Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

Featured Replies

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரியின் ஆரம்பம் எப்படி என்று தெரியாது வாலி.
அங்கு....கல்லூரி இல்லப் போட்டிகள் நடக்கும் போது...
நான்கு பிரிவாக இருக்கும். அதில் நீங்கள் கூறிய.... பேர்சிவல் என்ற பெயரிலும், ஒரு அணி இருந்தது.
நான்... "வில்க்ஸ்" அணி. நீல நிறம். மற்றைய ... இரண்டு பெயர்கள் மறந்து விட்டது.

Romain, Persival, Bullough and Wilks

Romain மஞ்சள்

Persival ஊதா

Bullough பச்சை

Wilks நீலம்

1005944_498628966873334_269699626_n_zps3

Under Thomas captainship in 1982 JCC 1st Team.

https://www.facebook.com/pages/Jaffna-Central-College-Online/327439817355849

Edited by நவீனன்

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவலுக்கு நன்றி, நவீனன்.

இந் நேரத்தில்... யாழ். மத்திய கல்லூரியில் படிக்கும் போது....  என்னால், இன்றும்... மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது.
சென்ற். ஜோன்ஸ்  -  சென்றல் மட்ச் நடந்தது. நானும்...  பத்து வயதுக்குள் இருக்கும் போது, வீட்டில் அனுமதி பெற்று பார்க்கப் போய்... 
அங்கு.... நடந்த மட்சையும் ரசித்து, கும்மாளமிட்டு.... ஐஸ்கிரீம், கரம் சுண்டல், தும்பு மிட்டாஸ்  எல்லாம் வாங்கி சாப்பிட்டு...
மட்ச் முடிந்து, வீட்டு போக வெளிக்கிடும் போது.... எனது காலடியில், ஒரு விலை உயர்ந்த "பார்க்கர்" பேனை கிடந்தது.
அதனை பெருமைடன் எடுத்து... எனது பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு.... வீட்டிற்குச் சென்று, அம்மாவிடம் காட்டிய போது....
அவ சொன்னா... " இப்ப பின்னேரம் 7 மணி"  இப்ப... பிந்தி வந்ததுக்கே.... அப்பா, தேடிக் கொண்டு இருக்கிறார்."  எனக்குத் தெரியாது... அவரிட்டை காட்டு. என்று சொல்லி விட்டா.

நான் ....அதை அப்பாவிடம், அந்தப் பேனையை காட்டிய போது..... 
துள்ளிக் குதித்து..... இந்தப் பேனையை , எங்கு எடுத்தாயோ.....
அந்த இடத்தில், கொண்டு போய்... வைத்து விட்டு வா..... என்றார்.
அதற்கு... மறு வார்த்தை இல்லை.... பசி, நித்திரை  மயக்கம்.... என்ன செய்வது, என்று தெரியாமல்.... திரும்ப மைதானம் வரை சென்று,அந்தப் பேனையை... இருந்த இடத்தில் வைத்து விட்டு வந்தேன்.
அந்தச் சம்பவம், எனது வாழ்வில்.... பெரிய திருப்பு முனையை, அமைத்தது என நினைக்கின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

11667366_10153080375638823_3898034080598

  • கருத்துக்கள உறவுகள்

...யாழ் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.....றீகல் தியேட்டருக்கு முன்னால் தள்ளுவண்டியில் கடலைைப் பொரிவாங்கிச் சாப்பிட்டுக் கொண்ட வேம்படி பொட்டையைலுக்கு கடலை போட்டுக் கொண்டே யாழ்நுலகத்திற்குச் செல்வது தனிச்சுகம்.அதுவும் கிரிக்கட் மடச் என்றால் ஒரே கொண்டாட்டம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...யாழ் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.....றீகல் தியேட்டருக்கு முன்னால் தள்ளுவண்டியில் கடலைைப் பொரிவாங்கிச் சாப்பிட்டுக் கொண்ட வேம்படி பொட்டையைலுக்கு கடலை போட்டுக் கொண்டே யாழ்நுலகத்திற்குச் செல்வது தனிச்சுகம்.அதுவும் கிரிக்கட் மடச் என்றால் ஒரே கொண்டாட்டம்தான்.

