Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்குக்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடும்: சுமந்திரன்

Featured Replies

article_1433258107-df.jpg

 

 தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார்.

 

தமிழ்மிரருக்கு அளித்த விசேட செவ்வியொன்றில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி,

 

'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம்   முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல்  பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய  நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம்' எனக் கூறினார்.

 

எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், 'நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது.  அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு  வந்துள்ளோம்' என்றார்.  

 

'இதை  பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கூறினர். இந்த அரசாங்கம்  19ஆவது திருத்தின் போது இது பற்றி கூறியது. அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு  காணப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

 

இந்த தீர்வு எமது கரிசனையாகவும்  மக்களின் கரிசனையாகவும் உள்ளது' என்றும் அவர் கூறினார். 'அரசாங்கம்  சரியான  திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை  தீர்க்கப்படவில்லை. 100 நாட்களினுள் முழுக் காணிகளும் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 5 சதவீதமான காணிகள் தான் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதையிட்டு நாம் விரக்தியடைந்துள்ளோம்.

 

அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்' என்றார். 'அடுத்த பிரச்சினை, அரசியல் கைதிகளைப் பற்றியதாகும். அவர்களை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்;ளன. ஆனால், எவரும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என ஜனாதிபதி கூறியது கவலையளிக்கின்றது. இவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சுயநலனுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செயல் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே, அவர்கள் அரசியல் கைதிகள் என ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர வேண்டும்.

 

அரசியல் கைதி என்பதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. நெல்சன் மண்டேலா அரசியல் கைதியாக இருந்தார். அப்போது தென்னாபிரிக்க அரசாங்கத்திடம் இதுபற்றி கேட்டிருந்தால், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றுதான் கூறியிருக்கும். உலகம் முழுதும் நெல்சன் மண்டேலாவை அரசியல் கைதியாக அங்கிகரித்திருந்தது. எனவே, அரசியல் கைதிகள் இருப்பதை எமது ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வெண்டும்' என சுமந்திரன் எம்.பி கோரினார். 'இந்த அரசாங்கம் மெதுவாக செயற்பட்டாலும் சரியான திசையிலேயே  செல்கின்றது. பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் ஆர்வமற்று இருந்ததை நாம் இதுவரை காணவில்லை. எனவே, அழுத்தம் கொடுத்தவாறு அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்' என அவர் மேலும் கூறினார்.  

 

http://www.tamilmirror.lk/147465#sthash.6gopBl8z.dpuf

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மனோ கணேசனுடன் சேர்ந்து இயங்குவதற்கு பதில் தனித்து போட்டியிட்டு மனோவின் வாக்குகளை பிரிக்க முயல்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் , காணிகளை விடுவித்து வருவதால்தான் நான் அரசாங்கம் நல்ல வழியில் செல்வதாக கூறினேன்' என்றார். 'அடுத்த பிரச்சினை, அரசியல் கைதிகளைப் பற்றியதாகும். அவர்களை விடுவிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்;ளன. ஆனால், எவரும் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என ஜனாதிபதி கூறியது கவலையளிக்கின்றது. இவர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சுயநலனுக்காக அதை செய்யவில்லை. அவர்கள் செயல் அரசியல் நோக்கம் கொண்டது. எனவே, அவர்கள் அரசியல் கைதிகள் என ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர வேண்டும்.

 

 

மைத்திரியின் ரம்புக்வெல.

 

இவர் காணிகளை விடுவிக்கிறாராம்.. விட்டால் மகிந்த நாட்டையே விடுவிச்சார் என்று சொல்லி மகிந்தவுக்கும் வால் பிடிச்சிருப்பார் போலக் கிடக்குது. :rolleyes::(:o

 

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா என்னமாய் கெஞ்சிறார்.இவர் பிச்சை எடுக்கத்தான் இலாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மக்களுக்கு இவரில் நம்பிக்கை இல்லை.
கொழும்பு என்றால் வெல்லலாம் என நினைக்கின்றாரோ
 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று ஒரு கெட்டவார்த்தையும் பேச விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம்   முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல்  பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய  நிலையில் நாம் தேசிய பிரச்சினைகளில் பங்களித்து வருகிறோம்' எனக் கூறினார்.

 

எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், 'நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது.  அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு  வந்துள்ளோம்' என்றார்.  

 

என்ன  நடக்குதப்பா தாயகத்தில்...

 

இவருக்கு கொழும்பு தான்வேண்டுமென்றால் 

சிறீலங்காதான் குறிக்கோள் என்றால் தமிழ்தேசீயக்கூட்டமைப்பு என்ற பெயரில் எதற்கு தொங்குவான்

சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலோ

ஐதேகட்சியிலோ தொங்கவேண்டியது தானே..

இரண்டறக்கலக்க 

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்க தமிழர்பிரச்சினை ரசமா சொதியா?? (உபயம் மைத்திரி) :(  :(

யாரைக்கேட்டு பிற்போடும் ஒப்பந்தத்தை போட்டார்கள்?? :(

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்க தமிழர்பிரச்சினை ரசமா சொதியா?? (உபயம் மைத்திரி) :(  :(

யாரைக்கேட்டு பிற்போடும் ஒப்பந்தத்தை போட்டார்கள்?? :(

 

இதற்கெல்லாம் வாக்கெடுப்பு நடத்த முடியாதாம்.

மக்கள் கூட்டமைப்பை தெரிவு செய்தார்கள்

கூட்டமைப்பு இவரைத் தெரிவு செய்தது.

