Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலசெக்கன்களில் ஒரு மனிதனின் மூளையில் எற்படும்  மாற்றங்கள் எவ்வாறான அழிவுகளையும்

பாதகங்களையும் கொண்டுவரும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்...

இதற்கு மாற்றுவழிகள் இருக்குமா?

இவற்றை தடுக்கமுடியுமா???

ஆயிரம் கேள்விகள்

பதில் தான் பூச்சியம்.... :(  :(  :(

விசுகு,

இவர், பெற்றோரின் வற்புறுத்தலால்.... இந்த வேலையை தேர்வு செய்திருக்கலாம்,

பின் காலப் போக்கில்.. அந்த வேலையின் மீதே... வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று, நான் நினைக்கின்றேன்.

  • Replies 68
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Germanwings co-pilot had serious depressive episode: Bild newspaper

இவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். :o

http://www.msn.com/en-ca/news/germanwings%20crash/germanwings-co-pilot-had-serious-depressive-episode-bild-newspaper/ar-AAa4xk7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடாரியை கொண்டு கதவை உடைக்க முயன்ற விமானி: அம்பலமான பகீர் தகவல்   germanpilot_removedoor_001.jpgஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான அறையின் கதவை கோடாரியை கொண்டு விமானி உடைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் வெளிவரும் தினப்பத்திரிகையான Bild, இன்று விமான விபத்து குறித்த புதிய தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜேர்மன் விங்க்ஸின் முதன்மை விமானி வெளியே சென்றவுடன், அங்கிருந்த துணை விமானியான Andreas Lubitz அறையின் கதவை மூடியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பிய முதன்மை விமானி மூடியிருந்த கதவை திறக்கும்படி மெதுவாக தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கதவை திறக்க போராடிய விமானி,இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கோடாரியை எடுத்து வந்து கதவை உடைத்தெரிய முயற்சித்ததாக ஜேர்மனிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விமான கதவை பலம் கொண்டு தாக்கிய ஒலிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஜேர்மனியில் உள்ள துணை விமானியின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் சில முக்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இருப்பினும், துணை விமானி தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் தற்சமயம் வரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகளில் ‘துணை விமானி சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு உறுதியான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

Edited by வாத்தியார்

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

:o  இனி விமானிகள் விமானங்களுக்குள் போகுமுன் அவர்களது மன அழுத்தத்தை பரீட்சித்து அனுப்பவேண்டும். ( மன அழுத்தத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் கருவிகளை யாராவது கண்டுபிடியுங்கோ இல்லாவிட்டால் இனி விமானம் ஏறுவது ரிஸ்க் தான்  :blink: )

இன்று பிரெஞ்சு  தொலைக்காடசியில் ஒரு அதிகாரி சொல்லிக்கொண்டிருந்தார்..

இன்றைய நிலையில் உலகமெல்லாம்

ஒவ்வொரு செக்கனுக்கும்  ஒவ்வொரு விமானம் புறப்படுகிறது..

அப்படிப்பார்த்தால்

இது அதில் கோடியில் ஒன்று..

பெரிதாக்கி  பயப்படுத்தத்தேவையில்லை என்றார்..

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் பாதுகாப்பற்ற சூழலுக்குள் போகும்போது தரைக்கட்டுப்பாட்டு நிலையம் அதனைப் பொறுப்பெடுக்கலாம் என்பதுபோல செய்துகொண்டால் பல கடத்தல்களையும் தடுக்க உதவும்.

ஒரு கிரேக்க நாட்டு விமானத்தில் ஒருமுறை பிராணவாயுவின் அளவு குறைந்து பலரும் மயக்கமாகிவிட்டார்கள். தானியங்கி முறையின்படி அது இறங்கவேண்டிய இடம் வந்ததும் விமான நிலையத்துக்கு அருகில் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இரண்டு போர்விமானங்களில் சென்று பறக்கும் விமானத்தை ஆராய்ந்தபோது எல்லோருமே அசைவற்று இருந்துள்ளார்கள். எரிபொருள் முடிந்தது விமானம் விழுந்துவிட்டது. :o

தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வசதி இருந்தால் அந்த விமானத்தைக் காப்பாற்றியிருக்க முடியும்.

https://www.youtube.com/watch?v=1JRoozoz6Zk

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
ஏனோ தெரியவில்லை... எத்தனையோ விமான விபத்துக்கள் நடைபெற்று அவைபற்றித் தெரியவந்தபோதும் ஏற்படாத கலக்கமும், பயமும் பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதை மீடியாக்களும், இணையங்களும் வெளிப்படுத்திய முறைமை ஏற்படுத்தியது. விமானப் பயணம் பயங்கரமானது, ஆபத்தானது என எல்லோருமே கதிகலங்கிப் பயந்திருப்பது போன்ற ஓர் உணர்வு...! 
 