என்னது பொரிவாங்க ரீகல் தியேட்டர் வரைக்கும் வேம்படி வந்ததோ???? :shocked:
இருக்கும்.....இருக்கும் :innocent:
10.30 பாக்க கிளாஸ் கட்டடிச்ச கண்மணிகள் எல்லே :cool:

 வெலிங்டன் தியேட்டரிலை.....:love:

...யாழ் மத்திய கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.....றீகல் தியேட்டருக்கு முன்னால் தள்ளுவண்டியில் கடலைைப் பொரிவாங்கிச் சாப்பிட்டுக் கொண்ட வேம்படி பொட்டையைலுக்கு கடலை போட்டுக் கொண்டே யாழ்நுலகத்திற்குச் செல்வது தனிச்சுகம்.அதுவும் கிரிக்கட் மடச் என்றால் ஒரே கொண்டாட்டம்தான்.

சென்றல் சனம் யாழ் இந்துச் சனம் மாதிரி ஏன் யூனிக்கு போறதில்லை என்று நல்லா விளங்குது தானே சகோக்கள் ... 

எங்கை சுமேயைக் காணேலை இங்கால் பங்கம்???? 

இவை தானே 1970 களின் கடைசிப் பகுதிகளிலோ /1980 களின் முற்பகுதியிலோ என்று ஞாபகம் இல்லை பெரிய அமர்களமாய் வந்து மகாஜனாவிடம் கால் பந்தில் அடி வாங்கித் தலை தெறிக்க ஓடியவர்கள் ...:grin::grin:

  • தொடங்கியவர்

யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு

news

 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று  காலை 8 மணிக்கு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் ஆரம்பமாகின.

ஆரம்ப நிகழ்வுகளில் யாழ் .மெதடிஸ் தேவாலயத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது .

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் ஒலிம்பிக் வீரருமான கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் கலந்துகொண்டார்.

கல்லூரியின் நிறுவுநர் முன்னாள் அதிபர் வண. லின்ஸ் அவர்களின் திருவுருச்சிலைக்கான மலர் மாலையை கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் அணிவித்தார்.
 
நிறுவுநர் தின நினைவுப் பேருரையை ஓய்வுநிலை நூலகர் க.மணிவாசகர் நிகழ்த்தினார். நிகழ்வில் கல்லூரின் பிரதி அதிபர் உப அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் 200வது ஆண்டு விழா நிகழ்வுகள் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
சரி இப்ப உங்கள் பிரச்சனை  என்ன? :grin: ஒரு கல்லூரி 200 வருடம் என்பது பெரிய விடயம் அந்த செய்தியில் பலரும் வாழ்த்து தெரிவித்து தங்கள் கல்லூரி அனுபவத்தை சந்தோசமாக நினைவு கூறுகிறார்கள்.  நீங்கள் ஏன் இப்ப குத்தி முறிகிறீர்கள் இதுக்குள் நின்று:wink:

அங்கு படித்தவர்களும் உங்கள்  மொழியில் யூனி  தமிழில்( பல்கலைகழகம், சர்வகலாசாலை) போய் பட்டம் பெcற்று உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஒப்பீட்டு அளவில் கூட குறைய இருக்கலாம். ஜஸ்டின் எழுதிய பதிவை 4 தடவை வாசியுங்கோ அப்ப விளங்கும்.

இந்தப் பரந்த பழைய மாணவர் கூட்டம் இருப்பதற்கு காரணம் ,  பணம், அந்தஸ்து, மதம் என்று எதுவும் பாராமல் எல்லோரையும் கதவு திறந்து அரவணைக்கும் மத்திய கல்லூரிக் குணம் தான்.  இதுதான் ஜஸ்டின் எழுதியது.

