Jump to content

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. அதற்கு முதலாவது காரணம், நான் கிறீஸ்த்தவ மதத்தைத் தழுவியன் என்பது. 

கணவன் இழந்தவர் தாலி கட்டக் கூடாதென்றோ, வண்ணச் சேலையணியக் கூடாதென்றோ, பொட்டுவைக்கக் கூடாது என்றோ எம்மில் (கிறீஸ்த்தவத் தமிழர்களில்) எவரும் சொல்வதில்லை.

அதேபோல, திருமணம் முடித்த பெண்கள் கூட பொட்டோ அல்லது தாலியோ எப்போதும் அணிவதில்லை. என் மனைவி பொட்டுவைத்ததை இதுவரை நான் கண்டதில்லை. அதேபோல தாலி அணிந்ததை நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க, நான் இறந்தபிறகு அவள் எதை அணிவாள் என்கிற பிரச்சினை எனக்கோ (அது எப்படியும் இருக்கப்போவதில்லை), மற்றையவர்களுக்கோ ஒரு பிரச்சினையாக இருக்காது.

கணவனை இழந்தால் பூவும், பொட்டும், தாலியுடன் சேலையும் மறைய வேண்டுமென்பது அவளை உடன்கட்டை ஏற்றுவதற்குச் சமம். அதாவது, பெண்ணே, உனது கணவன் இறந்துவிட்டான், ஆகவே உனது வாழ்க்கையும் அதனுடன் அஸ்த்தமிக்க வேண்டும், உனது உணர்வுகளுக்குப் பூட்டுப் போடவேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பானது.

ஆனால், மறுபுறத்தில், மனைவி இறந்துவிட்டால், தடால் புடாலென்று கணவனுக்கு இன்னொரு பெண்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். 

இந்தக் கேள்வியெல்லாம் நாம் இன்னும் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாலியிலும் எழுதியா இருக்கு பேசாம எடுத்து பிள்ளையின்ர கழுத்தில போடவேண்டியதுதான்.

எந்தத் தாலி பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் தங்கத்தையா???

தமிழரின் பண்பாட்டில் ஆரம்பத்தில் இல்லை என்று நீங்கள் இதுவரை அறியவே இல்லையா?? தங்கத்தைப் பதுக்கி வைப்பதற்காக தமிழன் கண்டுபிடித்த ஒரு செயல் தான் அது.

பிரச்சனை வரும்போது மட்டும் குங்குமத்தின் சிறப்புகள் / விஞ்ஞான விளக்கங்களுடன் விவாதிக்க வருவீர்கள். மற்றும்படி இயற்கைக்கு ஒவ்வாத பிளாஸ்ரிக் பொட்டுத்தான் தஞ்சம். ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே.  :D

நான் ஒட்டுப்போட்டோ குங்குமப் போட்டோ என்று சர்ச்சை கிளப்பவில்லையே :D பெண்ணின் உரிமையான போட்டி கணவர் இறந்தபின் ஏன் துறக்க வேண்டும் என்பதுதான் ??? அவர்களுக்கு விருப்பமான பொட்டை அவர்கள் எதில் அணிந்தால் என்ன ???குமாரசாமி :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் பண்பாட்டில் ஆரம்பத்தில் இல்லாத ஒன்றையும் நீங்கள் உங்கள் குடும்பம் பாவிப்பதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணவனை இழந்தால் பூவும், பொட்டும், தாலியுடன் சேலையும் மறைய வேண்டுமென்பது அவளை உடன்கட்டை ஏற்றுவதற்குச் சமம். அதாவது, பெண்ணே, உனது கணவன் இறந்துவிட்டான், ஆகவே உனது வாழ்க்கையும் அதனுடன் அஸ்த்தமிக்க வேண்டும், உனது உணர்வுகளுக்குப் பூட்டுப் போடவேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பானது.

ஆனால், மறுபுறத்தில், மனைவி இறந்துவிட்டால், தடால் புடாலென்று கணவனுக்கு இன்னொரு பெண்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். 

