Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த ஒருவரைப்பற்றி நல்லது கெட்டது எழுவதற்கு இது நேரம் அல்ல என்பது எனது கருத்து   

  • Replies 67
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருந்து  விலக்கப்பட ஒருவரை போற்றி  பாடுவது  ஏற்புடையது  அல்ல  அப்படி விலகி அல்லது விலக்கப்பட்ட  பலர்  தளபதி மட்டங்கள் இருக்கு  மரணம் அடைந்தும் இருக்கினம் ஆகவே  டொமினிக் அவர்களுக்கு எதுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  என்றுதான்  புரியவில்லை ...

தலைமையை  விமர்சித்தார் ....இரட்டை  சூட்டடுப்பு   பொருமிய மேன்பாட்டு பேரவையில் நடைபெற்ற  சில நிதி மோசடி இவைகளுக்காவனே  அவர்   விலக்கபட்டார் ஆக இவரை  புலி உறுப்பினர்  என்னும்  தொனியில் பேசுவது தவறு ..

புலிகளில் கொஞ்ச காலம் இருந்ததாக கதை விட்டுக் கொண்டு

எல்லாமே தெரியும் என்ற மாதிரி கதைக்க வேண்டாம்

மிஸ்ரர் அஞ்சரன்

உங்கள் இன்றைய வயதை கணக்கிட்டால்

டொமினிக் அண்ணா இருந்த கால கட்டத்தில்

நீங்கள் விரல் சூப்பும் ஒரு சிறுவனாக இருந்துள்ளீர்கள்

பிற்காலத்தில் புலிகளில் இணைந்து இருந்தீர்கள் எனில்

அங்கு விலத்தப்பட்டவர்கள் அல்லது விலகியவர்கள் பற்றி

புதிதாக இணைகின்றவர்களுக்கு பாடம் எடுக்கும் வழக்கம்

இல்லை.

ஆகவே

யாரோ சொல்லிக் கேள்விப் பட்டதாக

உங்கள் கற்பனை கதைகளை அவிழ்க்க வேண்டாம்

அவரை நன்கு தெரிந்த அவருடன்

பழகிய ஆட்களும் இங்கு நிறைய

இருக்கினம் அப்பு

உண்மையில் புலிகளில் நீர் இருந்திருந்தால்

அவர்களின் முக்கிய பதவி ஒன்றில் இருந்து

பின் அமைதியான முறையில் வாழ்ந்து

மரணமானவரின் அஞ்சலித் திரியில் வந்து

கேவலமாக சத்தி எடுக்க மாட்டீர்

இன்னொரு திரியில்

ஈழக் கலைஞர்களை கவுரவிக்கின்றார்கள்

இல்லை என்று அழும் நீவீர் தான்

ஒரு காலகட்டத்தில் தேசியப் போராட்டத்தில்

பங்கு கொண்டு

எவருக்கும் உம்மைப் போன்று

இடைஞ்சல் தந்து கொண்டு இருக்காமலும்,

சில முன்னால் போராளிகள் போன்று

புலம்பெயர் நாடுகளில் மக்களை வெருட்டி

ரவுடித்தனம் செய்யாமலும்

அமைதியாக வாழ்ந்து, 

மரணித்த ஒரு போராளியை

கற்பனைக் கதைகளை

கொட்டி கேவலப்படுத்துகின்றீர்

த்தூ.................(என் சமூகத்தினை எண்ணி எனக்கு மேல் நானே துப்புகின்றேன் புரோ)

Edited by வைரவன்

வணக்கம்

டொமினிக் அண்ணாபற்றிய எந்தவித தகவலும் இல்லாதவர்கள் எழுதுவது நகைப்பாக இருக்கிறது, அவர் ஏன் விடுலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டார் ? யார் மூலமாக வெளியேறினார் என்பது அவரை நன்கறிந்தவர்களிற்கே புரியும்.♪அஞ்சரன் கூறும் எந்த காரணமும் அதில் இல்லை. (ஓரே ஊர்க்காரன் உறவுக்காரன் என்ற முறையில் எனது கருத்து )

  • கருத்துக்கள உறவுகள்

மாதக்கடைசியில் ஐயரிட்ட கணக்கு குடுக்க போகும் போது  ஏதாவது குறைஞ்சா நாங்க டொம்மரிட்ட தான் போய் நிப்போம் ,தனக்கு சகோதரி அனுப்புகிற காசில் இருந்து  எங்களுக்கு தருவார் .இவரின் சகோதரி அமெரிக்காவில் இருக்கின்றா

கனநாட்களுக்குப் பிறகு பரணி.. வாங்கோ..

