Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் Photo in

Featured Replies

"எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.."
ravi-nanthikadal-1.JPG
என்று சற்று முன்னர் இன அழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக  மலர் தூவி அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ravi-nanthikadal-2.JPG
அத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணியளவில் வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்துதல் நிகழ்வு நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

ravi-nanthikadal-3.JPG
ravi-nanthikadal-4.JPG

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் தனிய நிக்கிறார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாயில் வீரம் காட்டாமல், பின்கதவு அரசியல் செய்யாமல் செயலில் துணிந்து நிற்கும் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் வைப்பதற்கு அனுமதி இல்லை என்பதால் தனிமனிதனாக செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் தனிய நிக்கிறார் ?

இவர் ஏன் தனிய நிக்கிறார் ?

எந்த ஒரு முயற்சியும்

எந்த ஒரு பாதையும்

முதன் முதலில் ஒருவரால்தான் போடப்படுகிறது..

Edited by விசுகு

ரவிகரன் நந்திக்கடலில் 

விக்னேஸ்வரன், ஆனந்தி கீரிமலையில்

ஏன், மனோ கணேசன் எட்டியாந்தோட்டையில்

எங்கே, அஞ்சலி செலுத்தினார்கள்

தமிழ் இரத்த வாடை மாறுவதற்கு முன் சிங்கள கொடியை யாழில் அசைத்த மாவீரன் சம்பந்தர்? 

சிங்களவர்களுடன் மனங்களால் ஒன்றாகிவிட்ட பின்கதவுப்புகழ் சுமந்திரன்?

சம்பந்தன், சுமந்திரர்கள் தமிழர்கள் இல்லையா?

Edited by no fire zone

மாவையும் பூட்டிய அறைக்குள், வெளியே நாலு பேருக்கு தெரியாமல் சரவணபவன் கும்பலோடு அஞ்சலித்தாராம். வெளியே செய்தால், நாளை பார்லிமென்டில் சிங்களவர்களுக்கு முன் நெளிய வேண்டுமே என்று நினைத்து விட்டாராம்? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், மாவை அஞ்சலி செலுத்தாமை பாரிய தப்புத்தான்.

அஞ்சலி செலுத்துமளவுக்கு நிலைமை முன்னேறியதுக்கு இந்த மூவரும் செய்த அரசியல் நகர்வுகளே வழி சமைத்தது.

சும்மாவே புலத்தில் வெறும் வாயை மெல்லுவார்கள் இப்போ ஒரு மூட்டை அவலே கிடைத்து விட்டது.

எம் இனத்தின் பாரிய துயரை நினைவு கொள்வதை தவிர இவர்க்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்?

எல்லா சந்தர்பவாத அரசியல்வாதிகளும் (சீவி தவிர) முள்ளிவாய்க்காலை வைத்து நல்லா வாக்கு வேட்டை நடத்தி முடித்து விட்டார்கள்.

தேர்தல் வேற வருகுது. சம்பந்தனை அசைக்க முடியாது. ஆனால் மாவைக்கும் சுமந்திரனுக்க்கும் இதை வைத்தே புலயாவாரிகள் ஒரு பிரச்சார போரை முன்னெடுப்பது நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை எண்ட வசனம் காலா காலத்துக்கும் பொருந்துதப்பா.......
 
சம்பந்தம் சுமந்தி கோஷ்டி என்னத்தை வெட்டி புடுங்கினவை எண்டு தெரியேல்லை..
அவையின்ரை இடத்திலை இருக்கவேண்டியவர்கள் இருந்திருந்தால்.......
  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ண புலம்பெயர் காகங்களிண்ட கதையை கேட்டிருந்தா இப்பவும் மகிந்த பனம்பழம் தன் குந்திகொண்டிருக்கும்.

நினைவேந்தல் எண்டு நினிச்சாலே உள்ளே போட்டிருப்பாங்கள்.

தமிழ் வாக்குகளை பெருவாரியா மைத்திரி பக்கம் திருப்பியது சம், சும் தான்.

அவயின்றை இடத்தில இருக்க வேண்டிய இருந்திருந்தா ........ இன்னொருக்கா முள்ளிவாய்க்காலுக்கு கூட்டிப் போயிருப்பினம்.

