Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்….?? குழப்பும் கருணா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை விடுங்கள் அவரும் முன்னாள் புலிதானே உண்மையா சொல்ல போகின்றார் .

ஆனால் இந்த கதை அப்ப இருந்து அடிபடுகின்றது .கடவுளுக்குத்தான் வெளிச்சம் .

Rajapakse_Gaddafi_010909_2.jpgColonel-Gaddafi.jpg

அர்ஜுன்... போர் நடந்த இறுதி நாட்களில், 
மகிந்த, லிபியாவில் கடாபியியுடன் இருந்தார் என நினைக்கின்றேன்.
போரில் வெற்றி பெற்ற பின்னரே, மகிந்த நாட்டுக்கு திரும்பியதாக... அப்போது இராணுவத் தளபதியாக இருந்த  சரத் பொன்சேகா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அப்படி... தலைவர் பிரபாகரன் பிடிபட்டு இருந்தால், சரத் பொன்சேகாவே.... அதனை அப்போது சொல்லியிருக்கா விட்டாலும், அவரின் சிறை வாசத்தின் பின்பாவது  சொல்லியிருப்பார்.

Edited by தமிழ் சிறி

கருணா பயபுள்ள மகிந்தவ திரும்ப ஆட்சிக்கு கொண்டுவர எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு.
இந்த கதை சிங்கள பேரினவாத விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு/ மகிந்த புராணம் பாடும் சிங்களவர்களுக்கு சொல்லப்பட்ட கதை. எங்கட புலம்பெயர் குஞ்சுகள் இந்த கதைகளை கேட்டு டென்சன் ஆகாம போய் உங்கட வேலைகளை பாருங்க.  

  • கருத்துக்கள உறவுகள்

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது இருப்பு அல்லது  மரணம் அவை எவ்வளவு அளவுக்கதிகமான கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் இதுவரை பரவிக்கிடக்க வழிசெய்ததோ அதேபோல் தேசியத்தலைவர் தொடர்பற்றுப்போன இறுதிக்கணங்களும் பல கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் எம்முன்பே கொண்டுவரும்.

அது எப்படியிருக்குமெனில் காலநீட்சியில் கற்பிதங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடயதான தகைமையுடையதாக இருக்கும், அப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்கு என நாம் முடிவுக்குவரக்கூடிய சூழலை எமக்கு உருவாக்கும். 

பிரபாகரது இருப்பும் செய்தியும் அண்டிப்பிழைப்பவருக்கும் அரசியல் செய்பவருக்கும் விடுதலைப்போராட்டத்தை ஏளனம் செய்பவருக்கும் ஆயுதமாகப் பயன்படுமேதவிர உண்மையான விடுதலை விரும்பியை எதுவிதத்திலும் பாதிக்காது.

என்னைப்பொறுத்தவரையில், முள்ளிவாய்க்கலின்பின்பு, தேசியத்தலைவரை, நான் என்றுமே தேடியதில்லை தேடவேண்டிய அவசியமுமில்லை, ஒருமிகப்பெரிய வரலாறுகள் நிறைந்த போராட்டத்தின் முக்கியகட்டத்தில் தலைவனாகத் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்ரிய ஒரு தீரன், தனது போராட்டத்தை எந்த இடத்தில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமோ அந்த இடத்தில் முடித்துவைத்து தனியொருவன் கைகளிலிலாது எம் அனைவதும் கைகளிலும் விடுதலைக்கான போராட்டப்பாதையை  இலகுவாக்கிய பின்பு தமிழ்மக்களிடையே கையளித்த உண்மையாளன். 

பிற்குறிப்பு: 

எனது சில வசனங்களை, உறவுகளில் ஒரு சிலர் பரிகாசம் செய்யலாம் என எதிர்பார்ப்பதால் மனப்பயம் இல்லை.

நூறுவீத உண்மை ஐயா

எனது கருத்தும் முள்ளிவாய்க்காலின் பின் நிலையும் இது தான்

தலைவர் வருவார் வரணும் என்று எங்கும் எழுதியதில்லை சொன்னதில்லை.

தலைவர் இருக்கணும் என்பது எனது ஆசை மட்டுமே

அது சரியாக இருக்கணும்

நிறைவேறணும் என்பதெல்லாம் எம் கையிலில்லை...

