Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNAக்கு சோதனையா? ஆயின் TNPF அதனை சாதனையாக்குமா? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் போவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் த.தே.ம.மு க்கும் இடையே  மூர்க்கத்தனமான போட்டிப் பிரச்சாரங்கள்  நிகழத் தொடங்கியுள்ளன.

இப்  பிரச்சாரங்களில் த.தே.ம.மு சார்பில்  பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக  மாணவர்களில்   ஒரு பகுதியினர், அதன் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களில்  ஒரு பகுதியினர், பல்கலைக் கழக ஆசிரியர்களில் ஒரு  பகுதியினர், பாடசாலை ஆசிரியர்கள் சிலர், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகத்தில் உள்ள சிலர் எனப்  பலதரப்பட்டவர்கள்  இத்தகைய  பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடைய  நோக்கம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  இல்லாது செய்ய வேண்டும் என்பதாக   இருக்கிறது.  அதன் பின்  நடக்க  வேண்டியது தானாக நடக்குமா? அல்லது  தமிழ்த்தேசியக்   கூட்டமைப்பை வலுவிலக்கச்   செய்தபின்   தாம் மேற்கொள்ள  வேண்டிய  அவசிய நடவடிக்கைகள் பற்றி  இவர்கள்  தெளிவான சிந்தனையைக்  கொண்டுள்ளனரா?

த.தே. கூட்டமைப்பில் உள்ள சில தனி நபர்களுடனான முரண்பாட்டில் முழுக் கூட்டமைப்பையே நிர்மூலமாக்கும் நோக்கத்தை த.தே.ம.மு கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்ததாகப் பரவலாகக் கூறப்படுகிறது (அந்தக் கருத்தை அவர் மறுத்தால் அதனை மீளப் பெற்றுக் கொள்கிறேன்). “சம்பந்தனும், சுமந்திரனும் இல்லாத கூட்டமைப்பில் நாம் இணைந்து கொள்ளத் தயார்” அவர் அப்படிக் கூறியது உண்மையானால், கூட்டமைப்பில் உள்ள ஏனைய தலைவர்கள் குறித்து அவருக்கு முரண்பாடு இல்லையா? அவ்வாறாயின் சம்பந்தன், மற்றும் சுமந்திரன் ஆகியோர் மீதான முரண்பாடு மட்டும் கூட்டமைப்பை வலுவிழக்கச்  செய்வதற்கான பிரதான காரணமாக அமைய முடியுமா?

அண்மையில் முதலமைச்சர் எஸ் கே  விக்கினேஸ்வரன்  அவர்கள்  புலம் பெயர்ந்த தமிழ்  மக்கள்  வாழ்கின்ற  நாடுகளுக்கு பயணத்தை  மேற்கொண்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களையும், அகத்தில் உள்ள தமிழர்களையும் இணைக்கும் பாலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்க மாட்டாரா? என்ற கோரிக்கையும் அப்பொழுது ஊடகங்களில் வெளிப்பட்டது.

குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரித்தானிய விஜயத்தை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ்த் தேசிய முன்னணிக்குப் பாய வைப்பதற்கான பயணமாக மாற்றப்   பலர் பகீரதப் பிரயத்தனைத்தை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.

தவிரவும், சம்பந்தன், மற்றும் சுமந்திரன்  இல்லாத கூட்டமைப்பின்  தலைவராக முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகளும் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

இங்கு கூட்டமைப்பின் தலைவர் மாறுவது  பற்றியோ அல்லது  சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பில்  இருந்து  வெளியேற்றப்படுவது  பற்றியோ யாருக்கென்ன  கவலை. அதுவல்லப்பிரச்சனை.

