Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வரும் விமானத்துறையில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர்கள்!

Featured Replies

நாரதர் சொல்வது சிந்திக்க வேண்டியது. 
 
ஒரு அமைப்பின் நோக்கம் என்ன என்பது பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மேலும் இவர்கள் விமானிகளைப் பயிற்று விக்க வில்லை. விமானப் பணிப்பெண்களை சமுதாயம் ஏற்றுக் கொள்வதிலும் சில கலாச்சாரச் சிக்கல்கள் இருக்கின்றன.
 
கடந்த இருநூறு வருடங்களாக கிறீஸ்தவ அமைப்புகள் எம்முடைய தாயகத்தில் நல்லது செய்கிறோம் என்ற பாங்கில் சைவ சமயத்தை அழிப்பதில் தம்மால் முடிந்ததைச் செய்திருக்கின்றன. இதை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.
 
இந்த நிறுவனத்தால் எத்தகைய பொருளாதார வளர்ச்சியை சமுதாயத்திற்கு கொடுக்க முடியும் என்பதில் கேள்விகள் இருக்கின்றன.
 
விமானச் சிப்பந்திகள் / Supporting staff வேலைகளிற்கு ஏனைய சமூகத்தவருடன் அவர்கள் நாட்டு விமான நிறுவனங்களிலேயே போட்டி போடவேண்டிய தேவை இருக்கின்றது. அரபு நாட்டு விமானங்களில் எம்முடைய பெண்களுக்கு வேலை கிடைக்கலாம். அண்மையில் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணிற்கு நடந்த கதி பற்றியும் யோசிக்க வேண்டும்.
 
இவர்கள் மதத்தை மையமாக வைத்து இயங்கும் நிறுவனம் என்றால் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.
   
  • Replies 124
  • Views 6.5k
  • Created
  • Last Reply

எல்லா மதக்காரர்களும் சேர்ந்தே 2009 ல் அடிச்சானுகள், எந்த கடவுளும் உதவிக்கு வரவில்லை.

இருந்தாலும் எங்களுக்குத்தான் எவ்வளவு மதப்பற்று! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்36, ஜீவன் சிவா, ஜஷ்ரின், ஹோசான்,

இந்த அலாப்பல் விளையாட்டு கூடாது. இப்போதுதான் ஒரு மாதிரி நான்கு பக்கங்களிற்கு உரையாடல் வந்துள்ளது. நேற்று மேற்கிந்திய தீவுகள் நான்கு விக்கெற்றுக்களின் பின் அடுத்தடுத்து விக்கெற்றுக்களை இழந்து நியூசிலாந்து அணியுடன் சுருண்டதுபோன்ற நிலமை இங்கும் வரக்கூடாது. சும்மா நன்றி வணக்கம் சொல்லி முசுப்பாத்தி விடாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனத்தை செலுத்துங்கோ ராசாமார், உங்களுக்கு புண்ணியமாய் போகும். சும்மா விடைபெறுகின்றேன், வணக்கம் என்று சொன்னால் இந்தக்கிழவிக்கு காட் அட்டாக் வந்துடும். 

சுவாரசியமாய் போன ஆட்டம் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து அவுட் ஆகி சப் என்று போகக்கூடாது. தயவு செய்து மீள்பரிசீலனை செய்து களமாடுங்கள். ரன் ரேட் இன்னமும் ஆரோக்கியமான நிலையில்தான் உள்ளது. வெற்றி உங்கள் பக்கம் வருவதற்கு தூரம் அதிகம் இல்லை.

எதிரணியின் புதிய வீரர் தம்பி "ஈசன்" எடுத்த எடுப்பிலேயே முதலாவது பந்தில் அபாரமாய் தூக்கி அடித்து விளையாடி அழகாக எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை மக்கள் அரங்கத்தின் கூரைக்கு மேலாக அனுப்பினார். துடுப்பாட்டம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

விளையாட்டில் தம்பிமார் மனஸ்தாபப்படுவது சரி, ஆனால் நன்றி வணக்கம், இத்துடன் இத்திரியில் இருந்து விடைபெறுகின்றேன் என்று பெரிய குண்டுகளை தூக்கிப்போட்டு ஆட்டத்தில் அவுட் ஆகக்கூடாது என்ற ராசாக்கள்.

இந்தக்கிழவி மனசில் சின்னதாய் ஒரு கேள்வி.

திருவள்ளுவர் திருக்குறளில் முதலாவது குறளாய்

"அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு"

என்று சொல்கின்றார்.

கொஞ்சம் ரூம் போட்டு ஆழமாய் சிந்தித்து பார்த்தால் கல்வி எனும் பெயரில் மதத்தை திணிப்பதை தொடக்கி வைத்த பெருந்தகையே திருவள்ளுவர் அவர்கள்தான்.

எனவே, கிறித்தவ மிசனரிகளை குறைசொல்ல முன்னர்  தமிழ் புலவர் திருவள்ளுவரில் இருந்து முறைப்பாட்டை ஆரம்பிக்கலாம். எதிரணித்தலைவர் நாரதர், மற்றும் உப தலைவர் நெடுக்காலபோவான் களமாடும்போது இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தாழ்மையுடன் கிழவியின் இந்த வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் சார் இறங்கிய போதே நான் எஸ்கேப். ஆள் பெரிய சைவப்பழம் நமக்கோ நாக்கில சனி - ஏன் வம்பு :)

ஆனாலும் கிழவி பார்வையாளராக மட்டும் இல்லாமல் ( ஒரேஞ் டீசேர் போட்டபடி ஒத்தை கையால் கேச் பிடிப்பவர்களை போல) வள்ளுவரை கோதாவில் இழுத்து விட்டு அதன் மூலம் தானும் ஆட்டத்தில் நுழைந்துள்ளார்- எனவே அவரை எமது அணிசார்பில் அடுத்ததாக களமிறக்க தீர்மானித்துள்ளோம்.