ஓஒ நீங்கள் மகாஜனாவா,  சரி ஒரு தடவை கால் பந்து போட்டியில் வென்று விட்டீர்கள். சந்தோசம்:grin:   ஆனால் கிரிக்கெட்டில் எப்போதும் இன்னிங்க்ஸ்

 தோல்விதான் மகாஜனாவிற்கு. அதை பற்றி ஏதும் தெரியுமா?:grin:

Edited by நவீனன்

சரி இப்ப உங்கள் பிரச்சனை  என்ன? :grin: ஒரு கல்லூரி 200 வருடம் என்பது பெரிய விடயம் அந்த செய்தியில் பலரும் வாழ்த்து தெரிவித்து தங்கள் கல்லூரி அனுபவத்தை சந்தோசமாக நினைவு கூறுகிறார்கள்.  நீங்கள் ஏன் இப்ப குத்தி முறிகிறீர்கள் இதுக்குள் நின்று:wink:

அங்கு நான் படித்த எல்லோரும் உங்கள்  மொழியில் யூனி  தமிழில்( பல்கலைகழகம், சர்வகலாசாலை) போய் பட்டம் பெற்று உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஒப்பீட்டு அளவில் கூட குறைய இருக்கலாம். ஜஸ்டின் எழுதிய பதிவை 4 தடவை வாசியுங்கோ அப்ப விளங்கும்.

இந்தப் பரந்த பழைய மாணவர் கூட்டம் இருப்பதற்கு காரணம் ,  பணம், அந்தஸ்து, மதம் என்று எதுவும் பாராமல் எல்லோரையும் கதவு திறந்து அரவணைக்கும் மத்திய கல்லூரிக் குணம் தான்.  இதுதான் ஜஸ்டின் எழுதியது.

ஓஒ நீங்கள் மகாஜனாவா,  சரி ஒரு தடவை கால் பந்து போட்டியில் வென்று விட்டீர்கள். சந்தோசம்:grin:   ஆனால் கிரிக்கெட்டில் எப்போதும் இன்னிங்க்ஸ்

 தோல்விதான் மகாஜனாவிற்கு. அதை பற்றி ஏதும் தெரியுமா?:grin:

:shocked: சகோ உண்மையைத் தானே எழிதினேன் <_<

  • கருத்துக்கள உறவுகள்

சென்றல் சனம் யாழ் இந்துச் சனம் மாதிரி ஏன் யூனிக்கு போறதில்லை என்று நல்லா விளங்குது தானே சகோக்கள் ... 

எங்கை சுமேயைக் காணேலை இங்கால் பங்கம்???? 

இவை தானே 1970 களின் கடைசிப் பகுதிகளிலோ /1980 களின் முற்பகுதியிலோ என்று ஞாபகம் இல்லை பெரிய அமர்களமாய் வந்து மகாஜனாவிடம் கால் பந்தில் அடி வாங்கித் தலை தெறிக்க ஓடியவர்கள் ...:grin::grin:

இந்தக் கருத்தோட்டம் தவறு. யாழ் மத்திய கல்லூரி.. யாழ் இந்து போல் வடிகட்டி மாணவர்களை தெரிவு செய்வதில்லை. மேலும்.. யாழ் மத்திய கல்லூரியில் சிறப்பாக கல்வி கற்கின்ற பலர் இடைநிலைக் கல்வியின் ஆரம்பத்தில்.. (ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு).. அல்லது இடைநடுவில் அல்லது சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறோடு யாழ் இந்து க்கு ஓடி விடுகிறார்கள். 

யாழ் மத்திய கல்லூரியும் யாழ் இந்து போல் வடிகட்டி தெரிவுகளை செய்வதோடு இடைநடுவில் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடுவதையும் தடுக்குமானால்.. நிச்சயம் யாழ் மத்திய கல்லூரி கல்வியிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை காட்டி நிற்கும்.

வேம்படியும்.. யாழ் இந்துவும் நல்ல பெறுபேறுகளை காட்டுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. காரணம் அவர்கள் வடிகட்டி மாணவர்களை உள்வாங்கிக் கொள்கிறார். அந்தத் தராசில் யாழ் மத்திய கல்லூரியை வைத்து நோக்குவதே அடிப்படைத் தவறாகும். யாழ் மத்திய கல்லூரி இந்த விடயத்தில் கூடிய அளவு சுதந்திரத் தன்மையோடு இயங்குவது வரவேற்கத்தக்கது எனலாம். 

ஆரம்ப காலங்களில் கடும் சட்டதிட்டங்கள் நிறுவப்பட்டு அமுல்படுத்திய காலங்களில் யாழ் மத்திய கல்லூரி யாழ்ப்பாணத்தின் சிறந்த கல்லூரியாக விளங்கியதை இங்கு எடுத்துக்காட்டாக முன் வைப்பது அவசியம். :)

நான் யாழ் இந்துவில் அதிக காலத்தை கழித்திருந்தாலும்.. நியாயம் என்ற ஒன்றை பேசுவது அவசியம். !!!

