Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்தான்டா சேகரு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேகரின் தாய்க்கு இரண்டு பெண்களைப் பிடிக்காது போயிருந்தால் சேகரின் கதி என்ன....?? emoticon-misc-005.gif  :D  :lol:  

 

நினைப்பதிலும் எதற்கு கஞ்சத்தனம்....? :lol:  :D

3 என்று சொல்லவேண்டியது தானே.. :icon_mrgreen:

  • Replies 101
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதிலும் எதற்கு கஞ்சத்தனம்....? :lol:  :D

3 என்று சொல்லவேண்டியது தானே.. :icon_mrgreen:

 

என்ன விசு பண்ணை,  "கப்பல் நெறைய பொண்ணு வந்த கதை" மாதிரியல்லோ அள்ளிவிடுறீங்க? :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் நிறைய பொண்ணு வந்த கதையா :rolleyes:  ,கப்பல் போன பாதைக்கதையா  சொல்லுறாரு :o ஒன்னும் புரியலையே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் நிறைய பொண்ணு வந்த கதையா :rolleyes:  ,கப்பல் போன பாதைக்கதையா  சொல்லுறாரு :o ஒன்னும் புரியலையே :D

 

கப்பல் நிறைய பொண்ணு வந்த கதையில், 'இலவசமென்றால், எப்படி மக்கள் எப்படி அள்ளுவார்கள்..?' என்பதை வேடிக்கையாக குறிப்பார்கள்.. :lol:

 

ஒரு காலத்தில் குறுநில மன்னனொருவன் தான் வழக்கமாக கப்பம் செலுத்தும் சக்கரவர்த்தியை சந்தோசப்படுத்த ஓலை அனுப்பினான்..

"மன்னா..! இத்துடன் உங்களை சந்தோசப்படுத்த ஒரு கப்பல் நிறைய ஆயிரம் கன்னிகளை உங்களுக்கு பரிசாக அனுப்புகிறேன் மகிழுங்கள்..!!"

ச்க்கரவர்த்தியான மன்னன் அதைப் படித்துவிட்டு, 'சரி.. நாம் மட்டும் ஏன் சந்தோசப்படணும்,? நம்மை சார்ந்தவர்களும் மகிழட்டுமே' என எண்ணி அமைச்சரிடம் சொல்லி அரச சபையில் அறிவித்தான்..

 

"நம் குறுநில மன்னன் கப்பல் நிறைய ஆயிரம் கன்னிகளை அனுப்புகிறான்.. நீங்கள் யார் யாரெல்லாம் அடைய விரும்புகிறீர்கள், ஒவ்வொருத்தருக்கும் எத்தனை கன்னிகள் வேண்டும்? என பட்டியல் தாருங்கள். இது முற்றிலும் இலவசம்..!" என்றான்..

உடனே கிழடு கட்டைகள் முதற்கொண்டு இளசுகள் வரை போட்டி போட்டுக்கொண்டு, "எனக்கு மூன்று, என் சித்தப்பனுக்கு ஐந்து, என் அப்பாவிற்கு நாலு, மாமனுக்கு மூன்று" என சகட்டுமேனிக்கு எழுதி பட்டியலை கொடுத்தனர்..

மன்னன் மொத்த பட்டியலையும் வாங்கி ஒவ்வொருத்தரின் தேவைகளை கூட்டிப் படித்துப் பார்த்தால் மொத்த கன்னிகள் தேவை, பல ஆயிரமாக இருந்தது...'இந்த சிக்கலை தவிர்ப்பது எப்படி..?' என அமைச்சரிடம் கலந்தாலோசித்துவிட்டு,

 

"பிரபுக்களே.. நீங்கள் இவ்வளவு ஆர்வம் கொண்டவராக இருப்பீர்களென நான் அறியவில்லை..!.உங்களுக்கு கப்பலில் வருவதை தருவதில் மகிழ்ச்சியே.. ஆனால் பாருங்கள், இந்த பரிசுப் பெண்களை பராமரிக்க நிதியும் தேவைப்படுகிறது.. ஆகையால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கன்னிக்கும் ஐநூறு பொற்காசுகள் அறவிடப்படும்.. ஆகவே பணத்துடன் நாளை தயாராக இருங்கள்..!" என சிறிது கண்டிப்புடன் அறிவித்தான்...

அ..ஆஆ..! வென வாயைப் பிளந்த சபை பிரபுக்கள், 'என்ன செய்வது..?' என ஒவ்வொருத்தராக தலையை சொறிந்துகொண்டு மன்னனை தனியாக சந்தித்து மனுவை கொடுத்தனர்..

