Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்

Featured Replies

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம் JUN 09, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள்

Kapila-Gamini-Hendawitharana-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் குகநாதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர்களின் வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நேற்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இருந்து மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பணத்தை, டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் குகநாதன், லக்சம்பேர்க்கில் உள்ள நிதி நிறுவனங்களில் முதலிட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி எதிர்வரும் ஜூலை 2ம் நாள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரண, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகளின் மூளையாகச் செயற்பட்டவராவார்.

2009 மே 18ம் நாள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதிலும் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

ஆரம்பத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த இவர் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.

மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த உடனேயே இவர் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணையில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் பற்றிய தகவல்களும் அம்பலமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2015/06/09/news/6868

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் பாத்திட்டு நல்லா சிரிச்சன். ஆனானப்பட்ட புலிகள் அமைப்புக்குள்ளையே ஊடுருவி தன் கைவரிசையைக் காட்டின சிங்களப் புலனாய்வு அமைப்புக்கு விசிலடிச்சான் குஞ்சுகளுக்குள்ள ஊடுருவி கைவரிசையைக் காட்டுறது ஜுஜுப்பி! :D

அவனவன் பள்ளிகூடம் கட்டியதே இதற்காத்தான் .

இந்தத் தலைப்பைப் பாத்திட்டு நல்லா சிரிச்சன். ஆனானப்பட்ட புலிகள் அமைப்புக்குள்ளையே ஊடுருவி தன் கைவரிசையைக் காட்டின சிங்களப் புலனாய்வு அமைப்புக்கு விசிலடிச்சான் குஞ்சுகளுக்குள்ள ஊடுருவி கைவரிசையைக் காட்டுறது ஜுஜுப்பி! :D

சிங்களவன் சிங்களவனாக ஊடுருவி இருந்தால் தெரிந்திருக்கும் புலிகளின் வல்லமையை ... அனால் கேவலம் காசுக்காக தமிழனே புல்லுருவி ஆனதால் தான் இந்த இழப்பு ... உலகத்திலயே தன் சொந்த இனத்தை காட்டி கொடுத்த ஓரே இனம் தமிழன் தான் ... காக்கை வன்னியன்கள் ....
 
இதனை போய் வாலி அண்ணர் பெரிய உலக மகா சாதனை மாதிரி விமர்சனம் வேற .....
 
ம்ம் ... தேவையா இந்த பிழைப்பு ... அதுக்கு இன்னொரு பெயர் உண்டு ....

அவனவன் பள்ளிகூடம் கட்டியதே இதற்காத்தான் .

அட பார்ரா .... புத்திசாலிகளை ......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலும்.... சிங்கள புலநாய்வாளர்கள், நாலைஞ்சு பேர்... ஊடுருவியுள்ளார்கள். :D 
ஓட்ட... நறுக்கிப் போடுவம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் பள்ளிகூடம் கட்டியதே இதற்காத்தான் .

உதை பள்ளிக்கூடம் போய் பாஸ் பண்ணிணவன் சொல்லோணும்

 

சிங்களவன் சிங்களவனாக ஊடுருவி இருந்தால் தெரிந்திருக்கும் புலிகளின் வல்லமையை ... அனால் கேவலம் காசுக்காக தமிழனே புல்லுருவி ஆனதால் தான் இந்த இழப்பு ... உலகத்திலயே தன் சொந்த இனத்தை காட்டி கொடுத்த ஓரே இனம் தமிழன் தான் ... காக்கை வன்னியன்கள் ....
 
இதனை போய் வாலி அண்ணர் பெரிய உலக மகா சாதனை மாதிரி விமர்சனம் வேற .....
 
ம்ம் ... தேவையா இந்த பிழைப்பு ... அதுக்கு இன்னொரு பெயர் உண்டு ....

அட பார்ரா .... புத்திசாலிகளை ......

 

 

நீங்க சொன்னதை சற்று வித்தியாசமாக ஏன் நோக்க கூடாது? 

 

தன் இனத்தை தானே சந்சிக்கும் இனம் என்று சொன்னால் என்னும் பொருத்தமாக இருக்கும்.