ஆனால் இங்கு மறுத்து எழுதப்படும் கருத்தாளர்களின் நோக்கம் தலைவரை தாக்குவதன்று

அவர்களும் தலைவரை மதிப்பதாக சொல்பவர்கள் தான்

தலைவரைத்தாக்கினால் தான் எமக்கு வலிக்கும் என்பதை தெரிந்து தாக்குகிறார்கள்

இதன் மூலம் நாம் ஒன்றைப்புரிந்து கொள்ளலாம்

எம்மை மனச்சங்கடச்செய்ய

சோர்வடையச்செய்ண இவர்கள் எதை வேண்டுமானும் தூக்குவார்கள்..

இது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

தன்ட பேர்ல பொய், புலுடாக் கதைகள் எல்லாம் வருது, மக்காள், நம்பிராதீங்கோ, சத்தியம் பண்ணிச் சொன்னாலும் நம்பிராதீங்கோ எண்டு, மப்பு முறிஞ்சசோன்ன அம்மான் குளறுறாரே. :innocent:

Rajapakse_Gaddafi_010909_2.jpgColonel-Gaddafi.jpg

அர்ஜுன்... போர் நடந்த இறுதி நாட்களில், 
மகிந்த, லிபியாவில் கடாபியியுடன் இருந்தார் என நினைக்கின்றேன்.
போரில் வெற்றி பெற்ற பின்னரே, மகிந்த நாட்டுக்கு திரும்பியதாக... அப்போது இராணுவத் தளபதியாக இருந்த  சரத் பொன்சேகா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அப்படி... தலைவர் பிரபாகரன் பிடிபட்டு இருந்தால், சரத் பொன்சேகாவே.... அதனை அப்போது சொல்லியிருக்கா விட்டாலும், அவரின் சிறை வாசத்தின் பின்பாவது  சொல்லியிருப்பார்.

ஜோர்தான் நாட்டில் இருந்தார். அவர் திரும்பும் போது, தலைவர் உடல் கிடைத்தது என சொல்லப் பட்டதால் தான், விழுந்து மண்ணைக் முத்தமிட்டு பீலா விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை விடுங்கள் அவரும் முன்னாள் புலிதானே உண்மையா சொல்ல போகின்றார் .

ஆனால் இந்த கதை அப்ப இருந்து அடிபடுகின்றது .கடவுளுக்குத்தான் வெளிச்சம் .

இந்த கதை அப்போ இருந்து அடிபடுகுது ஆனால் இதை ஒரு உளவியல் யுத்தமாகவே நான் பார்கிறேன்.

நம்போன்ற நடுநிலையாளர்கள் இதை வெறும் புரட்டு எனது தூக்கி எறிவது போல் தனி மனித வழிபாட்டு ----- புல வாலுகளலால் முடியாது.

நமது முருகனுக்கு இப்படி ஆச்சோ, அப்படி ஆச்சோ என்று மனம் கிடந்து துடிக்கும். வெறி தலைக்கேறும். தொடர்ந்தும் ஏதாவது மொக்கு வேலை செய்யச் சொல்லி மூளை (------) அலறும்.

உடனே சம் முக்கு மூக்கறுக்கிறம், சும் முக்கு ஆடறுக்கிறம் என கிளம்புவார்கள்.

இதுதான் சிங்கள புலனாய்வாளர்கள் வேண்டுவது.

புலவாழிகள் எப்பேற்பட்ட --- --- என்பதை துல்லியமாக கணக்கிட்டு காய்நகர்த்துவதில் மகிந்தவுக்கு நிகர் மகிந்தவே.

.

Edited by நிழலி
பிறரை தரம்தாழ்த்தி எழுதிய சொற்கள் நீக்கம்

இதைத்தான் சொல்லுகிறது குறைகுடம் தழும்புறது என்று. எப்ப பார்த்தாலும் தான் ஒரு மேதாவி என்ற எண்ணம். கொச்சான், தன்னை விட்டு மற்றைய புலம்பெயர்களை சொல்லுவதைப்பார்த்தால், மாதனமுத்தாவின் சீடர் தன்னை விட்டு மற்றையவர்களை எண்ணியது போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

தன்ட பேர்ல பொய், புலுடாக் கதைகள் எல்லாம் வருது, மக்காள், நம்பிராதீங்கோ, சத்தியம் பண்ணிச் சொன்னாலும் நம்பிராதீங்கோ எண்டு, மப்பு முறிஞ்சசோன்ன அம்மான் குளறுறாரே. :innocent:

---------

ஜோர்தான் நாட்டில் இருந்தார். அவர் திரும்பும் போது, தலைவர் உடல் கிடைத்தது என சொல்லப் பட்டதால் தான், விழுந்து மண்ணைக் முத்தமிட்டு பீலா விட்டார்.