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் உங்கள் விரிவான பதிலுக்கு. சிலருக்கு என்னத்தை எழுதினாலும் விளங்கபோவதில்லை.

மத்தியகல்லூரிக்கு எனது வாழ்த்துக்கள்............

இந்துவில் கல்விகற்றபோதும் மத்தியகல்லூரி மைதானத்தில் உருண்டு பிரண்டது அதிகம்...

கோட்டை அடிபாடு மத்திய கல்லூரியின் வீழ்ச்சியில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது.

95க்கு பிறகு வேம்படி ஸ்போர்ட்ஸ் மீட் வேம்படி மைதானத்தில் நடக்கதொடங்கிவிட்டதால் நாம் குடுத்து வைக்கவில்லை.

சிவபூசைக்குள் கரடியின் வருகை மிகவும் வருத்தமளிக்கிறது

பிக் மச்சில் இந்துக்கலூரியின் ஆதரவு மத்தியகல்லூரிக்கே

மத்தியகல்லூரியின் நினைவுகளை மீட்கும் போது என் ஞாபகதிற்கு வந்தவர் கிரிக்கெட் மணிவண்ணன்

யாழ் மணிக்குரல் முதலாளியின் மூத்த மகனாகிய இவர் 1992,1993 காலங்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்.

அப்பொழுது எனக்கு சிறுவயது என்ற போதும் கிரிகெட் என்றால் மணிவண்ணன் தான்.

மிகவும் திறமையான இவர் 6 அடிப்பதை பார்க்க குடுத்துவைக்கவேண்டும். வானில் பந்துகளை பறக்கவிடுவதில் மன்னர். இவருடன் கீப்பர் சுரேஷ் இணைந்தால் சொல்லி வேலையில்லை.

இவரின் கடைசி தம்பியாரின் காலத்திலும் 2003 என நினைக்கிறன் மத்தியகல்லூரி பிக்மட்சில் வென்றது.

இவரின் குடும்பமே ஒரு கிரிகெட் குடும்பம்.

இத்தகைய வீரன் தேசிய அணிக்கு இணைய முயற்சித்த வேளையில் சிங்களவர்களால் லொறியால் இடித்து கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன்....சரியாக தெரியாது.
அவர் மரணித்த அதே ஆண்டில் அவரது தங்கையும் புற்றுநோயால் மரணித்தது யாழ்பாணத்தில் மிகவும் சோகச்சம்பவம் ஆகஇருந்தது.

இன்னும் இரும்பு மனிதன் சன்முகலிங்கத்தால் வளர்க்கப்பட்ட எத்தனையோ வீர்கள் இருக்குறார்கள்.

உயரம் பாய்தலில் அல்லது தத்தி மிரித்து பாய்வதில் ஒரு மத்தியகல்லூரி வீரன் ஆசியமட்டத்தில் சாதனை படைத்தததாக கேள்விப்பட்டிருக்குறேன். சரியான விபரம் தெரியாது.

யாழ்பாணத்தில் உள்ள உருப்படியான மைதானம் மத்தியகல்லூரி மைதானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

11813263_1018568074841251_59956177910296

நவீனன் இணைத்த படத்தில் இருக்கும் பலர் இந்த படத்திலும் இருக்கினம் .

இது நேற்று மத்திய கல்லூரி -சென்ஜோன்ஸ் பிக் மாட்சில் எடுத்தது 

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியகல்லூரியின் நினைவுகளை மீட்கும் போது என் ஞாபகதிற்கு வந்தவர் கிரிக்கெட் மணிவண்ணன்

யாழ் மணிக்குரல் முதலாளியின் மூத்த மகனாகிய இவர் 1992,1993 காலங்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்.

அப்பொழுது எனக்கு சிறுவயது என்ற போதும் கிரிகெட் என்றால் மணிவண்ணன் தான்.

மிகவும் திறமையான இவர் 6 அடிப்பதை பார்க்க குடுத்துவைக்கவேண்டும். வானில் பந்துகளை பறக்கவிடுவதில் மன்னர். இவருடன் கீப்பர் சுரேஷ் இணைந்தால் சொல்லி வேலையில்லை.

