Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான், யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன்...: ட்விட்டரில் மோடி.

Featured Replies

யாழ்ப்பாணத்துக்கும் வருகிறேன்- ருவிட்டரில் மோடி MAR 09, 2015 | 0:30by அ.எழிலரசன்in செய்திகள்

narendra-modi-300x200.jpgஇந்தவாரம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ருவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்தவாரம் நான் சீசெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளேன்.

எனது பயணத்தின் மூலம் இந்த நட்புநாடுகளுடனான எமது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பயணம் சிறிலங்கா – இந்திய உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும், சிறிலங்காவுக்குச் செல்கிறேன்.

தவிர, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதுடன், நான் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/03/09/news/4249

 

  • கருத்துக்கள உறவுகள்

நான், யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன்...: ட்விட்டரில் பிரதமர் மோடி.

 

டெல்லி: இலங்கை பயணம் மேற்கொள்ளும் தாம் யாழ்ப்பாணம் செல்ல இருப்பதாக ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் 3 நாள் பயணமாக வரும் 13-ந் தேதி இலங்கை செல்ல இருக்கிறார்.

 

28 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி.

 

தமது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நேற்று இரவு ட்விட்டரில் பிரதமர் மோடி எழுதி இருப்பதாவது:

இந்த வாரம் நான் செசெல்ஸ், மொரீசியஸ் மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.

 

இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இலங்கைக்குச் செல்கிறேன்.

 

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுடன் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்கிறேன்.

 

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மோடி யாழ்ப்பாணம் செல்வது மட்டுமல்ல.. சிங்கள பெளத்த பேரினவாதிகளால்.. இடிக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட இந்துக் கோவில்களை பார்வையிட வைக்க வேண்டும். நல்லூரைக் காட்டிட்டு.. டெல்லிக்கு அனுப்பினால்.. அவர் ஆகோ.. ஓகோ.. என்று சிங்களத்தைப் புகழவே வழி பிறக்கும்.

 

மேலும்.. 80,000 தமிழ் பெண்கள் விதைவைகளாப்பட்ட துன்பியல்கள்.. மற்றும்.. காணாமல் போனவர்களின் உறவுகள் மோடியை சந்திக்க ஏற்ப்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். வெறுமனவே ஏசி ரூம்களின் வைச்சு பேசிட்டு போறதில ஒன்றும் இல்லை.

 

இந்தியப் படைகளால்.. மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்.. குறிப்பாக யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் தொடர்பில் மோடி நேரடியாகப் பார்வையிட வழி செய்ய வேண்டும்.

 

இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மோடி நேரடியாக சந்திக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவற்றை மோடி பார்வையிடுவதோடு அங்கு இந்துப் பெண்கள் படும் அவலத்தை அவர் காணச் செய்ய வேண்டும்.

 

ஈழத்தில்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தால்.. தமிழ் இந்து சமூகம் .. தமிழ் கிறிஸ்தவ சமூகம்.. இன அழிப்பு செய்யப்பட்டிருப்பதை மோடி உணரும் வகைக்கு.. இந்த விசயத்தை அமையச் செய்வது தான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். அதைவிட்டு.. நல்லூரிலும்.. திருத்தி அமைக்கப்பட்ட நூலகத்திலும்.. நாலு நடை நடந்திட்டு.. போக மோடி வாறதில ஒரு பிரயோசனமும் இல்லை.   :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 பிரதமர் நரேந்திர மோடியைப் பெண்ணால் மற்றும் பொன்னால் மயக்க முடியாது என்று கேள்வி. பார்க்கலாம்....!  :rolleyes:  

 

ஏமாற்றித் தலைவர்களுக்குப் பழகிவிட்டது. :icon_mrgreen: 

 

ஏமாறித் தமிழனுக்குப் பழகிவிட்டது. :huh:  :o 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி யாழ்ப்பாணம் செல்வது மட்டுமல்ல.. சிங்கள பெளத்த பேரினவாதிகளால்.. இடிக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட இந்துக் கோவில்களை பார்வையிட வைக்க வேண்டும். நல்லூரைக் காட்டிட்டு.. டெல்லிக்கு அனுப்பினால்.. அவர் ஆகோ.. ஓகோ.. என்று சிங்களத்தைப் புகழவே வழி பிறக்கும்.

மேலும்.. 80,000 தமிழ் பெண்கள் விதைவைகளாப்பட்ட துன்பியல்கள்.. மற்றும்.. காணாமல் போனவர்களின் உறவுகள் மோடியை சந்திக்க ஏற்ப்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். வெறுமனவே ஏசி ரூம்களின் வைச்சு பேசிட்டு போறதில ஒன்றும் இல்லை.

