Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tim Horton ம் எனது கனடாவும் !

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரண்டு மணிநேரம் தூங்கியிருப்போம். அறையின் வெளியே ஒரே சத்தம். எங்களுடன் வந்தவர்கள் நியூயோக் நகர் பார்க்கும் ஆவலில் தடல் புடலாக ஆயத்தமாவது எமது அறையின் வெளியே அவர்கள் பேச்சிலிருந்தே கேட்கிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியே வந்தேன், எங்களைத் தவிர மற்றைய எல்லோரும் ஆயத்தம். காலையில் என்னுடன் அலைந்து திரிந்த மாமாவும் சாப்பட்டு மேசையில் கோப்பிய உறிஞ்சியபடி இருக்க, அவசரப்பட்டு குளியளறைக்குள் புகுந்து சில நிமிடங்களில் வெளியே வந்து, அவசரத்தில் கோப்பியை சூட்டோடு கீழிறக்கி, கொண்டுவந்த சாப்பட்டில் கொஞ்சத்தைக் கடித்து, பாண்டுக்குள்ளும், டீ சேர்ட்டுக்குள்ளும் புகுந்துகொள்ளும்போது காலை 9 மணி. 

சிட்னியைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு காலை நீட்டிக்கொண்டுக் காரில் போகும் வசதியில்லை என்கிறபடியால், கனடாவில் நடந்தது போலவே, அதே சப்வே, பஸ்கள்...நினைக்கும்போதே தலை வலித்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது, இவ்வளவு காசு கொடுத்து, இவ்வளவு கரைச்சல்ப் பட்டு, அமெரிக்காவுக்கு வந்தாயிற்று, இடம் பார்த்துத்தான் ஆகவேண்டும், என்ன கஷ்ட்டப் பட்டாவது என்று முடிவாகிவிட, தோளில் பையும், ஸ்ட்ரோலரில் சிறியவளையும் ஏற்றிக்கொண்டு எனக்கு முன்னல் நடந்துகொண்டிருந்த சொந்தங்களுக்குப் பின்னால் நானும் நடக்கத் தொடங்கினேன். மனைவி வழக்கம் போல கமெராப் பைய்யைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்துகொண்டு சென்றாள். 

நாம் தங்கியிருந்த இடத்தின் வீதிகளுக்கும், நான் கொச்சிக்கடையில் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த வீதிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. நியுயோக்கின் நிலக்கீழ் சாக்கடை துர்நாற்றம் டிரெயினேஜ் வழியாக வெளியே வந்து காற்றில் கலந்துகொண்டிருக்க, ஆங்கிலம் பேசத் தெரியாத சீனர்கள் அந்தத் தெருவெங்கும் ௹தமது மொழியில்  சத்தமாகப் பேசியபடி நடந்துகொண்டிருக்க, பிண்ணனியில் நியூயோர்க் நகர பொலீசாரின் வாகன சைரன் ஒலித்துக்கொண்டிருக்க, கொலிவூட் படங்களை அந்தக் காலைப் பொழுது எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

ஒரு 20 அல்லது 25 நிமிடங்கள் நடந்திருப்போம், நாம் ஏறவேண்டிய சப்வே நிலையமும் வந்தது. கனடாவினது போல இல்லாமல் மிகவும் பழமையானதாக, அசுத்தமாக இருந்தது அந்த சப்வே நிலையம். இடம் பார்க்க வந்துவிட்டு துப்பரவு எல்லாம் பார்த்தால் எப்படி? சரி, டிக்கெட் வாங்குவதற்கு கவுன்டருக்குப் போனோம். குடும்பம் குடும்பமாக வாங்குவதென்று முடிவாகிவிட, உதலில் மாமா குடும்பம் கவுன்டர் வாயிலைச் சூழ்ந்துகொள்ள, ஏனையவர்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்க, காலையில் அவசர அவசரமாக வேலைக்குப் போவோருக்கு நாம் இடைஞ்சலாக மாறினோம். சிலர் வாய்விட்டே, "சற்று ஒதுங்கி நில்லுங்கள் " என்று கூறிவிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர் இடித்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.ஆவர்களது அவசரம் அவர்களுக்கு. இதற்கிடையில் டிக்கெட் கொடுப்பவருக்கும் மாமாவுக்குமிடையே ஒரு சின்னப் பிரச்சினை. ஏதோ முதன் முதலாக ஆங்கிலம் தெரியாத ஒருவருடன் கதைப்பதுபோல டிக்கெட் கொடுப்பவர் மாமாவுடன் கதைக்க, மாமாவுக்கு கடுப்பாக, டிக்கெட் கொடுப்பவர் வேண்டுமென்றே எம்மைத் தாமதப் படுத்த...அங்கே டிக்கெட் வாங்கக் காத்திருந்த மற்றையவர்கள் பொறுமை  இழக்க, போதும் போதும் என்றாகிவிட்டது. 

ஒருவாறு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினோம். 

  • Replies 69
  • Views 8.5k
  • Created
  • Last Reply

நாங்களும் அடுத்த கிழமை நியூயோக் போகின்றோம். நகரத்தைச் சுற்றிப் பார்க்க மிக ஆவல்!!

