Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி - வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சு

Featured Replies

chiefminsters%20454dd.jpg

வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
 
இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள 'ஆறுதல்' அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் 'முதலமைச்சராக எனது அனுபவம்' என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சித்தர்க்கு பின்பு வரதரைஉம் TNA க்குள் உள்வான்குங்கோ சூப்பர் ஐய் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாத்தன், சுரேஸ் பிறேமச்சந்திரனை கூட்டமைப்பு உள்வாங்கலாம் எனில் வரதரையும் உள்வாங்கலாம் தானே??

வரதர் அவர்களை விட எவ்வளவோ மேல் அதைவிட நல்ல  அரசியல் அறிவும் இருக்கு .

எங்களுக்குதான் படித்தவர்களை பிடிக்காதே . :(  

  • கருத்துக்கள உறவுகள்

படித்த எவரையும் உள்வாங்குவதில் தவறு இல்லை! வரதராஜப்பெருமாள் சிறந்ததொரு பொருளியல் அறிஞர். தொண்டைமானாறு நன்னீர்திட்டம் தொடர்பாக வரதரின் திட்டங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எங்கோ வாசித்த ஞாபகம்! மற்றும் படி கடைசி நேரத்தில் "அவர்கள்" ஆக்களைப் பிடித்தது போலவே, தமது இருப்புக்காக வரதர் முதல்வராக இருந்தபோது இளைனர்களைக் கட்டாயப்படுத்திப் தமிழ் இராணுவத்துக்குப் பிடித்தார். எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுதானே!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படிகாத மாவீரன் நாட்டுக்கு செய்த சேவை ஒரு படித்த நீலனோ அமிர்தலிங்கமோ பொன்னம்பலமோ செய்யவில்லை என்பதை மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்து விடும். ஒரு நாட்டுக்கு சேவை செய்ய நிச்சயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை.

குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓடும் நாலு வாலுகள் சொல்லும் கருத்து மட்டும் தான் உது .வெளியில் யாரிடமும் சொல்லி விடாதிர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதுவும் நீலனுடன் ஒப்பிட்டது .

  • தொடங்கியவர்

இலங்கை மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றன

150419141454_varatharaja_perumal_lanka_6

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் முன்னேற்றகரமான நிலை அங்கு ஏற்படும் என்ற நம்பிக்கையை தந்திருப்பதாக வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றிணைந்த வடகிழக்கின் முதல்வராக இருந்து, பிறகு இந்தியாவில் நாடுகடந்து வாழும் வரதராஜபெருமாள் தற்போது இலங்கையின் வடபகுதிக்கு சென்றிருக்கிறார்.
 
வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனை சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்தப் பயணம் குறித்து அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் கொலைவெறியாட்டம் போட்ட இவரை சந்தித்தன் மூலம் விக்கி தன்னை கறைபடுத்திக் கொண்டுள்ளார்.

வரதராஜப் பெருமாள்.. இந்தியாவின் நலனுக்காக வளர்க்கப்பட்ட ஒரு ஜென்மம். தமிழர்களின் நலனுக்காக உருவானதல்ல. இருந்தும் இவரை இப்ப எதுக்கு ரோ முன்னிலைப்படுத்துது.. தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள்.. தமிழ் தேசிய அரசியலை இறுதியில் பலப்படுத்தி நின்றதே வரலாறு.

மிஸ்டர் வரதராஜப் பெருமாள்.. 1988/89 பொதுத் தேர்தலை மறந்திருக்க முடியாது.

பிள்ளை பிடியை ஒப்பிடுற ஜென்மங்களை பார்க்கிறப்போ.. இதுங்க எதுக்கு இன்னும் இருக்குதுங்க என்றே எண்ணத் தோன்றுகிறது. ரோட்டில போற வாற பள்ளி மாணவர்களை எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடின வரதராஜப் பெருமாளும்.. வீட்டுக்கு ஒருவர் வா என்று உரிமையோடு அழைத்ததும் ஒன்றெனக் கருதும் ஜென்மங்கள் இன்னும் எம் மத்தியில். :icon_idea::rolleyes::)

இவரின் பொருளியல் அறிவு தன் மகளை ஹிந்தியாவில் நடிகையாக்க உதவியதே தவிர.. எமது தேசத்தை இன்று நிரந்தரமாகக் கூறறுத்துள்ளது. இந்தியாவோடு ஓட முதல்.. இந்த ஜென்மம் செய்த தமிழீழப் பிரகடனம்..  வடக்குக் கிழக்கை நிரந்தரமாக துண்டாட சிங்களவனை தூண்டியது.