இந்தக் கேள்வியெல்லாம் நாம் இன்னும் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

உண்மைதான் ரகுநாதன். பல ஆண்கள் மனைவிக்கோ தாய்க்கோ அன்றி உடன் பிறந்தவருக்கோ தனிமனித சுதந்திரம் என்பதை சிறுதும் வழங்காது எதோ ஒரு அடக்குமுறைக்குள் தான் வைத்திருக்க ஆசை கொள்கின்றனர். பல்லாண்டு காலமாக இவர்கள் குருதியில் ஊறியிருப்பது மாறிவிடுமா என்ன ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் பண்பாட்டில் ஆரம்பத்தில் இல்லாத ஒன்றையும் நீங்கள் உங்கள் குடும்பம் பாவிப்பதில்லையா?

பாவிக்கின்றோமே :D அதுவும் பெண்ணின் தனிமனித சுதந்திரத்துக்கு அதாவது எமக்கு தீங்கு இல்லாத எதையும் பாவிப்போம் :lol:

:lol:  :lol: சரியாய் சொன்னீர்கள் சகோ. 

200khuti_taal.jpgஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரான கருத்துக்கு .........நன்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்னை திருத்திக் கொள் சமூகம் தானகவே திருத்தும்.

இந்தப் பதிவை நீங்கள் சரியாக வாசித்துப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது மீரா :lol:

Posted

பாவிக்கின்றோமே :D அதுவும் பெண்ணின் தனிமனித சுதந்திரத்துக்கு அதாவது எமக்கு தீங்கு இல்லாத எதையும் பாவிப்போம் :lol:

200khuti_taal.jpgஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரான கருத்துக்கு .........நன்று

சுமே, மீனா பெண்ணோ, ஆணோ என்று பார்ப்பதில்லை, எதுவும் நீதியா, நியாயமா, சரியா, பிழையா என்று தான் பார்ப்பது. பெண் என்பதற்காக உங்கள் விதண்டாவாததுக்கு (சொல் சரி என நம்புறன் :rolleyes:  :D )ஆதரவது கொடுக்கலாமா???? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஒட்டுப்போட்டோ குங்குமப் போட்டோ என்று சர்ச்சை கிளப்பவில்லையே :D பெண்ணின் உரிமையான போட்டி கணவர் இறந்தபின் ஏன் துறக்க வேண்டும் என்பதுதான் ??? அவர்களுக்கு விருப்பமான பொட்டை அவர்கள் எதில் அணிந்தால் என்ன ???குமாரசாமி :lol:

உங்கள் அம்மா சிறுவயதிலிருந்தே குங்குமபொட்டு வைத்தாரா? அல்லது திருமணம் ஆகியபின் குங்குமபொட்டு வைக்கத்தொடங்கினாரா? கோவில்களில் குங்குமம் வைப்பது வேறு அர்த்தம்.  :icon_idea:
 
இப்போது யாழ்களத்தில் பின்வரும் வாக்கியங்கள் அதிகம் பாவிக்கப்படுகின்றன.
 
1) நீங்கள் நல்லவடிவாக வாசிக்கவில்லை.
2) மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்.
3) பள்ளிக்கூடம் போகவில்லை.
4) நுனிப்புல் மேய்பவர்கள்.
5) நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லை.
6) ஆரம்பத்திலேயே சொல்லி விட்டோம்.
7) விளங்கிக்கொள்ள மறுக்கின்றீர்கள்.
8) :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::  :D

9) - முதலில் இருந்து வாசியுங்கள்...

10) - இதற்காகத்தான் எனது கருத்தை முதலிலேயே சொல்லவில்லை..

11 -..... :o

Posted
நான் இந்த திரியை  வாசிதான். இதில் சுமோவின் விதண்டாவாதம் தான் தெரியுது.
 
எனது கருத்துப்படி போட்டு அணிவது அணியாமல் விடுவது அவரவர் விருப்பம். இதில் யாரும் தலையிட கூடாது. அது அம்மாவாக இருந்தாலும் தலையிட கூடாது. இதற்க்கு மேல் இந்த திரியில் கருத்து எழுத விரும்பவில்லை.
 
