Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடுவிழாவுக்கு தயாராகிறது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம்

Featured Replies

mattala%20rajapksa%20airport.jpg

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்‌ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ராஜபக்‌ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பலாலியில் வைக்க முடியாதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பலாலியில் வைக்க முடியாதே :lol:

நல்ல கேள்வி

சிங்களம் மனதளவில் மாறியிருந்தால் இதற்கு நல்லவிடை கிடைக்கும்..

ஆனால்

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை

உன்க்கு 2 கண்ணும் போகணும் என்பது இன்றவரை யதார்த்தமாக இருக்கிறது.. :(  :( 

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவைகள் இரத்து

மத்தலை விமான நிலையத்திலிருந்து முன்னெடுத்த அனைத்து விமான சேவைகளையும் ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. செலவு குறைப்பை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன் அறிவித்துள்ளது. -

http://www.tamilmirror.lk/137796#sthash.sX46wLbp.dpuf

சாதாரணமான சூழலில் பலாலியில் நிச்சயமாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமையும். அது நிச்சயம் இலாபகரமாக அமையும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதாரணமான சூழலில் பலாலியில் நிச்சயமாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமையும். அது நிச்சயம் இலாபகரமாக அமையும். 

சூறாவளி,

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இது தொடர்பாக முதல்வர் விக்கினேஸ்வரனுடன் சில தடவைகள் பேசினேன். இதில் எப்படி வெற்றியாளராக வரலாம் என்பதையும் விளக்கினேன். அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், பலாலியில் central agency-களின் (இலங்கை அரசு) பங்களிப்பு முக்கியமாக இருக்கும் என்பதால், அதை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார்.

பலாலியில் 5th freedom air traffic rights கொடுக்கப்பட்டால், சர்வதேச விமான ட்ராபிக் பிய்த்துக்கொண்டு ஓடும். 

//அதை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார்.//

போற போக்கைப் பார்த்தால் மைத்திரி ஏற்றூக் கொண்டாலும் சம்பந்தன் ஏற்றூக் கொள்ளா மாட்டார் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அதை சம்பந்தன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார்.//

போற போக்கைப் பார்த்தால் மைத்திரி ஏற்றூக் கொண்டாலும் சம்பந்தன் ஏற்றூக் கொள்ளா மாட்டார் போல.

அவர்கள் அதை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படித்தான் இங்கே அரசியல் செய்யலாம். என்றோ ஒரு நாள் பலாலி சர்வதேச விமான நிலையம் வரும். விக்கினேஸ்வரன் முதல்வராக இருக்கும்போது சுலபம். நாளைக்கே சிவாஜிலிங்கமோ அனந்தியோ முதல்வராக வந்தால் (வருவதற்கு சான்ஸ் குறைவு) எல்லாமே கனவுதான். Back to point A.

Edited by sabesan36

அதாவது எனக்கு பிடிக்காதீர்கள் முதல்வராக வந்தால் நடக்காது என்ற பக்கா கட்சி அரசியல். திருகோண மலை tourists place அங்கும் ஒரு சர்வதேச விமான நிலைம் அமைப்பதன் மூலம் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கலாம். சம்பந்தன் ஐயா அதற்கான நடவடிக்கையை எடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து பிரச்சனனைக்கு முன் திரிச்சிக்கு போகலாமாம். பெரிசுகள் பேசிக்கொள்வர்.

லண்டன் டு பலாலி போகணும் என்பது என் நீண்ட நாள் கனவு. போனமுறை போய், பலாலி- திருமலை-மட்டு-ரத்மலானை என்று ஒரு குட்டி டூர் போட்டேன். சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலாலியில் இருந்து பிரச்சனனைக்கு முன் திரிச்சிக்கு போகலாமாம். பெரிசுகள் பேசிக்கொள்வர்.

லண்டன் டு பலாலி போகணும் என்பது என் நீண்ட நாள் கனவு. போனமுறை போய், பலாலி- திருமலை-மட்டு-ரத்மலானை என்று ஒரு குட்டி டூர் போட்டேன். சொல்லி வேலையில்லை.

ஐரோப்பா - இலங்கை விமானப் பாதையை Trans-Asian-Atlantic (TAA) என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் இருந்து கொழும்பு செல்லும் பிளைட் பிளானில் (flight plan) மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கு இடையில் உள்ள எயார் ஸ்பேஸைதான் விமானங்கள் கடந்து  செல்கின்றன.