எங்கே கிழவிக்கு உங்கள் பலத்த கரகோசம். ஓவர் டு யூ கிழவி :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம்.. கஞ்சா விக்கிறவன்.. பயிற்சி நெறி நடத்தினாலும்.. பற்றிக்கிட்டு முன்னேறுங்க என்று சொல்ல ஆக்கள் இருக்கினம். அங்கின உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்க ஆக்களில்ல.

இப்படித்தான் கோத்தா தமிழ் பெண்களை பிடிச்சு ஆமில சேர்த்த போதும் சொன்னார்கள். அதுவும் பிழைப்புக்கு ஒரு வழிதானே என்று. அப்புறம் அந்தப் பெண்கள் அலறி அடித்த போதும்.. அடி வாங்கின போதும் அதுக்கும் அழுதார்கள்.

நம்மிட்ட ஒரு கொள்கையும் இல்ல.. கோதாரியும் இல்ல. கண்ட இடத்தில் கொண்டை முடியலாம்... என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி அறியாப்பருவ வயதினரை சிக்கல்களில் சிக்க வைக்கவும் செய்யலாம்.

எனவே... ஆசை காட்டி மோசம் செய்யும் கும்பல்கள் இன்று தாயகத்தில் பல வழிகளில் மக்களை நாடி வருவதால்.. மக்கள்.. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி.. பயிற்சி நெறிகளைப் படிப்பதே நல்லது. பெற்றோர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  :icon_idea:  :(  :rolleyes:

இப்படி கூறும் நீங்கள் எல்லோரும், புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைவரும் இணைந்து அமைப்பு ரீதியாக அங்கே ஏதாவது முன்னெடுக்கலாமே. எதற்கு எடுத்தாலும் கோடரி, அருவாள் எடுத்துக் கொண்டு வரும் உங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் ஏன் இதுவரை அங்கே ஒரு தொழிற்சாலை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியாது?

ஏன் இவ்வாறான கல்வியல் கல்லூரிகள் நிறுவக் கூடாது?

ஏன் இந்து மத சம்பந்தமான அறநிலையம், முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் இல்லம் ஏன் நடத்தக் கூடாது?

கிறிஸ்தவ மத அமைப்புக்கள் நடத்துவது போன்று புலம்பெயர் அமைப்புக்களால் இந்து அமைப்புக்கள் ஊடாக ஏன் நடத்த முடியாது?

இவ்வாறான பணியினை ஆறு திருமுருகன் செய்கின்றார். அவர் தனி முயற்சியாக புலம்பெயர் நாடுகளில் போய் பிச்சைப் பாத்திரம் ஏந்தித்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிலையம், முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் ஆகியனவற்றை நடத்துகின்றார். புலத்தில் இருந்து இவ்வாறு உரையாடுபவர்கள் கூட பாரியளவில் பங்களிப்பு செய்வது இல்லை என்று வருத்தப்பட்டு கூறி இருக்கின்றார்.

சரி, இவற்றை எல்லாம் விடுங்கள். வன்னியில் இருந்து கே.பி.யால் நடத்தப்படும் இல்லங்கள் அனைத்தும் இந்து மத வழிபாட்டினை முன்னிநிறுத்தித்தான் அவர் நடத்துகின்றார். கிறிஸ்தவ அமைப்புக்கள் நிதி உதவி வழங்க முற்பட்ட போது எல்லாம் கூடிய வரை அவற்றினை தவிர்த்து புலம்பெயர் தமிழர்கள் ஓரளவு வழங்கும் நிதியில் இருந்துதான் அந்தப் பிள்ளைகளை எல்லாம் வளர்க்கின்றார். இவற்றுக்காவது ஒரு சதம்தானும் கொடுக்க முயற்சிக்கலாமே.

இங்கே வளர்கின்ற பிள்ளைகள் எல்லாம் யாருக்காக இங்கே வாதாடுகின்றீர்களோ அவர்களின் பிள்ளைகளாச்சே.

முன்னர் ஆழிப்பேரலை இடம்பெற்ற போது இதே கிறிஸ்தவ அமைப்புக்கள் வழங்கிய அனைத்து நிதி உதவிகளையும் விடுதலைப் புலிகளும் மக்களும் வாங்கியதனை மறந்து விடக் கூடாது.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு கூறினார்.

உங்களுக்கு அமெரிக்கா உதவி செய்தால் பெற்றுக் கொள்வீர்களா என கேட்கப்பட்ட போது, எனது இலட்சியம் சோசலிச தமிழீழம். அதற்கு எந்தப் பேய் உதவி புரிந்தாலும் பெற்றுக் கொள்வேன் என்றார்.

ஆகவே, போரின் வடுக்களைச் சந்தித்த சமூகத்துக்கு தற்போது ஏதாவது ஒரு வகையில் கல்வியில் முன்னேற வேண்டும் என்கின்ற அவாதான் உள்ளது. அதனை எந்த அமைப்பு வழங்கினாலும் அதனை பற்றிக்கொண்டு முன்னேறுவதில் தப்பு இல்லை.

வேண்டுமெனில் உங்கள் உறவினர்கள் யாரும் ஏதாவது துறையில் கல்வி கற்க விரும்பினால் கூறுங்கள், இந்து மத அமைப்புக்கள் நடத்தும் கல்வியல் கல்லூரிகளில் மட்டுமே கல்வி கற்குமாறு.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மீட்சியே இல்லையா?