நன்றி வணக்கம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
சுமோ அக்கா..கேக்கிறன் என்று தப்பாக விளங்கிக் கொள்ளக் கூடாது..உங்களின் அம்மாவை நீங்கள் வைத்துப் பார்த்தால் என்ன...தனக்கு இருக்கும் விருப்பு,வெறுப்புக்களைக் கூட ஒரு பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அந்த தாய் மறுக்கின்றா என்னும் போது,அதனைப் புரிந்து கொண்ட நீங்கள் வைச்சுப் பார்ப்பதில் தப்பில்லைத் தானே...
அடிக்கடி தம்பி வீட்டுக்கும் அனுப்பி வைக்கலாம் நீங்களும் வைச்சுப் பார்க்கலாம்...மிகுதியாக இருக்கும் காலத்திற்குள் அவர்கள் விருப்பபட்ட என்னத்தையாவது செய்து சந்தோசமாக வாழட்டுமே..
Posted

பாலியல் வேறுபாடற்ற சமத்துவம்.. அதுதான் பெரியாரின் பெண்ணிய உரிமை..!

https://www.youtube.com/watch?v=6woApkPJ2tw#t=29m30s

அம்மாவை நாங்கள் யாரும் வைத்துப் பார்க்கத் தேவை இல்லை. அப்படி பார்க்கும் நிலை வரும்போது நானே வைத்துப் பார்ப்பேன். அதைவிட்டு இரண்டுமாதம் அங்கு போங்கள் இரண்டுமாதம் இங்குபோங்கள். இன்னும் இரு மாதங்கள் மற்றப் பிள்ளையுடன் போய்விட்டு மிகுதி இருமாதங்கள் என்னுடன் வந்து இருங்கள் என்று கூறும் அற்ப குணமும் எனக்கு இல்லை. அம்மா யேர்மனியில் முப்பது ஆண்டுகள் இருக்கிறார். சிறுவயதில் இருந்தே கடைசிப் பிள்ளையான தம்பி அம்மாவுடன் இருந்தே பழகிவிட்டான். கடைசிப் பிள்ளையில் பெற்றவருக்குப் பாசம் அதிகம் இருப்பதையும் நாம் ஒருவரும் தவறாக எண்ணவும் இல்லை.

அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீடு, வாழ்ந்த நகரம், எண்பது வயதிலும் தான் தமிழ் கற்பிக்கும் மாணவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுடன் போய் இருப்பதில் அம்மாவுக்கு உடன்பாடும் இல்லை. மற்றவர்களை நம்பி இருப்பதற்கு அவருக்குப் பொருளாதாரப் பிரச்சனையும் இல்லை. 

யாயினி இங்கு நாம் விவாதிப்பது அம்மாவின் பிரச்சனை அல்ல. அம்மாவைப் போன்ற எத்தனையோ பேர் வாயே திறக்க முடியாது தம் விருப்பு வெறுப்புக்களை அடக்கி வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களைப் போன்ற பெண்களைப் பற்றி.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதில் கூற முடியாவிட்டால் மட்டம் தட்டுவதற்கும் திசை திருப்புவதற்கும் யாழ் உறவுகளை மிஞ்சவே முடியாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் அம்மா சிறுவயதிலிருந்தே குங்குமபொட்டு வைத்தாரா? அல்லது திருமணம் ஆகியபின் குங்குமபொட்டு வைக்கத்தொடங்கினாரா? கோவில்களில் குங்குமம் வைப்பது வேறு அர்த்தம்.  :icon_idea:

முயலுக்கு மூன்றே கால்தான்

பாலியல் வேறுபாடற்ற சமத்துவம்.. அதுதான் பெரியாரின் பெண்ணிய உரிமை..!

https://www.youtube.com/watch?v=6woApkPJ2tw#t=29m30s

சீமான் சொல்வது நூறுக்கு நூறு உண்மை ஆயினும் அதைக் கேட்டுக் கைதட்டும் ஆண்களே தம் வீட்டுப் பெண்களை எந்த நிலையில் வைத்துள்ளனரோ யாரறிவார் :lol:

நான் இந்த திரியை  வாசிதான். இதில் சுமோவின் விதண்டாவாதம் தான் தெரியுது.
 
எனது கருத்துப்படி போட்டு அணிவது அணியாமல் விடுவது அவரவர் விருப்பம். இதில் யாரும் தலையிட கூடாது. அது அம்மாவாக இருந்தாலும் தலையிட கூடாது. இதற்க்கு மேல் இந்த திரியில் கருத்து எழுத விரும்பவில்லை.
 
நன்றி வணக்கம்.