இதுதான் இன்று வரை லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், - கொழும்பு விமானத்துக்கு நடப்பது. இவை வடக்கு மாகாணம் ஊடாகவே இலங்கைக்குள் பிரவேசிக்கின்றன.

இந்த கடக்கும் புள்ளியில் இருந்து பலாலி, வட கிழக்கே வெறும் 50 (சரியாக சொன்னால் 48) மைல் தொலைவில் உள்ளது. அதாவது ஐரோப்பா - கொழும்பு விமானப் பாதையில் இடையே உள்ளது பலாலி. 

லண்டன் - கொழும்பு விமானம் லண்டன் - பலாலி - கொழும்பு என்ற ரூட்டில் ஓடினால் விமான நிறுவனங்களுக்கு ஆதாயமே.  இது பற்றி மேலதிக விளக்கம் தேவையென்றால் என்னிடம் கேட்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி சபேசன். அடுத்தமுறை கொழும்பு போகும் போது "பலாலியடி இறக்கம்" எண்டு சொல்லிப்பார்ப்போம் :)

இதை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பலாலியில் வைக்க முடியாதே :lol:

இதேமாதிரி ஒன்று பலாலியில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....யாரும் மோடியை கேட்டுப்பார்த்தால் என்ன.....

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா - இலங்கை விமானப் பாதையை Trans-Asian-Atlantic (TAA) என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் இருந்து கொழும்பு செல்லும் பிளைட் பிளானில் (flight plan) மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கு இடையில் உள்ள எயார் ஸ்பேஸைதான் விமானங்கள் கடந்து  செல்கின்றன.

இதுதான் இன்று வரை லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், - கொழும்பு விமானத்துக்கு நடப்பது. இவை வடக்கு மாகாணம் ஊடாகவே இலங்கைக்குள் பிரவேசிக்கின்றன.

இந்த கடக்கும் புள்ளியில் இருந்து பலாலி, வட கிழக்கே வெறும் 50 (சரியாக சொன்னால் 48) மைல் தொலைவில் உள்ளது. அதாவது ஐரோப்பா - கொழும்பு விமானப் பாதையில் இடையே உள்ளது பலாலி. 

லண்டன் - கொழும்பு விமானம் லண்டன் - பலாலி - கொழும்பு என்ற ரூட்டில் ஓடினால் விமான நிறுவனங்களுக்கு ஆதாயமே.  இது பற்றி மேலதிக விளக்கம் தேவையென்றால் என்னிடம் கேட்கவும்.

இப்படியொன்றை கேள்விபட்டதே இல்லை ....
ஐரோப்பாவில் இருந்து ஆசியாவை குரோஸ் பண்ண ...... ஏன் அட்லாண்டிக் அதற்குள் வர வேண்டும்?

திருவனந்தபுரம் ஒரு மைய புள்ளியில் இருக்கிறது அதை வைத்து போவதால்தான் 
வடக்கில் சென்று கொழும்பு போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

எப்படி வந்தாலும் மேற்கில் இருந்து வடக்கு வந்துதானே போக வேண்டும் ....?

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா, அயர்லாந்து, ஐஸ்லாந்து, மற்றும் மேற்க்கு ஐரோப்பிய கரை நெடுக, சூழவும் இருப்பது அத்லாந்திக் சமுத்திரம் என்ரபடியால் பெயரில் அத்லாந்த்ஹிக்கையும் சேர்த்திருக்க கூடும்.

நன்னம்பிக்கை முனை வரை இருக்கும் அத்தனை கடல்நீர்ப்பரப்பும், மத்தியதரைக்கடல் அடங்கலாக, அத்லாந்திக் தானே?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் மற்றும் சுமந்திரனின் கடும் முயற்ச்சியால் இந்த விமான நிலையம் மூடபடுவதை நினைக்கும் போது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி..... :D

அயர்லாந்து கரையில் அட்லாண்டிக் கடல் இருப்பது உணமைதான்.
பிளேன் அயர்லாந்தில் இருந்துதானே புறபடுகிறது?
 
இந்தியன் ஓசன் இல்லாதுபோய் 
அட்லாண்டிக் இதுக்குள் ஏன் வர வேண்டும் ? 