கொம்மான்.... குளறுகிறாரா,  அந்த இணைப்பை தாருங்கள்..... நாதமுனி.:)
-----
ஜோர்தான் நாட்டிலா......
ஏதோ... ஒரு முஸ்லீம் நாட்டில், மகிந்த இருந்தார் என்று தெரியும்.
ஆனால்... எந்த நாடு என்று, சரியாக ஞாபகம் வரவில்லை.
சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி.... முனி.

:grin:

நம்போன்ற நடுநிலையாளர்கள் இதை வெறும் புரட்டு எனது தூக்கி எறிவது போல் தனி மனித வழிபாட்டு ----- புல வாலுகளலால் முடியாது. :grin:

நம்போன்ற நடுநிலையாளர்கள் இதை வெறும் புரட்டு எனது தூக்கி எறிவது போல் தனி மனித வழிபாட்டு ----- புல வாலுகளலால் முடியாது.

Edited by no fire zone

ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா, நாய் மட்டும் வளக்கலையே ... :shocked:..

ஆமா அப்ப நாம் "தமிழீழ விடுதலை போராளிகள்", பின் தடம் புரண்டு உள்நாட்டிலும்/வெளிநாட்டிலும் காட்டி கூட்டிக் கொடுக்க வெளிகிடேக்கை "மாத்துக்கருத்து சனநாயகவாதிகள்" இப்ப தொபுக்கனாங்கென்று முதலைக்கண்ணீருடன் "கூத்தமைப்பாம்" ... ஓ நாம நம்புறோம்!:grin::grin::grin:

 அம்மாடியோ, சோத்துப்பார்சல்களுக்கோ, குத்திகளுக்கோ, ஊர், நாட்டு, அரசியல் ஞாணம் ஓகோ ஆகா! புலிக்கெதிராக வாந்தியோ கங்காவோ கொட்டினால் .. அது அரசியல்! அத்தோடு மல்லாந்தும் படுத்திருந்தும் துப்புவோம், கக்கா மலம் சலங்களை தலையிலும் கொட்டுவோம்! எமது இரட்டை கண் போனாலும் புலிக்கூட்டத்தின் ஒற்றைக்கண்ணாவது போகாதோ? .. அரசியல் அறிவு!:cool:

அப்போ லெனினோ, ஸ்ராலினோ, சேர்ச்சிலோ, மாவோவோ, இந்திராவோ, சேகுவேராக்களோ, காஸ்ரோக்களோ, கசீனா பேகமோ, ராசீவோ, பண்டாரநாயக்காக்களோ, ஜேஆர்/பிரேமதா/மகிந்தாவோ, எம்சிஆரோ, கருணாநிதியோ, செயலலிதாவோ .. உள்ளுக்குள் வருவோம் உமாவோ, வரதரோ, சிறியோ, குத்தியோ எல்லோரும் தனிமனித வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள்தான்!

என்ன, அவர்களில் மக்களோடு நின்றவர்கள், மக்களுக்காக உழைத்தவர்கள் வரலாறாக ... மக்கள் அவர்களின் சில பிழை குறைகளை விமர்சித்தாலும் ..  மாவோ முதல் காஸ்ரோ, எம்சிஆர் ஊடே இன்று பிரபாகரன்! ... ஆயிரம் காலங்கள் மக்கள் மனங்களில் .. விட்டு அகலார் ... நிரந்தர இடம்!

உந்த அறிவாளிகள் கோசேன், அர்ஜுன், வாலி ஏதாவது இனியும் உதுக்கு கீழ் எழுத ஆசையா?... ஏதாவது? .. விளங்குகிறதா? ... இன்னும் விளக்கினாலும் ஏறுமா? ..  இல்லை நாயுக்கு எங்கடித்தாலும் ஏதோ ஒரு காலைத்துக்கித்தானாம் ஓடும்! அதை மாதிரி என்ன தான் உண்க்கள் மண்டைக்குள் ஓட்டினாலும் ... ம்ம்கூம்?:grin:

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

ஐ, கோச்சான் வீசிய தொப்பி என்னா அழகா பொருந்துதப்பா, பலருக்கு ?????

ஐ, கோச்சான் வீசிய தொப்பி என்னா அழகா பொருந்துதப்பா, பலருக்கு ?????

