Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு தேவையான ஆகக் குறைந்த உரிமை

Featured Replies

தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை.

1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம்.

2.காணி அதிகாரம்.

3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம்.

4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம்.

5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை.

இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில்,

1) ஒன்றுபட்ட இலங்கை

2) மாகாண முறை கலைப்பு

3) மன்னாரில் இந்திய வர்த்தக வலயம் + பாலம்

4) திருகோணமலையில் அமெரிக்க வர்த்தக வலயம்

5) அதிக செல் டவர்கள்.. (சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்தால் இன அழிப்பு விகிதம் குறையும்.. யாராவது படம் பிடித்துப் போட்டுவிடுவார்கள் என்கிற பயம் இருக்கும்.)

6) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை டாஸ் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருக்கிறார் இப்படி பதில் போட்டிருக்கிறீர்களே??????

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை டாஸ் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருக்கிறார் இப்படி பதில் போட்டிருக்கிறீர்களே??????

இதுதானே பலத்தில் உள்ளவர்களின் விருப்பமாக உள்ளது??!இணக்க அரசியலுக்கு வந்துவிட்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் செயற்பட வேணும்.. சரிதானே புலவர்ஜீ..

1. மூன்று நேர சாப்பாடு.

2 குடிக்க தண்ணீர்

போதுமானது

  • கருத்துக்கள உறவுகள்

1. மூன்று நேர சாப்பாடு.

2 குடிக்க தண்ணீர்

போதுமானது

தண்ணீர் இப்ப போத்தலில்தான் வரும்.. பரவாயில்லையா Trinco? (கொஞ்சம் வாழ்க்கைச் செலவு கூடவாக இருக்கும்.)

  • தொடங்கியவர்

தண்ணீர் இப்ப போத்தலில்தான் வரும்.. பரவாயில்லையா Trinco? (கொஞ்சம் வாழ்க்கைச் செலவு கூடவாக இருக்கும்.)

பாணையும் சம்பலையும் மறந்து போட்டியலே

  • கருத்துக்கள உறவுகள்

பாணையும் சம்பலையும் மறந்து போட்டியலே

பாண் தாராளமாகக் கிடைக்க வேண்டுமென்றால் பஞ்சாப் கோதுமையை நாங்கள் குறி வைக்க வேண்டும். அதற்கு ராமேஸ்வரம் ஊடாக தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது இன்றியமையாதது. கோதுமையின் இறக்குமதி விலை குறைய பாணின் விலையும் குறையும்.

போரால் அழிவடைந்த தென்னைமரங்களை மீண்டும் வளர்க்க முயற்சித்தல் முக்கியமானது. முக்கியமாக பளை எழுதுமட்டுவாள் பகுதிகளில் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன தென்னைமரங்கள். இவற்றை விரைவில் புதிதாக வளர்த்தெடுக்க அமெரிக்க வீரிய விதைத் தேங்காய்கள் கிடைக்குமா? சம்பல் பிரச்சினை அத்துடன் தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

1- கிழக்கில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு. அதில் ஆம் என பதில் வந்தால் இணப்பு.

2- ஆம்

3- பொலீஸ் - ஆம். சட்டம் - காணி தவிர்ந்த ஏனைய விடயங்களில் இல்லை. நீதிபதி நியமனம்/நீதிமன்ற நிர்வாகம் - இல்லை.

4 - வரி ஏய்ப்பா அது தப்பாச்சே ? :) ஸ்காட்லாந்து போல பகிரப்பட்ட வரி விதிக்கும் அதிகாரம்.

5- ஆம். ஆனால் இது வெளிப்படையானதாக, சட்டத்துக்கு உட்பட்டதாய் அமைய வேண்டும். இலங்கையின் வடக்கை புலம்பெயர் மக்கள் வரி ஏய்ப்புச் செய்து பணம் பதுக்கும் இடமாக மாற்ற இடமளிக்கக் கூடாது.

  • தொடங்கியவர்

பாண் தாராளமாகக் கிடைக்க வேண்டுமென்றால் பஞ்சாப் கோதுமையை நாங்கள் குறி வைக்க வேண்டும். அதற்கு ராமேஸ்வரம் ஊடாக தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது இன்றியமையாதது. கோதுமையின் இறக்குமதி விலை குறைய பாணின் விலையும் குறையும்.

