Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் இருந்து சென்ற தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பின்னூட்டம் இட்டவர்களில் பலர் கைது செய்யபட்டவரில் காட்டும் அனுதாபத்தைவிட -நாங்கள் அப்பவும் சொன்னோம் சிங்களவன் மாறமாட்டான் " என்ற முனைப்பே இருந்தது .அதிலும் "நாங்கள் அப்பவும் சொன்னோம்" என்பது தான் அவர்களுக்கு முக்கியம் .

இழவு வீட்டில் சுகம் தேடும் இவர்கள்  கனவு இனி பலிக்காது .

நீங்க யாதார்த்தவாதி என்கிறீர்கள்

அப்படியானால்

அவர் தனது சுயமுடிவின்படி

எல்லா ஆபத்துக்களையும் உணர்ந்து

அங்கிருந்து எத்தனையோ போராளிகள் தப்பிக்க முயன்றபடியிருக்க

தப்பித்த இவர்

அதையும் மீறி தான் போயாகணும் என்று தானே போனார்?

இதில் சிங்களத்தின் மாற்றம் என்று சொன்னது நீங்கதான்

அத்துடன் போனவருக்கு

எல்லோரும் பயமில்லாமல் வரலாம் என்று

ஒரு நாட்டின் ஐனாதிபதி விட்ட அழைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்...

இப்போ

அழைப்புவிட்ட ஐனாதிபதியைக்கூட நீங்கள் மறந்து

இங்கு என்ன பாடம் எடுக்கிறீர்கள்??

ஒரு ஐனநாயக நாட்டின் ஐனாதிபதியே இவ்வாறு தடம்புரளும் போது

நாங்க  சந்தேகப்பட்டது சரிதானே என்பது 100வீதம நிரூபிக்கப்படுகுதே..

அதைப்பற்றி என்ன கவலை உங்களுக்கு........

  • Replies 79
  • Views 6.7k
  • Created
  • Last Reply

அண்ணைக்கு என்ன பிரச்சனை .முதலில் செய்திகளை ஒழுங்காக வாசியுங்கள் .

போர் குற்றம் செய்தவர்களை விசாரியுங்கள் தண்டியுங்கள் என்று இன்றும் நாம் உலக நாடுகளிடம் கேட்கின்றோம் .அப்படி ஒன்று நடைபெற்றால் நாளை எவரும் விசாரிக்கபடலாம் தண்டிக்கபடலாம் .அதே போலத்தான் இதுவும் .

எத்தனை ஆயிரம் பேர்கள் இப்போ இலங்கைக்கு போய்வருகின்றார்கள் .எத்தனை பேரை இலங்கை அரசு பிடித்து விசாரித்தது .

குற்றம் புரிந்தவராக இருந்தால் அதுவும் தமக்கு எதிராக தாக்குதல்கள் நடாத்தியவராக இருந்தால் அவரை விசாரிக்க இலங்கை அரசிற்கு முழு உரிமையும் இருக்கு ,அதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள் அது எந்த நாட்டிற்கும் பொருந்தும் .

எல்லோரும் பயமில்லாமல் வரலாம் என்பவற்ருக்குள் குற்றவாளிகள் அடங்கமாட்டார்கள் .

இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்??

அவர் போயிருக்கக்கூடாது என்று தானே?

அதைத்தானே இங்கு மற்றவர்களும் சொல்கிறார்கள்

அதையிட்டு அழுது புலம்புவது நீங்க தானே...??

என்ன

இப்ப ஒரே திரியிலேயே கருத்து தடுமாறுதோ...??

இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்??

அவர் போயிருக்கக்கூடாது என்று தானே?

அதைத்தானே இங்கு மற்றவர்களும் சொல்கிறார்கள்

அதையிட்டு அழுது புலம்புவது நீங்க தானே...??

என்ன

இப்ப ஒரே திரியிலேயே கருத்து தடுமாறுதோ...??

இவர் இலங்கை போனதுதான் பிழை 

இலங்கை அரசு  கைது செய்தது சரி என்றா சொல்லுகின்றீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
இல்லை தமிழனுக்கு போராட வேண்டும் என்று புறபட்டார்கள் ..........!
அதுதான் மன்னிக்க முடியாத குற்றம்! 

இல்லை தமிழனுக்கு போராட வேண்டும் என்று புறபட்டார்கள் ..........!
அதுதான் மன்னிக்க முடியாத குற்றம்! 

போராட்டத்திற்கும்  பயங்கரவாதத்திற்கும் வித்தியாசம்  புரியாமல் போனதுதான் இவை எல்லாவற்றிலும் பெரிய குற்றம் 

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டு லட்சம் மக்களை கொன்றால் போராட்டம்.
சேகுவரா கியூபா தனித்துவமான நாடு என்று சொன்னால்  பயங்கரவாதம். 
 
