Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடி கும்மியடி, குடிக்காட்டில் பம்மியடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன்.

வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்?

ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?

Edited by M.P

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை..! அண்மையில்கூட இந்ந அனுபவம் ஏற்பட்டது. குடிக்க விருமபாதவனைப் பார்த்து 'நீர் என்ன யோக்கியரா' என்பதுபோலத்தான் கேட்பார்கள்.. சிலர் குடிக்காமல் விடுவது வேறு சிலருக்கு மனச்சாட்சியை உறுத்துவதாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் UK போனவுடன் கடையில் வேலை செய்யும் போது, வரும் வெள்ளையள் அநேகமானதுகள் குடிகாரன்கள் தான். எங்கடை ஆட்கள் மலிவாக விற்கும் பியர் வேண்டத்தான் எங்கடை கடையளுக்கு வாறதுகள். அதுகளை பார்க்கும்போது நான் நினைத்தேன் வெள்ளையள் வாழ்கை தண்ணியில் தான் ஓடுது என்று. இப்படிதான் எங்கடை ஆட்களும் நினைத்துகொண்டு குடிச்சு கொண்டு இருக்குதுகள்.

கடையை விட்டு வெளிய வந்தபிறகு தான் தெரிஞ்சுது அநேகமான படிச்ச வெள்ளையள் அளவாக குடிக்குங்கள் அல்லது குடிக்கதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பிறந்ததில் இருந்து இது வரை.. மது மாது போதை இவை எதனையும் தொடல்ல. யாரும் அதற்காக கேவலமாப் பார்த்ததா தெரியல்ல. ஆச்சரியமா பார்த்தோர் தான் உண்டு. இதில முக்கியம் நாங்க கடந்து வந்த பாதையில் பட்டறிவு.. படிப்பறிவு இருந்த மக்கள் அதிகம் இருந்தாக இருக்கலாம்.

 

குறிப்பாக வெள்ளையர்கள் சேர்ந்து குடிக்காட்டி தரக்குறைவாக நினைப்பார்கள் என்று சொல்லும் எம்மவர்களுக்கு.. அப்படி எதுவுமே இல்லை. வெள்ளையர்களும் குடிக்காத மனிதர்களை அவர்களுக்குரிய சிறப்புடன் தான் பார்க்கின்றனர். குடிப்பது.. குடிக்காதது.. அவரவர் விருப்பம் என்பதை உணர்கிறார்கள்.. மதிக்கிறார்கள். 

 

இங்கு யாழில் தான் ஒரு சிலர் யதார்த்தம் தெரியாமல்.. எங்களை எல்லாம்.. தரக்குறைவான வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக செய்துள்ளனர். அவர்களின் அறியாமை தான் அதற்கு காரணம் என்று உடனவே அவர்களை..  மன்னிச்சுடுறது.  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்வதும் உண்மை.. மேலை நாட்டவரின் கொண்டாட்டங்களுக்குப் போனால் தனிநபர் சுதந்திரத்தை மதிக்கிறார்கள். சொந்தக்காரனுகள் கூப்பிட்டால் கட் பண்ணுறதுதான் நல்லது.. :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் UK போனவுடன் கடையில் வேலை செய்யும் போது, வரும் வெள்ளையள் அநேகமானதுகள் குடிகாரன்கள் தான். எங்கடை ஆட்கள் மலிவாக விற்கும் பியர் வேண்டத்தான் எங்கடை கடையளுக்கு வாறதுகள். அதுகளை பார்க்கும்போது நான் நினைத்தேன் வெள்ளையள் வாழ்கை தண்ணியில் தான் ஓடுது என்று. இப்படிதான் எங்கடை ஆட்களும் நினைத்துகொண்டு குடிச்சு கொண்டு இருக்குதுகள்.

கடையை விட்டு வெளிய வந்தபிறகு தான் தெரிஞ்சுது அநேகமான படிச்ச வெள்ளையள் அளவாக குடிக்குங்கள் அல்லது குடிக்கதுகள்.

