Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சமூகத்தை சந்தித்தார் கனேடிய பிரதமர் _Photo's

Featured Replies

கனடாவின் பிரதமர் மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர் அண்மையில் தனது அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைவிளக்க நிகழ்விற்கு கனடாவின் பிரதான நகரமாகிய டொரண்டோ வந்த போது விசேடமாக அழைக்கப்பட்ட கனேடிய தமிழ் சமூகத்தினருடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்தினார்.  கனேடிய பிரதமரின் அலுவலகத்தால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு விசேடமாக அழைக்கப்பட்ட கனேடிய தமிழ் சமூகத்தினர்    இன்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

 PM%20%20meeting%20-2.JPG

கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் கனடாவின் பாதுகாப்பு மற்றும் கனடாவிற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்திலிருந்து கனடிய மக்களையும் கனடாவின் நன்மதிப்பையும் பாதுகாப்பதற்காக தமது அரசாங்கம் உறுதியாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் தமது உரையில் விளக்கினார்.

 PM%20%20meeting%20-1.JPG

கனடிய தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் உரையாடுகையில் ”எனது தமிழ் மக்கள்”  என்று அன்பாக கூறிய பிரதமர் தனக்கும் தனது அரசிற்கும் ஆதரவு தந்துவரும் கனேடிய தமிழர்களிற்கு நன்றிகளை த் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களுக்கு எதிராக கனடிய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளிற்க்கு நன்றி தெரிவித்தனர். கனடியப் பிரதமர் மிக எளிமையாகவும் அன்பாகவும் தமிழ்ச் சமூகத்தினரும் நடந்து கொண்ட பண்பு அங்கு சமூகமளித்த  தமிழர்களின் கவனத்தை கவர்ந்தமை கவனிக்கக்கூடியதாக இருந்தது.

கனேடிய  வெளிவிவகார, பல்கலாச்சார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள்  தமிழ் பிரதிநிதிகளுடன்  பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்புக்களில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் புனர்வாழ்விற்கு நிதி உதவிகளை  வளங்குமாறு கோரிகையை முன்வைத்தனர். அத்துடன் இலங்கையில் தமிழ் மக்களுகெதிராக நடந்த  மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச விசாரணைக்கு தொடர்ச்சியான ஆழுத்தங்களை  பிரயோகிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

http://www.pathivu.com/news/40858/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கனேடிய தமிழ்ச் சமூகம் சம்பந்தர் ,சுமத்திரன் சார்பானதா?அல்லது தமிழ்மக்கள் சார்பானதா? இப்ப எதற்கெடுத்தாலும் சந்தேகப்படவேண்டி உள்ளது.,,,,,,,,,

கனடாவிலி இருக்கிற எங்கடை ஆக்கள் என்னதான் கோட்டு சூட்டை மாற்றினாலும் பார்த்தால் தமிழ் பட வில்லன்கள் போலை இருக்கு.  :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

அனைத்து உறவுகளுக்கும் பிரதமருக்கும் நன்றிகள்

உன்னைச் சொல்லீக் குற்றமில்லை

எனனைச் சொல்லிக் குற்றமில்லை

தேர்தல் செய்யும் குற்றமடி - வரும் 

தேர்தல் செய்யும் குற்றமடி

 

(கன்டாவில் சில மாதங்களில் பொதுத் தேர்தல் வருகிறது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கனேடிய தமிழ்ச் சமூகம் சம்பந்தர் ,சுமத்திரன் சார்பானதா?அல்லது தமிழ்மக்கள் சார்பானதா? இப்ப எதற்கெடுத்தாலும் சந்தேகப்படவேண்டி உள்ளது.,,,,,,,,,

 

சம்பந்தனும் சுமந்திரனும் இன்னொரு உலகம் எண்டதை சொல்லாமல் சொல்ல வாறியள்.... :icon_mrgreen:

கனடா, லண்டன் நியோர்க் என்று திருப்திபட வேண்டியான் 

 

அனாலும் தீர்வைத்தான் யாரும் தரமட்டினமாம். 

கனேடிய நாட்டின் பிரதமாராக கார்பரை சந்திப்பதில் எதுவித தவறுமில்லை ஆனால் அவர் கொள்கைகளை பல கொன்சர்வேர்டிவ் கட்சி ஆட்களே இப்போ நடப்பது கொன்சர்வ்ர்டிவ் ஆட்சியில்லை கார்ப்பர் ஆட்சி என்கின்றார்கள் .