இப்படி எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்த்தால், எமக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை.

தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூட சொல்ல முடியாது ஏனென்றால் எங்களுக்கு இவ்வளவு அழிவு வந்தபோதும் எந்த ஒரு கடவுளும் எங்களை காப்பாற்றவோ கணக்கெடுக்கவோவில்லை.

கடவுளா? கடவுளையே துரோகியாக்குகின்ற புலம்பெயர் தமிழர் கூட்டத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதனை மறந்து உரையாடுகின்றீர்கள் போல் உள்ளது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கூறும் நீங்கள் எல்லோரும், புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைவரும் இணைந்து அமைப்பு ரீதியாக அங்கே ஏதாவது முன்னெடுக்கலாமே. எதற்கு எடுத்தாலும் கோடரி, அருவாள் எடுத்துக் கொண்டு வரும் உங்களை எல்லாம் என்ன செய்தால் தகும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் ஏன் இதுவரை அங்கே ஒரு தொழிற்சாலை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியாது?

ஏன் இவ்வாறான கல்வியல் கல்லூரிகள் நிறுவக் கூடாது?

ஏன் இந்து மத சம்பந்தமான அறநிலையம், முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் இல்லம் ஏன் நடத்தக் கூடாது?

கிறிஸ்தவ மத அமைப்புக்கள் நடத்துவது போன்று புலம்பெயர் அமைப்புக்களால் இந்து அமைப்புக்கள் ஊடாக ஏன் நடத்த முடியாது?

இவ்வாறான பணியினை ஆறு திருமுருகன் செய்கின்றார். அவர் தனி முயற்சியாக புலம்பெயர் நாடுகளில் போய் பிச்சைப் பாத்திரம் ஏந்தித்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிலையம், முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் ஆகியனவற்றை நடத்துகின்றார். புலத்தில் இருந்து இவ்வாறு உரையாடுபவர்கள் கூட பாரியளவில் பங்களிப்பு செய்வது இல்லை என்று வருத்தப்பட்டு கூறி இருக்கின்றார்.

சரி, இவற்றை எல்லாம் விடுங்கள். வன்னியில் இருந்து கே.பி.யால் நடத்தப்படும் இல்லங்கள் அனைத்தும் இந்து மத வழிபாட்டினை முன்னிநிறுத்தித்தான் அவர் நடத்துகின்றார். கிறிஸ்தவ அமைப்புக்கள் நிதி உதவி வழங்க முற்பட்ட போது எல்லாம் கூடிய வரை அவற்றினை தவிர்த்து புலம்பெயர் தமிழர்கள் ஓரளவு வழங்கும் நிதியில் இருந்துதான் அந்தப் பிள்ளைகளை எல்லாம் வளர்க்கின்றார். இவற்றுக்காவது ஒரு சதம்தானும் கொடுக்க முயற்சிக்கலாமே.

இங்கே வளர்கின்ற பிள்ளைகள் எல்லாம் யாருக்காக இங்கே வாதாடுகின்றீர்களோ அவர்களின் பிள்ளைகளாச்சே.

முன்னர் ஆழிப்பேரலை இடம்பெற்ற போது இதே கிறிஸ்தவ அமைப்புக்கள் வழங்கிய அனைத்து நிதி உதவிகளையும் விடுதலைப் புலிகளும் மக்களும் வாங்கியதனை மறந்து விடக் கூடாது.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு கூறினார்.

உங்களுக்கு அமெரிக்கா உதவி செய்தால் பெற்றுக் கொள்வீர்களா என கேட்கப்பட்ட போது, எனது இலட்சியம் சோசலிச தமிழீழம். அதற்கு எந்தப் பேய் உதவி புரிந்தாலும் பெற்றுக் கொள்வேன் என்றார்.

ஆகவே, போரின் வடுக்களைச் சந்தித்த சமூகத்துக்கு தற்போது ஏதாவது ஒரு வகையில் கல்வியில் முன்னேற வேண்டும் என்கின்ற அவாதான் உள்ளது. அதனை எந்த அமைப்பு வழங்கினாலும் அதனை பற்றிக்கொண்டு முன்னேறுவதில் தப்பு இல்லை.

வேண்டுமெனில் உங்கள் உறவினர்கள் யாரும் ஏதாவது துறையில் கல்வி கற்க விரும்பினால் கூறுங்கள், இந்து மத அமைப்புக்கள் நடத்தும் கல்வியல் கல்லூரிகளில் மட்டுமே கல்வி கற்குமாறு.

உங்களுக்கு KP பற்றி எழுதாட்டி செமிக்காது. புலம் பெயர் தமிழ் அமைப்புகளால் சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலையிலா ஶ்ரீலங்கா இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பலவிதமான அறியாமைகளோடு இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் காலத்தில்... பின்னான சமாதான காலத்தில்.. சிங்களம் தடை செய்த பொருட்களை தவிர மிச்சம் எல்லாம் தாயகத்தில் இருந்தது. மக்கள் அனுபவித்தார்கள். கணணிக் கல்வி கூட அளிக்கப்பட்டு வந்தது.

ஒருவர் வந்து எழுதிறார் மீண்டும் மண்ணெய் ஜெனரேட்டர் வந்து புலிகள் போடனுமோன்னு. இப்ப என்ன ஆகாயத்தில் இருந்தா மின்சாரம் வருகிறது. வந்து கொண்டிருந்த மின்சார நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தி நிறுத்தினது சிங்களம்.

வந்து கொண்டிருந்த தொலைக்காட்சி சேவையை கொக்குவிலில் விமானத்தாக்குதல் நடத்தி நிறுத்தியது சிங்களம்.

