Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்

Featured Replies

dominik%204544.jpg

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.
 
இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார்.
 
அவரை வழியனுப்பிவைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன் கூடச் சென்றார். பலாலி முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் யுத்த சூனியப் பிரதேச எல்லையில் அமைச்சர் ஹமீத்துக்கு டொமினிக் விடைகொடுத்த சமயம் இரு தரப்புகளுக்கும் இடையில் அங்கு சமர் மூண்டது.
 
இரு தரப்புகளிலிருந்தும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எனினும் இரு தரப்புத் தலைவர்களும் விழுந்து எழும்பி, ஓடித் தப்பி தத்தமது பிரதேசத்துக்குள் எப்படியோ வந்து சேர்ந்தனர். இந்த விடயம் அச்சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அச்சமயத்தில் புதிதாக திருமணம் செய்த டொமினிக்கின் துணைவியார் விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் ஒரு நீதியரசராகப் பணியாற்றினார்.
 
dominik%204545.jpg
 
எனினும் பின்னர் ஒரு குறுகிய காலத்தில் இயக்கத் தலைமையோடு ஏற்பட்ட ஒரு சிறு முரண்பாட்டை அடுத்து டொமினிக்கும் துணைவியாரும் இயக்கத்தை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினர். அண்மையில் சில காலம் பல்வேறு நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
 
அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் தீரமான போராளியாக பல களச்சமர்களில் டொமினிக் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • Replies 67
  • Views 5.9k
  • Created
  • Last Reply

விலகவில்லை  விலத்தப்பட்டார்  சில  நிதி சம்மந்தமான  பிரச்சினையில் ..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் விட்ட பகிடி தான் அவருக்கு ஆப்பானது. " வென்ற சண்டை எல்லாம் தலைவரின் நேரடி வழி நடத்தலில் தோத்ததெல்லாம் எங்கட தலையில" இதுதான். TS இன் தகடுக்கு பலியானவர்களில் இவரும் ஒருவர்.

கரவெட்டி சொந்த இடம்  இவரின் தாயாரும் எனது அம்மாவும் நல்ல நெருக்காமனவர்கள்.

 புலனாய்வு நீயுட்டன் அண்ணாவின் உறவினரும் கூட....

மீரா சொன்னது போல் இவர் படித்தவரும்.  நக்கலும் அடிப்பார்...

மீரா நீங்கள் சேது வா////?

சௌந்தரி கணேசன்

இந்திரன் சண்முகலிங்கம் (டொமினிக்)

ஆறுமனமே ஆறு என்று எத்தனை தடவை சொன்னாலும் மனம் ஆறவில்லை. நினைவுகள் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவாகவும் ஒளிப்பதிவாகவும் வெளிப்படுகின்றன.

இந்திரன் எனது உறவுக்காரன் என்பதையும் தாண்டிய உணர்வுகளை ஏற்படுத்தியவன். சிறுவயதில் எங்களோடு அன்பாகப் பேசிப் பழகிய இனிய நினைவுகளின் சொந்தக்காரன். அவரது மறைவு இதயத்தைக் கனக்கச் செய்கிறது. தான் பழகும் அனைவருடனும் தனக்கான ஓர் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நல்லதோர் நண்பனின் இழப்பு மனதை வலிக்கச் செய்கிறது.

எத்தனையோ ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து எமது வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருந்தாலும் அழியாத நினைவுகளாக இந்திரனின் கள்ளமற்ற வெள்ளை மன வெளிப்பாடுகள் இன்றும் இனிக்கின்றது.

