Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

zoxva_199917.jpg

பெண்கள்...

  • பெயரை மாற்றிக்கொள்கிறார்கள்
  • வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள்
  • பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள்
  • உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள்
  • உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள்
  • உங்கள் வாரிசை சுமக்கிறார்கள்
  • உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள்
  • இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள்
  • உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள்
  • உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள்

அவளின் கடைசி மூச்சு வரை உங்களுக்கு அனைத்தையும் செய்கிறாள், சமையல், வீட்டை பராமரிப்பது, உங்கள் பெற்றோரை கவனிப்பது, குழந்தை வளர்ப்பு, சம்பாதித்தல், உங்களுக்கு ஆலோசகராக, நீங்கள் ஓய்வெடுக்க, உங்கள் உறவினர்களின் உறவை பேண இவையனைத்தையும் செய்கையில் தன்னை வருத்தி, பொலிவிழந்து தனது சுய விருப்புகளை மறக்கிறாள்..

"வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர் ஆடவர் உயிர்"

என சங்க இலக்கியம் செப்புகிறது.

"பெ‌ண்ணா‌ய் ‌பிற‌ந்‌திட மாதவ‌ம் செ‌ய்‌திட வே‌ண்டு‌ம்" எ‌ன்று வா‌‌க்கும் இரு‌க்‌கிறது..

Happy women's week!

-My token of appreciation to women :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kkalam2.jpg

ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கான சிறு பரிசுப்போட்டி நடந்தது..

போட்டியின் தலைப்பு "உங்கள் தந்தை உங்களுக்கு செய்தவற்றில், மிக அருமையான விடயம் என்ன..?"

பெரும்பாலான குழந்தைகள், தங்கள் தந்தையின் அன்பு, அவர் வாங்கித் தந்த பரிசுப் பொருள்கள், விளையாட்டு பொம்மைகள் பற்றி புகழ்ந்து எழுதித் தள்ளின.. :)

ஆனால் ஒரேயொரு குழந்தை மட்டும் மிகச் சிறப்பாக ஒரு வரியில் எழுதி பரிசை தட்டிச் சென்றது..

அந்த வரிகளை வாசித்தால் உங்கள் முகத்திலும் புன்னகையும், நேசமும் பூக்கும்.. :o

என்ன வரி அது?

..

..

..

..

"என் தந்தை எனக்குத் தந்த மிகச் சிறந்த பரிசு, என் அம்மாவை திருமணம் செய்ததுதான்" :icon_idea:

.

-நண்பர் சொன்னது.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன எழுதி என்ன அண்ணா. இதில் எழுதியவற்றை வாசிக்கும் வரை தான் அவற்றை ஆண்கள் நினைவில் வைத்திருப்பார்கள் :lol: 

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களுக்கு ஆண்களை விட ஆயுசு கூடுதல் !
காரணம் மிக தெளிவானது.
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு ஆண்களை விட ஆயுசு கூடுதல் !
காரணம் மிக தெளிவானது.

ஏன் என்ன காரணம் ???எனக்குத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள்... பற்றி யதார்த்த பூர்வ உண்மைகள்.. இவை தாம்......

  • பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் - சட்டம் போட்டுள்ளதால் மாற்றுகிறார்கள். மற்றும்படி அவர்களா விரும்பி மாற்றுவதில்லை. (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்.) :)
  • வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள் - கணவனின் உழைப்பை உறிஞ்சி.. தனிக்குடித்தனம் போய் உல்லாசமாக வாழ விரும்புவது எல்லாம் தியாகமா. முடியல்ல. :rolleyes:
  • பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் - ஆண்கள் மட்டும் என்ன அம்மா மடியிலையே இருந்திடுறாங்களா. இவை பிரிஞ்சு போய் என்ன தனியவா வாழினம். குடும்பமுன்னு கட்டிக்கிட்டவனை தனிமையில் வைச்சு.. வதைக்கல்ல. அதுக்கு வசதியா பிரிகிறார்கள். :lol:
  • உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் - வேற வழி. சிம்பன்சி கூடவா வாழ்கையை தொடர முடியும். இயற்கையின் நியதி அப்படி. :D
  • உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் - ஒழுங்கா இருக்கிற வீட்டை குப்பை ஆக்குகிறார்கள். ஏதோ தங்கள் சத்தத்தில் தான் வீடு இயங்குவது போல சவுன்டு விடுகிறார்களே தவிர.. மனிசன்காரன் சுகமில்லைன்னு 3 நாள் வீட்டில கிடந்திட்டானுன்னு வையுங்க.. சவுன்டு ஓய்ஞ்சிடும். :o
  • உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் - அப்ப அது அவர்களின் வாரிசு இல்லையா. என்னையா கதை இது. முட்டையை உள்ள வைச்சுக்கிட்டு விடமாடம் என்றால்.. ஆண்கள் என்ன தான் செய்வது. சுமந்து தான் ஆகனும். கோழி மாதிரி முட்டையை வெளில விடலாமில்ல. பொரிச்சாவது சாப்பிடலாம். :lol:
  • உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள் - பார்ரா.. திரும்ப திரும்ப ஒன்றையே பேசுறாரு. அது அவர்களின் வாரிசும் கூட. முட்டையை எதுக்கு உள்ள வைச்சிருக்கீங்க. வெளில விடுங்க. இயற்கையட்ட அதை கேட்டுப் பெறுங்க. ஆண்களை ஏன் அதுக்கு வையுறீங்க. :D
  • இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் - புருசன்காரன் கஸ்டப்பட்டு உழைக்கிறானே என்ற சிந்தனை இல்லாமல்..ரீவி முன்னாடி இருந்து நொறுக்கி தின்னிறதால வாற பிரச்சனை. ஜிம்மு.. கிம்மு போனா உடம்பு.. சிக்கின்னு இருக்கும் தானே. அதுக்கு நாங்க தான் முயற்சிக்கனும். புருசன்காரன் உங்களுக்காக ஜிம் போக முடியாது. :lol:
  • உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள் - பிரசவிக்க முடியாதுன்னா.. எதுக்கு படுக்கையை பரிமாறப் போறீங்க. கல்யாணம் காட்சின்னு உட்கார அவதிப்படுறீங்க. சும்மா சிவனேன்னு அம்மா வீட்டில குந்திக்க வேண்டியானே. :)
  • உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் - எங்க சூட்டுகிறார்கள். நாட்டில சட்டம் அப்படி இருக்கிறதால தான் பெயரே வைக்கிறார்கள். :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள்... பற்றி யதார்த்த பூர்வ உண்மைகள்.. இவை தாம்......

  • பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் - சட்டம் போட்டுள்ளதால் மாற்றுகிறார்கள். மற்றும்படி அவர்களா விரும்பி மாற்றுவதில்லை. (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்.)
  • வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள் - கணவனின் உழைப்பை உறிஞ்சி.. தனிக்குடித்தனம் போய் உல்லாசமாக வாழ விரும்புவது எல்லாம் தியாகமா. முடியல்ல.
  • பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் - ஆண்கள் மட்டும் என்ன அம்மா மடியிலையே இருந்திடுறாங்களா. இவை பிரிஞ்சு போய் என்ன தனியவா வாழினம். குடும்பமுன்னு கட்டிக்கிட்டவனை தனிமையில் வைச்சு.. வதைக்கல்ல. அதுக்கு வசதியா பிரிகிறார்கள்.
  • உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் - வேற வழி. சிம்பன்சி கூடவா வாழ்கையை தொடர முடியும். இயற்கையின் நியதி அப்படி.
  • உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் - ஒழுங்கா இருக்கிற வீட்டை குப்பை ஆக்குகிறார்கள். ஏதோ தங்கள் சத்தத்தில் தான் வீடு இயங்குவது போல சவுன்டு விடுகிறார்களே தவிர.. மனிசன்காரன் சுகமில்லைன்னு 3 நாள் வீட்டில கிடந்திட்டானுன்னு வையுங்க.. சவுன்டு ஓய்ஞ்சிடும்.
  • உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் - அப்ப அது அவர்களின் வாரிசு இல்லையா. என்னையா கதை இது. முட்டையை உள்ள வைச்சுக்கிட்டு விடமாடம் என்றால்.. ஆண்கள் என்ன தான் செய்வது. சுமந்து தான் ஆகனும். கோழி மாதிரி முட்டையை வெளில விடலாமில்ல. பொரிச்சாவது சாப்பிடலாம்.
  • உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள் - பார்ரா.. திரும்ப திரும்ப ஒன்றையே பேசுறாரு. அது அவர்களின் வாரிசும் கூட. முட்டையை எதுக்கு உள்ள வைச்சிருக்கீங்க. வெளில விடுங்க. இயற்கையட்ட அதை கேட்டுப் பெறுங்க. ஆண்களை ஏன் அதுக்கு வையுறீங்க.
  • இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் - புருசன்காரன் கஸ்டப்பட்டு உழைக்கிறானே என்ற சிந்தனை இல்லாமல்..ரீவி முன்னாடி இருந்து நொறுக்கி தின்னிறதால வாற பிரச்சனை. ஜிம்மு.. கிம்மு போனா உடம்பு.. சிக்கின்னு இருக்கும் தானே. அதுக்கு நாங்க தான் முயற்சிக்கனும். புருசன்காரன் உங்களுக்காக ஜிம் போக முடியாது.
  • உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள் - பிரசவிக்க முடியாதுன்னா.. எதுக்கு படுக்கையை பரிமாறப் போறீங்க. கல்யாணம் காட்சின்னு உட்கார அவதிப்படுறீங்க. சும்மா சிவனேன்னு அம்மா வீட்டில குந்திக்க வேண்டியானே.
  • உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் - எங்க சூட்டுகிறார்கள். நாட்டில சட்டம் அப்படி இருக்கிறதால தான் பெயரே வைக்கிறார்கள்.

'எங்கேயடா, நம்ம ஆளைக் காணோமே?' என நினைத்தேன், நடைமுறைக்கு ஒத்தே வராத உங்கள் விதண்டாவாதங்களை படித்து சிரித்துவிட்டேன்.. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

'எங்கேயடா, நம்ம ஆளைக் காணோமே?' என நினைத்தேன், நடைமுறைக்கு ஒத்தே வராத உங்கள் விதண்டாவாதங்களை படித்து சிரித்துவிட்டேன்.. :D:)

அண்ணா.. இதில எது விதண்டாவாதம்.. நாட்டில.. வீட்டில நடக்கல்ல என்று சொல்லிட்டு.. சிரிச்சிட்டு.. எஸ் ஆகுங்க. அப்படிச் சொல்லாமல்.. வெறுமனவே விதண்டாவதம் என்பது ஏற்கக் கூடிய ஒன்றல்ல. ஏன்னா.. நாட்டில.. பூலோகத்தில..  பெண்களின்.. நடப்பை தான் நாங்க கருத்தில நகைச்சுவையா.. பிரதிபலிச்சிருக்கிறம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமட்டும்  புரியுது

கடவுள் என்பவனுக்கு கடவுள்

கல் என்பவனுக்கு கல்....

அதேபோல் அனுபவமும் வயசும்

கல் என்பவனையும் கடவுள் என்று சொல்லவைக்கும்

அதற்க நானே ஒரு உதாரணம்... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா.. இதில எது விதண்டாவாதம்.. நாட்டில.. வீட்டில நடக்கல்ல என்று சொல்லிட்டு.. சிரிச்சிட்டு.. எஸ் ஆகுங்க. அப்படிச் சொல்லாமல்.. வெறுமனவே விதண்டாவதம் என்பது ஏற்கக் கூடிய ஒன்றல்ல. ஏன்னா.. நாட்டில.. பூலோகத்தில..  பெண்களின்.. நடப்பை தான் நாங்க கருத்தில நகைச்சுவையா.. பிரதிபலிச்சிருக்கிறம். :icon_idea::)

இதில் நான் "எஸ்" ஆக ஒன்றுமில்லை நெடுக்ஸ்.. !