 

கெதியாய் எழுதுங்கோ ரகு.... :) வாசிக்க ஆவல்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் சீனர்கள், கறுப்பர்கள், கனடாவை விட அதிகமான வெள்ளையர்கள் என்று பலரும் இருந்தனர். நான் கனடாவில் வாங்கிய "கனடா" எழுதப்பட்ட தொப்பியைப் போட்டிருந்தேன். எனக்கு முன்னார் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இளம் வெள்ளை ஜோடி எங்களை வெகுநேரம் அவதானித்தபடி இருக்க, நானும் அவர்களை கடைக் கண்ணால் அவதானித்தபடி இருந்தேன். 

அந்த வாலிபருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். கை, கழுத்தெல்லாம் பச்சை குத்தி, ஏனோ தானோவென்று டீ சேர்ட்டும் பாண்ட்டும் அணிந்து சற்றுக் களைத்திருந்ததுபோலக் காணப்பட்டார். பெண்ணோ சற்று நாகரீகமாக ஆடை அணிந்திருந்தாள். 

எமது நிறத்தையும், நாம் அணிந்திருந்த கனடா தொப்பி மற்றும் டீ சேர்ட்டுகளையும் பார்த்து என்ன நினைத்தார்களோ தெரியாது, தமக்குள் எம்மைப் பார்த்துப் பேசியபடி இருந்தார்கள். சிலவேளை நாம் அணிந்திருந்தவற்றுக்கும் , எமக்கும் என்ன தொடர்பு என்று நினைத்தார்களோ என்னவோ ??

ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளும் நிலையில் எம்முடன் வந்த உறவுகள் இருக்கவில்லை, அந்தக் கொம்பாட்மென்ட் முழுதும் கேட்குமளவிற்கு தமிழில் சத்தமாக பேசிக்கொண்டு வந்தார்கள், இடைக்கிடையே பீறிட்டுச் சிரிப்பு வேறு! எனக்கே அந்தரமாகப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகப் பேசக் கூடாதா?? எதோ யாழ்ப்பாணத்தில் தட்டி வானில் போவதாக நினைப்பு ! இவர்கள் இப்படி ஒவ்வொருமுறையும் தமிழில் உரக்கப் பேசிச் சிரிக்கும்போதும் முன்னாலிருந்த ஜோடி எங்களைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொள்ளும். அட விடுங்கப்பா, தமிழில் பேசுவது ஒரு குற்றமா??

ஒருவாறு ரயில் நான் இறங்கவேண்டிய இடத்தை அடைந்தது. அது வேறு எதுவுமில்லை, உலகப் புகழ் பெற்ற டயிம் ஸ்குவெயர். புற்றீசல்கள் போல மக்கள் அலைமோதிக்கொண்டிருக்க, அந்த மக்கள் வெள்ளத்தில் நாமும் கலந்து நடக்கத் தொடங்கினோம். நடையோ நடை அப்படியொரு நடை. ஒரு 30 நிமிடம் நடந்தபின் பிள்ளைகள் களைத்துவிட ஒரு மக்டொனால்ட்சில் நின்று அவர்களுக்குப் பசியாற்றி மீண்டும் நடை. போவது மன்ஹாட்டன் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் உல்லாசப் படகுப் பயணம் நோக்கி!

நாம் மான்ஹட்டன் படகுப் பயண அலுவலகத்தை அடையும்போது 12 மணியாகிவிட்டது. அலுவலகக் கவுன்டரிலகொரு கறுப்பினப் பெண். நாங்கள் கூட்டமாக டிக்கெட்டுக்களை வாங்குவதைப் பார்த்துவிட்டு, "25 பேருக்கு மேலென்றால் மட்டுமே கூட்டமாக வாங்கினால் லாபம் இருக்கு. ஆனால் நீங்கள் 20 பேர் மட்டுமே, ஆகவே குடும்பம் குடும்பமாக வாங்கினால் லாபம்" என்று அறிவுரை சொன்னாள். நாமும் எமது பங்கிற்கு தனியாகவும், குடும்பமாகவும் , கூட்டமாகவும் கணக்குப் பார்த்து (கணக்கில் நான் புலியாக்கும் ) இறுதியில் அவள் சொன்ன வழிப்படியே டிக்கெட்டுக்களை வாங்கினோம். நாம் ரிக்கெட் வாங்கி முடியும்போது படகு புறப்படத் தயாரிகிவிட்டது. அரைவாசிப்பேர் எம்மில் படகுக்கு அருகில் போய்விட, மீதிப்பேர் டிக்கெட் அலுவலகத்தில் இன்னும் நிற்க, படகுக் காரர்களுக்கு கொதி வந்துவிட்டது. படகிலிருந்த மற்றைய நூற்றுக்கணக்கானவர்களை காக்க வைத்துக்கொண்டு நாங்கள் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படகிலிருந்து இரண்டுபேர் கீழே இறங்கி வந்து எம்மை துரிதப்படுத்தும்படி அலுப்புக் கொடுக்க, படகினருகில் கூட்டமாகப் போட்டோ எடுக்கும் இருவர் எம்மை அங்கே இங்கேயென்று இழுக்க, எம்மில் சிலருக்குக் கோபமும் வந்துவிட, ஒரே அல்லோல கல்லோலம். 