இந்த வித்தியாசம் சாதாரண மனிதர்களுக்கு புரிய போவதில்லை! 

அதனால்தான் நாம் பிறக்கும்போதே குற்றவாளிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இலங்கை போனதுதான் பிழை 

இலங்கை அரசு  கைது செய்தது சரி என்றா சொல்லுகின்றீர்கள் 

இலங்கை அரசை இதில் நான் பிழை சொல்லவில்லை

அது திருந்தவில்லை என்றும்

அது திருந்தாது என்றும் நன்றாக தெரியும்

வெள்ளைக்கொடியுடன் வா என்றுவிட்டு சுட்டுத்தள்ளியதல்லவா அது...

ஆனால் திருந்தியது போல் ஒரு ஐனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட  ஐனாதிபதி

மக்களை ஏமாற்றி நடிப்பது தான் ஏமாற்றும் வேலை....

அதை அந்த அப்பாவிப்பெண் நம்பியிருக்கலாம்

அத்துடன் அங்கே எல்லோரும் போய் வருகிறார்கள்

வரலாம் என்ற தங்கள் போன்றோரின் பொறுப்பற்ற எழுத்துக்களும்

அந்த அப்பாவித்தூண்டியிருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

பகீரதியின் தந்தை முருகேசு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத் தலைமை உறுப்பினர். மாவட்ட த்தின் அமைப்பாளராகவும் இருந்தவர். மகிந்த கிளிநொச்சி வரும்போதெல்லாம் முருகேசுவை அவர் மேடையில் தன்னருகில் வைத்திருப்பார். . வன்னியில் புலிகளின் எழுச்சி காலத்தில் யோகி, கஸ்ரோ ஆகியோரின் நெருக்கமான விசுவாசி. முருகேசு அவரது மாடி வீட்டை யோகிக்காக கொடுத்திருந்தவர். கைதான பகீரதி கடற்புலிகளின் மகளிர் பிரிவுத்தளபதியாக இருந்தவர் . பகீரதியின் சகோதரன் திருமணம் முடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரனின் தங்கையை. எனவே இந்த கைதின் பின்னால் ஒரு அரசியல் நோக்கமும் இருப்பதாகவே தெரிகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. முருகேசு, இப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்தப் பிரிவில் உள்ளார்? மகிந்த பிரதமர் வேட்பாளராக வேண்டும் என கோஷமிடும் பிரிவிலா?

  • கருத்துக்கள உறவுகள்

பாகிரதியின் கணவர் பற்றி முதலில் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் ஆனால் ஒரு இணையத் தளம் கண்டு பிடித்து எழுதி விட்டார்கள் ....எனவே மிகுதி விபரம்..... தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக முதலீடுகளுக்கு பொறுப்பானவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் சாம்ராஜ்.

சாம்ராஜ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவினதும் நேரடி கட்டுபாட்டில் சர்வதேச நாடுகளில் சுமார் 75 நாடுகளில் சேகரிக்கப்படும் நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் இருந்து வந்தார்.

சமாதான பேச்சு வார்த்தை காலத்தில் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை சாம்ராஜ் பெல்ஜியத்தில் கொள்வனவு செய்து 20 மில்லியன் யூரோக்களை (2880 மில்லியன் ரூபாக்கள்) முதலிட்டிருந்தார்.

பிரான்சில் தங்கி இருந்து விடுதலைப் புலிகளின் முதலீடுகளை நிர்வகித்து வந்த சாம்ராஜ் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் பல கட்டிடங்களை கொள்வனவு செய்து அவற்றை மீள்வாடகைக்கும் விட்டு வந்தார்.

இவருக்கான திருமணம் விடுதலைப் புலிகளினால் ஆசிய நாடு ஒன்றில் முருகேசு ஜெயகணேஸ் பகீரதியுடன் நடத்தி வைக்கப்பட்டது. சாம்ராஜூக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

Edited by sathiri

இது உண்மை எனில் பகீரதி செய்தது முட்டாள்தனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மை எனில் பகீரதி செய்தது முட்டாள்தனம்

பகீரதி இலங்கை வந்தது முட்டாள்தனம் அல்ல, மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வராமல், அதற்குப் பின் வந்ததுதான் முட்டாள்தனம்.

இப்போது பாருங்கள், அவரது உறவினர் (பாராளுமன்ற உறுப்பினர்) சிறீதரனே, இவரது கைது பற்றி வாய் திறக்க முடியாமல் உள்ளார்.

பகீரதியின் கணவர் சாம்ராஜ்ஜின் சிஷ்யர் (இவர்தான் கம்போடியாவில் புலிகளின் காசை தேக்குமர பண்ணையில் முதலீடு செய்தவர்), மகிந்த காலத்தில்  குடும்ப சமேதராக வந்து போனாரே.. ஒரு சிக்கலும் வரவில்லையே.