உங்களின் விடலை வயதில், உங்களைப் போன்றே பேசியும் பின்னர் வாழ்க்கை பாதையை கடந்தே வந்திருக்கிறேன்.. முழங்காலுக்கும் கீழுள்ள பொடியர் ஆற்றாமையில் அறைவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியுமா..? காலமும், வயதும் கனியும்போது அனுபவத்தால் உணர்ந்துகொள்வீர்கள்.. அதுவரை "பெண்மை ஒன்றும் போற்றுதற்குறியதல்ல!"  என்று நீங்கள் கூறும் கருத்தில் வென்றதாகவே  இருக்கட்டுமே!  :)

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் பெண்கள் இயற்கையாய் ஆற்ற வேண்டிய கருமங்களுக்கு ஆண்களுக்கு விலை வைக்கும் கீழ்த்தரம்.. இங்க இல்லைப் பாருங்க. தன் குஞ்சை நனி குளிருலும்... தானே காக்கனுன்னு இயற்கை உணர்வு பெற்று அதன் கீழ் செயற்படும்.. இந்த் தாய்.. பெண் எங்கே.. ராஜவன்னியன் அண்ணா விலை வைக்கும் மனிதப் பெண்கள் எங்கே.... மனிதப் பெண்களுக்கு ஆண்கள் சிலர் வைக்கும் விலை தான் அவர்களை உச்சிப்பப்பாவில் தலைகால் புரியாமல் ஆட வைக்கிறதோ என்று சிந்திக்க தோன்றுகிறது.  :lol:  :icon_idea:

10403238_10153115728911810_2082948957561

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் பெண்கள் இயற்கையாய் ஆற்ற வேண்டிய கருமங்களுக்கு ஆண்களுக்கு விலை வைக்கும் கீழ்த்தரம்.. இங்க இல்லைப் பாருங்க. தன் குஞ்சை நனி குளிருலும்... தானே காக்கனுன்னு இயற்கை உணர்வு பெற்று அதன் கீழ் செயற்படும்.. இந்த் தாய்.. பெண் எங்கே.. ராஜவன்னியன் அண்ணா விலை வைக்கும் மனிதப் பெண்கள் எங்கே....?

குளிருக்கு பாதுகாக்கும் குஞ்சை சிலாகிக்கும் நெடுக்ஸ் அவர்களே, உங்கள் தாய் மண்ணில் தினந்தோறும் தன் குஞ்சுகளை காத்த இப்படிப்பட்ட தாய்களும் உங்கள் பார்வையில் கீழ்த்தரமா? :o

படங்கள் எவ்வளவோ போடலாம்,. ஆனால் உங்கள் கருத்தில் நியாயம் இல்லை!

4701d0df02bb2e970b91fc0e4bffd771.jpg?v=2

HY07_S_A_FOR_2__HY_1830795f.jpg

பெண்கள்... பற்றி யதார்த்த பூர்வ உண்மைகள்.. இவை தாம்......

  • பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் - சட்டம் போட்டுள்ளதால் மாற்றுகிறார்கள். மற்றும்படி அவர்களா விரும்பி மாற்றுவதில்லை. (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்.) :)
  • பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் - ஆண்கள் மட்டும் என்ன அம்மா மடியிலையே இருந்திடுறாங்களா. இவை பிரிஞ்சு போய் என்ன தனியவா வாழினம். குடும்பமுன்னு கட்டிக்கிட்டவனை தனிமையில் வைச்சு.. வதைக்கல்ல. அதுக்கு வசதியா பிரிகிறார்கள். :lol:
  • உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் - வேற வழி. சிம்பன்சி கூடவா வாழ்கையை தொடர முடியும். இயற்கையின் நியதி அப்படி. :D
  • உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் - ஒழுங்கா இருக்கிற வீட்டை குப்பை ஆக்குகிறார்கள். ஏதோ தங்கள் சத்தத்தில் தான் வீடு இயங்குவது போல சவுன்டு விடுகிறார்களே தவிர.. மனிசன்காரன் சுகமில்லைன்னு 3 நாள் வீட்டில கிடந்திட்டானுன்னு வையுங்க.. சவுன்டு ஓய்ஞ்சிடும். :o
  • உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் - அப்ப அது அவர்களின் வாரிசு இல்லையா. என்னையா கதை இது. முட்டையை உள்ள வைச்சுக்கிட்டு விடமாடம் என்றால்.. ஆண்கள் என்ன தான் செய்வது. சுமந்து தான் ஆகனும்.
  • இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் - புருசன்காரன் கஸ்டப்பட்டு உழைக்கிறானே என்ற சிந்தனை இல்லாமல்..ரீவி முன்னாடி இருந்து நொறுக்கி தின்னிறதால வாற பிரச்சனை. ஜிம்மு.. கிம்மு போனா உடம்பு.. சிக்கின்னு இருக்கும் தானே. அதுக்கு நாங்க தான் முயற்சிக்கனும். புருசன்காரன் உங்களுக்காக ஜிம் போக முடியாது. :lol:
  • உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் - எங்க சூட்டுகிறார்கள். நாட்டில சட்டம் அப்படி இருக்கிறதால தான் பெயரே வைக்கிறார்கள். :icon_idea:

