Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாக பொட்டே போடக் கூடாது என்று வைத்தியர் சொன்னால், இல்லை எங்கள் கலாச்சாரம். குங்குமம் வைத்தால்த்தான் புருஷன் இருக்கிறான் என்று தெரியும் என்று  ஒவ்வாமை வந்து பெண்ணுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பொட்டை வைக்கவா சொல்வீர்கள் ???

நீங்கள் திருமணத்துக்குப் பின்னும் முன்னும் எந்தக் கன்னிப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கவில்லைப் போல :D

இசை நன்றாகத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துள்ளார் :lol:

இசைக்கலைஞன்

Posted Today, 10:37 AM

குமரிகள் குங்குமப்பொட்டு வைப்பதும் வழக்கத்தில் இருந்தது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் மேல் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தால் மணமானவர் என்று பொருள். அல்லது இது தமிழகத்து வழக்கமோ தெரியவில்லை.

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்க்கின்றீர்கள். :D
இசைக்கலைஞன் எதை தமிழகத்து வழக்கம் என சொல்கிறார்? :rolleyes:
  • Replies 111
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
... பெண்கள் கணவன் இழந்தபின் பொட்டு வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே உரியது ...

பிறந்தது தொடக்கம் இறப்புவரை பொட்டு பெண்களுக்குச் சொந்தமானது தானே அன்றி கணவன் போனவுடன் கரைந்து காணாமற் போவதல்ல.

இந்த வரிகள்தான் தீர்க்கமான உண்மை. இதுவே தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் எதை தமிழகத்து வழக்கம் என சொல்கிறார்? :rolleyes:

வகிட்டிலும் பொட்டு வைப்பதை.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வகிட்டிலும் பொட்டு வைப்பதை.. :unsure:

எமது நாட்டிலும் மணம் முடித்த பெண்கள் உச்சிப்பொட்டு வைப்பது வழக்கம்.  :)  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தது தொடக்கம் இறப்புவரை பொட்டு பெண்களுக்குச் சொந்தமானது தானே அன்றி கணவன் போனவுடன் கரைந்து காணாமற் போவதல்ல.

பொட்டு பெண்களுக்கு உரியதுதான். ஆனால் கணவர் இறந்தபின் குங்குமப்பொட்டு வைப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ உங்கட அம்மாவிற்கு கலியாணம் கட்டமுதல் குங்கும பொட்டு வைக்கும் பழக்கம் இருந்ததா?

உங்கட கேள்வி இதுதான்

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

குங்கும பொட்டிற்கும் சாதாரண பொட்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் சுமேயின் இந்த திரியைப் பார்த்தேன். எனது கணவர் இறந்து பத்து வருடங்களை எட்டிக்கொணடிருக்கிறது. இதுவரையில் நான் தாலி அணிந்துகொண்டுதான் இருக்கிறேன். பொட்டு வைக்கமட்டும் இன்னும் என் மனம் இடங்கொடுக்கவில்லை. காரணம் என் கணவனுக்கு நான் கொடுக்கும் மரியாதையாக இருக்கலாம். எனது மகனின் திருமணத்தின்போது எனது கணவனின் சகோதரியின் விருப்பத்தின் பேரிலும் என் சகோதரிகளின்விருப்பத்தை நிறைவேற்றவும் ; சாறியின் நிறத்தில் ஒட்டுப் பொட்டு வைத்தேன். என் பிள்ளைகள் அம்மா அழகாக உடுத்துவதையும் நாகரிகமாக உடை அணிவதையுமே விரும்புகிறார்கள். எதுவும் யாரையும் கடடுப்படுத்தாது அவரவர் மன உணர்வுகளைப் பொறுத்தே பொட்டு வைப்பதோ உடை அணிவதோ. இப்பொழுது கணவன் இருக்கும் பொழுதே தாலி லொக்கரில் ஒட்டுப் பொட்டு கைப் பையில் இதற்குள் ஏன் விவாதம். அம்மாவின் சுதந்திரத்தில் நாம் தலையிடாமல் இருப்போம். அப்பா அவரது நினைவுகளில் நிரந்தரமானவர். அவருக்கு எது விருப்பமோ அதை செய்ய அனுமதிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே இன்றைய நாட்களில் பலருடைய மனங்களில் தேங்கிக்கிடக்கும் விடயத்தை அளவளாவ அல்லது தெளிவான முடிவுகாண எடுத்துள்ளீர்கள் நல்ல விடயம்.

