Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D :D :D

மழைத்துளி ஒன்று மனந் திறந்து பேசியது

சூரிய நெருப்பினால் தகித்த பூமியில் இருந்து

நீல மேகத்தினுள் புறப்பட்டேன் நீராவியாய்

ஆனந்தமாய் நிலவு வரை நீந்திவிட்டு

பஞ்சுபொதியாய் அலைந்த நான்

பூவுலக காதலியை முத்தமிடும் ஆவலில்

குளிர் காற்றின் இரைச்சலுடன்

வந்து குதித்தேன் துளித்துளியாய்

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

சபாஷ்..சரியான போட்டி... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளித்துளியாய் சிந்தும் கவிதைத்துளி

பூவாசமாய் மனதைத் தாலாட்டும்

புல்லின் மீது படிந்த பனித்துளியும்

மண்ணின் மீது விழுந்த மழைத்துளியும்

கண்னில் வடியும் கண்ணீரும்

மறைந்தே விடும் மாயமாய்

உன்னைப் பிரிந்திடினும்

என்னைப் பிரியாதிருக்கும்

நினைவுத் துளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத் துளிகள் நிரம்பிய உள்ளம்

கலங்கித் தவிக்கும் காளையின் மனம்

மகிழும் ஒரு நாள் மணக் கோலம் காணும்

மனம் கொண்ட மனையாள்

உன் வாசல் தேடி வருவாள் ,

கவலைகள் கலைந்து ஓடும்மேகம் போல

நினைவுகள் கனமற்று போகும்

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் நடுவே

வெண்ணிலா மெல்ல உதித்து எழும்

வாழ்வு என்றும் வளமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

வளமாகும் வாழ்வு என்று,

வழிமேல் விழி வைத்துக்

காத்திருந்தோம்!

விடுதலை தேடி,

வேள்வித்தீயில் விழுந்து,

விறகுகளின் தணலில்,

வெந்து சாம்பலாகி,

வெறும் நீறாகிப் போயினும்,

விடுதலை தேடும்,

வேட்கை மட்டும்,

விழி மூடாது இன்னும்,

வாழ்கின்றது!

காலமும், நேரமும்

கனிந்து வருவதற்காக,

காத்திருக்கின்றது, அது!

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி இருக்கும்

என்று நான் வயதுக்கு

வந்ததில் இருத்து கற்பனை

செய்த என் மனதை

முதலிரவு அன்று சூடான

மழையை என் தேகத்திட்குள்

பெய்து பூப் பூவாய்

சிதறடித்தாய் என் அன்பே <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி இருக்கும்

என்று நான் வயதுக்கு

வந்ததில் இருத்து கற்பனை

செய்த என் மனதை

முதலிரவு அன்று சூடான

மழையை என் தேகத்திட்குள்

பெய்து பூப் பூவாய்

சிதறடித்தாய் என் அன்பே

உடையார், சும்மா சொல்லக் கூடாது! அந்த மாதிரி ஒரு கவிதையைத் தூக்கிப் போட்டிட்டீங்கள்!

உங்களுக்காக, யாழ் களத்தின் முதலாவது பச்சை, என்னிடமிருந்து! வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், சும்மா சொல்லக் கூடாது! அந்த மாதிரி ஒரு கவிதையைத் தூக்கிப் போட்டிட்டீங்கள்!

உங்களுக்காக, யாழ் களத்தின் முதலாவது பச்சை, என்னிடமிருந்து! வாழ்த்துக்கள்!!!

புங்கையூரன் நன்றி உங்களது முதல் பச்சைக்கு. நான் நினைச்சேன் ரெட் விழும் Mohan அண்ணாவிடம் இருத்து

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என் ஆர் உயிர்

Yarl கள நண்பர்களே

மெது மெதுவாக என்

மனக் கவலைகள் விலகுகிறதே

மெது மெதுவாக என்

மனதில் வெளிச்சம் தெரிகிறதே

மெது மெதுவாக என்

மனது பாட ஆரம்பிகின்றதே

எல்லாம் நீங்கள் என்னையும்

உங்களுடன் இனைத்ததினாலா?

நன்றி நன்றி நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்கின்றதே,

அந்தக் கலக்கம்!

ஆகாய வீதியில் பறந்த,

அசதியில்,

மெல்லத் தரையிறங்கும்,

ஆகாயப் பறவை,

அகதிப் புகலிடம் தந்த,

அந்த நாட்டின் தரைகளைத்,

தட்டும் போதே,

முட்டி வரும் அழுகையின்,

விழித்திரை மறைப்பில்,

ஆரம்பிக்கின்றதே,

அந்தக் கலக்கம்!

