Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவானில் வைத்து குலுங்கியது ஸ்ரீலங்கன் விமானம் ; ஐவர் காயம்

Featured Replies

பாரிஸிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நடுவானில் வைத்து குலுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

எனினும் விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிக்கம் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவன பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

193 பயணிகளுடன் பாரிஸிலிருந்து இன்று அதிகாலை பயணித்த யு.எல். 564 ரக விமானம் நடுவானில் வைத்து குலுங்கியது. இதில் விமானப் பணியாளர்கள் ஐவரில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, இருவர் படுகாயமடைந்தனர்.

குறித்த இருவரும் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

925005296-2887690-2_s-big-600x323.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/44747.html#sthash.6tf2YRsS.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
சொல்ல சொல்ல கேட்க்காமல் நேரடி விமானம்  air லங்கா அதிலை தான் ஊர் போவன் அடம்பிடிச்சு போன நண்பனுக்கு சங்கூதி வழியனுப்பின பின் அந்த சங்கு சும்மாதான் இருக்கு இப்படி கிட்டடியில் அதுக்கு வேலை வரும் எண்டு கனவிலையும் நினக்கவில்லை .
:icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான செய்தியாக இருந்தால் கன பேருக்கு  டிக்கு டிக்கு என்று அடிக்கும்.

சம்மர்  கொலிடே வேறை :o  

  • கருத்துக்கள உறவுகள்

Air turbulence என்பது விமாப் பறப்பில் சர்வசாதாரணம். இதில் மாட்டுப்படாத வகையில் போவதெண்டால் மாட்டு வண்டியில் தான் போகணும். அடிக்கடி பிளேனில போறவைக்கு நான் சொல்லுவது விளங்கும்.

  • தொடங்கியவர்

  193 பயணிகளுடன் வானில் தள்ளாடும் ஶ்ரீலங்கன் விமானத்தின் திகில் காட்சிகள்.    

News1st ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தாழமுக்கத்தில் சிக்கியது

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Air turbulence என்பது விமாப் பறப்பில் சர்வசாதாரணம். இதில் மாட்டுப்படாத வகையில் போவதெண்டால் மாட்டு வண்டியில் தான் போகணும். அடிக்கடி பிளேனில போறவைக்கு நான் சொல்லுவது விளங்கும்.

அப்ப சரி ... ரெபுலந்தில பயணிகளுக்கு / பணியாளருக்கு காயம் வாறது நார்மல்.

மீண்டும் இங்கே பிழையான தகவல் , எல்லாம் தெரிந்தவர்  போல்  எழுதப்படுள்ளது.  பணியாளர்கள் காயம் அடையும் வகையிலான காற்று அழுத்த மண்டல குழப்பம்  சாதரணமாக நிகழ்வதில்லை . இதில் விமானப் பாதுகாப்பு சம்பந்தமான நடைமுறைச்  செயற்பாடுகள் அல்லது விமானியின் கவனக் குறைவு அல்லது காலநிலை ராடார் முதலியவற்றில் நடந்திருக்கக் கூடிய கோளாறு என்பனவற்றி ன் மூலமே  இத் தகைய சம்பவம் சாத்தியமாகும்.   

  • தொடங்கியவர்

Air turbulence என்பது விமாப் பறப்பில் சர்வசாதாரணம். இதில் மாட்டுப்படாத வகையில் போவதெண்டால் மாட்டு வண்டியில் தான் போகணும். அடிக்கடி பிளேனில போறவைக்கு நான் சொல்லுவது விளங்கும்.

என்ன நீங்கள் பிரயோககணித ஆசிரியர் படிப்பிப்பதைப் போல் சுலபமாக கூறிவிட்டீர்கள் ஒரு காற்றுப்பைக்குள் மாட்டி ஒரே தடவையாக 10 ஆயிரம் அடி கீழிறங்கினால்..... (இரண்டு வருடங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் விமானம் கேரளப்பகுதியில் நடந்தது) சில வருடங்களுக்கு முன்பு எயர் கனடா விமானம் குத்துகரணம் அடித்தது)சிறிய அளவில் வருவது இயற்கைதான். பெரியளவில் வந்தால் நீங்களாயினும் நானாயினும் தெரியாத கடவுளின் பெயரையெல்லாம் பிரார்த்தனை செய்வோம். இப்படியான சந்தர்ப்பத்தில் தான் கடவுள் சந்தோசப்படுவார்.காரணம் அனைவரும் ஒரு முகமான கூட்டுப்பிரார்த்தனை செய்வார்கள்

இது பொழிப்புக்கு  விமர்சிக்கும் விடயம் அல்ல .. விமானிகள் கவனமாக இருக்க வேண்டும் அவர்களை நம்பி எத்தனை மக்களின் உயிர்கள் எத்தனை எத்தனை ஆசைகள் கனவுகளுடன் ...