பொருளாதரத்தில் கனடா மிக ஸ்திரமான நிலையில் இருந்தாலும் இவர் ஒரு மிக பழமைவாதி .வெளிநாட்டு கொள்கையும் சரி ,குடிவரவாளர்களின் நிலைபாட்டிலும் சரி அதி உச்ச இறுக்கநிலையை கடைப்பிடிக்கின்றார் .

எம்மவர் தேர்தலில் சீட் கிடைத்தால் காணும் அல்லது பிரதமருடன் படம் எடுத்தால் காணும் எனற நிலைபாடுதான் அவர்களின் அரசியல் பற்றி எதுவித அக்கறையும் இல்லை .

இப்பவே இந்த அரசால் எம்மவர் பலர் படும் பாட்டில் வித்தியாசம் தெரியுது இன்னும் சில வருடங்களில் நிலைமை மிக மோசமாகும் என்றுதான் நம்புகின்றேன் . 

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய நாட்டின் பிரதமாராக கார்பரை சந்திப்பதில் எதுவித தவறுமில்லை ஆனால் அவர் கொள்கைகளை பல கொன்சர்வேர்டிவ் கட்சி ஆட்களே இப்போ நடப்பது கொன்சர்வ்ர்டிவ் ஆட்சியில்லை கார்ப்பர் ஆட்சி என்கின்றார்கள் .

பொருளாதரத்தில் கனடா மிக ஸ்திரமான நிலையில் இருந்தாலும் இவர் ஒரு மிக பழமைவாதி .வெளிநாட்டு கொள்கையும் சரி ,குடிவரவாளர்களின் நிலைபாட்டிலும் சரி அதி உச்ச இறுக்கநிலையை கடைப்பிடிக்கின்றார் .

எம்மவர் தேர்தலில் சீட் கிடைத்தால் காணும் அல்லது பிரதமருடன் படம் எடுத்தால் காணும் எனற நிலைபாடுதான் அவர்களின் அரசியல் பற்றி எதுவித அக்கறையும் இல்லை .

இப்பவே இந்த அரசால் எம்மவர் பலர் படும் பாட்டில் வித்தியாசம் தெரியுது இன்னும் சில வருடங்களில் நிலைமை மிக மோசமாகும் என்றுதான் நம்புகின்றேன் .

ஜஸ்டின் ருடோ பற்றி அடிக்கடி கதைக்கிறார்கள்.அவரின் கொள்கைகள் எமது மக்களுக்கு சாதகமானதா??

சம்பந்தனும் சுமந்திரனும் இன்னொரு உலகம் எண்டதை சொல்லாமல் சொல்ல வாறியள்.... :icon_mrgreen:

 

சீச்சீ
கனடா எங்களை பயங்கரவாதிகள் என்று கூறவில்லை.
எங்களுக்கெதிராக ஆயுத வழங்கல் செய்யவில்லை.
 
காசு வேணுமே.
 
என்னவாவது பண்ணித் தொலைக்கட்டும். எமக்கு தேவை பணம், இருக்க ஒரு இடம். இதுக்கெல்லாமா கவலைப்படும் தமிழர் சமுதாயம்.
 
நாங்கெல்லாம் சும்மா பொழுதுபோக்க கணனியில் தட்டுபவர்கள்.
 
மறுபடியும் இந்த சம் சும்மிற்குத்தான் மக்கள் முட்டாள்தனமாக வாக்களிக்கப் போகின்றார்கள். என்னதான் பண்ணலாம்?

 

Edited by ஜீவன் சிவா

கனடாவிலி இருக்கிற எங்கடை ஆக்கள் என்னதான் கோட்டு சூட்டை மாற்றினாலும் பார்த்தால் தமிழ் பட வில்லன்கள் போலை இருக்கு.  :D  :D  :lol:

 

கோட்டுப்போட்டால் தான் என்ன தமிழ்ஸ் தானே!