மாகாண சபை முறைமையை ஏற்றது தவறு,  மாகாண சபைத் தேர்தலில் பங்கு கொண்டது தவறு,  பிள்ளையானும், வரதராஜப்பெருமாளும்  நிராகரித்த அல்லது  பிரயோசனம்  அற்றது  எனக் கூறிய மாகாண சபையை ஏற்பவர்களைத்  துரோகிகளாகத்தானே கருத வேண்டும் எனக்  கூறியவர்கள்,  கொழும்பு 7ல் தனது வாழ்நாள் காலத்தின் பெரும்பகுதியைக் கழித்த விக்னேஸ்வரனை முதலமைச்சராக நியமித்தது தவறு எனக்  கூறியவர்கள் . வாசுதேவநாணயக்கார மகிந்த ராஜபக்ஸவின் விசுவாசி. அத்தகைய  விசுவாசியின்  சம்பந்தியான துரோகியை எப்படி முதலமைச்சராக்க முடியும்?  எனக்கேட்டவர்கள்  அதே மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனைக்   கூட்டமைப்பின் தலைவராக்க  விரும்பியதையும்  தமிழ்த்  தேசிய மக்கள்  முன்னணிக்கு  ஆதரவு  வழங்கக்  கோரியதையும்  என்னவென்று  சொல்ல?

புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்த போது முன்னாள் நீதியரசரும், வடக்கின் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனைிடம், தமிழ்த் தேசிய முன்னணியை  ஆதரிக்கும்  தரப்பினர் ஒரு கோரிக்கையை முன்வைத்ததாக அறிந்தேன். “நீங்கள் ஏன் தமிழ்த் தேசிய முன்னணியை ஆதரிக்கக் கூடாது?” என்பதே  அது அதற்கு  அவர் மிகத் தெளிவான பதிலை வழங்கியுள்ளார். “ நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்தேன்.அந்தக் கட்சியில் இருந்து விலகிப்  பிறிதொரு கட்சியை ஆதரிக்கும் தேவை எனக்கு இல்லை”.

பாராளுமன்றக் கதிரைகளைப் பிடிப்பதற்காகத்  தேர்தலில்  இப்படியெல்லாம்  செய்யலாமா?  எனக்கு புரியவில்லை.

மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணியுங்கள்,  ஜனாதிபதி  தேர்தலை புறக்கணியுங்கள்,  என்ற கோசங்களை முன்வைத்த பலர் இலங்கையில்  ஒரு பாராளுமன்ற தேர்தல் இவ்வளவு விரைவாக  வருமென்று   நினைத்திருக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலின்  பின்  ஜனாதிபதி  தேர்தல்  வரும்  அத் தேர்தலில் மகிந்த  ராஜபக்ஸவே  மீண்டும்  ஜனாதிபதியாக  வருவார்.  அவரை எவரும் வெல்ல முடியாது.  மகிந்த  மீண்டும்  ஜனாதிபதியாகத்  தெரிவு செய்யப்பட்ட பின்  பாராளுமன்ற  தேர்தலை  அறிவிக்க மாட்டார்.  அவ்வாறு  சென்றால் அப்போது அவர்  கையில் இருந்த முன்றில்  இரண்டு பெரும்பாண்மை கிடைக்க மாட்டாது.  எனவே  ஜே.ஆர் செய்தது போல் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்ற ஆயுட்காலத்தை மேலும்  6 வருடங்களுக்கு நீடிப்பார்  என்றே பலரும்  கணக்கிட்டிருந்தனர்.  இந்த நிலையில்,  தமிழ்த் தேசிய  அரசியற்  செயற்பாட்டாளர்கள்  ஐ.நாவை நோக்கிய தமது கோரிக்கைகளை வைத்து  மகிந்த ராஜபக்ஸவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை முடுக்கிவிட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கிய விமர்சனங்களையும் முன்னெடுத்தனர்.

இக் காலப்பகுதியில் மக்களிடத்தே தமது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த வேலைத் திட்டங்களையோ,  தமது கொள்கைகளையோ,  அல்லது பாராளுமன்ற  அரசியலுக்கான  அணிதிரட்டல்களிலோ  ஈடுபடவில்லை. மாறாகப்  பத்திரிகை  அறிக்கைகள்,  வெளிநாட்டு சந்திப்புகள், ஜெனிவாப் பயணங்கள் என்ற அளவிலேயே தமது செயற்பாடுகளைச் சுருக்கி இருந்தனர்.