போரால் அழிவடைந்த தென்னைமரங்களை மீண்டும் வளர்க்க முயற்சித்தல் முக்கியமானது. முக்கியமாக பளை எழுதுமட்டுவாள் பகுதிகளில் பாரிய அழிவைச் சந்தித்துள்ளன தென்னைமரங்கள். இவற்றை விரைவில் புதிதாக வளர்த்தெடுக்க அமெரிக்க வீரிய விதைத் தேங்காய்கள் கிடைக்குமா? சம்பல் பிரச்சினை அத்துடன் தீரும்.

அடப்பாவி ஒரு பாணும் சம்பலும் சாப்பிட சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய வேண்டுமா??

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி ஒரு பாணும் சம்பலும் சாப்பிட சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய வேண்டுமா??

இப்ப உலகமே ஒரு குக்கிராமம் ஆகிவிட்டது. மக்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்து பரவி வாழ்கிறார்கள். அவ்வகையில் நம் சிங்கள சகோதரர்களும் பரவி வடக்கு கிழக்கில் வாழ வழி செய்ய வேண்டும். கொக்குத்தொடுவாயில் இன்னும் குடியேற்றிவிட்டால் வடக்கும், கிழக்கும் இன்னும் வலுவாக பிரிவடையும். கிழக்கை இஸ்லாமிய தமிழர்களின் தேசமாக அறிவித்துவிட்டால் அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி. தீவில் உண்மையான அமைதி நிலவும். அதிக சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அதிலும் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் சாதாரணமாக பாணையும், சம்பலையும் எடைபோட்டுவிட்டீர்களே..

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் மூக்கு முட்ட வெட்டிப்போட்டு, பாண்/ சம்பல் என்று தினவெடுத்த கதைதான் கதைக்க முடியும்.

தீர்வு தேவைப்படுவது நிலத்து மக்களுக்கு. உங்களுக்கல்ல :)

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில் மூக்கு முட்ட வெட்டிப்போட்டு, பாண்/ சம்பல் என்று தினவெடுத்த கதைதான் கதைக்க முடியும்.

தீர்வு தேவைப்படுவது நிலத்து மக்களுக்கு. உங்களுக்கல்ல :)

என்ன தீர்வு என்று தீர்மானிக்க நீங்கள் என்ன அந்த நிலத்து மக்களின் பிரதிநிதியா? நீங்களும் ஒரு புலம்பெயர் யாவாரிதானே.. (நீங்கள் லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து அழுத கதையை இங்கு ஏற்கனவே எழுதியுள்ளீர்கள்.)

இதன் மூலம் மக்கள் அழிவுக்கு காரணமானவர் நீங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்... நீங்கள் தீர்வு என்று சொல்வதை ஏற்க தாயக மக்கள் தயாராக இல்லை. அவர்கள் இணக்க அரசியலுக்குப் போய் பலகாலமாச்சு..

  • தொடங்கியவர்

புலம் பெயர் தேசத்தில் மூக்கு முட்ட வெட்டிப்போட்டு, பாண்/ சம்பல் என்று தினவெடுத்த கதைதான் கதைக்க முடியும்.

தீர்வு தேவைப்படுவது நிலத்து மக்களுக்கு. உங்களுக்கல்ல :)

எவரும் தெனெவெடுத்த கதைகள் கதைக்கவில்லை, இணக்க அரசியல் என்ற் பெயரில் எமக்கு போதிக்கப்படுபவையை தான் இசை நகைச்சுவையாக பதிலளித்தார் உங்களுக்கு எல்லம் அறிந்த உங்களுக்கு இதெல்லம் விளங்காதது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாவாரியில்லை. கூட்டத்தில் போய் பத்தோடு பதின்னொன்றாக நிண்ட ஒரு கையாலாகாத புலம்பெயர் புண்ணியவான். போரை நிப்பாட்ட வேண்டும் என்ற ஒரே காரணுத்துக்காய் அப்படிச் செய்தேன்.