M.P. உங்கள் வசனநடையைப் பார்க்க உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வேறுபாடு பார்க்கும் ஒருவராகத் தெரிகின்றது. சமூகம், மக்கள், கலாச்சாரம் என்று வேறுபாடுகள் உள்ளவர்களையும் அனுசரித்துப் போகும் மக்கள்தான் மேற்குநாடுகளில் (பிரித்தானியா உட்பட) அதிகம் பேர் இருக்கின்றார்கள். எனவே வெள்ளை குடிக்குது நாங்கள் குடிப்பதில்லை என்றும், படிச்ச வெள்ளைகள் பரவாயில்லை, படிக்காதவர்கள் உதவாதவர்கள் என்றும் பாகுபாட்டைப் பார்ப்பதை விட்டுவிட்டு எல்லோரும் மனிதர்கள், அவர்களில் பலவிதம் என்று யோசித்துப் பாருங்கள்.

எல்லா சமூகத்திலும் குடிப்பவர்களும் இருக்கின்றார்கள், குடிக்காதவர்களும் இருக்கின்றார்கள். குடிக்காதவர்கள் எல்லாரும் ஒழுக்கமானவர்கள் இல்லை. நிறைய ஆசாடபூதிகள் உலவுகின்றார்கள்!

மற்றது மனிதர்களை அஃறிணையில் எழுதுவதை விட்டுவிடுங்கள்.

கிருபனின் கருத்துடன் உடன்படுகிறேன். M>P எப்பவும் படித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றமாதிரி காட்ட முயல்கிறார். 

வெள்ளையை ஒரு ஒப்பீடாக எடுப்பது நாம் இப்பவும்  மனதளவில் ஒருவித அடிமை மனப்பான்மையில் இருப்பதினால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் நாட்டை கைவிட்டு.. வெள்ளையின் நாட்டில் உட்காரும் வரை அடிமைத்தனம் தெரியல்ல.. நல்ல சில விடயங்களை ஒப்பிடுவதில் மட்டும் சில ஆக்களுக்கு அடிமைத்தனம் பளிச்சென்று தெரியுது.  :lol:  :D

அருமையான விளக்கம்  கிருபன் .

 

ஒரு சிறிய வட்டத்திற்குள் நிற்பதால் வரும் கருத்துக்கள் என்றுதான் நினைக்கின்றேன் .


வெள்ளை நாட்டில் உட்காருவதற்கும் அடிமைக்கும் என்ன சம்பந்தம் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எம்.பி யாழில் இட்ட ஒரு சில பதிவுகளிலேயே அவரது பரந்த அனுபவமின்மை துருத்திக் கொண்டு தெரிகிறது என்பது என் கருத்து! படிச்ச வெள்ளையள் படிக்காத வெள்ளையள் கதை இப்ப மீளவும் அதையே காட்டுது. இதற்கு ஒரே வழி வீட்டை அடைஞ்சு கிடக்காமல் நாலு உள்ளூர் மக்களோட தோள் உரசிப் பழக வேணும் (rub shoulders!) ! குடிச்சுப் புரள வேணும் எண்டு அர்த்தம் இல்லை! ஆனால், அவர்கள் குடிக்கும் போது கூட இருந்து பச்சைத் தண்ணியையாவது குடிச்சு social intelligence ஐ வளர்த்துக் கொள்ள வேணும்! இது எல்லாம் இல்லாமல் 150K சம்பளத்தோட வேலை உங்களுக்கு யார் தந்தான் எண்டு தான் எனக்கு விளங்கேல்ல! :D

  • கருத்துக்கள உறவுகள்

200K

  • கருத்துக்கள உறவுகள்

MP ண்ட அவுஸ் ஊர்க்காரர், ஒருத்தர், கல்லோட வந்து, 'உவர் படிப்பு பத்தி கதைக்கிறார் அடிக்கடி, கதைக்கிறார். உது யாழ்ப்பாணப்புத்தி எண்டு', எறியப்போறார். கவனம் பார்த்து. :D

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பவர்களில்... மூன்று வகை உண்டு.