குங்குமமும் சந்தணமும்  ஆரோக்கியத்தோடு ஒட்டிய காரணங்களோடே அணியப்படுகின்ற ஒன்று நாம்தான் அதனை திருமண சம்பிரதாயமாக மாற்றியுள்ளோம். சித்தர்களும் ஞானிகளும் அணிந்த ஆரோக்கிய அணிகலன் என்றால் மிகையாகாது. உடல் முழுவதும் வெளிப்படும் மின்காந்த அலைநெற்றியில் உள்ள புருவங்களுக்கு மத்தியில் உள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக மனம் அலைக்கழியும்போது....கவலைகள் அதிகரிக்கும்போது அந்த புருவங்களுக்கிடையிலான நுண்ணியபகுதி சடுதியாக சூடேறுவதும் அதனால் தலைவலிபோன்ற தலையோடு பிணைப்புள்ள வருத்தங்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். குங்குமத்திற்கு சூட்டைத்தணிக்கும் சக்தி உண்டு. நெற்றியில் புருவங்களுக்கு நடுவில் வைக்கும் குங்குமமும் சந்தணமும் உடலை குளிர்ச்சியடையச்செய்து ஆரோக்கியம் பேணும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதை அனைவரும் அறிவோம். மஞ்சள் தேய்த்து நீராடுவது அழகுக்காக மாத்திரமன்றி தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. குங்குமம் என்பது திருமணமான பெண்தான் அணியவேண்டும் என்பதும் கணவனை இழந்தவர் அணியலாகாது என்பதும் சரியானதாக தோன்றவில்லை. இது நமக்குள் நாமே வகுத்துக் கொண்ட வழக்கு அவ்வளவே. கணவனை இழந்தபெண்ணை சம்பிரதாயங்களால் முடக்கும் திட்டத்தில் இதுவும் ஒன்று மனைவியை இழந்த ஆணுக்கு எந்தச் சம்பிரதாயமும் அடையாளங்களை கொடுக்காதபோது கணவனை இழந்தவளுக்கு மட்டும் விலங்கிடுவது முறையன்று. முற்று முழுதாக ஆண்களின் ஆளுமைக்குள்ளேயே சம்பிரதாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்ற அப்பட்டமான கசப்பான உண்மையை பெண்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டியவர்களாக பழக்கப்பட்டுள்ளார்கள். எது எப்படியாகிலும் பெண்கள் தாங்களாகவே மனம் விரும்பி தங்களைக் கட்டிப்போடக்கூடிய சம்பிரதாயம் என்ற ஒப்பனைக்குப்பின்னாலிருந்து தெளிவாக வெளிவரவேண்டும் இல்லையென்றால் அவர்களால் திடமாக நிற்கமுடியாது. என் கவனத்தில் இருந்து பெண்களைப் பெண்கள்தான் மீளமுடியாத சமூகக்கட்டுகளுக்குள் திணிக்கிறார்கள் ஆண்கள் அல்ல. ஒவ்வொரு மனைவியும் தன் கணவனின் இழப்பிற்குப்பின்னால் தன் கணவனுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று அங்கலாய்ப்பதும் அவர்களுக்கான நாட்களில் அவர்களுக்குப்பிடித்தமான உணவுகளைச் செய்து படைப்பதையும் மட்டுமே செய்கிறார்கள் எந்தக்கணவனுக்கும் தன் மனைவி மூழியாக இருப்பதைப்பார்ப்பது பிடிக்காது என்பதை அறவே மறந்து விடுகிறார்கள். காரணம் சமுதாயம் மீதான பயம் எங்கே தன் கணவனுக்குப் பிடித்தமான மங்கலமாக தாமிருந்தால் தம்மீது மாசு கற்பித்துவிடுமோ என்பதே அது. சமுதாயம் என்பது  நாம்தான் எங்களிலிருந்தே எண்ணங்கள் உருப்பெறுகின்றன. எண்ணங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் எங்கள் திடத்திலிருந்தே.... மற்றவர் அபிப்பிராயம் நம்மைக் கூறுபோடும் என்று பயந்தால் வழிஅறிவது கடினம். தன் வழியைத் தானே தீர்மானிக்கவேண்டும்.

உண்மையைச் சொன்னால் கணவனுடைய இழப்புக்குப் பின்னால் பெண்ணை அமங்கலியாக்குவது மிகவும் கொடியது. துணையின் இழப்பு என்பது எந்த உயிருக்கும் வலி ஒன்றுதான் ஆனால் பெண்களுக்கு மட்டும் அது அதிகம். பூவும் இல்லை பொட்டும் இல்லை புன்னகை இல்லை நீ இல்லாத உலகத்திலே சந்தோசம் இல்லை என்பதே ஒவ்வொரு பெண்ணுக்கும்  விதியாகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப்பார்க்கும்போது இழப்பின் வலி அதிகப்படும். துணையை இழப்பது என்பது பெண்ணுக்கு விதிக்கப்படும் இரகசிய தண்டனை எத்தனைபேர் இதனை உணர்வார்கள்?

சுமே ஒன்று சொல்லட்டுமா......