இவரின் பொருண்மிய அறிவில்.. தான் 1980களின் இறுதியில் யாழ்ப்பாணம் சிங்கப்பூராக விளங்கியது. வந்திட்டாங்க சில பேர்.. இந்த இனப்படுகொலையாளர்களை எல்லாம்.. அறிவாளியாக இனங்காட்ட. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் அவர்களை விட எவ்வளவோ மேல் அதைவிட நல்ல அரசியல் அறிவும் இருக்கு .

எங்களுக்குதான் படித்தவர்களை பிடிக்காதே . :(

இந்த அறிவாளி 80 பதுகளில் ஆடிய ஆட்டம் வெளிநாட்டில இருக்கிற எங்களுக்கு தெரியாதே

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓடும் நாலு வாலுகள் சொல்லும் கருத்து மட்டும் தான் உது .வெளியில் யாரிடமும் சொல்லி விடாதிர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதுவும் நீலனுடன் ஒப்பிட்டது .

நீங்களும் இதை யாரிடமும் சொல்லாதீர்கள் 
ஆம்புலன்சுக்கு போன் அடித்து விடுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓடும் நாலு வாலுகள் சொல்லும் கருத்து மட்டும் தான் உது .வெளியில் யாரிடமும் சொல்லி விடாதிர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதுவும் நீலனுடன் ஒப்பிட்டது .

எங்களுக்கு தெரியும் புலி வாந்திக்காரரின் கருத்துக்களை. அலட்டிக்கொள்வதே இல்லை. கருத்தின் மட்டத்துக்கு ஏற்ற பதிலை தான் தரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் வாசித்தாலும் விளங்காது. முதலில் அது இருக்க வேண்டும்.

என்னவோ வீட்டுக்கு ஒருவர் வா என்டு சொக்கா குடுத்து அன்பா கூட்டிக்கொண்டு போனார்கள் என்று சிலரது எண்ணம். ஓடிவந்து லண்டனில குந்தியிருந்து தமிழ்நெட் வாசிச்சா இப்படித்தான் எண்ண தோன்றும். பிடிச்சுகொண்டு போய் இரண்டு நாள் பயிற்சியோட முன்னரங்கில விட்டு பலிகுடுத்தது ஆயிரக்கணக்க தாண்டும்

ஒரு முதலமைச்சரரை யாரும் சந்திக்கலாம்.இதை வைத்து தற்போதைய முதலமைச்சர் மீதுசேறு பூசாதீர்கள்.இருந்தாலும் இலங்கைச்சரித்திரத்தில் முதல் முதலமைச்சர் வரதர் தான் இதையாரும் மாற்றமுடியாது.கூட்டணியினரின் (தமிழரசுக்கட்சியின்) தான் தோன்றித்தனமான முடிவுகளால் இந்தியா வரதரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.இதை வைத்து அரசியல் பண்ணாமல் இருந்தால் சரி

http://www.yarl.com/forum3/index.php?/topic/156335-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

1) சக கருத்தாளரை ஜென்மம், அது இது என்று அஃறிணையில் அழைப்பது விதி மீறல் இல்லையா?

2) வரதர் 87-89 வரை ஆடிய கூத்து மிகவும் கண்டத்துக்குரியதும் கேவலமானதும். அப்பாவி தமிழ் இளைஞர்களை ரி என் ஏ என்று பலிகொடுத்து விட்டு, ஈபி ஆடிய கொலையாட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தததுக்கு இவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

3) ஆனால் இவரைப் போலதான் அவரும் கடைசிக்காலத்தில் பிள்ளை பிடித்தார். இவர் இந்தியாவின் வால்பிடிக்கு செய்தார். அவர் அடையமுடியா இலட்சியத்தை அடைவோம் என்று எண்ணிச் செய்தார். ஆனால் இருவரும் பிள்ளை பிடிகாறர்களே. வலுக்கட்டயமாக ரி என் ஏ யில் சேர்க்கப்பட்டு இறந்துபோன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும், வலுக்கட்டாயமாக புலியில் சேர்க்கப்பட்டு இறந்து போன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும் ஒரு வேறு பாடுமில்லை.