ஆனாலும் பரணி.. நீங்கள் ஊர்க்காரர் அல்லது உறவுக்காரராக இருக்கலாம்.. அதற்காக நீங்கள் சொல்வது உண்மையாகிவிடாது. முகநூலில் வந்திருக்க வேண்டும்.

டொமினிக் அண்ணையை பற்றி  ஒரு வரியில் சொல்வது என்றால்=  வெளியே தெரியாத  அன்ரன் பாலசிங்கம்....

  • கருத்துக்கள உறவுகள்

கனநாட்களுக்குப் பிறகு பரணி.. வாங்கோ..

ஆனாலும் பரணி.. நீங்கள் ஊர்க்காரர் அல்லது உறவுக்காரராக இருக்கலாம்.. அதற்காக நீங்கள் சொல்வது உண்மையாகிவிடாது. முகநூலில் வந்திருக்க வேண்டும்.

முகனூலில் ஆயிரக்கனக்கானவரை இணைக்கிறது :o  .பிறகு அவ்வளவு பெரும் எழுதுகிற குப்பைகளை கூட்டி அள்ளி :D  ,சொந்த சரக்கு மாதிரி யாழில் விசிரவேண்டியதுதான் . :icon_idea:

டொமினிக்:::::
 
கரவெட்டியில்  இயங்கிய பேரவை என்ற  ஒரு அரசியல் அமைப்பை 90  ஆண்டு புலிகள் கூண்டோடு  கைது செய்தார்கள்
 
--------  எஞினியர் சுதா, உற்பட பலரை கைது செய்து விட்டார்கள்   இவருக்கு நெருங்கிய உறவினர்களும் அடங்கும்  அவர்களின் .>>>>>>>>>  வேலைக்கு நேரம் ஆகிவிட்டது இரவு வந்து எழுதுகிறேன்,,...

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு முதல் இவரைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை.உண்மையில்லையே தெரியாமல் தான் கேட்கிறேன் இவர் எதற்காக புலிகளில் இருந்து விலகினார் அல்லது விலத்தப்பட்டார்?...இவருக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ அல்லது செலுத்தாது பற்றியோ நான் கருத்து சொல்ல வரவில்லை. ஆனால் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்டால் தலைவரோடு ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கிய ராகவன் போன்றோர் இறந்தாலும் அஞ்சலி செலுத்தலாமா?

வணக்கம்,

ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்களையும், பிரதேசவாதம், சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

நன்றி

நியானி

நான் சொல்ல வந்தது உண்மை அது உறவு ஊர் என்பதைதாண்டி அவரை நன்கறிந்த ஆரம்பகால உறுப்பினர் எனக்கு அருகாமையில் வசிக்கிறார் அவர் கூறியவை, மேலும் போராட்டத்தின் இறுதி நேர போராளிகள் ஆரம்பகால போராளிகளைப்பற்றி தவறாக கதைப்பதத என்பது எமக்கான அவமானம்.

கனநாட்களுக்குப் பிறகு பரணி.. வாங்கோ..

ஆனாலும் பரணி.. நீங்கள் ஊர்க்காரர் அல்லது உறவுக்காரராக இருக்கலாம்.. அதற்காக நீங்கள் சொல்வது உண்மையாகிவிடாது. முகநூலில் வந்திருக்க வேண்டும்.

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்ட கருத்து ஒன்றின் மேற்கோள் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருந்து  விலக்கப்பட ஒருவரை போற்றி  பாடுவது  ஏற்புடையது  அல்ல  அப்படி விலகி அல்லது விலக்கப்பட்ட  பலர்  தளபதி மட்டங்கள் இருக்கு  மரணம் அடைந்தும் இருக்கினம் ஆகவே  டொமினிக் அவர்களுக்கு எதுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  என்றுதான்  புரியவில்லை ...

தலைமையை  விமர்சித்தார் ....இரட்டை  சூட்டடுப்பு   பொருமிய மேன்பாட்டு பேரவையில் நடைபெற்ற  சில நிதி மோசடி இவைகளுக்காவனே  அவர்   விலக்கபட்டார் ஆக இவரை  புலி உறுப்பினர்  என்னும்  தொனியில் பேசுவது தவறு ..

