Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

76 வயது மூதாட்டிக்கு கடுழிய ஆயுள் தண்டனை! மேல் நீதிமன்றம் (வீடியோ)

Featured Replies

c993942768468b0a92cf91306a302af2_L.jpg
 
போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல் மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
 
4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த மூதாட்டி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 
2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட ஒரு வருடமும் எட்டு மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
 
எனினும், தொடர்ந்து இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மேல் நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரியவினால் இன்று (10) வழங்கப்பட்டது.
 
இதன்போதே மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
மாளிகாவத்தை, கெத்தாராம பிரதேசத்தைச் சேர்ந்த சம்சூதீன் சம்சூன் நைமா என்ற மூதாட்டிக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 
 
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் மூதாட்டிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மூதாட்டியின் தங்கையின் மகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
 
வழக்கு விசாரணை நிறைவின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த குறித்த மூதாட்டியின் தங்கையின் மகள் மேலும் தகவல் தருகையில்!
''எமது எதிர் வீட்டார் வெளியே செல்லும்போது சாவியை எமது வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் பெரியம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். இதன்போது வந்த பொலிஸார் முன்வீட்டில் யார் இருக்கின்றனர் என்று விசாரித்துள்ளனர். அவர் யாரும் இல்லையெனக் கூறியுள்ளார். எனினும் சாவி இருப்பதாகக் கூறியுள்ளார். சாவியை எடுத்துச் சென்ற பொலிஸார் முன் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போதே போதைப் பொருள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே பெரியம்மாவும் கைதுசெய்யப்பட்டார். பெரியம்மாவிற்கு சில நேரம், சில விடயங்கள் நினைவில் இருப்பதும் இல்லை.'' என்று விபரித்தார்.
 
எவ்வாறாயினும், தண்டனை அளிக்கப்பட்ட குறித்த மூதாட்டி சிறை அதிகாரிகளினால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
 

Edited by Kashni

இந்த நீதிபதிக்கு விரைவில் சாவு வராதா? 

 

அப்படியே இந்த பாட்டி தான் செய்தாலும் அந்த கொளுத்த எலி எங்கே? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நீதிபதிக்கு விரைவில் சாவு வராதா? 

 

அப்படியே இந்த பாட்டி தான் செய்தாலும் அந்த கொளுத்த எலி எங்கே? 

 

 

சுகுமாரனை சுட்டுப்போட்டுவிட்டு போய்க்கொண்டிருப்பதைவிட்டு விட்டு எதற்கு இழுக்கின்றீர்கள் என்று எழுதியவை வரட்டும். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள்  மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது ????  :unsure: 

 

அவனவன், கொலை செய்துபோட்டு, கிலோ கணக்கில கடத்திக் கொண்டு, வெளியில இருகிறாங்கள்... :(

Edited by Nathamuni

சுகுமாரனை சுட்டுப்போட்டுவிட்டு போய்க்கொண்டிருப்பதைவிட்டு விட்டு எதற்கு இழுக்கின்றீர்கள் என்று எழுதியவை வரட்டும். :(  :(  :(

இதுக்கும் சுகுமாரனுக்கும் என்ன தொடர்பு?

இங்கு இவ் மூதாட்டி வைத்திருந்ததாக சொல்லப்பட்டும் அளவு இவர் ஒரு போதைப்பொருள் பாவனையாளர் என்பதைக் காட்டுகின்றது. ஆனால் சுகுமாரன், போதைப்பொருள் வியாபாரி மட்டுமல்ல அதன் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் (ring leader)

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் சுகுமாரனுக்கும் என்ன தொடர்பு?

இங்கு இவ் மூதாட்டி வைத்திருந்ததாக சொல்லப்பட்டும் அளவு இவர் ஒரு போதைப்பொருள் பாவனையாளர் என்பதைக் காட்டுகின்றது. ஆனால் சுகுமாரன், போதைப்பொருள் வியாபாரி மட்டுமல்ல அதன் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் (ring leader)

நன்றி

 

 

 

 

இவரும் வியாபாரத்துக்காகவே செய்ததாக நான் நினைக்கின்றேன்

 

தப்பின் அளவு சார்ந்தோ

வைத்திருக்கும் அளவு சார்ந்தோ

வருமானத்தின் அளவு சார்ந்தோ

தண்டனைகளை மாற்றமுடியுமா??

 

ஒருவர் உணவுக்காக செய்வார்

ஒருவர் பங்களாவுக்காக செய்வார்

அவரவர் தேவைகளை எவ்வாறு வகைப்படுத்துவது?