இவர்கள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், பின்னர் கிளிநொச்சியில் சிறிய அளவிலும் தமது  செயற்பாடுகளை முன்னெடுத்து தமிழர் தாயகக் கோட்பாட்டை ஒரு நாடு இரு தேசக் கோரிக்கையாக சுருக்கிக் கொண்டனர்.

இவ்வாறான சூழல் தொடருகையில்  ஜனாதிபதி  தேர்தல் அறிவிப்பு வெளியாகியது.  வெளியாகிய  பின்  மைத்திரிபால  சிரிசேன பொது வேட்பாளராக  களமிறங்குவார்  என  எவரும்  எதிர்பாராத நிலையில் அவர் மகிந்தவுக்கு எதிரான அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளராக  களமிறங்கினார்.  அப்போது கூட மகிந்தவை அவரால் ஒருபோதும் வெல்ல முடியாது என்ற பலரின் நினைப்பு தவறானது.

தீவிர  தமிழ் தேசியச்  செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள் தலைகீழாக மாறின. 100 நாள் வேலைத்திட்டத்தின் பின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதும் உறுதியானது.

ஜனாதிபதித்  தேர்தலை புறக்கணியுங்கள், மகிந்தவின் மீள் வருகை ஒன்றே, ஐநாவை நோக்கிய  தமிழ் மக்களின்  நீதிகோரைலை  துரிதப்படுத்தும், அதற்கான  சூழல்  வரும்  எனக்  கூறியவர்கள் அவசர அவசரமாக பாராளுமன்ற தேர்தலுக்கு  இப்பொழுது ஆயத்தமாகிறார்கள்.

மைத்திரியின்  ஆட்சியில்  துளி  அளவு கூட மாற்றம்  இல்லை என்று சொன்னவர்கள்,  அவரது ஆட்சியில் கிடைத்த அரசியல் இடைவெளியை தமக்குச்  சாதகமாகப் பயன்படுத்தி  யாழ்ப்பாணத்திற்கு வெளியில் வன்னியிலும்,  தேர்தல்  அலுவலகங்களைத்  திறக்கத் தொடங்கினார்கள். மைத்திரியின்  ஆட்சியினால்  பயனில்லை என்று சொன்னவர்கள், இடையிட்டு  புலனாய்வாளர்கள்  எம்மைத் தொடர்கிறார்கள்  என அறிக்கைகளை  விட்டு  ஏனைய கட்சிகளைப் போல் தாமும் தாராளமாகப்  பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

குறைந்தது மாகாண சபைத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, அல்லது 2010 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்பாவது  வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மேற்குறித்த கட்சி தமது அரசியற்  பணிகளை ஆரம்பித்திருக்க  வேண்டும்.  மாவட்டம் தோறும் அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். கிராமட்டங்களில் மக்களைத் திரட்டி அரசியற் தெளிவூட்டும்  நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்க  வேண்டும்.

பிரதான  தமிழ்த்தேசியக்  கட்சியாக  தன்னை அடையாளம் காட்டி உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  என்ன தவறுகளை விடுகிறது.  அக்கட்சியின் தலைமை  இணக்க அரசியலுக்குள் பிரவேசிக்கிறதா அல்லது  சலுகை அரசியலுக்குள் கால் பதிக்கிறதா? கட்சியின் தலைமை தமிழ் மக்களின் போராட்டத்தை, தியாகங்களை காட்டிக் கொடுக்கிறதா? கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களின், தலைவர்களின் தவறுகள் என்ன? கூட்டமைப்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா? கதிரைச் சுகங்களுக்காக தமிழ் மக்கள் மீது சவாரி செய்கின்றதா?  என்பது போன்ற விடயங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை அரசியல் மயப்படுத்தி இருக்க வேண்டும். அதனூடாக தமிழ் மக்களுக்கான மாற்றுத்  தலைமையாக தாம் உருவாகுவதற்கான காரணத்தையும், அதன் வழி முழு மக்களும் தம்மை ஏற்றுக் கொள்ளும் மனநிலையினைத்  தமது நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனூடாக  ஊடாகக்  கூட்டமைப்பின் மீது  அதிருப்தி  கொள்பவர்கள்  சரியான திசையில் திரும்ப  ஏதுவாகும்.

 குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்படுகின்ற  அதிருப்தி, விரக்தியாக மாறாமல், அதன் வழி இவங்களுக்கு வாக்களிப்பதை விட, UNPக்கோ, அல்லது  EPDPக்கோ, அல்லது SLFPஅங்கயனுக்கோ வாக்களிக்கலாம் என்கிற  நிலமை ஏற்படாதிருக்கும். .

கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக தொடுக்கப்படும் ஆரோக்கியமானதும்  ஆரோக்கியமற்றதுமான தாக்குதல்களால் பலர் ஒருவித அரசியல் விரக்திக்குத்  தள்ளப்பட்டு இருக்கிறார்கள். காரணம், பலர் 30 வருட ஆயுதப் போராட்டத்தில் அடைந்த வலிகளைக்  கூட்டமைப்பு முழுமையாக இல்லாது போகச் செய்யாது விட்டாலும் மேலும் அதிகரிக்க விடாமல் குறைக்கும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை படிப்படியாக அல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே தகர்க்கப்படும்  என்ற  அச்சம்  தோன்றியுள்ளது. தீவிர தமிழ் தேசிய அரசியல்  அல்லது  எதிர்ப்பு  அரசியல் பாரிய எதிர் விளைவுகளைத்  தோற்றுவிக்கும் எனச்  சிலர் அச்சமடையத்  தொடங்கியுள்ளனர்.

சிலர் பேசாமல் வாக்களிக்காமல் விடுவோம் எதையாவது செய்து தொலைக்கட்டும்  என எண்ணுகின்றனர்.

சிலர் இவர்கள் இருவரும் மாறி மாறி ஒன்றைத் தான் கதைக்கிறார்கள். பேசாமல்  ஈபிடிப்பிக்கு வாக்களித்துவிட்டுப் போவோம். குறைந்தது கொஞ்ச அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புக்கள்  ஆவது  கிடைக்கும் எனக்  கருதுகிறார்கள்.

சிலர் 1977 ல் இருந்து மாறி மாறி இவர்களுக்கு வாக்களித்து  என்ன பிரயோசனம்  ஆட்சிக்கு வர இருக்கிற UNPக்கு வாக்களிப்பின் அரசாங்கத்திட்டம்  இருந்து வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தியை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறார்கள்.

இளையவர்கள், படித்த நடுத்தர வர்க்கத்தினர், இணைய வெளியில் உலா வருகிறவர்கள், மாற்றம் வேண்டும் அதற்காக மாற்றத்திற்கான அணிக்கு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம் என நினைக்கிறார்கள்

முதியவர்கள் கூட்டமைப்பு தங்களுக்குள் பிடுங்குபட்டாலும், ஒன்றா நிற்கிறார்கள், அனுபவம் உள்ளவர்கள்,  நீண்டகாலம் அறிமுகமானவர்கள்   அவர்களுக்கு வாக்களிப்போம் என நினைக்கிறார்கள் .

ஆக இங்கே தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு வாக்குத் திரட்டும் அரசியலை முதன்மைப் படுத்திய பிரசாரங்களே இடம் பெறுகின்றன. மக்களுக்கு போதியளவு விளங்கங்களை  அளித்து  யாரும் பிரச்சாரம்  செய்வதாக இல்லை. மக்களுக்கோ தம்முன்னுள்ள  பிரச்சனைகளை  ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளைத்தரக்கூடிய  அரசியற் கட்சிகளைத் தெரிவு செய்யக்  கால அவகாசம் இல்லை.

ஆக த.தே.கூ க்கும் த.தே.ம.மு க்கும் இடையிலான  மோதலாக  விரிந்திருக்கும் இத்தேர்தல்களத்தினால் நன்மையடைப்போவது சிங்கள  அதிகார வர்க்கமே என்ற  அச்சம்  உருவாகத்  தொடங்கியுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122361/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் கொம்பனியை ஓடஓட விரட்டவேண்டும்.  !

இது என்ன புது விடயமா இவர்களுக்கு .பரம்பரையே இதே தொழில் தானே ?

