Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திரா காந்தி சர்வதேச முனையத்துக்கு உலகின் சிறந்த விமான நிலைய விருது

Featured Replies

delhi_airport_2393074g.jpg

delhi_2_2393075g.jpg

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது.

ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது.

விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5 புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்.

அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் தரநிலையில் 2-ம் இடத்தில் இருந்த இந்திரா காந்தி விமான நிலையம் 2014-ம் ஆண்டு முதலிடத்துக்கு முன்னேறியது. 2007-ம் ஆண்டு 3.2 புள்ளிகளையே எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தகக்து. 

2014-15-ம் ஆண்டில் சுமார் 4 கோடி பயணிகளை திறம்பட நிர்வகித்த இந்திரா காந்தி விமான நிலையம் நாளொன்றுக்கு சராசரியாக 885 விமானங்கள் போக்குவரத்தையும், சுமார் 696,000 மெட்ரிக் டன்கள் சரக்குப் போக்குவரத்தையும் கையாண்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article7164828.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம், சுகாதாரம், லஞ்சம், லாவண்ணியம்.... போன்றவற்றுக்கும் சேர்த்தா..... இந்த விருது வழங்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

"இதை நம்பலாமா?"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நாங்க நம்பணும்...ஐயொ...ஐயொ... :D

துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (DXB ) உடன் ஒப்பிடும்போது உந்த இந்திரா காந்தி ஏர்போர்ட் ஒரு யுயுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்
எதோ மொழிபெயர்ப்பு தவறு என்று நினைக்கிறன் !
 
உண்மை நிலவரப்படி டில்லியை ஒன்றிலும் காணோமே ?
The World's Top 10 Airports 2014     1 Singapore Changi Airport 2 Incheon International Airport 3 Munich Airport 4 Hong Kong Intl Airport 5 Amsterdam Schiphol Airport 6 Tokyo Haneda Airport 7 Beijing Capital Airport 8 Zurich Airport 9 Vancouver Airport 10 London Heathrow Airport

Best Airports : 50 million pax+ per year     1 Singapore Changi Airport 2 Hong Kong Airport 3 Amsterdam Schiphol Airport 4 Tokyo Haneda Airport 5 Beijing Capital Airport 6 London Heathrow Airport 7 Frankfurt Airport 8 Dubai International Airport 9 Denver International Airport 10 Istanbul Atatürk Airport

Best Premium Service Airports     1 QR - Doha Intl Airport 2 EY - Abu Dhabi Intl Airport 3 TG - Bangkok Suvarnabhumi 4 LH - Frankfurt Airport 5 EK - Dubai Intl Airport 6 LH - Munich Airport

Best Domestic Airports     1 Tokyo Intl Airport Haneda 2 Shanghai Hongqiao Airport 3 Durban Airport 4 Cincinnati/Northern Kentucky 5 Denver International Airport 6 Cape Town Airport 7 Haikou Meilan Airport 8 San Francisco Airport 9 Sydney Airport 10 Johannesburg Int'l Airport

Best Airport Shopping     1 Heathrow Airport 2 Singapore Changi Airport 3 Hong Kong Airport 4 Dubai International Airport 5 Amsterdam Schiphol Airport 6 Tokyo Intl Airport Haneda 7 Incheon International Airport 8 Munich Airport 9 Paris CDG Airport 10 Narita International Airport

Best Airport Immigration     1 Incheon International Airport 2 Singapore Changi Airport 3 Taiwan Taoyuan Int'l Airport 4 Tokyo International Airport Haneda 5 Central Japan Int'l Airport 6 Gimpo International Airport 7 Hong Kong International Airport 8 Kansai International Airport 9 Helsinki-Vantaa Airport 10 Zurich Airport

Best Int'l Transit Airport     1 Incheon International Airport 2 Singapore Changi Airport 3 Narita International Airport 4 Amsterdam Schiphol Airport 5 Hong Kong International Airport 6 Munich Airport 7 Zurich Airport 8 Copenhagen Airport 9 Taiwan Taoyuan Int'l Airport 10 Dubai International Airport

Best Airport Dining     1 Hong Kong International Airport 2 Munich Airport 3 Tokyo International Airport Haneda 4 London Heathrow Airport 5 Singapore Changi Airport 6 Amsterdam Schiphol Airport 7 Narita International Airport 8 Zurich Airport 9 Copenhagen Airport 10 Helsinki-Vantaa Airport