Edited by sabesan36

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகை ஏமாற்றும் சிறி லங்கா ! - பிரான்சில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 

bakeerathy-arrested-030315-200-seithy.jp

சிறிலங்காவில் இடம் பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக சர்வதேச நாடுகள் நம்பவைக்கப்பட்டுள்ளனவா? என அந்நாடுகளின் அணமைக்கால அறிக்கைகளைப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகின்றது. நிறைவேற்றவே போகாத வாக்குறுதிகளை தாரளமாக அள்ளி வழங்கி சிங்கள அரசு சர்வதேசத்தைத் தனது சதிவலையில் சிக்கவைத்துள்ளது. முன்னைய ஆடசிக் காலத்தில் மிகப்பெரிய மோசடிகளில் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இப்போது சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகளை போலியாக நம்பவைக்க தொடரந்து முயற்சிக்கப்படுகிறது.

ஆனால் மறுபுறத்தில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக அரசினாலேயே பாதுகாக்கப்படுகின்றனர். தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற இந்த அரசு அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகத் தினமும் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக பெரிதாக என்ன செய்துவிட்டது? காணமல் போனவர்கள் பிரச்சனை அரசியல் கைதிகள் விடுதலை பறிக்கப்படட மக்களின்; நிலங்களை முழமையாக ஒப்படைப்பது இரகசிய வதைமுகாம்கள் குறித்த விசாரணை.... இப்படியே நீண்டுகொண்டே போகும் தமிழரின் அடிப்படையான பிரச்சனைகள் தீர உண்மையான கரிசனை இந்த அரசுக்கு உண்டா?

ஏன் இல்லை? ஆளுனரை மாற்றினார்கள் தமிழர்களிடமிருந்து பறித்தவற்றில் கொஞ்சத்தை கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்ல முற்படலாம் ஆனால் மேலோட்டமாகச் செய்யும் இந்த மாற்றம் எல்லாம் தமிழர்களை நம்பவைப்பதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் இப்படி ஏதேனும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிங்கள அரசு இருக்கிறது.

அண்மையில் (02 மார்சு 2015) ஐ.நா மனிதவுரிகைள் அவையில் சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர பேசும்போது புதிய ஆட்சிமாற்த்தினை ஏற்படுத்திய மக்கள் சிறிலங்காவிற்கு மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திற்கும் சனநாயகத்தை நிலை பெறச் செய்துள்ளனர் என்னும் பொருள் பட உரையாற்றினார்.

ஆகா! எவ்வளவு நல்ல மாற்றம் என உலக நாடுகள் சிலாகித்துக் கொண்டிருக்கும் போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிரான்சில் இருந்து இலங்கைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஜெயாகணேஸ் பகீரதி என்னும் இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் தீவிரவாத தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது மகள் கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே விபுசிகாவும் அவரது தாயாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது நீங்கள் அறிந்ததே. ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசுகளின் நோக்கங்கள் மாறப்போவதில்லை என்பதை தெட்டத்தெளிவாக இக்கைதுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

இவர்களின் கைது தொடர்பாக உடனடியாகவே பிரான்சு வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும்இஅரச அதிபருக்கும் நாம் கொண்டு வந்துள்ளோம்.

இவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முகமாக பிரான்சு நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றையும் எதிர்வரும் திங்கள் கிழமை 09-03-2015 அன்று மாலை 3 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அன்பாக வேண்டி நிற்கின்றோம்.

நாமே நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒற்றுமை அதற்கு வலுச்சேர்க்கட்டும்.

ஊடகப்பிரிவு

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.

France-Kavanagirppu-060315-600-seithy-00

http://seithy.com/breifNews.php?newsID=127853&category=TamilNews&language=tamil

நல்ல விஷயம். இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை இவர்கள் வசிக்கும் நாடான பிரான்ஸ் விலாவாரியாக தெரிந்துகொள்ள உதவும் செயல்.

நூலைக் கொடுத்தால், மீதியை DGSI (Direction générale de la sécurité intérieure) புரிந்து கொள்வார்கள்.

பாவம் சாம்ராஜ்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விஷயம். இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை இவர்கள் வசிக்கும் நாடான பிரான்ஸ் விலாவாரியாக தெரிந்துகொள்ள உதவும் செயல். பாவம் சாம்ராஜ்.

என்னது!!!!!! பிரான்ஸ் நாட்டு அரசுக்கு....தனது நாட்டில் வசிப்பவர்களைப்பற்றி விலாவாரியாக தெரியாதா? ஐயோ பாவம் பிரான்ஸ்  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது!!!!!! பிரான்ஸ் நாட்டு அரசுக்கு....தனது நாட்டில் வசிப்பவர்களைப்பற்றி விலாவாரியாக தெரியாதா? ஐயோ பாவம் பிரான்ஸ்  :(

தெரிந்திருக்கும். இப்போது இலங்கை உளவுத்துறை சேகரித்து வைத்திருக்கும் மேலதிக தகவல்கள் ஏதாவது இருந்தால், அதுவும் கிடைக்கும் அல்லவா? நல்ல டீல்தானே ஐயா.