4) என்றைக்கு ஒரு ஆயுத கிளர்சிக்கு போராளிகளை வலுக்கட்டாயமாக பிடிக்க வேண்டிய ( அல்லது "உரிமையுடன் அழைக்க"

குண்டு சட்டிக்குள் இருந்து குதிரை ஓடும் நாலு வாலுகள் சொல்லும் கருத்து மட்டும் தான் உது .வெளியில் யாரிடமும் சொல்லி விடாதிர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அதுவும் நீலனுடன் ஒப்பிட்டது .

நீலன் ஒரு உலக மகா பொறுக்கி அவருக்கு என்ன வாலோ ..... 
உறக்கத்தில் இருக்கும் உத்தமரே நிஜத்தை ஒத்துகொள்ளும் தேசியத்தலைவர் என்றா சும்மாவா ...
உலகமே பார்த்து வியந்த அத்துடன் பயந்த ஒரு உன்னத பெரிய வீரனை தலைவனை உங்களை போன்ற சந்திரனை பர்ர்த்து குலைக்கின்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது .   

1) சக கருத்தாளரை ஜென்மம், அது இது என்று அஃறிணையில் அழைப்பது விதி மீறல் இல்லையா?

2) வரதர் 87-89 வரை ஆடிய கூத்து மிகவும் கண்டத்துக்குரியதும் கேவலமானதும். அப்பாவி தமிழ் இளைஞர்களை ரி என் ஏ என்று பலிகொடுத்து விட்டு, ஈபி ஆடிய கொலையாட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தததுக்கு இவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

3) ஆனால் இவரைப் போலதான் அவரும் கடைசிக்காலத்தில் பிள்ளை பிடித்தார். இவர் இந்தியாவின் வால்பிடிக்கு செய்தார். அவர் அடையமுடியா இலட்சியத்தை அடைவோம் என்று எண்ணிச் செய்தார். ஆனால் இருவரும் பிள்ளை பிடிகாறர்களே. வலுக்கட்டயமாக ரி என் ஏ யில் சேர்க்கப்பட்டு இறந்துபோன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும், வலுக்கட்டாயமாக புலியில் சேர்க்கப்பட்டு இறந்து போன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும் ஒரு வேறு பாடுமில்லை.

4) என்றைக்கு ஒரு ஆயுத கிளர்சிக்கு போராளிகளை வலுக்கட்டாயமாக பிடிக்க வேண்டிய ( அல்லது "உரிமையுடன் அழைக்க"

இந்த நிலையில் அவர் எப்படியாவது தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்பினார் ... சூழ்நிலை அப்படி ... இதனை விமர்சனம் செய்ய கூடாது .... இது அப்படியான விடயம் அல்ல .....
 
பிறகேன் நீங்கள் ஏன் அவருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் வெளிநாட்டுக்கு ஓடி வந்தனீங்கள்?
வெளிநாடு வர வசதியில்லாத இளைஞர்கள் மட்டும் தான் ஒத்துழைப்பும் உயிரும் குடுக்க வேணுமா?
  • கருத்துக்கள உறவுகள்

11109151_887343977989978_188150473029582   

சீனா ஒரு வேளை இலங்கையை விழுங்கினால் .....?
கடைசி வடக்கு கிழக்கையாவது பேரம் பேசி பார்க்கலாம்.
சீனாவின் அடுத்த நகர்வு ....?
மகிந்தவின் மீள் எழுச்சி ...?
இரண்டும் எதிர்மறையை தோற்றுவிக்கலாம் என்று கிந்தியா யோசிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த இடைவெளியில் ஈழ தமிழன் எழுந்துவிடுவானோ ?
என்று அச்சத்தால் 
அடித்த இன்னொரு ஏவுகணை!

ஈழத்தமிழன் இப்போதைக்கு எழவே முடியாது!

அடுத்த ஆப்பு ஐங்கரநேசனுக்கு 
எப்படி மாவை போட்டு மா ஆட்டுவார் என்பதை 
பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
 
அப்போதும் பழிபோட புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்!
அவர்கள் போடாவிட்டாலும் 
 
இங்கிருக்கும் அறிவாளிகள் அந்த வேலையை கச்சிதமாக முடிப்பார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

1) சக கருத்தாளரை ஜென்மம், அது இது என்று அஃறிணையில் அழைப்பது விதி மீறல் இல்லையா?