இப்ப என்ன கிடைச்சுடுத்து என்று காட்டு கத்தல் முன்னயதை விட இப்ப தமிழர் நிலை என்னம் கேவலமான நிலை அது புரியாமல் ................இங்கு சவுண்ட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்ண புலம்பெயர் காகங்களிண்ட கதையை கேட்டிருந்தா இப்பவும் மகிந்த பனம்பழம் தன் குந்திகொண்டிருக்கும்.

நினைவேந்தல் எண்டு நினிச்சாலே உள்ளே போட்டிருப்பாங்கள்.

தமிழ் வாக்குகளை பெருவாரியா மைத்திரி பக்கம் திருப்பியது சம், சும் தான்.

அவயின்றை இடத்தில இருக்க வேண்டிய இருந்திருந்தா ........ இன்னொருக்கா முள்ளிவாய்க்காலுக்கு கூட்டிப் போயிருப்பினம்.

அண்ணோய் சிங்களவன் இப்ப சந்தர்ப்பத்துக்கு  ஏற்றமாதிரி காயை நகர்த்த வெளிக்கிட்டுட்டான்......இதிலை சம் சும் அறுவடை செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பையனை... அஞ்சலி செலுத்தும், ஒரு இடத்திலும் காணவில்லை.

வாயில் வீரம் காட்டாமல், பின்கதவு அரசியல் செய்யாமல் செயலில் துணிந்து நிற்கும் தமிழன்.

அப்ப ஏன் தாத்த ரவிகரனுக்கு புலிகள் 90 லட்சம் தண்டம் கட்டச்சொல்லி முல்லைத்தீவு இணக்க சபை மூலம் உத்தரவிட்டார்கள் :(  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி.. மாவை.. விஜயகலா.. கஜேந்திர குமார்.. அனந்தி.. சித்தார்த்தன்.. யாழ் பல்கலை மாணவர்கள்.. கிழக்கு பல்கலை மாணவர்கள்.. தாயக மக்கள்.. புலம்பெயர் மக்கள்..தமிழக உறவுகள்.. ஏன் மொரீசியஸ் உறவுகள் எல்லோரும் அஞ்சலி செய்துள்ளனர்.

ஆனால்.. வழமை போல்.. சம்பந்தனும்.. சுமந்திரனும் அஞ்சலி செய்யவே இல்லை. :rolleyes::o

முள்ளிவாய்க்கால் கடலில் அஞ்சலி செய்யும் அனந்தி அக்காவும் மக்களும்..!

17103_957812554263367_686026104290765469

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், மாவை அஞ்சலி செலுத்தாமை பாரிய தப்புத்தான்.

அஞ்சலி செலுத்துமளவுக்கு நிலைமை முன்னேறியதுக்கு இந்த மூவரும் செய்த அரசியல் நகர்வுகளே வழி சமைத்தது.

இதில் முன்னிருவர் செய்தது எப்படி தமிழ் மக்களின் உணர்வுகளை சாகடிப்பது என்பதை தான்.

புலம்பெயர் மக்கள்.. தாயக மக்கள்.. மற்றும் இனமான அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்திற்கு வழங்கி வந்த அழுத்தங்களால்.. தான் மைத்திரி அரசே அஞ்சலி நிகழ்வுகள் குறித்து சிந்திக்க வேண்டி வந்தது. சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இவற்றில் அக்கறை இல்லை என்பதை அவ்விருவரும் கடந்த காலங்களிலும் தற்போதும் நடந்து கொள்ளும் முறையிலேயே தெரிகிறது. இதில் நிலைமை முன்னேற்றியது இவர்களாம்... சான்றிதழ் கொடுக்க ஒரு கூட்டம்.

