனால் தான் கருத்து எழுதுகிறேன். நீங்கள் எழுதுவது கருத்து அல்ல.  அநாகரீக திட்டல். எப்போது பாரத்தாலும் புலம்பெயர் தமிழ் மக்களை பாரத்து சேறடிக்கும் அநாகரிகாமாக திட்டும் உங்களுக்கு என்ன அவ்வாறு கூற உரிமை இல்லை. நீங்களும் அநாகரிக கருத்துகளை தவிர்த்தால் நல்லது. உங்கள் பழைய பதிவுகளை தந்தும் அதற்கு சரியான பதில் தராமல் மழுப்பல் பதில் நீங்கள் கொடுத்தபோது வாசகர்கள் உங்களை விளங்கி கொண்டிருப்பார்கள்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ய்யா கூத்தாகிடக்கு.

புலம்பெயர் சமூகத்தின் குறைகளை அப்ப யார் திட்டலாம்? நீங்க மட்டும்தானோ?

புலம்பெயர் சமூகத்தில் இல்லாத ஒன்றையும் நான் சொல்லவில்லை. அதை நக்கலடிப்பது என் பேச்சுரிமை. ஏனெண்டால் நானும் அதில் ஒருவன். அதில் தலியிட நீங்கள் யார்? புலம்பெயர் தேசியத்தலைவரா? தலிபான் ரேஞ்சில அடாவடி பண்ணுறீங்களே.

ஒரு நாட்டினூடாக இன்னொரு நாட்டுக்குச் செல்வதற்கும் ( நான் வன்னியை இலங்கை இழந்திருந்த காலத்தைப்பற்றிச் சொல்கின்றேன்)

ஒரு நாட்டில் அவர் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது சூறாவளி :)

வித்தியாசம் தெரிந்துவிட்டது... 

இருந்தாலும் போகவேணும் என்று நினைத்தால் தடை ஒரு தடையாக இராது. 

Edited by Sooravali

இதென்ய்யா கூத்தாகிடக்கு.

புலம்பெயர் சமூகத்தின் குறைகளை அப்ப யார் திட்டலாம்? நீங்க மட்டும்தானோ?

புலம்பெயர் சமூகத்தில் இல்லாத ஒன்றையும் நான் சொல்லவில்லை. அதை நக்கலடிப்பது என் பேச்சுரிமை. ஏனெண்டால் நானும் அதில் ஒருவன். அதில் தலியிட நீங்கள் யார்? புலம்பெயர் தேசியத்தலைவரா? தலிபான் ரேஞ்சில அடாவடி பண்ணுறீங்களே.

மகிந்த இருக்கும்வரை மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கிவிட்டு இப்ப மைத்திரிக்கு வக்காலத்து வாங்கும் உங்களை போல எவரும் இருக்க முடியாது. இந்த விடயத்தில் டக்கியை வென்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள். புலம் பெயர் மக்களின் குறைகளை நீங்களை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் யாராவது சிங்கள தேசத்தை அல்லது சிங்கள ஆளும் அரசியல்வாதியை விமர்சித்தவுடன் மட்டும் ஓடி வந்து புலம்பெயர் தமிழரை நீங்கள் திட்டுவது ஏன்? புலம் பெயர் மக்களின் மீதான அக்கறையில் நீங்களை விமர்சிப்பதில்லை. உங்க எஜமான் சிங்கள அரசியல்வாதி அல்லது ஆளும் வர்க்கத்திற்கு (அது மகிந்தவாய் இருக்காலாம் அல்லது மைத்திரியாக இருக்கலாம்) வக்காலத்து வாங்கும் நோக்குடன் புலம் பெயர் தமிழ் மக்களை இழிவு படுத்துவதை தான் நான் குறை கூறுகிறேன்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி,

நான் மகிந்தவுக்கு வக்காலத்து மட்டுமா வாங்கினேன், அக்காலத்து, நிகழ்காலத்து, எதிர்காலத்த்து என்று எத்தனை காலத்து வாங்கியுள்ளேன்.

வாங்கினவக்காலத்தை எங்கே வைத்துப் பராமரிப்பது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்.

இப்போ மகிந்த மாத்தயா எலும்புத் தூண்டும் போடுறதில்லை. சாப்பாட்டுக்கு என்ன செய்வேனோ?

பேசாமா கள்ள மட்டை ஏதாச்சும் போட்டுப் பிழைக்க வேண்டியதுதான்.

முதல்ல ஒண்ட தெளிவா சொல்லுங்க என் எஜமான் மைத்திரியா மகிந்தவா, ரணிலா?

ஒரு சம்பளத்துக்கு 3 பேருக்கு வேலை செய்ய முடியாது.

முன்பு நான் ஒரு மலையாளி என்றும், தமிழ் படித்த சிங்களவர் என்றும், ரோ ஏஜெண்ட் எனவும் நீங்கள் உங்கள் மேலான அபிப்பிராயத்தை சொல்லி இருந்ததாய் நியாபகம். அதெல்லாம் இப்ப அவுட் ஆப் பேசனா?

Edited by goshan_che

அது சரி,

நான் மகிந்தவுக்கு வக்காலத்து மட்டுமா வாங்கினேன், அக்காலத்து, நிகழ்காலத்து, எதிர்காலத்த்து என்று எத்தனை காலத்து வாங்கியுள்ளேன்.

வாங்கினவக்காலத்தை எங்கே வைத்துப் பராமரிப்பது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்.

இப்போ மகிந்த மாத்தயா எலும்புத் தூண்டும் போடுறதில்லை. சாப்பாட்டுக்கு என்ன செய்வேனோ?

பேசாமா கள்ள மட்டை ஏதாச்சும் போட்டுப் பிழைக்க வேண்டியதுதான்.

சரி அப்படியே செய்யுங்க.இப்ப தான் உங்கட உண்மையான ரேஞ்சுக்கு வந்திருக்கீங்க. நல்லவிடயம்

எனக்கு கனக்க வேலை இப்ப குறைந்து போச்சு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்ற நிலை மாறி.மைத்திரி எதிர்ப்பு மைத்திரி ஆதரவு என்ட படம் ஓடுது. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்ற நிலை மாறி.மைத்திரி எதிர்ப்பு மைத்திரி ஆதரவு என்ட படம் ஓடுது. :rolleyes::lol:

கிளைமாக்ஸ் என்ன என்று தெரியவில்லை....புலி ஆதரவு, மகிந்தா அணியா?புலி எதிர்ப்பு, மகிந்தா அணியா?:D

வெளிநாட்டு பிரஜைகள் மீதான மகிந்த அரசின் அடாவடித்தனமான தடையை ஆதரித்து அதற்கு வக்காலத்து வாங்க படாமல் பாடுபட்ட கோசான் இப்பொ்து போடும் இரட்டை வேடம் அம்பலமானாதால் மழுப்பலான பதில்களை வாசகர் கள் பார்திருப்பீர்கள். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இது போல் பல திரிகளில் மகிந்த கோத்தா கும்பல்களின் அடாவடிக்கு நியாயம் கற்பித்தவர் என்பதை வாசகர்களுக்கு ஞாகப்ப்படுத்துகிறேன். எல்லாத்திற்கும் ஒரு சப்பைக்கட்டு காரணமும் கூறி புது வியாக்கியானமும் தருவார்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தாடலாரான கோசான் இப்ப அர்யுன் அண்ணனின் இடத்துக்கு இறங்குகிறார்.

Edited by மலையான்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தலைவர் கலைஞரும் யாழ்க்களத்தின் உறுப்பினரா??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.