சம்மந்தர் மற்றும் சுமந்திரனின் கடும் முயற்ச்சியால் இந்த விமான நிலையம் மூடபடுவதை நினைக்கும் போது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி..... :D

நேற்று நுவெரெலியாவில் நல்ல மழையாம்.
நல்ல வேளை சில யாழ் கருத்தாளர் காதிற்கு எட்டவில்லை என்று நினைக்கிறேன்.
 
(சுண்டல் அண்ணா நேற்று நடந்த முதலிரவுகளை என்றாலும் சம்மந்தர் தலையில் கட்டவில்லை என்று சந்தோஷ படுங்கள்) 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியொன்றை கேள்விபட்டதே இல்லை ....
ஐரோப்பாவில் இருந்து ஆசியாவை குரோஸ் பண்ண ...... ஏன் அட்லாண்டிக் அதற்குள் வர வேண்டும்?

திருவனந்தபுரம் ஒரு மைய புள்ளியில் இருக்கிறது அதை வைத்து போவதால்தான் 
வடக்கில் சென்று கொழும்பு போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

எப்படி வந்தாலும் மேற்கில் இருந்து வடக்கு வந்துதானே போக வேண்டும் ....?

Trans-Asian-Atlantic (TAA)

உதாரணமாக, YYZ - LHR - SIN ரூட் இதில் வரும். அல்லது IAH - FRA - BKK

பொதுவாக வட அமெரிக்காவில் இருந்து போடப்படும் ரூட்டைத்தான் பிளைட் பிளான் போடும்போது இப்போதும் ஐரோப்பாவில் உபயோகிக்கிறார்கள். இது PAN-AM  காலத்தில் (ஞாபகமிருக்கிறதா? 80-களில் இருந்த மெகா எயார்லைன்) தொடங்கிய நடைமுறை.

இதை ADHOC flight plan என்பார்கள்.

90-களில் சிங்கப்பூர் எயார்லைன்ஸூக்கு கொடுக்கப்பட்ட YYZ-AMS-VIE-SIN ரூட் bilateral negotiation committee-யில் கனேடிய குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். அதன்பின் எயார் கனடாவும், அப்போதைய கனேடியன் எயார்லைன்ஸூம் போர்க்கொடி தூக்கியதில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இப்போது கனடா சிங்கப்பூர் இடையே விமான சேவை கிடையாது.

இந்த ஒப்பந்தங்களில் நாம் பயன்படுத்தும் TAA என்பதுதான், இன்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிளைட் பிளானில் பயன்படுத்தப்படுகிறது.

திருவனந்தபுரம் பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரி. மிடில் ஈஸ்ட் கடந்தவுடன், இந்திய விமான நிலையங்கள்தான் இலங்கை வரை விமானப் பாதையின் நெருக்க புள்ளிகளாக உள்ளன. முன்பு சூலூர் (கோவை அருகே) கூட இருந்தது. சமீபத்தில் அதை நீக்கி விட்டார்கள். திருவனந்தபுரம் உள்ளது. 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

Trans-Asian-Atlantic (TAA)

உதாரணமாக, YYZ - LHR - SIN ரூட் இதில் வரும். அல்லது IAH - FRA - BKK

பொதுவாக வட அமெரிக்காவில் இருந்து போடப்படும் ரூட்டைத்தான் பிளைட் பிளான் போடும்போது இப்போதும் ஐரோப்பாவில் உபயோகிக்கிறார்கள். இது PAN-AM  காலத்தில் (ஞாபகமிருக்கிறதா? 80-களில் இருந்த மெகா எயார்லைன்) தொடங்கிய நடைமுறை.

இதை ADHOC flight plan என்பார்கள்.

90-களில் சிங்கப்பூர் எயார்லைன்ஸூக்கு கொடுக்கப்பட்ட YYZ-AMS-VIE-SIN ரூட் bilateral negotiation committee-யில் கனேடிய குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். அதன்பின் எயார் கனடாவும், அப்போதைய கனேடியன் எயார்லைன்ஸூம் போர்க்கொடி தூக்கியதில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இப்போது கனடா சிங்கப்பூர் இடையே விமான சேவை கிடையாது.