அஞ்சரன்

முரளிதரன் இல்லையென்றால் இயக்கமே 90 களில் அழிந்து போயிருக்கும் என

இயக்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து

அப்படி நடந்தார்கள்

இப்படி நடந்தார்கள் என பிழை பிடித்து

இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட

இயக்கத்தால் தண்டனை கொடுக்கப்பட ட ஒருவரைப்பற்றி

இங்கு பந்தி பந்தியாக எழுதியது இன்னும் பதிவுகளில் அப்படியே இருக்கு மறக்கவேண்டாம்......

அவர் செய்ய தரோகங்களில் ஒன்றையும் டொமினிக் அவர்கள் செய்யலையே....

நான் சொல்ல வந்தது உண்மை அது உறவு ஊர் என்பதைதாண்டி அவரை நன்கறிந்த ஆரம்பகால உறுப்பினர் எனக்கு அருகாமையில் வசிக்கிறார் அவர் கூறியவை, மேலும் போராட்டத்தின் இறுதி நேர போராளிகள் ஆரம்பகால போராளிகளைப்பற்றி தவறாக கதைப்பதத என்பது எமக்கான அவமானம்.

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்ட கருத்து ஒன்றின் மேற்கோள் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரன் (டொமினிக்) அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவரின் இழப்பால் வாடும் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு பெறுவோம். 83ம் ஆண்டுக்கு முன்பு இவருடன் பழகி இருக்கின்றேன். இவரின் தம்பி என்னுடன் ஒன்றாக படித்தவர். ஒரு சிறந்த அறிவாளியை நாம் இழந்து நிக்கின்றோம்.

ஆரம்பத்தில் பல தமிழ் இளைஞர்கள் பல வசதிகள் இருந்தும் தமிழ் ஈழம் என்ற உயர்ந்த லட்சியதிக் காக போராட போனார்கள். அப்படி ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக பல வசதிகள் இருந்தும் தன் இளமைக் காலங்களை அர்ப் பணிச்சவர் இவர். பல இக் கட்டான காலங்களில் பணி யாற்றியவர் (இந்திய ராணுவம் உட்பட). இப்போது ஒரு புலி வீரராக இல்லாமல், ஆனால் பலருக்கு அறிமுகமான சகோதரனுக்கு அஞ்சலி செய்வதில் ஏன் தயக்கம்? இது அரசியல் அல்ல, ஒரு அஞ்சலி. இங்கு பலரும் எழுதியது போல், தமிழன் என்ன பாவம் செய்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாதக்கடைசியில் ஐயரிட்ட கணக்கு குடுக்க போகும் போது  ஏதாவது குறைஞ்சா நாங்க டொம்மரிட்ட தான் போய் நிப்போம் ,தனக்கு சகோதரி அனுப்புகிற காசில் இருந்து  எங்களுக்கு தருவார் .இவரின் சகோதரி அமெரிக்காவில் இருக்கின்றா

நிதி விடயத்தில் புலிகள் கொஞ்சம் கடுமையான போக்குடன்தான் இருந்தார்கள்.
அப்படி இல்லது இருந்திருந்தால் இப்படி ஒரு அமைப்பை இயக்கி இருக்கவும் முடியாது.
டொமினிக் அவர்கள் நிதி மோசடி செய்ய வறுமை கோட்டின் கீழ் இருக்கவில்லை எனும் உங்கள் கருத்தில் ....
வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள்தான் நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் என்னும் இனொரு பதம் ஒழிந்து இருக்கிறது (நீங்கள் அப்படி பொருள் கொண்டு எழுதவில்லை என்பது எனக்கு தெரியும்) அனாலும் அப்படி பொருள் படுகிறது.
 
உங்களின் கருத்துக்களை வாசிக்கும்போது .... இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
யாழ் மாவட்ட தளபதியாக பானு அவர்கள் இருந்தபோது அவருக்கு மெய்பாதுகாப்பளராக இருந்த சுதுமலையை சேர்ந்த சுமன் என்பவர் 
15 லட்ச ரூபாவை களவாடினார்.
உடனேயே பானு அவர்களின் முகாமிற்கு சென்ற பொட்டம்மான்  வாய்தவறி வார்த்தையை விட்டுவிட்டார் ... ஒன்றும் செய்யமாட்டேன் இயக்கத்தை விட்டு வெளியில் விடுகிறேன் யார் எடுத்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று.
(முகாமில் இருந்தவர்களின் கை வேலை என்பதால் எல்லாரிலும் வீணாக சந்தேகம் கொள்ள முடியாத துர்பாக்கிய சூழலை தவிர்க்க அப்படி அவர் சொல்லியிருக்கலாம்) மறைவிடத்தில்  இருந்து பணத்தை மீட்டாலும். யாரின் கைவரிசை என்பது அவர்களுக்கு தேவையாக இருந்தது.
பின்பு இவர்தான் என்று தெரிந்த போது ..... இவரும் ஒத்துகொண்டார்.
இவரை விலத்தி விட்டார்கள் ஒன்றும் செய்யவில்லை . (இவரும் வறுமை கோட்டின் கீழ் இருக்கவில்லை) 
 
