Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்கு எதிரான முகவரியற்ற துண்டுப்பிரசுரம் குறித்து சுமந்திரன் விளக்கம்

Featured Replies

[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 11:17.48 AM GMT ]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவத்துக்கு சார்பாக வாதாடி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தோல்வியடைய செய்தார் 

யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு எதிராக “வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்” என்கின்ற பெயரில் இனம்தெரியாதவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பில் திரு. சுமந்திரன் அவர்கள், அவரது யாழ் அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அதன் பொழுது, போராளிகள் கல்வியறிவற்றவர்கள் என்று தான் கூறியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விளக்கமளித்த அவர்,

போலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால், குறித்த மாகாணங்களை சேர்ந்த போலீசார் தமது ஆயுதங்களை பிரயோகித்து, தனி நாட்டை உருவாக்கி விடுவார்கள் என்கின்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட பொழுது, நான் அதனை மறுத்து, இந்த நாட்டிலே இரண்டு பகுதிகளிலும் ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன,

தெற்கிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியவர்கள் போலீசார் அல்ல, கல்வி, தொழில் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள் அநீதிக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள், நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு கல்வி அறிவு முறையாகவும், சமமாகவும் வழங்கப்பட்டால், தொழில் வாய்ப்புக்கள் நியாயமாக வழங்கப்பட்டால் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை வராது,

அது நடைபெறாத காரணத்தினாலேயே வடக்குக் கிழக்கில் இளைஞர்கள் ஆயுதம் எந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றுதான் குறிப்பிட்டேனே தவிர, போராடியவர்கள் கல்வி அறிவற்றவர்கள் என்கின்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை, ஆனால் அதனை இப்படி திரித்துக் கூறி இருகின்றார்கள் என்றார்.

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு நடைபெறவில்லை என்றும், முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றும் கூறியதாக உள்ள குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கையில்,

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, இலங்கையில் தொடர்ச்சியாக இனஅழிப்பு நடைபெற்றது, நடைபெறுகின்றது என்று முதல் தடவையாக பாராளுமன்றத்திலே நான் உரையாற்றினேன், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்திலே அதனை எனது உரையில், சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலே, குறிப்பிட்டேன்,அந்த வீடியோ இப்பொழுதும் யூடியூபில் உள்ளது.

முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது தொடர்பில் எனது கருத்தை சொல்வதென்றால்,தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்று சொல்கின்ற நாம், முஸ்லிம்களுக்கு வடமாகாணத்தில் நடந்ததை மூடி மறைக்க முயன்றால், எமக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலை என்கின்ற நியாயத்தைக் கூட சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டு விடும்.

எமக்கு நடந்த இனப்படுகொலையை சர்வதேச மயப்படுத்தும் நாம், முஸ்லிம்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று கூறினால், எமது நியாயத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. உண்மை என்பது எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்ற முயல்கின்றார் என்கின்ற குற்றச்சாட்டுக் குறித்து விளக்கமளிக்கையில், ஒரு தடவை, இரு தடவை அல்ல, சர்வதேச விசாரணை ஒன்றுதான் சுயாதீனமான விசாரணையாக இருக்க முடியும் என்று 2012, 2013, 2014 இல் கூட பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றேன். சர்வதேச விசாரணை என்பதில் இப்பொழுதும், எப்பொழுதும் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.

மாவீரர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவருக்கு வாக்களிக்கலாமா என்கின்ற குற்றச்சாட்டுக் குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அவர்கள், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரவிராஜ் நினைவுப் பேருரையிலும், தொடந்தும் நான் சொல்லிவரும் ஒரு விடயம், எங்களுடிய இளைஞர்கள் ஆயுதம் எடுத்துப் போராடியது தங்களுடிய சுயநலத்திற்காக அல்ல, தமிழ் மக்களுடைய பொது நலத்திற்காக