இந்த ஒப்பந்தங்களில் நாம் பயன்படுத்தும் TAA என்பதுதான், இன்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிளைட் பிளானில் பயன்படுத்தப்படுகிறது.

நன்றி !
இது அமெரிக்காவில் (கண்டம்) இருந்து தொடங்குகிறது எனும் விடயம் உங்கள் கருத்தில் இருக்கவில்லை 
அதனால்தான் அதற்குள் ஏன் அட்லாண்டிக் வர வேண்டும் எனும் கேள்வி எனக்கு வந்தது.
 
தவிர  Trans Atlantic Airlines  TAA   இதுதான் எனக்கு தெரிய இருக்கிறது. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி !
இது அமெரிக்காவில் (கண்டம்) இருந்து தொடங்குகிறது எனும் விடயம் உங்கள் கருத்தில் இருக்கவில்லை 
அதனால்தான் அதற்குள் ஏன் அட்லாண்டிக் வர வேண்டும் எனும் கேள்வி எனக்கு வந்தது.
 
தவிர  Trans Atlantic Airlines  TAA   இதுதான் எனக்கு தெரிய இருக்கிறது. 

அது எயார்லைன். நான் குறிப்பிட்டது, பிளைட் பிளான். நானும் முதலில் விளக்கமாக எழுதவில்லைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீளமான விமான ஓடுபாதை(3.5 கி.மீ) Code F (ஏர்பஸ் 380 போன்ற இரண்டடுக்கு பெரிய விமானங்கள் ஏறி, இறங்க) மற்றும் Code C சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற வசதிகள், நவீன விமான தரையிறக்கம் மற்றும் ஏறும் வசதிகள்( ILS, PAPI, HIAL CAT I etc, ) இவ்வளவு வசதி பெற்ற சர்வதேச விமான நிலையம், வெறும் அரசியல் காரணங்களுக்காக மூடப்படுகிறதா இல்லை பொருளாதாரத்தால் பின் தங்கிய பகுதியாக இருந்து போதிய பயணிகள் போக்குவரத்து இல்லாமல் நஷ்டத்தில் இயங்குகிறதா என தெரியவில்லை! :o

வனாந்திர சுற்றுப்புற சூழல் பாதிப்பால் வெளியேறும் பறவைகளின் அளவற்ற கோபத்தாலும்(??) இவ்விமான நிலையம் பாதிக்கபட்டதாக படித்த ஞாபகம் உள்ளது.

எது எப்படி இருப்பினும் இம்மாதியான நவீன வசதிகொண்ட சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணத்திலோ அல்லது திரிகோணமலையிலோ அமைந்தால் அது நிச்சயம் லாபம் ஈட்டும். :)

இது எனது ஆதங்கம் மட்டுமே..

(உங்கள் நாட்டில் முதலில் மலசல கூடம் கட்டிக்கொள்ளுங்கள், பின்னர் இங்கே சொல்ல வாருங்கள் என்ற 'லொள்ளு' வேண்டாம் ! :wub: )

  • கருத்துக்கள உறவுகள்

அது கடும் நஷ்டத்தில் இயங்குகின்றது கடந்த வருட வருமானம் மட்டும் ஏதோ சில ஆயிரம் ரூபாய்கள் என்று சொன்னார்கள்......

என்றாலும் கலைஞர் கட்டிய புதிய சட்டசபை கட்டிடத்தை ஜெயலலிதா வந்து மூடி மருத்துவமனையாக்கிய அரசியல் இதில் இல்லை என்று நம்புகின்றேன்......

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ரணில் சர்வதேச விமான நிலையம்  என்று பெயரை மாத்திப் பார்க்கலாமே. வருமானம் பெருக வாய்ப்புள்ளது. சந்திரிக்கா செய்யாத கூத்துக்களை மகிந்த செய்திட்டார். :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீளமான விமான ஓடுபாதை(3.5 கி.மீ) Code F (ஏர்பஸ் 380 போன்ற இரண்டடுக்கு பெரிய விமானங்கள் ஏறி, இறங்க) மற்றும் Code C சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற வசதிகள், நவீன விமான தரையிறக்கம் மற்றும் ஏறும் வசதிகள்( ILS, PAPI, HIAL CAT I etc, ) இவ்வளவு வசதி பெற்ற சர்வதேச விமான நிலையம், வெறும் அரசியல் காரணங்களுக்காக மூடப்படுகிறதா இல்லை பொருளாதாரத்தால் பின் தங்கிய பகுதியாக இருந்து போதிய பயணிகள் போக்குவரத்து இல்லாமல் நஷ்டத்தில் இயங்குகிறதா என தெரியவில்லை! :o

வனாந்திர சுற்றுப்புற சூழல் பாதிப்பால் வெளியேறும் பறவைகளின் அளவற்ற கோபத்தாலும்(??) இவ்விமான நிலையம் பாதிக்கபட்டதாக படித்த ஞாபகம் உள்ளது.