இளவலாயை சேர்ந்த நவுசாத் என்ற ஒரு போராளி 1990இல் குப்பி கடித்து வீரமரணம் ஆனார் 
(எந்த முகத்தோடு தளபதிக்கு (பானு) முன்பு செல்வேன்? என்று ஆதங்கத்தில்தான் வீணாக குப்பி அடித்தார்)
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் .... இங்கு எழுத விரும்பவில்லை. புலிவாந்தி எடுக்கிற கூட்டத்திற்கு இது அவலாக மாறலாம் என்பதால்.
 
பண்டத்தரிப்பு பொறுப்பாளராக இருந்த தராசு அவர்கள் 
பணத்தை தொலைத்தால்தான் பணிஸ்மனில் இருந்தார் (1990-1991) அவர் உண்மையில் பணத்தை தொலைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இருந்தாலும் தண்டனை என்பது பொறுப்பில்லாத காரணத்தினால் ஆகும்.
 
இங்கும் பாங்கில் நிதி நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள் கவன குறைவாக இருந்தால்.
அதற்கான தண்டனையை பெற்றுதான் ஆகவேண்டும்.
அதன் பொருள் அவர்கள் களவாடினார்கள் என்பதல்ல....
 
டொமினிக் அவர்களின் விடயத்திலும் அதுதான் நடந்தது 
டொமினிக் அவர்கள் தண்டனையை .... தனக்கு எதிரானதாக கருதினார். (என்ன சட்டத்துறை நீதி துறை என்று எதை படித்தாரோ தெரியவில்லை?)
 
மாத்தையாவின் விடயத்தின் போதும் யோகி அவர்களுக்கு அதுதான் நடந்தது.
அவர் தனது தப்பை புரிந்துகொண்டு தண்டனையை ஏற்று வெளியேறி இருந்தார்.  
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்

முரளிதரன் இல்லையென்றால் இயக்கமே 90 களில் அழிந்து போயிருக்கும் என

இயக்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து

அப்படி நடந்தார்கள்

இப்படி நடந்தார்கள் என பிழை பிடித்து

இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட

இயக்கத்தால் தண்டனை கொடுக்கப்பட ட ஒருவரைப்பற்றி

இங்கு பந்தி பந்தியாக எழுதியது இன்னும் பதிவுகளில் அப்படியே இருக்கு மறக்கவேண்டாம்......

அவர் செய்ய தரோகங்களில் ஒன்றையும் டொமினிக் அவர்கள் செய்யலையே....

இவரின் எழுத்தை வசிக்கும்போது ....

விழுந்து விழுந்து சிரித்தேன்.

அவர் கருணாவிற்கு கட்டிய சப்பறம் நினைவில் நின்றதால்.

.....................................

நியானி: ஒரு வரி தணிக்கை.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தெரியும் என்று விலாசம் காட்டப்போய் ,போராளிகளை  காட்டிக்கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை .அதனாலேயே நான் பல திரிகளில் எழுத வருவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு முதல் இவரைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை.உண்மையில்லையே தெரியாமல் தான் கேட்கிறேன் இவர் எதற்காக புலிகளில் இருந்து விலகினார் அல்லது விலத்தப்பட்டார்?...இவருக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ அல்லது செலுத்தாது பற்றியோ நான் கருத்து சொல்ல வரவில்லை. ஆனால் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்டால் தலைவரோடு ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கிய ராகவன் போன்றோர் இறந்தாலும் அஞ்சலி செலுத்தலாமா?

ஆறாம் அறிவின் செயற்பாடு என்பது பகுத்தாய்வது.

இப்ப பந்தி பந்தியாய் பகற்கனவு எழுத பலருக்கு பயன்படுகிறது.

உங்கள் அறிவுக்கு எட்டியதைதான் நீங்கள் செய்யமுடியும்.