சொந்த மண்ணின் வாசத்தை,

வந்த மண்ணில் தேடுகையில்,

ஆத்மாவின் அடித்தளத்திலும்,

அந்தக் கலக்கம்!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கமெதற்காகக்

காரியமாற்றும் திறனிருந்தால்

கலக்கம் எதற்காக!

உலகம் உனதாகும்

உயிர்கள் வசமாகும்

பெரியோர் உனை நாடி

பேரோடு புகழ் தருவார்

காரியமாற்றுகின்ற

கடுமுழைப்பில் நீயிருந்தால்!

ஆத்மாவைக் கொத்துவதேன்

அந்தரிக்கச் செய்வதுமேன்

அகக்கண்ணை திறந்துவிட்டால்

அத்தனையும் தெளிவாகும்

அடுத்த அடிதனையே

துணிவோடு எடுத்து வைத்தால்

கடியதென்று தெரிவதெல்லாம்

கலைந்துவிடும் ஒரு பொழுதில்!

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதில் எம்

30 வருட கனவை

சிதறடித்தாயே

முள்ளிவாய்க்காலில் உலகமே

நீ செய்த உதவியால்

சிங்கள காடையர்கள் குண்டு

மழை பொழிந்த்து,

எம் உறவுகளை மலை

போல் கொன்று குவித்தார்களே!

அவர்கள் இட்ட மரண ஓலம்

இன்னும் உன் கதில்

விழவில்லையா

எம் உறவுகளை அழித்தவனுக்கு

எப்போது துக்கு கயிறு

சொல் உலகமே சொல்

எப்போது உன் பாவங்களை கழுவப்போகிறாய்

சொல் உலகமே சொல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல் ஏந்தி சரித்திரம் படைத்திடும் பெண்கள் வாய்ச்

சொல்லில் வீரிய நடைபோடும் பெண்களாய்

அடுக்களை ஆயுதம் தரித்த கரங்கள் துப்பாக்கி

எடுத்தே போராடுவதும் அவனியிலே

ஆண்களுக்கு உதவுவதும் பெண்களே

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களே பூமியிதன்

இயங்குவிசையானதனால்

மனித இனம் தொடராக

வாழ்கிறது இவ்வுலகில்

பேய்கள் ஆளும் நாட்டில்

பெண்கள் குதறப்படும்

பேரவலம் நிகழ்கையிலும்

பெண்ணுரிமை பேசுகின்ற

உலகப் பெரும் அமைப்புகளோ

பொல்லாத மௌனமதை

சொல்லாது காப்பதுமேன்

நில்லாதா இந்த அவலம்

நேர் நின்று சொல்லுவீரா?

நிலை கெட்ட உலகமிதன்

நேர்மையற்ற மானிடரே!

  • கருத்துக்கள உறவுகள்

மானிடரே கேளீரா உலக மானிடரே கேளீரா

இலங்கையில் நடந்த கொடுமை தனை கேளீரா

இரத்த வெறி பிடித்த சிங்கள காட்டேரிகளின்

கொடுமை தனை கேளீரா கேளீரா

காட்டேரிகளின் கைகளை சிக்குன்டு மலை

போல் பிணமாக விழ்த்த எம் மக்களின் கூக்குரல் கேளீரா கேளீரா,

இக் காட்டேரிகளின் வெறி பிடித்த கொடுமை தனை கேளீரா கேளீரா,

கூண்டில் இந்த காடையர்களை ஏற்றும் வரை கேளீரா கேளீரா

உலக மானிடரே கேளீரா கேளீரா

  • கருத்துக்கள உறவுகள்

கேளீரா உறவுகளே,

மின்னாமல் முழங்காமல்,

மென் காற்றுக் கூட இல்லாமல்,

வந்து விட்ட மழை போல,

கண் முன்னே களம் மறைந்து,

கனவாகிப் போய் விட்ட,

கதை தன்னைக்,

கேளீரா உறவுகளே!

சொந்தமில்லாக் களமெனினும்,

சிந்தை தனை நிறைத்துச்

சொந்தங்கள் பல தந்து,

செந்தமிழ் வளர்க்கும் களம்!

இனிமேலும் வேண்டாம்,

இன்னுமொரு சோதனை! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சோதனைகள் இனி வேண்டாம்

சாதனைகள் தேவையென்போம்

சோதனையும் வேதனையும்

கண்டதெல்லாம் போதுமென்பேன்

எம்மினத்தின் துயர்போதும்

எதற்கு இனிச் சோதனைகள்!