 

ஒன்று, மொடாக் குடியர். 
அவர்களுக்கு, தினமும் குடி வேண்டும்.
இவர்களால்... சமூகத்துக்கு பிரச்சினை.

 

இரண்டாவது, டீசண்டாக... கிழமைக்கு ஒரு நாள் மட்டும் குடிப்பவர்கள். (என்னைப் போல)
இப்படியானவர்கள்..... வேலை அலுப்புக்கும்,  சிறிது சந்தோசத்துக்கும் மட்டுமே குடிப்பார்கள்.
இவர்களால்.. சமூகத்துக்கோ, யாழ்கள நிர்வாகத்துக்கோ... எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. :D  :lol:

 

மூன்றாவது  வகையானவர்கள், ஆபத்தானவர்கள்.  தாங்கள் குடிப்பதில்லை என்று பலருக்கும் சொல்லி....
பிறரை ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால்... அவர்களில் பலர், வீட்டு அலுமாரியில் ஒளித்து வைத்து குடிப்பார்கள்.
இது, அவர்களின்... வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாது என்பது தான்... ஆச்சரியம்.

 

ஒருவர் குடிப்பதை, வைத்து.... அவரின் குண இயல்புகளை... கணிப்பது, முட்டாள்தனமானது. :)

 

 

சிலபேர் படித்தவனாக.. பண்பாளனாக.. குடிக்காதவனாக நல்லவன்போல இருப்பாங்கள்.

பக்கத்தில போய்ப் பாருங்கள்.. முகம் 'குப்'பெனச் சிவந்துவிடும்.
ஹோமோசெக்ஸ்காரங்க!! 

:o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் படித்தவனாக.. பண்பாளனாக.. குடிக்காதவனாக நல்லவன்போல இருப்பாங்கள்.

பக்கத்தில போய்ப் பாருங்கள்.. முகம் 'குப்'பெனச் சிவந்துவிடும்.

ஹோமோசெக்ஸ்காரங்க!! 

:o  :icon_idea:

 

அட... இந்தக், கண்றாவியும்.... இவங்களுக்குள்ளை, ஒளிஞ்சு கொண்டிருக்குதா?

அதுதான்... குடிக்காதவர்கள் என்று சொல்லுபவர்களை, உடனே... நம்பி, ஏமாறக் கூடாது. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி பல குடிமக்களை தாக்கியிருப்பது தெரிகிறது... :lol:  :D

 

 

எப்பொழுதும்  இப்படித்தான்

இன்னொன்றின் மீது பழியைப்போட்டு தப்பும் பழக்கம்

தமிழனது சொத்து.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இத்திரி பல குடி மக்களை தாக்கியதால்.. அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

 

அதிலும் சிலர் சொந்த மூட நம்பிக்கைகளை விதைக்கிறார்கள்.

 

இன்னும் சிலர் வெள்ளையரின் நாட்டில் தாங்கள் அடிமைகளாக உள்ள உணர்வை பெற முடியாத அளவுக்கு குடியோடு வாழ்கிறார்கள்.

 

இன்னும் சிலர் குடிகாரர் அல்லாதவர்கள் லெஸ்பியன்.. கேய் என்ற சொந்த முடிவில் வாழ்கிறார்கள்.

 

இன்னும் சிலர் வெள்ளை எல்லாம் குடிச்சால் தான் மனிசரா மதிக்கும் என்ற இன்னொரு கற்பிதத்தை வழங்க.. தாங்கள் என்னவோ.. வெள்ளைகளோடு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருவது போலவும் கதை அளக்கிறார்கள்.

 

உண்மையில்.. எம் பி சொல்ல வந்தது.. மாமிசம் உண்ணாதவர்களுக்கு எப்படி சுய உரிமை உள்ளதோ.. அதே குடி வெறியற்றவர்களுக்கும் உலகம் வழங்கி வருகிறது. வெள்ளைகளும் வழங்கி வருகின்றனர்.