இந்தியப் படைகளால்.. மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்.. குறிப்பாக யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் தொடர்பில் மோடி நேரடியாகப் பார்வையிட வழி செய்ய வேண்டும்.

இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மோடி நேரடியாக சந்திக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவற்றை மோடி பார்வையிடுவதோடு அங்கு இந்துப் பெண்கள் படும் அவலத்தை அவர் காணச் செய்ய வேண்டும்.

ஈழத்தில்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தால்.. தமிழ் இந்து சமூகம் .. தமிழ் கிறிஸ்தவ சமூகம்.. இன அழிப்பு செய்யப்பட்டிருப்பதை மோடி உணரும் வகைக்கு.. இந்த விசயத்தை அமையச் செய்வது தான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். அதைவிட்டு.. நல்லூரிலும்.. திருத்தி அமைக்கப்பட்ட நூலகத்திலும்.. நாலு நடை நடந்திட்டு.. போக மோடி வாறதில ஒரு பிரயோசனமும் இல்லை. :icon_idea:

மோடி: இதென்ன அறிக்கை?

காரியதரிசி: வெளியுறவுத்துறை அனுப்பி வைத்த அறிக்கை. உங்களை அயல்நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய பரிந்துரைத்துள்ளார்கள்.

மோடி: இதை எனக்கு விளங்கப்படுத்த முடியுமா?? :unsure:

காரியதரிசி: வெளியில் சௌத் புளொக் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். வரச்சொல்கிறேன். :wub:

****************************

சில நிமிடங்களுக்குப்பிறகு,

மோடி: நமஸ்தே.. இந்த அறிக்கையின்படி அயல்நாடு பயணமாமே.. இங்கே அரசியல் வேலை நிறைய இருக்கிறதே..

சௌத் புளொக் அதிகாரி: ஆம். இது ஒரு பழைய அறிக்கை. இலங்கையில் நமது திட்டப்படி ஆட்சி மாற்றம் வெற்றி பெற்றால் நாங்கள் எவ்வாறு வெற்றிக்கொடி ஏற்றுவது என்பது பற்றியது. யார் பிரதமராக இருந்தாலும் போகலாம். :wub:

மோடி: ஓ.. அச்சா ஜீ.. அங்கே பாம் பிரச்சினை இல்லே?? பாம்.. பாம்.. :o

அதிகாரி: நஹி மோடி ஜீ.. எல்லாம் எங்க கன்ட்ரோலில் இருக்கு.. நீங்க போக வேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய ஆட்கள், பேச வேண்டிய பேச்சக்கள் எல்லாமே தயார்..

மோடி: அச்சா.. அச்சா.. அதுசரி.. எம். ஆர். எஸ் சிரிசேன ஜாஃப்னாவா?? :huh:

அதிகாரி: அடுத்தமுறை உங்களுக்கு கூடுதல் பயிற்சி தரவுள்ளோம்.. ஆங்கிலத்தை சரியாக வாசிப்பதற்கு.. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ருவிட்டர் கணக்கை இயக்குபவர் யார்?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ருவிட்டர் கணக்கை இயக்குபவர் யார்?? :rolleyes:

 

சுமத்திரன் அல்லது சீனா புலனாய்வினர் :D

அதாகப்பட்டது மோடி  என்ன  சொல்கிறார்  என்றால் பதின்மூன்றாம் திகதி  வருவதன் மூலம் உங்களுக்கு  தீர்வு  பதின்மூன்றுதான்  பிளஸ்  மைனஸ்  எல்லாம்  கிடையாது  என்று  சொல்லாமல்  சொல்கிறார் ..நுண்ணிய  அரசியல் அவதானிப்பு   :D

... பதின்மூன்றாம் திகதி  வருவதன் மூலம் உங்களுக்கு  தீர்வு  பதின்மூன்றுதான்  பிளஸ்  மைனஸ்  எல்லாம்  கிடையாது  என்று  சொல்லாமல்  சொல்கிறார் ..நுண்ணிய  அரசியல் அவதானிப்பு   :D

 

13ம் திகதி வெள்ளிக்கிழமை வேறு (Friday the 13th). ஏதாவது ஏடாகூடமாக நடந்து தொலைக்கப்போகுது.  :D  :D

Edited by ஜீவன் சிவா

13ம் திகதி வெள்ளிக்கிழமை வேறு (Friday the 13th). ஏதாவது ஏடாகூடமாக நடந்து தொலைக்கப்போகுது. :D:D

தமிழரின் துரதிர்ஷ்டம் தமிழருக்கு உரிமை கொடுக்க சற்று வழிவகுக்கும் அந்த சிறிய அரசியலமைப்பு திருத்தம் கூட 13 என்ற துரதிர்ஷ்டமான இலக்கத்தில் அமைந்து விட்டது.