 

இவர்களில் அனேகமானவர்கள் ரொரன்டோ நகரில்தான் வசிக்கிறார்கள். இவர்களின் முக்கியதொழில் வியாபாரம்.ஒருலட்சத்தி நாற்பதாயிரம் மக்களின் மொத்த வியாபாரிகள்.இப்போ பல படிகளைத்தாண்டி வேற்று இன மக்களிடத்திலும் புகழ் பெற்று விட்டார்கள்.இது ஒரு புறமிருக்க மக்களுக்கு என்று ஒரு தேவையிருக்கின்றது.அவர்களுக்கு பல குறைகள் இருக்கின்றது.இந்தக்குறைகளை அரசியல் வாதிகளிடம் எடுத்து செல்வது இவர்களின் கடமை. ஆனால் எடுத்து செல்ல மாட்டார்கள்.காரணம் இவர்கள் தங்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவுடனும் கணனி அறிவுடனும் மக்களின் குறைகளை வேறு விதமாக கையாண்டு தங்களின் உழைப்பை நிரந்தரப் படுத்தி கொள்வார்கள்.இதனால் தான் ஆரம்பத்தில் வியாபாரிகள் என்றேன்.புதிதாக வரும் குடிவரவாளருக்கு கதை எழுத 500.00 ஆரம்ப நிலை.அகதிகளுக்கான உதவிப் பணம் எடுக்க நேர்முகப்பரீட்சைக்கு திகதி எடுக்க 50.00. படிவங்கள் பூர்த்தி செய்ய வேறு.அகதியாய் வருபவர் வரும் போது இவர்களுக்குரிய கட்டணத்தை கையில் கொண்டு வர வேண்டும். சாரதியப்பயிற்சிக்கு நேரடியாகச் சென்றால் திகதி கிடைக்காது.இவர்களிடம் திகதி கிடைக்கும்.50 முதல் 100 வரை வசூலிப்பார்கள்.(தங்கள் பணத்தைச் செலுத்தி ஐந்து பத்து இடங்களை எடுத்து வைத்திருப்பார்கள்).வீடு விற்பனையிலும் மோசடிகள் உண்டு. நிரந்தர வேலையில்லாதவர்களிடம்  வங்கிக்கு வரி செலுத்துவதாக கூறி 15,000 த்தில் இருந்து வீட்டின் விலையைப் பொறுத்து அதிகரிக்கும். வங்கிக்கு செலுத்தமாட்டார்கள்.பாவம் பாசை தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்.இதை விடப் பெரிய மோசடி வாகன விபத்துக்கு வழங்கப்படும் இழப்பீடு.இதில் தான் அனேகமானவர்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.இதில் பலருக்கு வலியும் வேதனையுடனும் சரியான இழப்பீடு கிடைக்காது.காப்புறுதி நிறுவனம் வழங்கினாலும் அப்புக்காத்தும் ஆங்கில கணனி அறிவும் தெரிந்த ஒரு சிலரும் பசியாறி விடுவார்கள்.இவர்கள் கோட்டுப்போட்டால் தான் என்ன தமிழ்ஸ் தானே!
 
 நீங்கள் எந்தவொரு மூன்றாம் உலக நாட்டுக்கு போனாலும் உங்களுக்கு என்ன தொழிற் பெயர் உண்டோ அது மட்டும் தான் உங்கள் வேலை.உதாரணத்திற்கு சமையல் காரர் என்றால் சமைப்பது மட்டும் தான் கனடாவில் கோப்பையும் கழுவவும் வேண்டும் கூட்டவும் வேண்டும்.அதே போல மேற்பார்வையாளர் அதை மட்டும் செய்ய மாட்டார்.வேலையாட்களை கழுதையைப்போல வாட்டி எடுத்துவிடுவார்.எல்லாம் கேவலம் ஒரு சில நூறுக்கள் போனஸுக்காகவே வெளி நாடுகளில் மோசமான நாடு கனடாவாகத்தான் இருக்கும்.இலங்கையர் மட்டுமில்லை எல்லா வந்தான் வரத்தானும் இதையே தான் செய்கின்றார்கள்.கனடாவின் கியுபெக் அல்பேட்டா உட்பட ஒரு சில மாகாணங்களில் வாகனக் காப்புறுதியில் வாகன இழப்பீடு மட்டும் தனியார் காப்புறுதி நிறுவனங்களிடமும் மனித இழப்பீடு அரசின் வசமும் உண்டு.இப்படியிருப்பதால் மாதாந்தக்கட்டுப்பணமும் குறைவு பாதிப்புற்றவருக்கு வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரையுடன் அவர்களுக்கான இழப்பீடு அவர்களுக்கு நேரடியாகவே கிடைத்துவிடும்.அல்லது அரசே சாகும் வரை பார்த்துகொள்ளும்.இப்படி பல விடங்கள் உண்டு.யாரும் கண்டுக்கவே மாட்டார்கள்.
 