'மன்னா உங்கள் பெருந்தன்மைக்கு சந்தோசம், ஆனால் பாருங்கள், எனக்கு பல நாளாக கால் மூட்டு வலி, என் சித்தப்பனுக்கு தீராத வயிற்று வலி,, என் மாமனுக்கோ  நெஞ்சு வலி.. ஆகையால் என் குடும்பத்தாருக்கு யாருக்கும் இக்கன்னிகள் வேண்டாம்..!' என எழுதியிருந்தது..

கடைசியில் மொத்த மனுக்களையும் வாங்கி, கூட்டிப் பார்த்தால் 'ஒருத்தருக்குமே அப்பெண்கள் தேவை இல்லை! என எழுதியிருந்தனர்..

 

அப்பொழுது மன்னன் நினைத்தான் 'கப்பல் நிறைய பெண்களென்ன..,?  இலவசம் என அறிவித்தால் இவர்கள் சாக்கடையையும் அருந்துவார்கள்' :icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கிறீர்கள் தானே? இனி அடுத்த கதை தொடரலாமா? :lol::D:)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ,ஆமா .....மாமா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ,ஆமா .....மாமா  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கின்றோம் தொடருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறோம்.. ரசிக்கிறோம்.. தொடருங்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்! தொடருங்கள்! பொண்ணு கதை என்றால் கண்ணுகளுக்கு ஊணேது உறக்கமேது. smiley-dance003.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

By2bGayCQAATGwc.jpg

 

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க..????


:D

  • கருத்துக்கள உறவுகள்

smiley2082.gif

 

மாமா.... அடுத்த கதையை, கெதியா சொல்லுங்க. :D

  • கருத்துக்கள உறவுகள்

smiley2082.gif

 

மாமா.... அடுத்த கதையை, கெதியா சொல்லுங்க. :D

ராசவன்னியர் அவர்கள் தற்போது காசு பொறுக்கத் துபாய்க்கு ஓடிவிட்டார். பொறுக்கிமுடிய துபாயில் அவரும் ஒரு சேக்கு ஆகிவிடுவார். ஆகிவிட்டால் ஒரு பெண் என்ன ஒன்பது பெண்களின் கதைகள் கேட்காமலே இங்கு ஓடிவரும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தமிழ் சிறி அவர்களே. :D  :lol:   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் அவர்கள் தற்போது காசு பொறுக்கத் துபாய்க்கு ஓடிவிட்டார். பொறுக்கிமுடிய துபாயில் அவரும் ஒரு சேக்கு ஆகிவிடுவார். ஆகிவிட்டால் ஒரு பெண் என்ன ஒன்பது பெண்களின் கதைகள் கேட்காமலே இங்கு ஓடிவரும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தமிழ் சிறி அவர்களே. :D  :lol:   

 

ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி!

 

ஷோக்கான(?)  "இந்த ஷேக்கு", சீக்கில்லாமல் ஒத்தையாய் அத்தைப் பெண்ணுடனேயே வாழ விரும்புவதால் துபாய் வீதிக்குச் செல்லாமல், யாழில் காத்திருந்த உறவுகளுக்காகவும், பாஞ்ச் ஐயாவின் கூற்றை மறுக்கவும், அடுத்த கதையை வேலை பளுவினூடே தமிழாக்கம் செய்து அளிக்கிறேன்..! :icon_idea:

 

 

 

funeral%2520procession.jpg

 

 

 

ஒரு பெண், பலசரக்கு கடையில் மளிகை சாமான்கள் வாங்கிவிட்டு, தெருவில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.. அப்பொழுது சாலையில் ஒரு விநோத ஊர்வலம் வந்துகொண்டிருந்தது..

ஊர்வலத்தில், இரண்டு சவங்கள் அலங்காரத்துடன் அடுத்தடுத்து 50 அடி இடைவெளியில் வந்தன. அதற்குப் பின்னால் தனியாக ஒரு பெண், தன்னுடன் ஒரு நாயை கழுத்தில் சங்கிலியால் கட்டி அழைத்துக்கொண்டு அமைதியாக பின் தொடர்ந்தாள்.

அவளுக்கும் பின்னால் ஒத்தை வரிசையில் சாரைப் பாம்புபோல நீண்ட வரிசையில் 300 க்கும் அதிகமான இள வயது பெண்கள்..!

அந்த ஊர்வலத்தில் பெண்கள் மட்டுமே இருப்பதன் விசித்திரத்தைக் கண்டதால், பெண்களுக்கே உரித்தான குறுகுறுப்பில் விடயத்தை அறிய ஆவலுடன் ஊர்வலம் அவளை கடக்க மட்டும் காத்திருந்தாள்...