ஒருவாறு படகில் ஏறி அமர்ந்துகொண்டோம். நாம் உள்ளே வரும்போது முழுப்படுகுமே எம்மைப் பார்ப்பது புரிந்தது. அவர்களைக் காக்கவைத்துவிட்டோம் எம்கிற நியாயமான கோபம் அது. இதெல்லாம் கணக்கிலெடுத்தால் இடம்பார்க்க முடியாது, ஆகவே நாம் வந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கத் தொடங்கினோம்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மன்ஹட்டன் சதுக்கத்தை அண்டிய கடற்பரப்பினூடாக எமது படகு மெதுவாக சென்றுகொண்டிருக்க படகின் அறிவிப்பாளர் அந்த இடங்களைப் பற்றிய வர்ணனையைச் செய்துகொண்டே வந்தார். அந்தக் கடற்கரையெங்கும் உலகின் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் பல்நாட்டுக் கம்பெனிகளும், பெரிய காப்பரேட் கம்பெனிகளும். வானுயர எழும்பிநின்ற அந்தக் கட்டிடங்களின் உச்சியில் அவற்றின் பெயார்கள் நியோன் விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்க அமெரிக்கா என்றால் இதுதான் என்று அவை பெருமையாக மார்தட்டிக் கொள்வதுபோலத் தோன்றியது எனக்கு. 

அப்படியே அந்தக் கட்டிடங்களைத் தாண்டிச் செல்ல நியூயோக்கின் பழைய துறைமுகப் பகுதியூடாக படகு பயணித்தது. பல ஏக்கெர்க் கணக்கில் அமைக்கப்பட்டிருந்த பாரிய சரக்கு மண்டபங்கள். பாவிக்கப் படாவிட்டாலும் கூட இன்னும் அப்படியே புதியனவைபோலத் தோற்றமளித்தன. இவற்றைத் தாண்டிச் செல்லும்போது, 70களிலும் 80 களிலும் இப்பகுதியில் தலைவிரித்தாடிய மாபியாக் குழுக்கள், அவற்றுக்கிடையேயான சண்டைகள், கடத்தல்கள், போதைவஸ்த்து வியாபாரம், குழுக்களிடையிலான கொலைகள் என்பவை பற்றியும் அந்த ஆறிவிப்பாளர் சொல்ல மறுக்கவில்லை. "இப்போது நிலமை எவ்வளவோ பரவாயில்லை, ஆனாலும் அவ்வப்போது அவை இருக்கத்தான் செய்கின்றன" என்று அவை பற்றிக் கூறி முடித்தார்.

அடுத்ததாக, மற்றைய கட்டிடங்களிலிருந்து முற்றாக வேறுபட்ட, உலகப் பிரபலங்களின் உல்லாச இருப்பிடமாகத் திகழும் இரு பெரிய நீல நிறக் கண்ணாடிக் கட்டிடங்கள் இருந்த பகுதியை அண்மித்து படகு செல்கையில், "இப்போது நீங்கள் பார்ப்பது இரு சினிமாப் பிரபலங்களின் உல்லாச வீடுகள். முதல் இரண்டு அடுக்குகளும் நடிகர் லியனோ டி கப்ரியோவுக்குச் சொந்தமானது, அதற்குக் கீழுள்ள அடுக்கு அவுஸ்த்திரேலிய நடிகர் ஹியூ ஜக்மானுக்குச் சொந்தமானது " என்று அவர் கூறி முஇத்ததும், படகிலிருந்த எல்லோரது கழுத்துக்களும் பக்கவாட்டில் திரும்பி அந்த மாடி வீடுகளைப் பார்க்க, பலர் தமது கமெராக்களில் கிளிக்கியும் கொண்டனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சரி, படகுப் பயணத்துக்கு வருகிறேன், ரெட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது அவற்றின் நினைவாகவும், ஏன் சாகிறோம் என்று கூட அறியாமல் அன்று இறந்துபோனவர்களுக்காகவும் ஒரரு நினைவுக் கட்டிடம் எழுப்பப்பட்டிருந்தது. முன்னைய ரெட்டைக் கோபுரத்தின் உயரத்திற்கு நிகராக, பழைய ரெட்டைக் கோபுரத்தின் இடிபாடுகளை ஒருங்கமைத்து, மீள் உருவாக்கம் பெற்று நிமிர்ந்து நின்ற அந்த ஒற்றைக் கோபுரத்தைப் பார்க்கும்போது அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தைக் கண்டு பயந்து ஒளிந்துவிடவில்லை, மாறாக இன்னும் உறுதிகொண்டு எழுந்து நிற்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு. அந்த இடத்தில் சிலநேரம் தரித்து நின்ற அந்தப் படகு பின்னர் மெதுவாக இன்னுமொரு அமெரிக்க அடையாளம் நோக்கிச் செல்லத் தொடங்கியது. 