 

முன்னர்  நாங்கள் வேலை செய்த இடத்தில்.. கிறிஸ்மஸ்.. மற்றும் நியூ இயருக்கு உயர்ந்த ரக வைன் எல்லா ஸ்ராவ்வுக்கும் வழங்குவார்கள். முதற் தடவை நாங்கள் அதனை நிராகரித்த போது முகாமையாளர்.. ஆச்சரியத்தோடு.. அதை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டதோடு அதற்கு சம மதிப்புள்ள உயர் ரக சொக்கிலேட்டுக்களை அன்பளிப்பாக தரும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்.

 

இதுதான் வெள்ளைக்கும் நம்மவருக்கும் உள்ள வித்தியாசம். இந்தத் தலைப்பும் இங்கு பகிரப்படும் கருத்துகளும்.. அதுக்குச் சான்று.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அளவாக, குடிப்பனிடம் உள்ள திறமை.....
அறவே.... குடிக்காதனிடம் இல்லை, என்பதை.... அமெரிக்காவில் உள்ள சிக்காக்ககோ பிரபல பல்கலைகழகம் தமது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளதை அண்மையில்... வந்த, ஜேர்மன் மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வாசித்தேன்.
அவற்றை..... பலர் வாசிக்க, சந்தர்ப்பம் கிடைத்திராது என்பது... இப்போது தான் புரிகின்றது. :rolleyes:  :D

வெள்ளை மற்றவன் தனது நாட்டில் அகதியா.. அதிதியா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.. எங்கடையாட்கள்தான் அடிமைத்தனத்திலும் ஆர் பெரிசு என்று தற்புராணம் பாடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போய் அசூர் என்று சொல்லிப் பார்க்கல்லப் போல. வெள்ளை நல்ல மரியாதை காட்டும்.  :icon_idea:  :D

வயது போனதுகளுக்கு சொன்னால், உலகப் போர்மூட்டம் தாங்கள் பட்ட கஸ்டத்தை கதை கதையாகக் கூறுவார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போய் அசூர் என்று சொல்லிப் பார்க்கல்லப் போல. வெள்ளை நல்ல மரியாதை காட்டும்.  :icon_idea:  :D

 

இங்கிலாந்தும், இந்தியாவும் இன்னும்.... பழம் பெருமை பேசி, தமக்குள் புளகாங்கிதம் அடையும் நாடுகள்.

ஆனால்... பக்கத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம்... குதிரை வேகத்திலை போய்க் கொண்டிருப்பது அவர்களின்.. அறியாமை. :D

பாவங்ககள்... கனவு,, ஆவது கண்டு விட்டுப் போகட்டும்.

இதைத்ததான்.... முன்னாள் இந்திய ஜனாதிபதி.... அப்துல் கலாமே... சொன்னார்.

கனவு காணுங்கள்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி ஏன் படை எடுக்கிறார்கள்..?! இங்கிலாந்தில் இருந்து ஜேர்மனிக்கு வருவது ரெம்ப ரெம்ப குறைவு.. ஏன்..?! பழமை பேசவோ.. பெருமை பேசவோ?!  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி ஏன் படை எடுக்கிறார்கள்..?! இங்கிலாந்தில் இருந்து ஜேர்மனிக்கு வருவது ரெம்ப ரெம்ப குறைவு.. ஏன்..?! பழமை பேசவோ.. பெருமை பேசவோ?!  :lol:  :icon_idea:

 

ஜேர்மனியில் இருந்து, இங்கிலாந்து வரும் தமிழரை உங்களுக்கும், எனக்கும் தெரியும் :D

 

ஆனால்... இங்கிலாந்திலிருந்து இங்கு வரும், பல ஆங்கிலேயரை... இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்.

எனது, பக்கத்து வீட்டுக்காரன், எனது பிள்ளைகளுக்கு படிப்பித்த இரண்டு ஆசிரியர்கள் கூட... இங்கிலாந்து ஆங்கிலேயர்கள்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.