உங்கள் தாயை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது கேள்வியாக இருந்தாலும் பிள்ளைகள் தாயின் மீது அழுத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குங்குமம் அணிவதும் விடுவதும் அவருடைய தனிமனித விருப்பு சார்ந்தது. அவர் வளர்ந்த சூழலுக்கு சார்ந்தது அல்லது தியாகம் சார்ந்தது. அதற்கு மேல் கருத்தொருமித்து வாழ்ந்து முடித்த காதலின் பால் அவர் கொண்ட ஈர்ப்பு சார்ந்தது.

அதே.....

நன்றியக்கா

அனுபவப்பதிவே  உண்மை தரும்..

  • கருத்துக்கள உறவுகள்

அதே.....

அண்ணா மேலே எழுதிய எனது கருத்துக்களை சரியாக வாசிக்கேல்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன நடந்தது என்று முதலிலேயே எழுதினால் திரியில் எழுதுபவர்கள் எனது கருத்துக்குச் சார்பாக அல்லது எழுதியதுக்குச் சார்பாக எழுதுவார்களே என்ற காரணம் தான்.

அப்பாவின் முப்பத்தியோராம் நாள் துடக்குக் கழிக்க என வந்த ஐயர் கிரியைகளைச் செய்துவிட்டு விபூதி சந்தானம் குங்குமம் என்பவற்றை அனைவருக்கும் கொடுக்கும்படி கூறி என் கடைசித் தம்பியிடம் கொடுத்தார். என் கடைசித் தம்பி தன் பத்து வயதில் யேர்மனிக்கு வந்தவன். அவனின் நண்பர்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்து இருபது வயதின் பின்னர் வெளிநாடு வந்து குடும்பமாகி வசிப்பவர்கள்.

அவன் அம்மாவிடம் தட்டை நீட்டியதும் அம்மா விபூதி சந்தானம் வைத்துவிட்டு குங்குமத்தை எடுக்கும் போது நீங்கள் வைக்கக் கூடாது என்று தம்பி உடனே தட்டை இழுத்துவிட்டான். பார்த்துக்கொண்டு நின்ற எனக்குக் கோவம் வந்து ஏன் வைக்கக் கூடாது. நீ அதைச் சொல்லக் கூடாது என்று கொஞ்சம் சத்தமாகக் கூறிவிட்டேன். உடனே ஐயர் விடுங்கோ நிவேதா என்று கூற ஐயருக்கு முன்னால் நான் பிறகு ஒன்றும் கூறவில்லை.

ஐயரை அனுப்பத் தம்பி போக நான் உடனே அம்மாவுக்கு குங்குமப் பொட்டை எடுத்து வைத்துவிட்டேன். அம்மா ஒன்றும் கூறவில்லை. முகத்திலும் எந்த உணர்வையும் காட்டாமல் தன் பாட்டில் திரிந்தார். பத்து நிமிடத்தில் திரும்ப வந்த தம்பி, உங்களுக்கு சொன்னால் விளங்காதா அம்மா என்று கூற, நான் தான் அம்மாவுக்கு வைத்துவிட்டேன். பொட்டு வைப்பது வைக்காதது அம்மாவின் உரிமை. அப்பா இருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார். நீ என்ன வைக்க வேண்டாம் என்று கூறுவது  என்று நான் கூற மீண்டும் அவன் எனக்கு எதிராகக் கூற, இரண்டுபேரும் பேசாமல் இருங்கோ என்றுவிட்டு அம்மா குங்குமத்தைக் கழுவிவிட்டு திருநீறு சந்தனத்துடன் வந்தார்.

எனக்கு அம்மாவைப் பார்க்க முடியாமல் இருந்தது. பின்னர் யாரும் இல்லாத நேரம் "அம்மா மற்றவர்களுக்காகப் பார்க்கவேண்டாம். உங்களுக்குப் பொட்டு வைக்கவேண்டும் போல் இருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்" என்றேன். நான் அவனுடன் தானே இங்கு இருக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு அம்மா இருக்க என்னால் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது.

அதனால்த்தான் யாழ் இணையத்தில் உள்ளவர்கள் எப்படி இந்த விடயத்தில் இருக்கின்றனர் என்று அறியவே முதலில் இதை எழுதவில்லை.

பெண்கள் கணவன் இழந்தபின் பொட்டு வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே உரியது என்றாலும் நான் பொட்டு வைப்பதை கணவனுடன் என்றுமே தொடர்பு படுத்த மாட்டேன். சிலருக்குப் பொட்டு வைக்காவிட்டால் என்ன பொட்டு வைத்தால் என்ன முகம் அழகாக இருக்கும். எனக்குப் பொட்டு வைத்தால்த்தான் எதோ நிறைவானதுபோல் இருக்கும். பொட்டு வைக்காத சிலரைப் பார்த்தால் நித்திரையால் எழுந்து முகம் கழுவாமல் வருவதுபோல் இருக்கும். எப்படி இருந்தாலும் எமக்குப் பழகியதோ அல்லது கலாச்சாரம் என்று எம் மனதில் பதியப்பட்டதோ எதுவாயினும் பொட்டு வைப்பது முகத்துக்குத் தனி அழகைக் கொடுக்கும்.