யாழ்ப்பாணம் வரும் ஒரே இந்தியப் பெருந்தலைவர் இவர் தான். மகாத்மா காந்திக்கு பிறகு யாழ்ப்பாணத்துக்கு எந்த இந்திய பெருந்தலைவர்களும் வந்ததில்லை. ஆக ! இது மிக நல்ல விடயம் தான். நாம் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நரேந்திர மோடியுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக சிங்களத் தலைவர்கள் இது வரைக் காலமும் வெளிநாட்டு தலைவர்கள், அதிகாரிகளை ரட்ணம் கொடுத்தோ, ரட்ணக் கொடிகள் ( சிங்கள மாதுக்களை ) கொடுத்தோ மயக்கிவிடுவர், தமிழர்களாகிய நாம் சும்மா ஊர்வம்பு கதைத்துக் கொண்டு, வருவோரை பரிகாசம் செய்து கிடைக்கிற வாய்ப்பை நழுவவிட்டுவிடுவோம். நரேந்திர மோடியிடம் பெண்ணும், பொன்னும் எடுபடாது என்பது தான் கேள்வி. இந்து மதத்தின் மீது அதிக பற்றுடையவர், பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று. 

இலங்கைத் தமிழர்களா? இலங்கை இந்துக்களா?

 
 Sunday, March 01, 2015
DSCN5495.jpg
இலங்கையில் இந்து மதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது. சொல்லப் போனால் இலங்கையின் ஆதி சரித்திரங்கள் இந்து மதத்தோடு மட்டுமே தொடர்புடையதாக உள்ளது. இந்து மத இதிகாசமான ராமாயணம் இலங்கையின் இந்து மதம் பற்றி பல தகவல்களை கொடுக்கின்றது. ஆதியிலே இலங்கையில் இயக்கர், அரக்கர் என்ற இரு ஜாதி மக்கள் வாழ்ந்து வந்தனர். கங்கை நதிக்கரையில் இருந்து வந்த தேவர்கள், இலங்கையில் குடியேறி இயக்க, அரக்க பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்களில் மிகவும் புகழ்பெற்ற மன்னனாக உயர்ந்தவன் குபேரன் ஆவான். ஆம் ! இன்று குபேரன் என்றாலே செல்வாதிபதியாக வணங்குகின்றோம். ஆனால் இலங்கையை ஆண்ட பழம் மன்னர்களில் ஒருவன் குபேரன். இயக்க ஜாதியைச் சேர்ந்த இவனது தந்தை விஸ்ரவன், பிரம்மனின் புத்திரர்களில் ஒருவனான புலஸ்தியரின் மைந்தன் ஆவான். மேரு மலையில் இருந்து உடைந்து விழுந்த துண்டு, இந்து மாசமுத்திரத்தில் இலங்கை தீவாக உருவாகியது. பின்னர் இங்கு இயக்கர், அரக்கர், நாகர் குலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறினார்கள். பிரம்மனின் மகனும், சப்தரிஷிகளில் உயரியவருமான புலஸ்தியரே இலங்கையின் முனிவராக இருந்தார். இவரது புத்திரர்களே அகஸ்தியர், விஸ்ரவன்.

பிரம்மனின் மகன்களில் ஒருவர் புலஸ்தியர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராக கருதப்படுகின்றார். இலங்கையில் பிறந்த புலஸ்தியர் மூலமாகவே மனிதர்களுக்கு புராணங்கள் சொல்லப்பட்டனவாம். 

 
புலஸ்தியருக்கு இரு மகன்கள் பிறந்தனர். அகஸ்தியர், விஸ்வரவன். விஸ்ரவனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவர்கள் கேகாசி, ஈழவிடை. 
 
விஸ்ரவனுக்கும், கேகாசிக்கும் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன். விஸ்ரவனுக்கு காரை, சூர்ப்பணகை என்ற இரு மகளும் உள்ளனர். இவர்கள் அரக்ககுலத்தினர்.
 
விஸ்ரவனுக்கு ஈழவிடை மூலமாக பிறந்தவன் குபேரன். இவர்கள் இயக்க குலத்தினர்.
 