ஒரு கண்ணை மூடிகட்டிக்கொண்டு  தங்களை அல்லோ நடுநிலையாளர்கள் என்று நம்புகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கண்ணை மூடிகட்டிக்கொண்டு  தங்களை அல்லோ நடுநிலையாளர்கள் என்று நம்புகின்றார்கள் .

நடு(அடி)நிலையாளர்கள் என்றுஉங்கள் புலிவாந்தி புலத்துப்புண்ணாக்கு சகாதான் கூறியிருந்தார். இந்த தொப்பி அவருக்கு நல்லா பொருந்தும் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமே இப்ப  தலைவன். ஒரு அரசியல்வாதி கூட , தலைவன் பெயர் சொல்லாமல் மேடை ஏறி பேசுகிறானா பாருங்கள்? அவர் ஒரு கோழையாய் இருந்திருந்தால் இது பேசு பொருளாய் இருக்குமா? அவர் ஒரு பெரிய வீரன் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்புறம் மற்றவை மாரித்தவளை மாதிரி "மாரிக்கு வாரம் கொடோம், கொடோம்."  

உங்கள் அருமையான,கருத்துக்கு.... நன்றி, சாத்தான். (அண்ணை):)

பிரபாகரன் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை முழுவதற்குமே இப்ப  தலைவன். ஒரு அரசியல்வாதி கூட , தலைவன் பெயர் சொல்லாமல் மேடை ஏறி பேசுகிறானா பாருங்கள்? அவர் ஒரு கோழையாய் இருந்திருந்தால் இது பேசு பொருளாய் இருக்குமா? அவர் ஒரு பெரிய வீரன் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்புறம் மற்றவை மாரித்தவளை மாதிரி "மாரிக்கு வாரம் கொடோம், கொடோம்."  

பிரபாகரன் பெயரை இலங்கை முழுக்க உச்சரிப்பது இனி அப்படி ஒரு ஆள் வந்துவிட கூடாது என்றுதான் கிட்லர் முசோலினி மாதிரி .

அது கூட விளங்காமல் ............

குழந்தைக்கு சோறு ஊட்டும் போதும் சாப்பிடாவிட்டா கூப்பிடுவன்  என்று பல பெயர்களை சொல்லுவார்கள் அது குழந்தகளை பயமுறுத்த,

அப்படி இது மக்களை பயமுறுத்தத்தான் அடிக்கடி உச்சரிகின்றார்கள் .

உங்கடை விளக்கம் அப்படி. அப்படியே இருந்து விட்டு போகட்டும். றோகணவின் பெயர் அடிக்கடி வராததால் அவரில் அதிக விருப்பம், உங்களின் விளக்கத்தின் படி.

x

Edited by trinco

பிரபாகரன் பெயரை இலங்கை முழுக்க உச்சரிப்பது இனி அப்படி ஒரு ஆள் வந்துவிட கூடாது என்றுதான் கிட்லர் முசோலினி மாதிரி .

அது கூட விளங்காமல் ............

குழந்தைக்கு சோறு ஊட்டும் போதும் சாப்பிடாவிட்டா கூப்பிடுவன்  என்று பல பெயர்களை சொல்லுவார்கள் அது குழந்தகளை பயமுறுத்த,

அப்படி இது மக்களை பயமுறுத்தத்தான் அடிக்கடி உச்சரிகின்றார்கள் .

குழந்தைக்கு சோறு உட்ட தான் இவர் அனுபவம் போதும் ...அதை விட்டிட்டு கூட ஆசை பட கூடாது 

பிரபாகரன் மாபெரும் வீரன் என்பதை விமர்சனங்களுக்கு அப்பால் எதிரிகள்கூட ஏற்றுக்கொள்ளுகிறார்கள். தமிழ்மக்களின் விடுதலைப. போராட்டத்திற்கான தனது வம்சத்தையே அர்ப்பணித்த  அந்த ஒப்பற்ற நேர்மையான தலைவனை தமிழ் மக்கள் என்றும் உரிய கெளரவத்துடன் நேசிக்கிறார்கள். அது  கீழ் தரமாக சிந்திப்பதையே தனது வழமையாக கொண்ட ஒரு ஆசாமிக்கு பொறுக்கவில்லை. அதனால் தனக்குள்ளையே விளைந்து கிடக்கும் காழ்ப்புணர்ச்சியை யாழ்களத்தில் கொட்டுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பெயரை இலங்கை முழுக்க உச்சரிப்பது இனி அப்படி ஒரு ஆள் வந்துவிட கூடாது என்றுதான் கிட்லர் முசோலினி மாதிரி .