அனைவரும் நேசிக்கக்கூடிய அற்புதமான மனிதனின் இளம்வயது மரணம் குடும்பத்தினரை மட்டுமல்ல அனைவரையும் சோகத்திற்குள் ஆழ்த்திவிட்டது. உறவுகள் மற்றும் நண்பர்களின் நேசத்தால் நிறைந்து வழிந்த ஒரு மனிதனின் மனதில் எப்போதும் அமைதி குடிகொள்ளும். நீயும் அமைதியானவன் உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

பூமியில் உன் வேலை முடிந்தது என்பேனா

சொர்க்கத்தில் உன் வாழ்வு தொடங்கியது என்பேனா

கள்ளமற்ற வெள்ளைமனம் கொண்டவனே

வாழ்க்கையெனும் வாய்ப்பைப் பயன்படுத்தி

தியாகமெனும் சுடரை ஏற்றியவனே

அவசரமாய் ஓய்வெடுக்கச் சென்றது ஏனோ

மரணம் பொதுவானது என்றார்கள்

இழப்பு மட்டும் இப்படி வலிக்கிறதே

செய்தி அறிந்த நேரம் முதல்

ஆயிரம் தடவைகள் நினைக்கிறேன்

ஆயிரம் தடவையும் வலிக்கிறேன்

பூமிக்கு நீ தேவை நண்பனே

மின்னும் உன் கண்கள் மூடினாலும்

மண்ணில் உன் சேமிப்பு நிலைக்கும்

இறைவனின் செல்லக் குழந்தையே

நீ ஒருபோதும் இறக்கவில்லை

இதயம் இருத்திப் போற்றப்படுகிறாய்

எங்கு சென்றாலும் கவனிக்கப்படுவாய்

உன் ஆத்துமா சாந்தி அடையட்டும்

இல்லை. ஆனால் சேதுவை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

dominik%204544.jpg

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.
 
இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார்.
 
அவரை வழியனுப்பிவைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன் கூடச் சென்றார். பலாலி முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் யுத்த சூனியப் பிரதேச எல்லையில் அமைச்சர் ஹமீத்துக்கு டொமினிக் விடைகொடுத்த சமயம் இரு தரப்புகளுக்கும் இடையில் அங்கு சமர் மூண்டது.
 
இரு தரப்புகளிலிருந்தும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எனினும் இரு தரப்புத் தலைவர்களும் விழுந்து எழும்பி, ஓடித் தப்பி தத்தமது பிரதேசத்துக்குள் எப்படியோ வந்து சேர்ந்தனர். இந்த விடயம் அச்சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அச்சமயத்தில் புதிதாக திருமணம் செய்த டொமினிக்கின் துணைவியார் விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் ஒரு நீதியரசராகப் பணியாற்றினார்.
 
dominik%204545.jpg
 
எனினும் பின்னர் ஒரு குறுகிய காலத்தில் இயக்கத் தலைமையோடு ஏற்பட்ட ஒரு சிறு முரண்பாட்டை அடுத்து டொமினிக்கும் துணைவியாரும் இயக்கத்தை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினர். அண்மையில் சில காலம் பல்வேறு நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
 
அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் தீரமான போராளியாக பல களச்சமர்களில் டொமினிக் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆமிதான் சரமாரியாக சுட்டது ....
புலிகள் ஒரு ரவையை கூட சுடவில்லை. கமித்தும் புலிகளின் முன்னரங்க நிலையில்தான் நின்றார். அவரையும் தமது பங்கருக்குள் கொண்டு சென்று பாதுகாத்தார்கள்.
பின்பு செஞ்சுலுவை சங்கம் பலாலி இராணுவத்துடன் தொடர்பு கொண்டு செஞ்சுலுவை சங்க ரெட்க்ரோஸ் கொடியுடன் ஒரு லண்டோவரில் கமித்தை ஏற்றி சென்றார்கள்.
 
இப்ப ஏன் இவர்கள் இப்படி திரிக்கிறார்கள் என்பது புரியவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

சுப. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சேர வந்த போது ~உனக்கு வயது போதாது, படித்துவிட்டு பின்னர் வா| என்று கூறி அனுப்ப, மீண்டும் மீண்டும் சேர முயற்சித்த போது- தமிழ்ச்செல்வனின் ஆர்வத்தினை மெய்ச்சி இயக்கத்தில் இணைத்தவர் டொமினிக்.