தங்களுடைய உயிரை துச்சமென மதித்து போராடியவர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் தலை வணங்குகின்றோம் என்பதுதான், அவர்களுடைய போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்றால், இப்பொழுது வந்துள்ள சூழ்நிலைக்கு ஏற்ப சர்வதேச ஆதரவுடன் தீர்வை பெற்றுக்கொள்ள முயல வேண்டும்,இல்லாவிட்டால் அவர்களின் உயிர்த் தியாகங்களின் பெறுமதி வீணடிக்கப் பட்டுவிடும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் எனது 24 வருட சட்டத்துறை வாழ்க்கையில் ஒரு தடவை கூட தமிழ் மக்களுக்கு எதிராகவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவோ வாதாடியது இல்லை,எனது 80% வீதமான வழக்குகளில் தமிழர்களுக்காகவே வாதாடி உள்ளேன்.

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏதாவது வழக்குகளில் வாதாடி இருக்கின்றாரா என்று பார்த்த பொழுது எங்களால் காண முடியுமாக இருந்த ஒரே ஒரு வழக்கு, இராணுவ ஜெனரல் கொப்பேக்கடுவ கொலை செய்யப்பட்ட பொழுது, கோபமுற்ற இராணுவத்தினர் மயிலந்தனை என்ற கிராமத்தில் தமிழ் மக்களை தாக்கிக் கொலை செய்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெரேராவுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, இராணுவத்தினருக்கு சார்பாக வாதாடி வழக்கில் வென்று இருக்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதைத் தவிர, அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவர் ஒரு தடவையேனும் வாதாடியதை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilwin.com/show-RUmtyISYSVlr0G.html#sthash.JHWf3j7g.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அவர்கள் பேசிய பேச்சுக்களை அப்பப்ப கேட்டுக்கொண்டுதானே இருந்தோம்.
சரி சரி இப்ப நம்பீட்டம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழ் மக்களுக்கெதிராக கொப்பேகடுவ வழக்கில் இராணுவத்தின் சார்பாக தயா பெரேராவுடன் சேர்ந்து வாதாடிய திரு. கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் தாஜுடீன் கொலைவழக்கில் மகிந்த சார்பாக வாதாடக் கூடாது? மகிந்தவின் விசுவாசி ஆயிற்றே !

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்,

இந்த நாட்டுக்கு இந்த வெளிப்படை அரசியல் சரிவராது காணும்.

பொன்னம்பலங்களைப் போல் எதையும் செய்து, பசிலுடன், தயாகமஜேயுடன் யாருடனும் சேர்ந்து காட்டிக் கொடுத்து விட்டு பின் மேடை ஏறி, அழுதேன் விக்கினேன், பிரபாகரன் என் அண்ணன் என்று சீன் போடத்தெரியோணும்.

உமக்கேன் இந்த வீண்சோலி?

  • கருத்துக்கள உறவுகள்

முகவரியற்ற துண்டுப்பிரசுரத்தை தானே விடச்சொல்லிற்று பத்திரிகையை கூட்டி விளக்கமும் கொடுக்கிறார்.

  • தொடங்கியவர்

சுமந்திரன்,

இந்த நாட்டுக்கு இந்த வெளிப்படை அரசியல் சரிவராது காணும்.

பொன்னம்பலங்களைப் போல் எதையும் செய்து, பசிலுடன், தயாகமஜேயுடன் யாருடனும் சேர்ந்து காட்டிக் கொடுத்து விட்டு பின் மேடை ஏறி, அழுதேன் விக்கினேன், பிரபாகரன் என் அண்ணன் என்று சீன் போடத்தெரியோணும்.

உமக்கேன் இந்த வீண்சோலி?

இந்த நாடு இப்போது சில மாற்றங்களை கண்டுள்ளது.

வரவிருக்கும் மனிதவுருமை சபையினுடைய அறிக்கையோடு இரண்டு பக்கமும் விசாரணை நடக்கும் என்றே பரவலான எதிரிபார்ப்பு. 