ஜேசுவை காட்டிகொடுத்து கொலை செய்ய துணைப்போனவருக்கு கம்பளம் விரித்து வெள்ளி காசு கொடுக்க உலகில்

ஒரு கூட்டம் இருந்துதான் இருக்கிறது.

"இறந்தாலும் ......."

இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

.....................................

நியானி: ஒரு வரி தணிக்கை.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் அடக்கி வாசியுங்கோ ,இங்க வெறும் வாயோட சிலர் திரியுனம் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு தடவைகள் தம்பதியராய் எனது வீட்டுக்கு வருகை தந்தார்கள். டொமினிக்கின் மனைவி, பிள்ளை, குடும்பத்தினர் எவ்வளவு துயரில் இருக்கின்றார்களோ தெரியாது. ஒரு ஓரமாய் சிவனே என்று இருந்தவர்களை நாற்சந்திக்கு கொண்டுவந்து அலசி ஆராய்வதற்கு இதுவா தருணம்? நிர்மலன் மற்றும் அஞ்சரன் தமது சிந்தனைகளின் பலவீனங்களை இங்கு இனம்காட்டியுள்ளார்கள்.

டொமினிக் அவர்கட்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! துயரில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தெரியும் என்று விலாசம் காட்டப்போய் ,போராளிகளை காட்டிக்கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை .அதனாலேயே நான் பல திரிகளில் எழுத வருவதில்லை

ஏன் இப்படியும் சொல்லலாமே அவரைப் பற்றிய உண்மையை சொல்லப் போனால் புலிகள் விட்ட பிழையை எழுத வேண்டி வரும். அதனாலே எழுதவில்லை என்று சொல்லிப் போட்டு ஒரு அஞ்சலியை மட்டும் செலுத்திப் போட்டு போயிருக்கலாமே...எதற்கு பெரிசாய் பில்டப் போட தொடங்கினீங்கள்.

கேட்ட கேள்விக்கு பதில் ஒருத்தருக்கும் தெரியாது இதில ஒருத்தர் வந்து யேசுவாம்,காட்டிக் கொடுப்பாம்,மண்ணாங்கட்டியாம் என்ட கதை வேற

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு முதல் இவரைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை.உண்மையில்லையே தெரியாமல் தான் கேட்கிறேன் இவர் எதற்காக புலிகளில் இருந்து விலகினார் அல்லது விலத்தப்பட்டார்?...இவருக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ அல்லது செலுத்தாது பற்றியோ நான் கருத்து சொல்ல வரவில்லை. ஆனால் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்டால் தலைவரோடு ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கிய ராகவன் போன்றோர் இறந்தாலும் அஞ்சலி செலுத்தலாமா?

என்னைப் பொறுத்த வரையில் போராட்ட காலத்தில் உறுதுணையாக இருந்தவர்கள்;, போராட்டத்தின் தூண்களாக இருந்தவர்களை உரையாடுவதில் தவறில்லை. இங்கே அவர்களுக்கு கேணல், பிரிகேடியர் தரம் எதுவும் கொடுக்கவில்லைத்தானே.

வெளிநாடுகளில் இருந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு எல்லாம் நாட்டுப்பற்றாளர், மாமனிதர் பட்டங்கள் கொடுப்பது போல இவர்களுக்கு அவையும் கொடுக்கப்படுவதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.

ஆகவே, அன்று இவர்கள் போராட்டத்துக்கு செய்த பங்களிப்பு தொடர்பில் களத்தில் உரையாடுவதில் என்ன தவறு?

நான் அறிந்தவரை விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் மாத்தையா, கருணா போன்ற சிலரே.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உங்களது கேள்விக்கான பதில் இந்த திரியில் 4 வது பதிவிலுள்ளது. ராகவன் சுயவிருப்பில் விலகினவர்(?).

ஏன் இப்படியும் சொல்லலாமே அவரைப் பற்றிய உண்மையை சொல்லப் போனால் புலிகள் விட்ட பிழையை எழுத வேண்டி வரும். அதனாலே எழுதவில்லை என்று சொல்லிப் போட்டு ஒரு அஞ்சலியை மட்டும் செலுத்திப் போட்டு போயிருக்கலாமே...எதற்கு பெரிசாய் பில்டப் போட தொடங்கினீங்கள்.

கேட்ட கேள்விக்கு பதில் ஒருத்தருக்கும் தெரியாது இதில ஒருத்தர் வந்து யேசுவாம்,காட்டிக் கொடுப்பாம்,மண்ணாங்கட்டியாம் என்ட கதை வேற

ரதி உங்களது கேள்விக்கான பதில் இந்த திரியில் 4 வது பதிவிலுள்ளது. ராகவன் சுயவிருப்பில் விலகினவர்(?).