இவரின் கடைசி தம்பியாரின் காலத்திலும் 2003 என நினைக்கிறன் மத்தியகல்லூரி பிக்மட்சில் வென்றது.

இவரின் குடும்பமே ஒரு கிரிகெட் குடும்பம்.

இத்தகைய வீரன் தேசிய அணிக்கு இணைய முயற்சித்த வேளையில் சிங்களவர்களால் லொறியால் இடித்து கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன்....சரியாக தெரியாது.
அவர் மரணித்த அதே ஆண்டில் அவரது தங்கையும் புற்றுநோயால் மரணித்தது யாழ்பாணத்தில் மிகவும் சோகச்சம்பவம் ஆகஇருந்தது.

இன்னும் இரும்பு மனிதன் சன்முகலிங்கத்தால் வளர்க்கப்பட்ட எத்தனையோ வீர்கள் இருக்குறார்கள்.

உயரம் பாய்தலில் அல்லது தத்தி மிரித்து பாய்வதில் ஒரு மத்தியகல்லூரி வீரன் ஆசியமட்டத்தில் சாதனை படைத்தததாக கேள்விப்பட்டிருக்குறேன். சரியான விபரம் தெரியாது.

யாழ்பாணத்தில் உள்ள உருப்படியான மைதானம் மத்தியகல்லூரி மைதானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மத்திய கல்லூரி நினைவுகளைப் பதிவிடும் எல்லோருக்கும் நன்றிகள்!

சேவையர், அமரர் மணிவண்ணன் மென்மேலும் வளர்ந்திருக்க வேண்டிய ஒராள். சில தனிப்பட்ட குணாதிசயங்கள் தடையாக இருந்தன என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். மேலும், தங்கை புற்று நோயால் மரணப் படுக்கையில் இருந்த வேளையில், நள்ளிரவில் பஸ் கிடைக்காமல் கிடைத்த சரக்கு லொறியொன்றில் ஏறி மலைநாட்டில் இருந்து கொழும்புக்கு வந்து கொண்டிருந்த வழியில் விபத்துக்குள்ளாகி மரணமானார் மணிவண்ணன்.

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்ற மத்திய கல்லூரிப் பழையமாணவர் தான் ஒலிம்பிக்கில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்தவர், ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்று நினைக்கிறேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.  

  • தொடங்கியவர்

 யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு

news

 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று  காலை 8 மணிக்கு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் ஆரம்பமாகின.

ஆரம்ப நிகழ்வுகளில் யாழ் .மெதடிஸ் தேவாலயத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது .

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் ஒலிம்பிக் வீரருமான கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் கலந்துகொண்டார்.

கல்லூரியின் நிறுவுநர் முன்னாள் அதிபர் வண. லின்ஸ் அவர்களின் திருவுருச்சிலைக்கான மலர் மாலையை கலாநிதி என்.எதிர்வீரசிங்கம் அணிவித்தார்.
 
நிறுவுநர் தின நினைவுப் பேருரையை ஓய்வுநிலை நூலகர் க.மணிவாசகர் நிகழ்த்தினார். நிகழ்வில் கல்லூரின் பிரதி அதிபர் உப அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் 200வது ஆண்டு விழா நிகழ்வுகள் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
Edited by நவீனன்

  • தொடங்கியவர்

1506676_10152914905636010_80152551808932

11825237_10152914905761010_3392829830183

11811478_10152914905591010_3350998294283

1506676_10152914905636010_80152551808932

11813320_10152914904131010_2433508390130

11781864_10152914905386010_6192663658493

11701051_10152914906146010_3028292244157

11796395_10152914903806010_5708132430779

11800303_10152914906056010_2535218876066

10983355_10152914906166010_6610468783044

11828807_10152914904086010_1468406827424

11822370_10152914905211010_6135394168517

றொமைன் குக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் படங்கள்

11796395_10152914903806010_5708132430779

நன்றி நவீனன் அண்ணா, எதிர்வீரசிங்கத்தை புகைப்படத்தில் பார்க்ககிடைத்ததற்கு.