பச்சை நிறத்தில், மன்ஹட்டன் வானில் மிகவுயரத்தில் தனியே எழுந்து நிற்கும் உருவம் அது. அமெரிக்கா என்றால் உலகின் எவர் கண்முன்னும் வரும் அந்த உருவம், வேறு எதுவுமில்லை, அது அமெரிக்காவின் சுதந்திர தேவதை. முழுச் செப்பினால் உருவாக்கப்பட்டு பிரான்சு மக்களால் அமெரிக்காவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பாரிய சுதந்திரத் தேவதை உண்மையிலேயே மிக அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாள். அந்தப் படகுப் பயணத்தின் கிளைமாக்ஸே அந்த தேவதைதான் ! அவளுக்காகவே படகில் ஏறியிருந்த நூற்றுக்கணக்கானவர்களும், நாங்களும், கண்களை தீட்டி, கமராக்களை உயர்த்திப் பிடித்து அவள் அருகில் வரும்வரை ஆவென்று அவளிருந்த பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். படகு மெது மெதுவாக அவளருகில் செல்லும்போது அந்த தேவதையின் விசாலம் புரியத் தொடங்கியது. அருகில்ச் சென்று படகு அசையாமல் நின்றுவிட, நூற்றுக்கணக்கான கமெராக்களும், கைய்யடக்கத் தொலைபேசிகளும் தாறுமாறாக படங்களைச் சுட்டுத் தள்ளின. செல்பிகளுக்கு குறைவிருக்கவில்லை. அதுவொரு பரவச அனுபவம், அனுபவித்தால்ப் புரியும்.

கமெராக்களும், செல்பிகளும் களைத்துவிட, படகு மெது மெதுவாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. போகும் வழியில் மன்ஹட்டன் பகுதியை ஏனைய இடங்களுடன் தொடுத்து நிற்கும் உயிர் நாடிகளான புறூக்லின் பாலம், மான்ஹட்டன் பாலம் போன்றவற்றின் கீழாகச் சென்றது படகு. செல்லும்போதே அவற்றின் சரித்திரம், கட்டப்பட்ட விதம், கட்டவேலைகளில் ஈடுபட்ட மக்கள் என்று அறிவிப்பாளர் சொல்லிக்கொண்டே போக, அந்தப் பிரமாண்டமான பாலங்களின் அமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

இப்படியே நியூயோக் நகரின் அழகை கடலில் இருந்தே பார்த்துவிட்டு, ஆனந்தக் களைப்பில் படகும், நாங்களும் மீண்டும் கரையை அடைந்தோம். 

 

கரையை அடைந்ததும், கொண்டுவந்த சிற்றுண்டிகள் மளமளவென்று வயிற்றுக்குள் இறங்க, சிறிது நேரம் அந்தத் துறைமுகப் பகுதியில் அமர்ந்திருந்து அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். 

சில நேரத்தின் பின்னர், நியூயோக் பகுதியை இலவசமாகச் சுற்றிக் காட்டும் கூரையற்ற டபுள்டெக்கர் பஸ்கள் வரிசையாக துறைமுகப் பகுதியில் காத்திருக்க, நாம் கூட்டமாக ஏறி  அமர்ந்துகொள்ளவும், நெரிசலான, சனநடமாட்டம் மிக்க அந்த நகரூடாக வீதி வலம் வரத்தொடங்கியது நாமிருந்த பஸ். 

15-20 நிமிட ஓட்டத்தின் பின்னர் அது நின்றுவிட, நாமெல்லாம் இறங்கி நடக்கத் தொடங்கினோம். டயிம் ஸ்குவெயர் என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சதுக்கம் நோக்கி நாம் நடந்தபோது, எம்முடன் அலைகடலென மக்கள் வெள்ளம் நடந்துகொண்டிருந்தது. 

அந்த சதுக்க வீதிகளெங்கும் நியோன் விளக்குகளாலும், இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் செய்தித் தலைப்புகள், காணொளிகள், விளம்பரங்கள், மேற்கத்தைய இசையாலும் விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தப் பகுதியே சொர்க்க லோகம் போலக் காட்சியளித்தது. முடிந்தவரை அப்பகுதியை எமது கமெராவுக்குள்ளும், செல்போன்களுக்குள்ளும் சுருட்டிக் கொண்டே, கடைகளுக்குச் செல்ல ஆயத்தமானோம். 

கடைகளுக்குள் சென்றவர்கள் மீண்டு வர மழையும் பெய்யத் தொடங்க இரவு 9 மணியாகிவிட்டிருந்தது. இனிப் போதும் என்று தீர்மானித்துவிட்டு, சப்வே நிலையத்தை நோக்கி நடந்தோம். 

3 அல்லது 4 சப்வே ரயிகளில் மாறி மாறி ஏற், இரவு 12 மணிக்கு நாமிருந்த இடத்தை அடைந்ததோடு எமது அமெரிக்கப் பயணம் முடிவிற்கு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள்.

கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...

உண்மைதான்  மணிவாசகர்..

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகும் போது ஈபிள் கோபுரத்துக்கு பக்கத்தால் தான் வருவேன்

ஆனால் அதில் நின்று அல்லது ஏறிப்பார்த்தது என்பது ஒரு முறையோ இருமுறை தான்

அதுவும் யாராவது வெளியிலிருந்து வந்த உறவுகளுடன்..

ஆனால் தமிழகத்திலிருந்து வந்த இயக்குநர் சசி அவர்கள்

ஒரு கருத்தைச்சொன்னார்

இதை வடிவமைத்த ஈகிள் அவர்களின் சிறப்பு என்ன தெரியுமா?