வந்து கொண்டிருந்த ரயில்களை வவுனியாவோடு நிறுத்தியது சிங்களம்.

கடைசியில் மக்கள் ஒன்றையும் அனுபவிக்கல்ல.. இப்ப தான் அனுபவிக்கினம் என்பது போன்ற தோற்றப்பாடுகள் அதுவும் எல்லாம் புலிகளால் என்ற தோற்றப்பாடுகள்.. பொய்யர்களின் பொய் முகத்தையும்.. தாங்கள் வெளிநாடுகளில் அகதி வாழ்வுக்கு அவிழ்த்துவிட்ட பொய்களை மெய்யாக்கவுமே சிலர் இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் காலத்தில் மக்கள்.. சிங்களம் தடை செய்தவற்றைத் தவிர.. எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். அத்தோடு கூடிய சுதந்திரத்தை அனுபவித்தார்கள். 

சினிமா படங்களுக்கு தடை இருந்த போது உள்ளூர் படங்கள் வெளிவந்தன. பின் சினிமா தடைகளும் எடுக்கப்பட்டு.. தரமான படங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் போர்ச் சூழலில் கூட முழு நீள திரைக்காவியங்களை உள்ளூரில் தயாரித்த பெருமை.. போர் காலத்தில் நடந்துள்ளது.

அதே போல்.. மக்கள்.. கல்வியில் குறையோடு இருக்கவில்லை. சகல கல்வி வாய்ப்புக்களும் இயன்ற அளவிற்கு அளிக்கப்பட்டன.

இன்று பல்வேறு முகவர் அமைப்புக்கள்.. பல்வேறு மோசடி நோக்கில் மக்களை.. மாணவர்களை நோக்கி வரும் நிலை அன்றிருக்கவில்லை. மக்கள் பயமின்றி.. ஒரு நிறுவனத்தில் இணைந்து கல்வி கற்கக் கூடிய சூழல் இருந்தது. இன்றைய மோசடிச் சூழல் அன்றில்லை.

இவற்றை உணர உணர்த்த.. மக்கள் விளிப்புடன் செயற்படுவதை சிலர்.. ஏதோ மக்கள் ஒன்றையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டனர்.. இன்று தான் எல்லாம் அனுபவிக்கின்றனர் என்று ஆக்கிரமிப்புக்கு வசதிவாய்ப்பால்.. பாடம் எடுக்கும் சிலரின் உள்நோக்கத்தை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு மக்களை மாணவர்களை நோக்கி வரும்.. விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருந்து செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாயம். இவை ஏமாற்றங்களில் இருந்தும்.. ஆபத்துக்களில் சிக்குவதில் இருந்தும் மக்களைக் காக்கும்.  :)  :icon_idea:

கொழும்புக்கு வந்த எம் மக்கள் எத்தனையோ போலிகளிடம் ஏமாந்த வரலாறை..போர்க்காலம் தந்துள்ளது. அந்தளவு ஏமாற்றங்கள்.. ஊரில் போர் பிராந்தியத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இன்று அந்த ஏமாற்றக்காரர்கள் எம் மக்களின் வாசல்படியில் வெளிநாட்டுக் காசை பறிக்க குழுமி நிற்கின்றனர் என்பதையும் மக்கள் உணரச் செய்ய வேண்டும்.  :icon_idea: 

நிகழ்காலத்தை உரையாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆள் கடந்த காலத்தைப் பற்றியே யோசிக்குது.

கடைசி வரைக்கும் ஆள் திருந்தாது போலத்தான் எனக்குப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு KP பற்றி எழுதாட்டி செமிக்காது. புலம் பெயர் தமிழ் அமைப்புகளால் சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலையிலா ஶ்ரீலங்கா இருக்கிறது.

உந்தக் கதைதான் வேண்டாம் என்கின்றது. ஓரு முயற்சியும் செய்யாமல் சிறிலங்கா அரசு தடை அது இது என்கின்றீர்களே. தற்போதும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவி புரிகின்றோம் என்று ஊடகங்களிலே நிதி சேகரிக்கின்றார்களே.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியம் போன்றன தொடர்ந்தும் நிதி சேகரிக்கின்றார்களே.

இதில் அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியம் நேரடியாக வழங்கிய நிதி உதவியின் பயன்பாட்டினை நேரில் கண்டு வந்து இருக்கின்றேன்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தாம் வேறு பெயரில் நிதி வழங்கி வருவதாக கூறுகின்றார்கள். அங்கே நான் கேட்ட போது அப்படி எல்லாம் இல்லை என்கின்றார்கள்.

கே.பி.யை மட்டுமா எழுதினேன். ஏன் ஆறு திருமுருகனைப் பற்றியும் எழுதி உள்ளேன். அதற்கும்  ஏதாவது எழுதுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ais-aviation-20140905-5.jpg

உங்களுக்கு KP பற்றி எழுதாட்டி செமிக்காது. புலம் பெயர் தமிழ் அமைப்புகளால் சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலையிலா ஶ்ரீலங்கா இருக்கிறது.

புலம் பெயர் அமைப்புகளும் சுதந்திரமா இயங்க முடியாது. கிறிஸ்தவ அமைப்புகளையும் செயற்பட விட முடியாது. அரசு செய்தாலும் அதிலும் ஆயிரம் நொட்டை. அந்த மக்களுக்கு யார் தான் உதவி செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்காலத்தை உரையாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆள் கடந்த காலத்தைப் பற்றியே யோசிக்குது.

கடைசி வரைக்கும் ஆள் திருந்தாது போலத்தான் எனக்குப் படுகின்றது.

