Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி பீருக்கு பதிலடி: தமிழகத்தில் வாஷிங்டன் செருப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி பீருக்கு பதிலடி: தமிழகத்தில் தயாராகும் ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு!

 

கோவை: வெளிநாடுகளில் பீர் பாட்டில்களில் இந்துக்கடவுள்களின் படங்களை போட்டு விற்பனை செய்தனர். இதையும் தாண்டி அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் பீர் விற்பனை செய்தது.

இதற்கு பதிலடியாக, ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில், அவர் படத்துடன் கூடிய செருப்பு தமிழகத்தில் தயாராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காந்தி பீர் டின்

அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டது.

 

21-1421818896-gandhi-beer5-600.jpg

 

இந்தியாவில் கண்டனம்

அமெரிக்க நிறுவனத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனம் கிளம்பியது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது.

 

படம் அகற்றவில்லை

அதேசமயம் பீர் பாட்டிலில் காந்தி படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இணைய தளங்களில் இன்னும் காந்தி படத்துடன் கூடிய பீர் பாட்டில்களின் படங்கள் இடம் பெற்றுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

 

பதிலுக்கு பதில்

இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்கா நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் கூடிய செருப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராமசுப்பிரமணியம்.

 

21-1421818869-slipper0george-washinton-6

 

வழக்கு தொடர்ந்தாலும்

"அமெரிக்க பீர் நிறுவனம் காந்தியடிகளின் படத்தை பீர் பாட்டிலில் இருந்து அகற்றவில்லை. இது சம்பந்தமாக ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவரை இந்தியா கொண்டு வர நிறைய சட்ட நடைமுறைகள் உள்ளது.

 

ஜார்ஜ் வாஷிங்டன்

நம் நாட்டில் காந்தி போல அமெரிக்காவின் மதிப்பு மிக்க தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் அவரது படத்தினைப் போட்டு செருப்பு தயாரித்தால் என்ன என்று தோன்றியுள்ளது கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு. அதற்கு உடனடியாக செயல்வடிவமும் கொடுத்துவிட்டார்.

 

தயாராகிவரும் செருப்பு

இது சம்பந்தமா 5, 6 கம்பெனியை அணுகியும் யாரும் தயாரிக்க முன்வரவில்லையாம். ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பெயரை வெளியில் சொல்லாமல் செருப்பு தயாரித்துள்ளனர். அமெரிக்க அதிபர், துணை அதிபர், ஸ்பீக்கர்கள், 50 மாகாண கவர்னர், இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இந்த செருப்புகளை இந்த வார கடைசியில அனுப்பி வைக்க உள்ளனர்.

 

அமெரிக்க தூதரகம் முன்பு

இந்த செருப்பை பெரிய வடிவத்தில் தயாரிச்சு, ஒபாமா இந்தியா வர்ற 26ஆம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளாராம் ராமகிருஷ்ணன்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காரன் ஜெசுநாதரின் படத்தை செருப்பில போட்டாலும் கண்டுகொள்ளமாட்டான் .....வாஷின்டன் என்ன பெரிய அப்பாடக்கரா என்று போயிட்டே இருப்பான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

21-1421818869-slipper0george-washinton-6

உந்த செருப்பைப்பாத்து அமெரிக்கன் சந்தோசப்படுவான் பெருமைப்படுவான்......சும்மா கேணைத்தனமாய் ஒண்டும் யோசிக்கமாட்டான்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

உந்த செருப்பைப்பாத்து அமெரிக்கன் சந்தோசப்படுவான் பெருமைப்படுவான்......சும்மா கேணைத்தனமாய் ஒண்டும் யோசிக்கமாட்டான்.  :D

 

 

இந்தியர்களுக்கு உணர்வு  இருக்கா  என பரீட்சிக்கிறார்கள் போலும்...

அந்தளவுக்கு  இது ஓடும் என வரலாறு சொல்லவில்லை.. :(  

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி வெல்லப்போவது யார் இந்தியாவா அமெரிக்காவா :D

வெள்ளைகளுக்கு தகுந்த செருப்படி இப்படிதான் கொடுக்கவேண்டும் .