நாயுடன் தனியாக வந்த பெண் அருகே வந்தவுடன், "ம்..உங்களுக்கேற்பட்ட துயரத்திற்கு வருந்துகிறேன், இந்த பிணங்கள் யார், யார் என அறியலாமா..?"  என வினவினாள்..

அதற்கு அப்பெண், "முதலில் செல்வது எனது வீட்டுக்காரர் சேகரு, இரண்டாவதாக செல்வது எனது மாமியார்.."

"எப்படி இந்த சோகம் நடந்தது..?" பலசரக்கு பெண் கேட்டாள்..

"சோகமா..? நாங்கள் உள்வீட்டு பிரச்சனையால் வாக்குவாதம் செய்கையில், இந்த நாய் சேகரை கடித்துக் கொன்றுவிட்டது.. அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற மாமியாரையும் நாய் கடித்துக் கொன்றுவிட்டது" என சலனமற்று சொன்னாள்.. :(

 

ஒருகணம் அமைதி..

பலசரக்கு பெண் கேட்டாள்.. " இந்த நாயை எனக்கு விலைக்கு தருவீர்களா..? நல்ல விலை தருகிறேன்..!"

அதற்கு அவளோ, 

 

"பின்னால் வரிசையில் வாருங்கள்" என கறாராக சொல்லிவிட்டுக் கடந்தாள்.. :o

 

இப்பொழுது பலசரக்கு பெண் மூர்ச்சையானாள்..! :lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா :D

இந்த கதை முதல்ல படிச்சிருக்கன், ஆனா அதில்ல ஆண்கள் தான் வரிசையில வருவீனம். அவங்களுக்கு முன்னால ஒரு ஆண் நாயோட வருவர். அந்த நாய் அவரிட மனைவியையும் மாமியாரையும் கடிச்சு கொண்டிவிடும்.
 
இந்த திரி நல்லாயிருக்கு. தொடருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா :D

 

என்ன உங்களுக்கும் நாய் வேணுமோ .... கெஞ்சுறீங்கள்...!!  அதெல்லாம் முடியாது , வரிசையில் நின்டு வரவும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது.

கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..

" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .

மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு

மொபைலைப் பாத்துட்டு....

அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ...

"அட லூஸுப் புருஷா ..

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு... அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full) .....

10440279_948280788524747_799014129438814

 

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்....!!!
கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....

கொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கள் என்று கேட்டாள்...??
 
கணவன் மனைவியிடம்:
நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..??
உலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..
நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே ...???
இந்தா என்னோட TAB எடுத்துக்கோ .....!!!

மனைவியும் TAB எடுத்துண்டு போய் ....
 
அதால சமையல் அறையில் இருந்த,
கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டா ........!!
கணவன் நிலைமையை நினைச்சு பாருங்க ...!!!

நீதி : அட்வைஸ் பண்ணுறேங்கிற பேர்ல மனைவிகிட்ட
உங்க புத்திசாலிதனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...!!

http://kavithaiveedhi.blogspot.com/2015/02/blog-post_26.html


 
"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"

"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"

"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."

"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."

"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"

footer_border.png
310038_346422472146414_1493645403_n.jpg

என்ன சொல்றீங்க, உங்க வீட்டுக்காரரை தினமும் திட்டுனீங்களா? ஏன்?"

"நீங்கதானே டாக்டர் மருந்து எழுதிக்கொடுத்து, தினமும் ஒரு டோஸ் கொடுக்க சொன்னீங்க!"

footer_border.png
 
248041_347454965376498_945541917_n.jpg

சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”

அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”

நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?” 

 
Funny_Cat.jpg

புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் பெண்கள் சங்கத்தில் சொற்பொழிவு செய்து விட்டு அமர்ந்தார்.. “நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்பதாக இருந்தால் கேட்கலாம்“ என்றார்..

பெண்மணி ஒருத்தி, “விஞ்ஞானி ‌ அவர்களே..! பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் இயந்திரத்தைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட இயந்திரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?” என்று கேட்டார்..

“பார்த்திருக்கிறேனா..? நான் திருமணமே செய்து கொண்டு குடும்பமே நடத்திக்கொண்டிருக்கிறேன்...” 

http://kavithaiveedhi.blogspot.com/2012/09/blog-post_29.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் அவர்கள் தற்போது காசு பொறுக்கத் துபாய்க்கு ஓடிவிட்டார். பொறுக்கிமுடிய துபாயில் அவரும் ஒரு சேக்கு ஆகிவிடுவார். ஆகிவிட்டால் ஒரு பெண் என்ன ஒன்பது பெண்களின் கதைகள் கேட்காமலே இங்கு ஓடிவரும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தமிழ் சிறி அவர்களே. :D  :lol:   

 

பாஞ்ச் அண்ணை, உங்களின் புண்ணியத்தில்....