அதைவிட தம்மால் முடியாவிட்டால் எதையும் குழப்பும் வாலுகளும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரையேஈதைத்தானே சொல்லுது கூடமைப்பை ஓடவிரட்டிப்போட்டு முண்ணணி என்ன செய்யப்போகுது எண்டு அப்போ கஜன் கொம்பனியை விரட்டிப்போட்டு நீங்கள் என்ன செய்யப்போகுறீர்கள்? தவிர வடக்குக் கிழக்கில் ஜனநாயகம் தளைக்கப் புலிகள் அழியவேண்டும் எனக்கூறியவர்கள், இப்போ ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் இன்னொரு குழுவுக்குக் குத்தகை விடவெல்லவோ கூவுகிறார்கள். மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் விரும்பினால் அவர்கள் ஓட ஓட விரட்டட்டும், இப்ப ஏன் அவதிப்படுகிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் த.தே.ம.மு க்கும் இடையே  மூர்க்கத்தனமான போட்டிப் பிரச்சாரங்கள்  நிகழத் தொடங்கியுள்ளன.

இப்  பிரச்சாரங்களில் த.தே.ம.மு சார்பில்  பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக  மாணவர்களில்   ஒரு பகுதியினர், அதன் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களில்  ஒரு பகுதியினர், பல்கலைக் கழக ஆசிரியர்களில் ஒரு  பகுதியினர், பாடசாலை ஆசிரியர்கள் சிலர், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகத்தில் உள்ள சிலர் எனப்  பலதரப்பட்டவர்கள்  இத்தகைய  பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர்.

இத் தேர்தலில்... கஜேந்திரன் அணியினர் ஆறு தொகுதியை கைப்பற்றுவார்கள்.
மற்ற ஒரு தொகுதி... ஐ.தே.க. வுக்கு கிடைக்கும் என்று... நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

கூத்தமைப்பின்  கூட்டத்துக்கு, ஆக்களை வர வைக்க...  பல பரிசுப் பொருட்களை கொடுத்தும்...
சனம் வாயில் வந்த படி பேசி, திட்டி..... அனுப்புகிறார்களாம். சிலர்.. செருப்பு பிய்யும்... என்று, காலில் கிடந்த செருப்பை எடுத்துக் காட்டியவுடன்....
ஆள் பிடிக்கப் போனவர்கள்... "பிச்சை வேண்டாம் நாயை பிடி" என்ற கணக்கில்  ஓடுகிறார்களாம்.

bike_emote_by_kimraifan.gifநமது.... வெற்றியை, நாளை சரித்திரம் சொல்லும்.... இப்படை, தோற்கின் எப்படை வெல்லும்.bike-riding-smiley-emoticon.gif:):grin:

Edited by தமிழ் சிறி

கஜேந்திரன் கொம்பனியை ஓடஓட விரட்டவேண்டும்.  !

அவரை என்னத்துக்கு அரசியலில்..... மக்கள் தெளிவாய் இருப்பினம்.. 

சமபந்தர் அண்ட் கோ க்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் குடுத்தால் ஒன்றும் அழிந்து போகாது

தலைவருக்கு 30 வருடங்களைக் குடுத்தோம் தானே 

:grin:

வடமராட்சியில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (புகைப்படங்கள்)