மேலுள்ள படத்தில் எனது மதிப்புக்குரிய இந்துவின் பெளதீகவியல் ஆசான் ரவீந்திரநாதன் சேர் இருக்கின்றரர் (முகக்கண்ணாடியுடன்). இவரும் மத்தியின் பழைய மாணவன் தான். இவரை கண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்

11828607_10152914907926010_4566289166144

11825175_10152914909836010_7951089794886

11694108_10152914909371010_3929157431967

11222407_10152914910661010_5970098909353

ஆசிரியர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும்  இடையில் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டி

மத்திய கல்லூரி நினைவுகளைப் பதிவிடும் எல்லோருக்கும் நன்றிகள்!

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்ற மத்திய கல்லூரிப் பழையமாணவர் தான் ஒலிம்பிக்கில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்தவர், ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்று நினைக்கிறேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.  

https://en.wikipedia.org/wiki/Nagalingam_Ethirveerasingam

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன் அண்ணா, எதிர்வீரசிங்கத்தை புகைப்படத்தில் பார்க்ககிடைத்ததற்கு.

மேலுள்ள படத்தில் எனது மதிப்புக்குரிய இந்துவின் பெளதீகவியல் ஆசான் ரவீந்திரநாதன் சேர் இருக்கின்றரர் (முகக்கண்ணாடியுடன்). இவரும் மத்தியின் பழைய மாணவன் தான். இவரை கண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.

நவீனன், படங்களுக்கு மிக்க நன்றி.

சேவையர், அது ரவீந்திரநாதன் சேரா? இன்னும் அதே அடர்த்தியான முடியோடு இருக்கிறார்! சங்கிலிப் புகைப் பழக்கத்தை நிறுத்தியிருப்பார் என நம்புகிறேன். இந்துவுக்குச் செல்ல முன்னர் மத்திய கல்லூரியில் 1991/2 இல் ஆசிரியராக வந்தார். பௌதீகத்தின் முதல் அத்தியாயமான "பௌதீக அளவீடு" இவரிடம் தான் கற்றேன். கடைசியாக யுனிவேர்சலில் சக ஆசிரியராகச் சந்தித்தேன். மருத்துவ பீடம் கிடைக்கவில்லை என்று அறிந்ததும், "You are destined to be a teacher" என்றார். அப்படியே ஆகி விட்டது! 

எதிர்வீரசிங்கம் நடந்த 1952 ,1956 ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் பங்கு பெற்றவர் ,முதல் முதல் ஒலிம்பிக்கில் கடைசி சுற்றில் பங்கு பற்றிய ஒரே ஒரு இலங்ககைத் தமிழர்,

11401453_10206463099357484_4722923976470

யாழ் மத்திய கல்லூரியில் படித்த காலத்தில் சொல்லுவார்கள் இந்தப் பாடசாலையில் படித்த ஒருவர் ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்து கொண்டார் என்று. அதுவும் வெறும் காலில் சப்பாத்தும் போடாமல் அவர் மத்திய கல்லூரி மைதானத்தில் பாய்ந்து பழகி, உலகின் முக்கிய விளையாட்டு அங்கீகாரமான ஒலும்பிக்கில் அவர் பாய்ந்து அசத்தினார் என்றும் சொன்னார்கள். அவர்தான் இவர் டாக்டர் எதிர்வீரசிங்கம், தற்சமயம் அமரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கும் டாக்டர் எதிர்வீரசிங்கம் நடந்த 1952 ,1956 ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் பங்கு பெற்றவர் ,முதல் முதல் ஒலிம்பிக்கில் கடைசி சுற்றில் பங்கு பற்றிய ஒரே ஒரு இலங்ககைத் தமிழர்,

தென் இலங்கை வாழ் டங்கன் வைட் , சுசந்திகா ஜெயசிங்க ,இன்னும் சிலர் பின்நாட்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்றார்கள். 1958 இல் நடந்த ஆசிய விளையாடுப் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கையர். அதனால் தென் இலங்கை சிங்கள விளையாட்டு வீரர்களை ஆ வெண்டு அண்ணாந்து பார்க்க வைத்து அதிசயிக்க வைத்தவர்,

யாழ் மத்திய கல்லூரி கிரிகெட் டீமில் இருந்து விளையாடி இருக்கிறார். 1973 இல் UNISEF இல் அவர் வேலை செய்த ஆபிரிக்க நாடான சியராலியோன் இல் கிரிகெட் தேசிய அணியின் வைஸ் கப்டன் ஆக இருந்து இருக்கிறார். ஆனாலும் இன்றைவரை டாக்டர் எதிர்வீரசிங்கம் ஒருவர் தான் யாழ்ப்பாணத் தமிழர் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக முதல் முதல் பங்குபற்றியவர் .