இதனூடாக செல்பவர்கள் அனைவரையும் (கோடிக்கணக்கானவர்கள்)

கோபுரத்தை திரும்பிப்பார்க்க வைத்தது தான் என்றார்

அப்பொழுது தான் நானும் யோசித்தேன்

நானும் திரும்பிப்பார்க்காமல் போனதில்லை...

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மை லாட்! ரகுநாதன் என்பவர் பயணக்கட்டுரையை பந்தி பந்தியாக எழுதி என்னை கடுப்பேத்துகின்றார்.:grin:
சிவனே வேலையும் நானும் என்றிருந்த என் மௌன யுத்தத்தை சிதறியடித்துவிட்டார் மை லாட்.:)

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

இன்னும் ஒரு சில கிழமைகளில் பணவீக்கம் ஏற்பட்டு எல்லாமே நாறப்போகின்றது.அதைவிட பெரிய கொடுமை.ஓய்வூதியகாலத்துக்கு சேர்த்துவைத்த காசைக்கூட எடுத்து வீடு வேண்டினோர் நிலை பெரிய கவலைக்கிடம்.இப்படியான நிலையில் தேர்த்தல் வேறு.எனது நண்பருக்கு உங்கு புகையிலைத்தோட்டம் மாந்தோப்பெல்லாம் உண்டு.ஆயத்தமாகவுள்ளேன்.சீஸ்சும்  பட்டரும் தான் தஞ்சமென்றுள்ளேன்.கெடுத்துவிடாதீர்கள் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

https://truthandshadows.wordpress.com/2010/10/18/bush-reaction-the-very-odd-behaviour-of-a-president-on-911/

 

இன்னும் நம்பமுடியவில்லை..........

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை,

 

கனடா நன்றாக இருக்கிறது என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதற்காக அவுஸ்த்திரேலியா நன்றாக இல்லை என்று நான் கூறாமலேயே நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் அங்கிருந்த 4 வாரங்களும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நான் சென்றுவந்த இடங்கள், பழகிய மனிதர்கள், இயற்கையாகவே பசுமையான நாடு..இப்படிப்பல. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பலதடவை உலகிலேயே மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடு என்று அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்ற நாடென்னும்போதே, நான் சொல்லமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் கனடாவின் மகிமை.

ஆனால், அப்படி மக்கள் வாழ மிகவும் ஏற்ற நாடுகள் பட்டியலில் அவுஸ்த்திரேலியாவின் மூன்று நகரங்களான மெல்போர்ன், சிட்னி, பிறிஸ்பேர்ன், ஆகியவைகூட முதல் 5 இடங்களுக்குள் அவ்வபோது வந்திருக்கின்றன என்பதையும் நான் கூறிக்கொள்ள வேண்டும்,

நான் எழுதியது என்னைக் கவர்ந்த கனடாவின் சிறப்புகள். இவை எனது சொந்த அனுபவங்கள் மட்டுமே. என்னைப் போலவே கனடாவை சுற்றிப் பார்த்தவர்களுக்கு என்னைப் போலவோ அல்லது வேறுவிதமான அனுபவங்களோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.

நான் மீண்டும் அவுஸ்த்திரேலியா வருமுன்னர் எனது பல்கலை நண்பர்கள் இருவரைச் சந்தித்தேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சாடை மாடையாக கனடாவிற்கு நான் நிரந்தர வதிவிட அனுமதியுடன் வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் சொன்னபதில், "One day Hospitality" ஐப் பார்த்து மயங்கிவிடாதே என்பதுதான். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, விருந்தினராக நாம் அங்கே இருந்தபோது உறவினர்கள் நடந்துகொண்டவிதம், நாம் நிரந்தரமாகவே அங்கு குடிபெயரும்போது வித்தியாசமாக இருக்கும் என்பது. இது ஓரளவிற்கு உண்மைதான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 

அடுத்தது வேலைவாய்ப்பும், ஊதியமும். எனக்குத் தெரிந்த பலர் அங்கே இரண்டுவேலைகள் செய்கிறார்கள் தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு. சனி ஞாயிறுகளிலும் சிலவேளைகளில் வேலைக்குப் போகிறார்கள். கனடாவின் மணித்தியாலம் ஒன்றிற்கான குறைந்த ஊதியம் 12 டொலர்கள். ஆனால், அங்கேயே படித்த அல்லது பிறநாடுகளில் நல்ல படிப்புகளோடு வந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். 

மேலும் அவுஸ்த்திரேலியாவுடன் ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவு கனடாவில் சற்றுக் குறைவு. இதற்கு சனத்தொகையும், வியாபாரத்தின் போட்டியும் காரணமாக இருக்கலாம். இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால் நிச்சயம் விலை குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. விற்பனை வரி 12.5%

அவுஸ்த்திரேலியாவை எடுத்துக்கொண்டால் அநேகமான தமிழர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். சனி, ஞாயிறுகளில் வேலைக்குப் போவோர் மிகவும் குறைவு. சம்பளம் கனடாவுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்தது 50.0% ஆவது அதிகமானது, சுமாரான  ஒரு வேலை இருந்தாலே போதும், அவுஸ்த்திரேலியாவில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு. அதேபோல வாழ்க்கைச் செலவும் இங்கே அதிகம். விற்பனை வரி 10 % இப்போதைக்கு மட்டும்.