உங்களைப் போலவே எனக்கும் தீர்வு பற்றி கதைக்க ஒரு அருகதையும் இல்லைத்தான். நாளைக்கே மக்கள் கஜன் கொம்பேனியை ஆதரித்தால் - வாயை மூடிக்கொண்டு இருப்பேன்.

ஆனால் பாண்/சம்பல் என்று நையாண்டிதாவது பண்ண மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில்,

1) ஒன்றுபட்ட இலங்கை

2) மாகாண முறை கலைப்பு

3) மன்னாரில் இந்திய வர்த்தக வலயம் + பாலம்

4) திருகோணமலையில் அமெரிக்க வர்த்தக வலயம்

5) அதிக செல் டவர்கள்.. (சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்தால் இன அழிப்பு விகிதம் குறையும்.. யாராவது படம் பிடித்துப் போட்டுவிடுவார்கள் என்கிற பயம் இருக்கும்.)

6) :rolleyes:

6) (சிலரின் எண்ணப்படி) இந்தியா மாதிரி திறந்தவெளி கழிப்பிட உரிமை!  (கட்டிடங்கள் கூடாது ! ) :o:lol:

1<ஒரு நின்றுபோகா இலவச இணைய தொடர்பு ...

2<தரமான கணணி ...

இவை இரண்டும் இருந்ததால் தீர்வை நாங்கள் பெறுவோம் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை.

1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம்.

2.காணி அதிகாரம்.

3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம்.

4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம்.

5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை.

இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்

இது தான் சாத்தியமானது

இதைத்தான் புலிகள் இடைக்கால அறிக்கையில் சமர்ப்பித்தார்கள்....

சிங்களம் இதைப் புரிந்து பகிர்ந்து கொண்டால்...

தமிழீழக்கோரிக்கை நிலைக்காது

புலிகளே அதைத்தான் சொன்னார்கள்...

தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை.

1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம்.

2.காணி அதிகாரம்.

3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம்.

4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம்.

5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை.

இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்

ஏனுங்கோ வரி விதுப்பு அதிகாரமா? அல்லது வரி கட்டாமல் ஏய்க்கும் அதிகாரமா? 

குழப்பம்மா இல்ல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

87 இல் மெட்ராஸ் ரெஜிமெண்ட் எங்கள் ஊருக்கு வந்தபோது, அதில் இருந்த ஒரு கேப்டன் எங்கள் ஊர் மக்களை கேட்டார்,

" நீங்கள் எல்லாரும் சொந்த முற்றத்துடன் வீடு வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிணறு, மலசல கூடம் இருக்கிறது" இதை விடப் பெரிதாக என்னத்தை எதிர்பார்த்து உயிரைக்கொடுத்து சண்டை போடுகிறீர்கள்? என்று.

மக்கள் தலையிலடித்து கொண்டு வெளியே வந்தார்கள்.

1948 ற்கு முதலே வீட்டுக்கொரு கக்கூசுடன் வாழ்ந்தவர்கள் எம்மக்கள், பரம ஏழைகள் கூட.

நாம் சகல அடிப்படை வசதிகளும் இருக்கும் போது போராட வெளிக்கிட்ட காரணம் அரசியல் அபிலாசை.

அதனால்தான் இத்தனைக்கும் பிறகும் மக்கள், எந்த சலுகைக்கும், யாழ்தேவிக்கும், இலவச வீட்டுக்கும் விலை போகாமல் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள்.

இடையில் இந்தியாவும், எம் தலைவர்களும் கொம்பு சீவி விட்டதால் இளைனர்கள் தனிநாடு என்று அடைய முடியாத இலக்கை நோக்கிப் போராடினார்கள். அதில் தோத்தும் போனோம்.

ஆனால் எம் அரசியல் அபிலாசைகளை அவை கிஞ்சித்தும் மாற்றவில்லை.

நான் கேட்கவே இல்லையே!  :o:lol:

நீங்கள் எப்படியும் இருங்கள், Never mind.

ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக, சந்தோசமாக இருந்தால் சரிதான்..

ஆனால் எங்களை நீங்கள் சுட்டும்பொழுது, அதேபாணியில் உங்களின் குறைகளையும் சுட்டும் உரிமையையும் எங்களுக்கு நீங்கள் தந்துவிடுகிறீர்கள்..!

