Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்

Featured Replies

ஒரு வாலு- கூட்டமைப்பை போட்டு இவ்வளவு வாங்கு வாங்கிவிட்டேன். தேர்தலில் அவர்கள் பெரிய வெற்றி பெற்றால் என்ன செய்வது ?
 
மற்ற வாலு- கூட்டமைப்பு, தலைவர் உருவாக்கியது ,தலைவர் பெயரை சொல்லித்தான் வாக்கு வாங்கினார்கள் என்று பிளேட்டை பிரட்டபோட வேண்டியதுதான் 

-முகபுத்தகத்தில் தேர்தலுக்கு முதல் நான் எழுதியது .

  • Replies 571
  • Views 33k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி.. முன்னரும்.. இப்போ.. சிறீதரனும் அதி உச்ச விருப்பு வாக்கைப் பெற்றது.. எப்படியான பிளேட்டை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டிவிட்டது.  இதையும் முகநூலில் பதிஞ்சிருக்கினம். :grin:

தாயகத்திலுள்ள மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர் என்பதுக்கு இந்த தேர்தலே சாட்சி....  நீங்கள் இனிக் கத்தாமல் போய் உங்கள் வேலைகளைப் பாருங்கோ சகோதரர்களே!!!! :grin:

தாயகத்தில் சண்டை இல்லாட்டி புலத்தில் கனபேருக்குப் பிழைப்பிருக்காது :shocked::grin:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெளிவாக தேசிய தலைவரின் பக்கம் உள்ளார்கள் என்று காட்டிட்டினம். அதை தெரிஞ்சு கொண்டு நீங்களும் செயரில் அமைதியாக உட்காருங்கள் சகோதர சகோதரிகளே. :grin:

தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் செய்தி:

1. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தால் எங்கள் வாக்கு உங்களுக்கு தான்.

2. தமிழ் தேசிய அடையாளத்தில் வந்தாலும் தேசிய தலைவரின் கொள்கையோடு வந்தால் அவைக்கு தான் எங்கள் இதயத்தில் இடம். விருப்பு வாக்கு உங்களுக்கே அதிகம்.

3. டக்கிளஸ்.. போன்ற ஜெமகாதகர்களுக்கு வாக்குப் போட உள்ள கூட்டத்தை இப்போதைக்கு கட்டுப்படுத்த ஏலாது. அச்சத்தில் உள்ள மக்களை அச்சுறுத்தி வாக்குப் பறிக்கும் தந்திரம் ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு இன்னும் சாத்தியமாக உள்ளது.

4. சைக்கிளில் வந்தாலும்.. உதய சூரியனில் வந்தாலும்.. தமிழ் தேசிய உணர்விருந்தா.. ஒற்றுமையா வாங்க. அப்ப தான் வாக்கு.

5. சைக்கிள் உங்க கொள்கை பிடிச்சிருக்குது.. ஆனால் தனிய வர விருப்பாதைங்க. கொள்கைக்காக வாக்கு வங்கி வளர்ச்சி.. தனிய.. தேசிய தலைமை காட்டிய வழியில் வராமல் வந்ததால்.. பெரிய அளவில் வாக்குப் போட்டு எங்களின் பலத்தை சிதைக்க முடியாது.

6. காட்பெட் ரோட்டு.. கரண்டு.. ரயிலு விட்டதுக்கு நன்றிக் கடனுக்கு.. வாக்குப் போட எங்களிலும் நாலு பேர் இருக்கினம். அவையைப் பற்றியும் கவலை கொளளனும். உரிமைக்கு முன் மக்களின் அடிப்படை வசதிகளைப் பெருக்கவும் அரசியல்வாதிங்க பழகிக் கொண்டால் அந்த வாக்கும் உங்களுக்கே..!

Edited by nedukkalapoovan

மக்கள்  இன்றுவரை   தலைவரின் கைகாட்டலில் வந்தவர்களை  நம்புகிறார்கள். ,ஏதேனும் விமோசனம் கிடைக்கும் என்று.

அதனால் தான் கஜேந்திரன் அணியை  இன்றுவரை  ஏற்க முன் வரவில்லை, மற்றும் படி   அவர்களை மக்கள் வெறுக்கிறார்கள் ,நிராகரித்துவிட்டார்கள் என்பது தவறு... இனிமேலும் காலம் தான் பதில் சொல்லும்,.

தேர்தல் முடிவுகள் : ஐ.தே.க. 107, ஐ.ம.சு.மு. 95, த.தே.கூ. 16, ஜே.வி.பி. 5, ஈ.பி.டி.பி. 1, மு.க. 1

news
நடைபெற்று முடிந்த இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் படி வாக்களிப்பின் மூலம் பெற்றுக் கொண்ட ஆசனங்கள் மற்றும் தேசியப் பட்டியல் மூலம் பெற்ற ஆசனங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி 107 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 5 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சகல மாவட்டங்களின் வாக்குகளும் எண்ணப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், உத்தியோகபூர்வமான கட்சிகள் பெற்ற ஆசனங்கள் இன்னும் சில நேரங்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
/News_More.php?id=581764202518306627#sthash.b4q8V7t2.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கஜே கஜே கோஸ்டி சயிக்கிளை விட்டுட்டு புதுசா ஒரு மோட்டச்சயிக்கிளை வால்களின் உதவியுடன் வங்கினா என்ன? மக்கள் சயிக்கிளை காலம் காலமா காணமாட்டன் எங்கிறாங்க!