 

 

இன்னும் தெளிவாக பார்த்தால் வரலாற்று காலம் தொட்டு தமிழன் எப்பவுமே தோற்றுப்போகும் அணியிலேயே இருக்கிறான், இருந்தாலும் இன்னும் பாடம் படித்ததாக தெரியவில்லை. 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

வீர பாண்டியன் காலத்தில் ஒரு எட்டப்பன், பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன், இப்போ எத்தனை பேரை கண்டிட்டம். இது எமது இனத்தின் சாபக்கேடு. தம்மைத்தாமே  புத்திசாலிகள் என்று தட்டிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதை பள்ளிக்கூடம் போய் பாஸ் பண்ணிணவன் சொல்லோணும்

 

நீங்கள் தான் அண்ணைக்கு காக்கைவன்னியன்.  :icon_mrgreen:

 

காட்டிக்குடுத்திட்டியள் எண்டு சொல்ல வாறன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் புலநாய்வாளர்கள் எந்தளவிற்கு புத்திசாலிகள் என்றால், பிரபாகரனுக்கு அடுத்த இடத்திலிருந்த கருணாவை பிரித்து, கூடவே 7000 போராளிகளையும் சண்டையின்றியே அகற்றிய அவர்கள் உண்மையாகவே புத்திசாலிகள்தான். புலிகளின் அழிவின் ஆரம்பமே கிழக்கிலிருந்துதான் தொடங்கிவைக்கப்பட்டது. அதற்கு துணை போனவர்கள் கூடப் புலிகள்தான். 

 

இதுபோலவே 1995 இலும் மனலாற்றில் புலிகளின் தாக்குதல் ஒன்று அவர்களின் சில போராளிகள் ஊடாகவே சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவு 180 போராளிகளின் அநியாயச் சாவு. 

 

இதுபோலவே 2009 ஆனந்தபுரத்திலும் தீபன், விதுஷா போன்ற புலிகளின் ஒப்பற்ற தளபதிகளையும் இன்னும் 700 போராளிகளையும்  காட்டிக் கொடுப்பு ஒன்றின் மூலம் ராணுவப் பொறிக்குள் சிக்கவைத்தது மட்டுமல்லாமல், அந்த தாக்குதலையும் முற்றான தோல்வியொன்றிற்குள் தள்ளிவிட்ட பெருமை உள்ளுக்குள் இருந்தே காட்டிக் கொடுத்த புலிகளால்தான் முடிந்தது.

 

காட்டிகொடுப்புகளின் சிகரமே புலிகளால்த்தான் நடத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்திற்குள் மற்றைய இயக்கங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், துரோகிகள் என்றழைப்பது வேடிக்கை. 

 

மற்றைய இயக்கங்களின் துரோகத்தனங்களும், காட்டிக் கொடுப்புகளும் புலிகளுக்கு சில இடர்களாக இருந்தனவே அன்றி, ஒருபோதுமே அவர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கவில்லை. ஆனால் அவர்களை முற்றாக அழித்தது கருணா என்கிற புலிகளின் இரண்டாவது நிலைத் தலைவராலும், இன்னும் இறுதிவரை பிரபாகரனுடன் கூடவே இருந்தவர்களாலும்தான். 

 

காட்டிக் கொடுப்பதும் துரோகத் தனமும் தமிழருடனே கூடப் பிறந்தது. இதற்கு புலிகளோ, புளொட்டோ, டெலோவோ, ஈ.பீ. டீ. பீ யோ இன்னும் யாரெல்லாமோ விதிவிலக்காக இருக்க முடியாது. 

நாட்டை விட்டு ஓடி வந்து தேசியம் என்று பீலா விடுபவர்களை விட்டு விட்டீர்கள் .

இவர்கள் செய்த துரோகம் எவரும் செய்ய முடியாது அது இன்னமும் தொடர்வதுதான்  இனத்தின் சாபம் .

  • தொடங்கியவர்

புலிகளுக்கு எதிரான யுத்த மூலோபாயங்களில் ஒன்றே ரவிராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா றவிராஜின் கொலையோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதும், கொலைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டதும் கடந்த பல வாரங்களின் பரபரப்பு செய்திகள்..

உண்மையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் ஆகியோரது கொலைகள் திடீரென இடம்பெற்ற கொலைகளோ, தற்செயலாக நடைபெற்றதோ அன்றி தனிநபர் முரண்பாட்டு, அல்லது தனிப்பட்ட கொலைகளோ அல்ல.

இவை யாவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்கும் போதே வகுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் யுத்த மூலோயங்களின் ஒரு பகுதி என்பது எனது நோக்கு….