ரணிலுடன் சமாதான ஒப்பந்தம் அன்ரன் பாலசிங்கம்.மகிந்தாவுடன்
தமிழ்செல்வன் ஒப்பந்தன் பணம் வாரி இறைத்தால் நீ தான் அடுத்த சனாதிபதி தமிழ்மக்களை வாக்களிக்காது தடுப்பம்.ஆனால் என்ன நடந்தது .இப்ப தமிழ் தேசியகூட்டமைப்புடன் பலமான தமிழ்மக்களின் அரசியல் கட்சி இதை உடைப்பதற்கு கயெந்திரன் குழுவை அதே மகிந்தா காசு கொடுத்து தமிழ்தேசியத்தை உரக்க சொல்லி வளத்து ஒட்டு மொத்த தமிழனையும் இவர்கள் ஊடாக நடு ரோட்டிற்கு கொண்டுவந்து மலைநாட்டு தமிழனனை எப்படி சிங்களதேசம் ஆளுதோ அதேபோல வடக்கு கிழக்கும் ஆளுவார்கள் கொஞசம் பொறுத்திருங்கள்.குதிரை கஐனின் அண்ணையை 2009ல் கடத்தி இவரை விடுவதற்கு கோத்தா ஒப்பந்தம் பன்னி தான் விடப்பட்டவர். அதன் பின் வெளிநாட்டில் யுத்தம் முடியும் வரை ஒழிந்திருந்து விட்டு குதிரை கஐன் நாட்டிற்கு போய் ஈழ அரசியல் சுதந்திரமாக செய்கிறார்.தமிழனிற்கு மறதி யா¨ஷ்தி இதை இப்படியபன அடிவருடிகள் தங்கள் சுயஅரசியலிற்கு பயன்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு காசு வந்தால் எதுவும் செய்வார்கள்! இப்ப மகிந்தவின் காசு நல்லாப் புழங்குது போலை !

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புது விடயமா இவர்களுக்கு .பரம்பரையே இதே தொழில் தானே ?

அதைவிட தம்மால் முடியாவிட்டால் எதையும் குழப்பும் வாலுகளும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா ?

அர்சுன் அடிக்கடி பொன்னம்பலம் பரம்பரை மக்களை ஏமாற்றியவர்கள் கொள்ளையடித்தவர் என்று எழுதுகிறீர்களே

 உங்களுக்கு தெரிந்த ஆதாரங்கள் ஏதும் இருந்தால் கொஞ்சம் எழுதுங்களேன்.

நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

இல்லை கூட்டணி வெல்வதற்காகத் தான் இப்படி திரித்து எழுதுகிறீர்களா?

ஆதாரமில்லாமல் சம்பந்தன் வாலுகள் எழுதலாம் என்ற விதி இங்கு உள்ளதுபோல இருக்கு .

Edited by spyder12uk

உண்மைக்கு ஆதாரம் தேவையில்லை ஒரே இலையில் ஆறு கட்சி சேர்ந்து சாப்பிட்டுவிட்டு ஒன்று தனித்து பிரிந்து தனக்குதான் அதுசொந்தம் என்று ஒலம்மிட்டால் மக்கள் என்ன முட்டாளா.இல்லாட்டி புலத்து சொத்து வியாபாரிகளின் சுயநல அரசியலிற்கு இவர்களின் உதவி தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.

 

இது என்ன புது விடயமா இவர்களுக்கு .பரம்பரையே இதே தொழில் தானே ?

அதைவிட தம்மால் முடியாவிட்டால் எதையும் குழப்பும் வாலுகளும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா ?

மக்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று ...ஆனால் தமிழ் தேசிய முன்னணி வளரும் அளவுக்கு கூட்டணி என்ன செய்தது ....கூட்டமைப்பு சரியாக மக்கள் எதிர் பார்ப்புகளை செய்தால் ஏன் மக்கள அடுத்த கட்சி பற்றி நினைக்கிறார்கள் ....சம் சும் என்ற இரண்டு விசமிகளால் தான் மக்கள் வாக்குகள் சிதற போகின்றது ...மகிந்தவிடம் பணம் வாங்கி செயல்படும் சுமந்திரன் ஒரு வேட தாரி ...இதுதான் இப்ப உள்ள யதார்த்தம் ..

சும்மா புலம் பெயர் தமிழர்களை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை ...தமிழரின் வாக்குகளை எடுத்து சிங்களவனிடம் கழுவும் கேவலமான இந்த இரண்டு அரசியல் வாதிகளை முன்னிறுத்தும் அனைவரும் தமிழனை விற்கும் கள்ள வியாபாரிகளே .....

இது என்ன புது விடயமா இவர்களுக்கு .பரம்பரையே இதே தொழில் தானே ?

 

1000% உண்மை 

பேரன்...தகப்பன்...கஜே....பத்தாக்குறைக்கு என்னும் ஒருசில அப்புகாத்து கூட்டம்

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.