மட்டகளப்பில் அமலும் வெற்றி .(இரண்டாவது இடம் )

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்.தமிழர்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சீற் ஐதேக வுக்கு போயிருக்கின்றது. அதை தடுக்க கூட்டமைப்பால் முடியவில்லை.ததே மக்கள் முன்னணியால்தான் சீற் குறைந்தது என்பது இன்னும் அவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்வையோ அச்சத்தையோதான் தருகிறது.

யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம்
news
யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் 
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 உறுப்பினர்கள் 
 
1. சி.சிறீதரன் - 72058 
2. மாவை.சேனாதிராசா - 58742
 3. எம்.ஏ.சுமந்திரன் - 58043 
4. த. சித்தார்த்தன் - 53740 
5 ஈ.சரவணபவன் - 43719 
 
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்  கே.என்.டக்ளஸ் தேவானந்தா -16399
 
ஐ.தே.க உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்-13071
 
jjjjjjjjjjj%281%29.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=448694202418295114#sthash.g6wm2xZt.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முறையாக தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகமான புதிய தலைமுறை இலங்கை தேர்தலை பற்றிய செய்திகளை அனைவரிடமும் எடுத்து சென்று கொண்டிரிக்கிறது. ஆனால் புரியாத புதிர் என்னவென்றால் ஒரு ஜனாதிபதியாக இரண்டு முறை பதவி வகித்த மகிந்த கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல்  எப்படி பிரதமராக வர வேண்டும் என்று முடிவு எடுத்தார். 

பிறகு சுதந்திர கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமாகிய சிறிசேன ஏன் தன்னுடைய பிரபல பிரதம வேட்பாளராகிய மகிந்தவுக்கு எதிராக செயல் படுகிறார்.என்று  ஒன்றுமே புரிய வில்லை. இதை பார்க்கும் பொழுது  இலங்கையின் அரசியல் குழப்பமான ஒன்று என்று தோன்றுகிறது. 

மேலும்  ஜனாதிபதிக்கு ஏன் அதிகாரம் கொடுக்க வேண்டும். பிரதமருக்கு கொடுத்தால் மட்டும் போதாதா. ஒரு சிறிய நாடு, அதுவும் தமிழ் நாட்டின் பாதி நிலபரப்புடைய இலங்கை தீவில் இவ்வளவு ஆராய்ச்சி தேவையா. இப்பொழுது புரிகிறது ஏன் இலங்கை தமிழர்கள் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று. பேரினவாத  அரசியலும், காலத்துக்கு உதவாத அரசியல் நடைமுறையும் இலங்கையை பின்னோக்கி எடுத்து செல்கிறது. 

Final Result with National list

UNP 93+13 = 106 seats
UPFA 83+12 = 95 seats
ITAK (TNA) 14+2 =16 seats
JVP 4+2 = 6 seats
SLMC 1 seat
EPDP 1 seat

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் யாழ்கள உறாவுகளுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைவாக வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அமோகஆதரவைவழங்கி 2016ல் தமிழர்களுக்குத் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தவிர தமிழ்த் தேசிய மக்கள்முண்ணணி புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களது ஆதரவுத்தளத்தினை அல்லது கைக்கூலியாக அன்றேல் புலிவால்களது ஏஜண்டாகத் தேர்தல் களத்தில் நிற்கின்றது எனும் கருத்தில் பலமான நிலைகொண்டு புலத்தில் (தாயக மக்களால்) உள்ள மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் அதாவது எமது பிரச்சனையை நாமே பார்த்துக்கொள்கிறோம் உங்கட வேலையை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ என் புலம்பெயர் மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் போதும் எல்லாரும் பொத்திக்கொண்டு இருங்கோ, தெருவில இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுறம், நடைபயணம் போகிறம், சைக்கிள்  பயணம் போகிறம் ஜெனீவாவில ஒன்று கூடுகிறம், பொங்குதமிழ் பொங்காததமிழ் போன்றவறைச்செய்யுறம் என வெளிக்கிடாமல் சோலியைப்பாருங்கோ

விரும்பினால் சிறீலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளூங்கோ புலிக்கொடிக்குப்பதிலா சிங்கக்கொடியைத் தூக்குங்கோ, காசைச் சேத்து சிறீலங்கா போய் ஜாலியா இருங்கோ.

எதிர்வரும் சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்வு நான் வாழும் நாட்டில் நடக்கும்போது கட்டாயம் கலந்துகொள்வேன். இயலுமாகில் எனது நட்புவட்டத்தையும்  கூட்டிகொண்டுபோவதாக உத்தேசம்.