காலநிலை என்று பார்த்தால், அவுஸ்த்திரேலியாவின் அதிகூடிய வெப்பநிலை 53 செல்ஸியஸ். இது போனவருடம் தென் அவுஸ்த்திரேலியாவின் பாலைவனப் பகுதியொன்றில் பதிவானது. ஆனால் கரையோர மாநிலங்களின் சராசரி உயர் வெப்பநிலை 40 இலிருந்து 45 வரைதான். அதேபோல குளிர்கால வெப்பநிலை -5 இற்குக் கீழ் போனது கிடையாது. காலையில் எழுந்து காரின்மீதும், வீட்டின் டிறைவ் வே மீதும் குவிந்திருக்கும் பனியை அகற்றவேண்டிய தொல்லையோ அல்லது, பனியில் ரோட்டில் சறுக்கிக் கொண்டு கார் ஓடவேண்டிய தேவையோ இல்லை. ஆக, மக்கள் வாழ்வதற்கு மிகவும் சுவாத்தியமானது. பிறிஸ்பேர்ன் காலநிலை எமது யாழ்ப்பாணத்தின் காலநிலையை ஒத்தது என்றால் நம்புவீர்களா?

ஆனால் கனடாவில் காலநிலை மிகவும் வித்தியாசமானது. சென்றவாரம் டொரொன்டோவில் 43 பாகை என்று எங்கள் அக்கா கூறியபோது நம்பமுடியவில்லை. அதேபோல குளிர்காலத்தில் -20 என்றால் சொல்லத்தேவையில்லை. 

இனவாதம் பற்றிப் பேசினால், கனடா மக்கள் அவுஸ்த்திரேலியர்கள் போலில்லை, மென்மையானவர்கள் என்கிறார்கள்.ஆஸிக்கள் இனவாதிகள் என்கிறார்கள். ஆனால், அது அவர் அவரது சொந்த அனுபவம். எனக்கும் சிறு கசப்பான அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தால் கொல்லப்படுவோம் என்கிற அச்சமோ, அல்லது இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் நிலையோ இங்கில்லை. வேலைத்தளத்தில் நானும் ஒரு "ஓஸிதான்". ஆஸிக்களின் இயல்பான நக்கலும் நைய்யாண்டியும் கலந்த பேச்சுப் பலருக்கு அவர்களை இனவாதிகளாக் காட்டிவிடுகிறது என்பதில் ஐய்யமில்லை. இதற்காக இங்கே உண்மையான இனவாதிகள் இல்லையென்றும் நினைத்துவிடவேண்டாம்.

கனடாவின் இனவாதம் எப்படியிருக்கிறது என்பதுபற்றி எனக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் நானிருந்த 4 வாரங்களிலும் கண்ணின் இமை காப்பதுபோல் எங்களைக் காத்துநின்றனர் உறவுகள். 

இறுதியாக, நான் எங்கு வாழ்வதென்கிற முடிவெடுக்க வேண்டிவந்தால், நாம் அவுஸ்த்திரேலியாவுடன் நின்றுவிடுவேன். ஏனென்றால் இன்றுவரை நான் சந்தோஷமாக, எந்தவித பண அழுத்தமும் இல்லாமல் வாழவைப்பது அவுஸ்த்திரேலியாதான்.  ஆனால் ஒவ்வொரு வருடமும் கனடாவை சென்று தரிசிக்க முடியுமானால் நிச்சயம் போவேன். அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ, அப்படித்தான் கனடாவை தரிசிப்பதும்.

இந்த இரண்டு நாட்டையும் நான் விரும்பும் முக்கிய காரணம் அங்கிருக்கும் எனது தமிழர்கள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும் ?! 

Edited by ragunathan

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சு வாசித்துக் கொண்டே வருகின்றேன், நன்றாக இருக்கின்றது தொடருங்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

நான் சந்திக்கத் தவறிய ஒரு சிலரில் இராஜரத்தினம் ஐய்யாவின் மகளின் குடும்பமும் ஒன்று. கிடைத்த 4 வாரத்தில் எவ்வளவு இடங்களைப் பார்க்க முடியுமோ, அவ்வளவு இடங்களையும் பார்க்க வேண்டும் என்கிற அவசரத்தில் ஒரு சிலரை விட்டு விட்டேன். 

இனிவரும்போது எல்லோரையும் பார்த்துவிடலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ


ஒசி ஒசி ஓய் ஓய்..........தொடருக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது "அமெரிக்காவைப் பார்க்கும் ஒருநாள் ஆசையை" அவசர அவசரமாக மான்ஹட்டன் சதுக்கத்துடனேயே முடித்துக்கொண்டு மறுநாள் காலையிலேயே மீண்டும் கனடா புறப்படத் தயாரானோம்.

எதிர்பார்த்ததுபோலவே ஓட்டுனரும் பஸ்ஸும் காலையில் 7 மணிக்கே ஆஜராகிவிட, நாமிருந்த வீட்டின் வீதி மீண்டு கலகலப்பாகியது. ஏனென்று கேட்கிறீர்களா? நாங்கள் ஏறுவதற்காக அந்த வீதியை முற்றாக மறித்து பஸ்ஸை நிப்பாட்டினால் கலகலப்பாக இல்லாமல் எப்படியிருக்கும் ? பஸ்ஸுக்குப் பின்னால் வரிசையாக வந்துநின்ற கார்களின் ஓட்டுனர்களிடம் தெரியாத வார்த்தைகளில் பேச்சு வாங்கிக் கொண்டே நாம் பஸ்ஸினுள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தோம். ஒருவாறு 10 அல்லது 15 நிமிடங்களில் பஸ் அந்த வீதியிலிருந்து நகரத் தொடங்கியது.