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் சேர்ந்த பொது டொமினிக் அந்த  இடத்திலேயே இல்லை .(1),தமிழ்செல்வனால் ஆயிரக்கணக்கான போராளிகள் வெளியேறினர் என்பது உங்களின் கற்பனைக்கதை (2)

டொமினிக்கின் தந்தையார் யாழ் மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் .டொமினிக் சட்டக்கல்லூரியில் படித்தார் என்பது பிழை ,உயர்தரம்( கணிதம் ) படித்துக்கொண்டிருக்கும் போதே இவரும் நியூட்டனும் ஒன்றாகவே  புலிகளில் இணைந்தனர் .(3)

டொமினிக்கின் மனைவி பெயர் சுகிர்தா ,இவர் ஆரம்ப கால உறுப்பினர் இல்லை ,1990ல்  இயக்கத்தில் இணைந்தவர் (4)

சரி விடுங்க இயக்கத்தை பற்றி அடி நுனி  தெரியாம கதை சொல்ல வெளிக்கிட்டா இப்பிடித்தான் முடியும் .இனியாவது செவிவழி கதை சொல்லுவதை நிப்பாட்டுங்கோ

டொமினிக் பொறுப்பில் இருந்த போது அவருக்கு கீழ் தமிழ்ச்செல்வன் இருந்து உள்ளார்.

இங்கே பலர் நிதி மோசடி காரணமாக வெளியேற்றப்பட்டதாக கருத்துக்கள் எழுதுகின்றனர். நான் அறிந்த வரை அவர், வெற்றி பெற்றால் தலைவரின் வெற்றி. தோல்வி அடைந்தால் அது தளபதிகளின் தோல்வி| என கருத்து தெரிவித்த இடத்தில் அதனை தமிழ்ச்செல்வன் அப்படியே விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தெரிவித்து இருக்கின்றார்.

டொமினிக் தொடர்பில் அவரின் உறவினர் கூறிய கருத்தினைத்தான் இங்கே எழுதினேன். இப்போது அவரை கேட்ட போது, இல்லை இயக்கத்தில் இணையாது விட்டால் தந்தையாரைப் போன்று வந்திருப்பார் என்று தெரிவிக்கின்றார்.

தமிழ்ச்செல்வனால் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரின் அணுகுமுறை காரணமாக வெறுப்படைந்து வெளியேறியதனை நீங்கள் கற்பனைக் கதை என்று கூறிக்கொண்டு இருங்கள். எனக்கு அது தொடர்பில் பிரச்சினை இல்லை. வரலாறு அதனைத்தான் கூறும். நீங்களும் நானும் இதில் வாதிட்டு எதுவும் ஆகப் போவது இல்லை.

இயக்கத்தின் அடி-நுனி தெரிந்துதான் நான் எழுதுகின்றேன். உங்களைப் போன்றவர்கள் மாயையில் இருந்து எழுதுகின்றீர்கள்.

என்னைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழீழம் எனும் இலட்சியத்தோடு இருந்து எந்தவித சமரசத்துக்கும் உடன்படாது சாவடைந்தார்.

ஆனால், அவர் இராஜதந்திரமாக செயற்படவில்லை என்பதுதான் எனது கவலை. அத்தோடு, அவருக்கு அருகில் இருந்தவர்களின் பிழையான அணுகுமுறை, பிழையான தகவல்கள், அவருக்காக முகமனுக்காக உரையாடி இல்லாத-பொல்லாத தகவல்களை வழங்கி இறுதியில் அவர் முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக்  யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாக இருந்தபோது ,தமிழ்ச்செல்வன் (தினேஷ் )தென்மராட்சி  இராணுவ பொறுப்பாளராக  இருந்தார் .இதில் எங்கே  டொமினிக்கின் கீழே தமிழ்ச்செல்வன்  இருந்ததாக வரும்  இராணுவப் பிரிவின் கீழ் அரசியல் பிரிவு வருமே தவிர அரசியல் பிரிவின் கீழ் இராணுவம் வராது .இது புலிகள் அமைப்பில் உள்ள நடைமுறை .

டொமினிக்கை பற்றி நல்லாய் தெரியாதுங்க ஆனா தமிழ்ச்செல்வன் ஒரு அண்டல் காகம் என்று சொல்லுவாங்க :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.