விபத்திற்கு விமானம் காரணமில்லை என்று தற்போது வரும் செய்திகள் மனதுக்குச் சற்று அமைதியையும், ஆறுதலையும் அளிக்கின்றது. 
 
Neue Erkenntnisse 
Co-Pilot war am Flugtag krankgeschrieben

http://www.t-online.de/nachrichten/panorama/id_73440026/germanwings-co-pilot-war-krankgeschrieben-kein-abschiedsbrief.html

அன்றையதினம் உதவி விமானி சுகவீன விடுமுறை எடுத்துவிட்டு கடமைக்கு போய் உள்ளார்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

:o  இனி விமானிகள் விமானங்களுக்குள் போகுமுன் அவர்களது மன அழுத்தத்தை பரீட்சித்து அனுப்பவேண்டும். ( மன அழுத்தத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் கருவிகளை யாராவது கண்டுபிடியுங்கோ இல்லாவிட்டால் இனி விமானம் ஏறுவது ரிஸ்க் தான்  :blink: )

அமெரிக்கா... நியூயோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின்...

விமானிகளின் அறைக்குள், எவரும் கண்ட படி, உள்ளே... நுழைய முற்படாதவடி, பூட்டு முறைப்படி சர்வதேச சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. (முன்பு... சாதாரண பயணிகளும், கொக்பிட்டை... திறந்து பார்க்க முடியும்)

இந்த விபத்தின் பின்.... ஒரு விமானத்தில்,  விமான ஓட்டிகளின் அறையில்... இரண்டு விமானிகளாவது, கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சட்டத்தத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அதாவது... ஒரு உள்ளூர் விமானத்தில்... 3 விமான ஓட்டிகள்.

ஒரு விமானிக்கு... ஒண்டுக்கு, இரண்டுக்கு வந்தால்.... அவர், தாரளமாக "கக்கூசுக்கு" போய் வரலாம்.

இரண்டு விமானிகள் உள்ள, விமானத்தில்... அவருக்கு, என்ன வந்தாலும்... அடக்கிக் கொண்டு, "எயாப் போட்டில்" விமானத்தை இறக்கிய பின் தான்.... "உச்சா.." போகலாம். :D

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்
co-pilot-andreas-l-.jpg
 
Wieder werden neue Erkenntnisse bei den Ermittlungen zur Germanwings-Katastrophe bekannt: Der Co-Pilot Andreas L. war nach Angaben der Staatsanwaltschaft Düsseldorf für den Unglückstag krankgeschrieben und hat das seinem Arbeitgeber verheimlicht. Nach Medieninformationen soll es sich um eine psychische Erkrankung gehandelt haben.

இந்த, இளைஞர் தான்...  அந்த உதவி விமானி.
அன்று, அவர் மனநிலை அழுத்தத்தில்  இருந்ததாகவும், அவரை.. விமானப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று... அவரின் வைத்தியர் மருத்துவ விடுப்பு கொடுத்துள்ளார். அதனை அந்த, உதவி விமானி.... தனது மேலதிகாரிகளிடம் காட்டாது... தனது பணியை... ஆரம்பித்து, 150 உயிர்களுக்கு... உலை வைத்து விட்டார். :o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு, 

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு,

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

திறந்த க்க்கூசா கட்டணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

கொமர்ஷல் பிளைட்களில் அது கொஞ்சம் பழைய காலம்.  அது ஒரு கனாக்காலம்!!

இப்ப அந்த டெசிக்னேஷனே இல்லை.

இடதுபுற பைலட்டும் வலதுபுற கோ பைலட்டும் சமாளிக்க வேண்டும்.

பரவாயில்லையே.. விமானத்துறை பற்றி அறிந்துள்ளீர்களே. இப்போது சென்ட்ரல் லோட் பிளானிங் சென்டர்கூட வந்துவிட்டது.

Edited by sabesan36

வெள்ளை தோல் செய்தால்  மன அழுத்தம் ,விரக்தி ,இதே வேறு  ஆபிரிக்கன் அல்லது அரபுக்காரன்  செய்தால்  தீவிரவாதம் ,பயங்கரவாதம் இவ்வளவுதான்  உலக  ஒழுங்கு .. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு, 

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

983279_432a501937_m.jpeg

எல்லாத்தையும் விட விண்வெளி ஆராய்ச்சிக்கு போறவை கட்டுற பம்பஸை பைலட்மாரையும் கட்டச்சொல்லலாம்.  :lol:

அல்ப்ஸ் மலை உச்சியில் மோதினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று யாரும் உதவி விமானிக்கு சொல்லிச்சினமோ என்னமோ..?! எனி இமயமலைப்பக்கமா போற விமானங்களில் பயணிக்கவே கூடாது.  :icon_idea:

ஸ்ரீலங்காவுக்கு போறதுகள் சிவனொளிபாத மலையடியாலைதான் போறதான்.. இந்த முறை பள்ளிக்கூட லீவுக்கு போறவை கவனம்!! :o  :icon_idea:

"யாராலுமே தன்னை மறக்க முடியாதபடி ஒரு காரியத்தை செய்வேன் என லுபிட்ஸ் கூறினார்"

அல்ப்ஸ் மலையில் கடந்த செவ்வாயன்று ஜெர்மன்விங்ஸ் விமானம் ஒன்றை 150 பேருடன் வேண்டுமென்றே மோதி அனைவரும் உயிரிழக்க காரணமாக இருந்தவராக சந்தேகிக்கப்படும் ஜெர்மன் விமானி ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ், எல்லோரும் தன்னை நினைவில் கொள்ளும்படியான ஒரு காரியத்தை தான் செய்வேன் என்று முன்பே கூறியதாக அவரின் முன்னாள் காதலி ஒருவர் கூறியுள்ளார்.

லுபிட்ஸ்
 
தனக்கிருந்த மனநலப் பாதிப்பை வெளியில் சொல்லாமல் இருந்துவந்தவராக லுபிட்ஸ் தெரிகிறார்.
ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ் மனநலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் என்றும், அவருக்கு அவ்வப்போது கோபமும் மன அழுத்தமும் வந்து ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் என்றும் விமான சிப்பந்தியாக பணியாற்றும் ஆந்த்ரேயாஸின் முன்னாள் காதலி, 'பைல்ட்' என்ற ஜெர்மன் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
ஆந்த்ரேயாஸ் ஒரு வருடத்துக்கு முன்னர் கூறியிருந்த ஒரு விஷயத்தை மரியா டபிள்யூ என்று மட்டும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பெண் நினைவுகூர்ந்துள்ளார்.
சென்ற ஆண்டு ஒரு ஐந்து மாத காலம் ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸுடன் சேர்ந்து தான் வேலை செய்ததாக அந்த விமான சிப்பந்தி தெரிவித்துள்ளார்.
 
தனது மனநலப் பிரச்சினைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மறைப்பதில், லுபிட்ஸ் கைதேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, 'மோதப்போகிறோம்' என்று அலறிக்கொண்டு லுபிட்ஸ் சில நேரம் கண்விழித்தது உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
லுபிட்ஸ் உளவியல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தனக்கு மனநலக் கோளாறு இருப்பதால் முதன்மை விமானியாக எப்போதுமே வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது என்றும் மரியா டபிள்யூ தெரிவித்துள்ளார்.
லுபிட்ஸுக்கு ஏதோ மனநலப் பிரச்சினை இருந்தது அதிகமாகத் தெளிவாகியதால்தான் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
 
விழுந்து நொறுங்கிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவான சத்தங்களை ஆராய்ந்த பிரஞ்சு விசாரணையாளர்கள், விமானியறையிலிருந்து முதன்மை விமானி எழுந்து சென்ற நிலையில் இரண்டாம் விமானியான லுபிட்ஸ் விமானியறைக் கதவை தாழிட்டிருந்தார் என்று கூறியிருந்தனர்.
 
முதன்மை விமானி கதவைத் திறக்கச் சொல்லிக் கேட்டும் லுபிட்ஸ் பதிலளிக்கவே இல்லை என்றும், உயரப் பறந்த விமானம் தாழ வருவதற்கான பட்டன்களை லுபிட்ஸ் வேண்டுமென்றேதான் அழுத்தியிருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
விமானம் மலையில் மோதும்வரை அவர் உயிருடனும் உஷாருடனும் இருந்தார் என்றும் தாம் யூகிப்பதாகவும் அவர்கள் கூறினர்னர்.
 
பின்னர் லுபிட்ஸின் வீடுகளை பரிசோதனை செய்த ஜெர்மன் சட்ட நடவடிக்கை அதிகாரிகள், லுபிட்ஸ் மனநல சிகிச்சைகளை பெற்றுவதந்தற்கான ஆவணங்களைக் கண்டெடுத்ததிருந்தனர்.
மேலும் உடல்நிலை சரியில்லாததால் லுபிட்ஸ் வேலைக்கு வர இயலாது என தெரிவிக்கும் மருத்துவர் கடிதங்கள் அவர் வீட்டில் கிழிந்து கிடந்ததையும் அவர்கள் கண்டனர்.
 
இதன் எதிரொலியாக விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருப்பதை கட்டாயமாக்கும் புதிய விதியைளை தாம் அறிமுகப்படுத்துவதாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.