விஸ்ரவனுக்கு பிறகு குபேரன் இலங்கையின் அரசனான். பல ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். ஆனால் இவனது சிற்றன்னை புதல்வனும், தம்பியுமான அரக்க குலத்தைச் சேர்ந்த ராவணன் வஞ்சகத்தால், இலங்கையின் சிம்மாசனத்தை கைப்பற்றிக் கொண்டான். பின்னர் தண்டகாரண்யத்தில் வனவாசம் வந்த ராமனது மனைவியான சீதையை சிறைபிடித்து இலங்கையின் அசோக வனத்தில் சிறையிட்டான். மனைவியைத் தேடி வந்த ராமன் ராவணனின் தம்பியான விபீஷணனது துணையோடு ராவணனைக் கொன்று, சீதையை மீட்டான். இதன் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பினை விபிஷணனுக்கு அளித்துவிட்டு, ராமேஷ்வரத்தில் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி அயோத்தி திரும்பினான். விபிஷணனின் வழிவந்த இலங்கை மக்கள் தொடர்ந்து இந்து மதத்தை பின்பற்றி வந்தனர். 

கி.மு 300-களில் வங்கத்தில் இருந்து பரவிய பௌத்த மதத்தை இலங்கையின் மக்கள்களில் சிலர் பின்பற்றத் தொடங்கியதால், பலரும் பௌத்த சமயிகள் ஆனார்கள். ஆனால், இலங்கையின் கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தனர். கி.பி 5-ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் பௌத்த மதம் சரிவை சந்திக்கத் தொடங்கியது, பௌத்தர்களில் பலரும் இந்துக்களாக மாறினார்கள். ஆனால் இலங்கையில் பௌத்த மத மன்னர்கள் வலிமையடைந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இலங்கையில் பௌத்தம் பெரும்பான்மை மதமாக மாறியது. இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மை மதமாக மாறியது. இந்த இரு நாடுகளிலும் இந்து பௌத்த சமயப் போர் பெருகியது. இதன் விழைவாக தென்னிந்தியாவில் வாழ்ந்த பௌத்தர்களை இந்துக்கள் ஈழவர் ( ஈழவர் என்றால் ஈழத் தீவு, இலங்கையில் இருந்து வந்தோர் ) என அழைத்து ஒதுக்கி வைக்கத் தொடங்கினார்கள். இலங்கையில் வாழ்ந்த இந்துக்களை தெமளர் ( தமிழர் என மகாவம்சம், தமிழ்நாட்டில் இருந்து வந்தோர்  ) என அழைத்து ஒதுக்கி வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் உண்மையில் தமிழகத்தில் ஈழவரும், ஈழத்தில் தமிழரும் முறையே அந்தந்த நாட்டு மக்களே ஆவார். ஆனால் பெரும்பான்மை மதத்தினர் சிறுபான்மை மதத்தினர் இந்த நாட்டைச் சேர்ந்தோர் இல்லை எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்களை அயலக நாட்டு வாசிகள் என தொடர்ந்து கூறத் தலைப்பட்டனர். இன்று கூட இந்தியாவில் முஸ்லிம்களை அயலக மக்கள் என கூறுவதையும், பாகிஸ்தானில் இந்துக்களை அயலக மக்கள் என கூறுவதையும் கவனிக்கலாம்.

இவ்வாறு இலங்கை இந்துக்களை தெமெள, தெமெட என்ற பேரில் தமிழர்கள் ( தமிழ்நாட்டில் இருந்து வந்தேறியோர் ) என மகாவம்சம் உட்பட பௌத்த நூல்களில் எழுதத் தொடங்கினார்கள். இந்துக்களை முற்றாக அழிக்க முயன்றார்கள். ஆனால் தொடர்ந்து பல்லவ, சோழ, கலிங்க, பாண்டிய , ராஷ்ட்ரகுட நாடுகளில் இருந்து இந்து மன்னர்கள் இலங்கைக்கு படை எடுத்து இலங்கையின் இந்துக்களை பாதுகாத்து வந்தனர், இதனால் இலங்கையில் இந்துக்கள் அழியாமல் பாதுக்காக்கப்பட்டனர். பாண்டியர்கள் 13-ம் நூற்றாண்டில் இலங்கையின் வடக்கே ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு ஆரிய சக்கரவர்த்திகள் என்ற கலிங்க - பாண்டிய வம்ச கலப்புடைய இளவரசனை அரசனாக ஆக்கினார்கள்.

ஆனால் மாறாக இலங்கையின் பௌத்த அரசர்களால் இந்தியாவில் பௌத்த மக்களை காப்பாற்ற இயலவில்லை, இந்தியாவில் படையெடுக்கவும் இயலவில்லை. அதனால் தமிழகத்தில் வாழ்ந்த பௌத்தர்கள் காலப் போக்கில் இந்து சமயிகளானார்கள். வங்கதேசம், இந்தோனேசியா நாடுகளில் இஸ்லாம் சமயிகள் ஆனார்கள்.