எம் மக்களை விட்டு தூர விலகி இருந்த கடந்த கால.. நிகழ்கால.. எதிர்கால பயங்கரங்கள் எல்லாம் இன்று அவர்கள் வாசற்படி வந்துள்ளதை எச்சரிக்க வேண்டிய தேவை உள்ளது. மக்களுக்கு தெரியும்.. எந்தக் கடந்த காலம் தங்களின் பொற்காலமாக இருந்தது என்பது. மக்களை நிகழ்கால.. எதிர்காலப் பயங்கரங்களில் இருந்து எச்சரிக்க வேண்டியது.. பொதுமக்கள் நலன்விரும்பிகளின் பொதுப்பணி. அதனை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

திருடர்கள்.. திருட்டுக்கள் வெளிப்படுவதை விரும்பமாட்டார்கள்... என்பதையும் மக்கள் அறிய வேண்டும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ais-aviation-20140905-5.jpg

MS office பயிற்சி நெறியில் தயாரித்த விளம்பரம் போல உள்ளது. எங்களிடம் தந்திருந்தால்.. இன்னும் நாலு படத்தை அட் பண்ணி.. அட் கலக்கலா செய்து தந்திருப்பமே...! :lol:

இந்த நிறுவனத்திற்கு.. அரச பதிவிருக்கோ என்பதும் கேள்விக்குறி. சர்வதேச தரம் என்று சொல்லும் நிறுவனம்.. தனது இணைய தளத்தை குறிப்பிடவில்லை.

முன்னர் சுவிஸில்.. ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை என்று.. என்று வரிவிளம்பரம் போடுவார்கள்.. உதயனில். அங்க போனால்.. முதலில் இரண்டு வருடம் தங்கள் நிறுவனத்தில் அல்லது கொழும்பில் படியுங்கள்.. அப்புறம் தான் சுவிஸ் என்பார்களாம்.

இது அதைவிடக் கேவலமாக உள்ளது.

இதன்படி.. நாட்டுக்கு டபிள் பாஸ்போட்டில் விஜயம் செய்துள்ள சிலர்.. மக்களை ஏமாற்ற போடுற திட்டம் போலவே தெரிகிறது. இந்தப் பெண்பிள்ளைகள்.. இந்திய.. சிங்கள.. உயர்குடி ஆட்களின் தேவைக்குப் பயன்படும் நிலைக்குப் போகாமல் இருப்பதை பெற்றோர் பாதுக்காக்க வேண்டும்.

அரச பதிவு செய்யப்படாத.. அரச அங்கீகாரம் பெறாத எந்த நிறுவனத்தினதும்.. பயிற்சி நெறிகளில் உங்கள் பிள்ளைகளை இணைக்க வேண்டாம். இந்த வரிவிளம்பரத்தில் நிறுவனத்தின் இணைய முகவரியோ.. அல்லது அதன் பதிவிலக்கமோ இல்லை. அந்த வகையில்.. இது ஒரு பொய்.. அல்லது மோசடி நிறுவனமாகக் கூட இருக்கலாம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
சரி, இவற்றை எல்லாம் விடுங்கள். வன்னியில் இருந்து கே.பி.யால் நடத்தப்படும் இல்லங்கள் அனைத்தும் இந்து மத வழிபாட்டினை முன்னிநிறுத்தித்தான் அவர் நடத்துகின்றார். கிறிஸ்தவ அமைப்புக்கள் நிதி உதவி வழங்க முற்பட்ட போது எல்லாம் கூடிய வரை அவற்றினை தவிர்த்து புலம்பெயர் தமிழர்கள் ஓரளவு வழங்கும் நிதியில் இருந்துதான் அந்தப் பிள்ளைகளை எல்லாம் வளர்க்கின்றார். இவற்றுக்காவது ஒரு சதம்தானும் கொடுக்க முயற்சிக்கலாமே.

ஆகா ஒரு காலத்தில் பெட்டி அடித்து எப்படி தாக்குதல் நடாத்துவது என எழுதியவர் இப்போ கே.பிக்கு விளம்பரம் தேட தொடங்கி உள்ளார்.

புலம் பெயர் அமைப்புகளும் சுதந்திரமா இயங்க முடியாது. கிறிஸ்தவ அமைப்புகளையும் செயற்பட விட முடியாது. அரசு செய்தாலும் அதிலும் ஆயிரம் நொட்டை. அந்த மக்களுக்கு யார் தான் உதவி செய்வது? 

புலம்பெயர் அமைப்புக்கள் சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பது ஒரு பகுதி உண்மை. கிறிஸ்தவ அமைப்புக்கள் போர் நடந்த நாடுகள்(ஆப்கானிஸ்தான் , சிறிலங்கா) போன்ற பகுதிகளில் இறங்கி வேலை செய்வது சில சந்தேகங்களை எழுப்ப தான் செய்கிறது. உண்மையாக உதவி மனப்பான்மையில் செயற்பட்டால் சந்தோசம்.தீர விசாரிப்பது ஒரு முற்பாதுகாப்பு தானே. அரசும் நேர்மையாக செயற்படும் எனில் தமிழ் மக்கள் சீரான நிலைக்கு திரும்ப ஒரு வருடம் போதுமானது. தேர்தல் காலமாதலால் சில சலுகைகளை செய்து வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் முனைவதை கண் கூடாக காணலாம். நேர்மையான நடவடிக்கைகள் ஒரு திட்டத்துடன் காலக்க்ணிப்புடன் நகரும். மேலும் கடந்த 60 வருட தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் சிங்கள அரசியல் கட்சிகளின் ஏமாற்று வித்தைகள் எத்தனை எத்தனை.அதற்குள் சிங்களவர் மாறி விட அவர்களுக்குள் ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை. முடிவாக அந்த மக்களுக்கு நேசக்கரம் போன்ற லாபநோக்கமற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. ஊர்ச்சங்கங்கள், தனிப்பட்டவர்களும் உதவுகிறார்கள். இவ் உதவிகள் போதவில்லை என்பது உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.srilankanaviationcollege.com/

http://www.airline-training4u.com/about.htm

இதில் இரண்டு இணைப்புக்கள் உள்ளன. இதில் எது நம்பகத்தன்மை கூடிய பயிற்சி நிறுவனம் என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