துபாய் தமிழ் ஷேக்கிடம்..... இருந்து, சுடச்சட.... நல்ல கதை கிடைத்தது மகிழ்ச்சி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கதையை நாளை பதிக்கிறேன்.. :)

 

அப்படியே 'பொழைச்சான்டா குமாரு!'ன்னு ஒரு திரி ஆரம்பிக்கலாமாவென்ற எண்ணமும் இருக்கு..! :lol: :D

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கதையை நாளை பதிக்கிறேன்.. :)

 

 

விநாயகப் பெருமானுக்கும், சனீசுவர மூர்த்திக்கும் நடந்த ஒப்பந்தம்போல் இருக்கக்கூடாது. ஆமா சொல்லிப்புட்டன்.  <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிப்பேச்சு கேட்கவா..? கேட்க வா...!

 

 

AlexandrineWBPk_U43male011.jpg

 

 

வீட்டில் பொழுது போக்க பறவைகள், மிருகங்களை வளர்ப்பது வழமைதானே..! சேகரின் மனைவியும் பறவையை வளர்க்கலாமென முடிவு செய்தாள்..

கடைவீதியில் பறவைகளை விற்கும் கடைக்குச் சென்றாள்.. அங்கே பல்வேறு வகைப்பட்ட பறவைகளை பார்த்ததில், ஒரு கிளி அழகாக துறுதுறுவென விழிகளைச் சுழட்டி சுறுசுறுப்பாக இருந்தது..  :icon_idea: 

கடைக்காரரிடம், "அந்தக் கிளி என்ன விலை? அதனை எனக்குத் தாருங்கள்!" என கேட்டாள்.

கடைக்காரர், "இது ரொம்ப துடுக்கான கிளி, இதனை ஒரு விலைமாது வீட்டிலிருந்து கொண்டு வந்தேன்.. உங்களுக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்.." என்றான்.

அவள் சற்றே தயங்கினாலும், கிளியின் சுட்டித்த்னத்தைப் பார்த்து வீட்டில் குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோகும், பறவைதானே..! என யோசித்து, அந்தக் கிளியை கூண்டோடு வீட்டிற்கு வாங்கி வந்தாள்.

விட்டிற்கு வந்தவுடன், கிளிக்கூண்டை மாட்டிவிட்டு, கிளியை திறந்துவிட்டாள்.. :)

உடனே கிளி கீச்சிட்டவாறே.. "க்வாக்..க்வாக்.. ஆ..!  புது வீடு.. புது மேடம்.. வணக்கம் அம்மா.." என்று கிளிப்பேச்சில் கொஞ்சியது..

அவளும், 'அட.. கிளி நன்றாக பேசுகிறதே!' என அதிசயித்தாள்.. :lol:

மாலையில் அவளின் பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பினர்.. அவர்கள் வீட்டில் வந்திருக்கும் புதிய விருந்தாளி கிளியை பார்த்து சிரிக்கையில், கிளி.."க்வாக்.. க்வாக்.. ம்.. புதுப் பெண்கள்..மாலை வணக்கம்..!" என கிறீச்சிட்டது..

இறுதியாக இரவில் வேலையிலிருந்து வீடு திரும்பினான் சேகரு.. சிறிது நேரத்திற்குப் பின் இரவுச் சாப்பாட்டிற்கு மனைவி அழைக்கவே, குசினிக்கருகே இருக்கும் சாப்பாட்டு அறைக்குள் சேகரு உள்ளே நுழைந்தான்..

 

அப்பொழுது அங்கேயிருந்த கிளி.."க்வாக்.. க்வாக்.. ஆ..சேகரு..! இங்கேயுமா...?" என கீச்சிட்டது...! :o:icon_idea:

 

உடனே குசினியிலிருந்து பறந்து வந்தன.. ராக்கெட்டுகளும், பறக்கும் தட்டுகளும் .. ! :lol:

 

 

 

-தமிழாக்கம் செய்து பதிந்தேன்.

 

விநாயகப் பெருமானுக்கும், சனீசுவர மூர்த்திக்கும் நடந்த ஒப்பந்தம்போல் இருக்கக்கூடாது. ஆமா சொல்லிப்புட்டன்.  <_<

 

நிச்சயம் இல்லை, பாஞ்ச், காலை எழுந்தவுடன் பதிந்துவிட்டேன்..! :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சேகர் மனிசியுடன் கிளி வாங்கிற கடைக்குப் போயிருந்தால் கிளி என்ன சொல்லியிருக்கும்...! :lol::)

 

"ஓ..சேகரு..!  யாரு இந்த 'புது அம்மா'.....?"  PetParrotSM02.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.