சோதனையைச் சாதனையாய்

மாற்றிநின்ற வழிகாட்டி

பெரும் சோதனைகள்

கடந்து வந்தே

சாதனைகள் படைத்துநின்றார்

சாதனைகள் படைத்தலொன்றே

சோதனையை நீக்குமன்றோ

சோதனையைக் கடப்பதற்கு

கரங் கோர்த்து நாமெழுந்தால்

சோதனைகள் மறைந்தோடச்

சாதனைகள் படைத்திடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சாதனைகள் பல படைத்திடலாம் புறப்படு வீரத்தமிழா நீ முடங்கி கிடப்பது முறையோ

புறநானுற்று வரலாற்றையே புரட்டிப்போட்ட இனம்மல்லவா நாம் - வீழ்ந்து கிடப்பதா

அய்யகோ என ஒலமிடுவதா? என்னினத்தை மாற்றானிடம் மண்டியிட வைப்பதா

சோதனைகள் வேண்டாம் பட்டதுபோதும் என எதிரியிடம் இரந்து பிச்சை ஏந்துவதா

பண்டாரவன்னியன் சங்கிலிய மன்னன் வழி வந்த நாம் புற முதுகிடுவதா - எம்

இனத்து பெண்களை இழிவுபடுத்தி சீரழிக்க நாம் பார்த்து வீழ்ந்து கிடப்பதா

புறப்படு மறத்தமிழா வீழ்ந்து கிடந்து என்ன கண்டாய்?

அணிசேர், மனோபலம்கொள், வெட்டு குழி எம் நிலத்தில் எதிரிக்கு!

Edited by tigertel

எதிரிக்குத் தெரியாதா... எம்மை எப்படி வென்றார்கள் என்று..?

கூட்டுச் சேர்ந்தல்லோ எமக்கு குழி பறித்தார்கள்!

கூத்தும் கும்மாளமுமாய் எத்தனை நாள் களிப்பார்கள்?

ஒரு கதவு மூடினாலும்... தலைவாசல் திறந்திருக்கு...!

மறுபடியும் உறுதியோடு தொடர்வோம் இலட்சியப் பயணத்தை....

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சியப் பயணத்தை

இடர்களைந்து தொடர்வதற்கு

மக்களிட்ட ஆணையதை

கூட்டமைப்பார் புரிந்து கொண்டு

நாடமைக்கும் பணிக்காக

வேடங்களை இனங்கண்டு

வெற்றி பெற உழைப்பாரா

கட்சி அரசியலில்

கதை பேசித் திரிவாரா

புள்ளடியே ஆயுதமாய்

புரட்சிசெய்த எம்மக்கள்

மக்களொன்றும் மாக்களல்ல

என்பதையே புரியவைத்தார்

புரியாத சிங்களத்தை

கண்ணுறங்கும் இவ்வுலகை

புரியவைக்க இயலாது

புரியும் வழியொன்றுண்டு

வாக்ளிப்பைக் கோருதலே

அழியுமினம் காக்க

அரியதொரு வழியாகும்!

Edited by nochchi

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழியாகும் ஏது என்றே

விழித்திருந்தே விடை தெரியா

கேள்விக்கணைகளோடு பரிதவித்து

அல்லல் படும் இரத்த உறவுகள்

பழி தீர்த்து பாவந்தேட

வழி தேடும் சகாக்களை

கலி தீர்க்கும் கந்தன் அவன்

பலிதான் தீர்க்க மாட்டானா

பலிக் கடாக்களாய்

பலியாகப்போகும் எம்மினத்தின்

வலி உணர்ந்து கதறுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு ஒரு பச்சை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு ஒரு பச்சை

:)

  • கருத்துக்கள உறவுகள்

கதறுகிறோம் கதறுகிறோம்

காலமெல்லாம் துயரமுடன்

எதுவுமற்றுத் தோணியிலே

எம் தேசம் வந்தவனோ

தம்தேசம் என்று சொல்லி

எம்மினத்தை அழிக்கின்றான்

எப்போது இது மாறும்

என்றெமக்குப் புரியவில்லை

எல்லோரும் சொல்லுகிறார்

ஒற்றுமையாய் நாமிருந்தால்

சத்தியமாய் சாத்தியமாம்

புரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஒற்றுமையை காண்பதற்குக்

கொடுத்தவிலை போதாதா?

இனியும் கொடுப்பதற்கும்

எங்களினம் தாங்கிடுமா?

புரியாத புதிர்போலத்

தூங்குவாதாய் நடிக்கின்ற

துரைமாரே நீங்களெல்லாம்

தன்முனைப்பைக் களைந்துவிட்டு

நேர்கோட்டைப் போட்டுவிட்டு

ஒரு கோட்டில் நிற்பீரா?

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி நீங்களா எழுதினீங்கள் சூப்பராய் இருக்குது...பாராட்டுகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.