யாரைக்கேட்க வேண்டும் இனி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்தேசியக்கூட்டமைப்பு அல்லது சுமந்திரன் எமது இனப்பிரச்சனையை வேறுபாதைக்கு கொண்டு சென்று சர்வதேசத்தின் பார்வையை மாற்ற முயல்கின்றார்களோ என்று தோன்றுகின்றது. எமது மக்களின் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட தேசியத்தினையும் அதன் விடுதலைப் பயணமும் திசைமாற்றி விடுவதற்கு இத்தலைமை முயற்சிக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.
 
புதிய அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறிக்கொண்டு அரசியல் செய்து கொண்டு, இன்றுவரை எந்த தீர்வையும் பெறாமல் வங்குரோந்து அரசியல் செய்துகொண்டு, மக்களின் இலட்சியத்தில் இருந்து தொலைதூரம் சென்றுவிட்டதினையே அவரது பேச்சு காட்டுகின்றது.
 
தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள வடகிழக்கு மக்களின் பிரச்சனை என்பதை தூக்கி எறிந்துவிட்டு தேசிய பிரச்சனை என பேசி தமிழ் மக்களின் நோக்கத்தினை மழுங்கடித்து சர்வதேசத்தினை திசைதிருப்ப முயல்கின்னர். 
 
இப்டியான தலைமை தமிழினத்துக்கு எனியும் தேவையா என்பதனை ஈழத்தில் வாழும் எமது உறவுகள் தீர்மானிக்வேண்டும்.

சிங்களத்தால் தமிழ் மக்களின் தலைவராக வளர்த்தெடுக்கப்படும் "பின் வாசல்" சுமந்திரன், காலாகாலமாக சிங்கள கொலைக்கரங்களுக்கு நடுவே நின்று துணிகரமாக வட கிழக்கு மக்களுக்காக குரல் கொடுத்துவரும் மனோ கணேசன் போன்றோரின் எமக்கான குரல்களை அடக்குவதற்கு, சிங்களத்துடன் போட்ட ஓர் நிகழ்ச்சி நிரலின் குரலா இது?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் உள்ளதையும் கெடுக்காமல் இருந்தால் பெரிய புண்ணியம்.

கூட்டமைப்பு மனோ கணேசனின் வாக்குகளைப் பிரிக்காத வகையில் ஒரு உடன்பாட்டிற்கு வந்து தேர்தலில் நிற்பதில் தவறு எதுவுமில்லை.
 
நாடு விட்டு நாடு வந்த நாங்களே புலம் பெயர் நாடுகளில் தேர்தலில் நிற்பதில் தவறில்லையானால் இலட்சக்கணக்காக பரம்பரையாக கொழும்பில் வசிக்கும் எமது உறவுகள் சார்பில் கூட்டமைப்பு ஏன் ஒருவரை நிற்க வைக்க முடியாது.
 
என்ன புலம் பெயர் நாடுகளில் தேர்தலில் நின்ற பலருக்கு விழுந்த வாக்குகளில் பல கட்சி, கொள்கை விபரமற்று தமிழன் என்ற அடையாளத்திற்கு கிடைத்தது. ஆனால் கொழும்பு வாழ் தமிழ்மக்கள் கொஞ்சம் விபரமானவர்கள் கூட்டமைப்பு எனும் பேருக்காக மட்டும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனாலும் தென் இலங்கையிலும் எமது இனம் தம்மை பிரதிநிதித்துவப் படுத்தப்படுவது எமக்குப் பலமே தவிர பலவீனமல்ல.
வடக்கு கிழக்கு தமிழர்கள் மட்டும்தான் கூட்டமைப்பை ஆதரிக்கின்றார்கள், மற்றய தென் இலங்கையில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூட்டமைப்பை ஏற்பதில்லை எனும் அரசாங்கத்தின் விதண்டாவாதம் இங்கு அடிபட்டுப் போய்விடும்.
 
தென் இலங்கையில் தோற்றாலும் பரவாயில்லை. இம்மக்களுக்கும் தமது வாக்களிப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு கொடுக்க வேண்டும்.
 
நிச்சயம் வரவேற்கக்கூடியதே.
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தமிழ்க் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவேண்டும். முடிந்தால் மனோவின் கூட்டணி வடக்கில் போட்டியிடட்டும். இங்கு வேடிக்கை என்னவென்றால் கூட்டமைப்புக்குப் போட்டியாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்த் தேசிய விண்ணணி போட்டியிடலாமாம். ஆனால் தென்னிலங்கையில் கூட்டமைப்புப் போட்டியிட்டால் அது பிழையாம். புலி நீக்கம்செய்யப்பட்ட இன்றைய சூழ்நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் (பிரிவினை என்பது வெறும் கனவு மட்டும்தான்) பரந்த தமிழ்த் தேசியம் கட்டி எழுப்பப்படவேண்டும். இன்றுவரை புலிகளை ஆதரிப்பது மட்டுமே தமிழ்த்தேசியம் என்று புலத்து அன்பர்கள் பகல்கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அது தமிழ்த் தேசியம் அல்ல தமிழ் அடிப்படைவாதம் (விளக்கம் கேட்கவேண்டாம்). ஆகவே அகன்ற இலங்கைக்குள் தமிழர் தாயகம், தென்னிலங்கை மலையகம் மற்றும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழர்களை இணைத்த தமிழ்த் தேசியம் கட்டியெழுப்பப்படவேண்டும். மனோ கணேசனும் யூஎன்பியும் ஒன்றுதான் மனோ பெரிதாக ஒன்றையும் செய்து கிழித்துவிடவில்லை. முடிந்தால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். கூட்டமைப்பு மலையக மக்களையும் உள்வாங்கி மலையகத்திலும் போட்டியிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் உள்ள கட்சிகள் காணாமல் கூட்டமைப்பும் போட்டியிட வேண்டும். நல்ல அறிவுரை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.