2) வரதர் 87-89 வரை ஆடிய கூத்து மிகவும் கண்டத்துக்குரியதும் கேவலமானதும். அப்பாவி தமிழ் இளைஞர்களை ரி என் ஏ என்று பலிகொடுத்து விட்டு, ஈபி ஆடிய கொலையாட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தததுக்கு இவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

3) ஆனால் இவரைப் போலதான் அவரும் கடைசிக்காலத்தில் பிள்ளை பிடித்தார். இவர் இந்தியாவின் வால்பிடிக்கு செய்தார். அவர் அடையமுடியா இலட்சியத்தை அடைவோம் என்று எண்ணிச் செய்தார். ஆனால் இருவரும் பிள்ளை பிடிகாறர்களே. வலுக்கட்டயமாக ரி என் ஏ யில் சேர்க்கப்பட்டு இறந்துபோன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும், வலுக்கட்டாயமாக புலியில் சேர்க்கப்பட்டு இறந்து போன பிள்ளைகளின் பெற்றோரின் துயருக்கும் ஒரு வேறு பாடுமில்லை.

4) என்றைக்கு ஒரு ஆயுத கிளர்சிக்கு போராளிகளை வலுக்கட்டாயமாக பிடிக்க வேண்டிய ( அல்லது "உரிமையுடன் அழைக்க"

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ வீட்டுக்கு ஒருவர் வா என்டு சொக்கா குடுத்து அன்பா கூட்டிக்கொண்டு போனார்கள் என்று சிலரது எண்ணம். ஓடிவந்து லண்டனில குந்தியிருந்து தமிழ்நெட் வாசிச்சா இப்படித்தான் எண்ண தோன்றும். பிடிச்சுகொண்டு போய் இரண்டு நாள் பயிற்சியோட முன்னரங்கில விட்டு பலிகுடுத்தது ஆயிரக்கணக்க தாண்டும்

நீங்க கனடாவில் குந்தி இருந்து கொண்டு எழுதலாம். மொட்டை அடித்துவிட்டு துவக்கோட வெயிலுக்க நின்டால் தெரியும். ஒன்டோ ஆயிரமோ இழப்பின் வலி இழந்தவனுக்குத்தான் புரியும்.

நீங்க கனடாவில் குந்தி இருந்து கொண்டு எழுதலாம். மொட்டை அடித்துவிட்டு துவக்கோட வெயிலுக்க நின்டால் தெரியும். ஒன்டோ ஆயிரமோ இழப்பின் வலி இழந்தவனுக்குத்தான் புரியும்.

நான் கனடாவில் குந்தியிருந்து வன்னியில் பிள்ளை பிடிச்சதை நியாயப்படுத்தினால் தான் தவறு. மக்கள் விரோத செயற்பாடுகளை எங்கிருந்து வேண்டுமென்றாலும் கண்டிக்கலாம். இழப்பின் வலி புரிந்ததால்தான் அவர்கள் செய்த பிழைகளை கண்டிக்கிறோம். வெளிநாட்டில இருந்து ஸ்கோர் கேட்டு விசிலடித்தவர்களுக்கு அது விளங்காதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச ஆட்கள் கருத்து சொன்னால் புலி வால்கள். சிலர் கருத்து சொன்னால் வேத வாக்காக எடுக்க வேண்டும் என மனப்பால் குடிக்கிறார்கள்.

மகாத்மா காந்தி கூட தன அஹிம்சை போராட்டத்திக்கு பிரச்சாரங்களை செய்து தான் ஆட்களை சேர்த்தவர் . சும்மா இருக்க ஒருவரும் அவர் கூட சேரவில்லை . ஆகவே ஒரு விடுதலை போராட்டதிக்கு ஆட்களை சேர்க்கும் போது இப்படியான கட்டாய ஆட்சேர்ப்புகள் நடக்கத்தான் செய்யும் .
 
இதனை சரி பிழை என்ற கட்டத்துக்குள் வைத்து விமர்சனம் செய்ய கூடாது . தேவைகருதி சிலதினை செய்யத்தான் வேண்டும் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.