பிறந்தது தொடக்கம் இறப்புவரை பொட்டு பெண்களுக்குச் சொந்தமானது தானே அன்றி கணவன் போனவுடன் கரைந்து காணாமற் போவதல்ல.

சுமே

உங்களது அம்மாவை நினைக்க கவலையாக உள்ளது...

பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களுக்குள் தாய் சிக்கவே கூடாது

அதுவும் துணையை இழந்து தவிக்கும் போது.... :(  :(  :(

இனிமேல் அம்மாவுக்கு முன் என்றாலும் இவற்றைத்தவிருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சுமே இன்றைய நாட்களில் பலருடைய மனங்களில் தேங்கிக்கிடக்கும் விடயத்தை அளவளாவ அல்லது தெளிவான முடிவுகாண எடுத்துள்ளீர்கள் நல்ல விடயம்.

குங்குமமும் சந்தணமும்  ஆரோக்கியத்தோடு ஒட்டிய காரணங்களோடே அணியப்படுகின்ற ஒன்று நாம்தான் அதனை திருமண சம்பிரதாயமாக மாற்றியுள்ளோம். சித்தர்களும் ஞானிகளும் அணிந்த ஆரோக்கிய அணிகலன் என்றால் மிகையாகாது. உடல் முழுவதும் வெளிப்படும் மின்காந்த அலைநெற்றியில் உள்ள புருவங்களுக்கு மத்தியில் உள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக மனம் அலைக்கழியும்போது....கவலைகள் அதிகரிக்கும்போது அந்த புருவங்களுக்கிடையிலான நுண்ணியபகுதி சடுதியாக சூடேறுவதும் அதனால் தலைவலிபோன்ற தலையோடு பிணைப்புள்ள வருத்தங்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். குங்குமத்திற்கு சூட்டைத்தணிக்கும் சக்தி உண்டு. நெற்றியில் புருவங்களுக்கு நடுவில் வைக்கும் குங்குமமும் சந்தணமும் உடலை குளிர்ச்சியடையச்செய்து ஆரோக்கியம் பேணும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதை அனைவரும் அறிவோம். மஞ்சள் தேய்த்து நீராடுவது அழகுக்காக மாத்திரமன்றி தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. குங்குமம் என்பது திருமணமான பெண்தான் அணியவேண்டும் என்பதும் கணவனை இழந்தவர் அணியலாகாது என்பதும் சரியானதாக தோன்றவில்லை. இது நமக்குள் நாமே வகுத்துக் கொண்ட வழக்கு அவ்வளவே. கணவனை இழந்தபெண்ணை சம்பிரதாயங்களால் முடக்கும் திட்டத்தில் இதுவும் ஒன்று மனைவியை இழந்த ஆணுக்கு எந்தச் சம்பிரதாயமும் அடையாளங்களை கொடுக்காதபோது கணவனை இழந்தவளுக்கு மட்டும் விலங்கிடுவது முறையன்று. முற்று முழுதாக ஆண்களின் ஆளுமைக்குள்ளேயே சம்பிரதாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்ற அப்பட்டமான கசப்பான உண்மையை பெண்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டியவர்களாக பழக்கப்பட்டுள்ளார்கள். எது எப்படியாகிலும் பெண்கள் தாங்களாகவே மனம் விரும்பி தங்களைக் கட்டிப்போடக்கூடிய சம்பிரதாயம் என்ற ஒப்பனைக்குப்பின்னாலிருந்து தெளிவாக வெளிவரவேண்டும் இல்லையென்றால் அவர்களால் திடமாக நிற்கமுடியாது. என் கவனத்தில் இருந்து பெண்களைப் பெண்கள்தான் மீளமுடியாத சமூகக்கட்டுகளுக்குள் திணிக்கிறார்கள் ஆண்கள் அல்ல. ஒவ்வொரு மனைவியும் தன் கணவனின் இழப்பிற்குப்பின்னால் தன் கணவனுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று அங்கலாய்ப்பதும் அவர்களுக்கான நாட்களில் அவர்களுக்குப்பிடித்தமான உணவுகளைச் செய்து படைப்பதையும் மட்டுமே செய்கிறார்கள் எந்தக்கணவனுக்கும் தன் மனைவி மூழியாக இருப்பதைப்பார்ப்பது பிடிக்காது என்பதை அறவே மறந்து விடுகிறார்கள். காரணம் சமுதாயம் மீதான பயம் எங்கே தன் கணவனுக்குப் பிடித்தமான மங்கலமாக தாமிருந்தால் தம்மீது மாசு கற்பித்துவிடுமோ என்பதே அது. சமுதாயம் என்பது  நாம்தான் எங்களிலிருந்தே எண்ணங்கள் உருப்பெறுகின்றன. எண்ணங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் எங்கள் திடத்திலிருந்தே.... மற்றவர் அபிப்பிராயம் நம்மைக் கூறுபோடும் என்று பயந்தால் வழிஅறிவது கடினம். தன் வழியைத் தானே தீர்மானிக்கவேண்டும்.