அதனடிப்படையில் புலத்திலும் சில கைதுகள் இடம்பெற சந்தர்ப்பங்கள் உள்ளனவாம், சில நாடுகளில் அண்மையில் மாற்றப்பட்ட சட்டம் அதுக்கு இடம்தரும் போலவும் இருக்கு. 

ஆக மகிந்த + கோத்தா திறந்த புனர்வாழ்வு முகாம் இன்னும் மூடாமல் இருபதுக்கு காரணம் தெளிவாக தெரியுது. 

கோதாரி விசாரணையும் தண்டனையும் இலங்கையில் தானாம்.

இந்த தேர்தலின் பின்னர் இன்னும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைக் கடுதாசியும் நானே பதிலும் நானே? 

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வேட்பாளர்களிற்கு பணம் அள்ளிவீசப்படுவது அனைவரும் அறிந்ததே.

அவ்வகையினில் த.தே.ம.மு கடந்த காலங்களினில் புலம்பெயர் உறவுகளது நிதி உதவியே அள்ளி வழங்க்கப்பட்டு வந்திருந்தது.ஆனால் இம்முறை அது பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையினில் தற்போது வெளிநாட்டு மற்றும் இலங்கை அரசினது உதவிகளே த.தே.ம.மு பெருமளவினில் பிரச்சாரங்களை முன்னெடுக்க உதவுகின்றது.

இந்நிலையினில் பிரதான கட்சியான ஜ.ம.சு.கூஇன் மகிந்த தனது கட்சி வேட்பாளர்களிற்கு வெறும் 25 இலட்சத்தை ஒதுக்கி வழங்கியிருந்த போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர் கஜேந்திரர்களுக்கு இரண்டாம் கட்ட செலவீட்டிற்காக 100 இலட்சத்தை நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தேர்தல் செலவுகளிற்கென சுமார் ஆறு கோடியினை கஜேந்திரர்களுக்கு மகிந்த வழங்கியிருந்ததாக கூறப்படும் நிலையினில் தற்போது இறுதி நாள் செலவீனங்களிற்காக குறித்த 100 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டமொன்றை ஏற்பாடு செய்பவர்களிற்கு தலா இரண்டு இலட்சம்இவேலை செய்யும் மாணவர்களிற்கு மதுபானப்போத்தல்இபுரியாணியென அள்ளி விசியப்பட்டுவருகின்றது.

ஏற்கனவே தனது கட்சி வேட்பாளர் அங்கஜன் தெரிவு செய்யப்படுவதிலும் பார்க்க கஜேந்திரர்கள் தெரிவு செய்யப்படுவதே பிரதானமானதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.jaffnajet.com/2015/08/4061

சூப்பர் 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக கஜே கோஸ்டி மகிந்த் ஆதரவாளர்களே, கடந்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி தமது ஆதரவினை மறைமுகமாக கஜே கோஸ்டி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

சனாதிபதி தேர்தலை புறக்கணித்த காரணத்தை அவர்கள் விளப்பமாக விளங்கக் கூடியவர்களுக்கு கூறியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

விளப்பம் இதுதான்.

பொன்னருக்கு எப்படியாவது பாராளுமன்றம் போக ஆசை.

மாகாண சபை, ஜனாதிபதி தேர்தல்களில் வெண்டால் பாராளுமன்றம் போகவியலாது.

அதனால் அதைப் புறக்கணித்தார்.

இதில் போட்டி போடுறார்.

வாலிக்குத்தான் விளக்கம் குறைவு :)

  • கருத்துக்கள உறவுகள்

2004 இலேயே அவர் போய் விட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதியது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். " அடுத்த தேர்தலில் முன்னணிக்கு 1 சீட் கிடைக்கும் " என ஆனால் அதை நீங்கள் மறுத்திருந்தீர்கள். 

விளப்பம் இதுதான்.

பொன்னருக்கு எப்படியாவது பாராளுமன்றம் போக ஆசை.

மாகாண சபை, ஜனாதிபதி தேர்தல்களில் வெண்டால் பாராளுமன்றம் போகவியலாது.