                                                                                                 ரொரன்டோவில் ஸ்காபுரோ தொகுதி லிபரலின் கோட்டையாகவிருந்தது.தற்போது அதை உடைக்க கொன்சவேற்றிவ் கட்சிக்கு ஒரு சில தமிழ் ஊடகங்களும் ஒரு பகுதி மக்களும் சேவையாற்றுகின்றனர்.இங்கே 2009 வரை விரும்பியோ விரும்பாமலோ ஒரே குடையின் கீழ் பயணித்தவர்கள் தற்போது மூன்று பிரிவுகளாகியுள்ளது வேதனைக்கு உரிய விடயம்.2008ல் இதே கன்சவேற்றிவ் கட்சிதான் எங்கோ இருந்து யாரோ இட்ட கட்டளைக்காக ஒட்டு மொத்த தமிழரும் ஒட்டாவாவில் ஒன்று கூடியிருக்கிறீர்களே" என்று வினவியது.இன்று சந்தோசப்படுவார்கள் போல!

இந்த C-24 சட்டம் இங்கே பிறந்த பிரஜைக்கும் வந்து குடியேறி பிரஜா உரிமை பெற்றவருக்குமிடையில் வேறுபாட்டை உண்டாக்கி இரண்டு நிலைமட்ட பிரஜைகளை உருவாக்குகிற‌து. இது ஸ்டீவன் ஹர்பரின் இனவாத சிந்தனையில் உருவான சட்டம் மட்டுமல்ல அவரது சர்வாதிகார மனித உரிமை மீறலுக்கான சட்ட அமுலாக்கலுமாகும். இதற்க்கு முன் கொண்டுவந்த‌ Bill C-51 சட்டமும் அத்தகையதே. இச்சட்டங்கள் அடுத்தடுத்து கொண்டு வரும் நோக்கை உணர்ந்து கொள்வது கடினமல்ல. நாட்டு மக்கள் எல்லோரையும் ஒன்று கூட்டாமல் பிரித்து வேறு படுத்தி ஆளும் "ஹார்பரின்"ஆட்சிசெய்யும் பாணி இது. 
C-24 உருவாக்க காரணம் குடியேற்றவாசிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் குடியுரிமை பெற்றோர் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், ஏமாற்றுக்காரர்கள் என்ற சிந்தனையின் அடிப்படையே. 
முதலில் சட்ட மூலத்தை பார்ப்போம்.
Under the old system, citizenship has always been secure. Whether born in Canada or not, once a person was granted Canadian citizenship, his/her citizenship was secure. Unless he/she obtained citizenship by fraud, no one could revoke it. Even then, a Federal Court judge made that decision after a full court hearing. Under the new law, citizenship can be rescinded for reasons other than fraud, the decision will be made by a citizenship officer, and there will be no opportunity for a live hearing or an appeal. 
இங்கு அதிகாரம் நீதிபதியின் கையிலிருந்து குடிவரவு அதிகாரிக்கு மாறுகிறது. சர்வாதிகாரத்திற்க்கும் மனித உரிமை மீறலுக்கும் வழிவகுக்கிறது. 
New law divides Canadians into two classes: First-class Canadians with no other citizenship or possibility of obtaining another one, and second-class Canadians who have dual citizenship or the possibility of dual citizenship. Second-class citizens are at risk of losing their citizenship and their right to live in Canada could be taken away under certain circumstances if the citizenship officer believes they do not intend to live in Canada or if they decide to move to another country to study or to work and second-class citizens may lose their Canadian citizenship for criminal conviction in another country. On the other hand, Canadian-born citizens would not lose their right to citizenship under such conditions. 
மேலோட்டமாக பார்த்தால் இதில் இனவாதமில்லையே, எல்லா குடியேற்றவாசிகளுக்கும் ஒரே சட்டம்தான் போல தோன்றும். அப்பீல் இல்லாவிடத்து நீதித்துறையிலிருந்து கண்ஸெவேடிவ் கட்சியால் நியமிக்கப்படும் குடிவரவு அதிகாரியின் கைக்கு அதிகாரம் போவது யாரைப் பாதிக்கும்? ஹார்பரின் ஆதரவு கூட்டமான வெள்ளை இன மத அடிப்படைவாதிகள் தான் இங்கு அதிகம் இரண்டு தலை முறைக்கு மேல் வாழுகிறார்கள். இது வரை காலமும் எனது அலுவலகத்திலோ, வேறு எங்கிலுமோ என்னை வெள்ளை இனத்தவர் “where are you from” என்று கேட்டால் நீர் யார் கேட்பது என்ற தோறணையுடன் "கனேடியன்" என்று கடுமையாக சொல்வதுண்டு. இனிமேல் "முதலாம் கனேடியன்" என்று பெருமையாகவோ அல்லது "இரண்டாம் கனேடியன்" என்று தயங்கி தயங்கியோ சொல்ல நேரிடும். 
மேலும் பல வயோதிப குடிவரவாளர்களுக்கு குடிவரவு ப‌ரீட்ச்சை தேறுவதும் கடினமாக்கப்பட்டுள்ளது. 
Under the new system, all applicants aged 14 to 64 must pass language and Canada knowledge tests in English or French. Previously it was 18 to 55. 
இது தமது பெற்றோரை தம்மிடம் வரவழைக்க எண்ணு வோருக்கு பெரும் பாதகமாக முடியும். இப்படி செய்ய முயலுபவர்கள் பெரும்பாலும் தமிழர் உட்பட மூன்றாம் உலக‌ நாட்டை சேர்ந்தவர்களே.
இந்த சட்டம் இலங்கையில் இந்திய வம்சாவழி தமிழரின் ஏற்கெனவே இருந்த வாக்குரிமையை இல்லாது செய்ததை ஒத்தது. ஈழத்தில் உரிமை கோரும் பல கநேடிய தமிழ‌ர்கள் சுறணைகெட்டு கன்ஸவேடிவ் கட்சிக்கு ஆதரவளிப்பது மட்டுமல்ல அந்தகட்சியில் போட்டிபோடவும் செய்கிறார்கள்.