சென்றிமென்ட் எல்லாத்தையும் விட்டுட்டு கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் நெடுக்கு சொல்ல்லியதில் மேற்சொன்ன விடயங்களை  நானும் ஆமோதிக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

குளிருக்கு பாதுகாக்கும் குஞ்சை சிலாகிக்கும் நெடுக்ஸ் அவர்களே, உங்கள் தாய் மண்ணில் தினந்தோறும் தன் குஞ்சுகளை காத்த இப்படிப்பட்ட தாய்களும் உங்கள் பார்வையில் கீழ்த்தரமா? :o

படங்கள் எவ்வளவோ போடலாம்,. ஆனால் உங்கள் கருத்தில் நியாயம் இல்லை!

4701d0df02bb2e970b91fc0e4bffd771.jpg?v=2

HY07_S_A_FOR_2__HY_1830795f.jpg

தாய்மை உணர்வுள்ள.. எந்த உயிரும் இதைச் செய்யும். இதற்குப் போய்.. அவளை ஏன் தாயாக்கினீர்கள்.. அவளை ஏன் கர்ப்பம் சுமக்க விட்டீர்கள்.. அவளுக்கு என் வயிறு பெருக்க விட்டீர்கள்.. என்று விலை வைப்பது.. தாய்மை பண்புகள் எல்லாத்தையும் ஆண்களின் தேவையாக காட்ட நினைப்பது தான் அண்ணா தவறு. இப்ப சொல்லுங்க எது நியாயம்.. நாங்க சொன்னதா.. நீங்க பெண் என்பவள் இயற்கையாக பெறும் இயல்பான தாய்மைக்காக..ஆண்களை தாக்கினதா..?! :lol:  :icon_idea:

ஆண்களின் இந்த எதேச்சிகார அலட்சியத்தை விட, பெண்ணிற்கு இயற்கை கொடுத்த அந்த உயரிய வரத்தை, பாரத்தைதான் போற்றுகிறோம், 'அது இயற்கை உங்களுக்கு கொடுத்த விதி, கம்முனு கெட' என்று ஆண் என்ற திமிரில் திரியும் ஆணவப் போக்கை தான் சாடுகிறோம். :)

தமிழ் நாட்டில் அம்மா சென்டிமென்ட் தான் அடித்தளம் ஆனால் நடப்பு எதிர்மாறு .

பெண்ணை அடக்க ஆண்கள் செய்யும் அடுத்த வித்தைகள் தான் உந்த புகழாரங்கள்.

எப்படியோ பெணகளை அடக்கியாள ஆண்கள் நினைக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டதே பெரிய விடயம் தான்.

ஏன் பெண்களை அடக்கணும்? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இப்போதும் பழங்காலத்திலேயே இருக்கின்றார்கள்
பெண்கள் அதை விட்டு இப்போது எங்கேயோ போய்விட்டார்கள்.