அது கூட விளங்காமல் ............

குழந்தைக்கு சோறு ஊட்டும் போதும் சாப்பிடாவிட்டா கூப்பிடுவன்  என்று பல பெயர்களை சொல்லுவார்கள் அது குழந்தகளை பயமுறுத்த,

அப்படி இது மக்களை பயமுறுத்தத்தான் அடிக்கடி உச்சரிகின்றார்கள் .

அண்ணை  வணக்கம்

நல்ல பிள்ளை வளர்ப்பு என்பது நிலவைக்காட்டி

நட்சத்திரத்தைக்காட்டி  எனத்தான் இருக்கும்

அது தான் நாங்கள் கண்டது

வளர்ந்தது

பிரபாகரன் அவற்றைப்போன்றவர் தான்.  லட்சக்கணக்கான குழந்தைகள் தலைவரையும் போராளிகளையும் அவர்களது பெயரையும் காட்டி வளர்க்கப்பட்டவர்கள் தான்.

வளர்க்கப்படுபவர்கள் தான்

முன்னுதாரண மாமனிதர்கள் அவர்கள். 

உங்களுக்கு பேய்களை பிசாசுகளைக்காட்டி தான் வளர்த்திருக்கிறார்கள் என்பதை நீங்க சொல்லவேண்டிய அவசியமில்லை

யாழில் அது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்...

 உங்களை வளர்த்தை வைத்து மற்றவர்களை எடை போடாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் உயிரோட பிடிபட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யாரும் சொல்லாமலே புரிந்திருக்கும். சும்மா போராளியோட கதைத்தவனுக்கே என்ன நடந்தது? தலைவரை பிடித்தால் வீதி வீதியா இழுத்து தமிழருக்கு ஒரு மரண பயத்தையும், நம்பிக்கை ஈனத்தையும், சிங்களவருக்கு பெரிய பரிசாக அந்த உடலை தாக்கி அவமானப் படுத்த சந்தர்ப்பம்கொடுத்து மகிழ்ந்து இருப்பான்  மகிந்தா. போருக்கு உதவிய இந்தியா தலைவரை உயிரோடோ பிணமாகவோ தன்னிடம் கையளிக்கும்படி கேட்டிருந்தது. ஆனால் சிங்களவன் சட்டுப்புட்டெண்டு கதையை முடிச்சுப் போட்டு, இந்தியாவுக்கு கயிறு விட்டிட்டான்.போர் முடிந்த பிற்பாடு ஒரு பத்திரிகைக்காரன் பிரணாப் முகர்யியிடம் பிரபாகரன் கொல்லப்பட்டு  விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறதே என்று கேட்டபோது, பிரணாப் சொன்னது "இலங்கை அரசு அப்படித்தான் கூறுகிறது, அதை நம்புவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறோம்." என்று பதிலளித்தார். ஆனால் மரண சான்றிதழுக்கு இழுபறி நடந்தது. முடிவு தெரியாது. ஒரு வகையில் இது சிங்களவனுக்கு வெற்றி. எந்த இடையூறும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழர்களை அழிப்பதேஅவன் திட்டம். அதை அவன் கச்சிதமாய் முடித்துவிட்டான். இருப்பவர்களையும் நடைப்பிணங்களாயும், அரை விசர்களாயும், குணங்கெட்டதுகளாயும் ஆக்கிப்போட்டான். தலைவரின் இறப்பைப் பற்றி எத்தனையோ கதை மாறி மாறி கூறினான். ஏன் அண்மையில் கூட அவரின் இறுதி நேர ஆயுதம் பற்றிய விசாரணையின் போது கூட சரியாக பதில் கூற யாராலும் முடியல. இப்போ துரோகியிலிருந்து பல தமிழ் அரசியல் தலைவர்களை, தான் தேர்தலில் வெல்வதற்காக எப்படியெல்லாமோ பயன்படுத்துகிறான் பாருங்களேன். ஏமாந்தது இந்தியாதான்.  அம்மானுக்கு தலைவரையும் புரிஞ்சுகொள்ள முடியேல, சிங்களவனையும் புரிஞ்சுகொள்ள முடியேல, தன்னையும் புரிஞ்சுகொள்ள முடியேல இதுதான் உண்மை. நேரம் ஒரு கதை, ஆளுக்கொரு கதை புலம்புது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.