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இங்கே பிழையான தகவல் , எல்லாம் தெரிந்தவர்  போல்  எழுதப்படுள்ளது.  பணியாளர்கள் காயம் அடையும் வகையிலான காற்று அழுத்த மண்டல குழப்பம்  சாதரணமாக நிகழ்வதில்லை . இதில் விமானப் பாதுகாப்பு சம்பந்தமான நடைமுறைச்  செயற்பாடுகள் அல்லது விமானியின் கவனக் குறைவு அல்லது காலநிலை ராடார் முதலியவற்றில் நடந்திருக்கக் கூடிய கோளாறு என்பனவற்றி ன் மூலமே  இத் தகைய சம்பவம் சாத்தியமாகும்.   

நாரதர் சொல்வதே சரி.

பயணிகள், பணியாளர்... காயப்பட்டால் அது செய்தி. சாதாரண நிகழ்வு அல்ல.

இங்கு... வழக்கம் போல், கோசான்... ஸ்ரீலங்காவுக்கும், "ஸ்ரீலங்கா எயார் லைன்சுக்கும்" வெள்ளையடிக்க.... முனைகிறார். :D

Edited by தமிழ் சிறி

உற்பத்தி நிறுத்தப்பட்ட ஓய்வு பெரும் வயதில் இருக்கும் விமானங்களையே இலங்கை விமான நிறுவனம் வாடகைக்கு பெறுகின்றது.

பாதுகாப்பு என்ற தரப்படுத்தல் இருந்தால் இலங்கை விமானம் எந்த இடத்தில் இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளது.

இலங்கை விமானம் ஆபத்தில் என்றவுடன் தமிழருக்கு வரும் வருத்தத்தை பார்த்தால் புறக்கணிப்பு வெறும் பிரச்சாரம் மாத்திரம் தான் போல உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

தன் எல்லாம் தெரிந்தவர் ஈகோவுக்கு ஆபத்து வந்துவிடுமோ என யாருக்கும் பயம் வேண்டாம்.

உங்கள் பேச்சை கேட்டு ஆஹா ஓகோ போட ஒரு வில்லுப் பாட்டு கோளயாக் கூட்டம் எப்பவும் இருக்கும் :)

Air turbulence தான் சாதாரண விடயம் என எழுதினேனே தவிர air turbulence resulting in injury ஐ சாதாரண விடயம் என்று எழுதவில்லை.

சொறிலங்காவில் படித்த தத்து பித்து ஆங்கிலத்துக்கு இது விளங்காது தான்.

உற்பத்தி நிறுத்தப்பட்ட ஓய்வு பெரும் வயதில் இருக்கும் விமானங்களையே இலங்கை விமான நிறுவனம் வாடகைக்கு பெறுகின்றது.

பாதுகாப்பு என்ற தரப்படுத்தல் இருந்தால் இலங்கை விமானம் எந்த இடத்தில் இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளது.

இலங்கை விமானம் ஆபத்தில் என்றவுடன் தமிழருக்கு வரும் வருத்தத்தை பார்த்தால் புறக்கணிப்பு வெறும் பிரச்சாரம் மாத்திரம் தான் போல உள்ளது.

இல்லை இவை புதிய விமானம் தான் ஆனால் என்ன 1994 இல் வாங்கிய அ340 ரக விமானமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சான் ஏன் பீட்டர் விடாமல் எழுத்த்தெரீயாதா?

மற்றவர்களை பிழைபிடிக்க முதல் உங்களைத். திருத்தப் பாருங்கள். நிறைகுடம் தழும்பது குறைகூடங்கள் ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Air turbulence தான் சாதாரண விடயம் என எழுதினேனே தவிர air turbulence resulting in injury ஐ சாதாரண விடயம் என்று எழுதவில்லை.

சொறிலங்காவில் படித்த தத்து பித்து ஆங்கிலத்துக்கு இது விளங்காது தான்.

எங்களுக்கு ஒட்டும் தெரியாது பேஸ்...நீங்க சொன்னதை நம்பீட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்