உங்கள் அம்மாவை நீங்கள் அனுமதிப்பீர்களா இல்லையா என்ற கேள்விக்கு விடையே எழுதாமல் போகிறீர்களே சேவையர்.

Posted

அம்மா தாயே

தமிழேடு தங்களோடு விளையாட முடியுமா? :o

தார்ப்பரியம் என்ற நான் எழுதியது

அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கிடையிலான பிணைப்பை.....

நன்றி வணக்கம் சொல்வோமா...? :icon_idea:

9) - முதலில் இருந்து வாசியுங்கள்...

10) - இதற்காகத்தான் எனது கருத்தை முதலிலேயே சொல்லவில்லை..

11 -..... :o

சகாரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நன்றி வணக்கம் சொன்னவர் இன்னும் ஏன் இந்த திரியுக்கள் நின்று குத்தி முறிகிறார்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவை நாங்கள் யாரும் வைத்துப் பார்க்கத் தேவை இல்லை. அப்படி பார்க்கும் நிலை வரும்போது நானே வைத்துப் பார்ப்பேன். அதைவிட்டு இரண்டுமாதம் அங்கு போங்கள் இரண்டுமாதம் இங்குபோங்கள். இன்னும் இரு மாதங்கள் மற்றப் பிள்ளையுடன் போய்விட்டு மிகுதி இருமாதங்கள் என்னுடன் வந்து இருங்கள் என்று கூறும் அற்ப குணமும் எனக்கு இல்லை. அம்மா யேர்மனியில் முப்பது ஆண்டுகள் இருக்கிறார். சிறுவயதில் இருந்தே கடைசிப் பிள்ளையான தம்பி அம்மாவுடன் இருந்தே பழகிவிட்டான். கடைசிப் பிள்ளையில் பெற்றவருக்குப் பாசம் அதிகம் இருப்பதையும் நாம் ஒருவரும் தவறாக எண்ணவும் இல்லை.

அம்மாவும் அப்பாவும் வாழ்ந்த வீடு, வாழ்ந்த நகரம், எண்பது வயதிலும் தான் தமிழ் கற்பிக்கும் மாணவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுடன் போய் இருப்பதில் அம்மாவுக்கு உடன்பாடும் இல்லை. மற்றவர்களை நம்பி இருப்பதற்கு அவருக்குப் பொருளாதாரப் பிரச்சனையும் இல்லை. 

யாயினி இங்கு நாம் விவாதிப்பது அம்மாவின் பிரச்சனை அல்ல. அம்மாவைப் போன்ற எத்தனையோ பேர் வாயே திறக்க முடியாது தம் விருப்பு வெறுப்புக்களை அடக்கி வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களைப் போன்ற பெண்களைப் பற்றி.  

அக்கா நான் வந்து தவறான அர்த்தம் கொண்டு ஒன்றும் கேட்டு வர இல்ல. எனக்கு இவ்வளவு விளக்கங்களும் தேவையும் இல்ல....வெளி நாடுகளில் பிள்ளைகளுக்கும்,பெற்றோருக்கும் இடையே ஏற்படும் அனேகமான பிரச்சனைகளும் எல்லோருக்கும் தெரிந்தவை தான்..இதற்கு மேல் எனக்கு இந்த திரிக்கு பதில் எழுத விருப்பம் இல்லை..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் சொல்வது நூறுக்கு நூறு உண்மை ஆயினும் அதைக் கேட்டுக் கைதட்டும் ஆண்களே தம் வீட்டுப் பெண்களை எந்த நிலையில் வைத்துள்ளனரோ யாரறிவார் :lol:

கடைசியில் இது ஆண்களின் பெண்ணடிமைப் புரட்சி என முடியும் என

இந்தத் திரி ஆரம்பிக்கும் போதெ எனக்குத் தெரியும். :o:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசியில் இது ஆண்களின் பெண்ணடிமைப் புரட்சி என முடியும் என

இந்தத் திரி ஆரம்பிக்கும் போதெ எனக்குத் தெரியும். :o:D:lol:

எனக்கும் தெரியும் வாத்தியார்! :D

இலக்கியத்திலும் சரி, வாழ்வியலிலும் சரி.. ஒரு பெண்ணுக்குக் குறிப்பாகத் தாய்க்குத் தமிழினம் கொடுக்கும், கொடுத்த மரியாதை உலகில் எந்த இனமும் கொடுத்தது இல்லை என்பது எனது கருத்து!