என்னிடம் இல்லாத இனிப்பு எப்போதும் எனக்குப் புளிக்கும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் இந்த எதேச்சிகார அலட்சியத்தை விட, பெண்ணிற்கு இயற்கை கொடுத்த அந்த உயரிய வரத்தை, பாரத்தைதான் போற்றுகிறோம், 'அது இயற்கை உங்களுக்கு கொடுத்த விதி, கம்முனு கெட' என்று ஆண் என்ற திமிரில் திரியும் ஆணவப் போக்கை தான் சாடுகிறோம். :)

நீங்க பூமில தானே வாழுறீங்க. ஆண்கள் பலர் பெண்கள் முன்னால் வாய் பொத்தி.. கைகட்டி மெளனிகளாக வாழ்வதை பார்த்ததில்லையா..?! எதேட்சதிகாரம் செய்வதில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. சவுண்டு விட்டே காரியத்தை சாதிக்க நினைப்பவர்கள் அவர்கள்.

பெண்களிடமும் திமிரும் ஆணவமும் பொறாமையும் நிறைஞ்சு கிடக்குது. ஆனால் நீங்க ஆண்களை வையுறதுக்கு சொன்ன காரணங்கள்.. இயற்கையில் ஆண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையைக் கூட அவர்கள் இழக்கனும் என்பது போல பெண்கள் புகழ்பாடும் நோக்கில் உள்ளது.

அதிகமாக பெண்களை புகழ்வதும்.. அவர்களுக்கா வழிவதும்.. ஒரு நாளும் அவர்களை மகிழ்விக்காது. உங்கட பருப்பு வேகாதண்ணா..! பெண்களுக்கு தெரியும்.. தாங்க செய்யுற அநியாயத்துக்கு தான் அனுபவிக்கிறார்கள் என்று. :lol::icon_idea:

தன்மேல் பிழையோ/எதிர்பார்ப்போ இல்லையெனில் ஆண்களுக்கு கைகட்டி வாய் பொத்தி வாழ ஏன் அவசியம் ஏற்படுகிறது? :lol:

எது ஆண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை? உடல், மன ரீதியான எளியோரை தாழ்த்தி இகழ்வதா? :o

போற்றுதல் என்பதை 'கன்சிடெரேட்' என்ற வகையில் சொல்ல வந்தேன்..அதை காண்பித்து ஒரு காரியத்தையும் சாதிக்கும்/பருப்பு வேக வைக்கும் நோக்கம் எதுவுமில்லை..

பெண்களுக்கு இயற்கை கொடுத்த கூடுதல் வரத்தை/பாரத்தை தண்டனை என பார்த்து எள்ளி நகையாடும் உங்கள் கண்களில்தான் பிழை. பெண்களில் அல்ல! :icon_idea:

அண்ணா பச்சை இல்லைப் போட. சிலருக்கு நீங்கள் என்னதான் கூறினாலும் புரியவே புரியாது அண்ணா. நீங்கள் எழுதுவது அவர்களுக்கு விழலுக்கு இறைத்த நீர். :lol: :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

தன்மேல் பிழையோ/எதிர்பார்ப்போ இல்லையெனில் ஆண்களுக்கு கைகட்டி வாய் பொத்தி வாழ ஏன் அவசியம் ஏற்படுகிறது? :lol:

எது ஆண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை? உடல், மன ரீதியான எளியோரை தாழ்த்தி இகழ்வதா? :o

போற்றுதல் என்பதை 'கன்சிடெரேட்' என்ற வகையில் சொல்ல வந்தேன்..அதை காண்பித்து ஒரு காரியத்தையும் சாதிக்கும்/பருப்பு வேக வைக்கும் நோக்கம் எதுவுமில்லை..

பெண்களுக்கு இயற்கை கொடுத்த கூடுதல் வரத்தை/பாரத்தை தண்டனை என பார்த்து எள்ளி நகையாடும் உங்கள் கண்களில்தான் பிழை. பெண்களில் அல்ல! :icon_idea:

பல ஆண்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்கக் காரணம் அவர்களில் பிழை என்றல்ல.. பெண்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவே மாட்டார்கள்.. வீணா ஏன் வாயைக் கொடுத்துப் புண்ணாகிக்குவான் என்று தான். இதுதான் யதார்த்தம். நீங்கள் அதனை வீட்டில் அனுபவிப்பீர்கள். இங்கு வெளிப்படையா ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். காரணம்.. பெண்களின் குரலாக வெளியில் நடிக்க விரும்புகிறீர்கள். அதற்காக உங்கள் உரிமைக் குரலை அமுக்கிக் கொள்கிறீர்கள்.