உண்மையைச் சொன்னால் கணவனுடைய இழப்புக்குப் பின்னால் பெண்ணை அமங்கலியாக்குவது மிகவும் கொடியது. துணையின் இழப்பு என்பது எந்த உயிருக்கும் வலி ஒன்றுதான் ஆனால் பெண்களுக்கு மட்டும் அது அதிகம். பூவும் இல்லை பொட்டும் இல்லை புன்னகை இல்லை நீ இல்லாத உலகத்திலே சந்தோசம் இல்லை என்பதே ஒவ்வொரு பெண்ணுக்கும்  விதியாகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப்பார்க்கும்போது இழப்பின் வலி அதிகப்படும். துணையை இழப்பது என்பது பெண்ணுக்கு விதிக்கப்படும் இரகசிய தண்டனை எத்தனைபேர் இதனை உணர்வார்கள்?

சுமே ஒன்று சொல்லட்டுமா......

உங்கள் தாயை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது கேள்வியாக இருந்தாலும் பிள்ளைகள் தாயின் மீது அழுத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குங்குமம் அணிவதும் விடுவதும் அவருடைய தனிமனித விருப்பு சார்ந்தது. அவர் வளர்ந்த சூழலுக்கு சார்ந்தது அல்லது தியாகம் சார்ந்தது. அதற்கு மேல் கருத்தொருமித்து வாழ்ந்து முடித்த காதலின் பால் அவர் கொண்ட ஈர்ப்பு சார்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா மேலே எழுதிய எனது கருத்துக்களை சரியாக வாசிக்கேல்லை :rolleyes:

வாசித்தேனே...

இங்கு 

கணவனை இழந்த பெண்கள் என்று வரும் போது

நன்றாக வாழ்ந்து முடித்தோரைப்பற்றி பேசுகின்றோமா?

அல்லது இளமையில் வாழ்விழந்தோர் சார்ந்து பேசுகின்றோமா என்பேதைப்பொறுத்தே கருத்து வைக்கமுடியும்.

ஆனால் திரியின்படி உங்கள் அம்மா என்றே வருகிறது...

அப்படியாயின் உங்களது கடைசி வரிகளே சரியானவை

இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்து முடித்தவர் என்றாலும் இளமையானவர் என்றாலும் பிம்பம் ஒன்றுதானே....

வாழ்ந்து முடித்தவர்களிடம் நாம் வற்புறுத்த

அவர்களது வாழ்வின் காலம் ஒற்றுமை தார்ப்பரியம் விடாது என்பதே சரி

அதுவே உங்களது கடைசிவரிகள் சொல்வது

அதற்கே எனது வாக்கு..

எனது தாயார்

மூன்று நேரமும் முகம் கழுவி

நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொள்வார்

தெய்வம் மாதிரி இருப்பார்..

இதற்குள் சிறியவர்கள் நாம் தான்  குழம்புகின்றோம்

அவர்கள் தெளிவாகவே உள்ளனர்

அந்த முடிவை அவர்கள் எடுக்க அனுமதிப்பது

அவர்களது கடைசி கால நிம்மதியான வாழ்க்கைக்கு நல்லது

ஒவ்வொரு பிள்ளையும தத்தமது கொள்கைகளை புகுத்தினால்

அவர்களது  நிம்மதி என்னாவது...?? :(

Edited by விசுகு

தார்ப்பரியம் என்று எதனைக்கூறுகிறீர்கள்? கணவனின் இழப்பை மனைவி என்பவள் பிரதிபலித்துக்கொண்டே நடாமாடவேண்டும் என்பதையா? அப்படியானால் மனைவியின் இழப்பை கணவனாகப்பட்டவன் எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும் என்ற கோட்பாட்டையும் வரைவிலிடுங்கள் :unsure:

Edited by வல்வை சகாறா

அம்மா தாயே

தமிழேடு தங்களோடு விளையாட முடியுமா? :o

தார்ப்பரியம் என்ற நான் எழுதியது

அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கிடையிலான  பிணைப்பை.....

நன்றி  வணக்கம் சொல்வோமா...? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு பெண்களுக்கு உரியதுதான். ஆனால் கணவர் இறந்தபின் குங்குமப்பொட்டு வைப்பதில்லை.

வைக்க விட்டால்த்தானே ??? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்க்கின்றீர்கள். :D
இசைக்கலைஞன் எதை தமிழகத்து வழக்கம் என சொல்கிறார்? :rolleyes:

இசை எழுதியதை மீண்டும் ஒருதடவை வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் :lol:

இந்த வரிகள்தான் தீர்க்கமான உண்மை. இதுவே தொடரவேண்டும்.