மொழி பெயர்ப்பு தவறும் நடக்க சந்தர்ப்பம் உண்டு. மோடி கனடாக்கு போனபோது கனடாவும் இந்தியாவும், கனடா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவுக்கு on arrival visa எண்டு ஒரு ஒப்பந்தம் போட்டவை. ஆனால் அதை இந்தியன் நியூஸ் மாத்தி இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கனடாவுக்கு on arrival visa எண்டு போட்ட ஆக்கள் தனை. அப்படி இதயும் மாத்தி இருப்பாங்கள்.  :D  :D

நினைச்சனான், என்னடா இது, கனடாக் காரருக்கு பனியோ எண்டு...
 
இப்பதான் விளங்குது, பேனை வீரர்களின் வீரதீரம் எண்டு.... :D :D
 
தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது.
 
பின்பக்கத்தாளையும் கவுன்ட் பண்னுரவையல் தானே.
 
விருது கொடுத்தது ஜோர்தான் கோஸ்டி ஒன்று... முன்பின் தெரியா அமெரிக்கன் பல்கலைகழகங்கள், நம்ம தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு டாக்குத்தர் பட்டம் கொடுத்த கதை போல தான்.  :icon_mrgreen:

Edited by Nathamuni

நாதம் அண்ணோய், கொஞ்சம் காசு போனாலும் பருவாய் இல்லை, எங்கடை பலாலி விமான நிலையத்துக்கும் இப்படி எதாவது விருது வாங்க முடியுமா? அப்படியே TNA க்கும் ஒண்டு ... :lol:  :lol:  :lol:

Edited by Surveyor

நாதம் அண்ணோய், கொஞ்சம் காசு போனாலும் பருவாய் இல்லை, எங்கடை பலாலி விமான நிலையத்துக்கும் இப்படி எதாவது விருது வாங்க முடியுமா? அப்படியே TNA க்கும் ஒண்டு ... :lol:  :lol:  :lol:

அண்ணா எனக்கும் எங்கடை பலாலி விமான நிலையத்தை தரத்துக்கு உயர்த்தி வடக்கையும் கிழக்கையும் டுபாய் மாதிரி ஒரு சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை. அண்மையில் ஓருவிமானசெய்தி ஆக்கம் வாசித்தேன் DXB மூடி விட்டு டுபாய் சென்றல் என்ற இன்னுமொரு விமான நிலையம் ஆரம்பிக்க போக்றார்களாமே??

அண்மையில் ஓருவிமானசெய்தி ஆக்கம் வாசித்தேன் DXB மூடி விட்டு டுபாய் சென்றல் என்ற இன்னுமொரு விமான நிலையம் ஆரம்பிக்க போக்றார்களாமே??

DXB மூடவில்லை. ஆனால் ஏற்கனவே உள்ள வேறு ஒரு விமானநிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்கின்றார்கள். அந்த புதிய விமானநிலையத்தின் பெயர் Al Maktoum International Airport (DWC). இது துபாய்ல உள்ள Jabel Ali என்ற இடத்தில இருக்குது. DXB க்கும் DWC கும் இடையில் தனி மெட்ரோ ரெயின் ஒண்டும் இயக்க திட்டம் இருப்தாக கேள்வி, உண்மை பொய் தெரியாது.

புதிய விமான நிலையத்தில் 5 ஓடு பாதைகளாம் !!!!!!!!!!!!!!!! அதே போல் DXB இல் TERMINAL A to TERMINAL B ஏற்கனவே ரயில் உள்ளதாமே !!

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

புதிய விமான நிலையத்தில் 5 ஓடு பாதைகளாம் !!!!!!!!!!!!!!!! அதே போல் DXB இல் TERMINAL A to TERMINAL B ஏற்கனவே ரயில் உள்ளதாமே !!

துபை நகருக்கு வெளியே பாலைவனதில் அமைந்துள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்(DWC) ஐந்து ஓடுதளம் கொண்டவாறு திட்டமிடப்பட்டு தற்பொழுது ஒரு ஓடுதளம் மட்டுமே முடிவுற்று சிறு பட்ஜட் ஏர்லைன் விமானங்கள் மட்டுமே இங்கிருந்து இயங்குகின்றன.