ஆனால், அதே டொமினிக்கை விடுதலைப் புலிகளின் தலைவரிடம் போட்டுக் கொடுத்து இயக்கத்தில் இருந்து விலக்க வைத்த பெருமை சுப. தமிழ்ச்செல்வனையே சாரும்.

ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தளபதிகள் சுப. தமிழ்ச்செல்வனின் தகட்டு வேலை காரணமாகவே இயக்கத்தில் இருந்து ஒதுங்க வேண்டி வந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீழ்ச்சிக்கு காரணம் சுப. தமிழ்ச்செல்வன் போன்றோரின் தகடு வைப்பு வேலையே என்பதனை மீண்டும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

பல பாடசாலைகளில் படித்த டொமினிக் எங்கே? சுப.தமிழ்ச்செல்வன் எங்கே? அதாவது, படித்தவர்களை விடுதலைப் புலிகள் பாவித்தது என்பது எந்த அளவுகோலில் என்பதனை பலரும் அறிந்து கொள்ளலாம்.

தந்தையார் நீதிபதியாக பணி புரிந்தவர். இவரும் சட்டக் கல்லூரியில் படித்தவர். 83 கலவரத்துக்குப் பின்னர் விடுதலைப் புலிகளோடு இணைந்தவர்.

டொமினிக் திருமணம் புரிந்த பெண் விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினரான பேபி சுப்ரமணியத்தின் சொந்த சகோதரியை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமதி.டொமினிக் பேபி அண்ணரின் சகோதரி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி வெள்ளிவிழா காணும்......

இந்தியாவில் உள்ள திருமதி டொமினிக்கின் சகோதரி பேபி சுப்ரமணியத்தின் சகோதரி (இவர்தான் இவரை இந்தியாவுக்கு ஆயுள்வேத சிகிச்சைக்கு வருமாறு அழைத்தார்) என்று அல்லவா அறிந்தேன். எதற்கும் மீண்டும் தெளிவுபடுத்திவிட்டு அறியத்தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி.டொமினிக் பேபி அண்ணரின் சகோதரி அல்ல.

பேபி சுப்பிரமணியம் அவர்களின் மருமகள் என்று நினைவு.

காலநதியில் வந்த போராளிகளில் பலர் காலத்தால் அடித்துச் செல்லப்படாத கதைகளோடும் கடமையோடும் காலத்தை வென்றார்கள் சென்றார்கள். பெயரின்றி புகழின்றி மறைந்து போனோரின் வரலாறும் போராட வந்து புதைந்தவர்களின் வரலாறுகளுமென காலம் ஓடுகிறது. பலர் மறக்கப்பட்டு சிலர் மறைக்கப்பட்டு மேலும் பலர் முடிந்த விடுதலைக்கனவுகளோடு இன்னும் அதே கனவுகளோடு....!
 
எது எப்படியிருப்பினும் தனது வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலத்தை விடுதலைக்காக என தந்த டொமினிக் அவர்களுக்கு  கண்ணீர் அஞ்சலிகள். கப்டன் றோயண்ணா வாழ்ந்த காலத்தில் அறிமுகமான போராளி டொமினிக் அவர்கள். அந்த நாட்களில் அரசியல் மேடைகளில் ஒலித்த குரலும் ஆழுமையும்....
  • கருத்துக்கள உறவுகள்

naan ivarudan 3varudangal ninranaan 

mannikkavum thamilil elutha

mudiyavillai 

naalaikku eluthukiren  (palarukku kachcheri irukku)

  • கருத்துக்கள உறவுகள்

சுப. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சேர வந்த போது ~உனக்கு வயது போதாது, படித்துவிட்டு பின்னர் வா| என்று கூறி அனுப்ப, மீண்டும் மீண்டும் சேர முயற்சித்த போது- தமிழ்ச்செல்வனின் ஆர்வத்தினை மெய்ச்சி இயக்கத்தில் இணைத்தவர் டொமினிக்.