நன்றி அண்ணா. உங்கள் குடும்பத்துப் பெண்கள் கொடுத்துவைத்தவர்கள்.

சுமோ உங்கட அம்மாவிற்கு கலியாணம் கட்டமுதல் குங்கும பொட்டு வைக்கும் பழக்கம் இருந்ததா?

உங்கட கேள்வி இதுதான்

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

குங்கும பொட்டிற்கும் சாதாரண பொட்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

எல்லாப் பொட்டுகளின் மேலும் குங்குமம் என்றுதான் போட்டிருக்குமே தவிர திருமணமானவர்கள் மட்டும் வைக்கலாம் என்று எதிலாவது போட்டுள்ளனரா மீரா ???

இன்றுதான் சுமேயின் இந்த திரியைப் பார்த்தேன். எனது கணவர் இறந்து பத்து வருடங்களை எட்டிக்கொணடிருக்கிறது. இதுவரையில் நான் தாலி அணிந்துகொண்டுதான் இருக்கிறேன். பொட்டு வைக்கமட்டும் இன்னும் என் மனம் இடங்கொடுக்கவில்லை. காரணம் என் கணவனுக்கு நான் கொடுக்கும் மரியாதையாக இருக்கலாம். எனது மகனின் திருமணத்தின்போது எனது கணவனின் சகோதரியின் விருப்பத்தின் பேரிலும் என் சகோதரிகளின்விருப்பத்தை நிறைவேற்றவும் ; சாறியின் நிறத்தில் ஒட்டுப் பொட்டு வைத்தேன். என் பிள்ளைகள் அம்மா அழகாக உடுத்துவதையும் நாகரிகமாக உடை அணிவதையுமே விரும்புகிறார்கள். எதுவும் யாரையும் கடடுப்படுத்தாது அவரவர் மன உணர்வுகளைப் பொறுத்தே பொட்டு வைப்பதோ உடை அணிவதோ. இப்பொழுது கணவன் இருக்கும் பொழுதே தாலி லொக்கரில் ஒட்டுப் பொட்டு கைப் பையில் இதற்குள் ஏன் விவாதம். அம்மாவின் சுதந்திரத்தில் நாம் தலையிடாமல் இருப்போம். அப்பா அவரது நினைவுகளில் நிரந்தரமானவர். அவருக்கு எது விருப்பமோ அதை செய்ய அனுமதிப்போம்.

அம்மாவின் சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாதுதான் ஆனால் பிள்ளைகளில் ஒருவரின் விருப்புக்காக அம்மா தன்னை மாற்றிக் கொள்ள நாம் உடன்படக் கூடாதில்லையா அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஒன்று சொல்லட்டுமா......

உங்கள் தாயை நீங்கள் அனுமதிப்பீர்களா என்பது கேள்வியாக இருந்தாலும் பிள்ளைகள் தாயின் மீது அழுத்தம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குங்குமம் அணிவதும் விடுவதும் அவருடைய தனிமனித விருப்பு சார்ந்தது. அவர் வளர்ந்த சூழலுக்கு சார்ந்தது அல்லது தியாகம் சார்ந்தது. அதற்கு மேல் கருத்தொருமித்து வாழ்ந்து முடித்த காதலின் பால் அவர் கொண்ட ஈர்ப்பு சார்ந்தது.

ஆண்களின் பக்கசார்பான திணிப்புக்கு பெண்கள் மீள முடியாது அடங்கிப் போவது கூட கணவன் இருக்கும் போது இருந்த பாதுகாப்பு எண்ணம் இல்லாமற் போவதும் இனிப் பிள்ளைகளுடன் இருக்கும் போது எதற்காக அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்வான் என்ற ஒரு இயலாமையின் வெளிப்பாடுதான் இவை. எப்போதும் பெண்கள் தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு , தம் விருப்பு வெறுப்புகள் அத்தனையையும் முதலில் கணவனுக்காக பின் பிள்ளைக்காக அதன்பின் பேரப்பிள்ளைகளுக்காக என்று விட்டுக்கொடுத்தே ஒன்றுமற்றுப் போகின்றனர். ஒன்று இரண்டுபேர் துணிவாக மற்றவருக்காக வாழாது தமக்காகவும் வாழ்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேனே...

இங்கு 

கணவனை இழந்த பெண்கள் என்று வரும் போது

நன்றாக வாழ்ந்து முடித்தோரைப்பற்றி பேசுகின்றோமா?

அல்லது இளமையில் வாழ்விழந்தோர் சார்ந்து பேசுகின்றோமா என்பேதைப்பொறுத்தே கருத்து வைக்கமுடியும்.

ஆனால் திரியின்படி உங்கள் அம்மா என்றே வருகிறது...

அப்படியாயின் உங்களது கடைசி வரிகளே சரியானவை

இல்லையா??