ஆனால் இந்த கதைகளை எல்லாம் மறைத்து, விஜயனது வருகையோடு தான் இலங்கை வரலாற்றை எழுதுகின்றனர் பௌத்த ஆதிக்கவாதிகள். இதன் பின்னர் வந்தேறிய பௌத்தர்களுக்கும் பூர்விக இந்துக்களுக்குமான யுத்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
 
மகாவம்ச காலத்தில் நடந்த போருக்குமே மதம்தான் அடிப்படைக் காரணம். அன்றும் பவுத்தர்கள், இந்துக்களை அடக்கி ஒடுக்கினர். இன்றும் அதுதான் நடந்திருக்கிறது. அன்று இந்து அடையாளம் இன்றைப்போல் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை. இன்று இந்தியா என்று ஒரு பெரும் தேசமாக உருவாகியிருக்கும் நிலையில் நிச்சயம் இந்தப் போரின் விதியை மாற்றியிருக்க முடியும். ஆனால், தந்தை செல்வநாயகத்தில் ஆரம்பித்து தளபதி ஆண்டன் பாலசிங்கம் வரையான கிறிஸ்தவர்களாலும் மேற்கத்திய மத்தியஸ்தத்தினாலும் வழிநடத்தப்பட்ட போராட்டம் இந்து அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சென்று வந்தபின் தான் நிச்சயமாக எதையும் சொல்ல முடியும். முக்கிய பிரமுகர்கள் அங்கு இங்கு போவேன் என்று முதலில் சொல்வார்கள் அப்புறம் சாட்டு போக்கு காரணம் சொல்லி பயணம் தடைபட்டது என்றும் சொல்வார்கள். தமிழ்ப் பிரதேசங்களின் உண்மை நிலை தெரியாமலும் அரசின்மேல் நல்லபிப்பிராயம் வரும்படியாகவும் சிறிலங்கா அரச இயந்திரம் கவனித்துகொள்ளும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வது தமிழ் அரசியல்வாதிகளையும் வடமாகாண அரசாங்கத்தின் புத்திசாதுரியத்தையும் பொறுத்தது.

நரேந்திர மோடி இதுவரைக்கும் தாம் சொன்னதை செய்திருக்கின்ரார், ஆகையால் நிச்சயம் போவார் என எதிர்பார்ப்போம்..  தற்போதைய இலங்கை அதிபர் சிறிசேனாவும் சொன்னதை செய்து வருகின்றார் என்பதும் ஒரு நல்ல சமிக்ஞை... 

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு மட்டுமில்லை கூடவரும் ஆர் எஸ் எஸ் புள்ளிகளுக்கும் இங்கே பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக கிழக்கில் எமது கோவில்கள் கிராமங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதம் செய்தவற்றை சொல்ல்ல வேண்டும்.

ஆர் எஸ் எஸ் மனது வைத்தால் -நாம் நினத்துப்பார்காத நன்மைகள் எல்லாம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு மட்டுமில்லை கூடவரும் ஆர் எஸ் எஸ் புள்ளிகளுக்கும் இங்கே பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக கிழக்கில் எமது கோவில்கள் கிராமங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதம் செய்தவற்றை சொல்ல்ல வேண்டும்.

ஆர் எஸ் எஸ் மனது வைத்தால் -நாம் நினத்துப்பார்காத நன்மைகள் எல்லாம் நடக்கும்.

எத்தனை படங்கள் ஆதரம்கள் அனுப்பியும் இதுவரைக்கும் மனது வைக்கவில்லை R.S.S ஒரு வேளை சௌத்புளக்தான் R.S.Sஆக்கும்  :icon_idea: .
 
 உங்களின் நம்பிக்கை வீண்போகாது இருக்க சிங்களத்திட்க்கு அடியாள் வேலை செய்யும்  சுமன்திரன் வகையறாக்கள் மோடி அண்ட் R .S .S  அருகில்  செல்லாமல்  பார்த்துகொள்ளுங்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களா? இலங்கை இந்துக்களா?

Sunday, March 01, 2015

DSCN5495.jpg

ஆனால், தந்தை செல்வநாயகத்தில் ஆரம்பித்து தளபதி ஆண்டன் பாலசிங்கம் வரையான கிறிஸ்தவர்களாலும் மேற்கத்திய மத்தியஸ்தத்தினாலும் வழிநடத்தப்பட்ட போராட்டம் இந்து அடையாளத்தைப் பின்னுக்குத் தள்ளியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

யாரப்பா தளபதி ஆண்டன் பாலசிங்கம் ?

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.