விமானங்களில் அடிக்கடி பறக்கின்றவர்களுக்கு

இந்த விடயம் மிகவும் பரிச்சயமாக இருக்கும்

அவ் அவ் நாடுகளில் இவை இடம்பெறும் போது

அவ் நாடுகளின் ஊடகங்கள் மட்டுமே அத் தகவல்களை பிரசுரிக்கும்

இலங்கை சார்ந்த விமான நிறுவனம் என்பதால்

இச் செய்தி ஆங்கில ஊடகங்களில் வெளியாகி

இப்ப தமிழ் ஊடகங்களுக்கும் எட்டியுள்ளது ஆனால்

இதில் உள்ள கூத்து என்னவென்றால்

இதை காட்டி பயமுறுத்தி

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை

புறக்கணி சிறிலங்கா கோட்பாட்டுக்கு ஏற்ப

சிறிலங்கா எயார் லைனை புறக்கணிக்க

செய்ய விழுந்தடிக்கினம்

வேடிக்கை என்னவென்றால்

புறக்கணி சிறிலங்கா

என்ற போராட்டத்தின்

முனை மழுங்கச் செய்ததே

இவ் தமிழ் தேசிய வியாபாரிகள் தான்

சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புறக்கணி

என்று வெளிநாட்டுகாரர்களுக்கு சொல்லிக் கொண்டு

தங்கள் கடை முழுக்க பரப்பி வித்தது /

அதுவும் காலாவதியான சாமாங்களை பொய் லேபல் ஒட்டி வித்தது,

ஊரில் விலை கம்மி என்று உடுப்பு அனுப்பி வைக்கச் சொல்லி

அதை போட்டுக்கொண்டு இலங்கை

ஏற்றுமதி ஆடைகளை விற்கும்

கடைகளுக்கு முன் கொடி பிடிச்சு

பேய்ப்பட்டம் கட்டியது

எல்லாம் உந்த ஆட்கள்தான்

இவர்கள் செய்த கூத்தெல்லாம்

மக்களுக்கு தெரிஞ்சு இவர்களை

சனம் புறக்கணிக்க

இப்ப இலங்கை விமானத்தில போகாதேங்கோ...அது குலுங்குது

என்று பயமுறுத்திப் பார்க்கினம்..

சொந்த வியாபார நலனுக்காக

புறக்கணி சிறிலங்கா போராட்த்தினை

நீர்த்துப் போகச் செய்தவர்கள்

இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கினம்..

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிமார்:

நான் அமேரிக்காவின் ஒரு கோடிக்கை இருக்கிறன், சொந்த பந்தம் எல்லாம் கனடாவில், 2 மாதம் - 3 மாதத்திற்கு ஒருக்கா போறனான், ஒருக்காலும் நடக்கவில்லை- இப்படி ஆக்கள் காயபட்டது. இதுக்கு மேல நம்புகிறதும் நம்பாத்தும் உங்கட விருப்பம்.

அப்ப அண்ணை

குடும்பம் குட்டி சுற்றம் பக்கம் என்று

எல்லாரும் தாயகத்தினை விட்டு வந்து  செட்டில் ஆனபிறகுதான் 

உந்த புறக்கணி சிறிலங்கா கோஷம் போடுகின்றீர்கள் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அண்ணை

குடும்பம் குட்டி சுற்றம் பக்கம் என்று

எல்லாரும் தாயகத்தினை விட்டு வந்து செட்டில் ஆனபிறகுதான்

உந்த புறக்கணி சிறிலங்கா கோஷம் போடுகின்றீர்கள் போல

ஏன் இந்த விதண்டாவாதம்? சொன்னதை சரியோ என்று பார்த்திட்டு போகாமல்..சொல்லாத்திற்க்கு விளக்கம் கேட்டுக்கொண்டு ...:(
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சிறீலங்கன் எயார் லைன்சில் எப்போதும் பறந்ததில்லை. பறக்கப் போவதும் இல்லை.

இதில் விமானிகளின் அசட்டை... விமானத்தில் தொழில்நுட்ப வசதிக் குறைவின்மை போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்படனும். சாதாரண ஆட்டம் என்பது வேறு.. இது வழமையான ஒன்றல்ல. இதனை விமானிகள் தகுந்த எச்சரிக்கை கருவிகளை விமானம் கொண்டிருப்பின் எதிர்வு கூறல் மூலம் தவிர்க்க வாய்ப்புள்ளது.

இப்படியான..அதி குலுக்கலில் கழன்று கொட்டின்ட விமானங்களும் உண்டு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த விதண்டாவாதம்? சொன்னதை சரியோ என்று பார்த்திட்டு போகாமல்..சொல்லாத்திற்க்கு விளக்கம் கேட்டுக்கொண்டு ... :(

எதை விதண்டாவாதம் என்கின்றீர்கள்?

அடிக்கடி விமானப் பயணம் செய்யும் ஒருவர்  Turbulence

இனால் பயணிகள் காயம் அடைவது இல்லை என்று

எழுதும் போது

அதை அப்படியே நம்பி ஏற்று /

அதை உண்மை என்று நினைச்சு பதில் எழுத வேண்டுமா?

அட போங்க சார்

இந்த வீடியோக்களையும்

கிராபிக்ஸ் என்பர்கள் ...

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் என்று வரும் போது தமிழர்கள் சிங்களவர்கள் வெள்ளைக்கார சுற்றுலாப்பயணிகள் என்று எல்லோரும் அடங்குவர். அவர்கள் மீதான அக்கறை என்பது ஒரு விமான நிறுவனத்துக்கு அவசியம் என்பதை மலேசிய விமான நிறுவனத்துக்கு நடந்தவை பாடமாகக் கற்பித்திருக்கும் என்று நம்பலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

-----

இந்த வீடியோக்களையும்

கிராபிக்ஸ் என்பர்கள் ...

வைரவன்....

வாசி, இணைத்தது... வீடியோ அல்ல. :icon_mrgreen: 

மீண்டும்... ஒரு முறை, உற்றுப் பாருங்கள். :lol: 

மீண்டும் அது, வீடியோ மாதிரி... உங்களுக்கு தெரிந்தால், மன நல மருத்துவரை... உடனே அணுகுங்கள். :D  :icon_idea:

அது எப்படி ?

எந்த விடயத்திலும்

ஒரு காமெடி யை கண்டு பிடிச்சு

சிரிக்க  வைக்க முடியுது

ராசா ? :lol: :lol:

Edited by வைரவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.