அமெரிக்காவின் நகர வாகன நெரிசலுக்குள் வேண்டாவெறுப்பாக புகுந்து, நீண்ட வரிசைகளில் அமெரிக்கர்களுடன் நாமும் காத்திருந்து இடைவெளி கிடைத்தபோது சுளித்து ஓடி, பெருந்தெருச் சிக்கல்களிருந்து விடுபட்டு, ப்ரீ வேயில் ஏறும்போது எங்களுக்கு வேர்த்துவிட்டது.

பிரீவேயில் ஏறியதும் பஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. "அண்ணோய், நீங்கள் வரேக்கையும் எங்களைச் சொப்பிங் செய்ய விடயில்லை, போகேக்கையாவது நாங்கள் ஆறுதலாச் சொப்பிங் செய்யவேணும், சொல்லிப் போட்டம்" ஏன்று மாமியும், எனது மனைவியும் கண்டிப்பாகச் சொல்லிவிட, ஓட்டுனருக்கு வெறுப்பாகி இருக்க வேண்டும், "எனக்கொண்டுமில்லை, 14 மணித்தியாலத்துக்கு மேல என்னால ஓட ஏலாது. ஏதோ பார்த்துச் செய்யுங்கோ " என்று அவரும் பதிலுக்குச் சொன்னார்.

அமெரிக்காவுக்குப் போகும்போதிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அமெரிக்காவிலேயே நின்றுவிட, நாங்கள் மட்டும் களைப்புடன், எப்படா வீடு வருமென்று காத்துக்கொண்டு, பஸ்ஸிலிருந்து விலகி பின்புறமாக ஓடிக்கொண்டிருந்த கிராமங்களையும் தோட்டவெளிகளையும் எந்த உணர்வுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க ஓட்டுனர் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நெடுத்த ஓட்டங்கள், இடையிடையே டிம் ஹோர்ட்டன்கள், பீஸ்ஸாக்கள், டோனட்டுக்கள், மீண்டும் ஓட்டம் என்று சிலமணிநேரம் ஓடிவிட்டது.

மாமியும், எனது மனைவியும் எதிர்பார்த்திருந்த பென்சில்வேனியா மோல் என்றழைக்கப்படும் தரமான பொருட்களை விற்பனை வரியில்லாமல் மலிவான விலையில் வாங்கும் அங்காடியொன்றிற்குள் வாகனத்தை ஓட்டுனர் நுழைத்தபோது மதியம் 1 மணி. அகோர வெய்யில் அமெரிக்காவில் கொளுத்திக்கொண்டிருக்க, நாங்கள் ஆளுக்கொரு திக்கில் கலைந்துபோனோம்.

அந்தப் பிரதேசம் முழுக்க அமெரிக்காவின் பிரபல துணிக் கடைகள், லீவைஸ், டொமி லீ, வான் ஹியூசன், லீ, அமெரிக்கன் ஈகிள், காப், பூமா, அடிடாஸ், ரீபொக்....இப்படிப் பல கடைகள். அவுஸ்த்திரேலியாவில் நாங்கள் நுழைவதற்கே பயப்படும் இந்தக் கடைகளுக்குள் மனைவி தந்த வெறும் 200 டாலர்களைக் கைக்குள் சுருட்டிக்கொண்டு புதிய தைரியத்துடன் நுழைந்தேன். ஏனென்றால், "இஞ்ச எந்தக் கடைக்க போனாலும் ஒரு 20 அல்லது 30 உள்ளுக்குத்தான் எல்லாம் வரும்" என்று மாமி ஏற்கனவே சொல்லிவைத்ததால் வந்த தைரியம் அது. 

எனக்குப் பிடித்த டெனிம் காற்சட்டைகள் , ரெண்டொரு டீ சேர்ட் வாங்க 150 டாலர் போய்விட்டது. மீதியை கவனமாக வைத்துக்கொண்டு, மற்றையவர்களின் சொப்பிங் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 

பஸ்ஸில் ஓட்டுனர் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருக்க, பஸ் வெறிச்சோடிக் கிடந்தது. கொண்டுவந்த பைகளை கதிரையில் எறிந்துவிட்டு, இரண்டாம் முறை கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இடையிடையே மாமி, மாமா, அக்கா, அத்தான்..இப்படி என்னுடன் வந்தவர்களை பார்த்து, "எப்பிடிப் போய்க்கொண்டிருக்குது?" என்று கேட்க, "இன்னும் கொஞ்சக் கடை கிடக்கு, பாத்துக்கொண்டு வாரம்" என்று ஏதோ தூரத்து உறவினர் ஒருவரை கடைத்தெருவில் பலகாலத்துக்குப் பிறகு கண்டவர்களைப்போல தமது கடமையில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க, நான் மனைவியையும் மகள்களையும் தேடத் தொடங்கினேன். 