-நண்பர் ஆனந்தராமின் முக புத்தககத்தில் இருந்து .

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, லண்டன் நியோர்க் என்று திருப்திபட வேண்டியான் 

 

அனாலும் தீர்வைத்தான் யாரும் தரமட்டினமாம்.

யாழ்ப்பானத்தில் முன்னொரு காலத்தில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.

ஒருமுறை கை நீட்டி "ஐயா பசிக்கிது. எதாவது சில்லறை இருந்தால் குடுங்க ஐயா" என்று கெஞ்சினார். நானும் இரக்கப்பட்டு கால்சட்டை பையை துளாவி கண்டுபிடித்த ஐந்து சதத்தை கொடுத்தேன். அதை அவர் கோபத்துடன் குப்பை மேட்டில் எறிந்து விட்டு மற்றப்பக்கம் திரும்பி நின்று கொண்டார்.

இனியும் யாரும் பிச்சை தரமாட்டார்கள். அவர்களை குறைசொல்லாதீர்கள்.

தந்த பிச்சை வேண்டாம் என்றால் தாராளமாக குப்பை மேட்டில் எறியலாம். ஆனால் வேறு எதுவும் கிடைக்காது.

ஜஸ்டின் ருடோ பற்றி அடிக்கடி கதைக்கிறார்கள்.அவரின் கொள்கைகள் எமது மக்களுக்கு சாதகமானதா??

கனடாவின் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால்,தேர்தல் முறையை மாற்றுவேன்-லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ.

justi-judo-293x150.jpg

 

 

கனடாவில் இந்த வருடம் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், கனடாவின் தேர்தல் முறையை மாற்றப்போவதாக லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.தொகுதி அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தெரிவு செய்யப்படும் தற்போதைய முறையின் கீழ், 40 சதவீதத்திலும் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றக் குழுவொன்றை அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் தாம் பதவியேற்றுப் பதினெட்டு மாதங்களுக்குள் தேர்தல் முறையை மாற்றும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுமென அவர் கூறினார்.தேர்தலில் கட்டாயம் வாக்களிக்கவேண்டுமென்ற விதியை நடைமுறைப்படுத்துவது, மற்றும் இலத்திரணியல் வாக்களிப்பு என்பன குறித்தும் அந்தக் குழு ஆராயுமென ட்ரூடோ தெரிவித்தார்.

தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் அரசியல் கட்சிகள் செலவிடும் பணத்திற்கு வரையறைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கூறிய அவர், அமைச்சரவையில் ஆண்களும் பெண்களும் சம அளவாக இடம்பெறுவார்களெனவும் தெரிவித்தார்.

- See more at: http://www.canadamirror.com/canada/44652.html#sthash.CQB0Qptm.dpuf

 

கன்சவேட்டிவ் அரசால் இயற்றப்பட்ட சட்டம் தனது கட்சிக்கு பாதிப்பு இல்லாவிட்டால் புதிதாக வரும் கட்சி அதில் தொட்டுக்கூடப் பார்க்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.