 

ஒரு கிராமத்தை அழிக்க இவரது வியாபாரம் போதும்

ஒரு நாட்டை அழிக்க சுகுமாரன்

உலகத்தையே அழிக்க பலபேர் இவர்களுக்கு மேல்..... :(

ஆனால் அவர்கள்...... :(  :(  :(

 

4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த மூதாட்டி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 

 

 

இதுக்கெல்லாமா ஆயுள் தண்டனை!
எங்கோ தவறு இருக்கிறது - நிச்சயம் இது இலங்கை நீதிமன்றத்தில் கூட இருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்துக்காகவே எழுதினேன்

 

ஆனால் அந்த அம்மாவின் வீடியோவைப்பார்த்ததும் அழுதுவிட்டேன்

மன்னிப்பீர்களாக.....

இவரும் வியாபாரத்துக்காகவே செய்ததாக நான் நினைக்கின்றேன்

 

தப்பின் அளவு சார்ந்தோ

வைத்திருக்கும் அளவு சார்ந்தோ

வருமானத்தின் அளவு சார்ந்தோ

தண்டனைகளை மாற்றமுடியுமா??

 

ஒருவர் உணவுக்காக செய்வார்

ஒருவர் பங்களாவுக்காக செய்வார்

அவரவர் தேவைகளை எவ்வாறு வகைப்படுத்துவது?

 

ஒரு கிராமத்தை அழிக்க இவரது வியாபாரம் போதும்

ஒரு நாட்டை அழிக்க சுகுமாரன்

உலகத்தையே அழிக்க பலபேர் இவர்களுக்கு மேல்..... :(

ஆனால் அவர்கள்...... :(  :(  :(

 

நன்றி

 

இந்த அம்மா யாருடைய பலிக்கடாவோ.

பல உலக நாடுகளில் சட்டமும் ஒழுங்கும் இப்படித்தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இதை மயூரனுடன் முடிச்சுப் போடுவது அபத்தம். மயூரன் தரப்பு, அவுஸ்ரேலிய அரசு என அனைவருமே அவர் ஒரு போதை வஸ்து கடத்தல் காரன் என்பதை மறுக்கவில்லை. தண்டனையை குறைக்கும் படியே கேட்டனர்.

ஆனால் இந்த பாட்டி அப்படியில்லை. முன்வீட்டு சாவியை வாங்கி வைத்ததை தவிர வேறு குற்றம் எதையும் செய்யவில்லை என்கிறா. தன் பயணப்பொதியில் குடுவுடன் பிடிபடுவதற்கும், முன் வீட்டில் குடு இருந்த போது சாவியை வைத்திருந்ததற்கும் வித்தியாசமுண்டு.

ஆனால் பொலீஸ் ஏன் முன்வீட்டில் இருந்தவரை தேடவில்லை? அல்லது முன் வீட்டில் யாரும் இல்லாமல் பாட்டிதான் இதை செய்தாரா?

ஒரு பக்க கதையை மட்டும் வைத்து சொல்ல முடியாது.

போதை மாபியாக்கள் 80 வயது கிழவி, 8 வயது பிள்ளை என எல்லோரையும் வேலைக்கு அமர்த்துவர்.

பாட்டிக்கு நினைவுமறதி என்றால் அதை வைத்தும் வாதாடி இருக்கலாம்.

மயூரன் போன்றவர்கள் கடத்தும் குடுவை பாவிப்பவர்களால்தான் வித்தியா போன்றவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாயினும் நாலைந்து கிராமுக்கெல்லாம் ஆயுள் தண்டனை கொடுப்பார்களா...! (சில சமயம் கிலோவாய் இருக்குமோ).

அதுவும் போக  76 வயசுப் பாட்டிக்கெல்லாம் இந்தத் தண்டனை  வரமா... சாபமா...!

  • கருத்துக்கள உறவுகள்

4 கிராம் என்பது அச்சுப் பிழை என்றே நினைக்கிறேன்.

மயூரன் போன்றவர்கள் கடத்தும் குடுவை பாவிப்பவர்களால்தான் வித்தியா போன்றவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

 

எனது பச்சை மேற்குறிப்பிட்ட கருத்துக்காக மட்டுமே. 

 

 

"இதை மயூரனுடன் முடிச்சுப் போடுவது அபத்தம்."

 

மற்றது விசுகு தான் குறிப்பிட்டது பிழை என்று ஏற்றுக்கொண்ட பின்னர் இவ்வசனத்தை உங்களிடமிருந்து நான் எதிர் பார்க்கவில்லை.