ஆனால், அதே டொமினிக்கை விடுதலைப் புலிகளின் தலைவரிடம் போட்டுக் கொடுத்து இயக்கத்தில் இருந்து விலக்க வைத்த பெருமை சுப. தமிழ்ச்செல்வனையே சாரும்.

ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தளபதிகள் சுப. தமிழ்ச்செல்வனின் தகட்டு வேலை காரணமாகவே இயக்கத்தில் இருந்து ஒதுங்க வேண்டி வந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீழ்ச்சிக்கு காரணம் சுப. தமிழ்ச்செல்வன் போன்றோரின் தகடு வைப்பு வேலையே என்பதனை மீண்டும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

பல பாடசாலைகளில் படித்த டொமினிக் எங்கே? சுப.தமிழ்ச்செல்வன் எங்கே? அதாவது, படித்தவர்களை விடுதலைப் புலிகள் பாவித்தது என்பது எந்த அளவுகோலில் என்பதனை பலரும் அறிந்து கொள்ளலாம்.

தந்தையார் நீதிபதியாக பணி புரிந்தவர். இவரும் சட்டக் கல்லூரியில் படித்தவர். 83 கலவரத்துக்குப் பின்னர் விடுதலைப் புலிகளோடு இணைந்தவர்.

டொமினிக் திருமணம் புரிந்த பெண் விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினரான பேபி சுப்ரமணியத்தின் சொந்த சகோதரியை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக ஒரு பத்து ஆயிரம் வருமா ??? 

  • கருத்துக்கள உறவுகள்

naan ivarudan 3varudangal ninranaan 

mannikkavum thamilil elutha

mudiyavillai 

naalaikku eluthukiren  (palarukku kachcheri irukku)

டொமினிக் அவர்களுடன் நீங்கள் இருந்ததை ஏன் இங்கு எழுதாமல் விட்டீங்கள் என யோசித்தேன். ஆனால் நீங்கள் எழுத முன்வந்தமைக்கு நன்றிகள் நண்டு. நீங்கள் பணியாற்றிய காலம் பற்றிய நிறைய விடயங்கள் இருக்கிறது டொமினிக் அவர்களின் பணிகள் பற்றி உங்களால் மட்டுமே தற்போது உண்மைகளை சொல்ல முடியும். அவரது ஆழுமை ஆற்றல் பொறுப்புகள் பற்றியெல்லாம் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்....

இந்த திரி வெள்ளிவிழா காணும்......

யாழில் மட்டுமல்ல

இணையங்கள்

புத்தகங்கள்

முகநூல்...... இவை அனைத்தும் ஓடுவதற்கு 

ஒரு புலி  உயிரைக்கொடுக்கவேண்டியிருக்கு..... :(  :(  :(

அதிலும் இறந்தபின்பும்

வைக்கும் குற்றங்கள் இருக்கே...

வயிறு பற்றி  எரியுது ....

நாசமாப்போன இனத்துக்குக்காக போராடப்போனதைத்தவிர வேறு என்ன செய்தார்.....?? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக்(டொம்மர்)

யாழ்ப்பாணம் கரவெட்டியை  பிறப்பிடமாக கொண்ட டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன் ) கல்வியை ஹாட்லி கல்லூரியில் உயர் தரம் படித்துக்கொண்டிருக்கும் போது ,1984ல்  விடுதலிப்புலிகள் இயக்கத்தில் இணைந்து .புலிகளின் வைத்து 4வது பயிற்சி பாசறையில் பயிற்சியை முடித்துக்கொண்டார்.