இயற்கையில் உள்ளதை ஆண்களின் மீதான தவறாகிக்கி அதனை இகழ்வாக்கும் ஒரு சிலர் தான்.. எளியோர் வலியோர் என்ற வகைப்படுத்தலையும் செய்கின்றனர். இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவ பலம்.. பலவீனம் உள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதும்.. பலத்தை பலவீனத்தை வெல்ல பாவிப்பதும்..  இகழ்ச்சியல்ல. பெரிய புயலின் பலத்தின் முன் பலவீனமான மனிதன் நிற்க முடியாது. அதன் வழியில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறான். அது தான் புத்திசாலித்தனம். பெண்கள்.. சொந்தப் புத்தியை.. (ஆண்களைப் போல) பாவிக்கனுமே தவிர ஆண்களை குறை சொல்வதிலேயே அதனை பாவித்து ஒரு பலனும் இல்லை.

ஒன்றைப் போற்ற இன்னொன்றை அநாவசியமாக.. யதார்த்தத்திற்கு புறம்பாக தூற்றுதல்.. என்பது எதையோ.. அடைய விரும்புதல் என்றாகிறது. அந்த வகையில்.. இது ஒரு வகை பருப்பு அவியலே..! :lol:

இயற்கை வரமோ பாரமோ... கொடுக்கவில்லை. இயற்கையில்.. ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சிறப்பும்.. தொழிலும் உள்ளது. அதைச் செய்ய அது இசைவாக்கப்பட்டுள்ளது. அல்லது இசைவாக்கம் அடைகிறது. அதை பாரம்.. வரம் என்று வரையறுக்கும் மனித சிந்தனை தான் தவறானது. சின்னக் குருவியை பார்த்து பருந்து நினைக்க முடியுமா..  என் உடல் இவ்வளவு பாரமா இருக்கே.. அந்தக் குருவி போல உடம்பிருந்தா எவ்வளவு நல்லமுன்னு. இயற்கை தனக்கு வஞ்சித்துவிட்டதாக பருந்து கவலைப்பட்டுக்கிட்டே வாழ விளைந்தால் நிலை..?!

அதுஅது தனக்குரிய சிறப்பை.. இயல்பை.. சரிவர பாவித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை விடுத்து.. ஒன்று இன்னொன்றை குறை சொல்லி.. தான் பட்சாதபத்துக்குரியது என்ற சிந்தனையோட்டத்தில்.. பாவம்.. புண்ணியம்.. புகழ்ச்சி.. வரம்.. பாரம் என்ற பதங்களுக்குள்.. உணர்வுகளை.. இயல்புகளை சிறையிடுவது தான்.. அடிமைத்தனத்துக்கு வழிகோலுகிறது. மனிதப் பெண்கள்.. பட்சாதாபிகளாகியதால் தான்..  அதனை எதிர்பார்ப்பதால் தான் நலிந்தோர் என்ற சிந்தனை வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதே மனிதன் சிங்கத்தின் பெண்ணை.. நலிந்தது என்று கருதுவானா..?! ஏன் இல்லை. அதுக்கு.. பாவம்.. புண்ணியம்.. வரம்.. புகழ்ச்சி.. பாரம்.. இந்தச் சிந்தனைகள் இல்லை. இயற்கை என்ன அளித்துள்ளதோ.. அதை பாவித்து அது வாழ்ந்து கொள்கிறது. ஆண் என்று அஞ்சியதும் இல்லை.. பெண் என்று ஒடுங்கியதும் இல்லை. ஆணை சாரும் தருணங்களில் சார்ந்தும்.. தான் தனிய இயங்க வேண்டிய போது தனித்தும்.. தாய் என்று வரும் போது தாயாகவும் ஒரு பெண் சிங்கம் வாழ முடியுதுன்னா.. ஆறறிவு கொண்ட மனிதப் பெண்களால்.. ஏன் முடியாது..?!