அண்மையில் அவர் தான் படித்த யாழ் மத்திய கல்லூரிக்கு வந்த போது கிரிக்கெட் பயிட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு பந்து வீசிய போது இந்தப் படம் எடுத்து இருக்கிறார்கள். .. In gloriam Dei optimi maximi என்ற லத்தின் மொழி வாக்கியத்தை தொப்புள்கொடியில் எழுதி வைத்து (Unto the glory of God, the best and the highest)” என்பதின் அடையாளமாக சென்றல் கொடி என்றும் தாழ்வு பெறாது ” என்ற உற்சாக வாக்கியம் உள்ள அந்தப் பாடசாலைக் கீதத்தில் , பல விளையாட்டுவீரர்களை உருவாக்கிய அந்தத் தாயின் கனவை உலக அரங்கில் ஒலிக்க விட்ட யாழ் மத்திய கல்லூரி உருவாகிய ஒரு விளையாட்டு வீரன், அக்கடமிக் அறிவாளி, சமூக சிந்தனையாளர் டாக்டர் எதிர்வீரசிங்கம்.. ………

உயரங்களைத் தாண்டியவர்கள் எளிமையாகத்தான் இருக்கிறார்கள்…… -

http://www.vvtuk.com/archives/123192#sthash.UkUMRQd3.dpuf

  • 1 month later...
  • தொடங்கியவர்
 
"Central Walk" to mark the Bicentenary of Our School will be held on 9th October 2015 @ 7.00am from JCC Grounds. Let's all get together to glorify Our Alma Mater....If you want Special T.Shirts of Bi Centenary please contact Old boys association members or if you like to get it from.

OBA President Mr.Thamilalagan.......................0771591479
OBA Secretary Mr.Pratheepan ........................0776071954
OBA Treasurer. Mr.Harshan .............................0759556041
OBA Exe.Commitee Member. Mr.Subethar...... 0772528824.

அன்பான மத்தியின் மைந்தர்களே , மத்திய கல்லூரி தாய் தனது 200 ஆண்டில் கால்பதிப்பதை குறிக்கும்முகமாக "மத்தியின் நடைபவணி" மாபெரும்

நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி ஒக்டோபர் மாதம் ( வெள்ளிக்கிழமை ) 2015 காலை 7.00 மணிக்கு மத்திய தாயின் மடியான மைதானத்தில் இருந்து ஆரம்பித்து யாழ்நகரின் பிரதான மார்க்கங்களூடாக செல்லவுள்ளதால் அனைத்து மத்தியின் மைந்தர்களையும் இம்மாபெரும் வரலாற்று நிகழ்வில் கலந்து மத்தியத்தாயின் புகழை சாற்ற ஒன்று கூடுமாறு அழைக்கிறார்கள் பழைய மாணவர்கள்.....

இந்நடைபவணியில் பங்கேற்கும் அனைவரும் 200 ஆண்டை குறிக்கும் ரீ.சேர்ட்களை பெற விரும்பினால் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம்... பெறவிரும்பினால் சுபேதார் 0772528824 என்ற இலக்கத்தில் அழைத்து பெற்றுக் கொள்ளுங்கள்........ நன்றி :- சுபேதார்

12063448_10153261457383823_1968047270461
 
11224163_10153261457418823_1355204127061
 
Edited by நவீனன்

  • தொடங்கியவர்
யாழ். மத்தியை வென்றது சென். ஜோன்ஸ்
 
article_1443360272-Central-LEAD.jpg

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இருநூறாம் ஆண்டுப் பூர்த்திக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, யாழ். மத்திய கல்லூரிக்கும் அதன் போட்டிப் பாடசாலையான சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