ஆரம்மத்தில் திருகோணமையில் அரசியல் துறையில் அரு போராளியாகவும் ,பின் அரசியல்துறை  பொறுப்பாளராகவும் கடமையாற்றினார் .பின் 1990ல் இருந்து 1990 கடைசிவரை  யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தார் .கல்விக்குழு பொறுப்பாக இருந்தவேளையில் அவருடைய பிரிவில் இருந்த சுகிர்தா (பேபி சுப்பிரமணியத்தின்  சகோதரரின் மகள் )என்ற பெண் போராளியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சுகிர்தா புலிகளின் நீதி நிர்வாகத்துறையில் நீதிபதியாக பின்னர் கடமையாற்றியவர்.டொமினிக் அமைப்பில் இருந்து விலகும் வரை நிர்வாகத்துறையில் இருந்தார் .இவரின் நெருங்கிய நண்பர்கள் லெப்.கேணல் சரா அண்ணா ,நியுட்டன் (புலனாய்வுத்துறை )சஞ்சய்,மேஜர் குகதாஸ் (ஆ.க.வெளி சமரில் சரா அண்ணையுடன் வீரச்சாவடைந்தவர் ) ஞாயிற்றுக்கிழமை வந்தால் சரா அண்ணையின் பெரியம்மா வீட்டில் இவர்களை காணலாம்

புலிகள் அமைப்பில் இருந்து  விலக்கப்பட ஒருவரை போற்றி  பாடுவது  ஏற்புடையது  அல்ல  அப்படி விலகி அல்லது விலக்கப்பட்ட  பலர்  தளபதி மட்டங்கள் இருக்கு  மரணம் அடைந்தும் இருக்கினம் ஆகவே  டொமினிக் அவர்களுக்கு எதுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  என்றுதான்  புரியவில்லை ...

தலைமையை  விமர்சித்தார் ....இரட்டை  சூட்டடுப்பு   பொருமிய மேன்பாட்டு பேரவையில் நடைபெற்ற  சில நிதி மோசடி இவைகளுக்காவனே  அவர்   விலக்கபட்டார் ஆக இவரை  புலி உறுப்பினர்  என்னும்  தொனியில் பேசுவது தவறு ..

நிதி மோசடி அளவில் அவர் விலகுவதற்கு வறுமைக்கோட்டுக்கு கீழே அவர் இருக்கவில்லை .அவரையும் ,அவரின் பின்புலமும் தெரிந்தால் மட்டும் எழுதுங்கள் சாத்திரம் பாத்து கதை சொல்லாதீர்கள் . :wub:

அவர் நிதி தவறா கையாள்வதா அவரின்  மனைவியே தகவல் வழங்கியதா தான்  சொல்கிறார்கள்  அதனாலே தான்  இருவரும் வெளியேற கூட  அனுமதிக்கப்டார்கள் ..

கருணா எதுக்கு வெளியேற்றப்பட்டார்  அவர் நாளை  இறந்தால் இவ்வாறு முன்னாள் என்று  போட்டு போற்றுவோமா அண்ணே  :(

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எதுக்கு வெளியேற்றப்பட்டார்  அவர் நாளை  இறந்தால் இவ்வாறு முன்னாள் என்று  போட்டு போற்றுவோமா அண்ணே  :(

கருணா எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை விட வெளியேற்றப்பட்டதும் அவர் எப்படிச் செயற்பட்டார்....

எப்படி  இப்போதும் செயற்படுகின்றார் என்பது முக்கியம் அஞ்சரன்.

ஒப்பீடு சரியல்ல 

வாத்தியார் ஐயா  அமைப்பில் இருந்து விலகினாலோ ..அல்லது  வெளி ஏற்றப்பட்டலோ அவர்  சாதாரண  பொது மகன் அதன் பின் அவர் புலிகளின் பெயரில் அல்லது  செயலில்  இறங்கினால் தவறு தண்டனைக்கு உரியது அது யாராக இருந்தாலும் எப்படி இவர் அதில் விதிவிலக்கு ஆகுவார் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை விட வெளியேற்றப்பட்டதும் அவர் எப்படிச் செயற்பட்டார்....