அதனால் அதைப் புறக்கணித்தார்.

இதில் போட்டி போடுறார்.

வாலிக்குத்தான் விளக்கம் குறைவு :)

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் ருசி கண்ட பூனை மீண்டும் பால்குடத்தை தேடுது. 

இவரின் அப்பா எம்பி என்ற சொல்லை கேட்டாலே வாயைப் பிளப்பார்.

கடைசிவரை நிராசையாப் போச்சுது.

அப்பனைப் போல மகன். ஊர்ச்சொத்தில் வாழ்ந்த உடம்பு, இனி என்ன உழைத்தா வாழ முடியும்?

3 மாதம் வரை கட்டுக்காசு தேறாது என்பதே நிலை. இறுதி மாதங்களில் மகிந்தவின் பணம், மாணவர்களுக்கு பிரியாணி, போத்தில், கஞ்சாகோப்பி கொடுத்து வேலை வாங்குவதால் - ஒரு சீட் தேறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் எனக்கு தெரிந்த/ கேள்விப்பட்ட வரை நீங்கள் கூறுவது கூட்டமைப்பின் தரப்பிலேயே நடைபெறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டவரை இது முழுக்க முண்ணணி தரப்பிலே செய்யப் படுகுதாம்.

இதுக்கென ஸ்பெசலா கொழும்பில் இருந்து ஆக்களையும் இறக்கி இருக்கிறாராம் பொன்ஸ்.

இவற்றை அப்பா 5கிராம் கறிக்கும் ஐந்தாறு முடிக்கும் ஆசைப்பட்டு, விடிய முதல் வெள்ளவத்தை கடற்கரைக்குப் போய் அநியாயமாய் செத்துப் போனார்.

மகனும் அதே வழியில் போறார்.

ஒரு மாமனிதர் பற்றி அதுவும் யாழில் நல்லாய்இருக்கையா உங்க நியாயம் 

ஆம் தமிழ் ஸ்ரீ கூட்டமைப்பின் வால்கள் கடைசியில் முடியாமல் பிணங்களுடன் சண்டை போடுகின்றன  இதுதான் அவர்களின் அழகு 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.... இரண்டு நாளில், 
சுத்து மாத்து... சுமந்திரனும்,  பம்மாத்து  சம்பந்தனும்.....
தமிழ் அரசியல், வானை விட்டே.. காணாமல் போகப் போகின்றார்கள்.

radsport-0027.gifs10541.gif

அந்த வெற்றியை, கொண்டாட...  தமிழ் மக்கள் வாழும் இடம் எல்லாம், சைக்கிள் பேரணி நடக்கும்.23437.gif
வாழ்க... கஜேந்திர குமார். 
வெல்க.... தமிழ் தேசிய மக்கள் முன்னணி.:)

  • தொடங்கியவர்

நான் கேள்விப்பட்டவரை இது முழுக்க முண்ணணி தரப்பிலே செய்யப் படுகுதாம்.

இதுக்கென ஸ்பெசலா கொழும்பில் இருந்து ஆக்களையும் இறக்கி இருக்கிறாராம் பொன்ஸ்.

இவற்றை அப்பா 5கிராம் கறிக்கும் ஐந்தாறு முடிக்கும் ஆசைப்பட்டு, விடிய முதல் வெள்ளவத்தை கடற்கரைக்குப் போய் அநியாயமாய் செத்துப் போனார்.

மகனும் அதே வழியில் போறார்.

கஜே கஜே கோஸ்டி... :grin:

94ம் ஆண்டு பொது தேர்தலின் பொது அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்காக எனது நண்பர்களுடன் தலைநகர் முழுக்க பிரச்சாரம் செய்து போலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பொழுது இவர்கள் யாரும் வரவில்லை. 

நடந்ததை கேள்விப்பட்டு மறைந்த முன்னாள் எம்பி ரவிராஜே வந்து எங்களை வெளியே கொண்டுவந்தார்.

அந்த தேர்தலின் தோல்வியின் பின்னரே குமார் தீவிர புலி ஆதரவாளர் அனார். 