ஆண்களின் தந்திரம் என்பது இதுதான். நன்றாக வாழ்ந்து முடித்தவர் என்றால் எதுவும் அவருக்குத் தேவை இல்லை என்று கூற வருகிறீர்களா அண்ணா ???

நான் அம்மாவின் கதையை சொன்னது ஒரு உதாரணத்துக்கு. அம்மாவைப்போல் வாழ்ந்து முடித்ததென்று நீங்கள் கூறும் பெண்கள் பலர் மற்றவர்களுக்காக அல்லது பிள்ளைகளுக்காக எப்படித் தம் விருப்புகளை அடக்குகிறார்கள் என்பது தான் கரு.

வாழ்ந்து முடித்தவர் என்று நீங்கள் கூறுவது என்ன ??? அதன்பின் அவருக்கு வாழ்க்கை இல்லையா. ????

நான் நினைக்கிறேன் கணவன் இறந்தபின் அந்தத் துன்பம் இருந்தாலும் பல பெண்களுக்கு ஒரு சுதந்திர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு ஈழத்துப் பெண்மணியை இந்தியாவில் சந்தித்தபோது தன கணவர் இறந்துவிட்டார். தான்  இப்பொழுது சுதந்திரம்மாக இருக்கிறேன் என்றார். இதுபற்றி இன்னொரு திரியில் பார்ப்போம்.

வாழ்ந்து முடித்தவர்களிடம் நாம் வற்புறுத்த

அவர்களது வாழ்வின் காலம் ஒற்றுமை தார்ப்பரியம் விடாது என்பதே சரி

அதுவே உங்களது கடைசிவரிகள் சொல்வது

அதற்கே எனது வாக்கு..

எனது தாயார்

மூன்று நேரமும் முகம் கழுவி

நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொள்வார்

தெய்வம் மாதிரி இருப்பார்..

இதற்குள் சிறியவர்கள் நாம் தான்  குழம்புகின்றோம்

அவர்கள் தெளிவாகவே உள்ளனர்

அந்த முடிவை அவர்கள் எடுக்க அனுமதிப்பது

அவர்களது கடைசி கால நிம்மதியான வாழ்க்கைக்கு நல்லது

ஒவ்வொரு பிள்ளையும தத்தமது கொள்கைகளை புகுத்தினால்

அவர்களது  நிம்மதி என்னாவது...?? :(

உங்கள் எழுத்தைப் பார்த்தால் திருநீறு பூசினால் தெய்வம் மாதிரியும் போட்டு வைத்தால் வேறு மாதிரியும் தெரிவார்களா அண்ணா??? இதுவும் ஒருவித பெண்கள் மீதான திணிப்புத்தானே அன்றி அக்கறையோ அல்லது அவர்கள் நின்மதிக்கானதோ அல்ல.

தார்ப்பரியம் என்று எதனைக்கூறுகிறீர்கள்? கணவனின் இழப்பை மனைவி என்பவள் பிரதிபலித்துக்கொண்டே நடாமாடவேண்டும் என்பதையா? அப்படியானால் மனைவியின் இழப்பை கணவனாகப்பட்டவன் எவ்வாறு பிரதிபலிக்கவேண்டும் என்ற கோட்பாட்டையும் வரைவிலிடுங்கள் :unsure:

கணவர்களுக்கு எதுவுமே தேவை இல்லை சகாரா. கட்டையில் போகும் வயதிலும் அவர்கள் கலியாணம் கட்டி பெண்டாட்டி என்னும் பெயரில் தனக்குச் சாகுமட்டும் சேவகம் செய்ய ஒருத்தியை தயாராக்கி வைப்பதே. :)

  • கருத்துக்கள உறவுகள்

தாலியிலும் எழுதியா இருக்கு பேசாம எடுத்து பிள்ளையின்ர கழுத்தில போடவேண்டியதுதான்.

:lol:  :lol: சரியாய் சொன்னீர்கள் சகோ. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமே இன்றைய நாட்களில் பலருடைய மனங்களில் தேங்கிக்கிடக்கும் விடயத்தை அளவளாவ அல்லது தெளிவான முடிவுகாண எடுத்துள்ளீர்கள் நல்ல விடயம்.