இலங்கையில் 2002ல் ஆரம்பிக்கப்பட்ட சமாதான யுத்தம் 2005ன் இறுதிப்பகுதியில் முடிவுக்கு வர விடுதலைப் புலிகளால் யதார்த்தவாதி என கூறப்பட்டு, ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ, சமாதானத்தின் முறிவில் ஆயுதப் போரை ஆரம்பித்து இருந்தார்…

புலிகளுக்கு எதிரான இந்த ஆயுதப்போரை ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா கூட்டணி முன்னொருபோதும் இல்லாதவாறு நன்கு திட்டமிட்டு ஆரம்பித்திருந்தனர்…

ராஜபக்ஸக்களுக்கு முந்தைய அரசாங்கங்கள், புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்திருந்தன… ஆனால் ராஜபக்ஸக்கள் ஆயுத போரால் மட்டும் புலிகளை ஒடுக்கமுடியாது என்பதனை உணர்ந்திருந்தனர்…

அதனால் முதலில் தமது புலனாய்வுக் கட்டமைப்பில் உள்ள துவாரங்களை அடைத்து மிகப்பலம் பொருந்திய புலனாய்வுக் கட்டமைப்பை மேஜர் ஜென்றல் கப்பில கெந்தவிதாரண தலமையில் ஏற்படுத்தினர்….

தவிரவும் யுத்த தந்திரம் நடைமுறைத் தந்திரம் தொடர்பில் புலமைசார் நிபுணர்களின் பலமான ஆலோசனைகளை பெற்றிருந்தனர்… இந்த ஆலோசனைகள் சர்வதேச நாடுகளிடம் இருந்தும் பெறப்பட்டன….

அவற்றின் அடிப்படையில் மகிந்த – கோத்தா – சரத் பொன்சோகா இணைந்த மும்மூர்த்திகள் வகுத்த மூலோபாயத் திட்டங்கள் பல… அவற்றில், நான் அறிந்த அல்லது எனக்கு தெரிந்த – இங்கு நான் சொல்லப்போகும் திட்டங்களும் ஒரு பகுதியாகின்றன…

அதில் முதலாவது, தமிழீழ விடுதலைப் புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும், தெற்கிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்தும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்துவது முடியாவிடின் அவர்களை இல்லாது செய்வது.

இரண்டாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளுகளின் போராட்டம், தாக்குதல்கள், மக்களின் அவலங்கள், படையினரின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றை உடனுக்குடன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வெளிப்படுத்தி அரசாங்கத்திற்கு சங்கடங்களை ஏற்படுத்தும் தமிழ் ஊடகங்களை அடக்குவது…

மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கான விநியோகப் பாதைகளை முடக்குவது… இதில் மிக முக்கியமானது, வெளிநாடுகளில் இருந்து கொழும்பின் ஊடாக, வடக்கிற்கும் கிழக்கிற்கும் பணம் செல்லும் வழிகளையும் – அதனை செயற்படுத்தும் முகவர்களையும் இல்லாது ஒழித்தல்…

நான்காவது விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து, அவர்களின் முதலீடுகள், போக்குவரத்து நடவடிக்கைகளை செயற்படுத்துபவர்கள் – மற்றும் தெற்கில் புலிகளுக்காக வேவு பார்பவர்கள், தகவல்களை பரிமாறுபவர்கள், தாக்குதல்களுக்கு உதவுபவர்களுக்கு பணப் பரிமாற்றத்தை செய்பவர்கள் உள்ளிட்டோரை அழித்தல்.

ஐந்தாவது இலங்கையின் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தவாறு புலிகளிடம் பணம் பெற்று அவர்களுக்காக பணியாற்றிய பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை கொலை செய்தல்…

ஆறாவது புலிகளுடன் தொடர்புகளை பேணிய தெற்கின் பாதாள உலக ஜாம்பவான்களை இல்லாது ஒழித்தல்….

ஏழாவது இவவ்வாறான நடவடிக்கைகள் மூலம் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான புலிகளின் பலமான வலைப்பின்னலை முதலில் தகர்த்தெறிவது….

முதலான மூலோபாயத் திட்டங்களின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, முன்னாள் புலனாய்வுப் பிரதானி கப்பில ஹெந்தவிதாரண மற்றும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா உள்ளிட்டோர் புலிகளுக்கு எதிரான போரை ஆரம்பித்தனர்….

http://www.jvpnews.com/srilanka/112257.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.