ராசவன்னியன்,

நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

87 இல் மெட்ராஸ் ரெஜிமெண்ட் எங்கள் ஊருக்கு வந்தபோது, அதில் இருந்த ஒரு கேப்டன் எங்கள் ஊர் மக்களை கேட்டார்,

" நீங்கள் எல்லாரும் சொந்த முற்றத்துடன் வீடு வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிணறு, மலசல கூடம் இருக்கிறது" இதை விடப் பெரிதாக என்னத்தை எதிர்பார்த்து உயிரைக்கொடுத்து சண்டை போடுகிறீர்கள்? என்று.

மக்கள் தலையிலடித்து கொண்டு வெளியே வந்தார்கள்.

1948 ற்கு முதலே வீட்டுக்கொரு கக்கூசுடன் வாழ்ந்தவர்கள் எம்மக்கள், பரம ஏழைகள் கூட.

நாம் சகல அடிப்படை வசதிகளும் இருக்கும் போது போராட வெளிக்கிட்ட காரணம் அரசியல் அபிலாசை.

அதனால்தான் இத்தனைக்கும் பிறகும் மக்கள், எந்த சலுகைக்கும், யாழ்தேவிக்கும், இலவச வீட்டுக்கும் விலை போகாமல் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள்.

இடையில் இந்தியாவும், எம் தலைவர்களும் கொம்பு சீவி விட்டதால் இளைனர்கள் தனிநாடு என்று அடைய முடியாத இலக்கை நோக்கிப் போராடினார்கள். அதில் தோத்தும் போனோம்.

ஆனால் எம் அரசியல் அபிலாசைகளை அவை கிஞ்சித்தும் மாற்றவில்லை.

தனித்து சிங்களம் வந்து போராடி இருந்திருந்தால் எப்பவோ தனி நாடு கிடைத்திருக்கும் . ஒருவனை அளிக்க உலகமே திரண்டு வந்தது , உண்மை இப்படி இருக்க உங்களுக்கு மட்டும் என்ன இப்படியான எண்ணம் .
 
உண்மையில் தனி நாடு கிடைக்க கூடாது என்பதுதான் உங்களின் எண்ணம் . இது தானே உண்மை . 

வன்னியன் சார் ஈழத்தமிழர்கள் பொதுவாகவே தமிழக தமிழரை நேசிக்கிறார்கள். எங்கள் மீது நீங்கள் கொண்ட அன்பை மதிக்கிறார்கள். இடையிடையே ஒரு சில நம்முடைய அன்பான கோசான் குஞ்சான்கள் அப்படி ஏதாவது சொல்லுவார்கள். அதையெல்லாம் நீங்க பெரிசா எடுக்காதேங்க.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனுக்கு தீர்வா ?
செத்தே போயிடுவான் ......... 
 
தமிழனுக்கு சிங்களவனாலோ  இந்தியனாலொ எந்த பிரச்சனையும் வந்ததில்லை.
அவர்கள் பாவம் பிறந்ததில் இருந்து அடிவான்கிகொண்டே இருக்கிறது ....
கொஞ்சம் நலமாக இருக்கட்டும் என்று எதையாவது தர முயற்சித்தால்.
 
படித்தவர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டம் இங்கிருந்து கிளம்பும் ....
அதை கொடுக்காமல் விடுவது எப்படி என்று அவர்களுக்கு அறிவுரை கொடுக்க.
 
தாமும் படித்தவர்கள் என்று சுயவிளம்பரம் செய்யும் கூட்டம் கிளம்பும் 
ஆகா ஓகோ எப்படி தந்திரமாக பேசுகிறார் 
மிகவும் தெளிவாக பேசுகிறார் என்று.
 
1948 இல் இருந்து இலங்கை வரலாறு இது.
இதுக்குள் நேர்மையானவர்கள் உண்மையானவர்கள் எல்லாரையும் பிரித்து சாகடிக்க 30 வருடம் போர் உதவியது.
எஞ்சியது அடுத்தவனை சுரண்டி வாழும் கூட்டம்தான்.
 
இதற்கு தீர்வு ஒரு கேடா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.