ஆனால் நகரின் நடுவே அமைந்துள்ள துபை சர்வதேச விமான நிலையம்(DXB), இரண்டு ஓடுதளம் & நான்கு முனையங்களைக் கொண்டது (4 Terminals).. இவற்றில் சமீபத்தில் தொடங்கப்பட்ட முனையம் நான்கு, ஏர்பஸ் 380 வகை இரண்டடுக்கு விமானங்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டது. முனையம் 4 கிற்கும், முனையம் 3 கும் இடையே விமான ஓடுதளத்தின் அடியில்(Flight Taxi way) சுரங்க ரயில் இயக்கப்படுகிறது..

துபை எக்ஸ்போ 2020 நடைபெறுமுன் அல்மக்தூம்(DWC) மற்றும் துபை(DXB) சர்வதேச விமான நிலையங்களுக்கிடையே (65 கி.மீ )இரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

1613259967.jpg

DWC

03-Dubai-Airport.jpg

DXB

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணை விலை சரிவு ...
துபாயில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லையா ?
 
சுற்றுலா பயணிகளை குறிவைத்து செய்யும் இந்த முதலீடுகள் 
உரிய லாபத்தை கொடுக்கும் பிராந்தியமாக துபாய் இல்லை என்பது என்னுடைய தனிபட்ட கணிப்பு.
 
இவர்கள் அர்த்த ராத்ரியில் குடை பிடிக்கும் வேலை பார்ப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். 

காரணம் அவர்களது பொருளாதாரம் எண்ணெயில் தங்கி இல்லை,வெறும் இல் 2% தான் எண்ணெய் உற்பத்தி, அதனால் தான் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்னராகவே அவர்களது பொரூலாதாரத்தை சேவைதுறை பொருளாதாரமாக மாற்றி அமைக்க தொடங்கி விட்டர்கள்.அபுதாபியில் தான் எண்ணை வளம் அதிகமாக உள்ளது.

உல்லாச துறையை நம்பி இவளவு காசை கொட்டுகிறார்களே .....?
யார் அங்கு போகிறார்கள் ?

உல்லாச துறையை நம்பி இவளவு காசை கொட்டுகிறார்களே .....?

யார் அங்கு போகிறார்கள் ?

அண்ணை, துபாய்க்கு மிக அதிகாமான உல்லாசப்பயனிகள் பயணிகள் வந்து போகின்றார்கள். அதைவிட துபாய்யின் பொருளாதாரம் வங்கி மற்றும் சேவை துறை சார்ந்து தான் இயங்குகின்றது. எண்ணை விலை அவர்களில் பெரிய தாக்கத்தை செலுத்தாது என்று நான் நினைக்கிறான். அத்துடன் துபாய் அரசாங்கம் வெளிநாடுகளில் அதிக அளவிலான முதலீடுகளை செய்துள்ளது.

ம்ம்ம்

உலக வட்டிக்கடைக்காரர் அவர்கள் தான்... :o

  • தொடங்கியவர்

நாதம் அண்ணோய், கொஞ்சம் காசு போனாலும் பருவாய் இல்லை, எங்கடை பலாலி விமான நிலையத்துக்கும் இப்படி எதாவது விருது வாங்க முடியுமா? அப்படியே TNA க்கும் ஒண்டு ... :lol:  :lol:  :lol:

அண்ணா எனக்கும் எங்கடை பலாலி விமான நிலையத்தை தரத்துக்கு உயர்த்தி வடக்கையும் கிழக்கையும் டுபாய் மாதிரி ஒரு சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை. அண்மையில் ஓருவிமானசெய்தி ஆக்கம் வாசித்தேன் DXB மூடி விட்டு டுபாய் சென்றல் என்ற இன்னுமொரு விமான நிலையம் ஆரம்பிக்க போக்றார்களாமே??

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தினை, புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயம் திறப்பு விழா புதன்கிழமை (06) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில்,

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். யாழ்ப்பாணம், மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் காணிகள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டு, முடிக்கப்படாமல் இருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றார்.

http://www.tamilmirror.lk/145551#sthash.TelVG3tc.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.