  • கருத்துக்கள உறவுகள்

94இல் நீங்கள் விட்ட இடத்தை 95இல் பிடித்து 98 வரை தொடர்ந்தேன் சூறா. அப்போதுதான் பொன்னம்பலங்களின் உண்மை முகம் நன்றாகவே புரிந்தது.

இங்க பலபேர் வந்து மாமனிதர் எண்டு நீட்டி முழக்குவதைப் பார்க்க ரொம்ப சிரிப்பா இருக்கு.

அதுசரி ஊரில் முதல் சீன வெடிக்கு அப்பீட்டாகின ஆக்களுக்கு என்ன தெரியக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன்,

இந்த நாட்டுக்கு இந்த வெளிப்படை அரசியல் சரிவராது காணும்.

பொன்னம்பலங்களைப் போல் எதையும் செய்து, பசிலுடன், தயாகமஜேயுடன் யாருடனும் சேர்ந்து காட்டிக் கொடுத்து விட்டு பின் மேடை ஏறி, அழுதேன் விக்கினேன், பிரபாகரன் என் அண்ணன் என்று சீன் போடத்தெரியோணும்.

உமக்கேன் இந்த வீண்சோலி?

உந்த தீர்க்கதரிசனம் குடியரசு / கூட்டணி / கூட்டமைப்புக்கு  சொந்தமானது. கொள்கை மாற்றம் இருக்கலாம். ஆனால் அவர்களின் அத்திவார கொள்கையை நீங்கள் கொள்ளை அடிக்கப்படாது.

காலங்கள் மாறினாலும் கொள்கையை மாற்றாது சம்பந்தன் கோஷ்டி.....அதாவது  எனக்குப்பிறகு .......  

வாரிசு அரசியல்கள்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் ருசி கண்ட பூனை மீண்டும் பால்குடத்தை தேடுது. 

இவரின் அப்பா எம்பி என்ற சொல்லை கேட்டாலே வாயைப் பிளப்பார்.

கடைசிவரை நிராசையாப் போச்சுது.

அப்பனைப் போல மகன். ஊர்ச்சொத்தில் வாழ்ந்த உடம்பு, இனி என்ன உழைத்தா வாழ முடியும்?

3 மாதம் வரை கட்டுக்காசு தேறாது என்பதே நிலை. இறுதி மாதங்களில் மகிந்தவின் பணம், மாணவர்களுக்கு பிரியாணி, போத்தில், கஞ்சாகோப்பி கொடுத்து வேலை வாங்குவதால் - ஒரு சீட் தேறலாம்.

மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்கிறீர்கள்

அவருக்கு ஒரு சீற் கிடைக்கும் என்பதும்

அவர் கூடடமைப்பில் இருந்திருக்கணும் என்றும் தொடர்ந்து எழுதி வந்தவர் தாங்கள்

ஆனால்  இன்று சும்மா எவரையோ கோபப்படுத்துவதற்காக

அவர் மீது இவ்வாறு கீழ்த்தரமாக  எழுதும் நிலை

கருத்துப்பஞ்சம்...

பணத்துக்காக 

ஊர்ச்சொத்தில் வாழ்வதற்காக என எழதிப்பழகிவிட்டது

அது கயேந்திரகுமாருக்கும் வருகிறது

இதன் மூலம் தெரிகிறது

உங்களது ஆராய்ச்சி அறிவு பகுத்தாய்வு.......

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வரவேண்டியவர் கஜேந்திரகுமார் என எழுதிய கோசான் இன்று 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை, பாட்டனைப் போல் அல்லாது இவர் கொஞ்சம் நாணயமாய் இருக்கிறார் என்று நம்பிய நேரத்தில் எழுதிய கருத்து அது.

கடந்த 3 மாதத்தில் தானும் ஒரு கேடுகெட்ட பொன்னம்பலம்தான் என்பதை தன் பேச்சு, செயல்களால் நிரூபித்து விட்டார் கஜேந்திரக்குமார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.