மேலே உள்ள வரிவிளம்பரத்தில்.. நேரவா.. என்று அழைக்கிறார்கள்.. இவர்களிடம் எதனை நம்பி மக்கள் பிள்ளைகளை அனுப்புவது..??! :icon_idea::rolleyes::)

நியானி: நீக்கப்பட்ட மேற்கோளுக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

சபேசன்36, ஜீவன் சிவா, ஜஷ்ரின், ஹோசான்,

இந்த அலாப்பல் விளையாட்டு கூடாது. இப்போதுதான் ஒரு மாதிரி நான்கு பக்கங்களிற்கு உரையாடல் வந்துள்ளது. நேற்று மேற்கிந்திய தீவுகள் நான்கு விக்கெற்றுக்களின் பின் அடுத்தடுத்து விக்கெற்றுக்களை இழந்து நியூசிலாந்து அணியுடன் சுருண்டதுபோன்ற நிலமை இங்கும் வரக்கூடாது. சும்மா நன்றி வணக்கம் சொல்லி முசுப்பாத்தி விடாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனத்தை செலுத்துங்கோ ராசாமார், உங்களுக்கு புண்ணியமாய் போகும். சும்மா விடைபெறுகின்றேன், வணக்கம் என்று சொன்னால் இந்தக்கிழவிக்கு காட் அட்டாக் வந்துடும். 

சுவாரசியமாய் போன ஆட்டம் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து அவுட் ஆகி சப் என்று போகக்கூடாது. தயவு செய்து மீள்பரிசீலனை செய்து களமாடுங்கள். ரன் ரேட் இன்னமும் ஆரோக்கியமான நிலையில்தான் உள்ளது. வெற்றி உங்கள் பக்கம் வருவதற்கு தூரம் அதிகம் இல்லை.

எதிரணியின் புதிய வீரர் தம்பி "ஈசன்" எடுத்த எடுப்பிலேயே முதலாவது பந்தில் அபாரமாய் தூக்கி அடித்து விளையாடி அழகாக எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை மக்கள் அரங்கத்தின் கூரைக்கு மேலாக அனுப்பினார். துடுப்பாட்டம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

விளையாட்டில் தம்பிமார் மனஸ்தாபப்படுவது சரி, ஆனால் நன்றி வணக்கம், இத்துடன் இத்திரியில் இருந்து விடைபெறுகின்றேன் என்று பெரிய குண்டுகளை தூக்கிப்போட்டு ஆட்டத்தில் அவுட் ஆகக்கூடாது என்ற ராசாக்கள்.

இந்தக்கிழவி மனசில் சின்னதாய் ஒரு கேள்வி.

திருவள்ளுவர் திருக்குறளில் முதலாவது குறளாய்

"அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு"

என்று சொல்கின்றார்.

கொஞ்சம் ரூம் போட்டு ஆழமாய் சிந்தித்து பார்த்தால் கல்வி எனும் பெயரில் மதத்தை திணிப்பதை தொடக்கி வைத்த பெருந்தகையே திருவள்ளுவர் அவர்கள்தான்.

எனவே, கிறித்தவ மிசனரிகளை குறைசொல்ல முன்னர்  தமிழ் புலவர் திருவள்ளுவரில் இருந்து முறைப்பாட்டை ஆரம்பிக்கலாம். எதிரணித்தலைவர் நாரதர், மற்றும் உப தலைவர் நெடுக்காலபோவான் களமாடும்போது இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தாழ்மையுடன் கிழவியின் இந்த வேண்டுகோள்.

திருவள்ளுவர் திருக்குறளில் முதலாவது குறளாய்
 
"அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு"//
 
இதற்கு பலர் பலவாறாக விளக்கம் சொல்லி  உள்ளனர். ஆதி பகவன் என்பது எக்   கடவுளையும் குறிப்பிடும்   சொல் அல்ல. திருக்குறள் ஒரு மதச் சார்பற்ற நூல். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பரிணாமயியல் பற்றி அவர் அறிந்து இருக்க சாத்தியம் இல்லை. அவர் உலகம் ஒரு மூலத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று நினைத்து இருக்கலாம். வள்ளுவர் சொல்லி விட்டார் ஏசு சொல்லி விட்டார் என்பதற்காக நாங்கள் பல் ஆயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உலகின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது  என்பதற்கான பல அறிவியல் விளக்கங்கள்  வந்து விட்டன . நாம் இன்னும் மத மூட நம்பிக்கைகளில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டிய  அவசியம் இல்லை. 

கடவுளா? கடவுளையே துரோகியாக்குகின்ற புலம்பெயர் தமிழர் கூட்டத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதனை மறந்து உரையாடுகின்றீர்கள் போல் உள்ளது!!!

இங்கே யாராவது கடவுளைத் துரோகி என எழுதினரா?  