பல நாடுகளிலும், பல கலாச்சாரங்களிலும் வாழ்ந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது!

எனது தாய் சொன்னால், எதுவானாலும் நான் செய்வேன்! அது தான் எமது இனத்தின் வளர்ப்பு முறை!

பல ஆண்கள் சீதனம் வாங்குவதை மனதளவில் அங்கீகரிக்கா விட்டாலும் கூட, தாய், சகோதரிகள், பெண் உறவினர்களுக்குக் கொடுக்கும் மரியாதையின் நிமித்தமே .... அவர்களால் , சீதனம் வாங்குவதை 'நிராகரிக்க' முடிவதில்லை! :icon_idea:

சுமே... வெறும் 'குங்குமப் பொட்டில்' மட்டும் 'பெண்ணியத்தின் சுதந்திரம்' அடங்கி விடவில்லை!

'குங்குமம்' ஒரு அடையாளமே அன்றி.. அது எமது 'கலாச்சாரத்தில்' கூட இல்லை என்பதே எனது கருத்து!

முதன் முதலாகத் தாலியும், குங்குமமும் ..தமிழ்க்கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தப்படுவது.. சிலப்பதிகாரத்தில் மாத்திரமே!

அத்துடன் குங்குமத்தில் உள்ள சில மூலிகைகள், மூளை நரம்புகளின் சந்தியில் 'பொட்டு' இடப்படுவதால், ஒரு பெண்ணின் 'மன அங்கலாய்புக்களைக் ' கட்டுப்படுத்துவதாக ஒரு 'ஐதீகம்' உண்டு! என்னுடன் சண்டைக்கு வராதீர்கள்! ஆண்களின் மன அங்கலாய்புக்களைக் கட்டுப்படுத்தத் தான் , நாம் சந்தனப்போட்டுப் போடுகிறோம்!  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகாரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நன்றி வணக்கம் சொன்னவர் இன்னும் ஏன் இந்த திரியுக்கள் நின்று குத்தி முறிகிறார்

சகாரா அக்காவின் கேள்விக்கு நாங்க பதில் எழதுவம்

விடுவம்

நீங்க எதுக்கு இதுக்குள்ள...?

திரியின் தலைப்பு என்ன என்றாவது தெரியுமா??

அதுக்குள்ள நீங்க நிற்பது தான் நல்லது

*******

நியானி: சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குங்குமத்தின் மகிமை

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது .தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள் நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை. ஆன்மீக அடிப்படையும் இதுவாகும் .நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக  Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மை

நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை, மாவிலை, துளசி, எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.

இணையத்தில் வாசித்தது

Posted

உங்கள் அம்மாவை நீங்கள் அனுமதிப்பீர்களா இல்லையா என்ற கேள்விக்கு விடையே எழுதாமல் போகிறீர்களே சேவையர்.

சுமோ, நான் தெளிவாக சொல்லிவிட்டன் அது முற்று முழுதாக அம்மாவின் விருப்பம். நான் இதைப்பற்றி அம்மாவிடம் வாய் திறக்க மாட்டன். அம்மாவுக்கு எது விருப்போமோ அதை அவா செய்யலாம். மற்றபடி வற்புறுத்தி எதையும் திணிக்க கூடாது.
 
இதை மறுவளமா பார்க்கும்போது, உங்கள் அப்பா இருக்கும்போது, உங்கள் அம்மாவை நிதந்தரமா குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு உங்காளால் சொல்ல முடியுமா ? சொல்லுவிங்களா? நீங்கள் சொன்னாலும் இந்த விடயத்தில் உங்கள் அம்மா கேட்பாவா ? 
 
இதுவும் அதைப் போலதான். அப்பா இருக்கும் போது குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு எப்படி சொல்ல முடியதோ, அப்படியே அப்பா இல்லாத போதும் குங்குமப் பொட்டு வை, வைக்காதே என்றும் கூற முடியாது.   அப்பா இருக்கும் போது அம்மா தன் மனதுக்கு பிடித்தபடி எப்படி வாழ்ந்தாவோ, அப்படியே அப்பா இல்லாதபோதும் அவவின் மனதுக்கு பிடித்தபடி வாழ விடுவதுதான் அவர்களுக்கும் நிம்மதி பிள்ளைகளுக்கும் அழகு. அதை விட்டுட்டு சும்மா விதண்டாவாதம் கதைப்பது கூடாது. 
 