குங்குமமும் சந்தணமும்  ஆரோக்கியத்தோடு ஒட்டிய காரணங்களோடே அணியப்படுகின்ற ஒன்று நாம்தான் அதனை திருமண சம்பிரதாயமாக மாற்றியுள்ளோம். சித்தர்களும் ஞானிகளும் அணிந்த ஆரோக்கிய அணிகலன் என்றால் மிகையாகாது. உடல் முழுவதும் வெளிப்படும் மின்காந்த அலைநெற்றியில் உள்ள புருவங்களுக்கு மத்தியில் உள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக மனம் அலைக்கழியும்போது....கவலைகள் அதிகரிக்கும்போது அந்த புருவங்களுக்கிடையிலான நுண்ணியபகுதி சடுதியாக சூடேறுவதும் அதனால் தலைவலிபோன்ற தலையோடு பிணைப்புள்ள வருத்தங்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். குங்குமத்திற்கு சூட்டைத்தணிக்கும் சக்தி உண்டு. நெற்றியில் புருவங்களுக்கு நடுவில் வைக்கும் குங்குமமும் சந்தணமும் உடலை குளிர்ச்சியடையச்செய்து ஆரோக்கியம் பேணும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதை அனைவரும் அறிவோம். மஞ்சள் தேய்த்து நீராடுவது அழகுக்காக மாத்திரமன்றி தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. குங்குமம் என்பது திருமணமான பெண்தான் அணியவேண்டும் என்பதும் கணவனை இழந்தவர் அணியலாகாது என்பதும் சரியானதாக தோன்றவில்லை. இது நமக்குள் நாமே வகுத்துக் கொண்ட வழக்கு அவ்வளவே. கணவனை இழந்தபெண்ணை சம்பிரதாயங்களால் முடக்கும் திட்டத்தில் இதுவும் ஒன்று மனைவியை இழந்த ஆணுக்கு எந்தச் சம்பிரதாயமும் அடையாளங்களை கொடுக்காதபோது கணவனை இழந்தவளுக்கு மட்டும் விலங்கிடுவது முறையன்று. முற்று முழுதாக ஆண்களின் ஆளுமைக்குள்ளேயே சம்பிரதாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்ற அப்பட்டமான கசப்பான உண்மையை பெண்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டியவர்களாக பழக்கப்பட்டுள்ளார்கள். எது எப்படியாகிலும் பெண்கள் தாங்களாகவே மனம் விரும்பி தங்களைக் கட்டிப்போடக்கூடிய சம்பிரதாயம் என்ற ஒப்பனைக்குப்பின்னாலிருந்து தெளிவாக வெளிவரவேண்டும் இல்லையென்றால் அவர்களால் திடமாக நிற்கமுடியாது. என் கவனத்தில் இருந்து பெண்களைப் பெண்கள்தான் மீளமுடியாத சமூகக்கட்டுகளுக்குள் திணிக்கிறார்கள் ஆண்கள் அல்ல. ஒவ்வொரு மனைவியும் தன் கணவனின் இழப்பிற்குப்பின்னால் தன் கணவனுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று அங்கலாய்ப்பதும் அவர்களுக்கான நாட்களில் அவர்களுக்குப்பிடித்தமான உணவுகளைச் செய்து படைப்பதையும் மட்டுமே செய்கிறார்கள் எந்தக்கணவனுக்கும் தன் மனைவி மூழியாக இருப்பதைப்பார்ப்பது பிடிக்காது என்பதை அறவே மறந்து விடுகிறார்கள். காரணம் சமுதாயம் மீதான பயம் எங்கே தன் கணவனுக்குப் பிடித்தமான மங்கலமாக தாமிருந்தால் தம்மீது மாசு கற்பித்துவிடுமோ என்பதே அது. சமுதாயம் என்பது  நாம்தான் எங்களிலிருந்தே எண்ணங்கள் உருப்பெறுகின்றன. எண்ணங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் எங்கள் திடத்திலிருந்தே.... மற்றவர் அபிப்பிராயம் நம்மைக் கூறுபோடும் என்று பயந்தால் வழிஅறிவது கடினம். தன் வழியைத் தானே தீர்மானிக்கவேண்டும்.

பிரச்சனை வரும்போது மட்டும் குங்குமத்தின் சிறப்புகள் / விஞ்ஞான விளக்கங்களுடன் விவாதிக்க வருவீர்கள். மற்றும்படி இயற்கைக்கு ஒவ்வாத பிளாஸ்ரிக் பொட்டுத்தான் தஞ்சம். ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே.  :D

கு.சா அண்ணை சுமேயின் கேள்விக்கான பதிலாகத்தான் அதனைப்பதிவிட்டேன். பிளாஸ்டிக் பொட்டு பல சமயங்களில் அதனையும் அணியாமல் வேலைக்குச் செல்கிறேன். வேலைத்தளத்தில் எவரும் இன அடையாளங்களை வரவேற்பதில்லை. அத்தோடு பாண்ட் சேர்ட் அணிந்து கொண்டு பொட்டு வைப்பது என்பதே அருகி வந்துவிட்டது.... :icon_mrgreen:  கணவன் இருந்தாலும் திருமணச்சான்றாக இங்கு நம்மினப்பெண்களின் அணியாக விரல்களில் அணிந்திருக்கும் மோதிரத்தைத்தவிர வேறெந்த அடையாளமும் இல்லை என்பதே இன்றைய நிலவரம். தாலிக்கொடி பாங் லொக்கரில்...நிலமை இப்படி கனடாவில் :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.