 

விசுகு

Posted Today, 07:46 PM

ஒரு கருத்துக்காகவே எழுதினேன்

 

ஆனால் அந்த அம்மாவின் வீடியோவைப்பார்த்ததும் அழுதுவிட்டேன்

மன்னிப்பீர்களாக.....

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,

விசுகு பாட்டியின் வீடியோவை பார்த்து செண்டிமெண்ட் ஆகினாரே தவிர, தான் சொன்ன ஒப்பீட்டை தவறென வாபஸ் பெறவில்லை. தவிரவும் அவர் கருத்தைத் தான் அபத்தம் என்றேனோ ஒழிய அவரை அபத்தன் என்று சொல்லவில்லை.

உண்மையில் இந்த பாட்டி முன்வீட்டில் குடுவை பதுக்கி வைத்திருந்திருப்பாரே ஆனால் - ஆயுள் தண்டனை சரியான தீர்ப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த பாட்டி முன்வீட்டில் குடுவை பதுக்கி வைத்திருந்திருப்பாரே ஆனால் - ஆயுள் தண்டனை சரியான தீர்ப்புத்தான்.

 

பாட்டியம்மாவுக்கு அறளை பெயர்ந்த மாதிரி இருக்குது. தனக்கு என்ன நடக்குது என்று விளங்கின மாதிரி தெரியவில்லை. இவரது அறியாமையை யாரோ பயன் படுத்திய மாதிரி அல்லவா இருக்கிறது.
 
சூறாவளி சொன்னது போல், இதுக்கு (4 கிராம் + 76 வயது ) ஆயுள் தண்டனை கொடுத்த, ஜட்ஜ் ஐயா கொஞ்சம் விளக்கம் குறைந்தவர் போல கிடக்குது.  :blink:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பில் நான் பிறந்து/வாழ்ந்த பகுதி ஓர் மோசமான கொரியா போன்ர பகுதியாகும். நிச்சயமாக இந்த பாட்டி ஓர் போதைவஸ்து பாவனையாளராக இருக்கமாட்டார். வழக்கமா என்ன நடக்கும் என்றால் போலீஸ் வரும் ஆனால் இவர்கள் வியாபரிகளை பிடிக்கா மாட்டார்கள். அங்கு இருக்கும் அப்பாவிகளையே பிடிப்பார்கள். 
 
பலமுறை நான் கூட‌பிடிப்பட்டு இருக்கின்றேன். சொந்த அனுபவத்தில் இதை சொல்கின்றேன். 
  • கருத்துக்கள உறவுகள்

 

பலமுறை நான் கூட‌பிடிப்பட்டு இருக்கின்றேன். சொந்த அனுபவத்தில் இதை சொல்கின்றேன். 

 

 

ஆகா, பீலா விடுராறையா, பீலா....  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கட்டையிலை போற வயசில் சிறை இங்கு பிடிக்கவேண்டியவனை காப்பாத்தி உள்ளது போலிஸ் வித்யாவின் முக்கிய குற்றவாளியை பாதுகாப்பாய் கொழும்பில் கொண்டுபோய் விடுவதும் போலீஸ்தான். :D  :icon_idea:

  • தொடங்கியவர்

4 கிராம் 77 மில்லிகிராம் என்பது சரியானதே. இலங்கை சட்டத்தின்படி 2 கிராமிற்கு அதிகமான போதைப் பொருளை வைத்திருப்பது கடுமையான குற்றமாகும்! அதற்கு குறைவான தொகையை வைத்திருப்பதும் குற்றம் தான். 2 கிராமிற்கு அதிகமாக வைத்திருப்பது ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும். இதைத் தான் இலங்கையில் உள்ள சட்டம் சொல்கிறது.

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

 

c993942768468b0a92cf91306a302af2_L.jpg
 
போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல் மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
 

 

நீதிபதி என்பவர்... சம்பந்தப் பட்டவரின் வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு... அவருக்கு மனிதாபிமான முறையில்.. தண்டனையை... மாற்றிக் கொடுக்க சந்தர்பம் உள்ளது.

 

இதனை விடுத்து, இப்படியான தீர்புக்களால்... மக்கள் வெறுத்து, தாங்களே சட்டத்தை கையில் எடுக்கும் போது.... வீண் விபரீதங்கள் ஏற்படுவதை தவிக்க முடியாது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்.... நீதிமன்றம் கேலிக்கும், கேள்விக்கும் உரிய இடமாக மாறிவிட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.