நீங்கள் இப்படி அம்மாவுக்கு பிடிக்காத விடயங்களை செய்ய சொல்லி வற்புறுத்தும்போது, கணவனை இழந்து வாடும் அந்த தாய்க்கு வேதனை தான் கூடும். ஆகவே இந்த விடயத்தில் அம்மாவின் முடிவு தான் முக்கியம். 
 
என்னைப் பொறுத்தவரை இந்த விடயம் ஒரு தேவையில்லாத விசர் வேலை.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல ஆண்கள் சீதனம் வாங்குவதை மனதளவில் அங்கீகரிக்கா விட்டாலும் கூட, தாய், சகோதரிகள், பெண் உறவினர்களுக்குக் கொடுக்கும் மரியாதையின் நிமித்தமே .... அவர்களால் , சீதனம் வாங்குவதை 'நிராகரிக்க' முடிவதில்லை! :icon_idea:

சுமே... வெறும் 'குங்குமப் பொட்டில்' மட்டும் 'பெண்ணியத்தின் சுதந்திரம்' அடங்கி விடவில்லை!

'குங்குமம்' ஒரு அடையாளமே அன்றி.. அது எமது 'கலாச்சாரத்தில்' கூட இல்லை என்பதே எனது கருத்து!

முதன் முதலாகத் தாலியும், குங்குமமும் ..தமிழ்க்கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தப்படுவது.. சிலப்பதிகாரத்தில் மாத்திரமே!

மரியாதை கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு சீதனம் வாங்குவதை பெண்கள் மேல் போடுகிறீர்களா ??? :D

சிலப்பதிகாரத்தில் தாலி அணிவது வருவதாக நினைவில்லையே புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமோ, நான் தெளிவாக சொல்லிவிட்டன் அது முற்று முழுதாக அம்மாவின் விருப்பம். நான் இதைப்பற்றி அம்மாவிடம் வாய் திறக்க மாட்டன். அம்மாவுக்கு எது விருப்போமோ அதை அவா செய்யலாம். மற்றபடி வற்புறுத்தி எதையும் திணிக்க கூடாது.
 
இதை மறுவளமா பார்க்கும்போது, உங்கள் அப்பா இருக்கும்போது, உங்கள் அம்மாவை நிதந்தரமா குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு உங்காளால் சொல்ல முடியுமா ? சொல்லுவிங்களா? நீங்கள் சொன்னாலும் இந்த விடயத்தில் உங்கள் அம்மா கேட்பாவா ? 
 
இதுவும் அதைப் போலதான். அப்பா இருக்கும் போது குங்குமப் பொட்டு வைக்க வேண்டாம் எண்டு எப்படி சொல்ல முடியதோ, அப்படியே அப்பா இல்லாத போதும் குங்குமப் பொட்டு வை, வைக்காதே என்றும் கூற முடியாது.   அப்பா இருக்கும் போது அம்மா தன் மனதுக்கு பிடித்தபடி எப்படி வாழ்ந்தாவோ, அப்படியே அப்பா இல்லாதபோதும் அவவின் மனதுக்கு பிடித்தபடி வாழ விடுவதுதான் அவர்களுக்கும் நிம்மதி பிள்ளைகளுக்கும் அழகு. அதை விட்டுட்டு சும்மா விதண்டாவாதம் கதைப்பது கூடாது. 
 
நீங்கள் இப்படி அம்மாவுக்கு பிடிக்காத விடயங்களை செய்ய சொல்லி வற்புறுத்தும்போது, கணவனை இழந்து வாடும் அந்த தாய்க்கு வேதனை தான் கூடும். ஆகவே இந்த விடயத்தில் அம்மாவின் முடிவு தான் முக்கியம். 
 
என்னைப் பொறுத்தவரை இந்த விடயம் ஒரு தேவையில்லாத விசர் வேலை.

எந்த வளமாப் பாத்தாலும் என் கேள்விக்கு சிலரைப் போல உங்களாலும் நேரடியாகப்  பதில் கூற முடியவில்லை என்பதுதான் உண்மை. :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.