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் திருக்குறளில் முதலாவது குறளாய்
 
"அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு"//
 
இதற்கு பலர் பலவாறாக விளக்கம் சொல்லி  உள்ளனர். ஆதி பகவன் என்பது எக்   கடவுளையும் குறிப்பிடும்   சொல் அல்ல. திருக்குறள் ஒரு மதச் சார்பற்ற நூல். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பரிணாமயியல் பற்றி அவர் அறிந்து இருக்க சாத்தியம் இல்லை. அவர் உலகம் ஒரு மூலத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று நினைத்து இருக்கலாம். வள்ளுவர் சொல்லி விட்டார் ஏசு சொல்லி விட்டார் என்பதற்காக நாங்கள் பல் ஆயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உலகின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது  என்பதற்கான பல அறிவியல் விளக்கங்கள்  வந்து விட்டன . நாம் இன்னும் மத மூட நம்பிக்கைகளில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டிய  அவசியம் இல்லை. 

இங்கே யாராவது கடவுளைத் துரோகி என எழுதினரா?  

எழுதக்கூடிய வல்லமை உள்ளவர்கள் நீங்கள்.

ais-aviation-20140905-5.jpg

 இந்த விளம்பரம் படு மோசமான பொய்களைக் கொண்டு உள்ளது. இவர்கள் என்ன ஒரு வார கால வேலைப் பயிற்சியை வழங்குகின்றனர்?

விமான நிலையத்தில் பணியாளர் சேவையாக அது இருந்ததால், இதற்கான பயிற்சியை அந்த அந்த விமானச் சேவை நிறுவனக்களே வழங்க்கின்றன. உதாரணத்திற்க்கு சிறிலங்கன் எயர்லையின்  அதற்கான பயிற்சிக் கல்லூரியை வைத்திருக்கிறது.
 
அரசியல் மயமாக்கப்பட்ட சிறிலங்க விமான நிலையத்தில் வேலை எடுக்க அரசியல் சிபாரிசே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் அல்ல.
 
எந்தப் பெட்டிக் கடையிலும் இது போன்ற சான்றிதழ் எடுக்க முடியும். இங்கி ப்ற்பசனால் என்னும் வார்த்தை பிழையாகப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது. விமானப் பொறியியல், விமான ஓட்டினர், என்பவையே தொழில் வல்லுநர் தர வேலைகள்.
 
தொழில் வல்லுநர் தர வேலைகளுக்கு என தனியான பட்டப்படிப்புகள் , அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றன. 
 
இந்த விளம்பரம் கவர்ச்சிகரமான படங்களையும், விமானச் சேவை  நிறுவங்களின்  சீருடைகளையும் போட்டு பணம் புடுங்குவதாகவே  எனக்குப் படுகிறது. இந்த படிப்பை முடித்தவர்கள் எங்கு வேலை எடுத்துள்ளனர் என்னும் விபரம் இருக்கிறதா?   
 
விமான நிலையச் சேவைகள் அவசியமானவை தான் ஆனால் அதற்க்கு முன் எமக்கு என ஒரு விமான நிலையமும், விமானச் சீவியும் அவசியம். இவற்றைச் செய்ய வல்லது வடமாகாண அரசே. அதற்கான அரசியல் அதிகாரமும், நிதி மூல வழங்கலும் அவசியமானது. இது சம்பந்தமாக வாடா மாகாண அரசு முனைப்புக்களை எடுக்க வேண்டும்.
 
புலம் பெயர் தேசத்தில் பலர் அதற்கான உதவிகளையும் , ஆலோசனைகளையும்  வழங்க்கத் தயாராக உள்ளோம். அதற்கு முதல் புலம் பெயர் மக்கள் மீதான தடைகள் நீக்கப் பட வேண்டும் . நாம் கைது செய்யப்படும் நிலை அங்கு இருக்கும் வரை இவ்வாறான உதவிகளைச் செய்வது கடினமானது. இதனை முதலில் நீக்க வேண்டும் .      

எழுதக்கூடிய வல்லமை உள்ளவர்கள் நீங்கள்.

பொய்யிலே பிறந்து பொய்லே  வாழும் வல்லமை உடையவர் நீங்கள்  
  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கதைதான் வேண்டாம் என்கின்றது. ஓரு முயற்சியும் செய்யாமல் சிறிலங்கா அரசு தடை அது இது என்கின்றீர்களே. தற்போதும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவி புரிகின்றோம் என்று ஊடகங்களிலே நிதி சேகரிக்கின்றார்களே.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியம் போன்றன தொடர்ந்தும் நிதி சேகரிக்கின்றார்களே.

இதில் அவுஸ்திரேலிய தமிழர் மருத்துவ நிதியம் நேரடியாக வழங்கிய நிதி உதவியின் பயன்பாட்டினை நேரில் கண்டு வந்து இருக்கின்றேன்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தாம் வேறு பெயரில் நிதி வழங்கி வருவதாக கூறுகின்றார்கள். அங்கே நான் கேட்ட போது அப்படி எல்லாம் இல்லை என்கின்றார்கள்.

கே.பி.யை மட்டுமா எழுதினேன். ஏன் ஆறு திருமுருகனைப் பற்றியும் எழுதி உள்ளேன். அதற்கும் ஏதாவது எழுதுங்களேன்.

பிற்கேன் அங்க ஓண்டும் செய்யல என எழுதிறியள்.

புலம் பெயர் அமைப்புகளும் சுதந்திரமா இயங்க முடியாது. கிறிஸ்தவ அமைப்புகளையும் செயற்பட விட முடியாது. அரசு செய்தாலும் அதிலும் ஆயிரம் நொட்டை. அந்த மக்களுக்கு யார் தான் உதவி செய்வது?

அவர் செய்யிறது என எழுதியதை காணலயோ

  • கருத்துக்கள உறவுகள்

ais-aviation-20140905-5.jpg

1) Airline

2) Airport Operation

3) Management Studies

இந்த மூன்றையும் படித்து முடித்தவுடன் ஒருவருடைய தகுதி நிலை என்ன ? அவர் என்ன வேலைக்கு போகலாம் ?