வெள்ளையன் எதை செய்தாலும் தலைகுனிந்தபடி ஏற்கும் பழக்கத்தை முதலில் மாற்றவேண்டும் .

இந்த விடயத்தில் நான் சிங்களவன் முஸ்லீம்கள் பக்கம் தான் .

எம்மவர் ,இந்தியர் தமக்கு லாபம் கிடைக்கும் என்றால் அடிமை சேவகம் செய்ய தயங்கமாட்டார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோர்ஜ் வாசிங்டனுக்கு இலவச விளம்பரம். ஏலவே, ஒபாமா, வாசிங்டனை பொறித்த உள்டாடைகள் விற்பனையில் உள்ளன. காந்தியை பற்றி இந்தியாவிலேயே பலரிடம் நல்ல பெயர் இல்லை. காந்தியை சுட்டவருக்கு கோயிலும் கட்ட முயற்சி நடக்கின்றது. காந்தி படத்தை பொறித்த குடிபானம் மூலம் இந்தியாவிற்கு விளம்பரம் கிடைக்கும். கண்மூடித்தனமான தேசபக்தி, மதபக்தி இரண்டும் ஆபத்தானவை. 

george_washington_womens_boy_brief.jpg?cfounding_fathers_george_washington_class

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அதுசரி காலையும் செருப்பையும் ஏன் கீழ்த்தரமாக நினைக்கின்றார்கள்??? :rolleyes:
கால் இல்லாதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை. உடலின் சகல உறுப்புகளும் முக்கியமானவைதானே?  :icon_idea:
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

king_barack_i_v2_classic_thong.jpg?colorbabe_lincoln_classic_thong.jpg?color=Whi

  1526789_925285327504785_2072415186089545

 

ஏற்கனவே மொஸ்கோவில் .....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு செய்கிறவர்கள் இந்தியர்களுக்கு வெட்கம் மானம் அய்டி சுரனை இருந்தால் அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆவதையும் பணம் உழைப்பதினையும் நிறுத்தவேண்டும். எடுக்கிறது பிட்டை ஏறுகிறது பல்லக்கு எண்டு நினைப்பு! :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் காந்தியைப் பற்றித் தெயாதவர்கள் , குறிப்பாக சமூக அடிமட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்!

 

இவர்கள் இந்த 'பியரைக்' குடிக்கும் போது.... கதைப்பதற்கு ஏதாவது ' டொபிக்' கிடைக்காத போது நிச்சயம் காந்தியைப் பற்றிக் கதைப்பார்கள்! 

 

காந்தி கூட, இந்த விதத்தில் தனது ' அஹிம்சைக் கொள்கைகள்' உலகமெங்கும் பரவுமெனில், நிச்சயம் இதை ஏற்றுக்கொண்டிருப்பார்!

 

'வாலி' மேலே சொல்லிய மாதிரி... இந்தியர்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினால்...வெளிநாடுகளில் உள்ள வேலையில்லாப் பிரச்சனையாவது கொஞ்சம் குறையும்! :D

 

Edited by புங்கையூரன்

இவ்வளவு செய்கிறவர்கள் இந்தியர்களுக்கு வெட்கம் மானம் அய்டி சுரனை இருந்தால் அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆவதையும் பணம் உழைப்பதினையும் நிறுத்தவேண்டும். எடுக்கிறது பிட்டை ஏறுகிறது பல்லக்கு எண்டு நினைப்பு! :D

 

இது நல்லாயிருக்கு

10931239_925444514155533_367654577644530

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காரன் ஜெசுநாதரின் படத்தை செருப்பில போட்டாலும் கண்டுகொள்ளமாட்டான் .....வாஷின்டன் என்ன பெரிய அப்பாடக்கரா என்று போயிட்டே இருப்பான்....

00019922.jpg

 

http://www.foxnews.com/story/2003/04/11/bush-sr-doormat-in-baghdad-hotel-dismantled/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.