Edited by sabesan36

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
France.jpg
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரான்சில் வசித்து வரும் ஜெயகணேஸ் பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மதியம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் சார்பில் ஆஜரான சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அவதானித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி,  ஜெயகணேஸ் பகீரதியை மூன்று நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.

இவரை இலங்கை அரசு கடற் புலிகளின் முக்கியஸ்தர் என குற்றஞ் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது பெண் குழந்தை சாம்ராஜூ இவ்வார ஆரம்பத்தில் பகீரதியின் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

முழுமையான மேலதிக விபரம் விரைவில்

http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmwyD.html

  • கருத்துக்கள உறவுகள்

பகீரதி பிணையில் விடுதலை - வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிப் போராளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பகீரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டுப் பிரஜையான பகீரதி அண்மையில் இலங்கை விஜயம் செய்து, பிரான்ஸ் திரும்ப முயற்சித்த போது விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயகணேஸ் முருகேசு பகீரதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தலைவிகளில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு மேலதிக நீதவான் அருனீ ஆட்டிகல, பகீரதியை பிணையில் விடுதலை செய்தார்.

200,000 ரூபா ரொக்கப் பிணையில் பகீரதி விடுதலை செய்யப்பட்டுள்ளாh.

எவ்வாறெனினும், பகீரதி தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பகீரதியின் கணவர் ஐரோப்பிய புலிகளின் வலையமைப்பு முக்கியஸ்தர் எனவும், நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டு வரையில் பகீரதி புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், பகீரதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பிள்ளையுடன், உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள தாயை பார்ப்பதற்காக கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117549/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
TGTE-france-130315-seithy-400-seithy.jpg

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இருந்து பிரான்சுக்கு திரும்ப இருந்தவேளை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முருகேசு பகீரதி மற்றும் அவரது மகள் ஆகியோரது விவகாரம் குறித்து , ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் பிரான்ஸ் அதிகாரிகள் மட்டத்தில்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரையாடல்களை நடத்தியிருந்தது.

இந்த உரையாடலின் பொழுதே பிரென்சு உயர்மட்ட அதிகாரி இக்கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும், அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கருத்துரைத்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பகீரதியினை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதுதோடு, பிரான்ஸ் திரும்புவதற்கான அனுமதியினையும் மறுத்துள்ளது.

இந்நிலையில் ஜெனீவாக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரும் அனைத்துலக விவகாரங்களுக்கான துணை அமைச்சருமாகிய மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் கடந்த புதனன்று பிரென்சு உயர் அதிகாரிகளுடன் இவ்விவகாரம் குறித்து உரையாடியுள்ளார்.

குறித்த கைது சம்பவம் தொடர்பில் ஏலவே சிறிலங்காவில் உள்ள பிரென்சு தூதரகரத்தினதும் மற்றும் தலைநகர் பாரிசில் உள்ள பிரென்சு வெளிவிவகார அமைச்சினதும் கவனத்துக்கு கொண்டு சென்றதன் தொடர்சியாகவே கடந்த புதனன்று (11-03-2015) ஜெனீவாவில் இந்த உரையாடல்இடம்பெற்றுள்ளது.

TGTE-france-130315-seithy%20(1).jpg

TGTE-france-130315-seithy%20(2).jpg

http://seithy.com/breifNews.php?newsID=128230&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில  இருக்கிற ஆட்கள் இவர்களின் விடதலைக்க ஒன்றையும் செய்வதில்லை என வெளியில் நின்று கணணி  தட்டும் மனிதர்களுக்கு சமர்ப்பணம்............

நன்றி  மகிந்தன்

தொடருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

காகம் போய் இருக்க பனம்பழம் விழுந்தகதை ஏனோ நினைவுக்கு வந்து துலைக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் நம் மாண்புமிகு துணை வெளி-விவகாரம் (புடிச்ச) அமைச்சரை நீங்கள் காகம் என்று சொன்னது மிகப்பிழை.

நாங்களும் மனத்தால பாடுபாட்டோம்  .எனக்கும் ஒரு பங்கை போடுங்கோ . :icon_mrgreen:

காகம் போய் இருக்க பனம்பழம் விழுந்தகதை ஏனோ நினைவுக்கு வந்து துலைக்குது!

ஜெனிவாவில் இப்படி சம்பவம் இலங்கையில் தெரிந்தே இருக்காது .

ஒரு துரும்பு கூட அசைக்க முடியாத ஆட்களின் வாழ்க்கை இப்படித்தான் ஓடுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.