இரு கல்லூரிகளினதும் ஆசிரியர்களுக்கிடையிலும் பழைய மாணவர்களுக்கு இடையிலும் என, இரண்டு போட்டிகள் இடம்பெற்றபோது, இரண்டு போட்டிகளிலுமே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இரு கல்லூரியின் ஆசிரியர்களிடத்தே இடம்பெற்ற முதலாவது போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர், பழைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியிலும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் யாழ். மத்திய கல்லூரியை வென்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகரான வி.ரி சுந்தரலிங்கம் கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/155161/ய-ழ-மத-த-ய-வ-ன-றத-ச-ன-ஜ-ன-ஸ-#sthash.xOTp19Gd.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
 
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியக் கல்விச் சாலைகளில் மிகவும் முக்கியமானதும் பல துறைகளில் சாதனை புரிந்ததும்  'யாழ் மத்திய கல்லூரி' !

கிரிக்கட் மட்சுகளின் போது மட்டும் எமது பரம்பரை எதிரியாக இந்தக் கல்லூரி மாற்றம் கண்டு விடும்!

இந்து பருப்பு.. என்ற தூற்றல்... சென்றல் செருப்பு.. என்பதால் நிவர்த்தி செய்யப்பட்டு விடும்! அவ்வளவு தான்!

மற்றும் படிக்கு.. வேம்படிக்கு அருகாமையில் இது அமைந்திருப்பது..நாம் அனைவருமே ஒரு பொறாமையுடன் பார்க்கும் பெருமையும் இதற்கு உண்டு!

பல்லாண்டு காலம் வாழ்ந்து.. வளரட்டும்...யாழ். மத்திய கல்லூரி!

புங்கையார்,

என்ன அங்காலிப் பக்கமா நிக்கிறியள்?

நாமள் பருப்புக்காரர் எல்லே!

1816ல் பர்சிவல் பாதிரியாரால் ஆரம்பிகப்பட்ட உவெஸ்லியன் பாடசாலை, நாளடைவில் மத்திய கல்லூரி ஆகியது. தமிழில் பைபிளை தந்த ஆறுமுக நாவலர் படித்த, படிப்பித்த கல்லூரி.

இந்த 1815ம் ஆண்டே, இலங்கையின், கடைசி, (தெலுங்கு நாயக்கர்) தமிழ் மன்னன் கண்டி ராசாதானியின் கண்ணப்பன் வீழ்ந்த ஆண்டு.

அதற்கு சரியாக 9ஆண்டுகளுக்கு முன் பண்டாரவன்னியன் வீழ்ந்த கதை.

200 ஆண்டுகளில் வரலாறு பல மாறுதல்களை உண்டாக்கி சென்றுள்ளது.

சில தளங்களில் பெருமை பேசும் சிங்களவர்களிடம் சிங்களப் பேரில், சேம் சைற் கோல் போடும் போது குறிப்பிடுவது உண்டு: இந்த நாட்டை கரையோர சிங்கள மன்னர்கள் எல்லாம் போர்த்துக்கேயர்களிடமே மண்டியிட்டு கொடுத்து விட்டு ஓட, தமிழ் மன்னர்கள் தான் நாட்டின் மத்திய பகுதியை ஆங்கிலேயர் காலம் வரை மண்டியிடாது வைத்து இருந்தாரகள்.

உண்மை தான் நாதம்..!

ஆறுமுக நாவலர்..சிதம்பரம் போறதுக்கு 'டிக்கட்' வாங்கக் காசில்லாமல் தானாம்.. பைபிளை மொழி பெயர்த்தவராம்!

அந்தக் காசைக்கொண்டு தான்... சிதம்பரம் போக பயணச்சீட்டு வாங்கினவராம் எண்டு ஒரு கதை!

ஆனால், ஆறுமுக நாவலரின் மொழிபெயர்ப்பு தான்.. தமிழ் படுத்தப்பட்ட விவிலிய நூல்களில் மிகவும் சிறந்ததாக இன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!

அத்துடன்.. வீடு வீடாகச் சென்று.. பிடியரிசி சேர்த்து.. ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்த்ததாகவும் ஒரு கதை உண்டு!

போர்த்துக் கேய மன்னர்களிடம்.. கடைசியாகத் தோற்ற மன்னன் என்ற பெருமையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனையே சேரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.