எப்படி  இப்போதும் செயற்படுகின்றார் என்பது முக்கியம் அஞ்சரன்.

ஒப்பீடு சரியல்ல 

நன்றி வாத்தியார்....

டொமினிக்  அவர்கள் பிற்காலத்தில் இடைஞ்சல் செய்யாமலும் 

காட்டிக்கொடுக்காமலும் இருந்ததே பெரிய விடயம்....

  • கருத்துக்கள உறவுகள்

சுப. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சேர வந்த போது ~உனக்கு வயது போதாது, படித்துவிட்டு பின்னர் வா| என்று கூறி அனுப்ப, மீண்டும் மீண்டும் சேர முயற்சித்த போது- தமிழ்ச்செல்வனின் ஆர்வத்தினை மெய்ச்சி இயக்கத்தில் இணைத்தவர் டொமினிக்.

ஆனால், அதே டொமினிக்கை விடுதலைப் புலிகளின் தலைவரிடம் போட்டுக் கொடுத்து இயக்கத்தில் இருந்து விலக்க வைத்த பெருமை சுப. தமிழ்ச்செல்வனையே சாரும்.

ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தளபதிகள் சுப. தமிழ்ச்செல்வனின் தகட்டு வேலை காரணமாகவே இயக்கத்தில் இருந்து ஒதுங்க வேண்டி வந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீழ்ச்சிக்கு காரணம் சுப. தமிழ்ச்செல்வன் போன்றோரின் தகடு வைப்பு வேலையே என்பதனை மீண்டும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

பல பாடசாலைகளில் படித்த டொமினிக் எங்கே? சுப.தமிழ்ச்செல்வன் எங்கே? அதாவது, படித்தவர்களை விடுதலைப் புலிகள் பாவித்தது என்பது எந்த அளவுகோலில் என்பதனை பலரும் அறிந்து கொள்ளலாம்.

தந்தையார் நீதிபதியாக பணி புரிந்தவர். இவரும் சட்டக் கல்லூரியில் படித்தவர். 83 கலவரத்துக்குப் பின்னர் விடுதலைப் புலிகளோடு இணைந்தவர்.

டொமினிக் திருமணம் புரிந்த பெண் விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினரான பேபி சுப்ரமணியத்தின் சொந்த சகோதரியை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சேர்ந்த பொது டொமினிக் அந்த  இடத்திலேயே இல்லை .(1),தமிழ்செல்வனால் ஆயிரக்கணக்கான போராளிகள் வெளியேறினர் என்பது உங்களின் கற்பனைக்கதை (2)

டொமினிக்கின் தந்தையார் யாழ் மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் .டொமினிக் சட்டக்கல்லூரியில் படித்தார் என்பது பிழை ,உயர்தரம்( கணிதம் ) படித்துக்கொண்டிருக்கும் போதே இவரும் நியூட்டனும் ஒன்றாகவே  புலிகளில் இணைந்தனர் .(3)

டொமினிக்கின் மனைவி பெயர் சுகிர்தா ,இவர் ஆரம்ப கால உறுப்பினர் இல்லை ,1990ல்  இயக்கத்தில் இணைந்தவர் (4)

சரி விடுங்க இயக்கத்தை பற்றி அடி நுனி  தெரியாம கதை சொல்ல வெளிக்கிட்டா இப்பிடித்தான் முடியும் .இனியாவது செவிவழி கதை சொல்லுவதை நிப்பாட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலனுக்கு கற்பனைக்கதைகள் எழுதி எழுதி அந்த உலகத்திலையே இருப்பவராக்கும் கற்பனையில் புலி மீது சேறு அடிக்க நிர்மலனை விட வேறு ஆட்கள் கிடையாது .

சுயதணிக்கை.. இறந்தவருக்கு மரியாதை கொடுப்போம்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.