பெண்களின் இயலாமைக்கு காரணம்... அவர்களை சுற்றி போலிப் புகழ்ச்சியும்.. மாயைப் பதங்களும்.. ஆட்சி செய்வதே அன்றி இயற்கை அளித்த இயல்புகளோ.. இயற்கையின் கூறான ஆண்களோ அல்ல.

இந்தத் தெளிவு இருந்தா.. நீங்க கூட ஆண்களை திட்டி பெண்களின் நலன் சார்ந்தவர் என்று காட்ட வேண்டிய தேவையே வராது அண்ணா. இந்த நேரத்துக்கு.. நீங்க உங்க வாழ்கையை பற்றி சிந்திப்பீங்க. அது உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய கூடுதல் நன்மையாக அமையும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஆண்களைத் திட்டி சாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்களின் மனோபாவத்தையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்..

ஐந்தறிவு படைதத மிருகங்களிடம் இந்த பாலியல் சார்ந்த பாகுபாடுகள்(Discrimination) இல்லை. சிந்திக்கத் தெரிந்த ஆறறிவு படைத்த மனிதனே குறிப்பாக ஆண்களே எளியோரான பெண்களை அடக்கியாள, போகப் பொருளாக பாவிக்க கட்டமைப்பு சித்தாந்தங்களை தோற்றுவித்தனர்.. அதை இங்கே சுட்டினால்(Please be considerate towards women), அதற்கு சம்பந்தமில்லாமல் பொது விடயத்தை பேசுவதைவிட்டு, என்னை தனிப்பட வேறு மாதிரி சித்தரிக்க முயல்கிறீர்கள்.. உங்களிடம் நிச்சயம் இந்த நிறத்தை நான் எதிர்பார்க்கவில்லை. :o

நன்றி.

பெண்களின் பிரச்சனைக்கு எல்லாம் ஆண்களே காரணம் என்று தங்களை பெண் நலம் விரும்பிகளாக காட்ட நினைக்கும் சில ஆண்களின் தொனியே தங்களதும் அண்ணா. அதனை தான் இங்குள்ள உங்களின் கருத்துக்களின் படி குறிப்பிட்டுள்ளோம். மற்றும்படி.. நீங்க எப்படியானவர் என்று எங்களுக்கு தெரியாது. அது பற்றி குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை.

பெண்கள் கரப்பான் பூச்சிக்கு பயப்பிட்டாலும்.. பாம்புக்கு பயப்பிட்டாலும்.. அதுக்கும்.. ஆண் தான் காரணம் என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ளவர்களால் நிச்சயமாக.. பெண்களின் பிரச்சனைக்கு மட்டுமல்ல.. சமூகத்தில்.. எவரினதும் பிரச்சனையை சரியாக விளங்க முடியும் என்று நினைக்கல்ல.

மேலும் பெண்களைச் சுற்றிய மாயைகளுக்குள் அவர்களே பதுங்கிக்கிடக்க முனைகிறார்கள்.. தங்களை பதுமைகளாகக் காட்ட விரும்புகிறார்கள் என்ற யதார்த்தப் புறநிலையை ஏற்காமல்.. எல்லாம் ஆண்களால் தான் என்பது.. நிச்சயம் பெண்களின் நலனை உறுதி செய்ய உதவாது. இதனை நீங்கள் இந்தத் திரியில் இருந்து உணர்ந்து கொண்டாலே போதும். அதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பெண்களை மயக்கும்.. மயங்கும்.. சொற்களுக்கு.. நடைமுறைகளுக்கு.. ஆண்களே காரணம் என்பதும்... பெண் கர்ப்பம் தரிப்பதால்.. அவஸ்தைப்படுவது ஆண்களால் என்று சொல்லுவதும்.. எந்தளவுக்கு நியாயமுன்னு சிந்தித்துப் பாருங்க. அந்தச் சிந்தனை நிச்சயம் உங்களிடம் ஒரு மாற்றத்துக்கு தூண்டலாம். மற்றும்படி.. பெண்களை இந்த விவாதங்கள் எல்லாம் வழி நடத்தும் என்றால்..  அவர்கள் எப்பவோ திருந்தி இருப்பார்கள். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.