எது எப்படி இருப்பினும் இம்மாதியான நவீன வசதிகொண்ட சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணத்திலோ அல்லது திரிகோணமலையிலோ அமைந்தால் அது நிச்சயம் லாபம் ஈட்டும். :)

இது எனது ஆதங்கம் மட்டுமே..

(உங்கள் நாட்டில் முதலில் மலசல கூடம் கட்டிக்கொள்ளுங்கள், பின்னர் இங்கே சொல்ல வாருங்கள் என்ற 'லொள்ளு' வேண்டாம் ! :wub: )

ராசவன்னியன்,

அந்த விமான நிலையத்தின் பிரச்னை போதிய ட்ராபிக் கிடையாது என்பதுதான். கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே, தலைநகர் இல்லாத மற்றொரு இடத்தில் இப்படியொரு விமான நிலையம் இயங்க வேண்டுமென்றால், 2 விஷயங்களில் ஒன்று நடக்க வேண்டும்.

1) பெரியளவில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து (உதாரணம் டோக்கியோவின் நரீட்டா, ஹனீடா விமான நிலையங்கள்). இலங்கையில் அதற்கு சாத்தியம் இல்லை. மிகச் சிறிய நாடு.

2) இந்த விமான நிலையம் ஒரு HUB ஆக இருக்க வேண்டும். இன்றுள்ள சூப்பர் HUB அட்லான்டா (ஜோர்ஜியா). ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு HUB-ஐ உருவாக்கலாம், ஆனால், அவர்களுக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

விளங்களுக்கு நன்றி சபேசன்.

மருது, அயர்லாந்து மட்டுமில்லை, ஐரோப்பாவின் ஒரே சமுத்திரம் அட்லாண்டிக்கே, மேலே இருக்கும் ஆர்டிக்கை விட்டுப்பார்த்தால்.

வன்னியன், மத்தள ஒரு சர்வாதிகாரியின் கனவுத்திட்டம். தனது மாவட்டத்தில் விமான நிலையம், மைதானம், துறைமுகம் எல்லாம் கட்டும் திட்டத்தில் செய்தது.

இதற்கு ஒரு சரியான பிஸினஸ் கேஸ் ஒருபோதும் இருந்ததில்லை. வேணுமெண்டே விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் கட்டி, சிலகாலம் நட்டத்தில் ஓட்டியபின், லாபம் இல்லை என்று கூறி சீனாவின் ராணுவத்தேவைக்கு கையளிக்கும் திட்டம் இருந்ததாயும் கூறுவர்.

இப்போ இதை என்ன செய்வது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு ஹப் ஆக மாற்ற முடியுமா? இலங்கைக்குள் வரும் விமானங்கள் எப்படியும் கொழும்பில் தரித்தே செல்லும், அங்குதான் 95 சதவீத பயணிகள் ஏறி, இறங்குவர். சிங்கபூர், ஹாங்கொங், டோஹா எல்லாம் அருகில் இருக்கையில் இன்னொரு ஹப் இவ்வட்டாரத்தில் வர முடியுமா?

கிழக்கு கரைவழியே முல்லைத்தீவு ஊடாக யாழுக்கு ஒர் அதிவேக நெடுஞ்சாலை அமைத்தால் - அம்பாந்தோட்டையில் இருந்து யாழுக்கு 4 மணியில் போக முடிந்தால், வடகிழக்கின் கணிசமான பயணிகளை கவரலாம்.

எல்லாத்தையும் விட சிறப்பான திட்டம், இதை அமெரிகாவுக்கு தளம் அமைக்க நீண்ட நாள் லீசில் கொடுப்பதுதான்.

இந்தியா சம்மதித்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.