ஒரு கடைக்குள்ளிருந்து வெளிக்கிட்டு இன்னொரு கடைக்குள் அவர்கள் நுழையும்போது  கண்டுபிடித்தேன். "இருக்கிற காசெல்லாம் முடிந்தாலும் உங்க்களுக்குக் கடை பார்க்கிற ஆசை விடாது" என்று நான் சொல்லவும், "எவ்வளவு மிச்சம் வைச்சிருக்கிறியள்" என்று மனைவி கேட்டாள். மீதமிருந்த 50 டாலர்களைக் கொடுத்துவிட்டு, அவர்களை இழுத்துக்கொண்டு சாப்பிடக் கிளம்பினேன்.

சைனீஸ் சாப்பாடு, பசிக்கு அமிர்தமாக இருக்க, மளமளவென்று விழுங்கிவிட்டு, இனி ஏலாது என்று சொல்லிக்கொண்டே பஸ்ஸுக்கு நடக்க, ஒருவாறு மற்றையவர்களும் வந்துசேர சுமார் 2 மணிநேரம் ஓடிவிட்டிருந்தது. 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பஸ் ஓடத் தொடங்கியது. சிலர் நித்திரை கொள்ளத் தொடங்க, இன்னும் சிலர் பைகளுக்குள் கிடந்த உடைகளை வெளியே எடுத்துப் பார்க்க, சிலர் மீதமிருந்த மிக்‌ஷர், பகோடா, சிப்ஸ் என்று அசைபோட்டுக்கொண்டிருக்க நேரம் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் போகும் வழியில் இன்னும் ஏதாவது மோல் இருக்கிறதா என்று யாரோ இணையத்தில் பார்த்துச் சொல்லிவிடவும் பழையபடி மனைவியும், இன்னும் சிலரும் 'அங்கையும் போவம்' என்று அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

பாவம் ஓட்டுனர். 14 மணித்தியாலத்திற்குமேல் ஓடமாட்டன் என்று சொல்லி வெளிக்கிட்டவர் கிட்டத்தட்ட 9 மணிநேரம் ஓடிவிட்டார். இன்னும் 4 மணிநேரமாவது ஓடினால்த்தான் டொரொன்டோவுக்குப் போகமுடியும். அதுக்குள்ள இன்னொரு ஷொப்பிங்கா என்று அலுத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் கேட்பதைச் செய்தால்த்தான் அவரின் முழுப்பணமும் அவருக்குக் கிடைக்கும். ஆகவே வேறு வழியில்லாமல் புறுபுறுத்துக்கொண்டே இன்னொரு மோலுக்குள் பஸ்ஸை நிறுத்தினார். 

இந்த மோல் முன்னர் பார்த்ததுபோலில்லாமல் கடைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் விற்பனை வரியும் கூடவிருந்தது. ஆகவே சில கடைகளுக்குள் மட்டுமே நுழைந்துகொண்டது எமது சனம். இப்படியே இன்னொரு 2 மணிநேரம் போக, கடைகளும் பூட்டும் நேரமாகியது. 

பணம் முடிந்து, உடலில் களைப்பேறி, இனிப்போதும் என்று பலருக்கும் சோர்வு வர தாமாகவே வந்து பஸ்ஸில் ஏறிக்கொள்ள ஓட்டுனர் பழையபடி அவசரத்துடன் ஓடத் தொடங்கினார்.

10 மணியளவில், அமெரிக்க - கனடா எல்லையிலுள்ள டூட்டி ப்ரீ கட்டிடத்தில் மீண்டும் பஸ் நின்றது. பெண்கள் பெர்ஃபியூமும், ஹான்ட் பாக்கும் வேண்ட வெளிக்கிட, ஆண்கள் தனியே 'தண்ணிப் போத்தல்' வேண்டப் புறப்பட இன்னொரு மினி ஷொப்பிங் அங்கே தொடங்கியது. ஏதோ டூட்டி ப்ரீயில் தண்ணி வாங்காட்டி தண்ணியே அடிக்காத மாதிரித்தான் சனத்தின்ர எண்ணம். அவ்வளவு உசாராக தண்ணிப் போத்தல்களை வாங்கி ட்ரொலி ஒன்றிற்குள் அடக்கிக் கொண்டு சனத்தோட சனமாக கியூவில நின்று, விலையே கேட்காமல் கிரெடிட் காட்டை விசுக்கி, சந்தோசமாக வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஏறும்போது 11 மணி !

அப்பிடியே கஸ்ட்டம்ஸ் விசாரணை, பல்லிலிப்புகள், கேள்விகள், சடையல்கள் என்று கஸ்ட்டம்ஸ் விட்டு வெளியே வந்து, பஸ்ஸில் ஏறி, மறுபடி ஓடி....ஒருவாறு 12;30 மணிக்கு ஸ்னோபோல் கிரசன்ட்டில உள்ள அக்காவீட்டில் வந்து இறங்கினோம். 

அத்துடன் எமது அந்த அமெரிக்கப் பயணம் முற்றுப் பெற்றது ! அப்பாடா எழுதி முடிக்கவே களைக்குது எனக்கு !

 

வாசித்த எமக்கே களைக்குது :) எழுதின உங்களுக்கு களைக்காதா என்ன? நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் ரகு அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நினைவில் வைத்து எழுதுவது நன்றாக உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.