தாயக மக்கள்..மாணவர்கள்.. புலம்பெயர் மக்கள்.. மாணவர்கள்.. தமிழக உறவுகள்.. உலகத் தமிழ் சொந்தங்கள் இவர்கள் எல்லோரும் எழுப்பி வந்த தீவிர குரலின் ஒரு வழியாகத்தான் சர்வதேச நாடுகள் ஐநா மனித உரிமை அமைப்பு.. அஞ்சலி செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது என்பதை வலியுறுத்தியதன் அடிப்படையில் தான்.. மைத்திரி அரசு ஒரு நெருக்கடியின் கீழ் இவற்றை அனுமதிக்க வேண்டி வந்ததே அன்றி.. சம்பந்தன்.. சுமந்திரனுக்காக அல்ல. அவர்கள் அழைக்காமலே.. சிறீலங்கா சுதந்திர தினத்தில்.. சிங்கக் கொடியோடு போய் குந்தக் கூடிய விசுவாசிகள் என்பது மைத்திரிக்கு தெரியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தப் போயிருந்தால் இனக்கொலையை இவர்கள் இருவரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்று பொருள்படும்.. அதாவது அங்கு போய் களத்தில் நின்ற இந்திய அதிகாரிகளையும், ஜவான்களையும் கைகாட்டுவதாக அமைந்துவிடும். அதனால் அதை தவிர்த்துவிடுவது நல்லது.. :D

மாண்ட தமிழர்கள் வாக்குப் போட மாட்டார்கள் என்பதால் சம்பந்தனும் சுமந்திரனும் அதில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.

இதயங்களை இணைக்கும் சாணக்கிய அரசியலில் இறங்கியிருக்கும் 50 வருட அரசியல் அனுபவம் மிக்க பழுத்த பெருமகனையும் அவரது அரசியல் வாரிசையும்  தூற்றாதீர்கள்...

அவர்களுக்கு ஒளி (ழி) மயமான எதிர்காலம் தெரிகிறது. அதைப் பெற்றுத் தரும் வரை பொறுத்திருங்கள் மக்களே!

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் முள்ளிவாய்க்கால் கடலில் நீச்சலடிச்சு அஞ்சலி செலுத்தியிருப்பார்கள்! என்ன செய்யிறது விதி இங்க கொண்டந்து விட்டிட்டிது!

விட்டால் முள்ளிவாய்க்கால் கடலில் நீச்சலடிச்சு அஞ்சலி செலுத்தியிருப்பார்கள்! என்ன செய்யிறது விதி இங்க கொண்டந்து விட்டிட்டிது!

அது சரி வாலியாரே அவங்க தங்க உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதால் உங்களுக்கென்ன பிரச்சனை?
  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கவனிச்சேன் சிறீதரனும் போகேல்ல போல கிடக்கு.

குதிரை கஜனையும் மருதங்கேணியில் காணவில்லை.

அஞ்சலி எல்லோரும் செலுத்த வேண்டும்.

ஆனால் அஞ்சலி செலுத்தியதற்க்காக சித்தர் நல்லவருமில்லை.

செலுத்தாத சம், சும், மாவை, சிறி கெட்டவர்களும் இல்லை.

துணிந்து செய்யும் ஒரு தமிழா.... 

வாயில் வீரம் காட்டாமல், பின்கதவு அரசியல் செய்யாமல் செயலில் துணிந்து நிற்கும் தமிழன்.

கூட்டம் வைப்பதற்கு அனுமதி இல்லை என்பதால் தனிமனிதனாக செய்துள்ளார்.

சும்மா புலுடா விடாதீங்கோ. யாரோ இன்னொருவர் படம் எடுத்திருக்கிறார்.
 
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

ஆனால்.. வழமை போல்.. சம்பந்தனும்.. சுமந்திரனும் அஞ்சலி செய்யவே இல்லை. :rolleyes::o

முள்ளிவாய்க்கால் கடலில் அஞ்சலி செய்யும் அனந்தி அக்காவும் மக்களும்..!

17103_957812554263367_686026104290765469

வாவ்!!! வட் எ பியூட்டிபுள் போட்டோ.
 
ஆமா தெரியாமத்தான் கேட்கிறன் அனந்தி அக்கா ஏதோ பண்ணுறா மக்கள் எல்லாம் திரும்பி பார்க்காம மறுபக்கம் எங்கோ போறார்கள். அதுக்குள்ள "முள்ளிவாய்க்கால் கடலில் அஞ்சலி செய்யும் அனந்தி அக்காவும் மக்களும்..!" என்று பதிவு வேறை.

இதெல்லாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்தானே.. இல்லாவிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள்.

மேற்குலகில் இன்றும் "Lest we forget.." என்று போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் உலகப்போரை நினைவுபடுத்தி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.