Air Canada இன் பயிற்சி முறையை நீங்க பயன்படுத்துவது Air Canada க்கு தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்முதல்தடவையாக இருக்கலாம் பல வருடங்களுக்கு(35 வருடங்களுக்கு) முன்பே கொழும்பு பத்திரிகையில் விளம்பரங்களை நான் பார்திருக்கிறேன்...அதுபோக இது 6மாதம் அல்லது ஒரு வருட பயிற்சி தானே ......இது ஒரு குடிசை கைத்தொழில் போன்றது

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறப்பால் ஒரு இந்து. இறக்கும்வரை ஒரு இந்துவாகவே இருப்பேன். அதற்காக கடவுள் தான் எல்லாம் என்பவன் இல்லை.

எல்லாம் தனக்கு வரும்போது தான் தெரியும்.

இங்கு சமயம் மாற்றப்போகிறார்கள் என்று கருத்தெழுதும் மேற்க்கத்தய நாடுகளில் வசிப்பவர்களில் எத்தனை பேர் நீங்கள் இலங்கையை விட்டு வெளிக்கிடும்போது, ஒரு கிறித்தவ நாட்டிற்கு போகிறோம் எமது சமயத்தை மாற்றிவிடுவார்களா? எமது கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா?, எமது பிள்ளைகளின் சமயத்தை, கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா? என்று எல்லாம் யோசித்துவிட்டு விசாரித்துவிட்டு வெளிக்கிட்டீர்கள்? அல்லது எத்தனை பேர் இப்போ மாறிவிட்டீர்கள்?

அங்குள்ள தமிழர்கள் படிக்கட்டும். வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை படித்தது வீணாகப்போகாது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள தமிழர்கள் படிக்கட்டும். வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை படித்தது வீணாகப்போகாது தானே.

அங்குள்ள தமிழர்கள்.. அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறிகளைக் கற்க இப்போ நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையில்.. அங்கீகாரமற்ற.. விளம்பர நோக்கிலான.. சில தனியார்.. மத நலன்பேணும் நிறுவனங்களை நோக்கி மாணவர்களின் எதிர்காலத்தை திசைப்படுத்துவது மாணவர்களை தவறாக வழிநடத்துவதற்கு ஒப்பாகும்.

அதனை செய்ய யாழ் களம் போன்ற சமூக இணைய இணையங்கள் இடமளிக்கக் கூடாது.

கருத்து வறுமையில்..  கண்டபடி எழுதுபவர்கள் போல.. எம் மக்களின் பலவீனங்களை.. அறியாமைகளை... போலிகள் தமக்கான வியாபார முதலீடாக்க அனுமதிப்பது சமூக விரோதச் செயலாகவே கருதப்பட வேண்டும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

நான் பிறப்பால் ஒரு இந்து. இறக்கும்வரை ஒரு இந்துவாகவே இருப்பேன். அதற்காக கடவுள் தான் எல்லாம் என்பவன் இல்லை.

எல்லாம் தனக்கு வரும்போது தான் தெரியும்.

இங்கு சமயம் மாற்றப்போகிறார்கள் என்று கருத்தெழுதும் மேற்க்கத்தய நாடுகளில் வசிப்பவர்களில் எத்தனை பேர் நீங்கள் இலங்கையை விட்டு வெளிக்கிடும்போது, ஒரு கிறித்தவ நாட்டிற்கு போகிறோம் எமது சமயத்தை மாற்றிவிடுவார்களா? எமது கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா?, எமது பிள்ளைகளின் சமயத்தை, கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா? என்று எல்லாம் யோசித்துவிட்டு விசாரித்துவிட்டு வெளிக்கிட்டீர்கள்? அல்லது எத்தனை பேர் இப்போ மாறிவிட்டீர்கள்?

அங்குள்ள தமிழர்கள் படிக்கட்டும். வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை படித்தது வீணாகப்போகாது தானே.

நீங்க நல்ல ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள். இருந்தாலும் பிறக்கும் போது யார்க்கும் எந்த மதமும் இல்லை பின்னர் எம்மை சார்ந்தவர்களின் மத நம்பிக்கைகளை பின்பற்றுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறப்பால் ஒரு இந்து. இறக்கும்வரை ஒரு இந்துவாகவே இருப்பேன். அதற்காக கடவுள் தான் எல்லாம் என்பவன் இல்லை.

எல்லாம் தனக்கு வரும்போது தான் தெரியும்.

இங்கு சமயம் மாற்றப்போகிறார்கள் என்று கருத்தெழுதும் மேற்க்கத்தய நாடுகளில் வசிப்பவர்களில் எத்தனை பேர் நீங்கள் இலங்கையை விட்டு வெளிக்கிடும்போது, ஒரு கிறித்தவ நாட்டிற்கு போகிறோம் எமது சமயத்தை மாற்றிவிடுவார்களா? எமது கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா?, எமது பிள்ளைகளின் சமயத்தை, கலாச்சாரத்தை மாற்றிவிடுவார்களா? என்று எல்லாம் யோசித்துவிட்டு விசாரித்துவிட்டு வெளிக்கிட்டீர்கள்? அல்லது எத்தனை பேர் இப்போ மாறிவிட்டீர்கள்?

அங்குள்ள தமிழர்கள் படிக்கட்டும். வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை படித்தது வீணாகப்போகாது தானே.

வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என எல்லாத்தையும் படிக்கிறதோ? இது என்ன இலவச படிப்போ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.