யாழ்களத்தில் யார்மீதும் எனக்கு எந்தவிதக்காள்ப்புணர்வும் இல்லை எல்லோரும் எனது நண்பர்களே அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிவிடும்போது உங்கள் நட்புக் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இலங்கைத்தீவில் இதேபோன்ற சூழல் எதிகாலத்திலும் தொடருமாகில் நாம் நிரந்தரமாகத் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை, புலத்து உறவுகள் கூறுவதுபோல் எமது மூன்றாவது தலைமுறை எக்காரணம்கொண்டும் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை பின்பு எதற்காக வீணாண சண்டை.

யாழ் கழத்தில் நான் இணைந்தகாலத்திலிருந்து யாரதுமனதினையும் புண்படுத்துமாப்போல் கருத்துக்கள் எழுதியிருந்தால் பகிரங்க மன்னிப்புக்கேட்கிறேன்.

யாவரும் இன்புற்றிருக்க,

அன்புடன்

எழுஞாயிறு.

உறவு எழுஞாயிறு,

தாயகத்தில என்ன நிலைமை என்று புரிதல் இருந்தால் புலத்தில் இருந்து பலம் சேர்க்கலாம். அனால் புலத்தில் இருந்து பகல் கனவு கண்டு அதை தாயாக மக்களுக்கு நன்மை என நினைத்து அவர்களின் கருத்தறியாமல் செய்வது எந்த பயனையும் தராது.

தாயாக மக்கள் எல்லா அனுபவங்களுக்கும் உட்பட்டு தெளிந்தவர்கள் ஆகவே அவர்களின் விருப்பு வெறுப்புக்கு தகுந்த இடம் தரப்படவேண்டும். 

அவரவர் வலிக்கு அவரவர் தான் மாத்திரை சாப்பிட முடியும். 

இன்னோமொன்று, பிடிச்சா புலிக்கொடி இல்லாட்டி சிங்க கொடி என்று இருப்பது கோளாறு. 

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்.தமிழர்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சீற் ஐதேக வுக்கு போயிருக்கின்றது. அதை தடுக்க கூட்டமைப்பால் முடியவில்லை.ததே மக்கள் முன்னணியால்தான் சீற் குறைந்தது என்பது இன்னும் அவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்வையோ அச்சத்தையோதான் தருகிறது.

உண்மையும் அதுதான், கழ்ப்புணர்ச்சி என்னவென்று சிலமாதங்களுக்கு முன்னர் பதியப்பட்ட கருத்துகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முதன்மை எதிரியாக வரிந்து கட்டி வரவேண்டிய நன்மைகளை போட்டு உடைத்தது உந்த பினாமிகள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி தாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பந்தன் ஐயா மேதினக்கூட்டத்தில் சிங்கக்கொடியைப்பிடித்ததையே மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர், சுமந்திரன் சுதந்திரதினத்தில் தேனீர் கலந்துகொண்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஆப்ரால் தலைவரையே மக்கள் ஏற்றுக்கொண்டபின்பு மாக்களாகிய நாங்கள் எம்மாத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஒட்டுக்குழு ஆள் 1990 இல் இருந்து எம் பி ஆகிக்கிட்டு தான் இருக்கார். அதேபோல்.. மண்ணெண்ணை குடும்பமும். இதெல்லாம்.. தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமான தெரிவுன்னு சிலர் வகுப்பெடுப்பது தான் கேவலமாக உள்ளது. விழுந்துள்ள விருப்பு வாக்குகள் நல்ல சாட்சி. இதே சித்தார்த்தன் வவுனியாவில் வென்று பின் கடைசி தேர்தல் வரை தோற்று.. தமிழ் தேசிய நிழலில் நின்று இப்ப மீண்டும் சிங்களப் பாராளுமன்றப் போறார். இவர் முந்தியும் ஒன்டும் கிழிக்க எனியும் கிழிக்கப் போறதில்லை. வாக்குப் போட்டு ஏமாறுவது தெற்காசிய சன நாய் அகத்தில் சகஜம். 

சொறீலங்காவில்.. இந்த வெற்றிகள் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு உரிமையும் கிடைக்கப் போறதில்லை. இழுபறிகளோடு அடுத்த 5 ஆண்டுகள் ஓடும். அதன் பின்னரும்..இதே பல்லவி தான்....................................................... இதுதான் கடந்த 60 ஆண்டுகால எமது வோட்டு அரசியல். இதில புலம்பெயர் மக்கள் கனவு காண்பதிலும் சிலருக்கு பொறாமை. :grin:

Edited by nedukkalapoovan

சூறாவளி தாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பந்தன் ஐயா மேதினக்கூட்டத்தில் சிங்கக்கொடியைப்பிடித்ததையே மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர், சுமந்திரன் சுதந்திரதினத்தில் தேனீர் கலந்துகொண்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஆப்ரால் தலைவரையே மக்கள் ஏற்றுக்கொண்டபின்பு மாக்களாகிய நாங்கள் எம்மாத்திரம்.

உங்களுக்கு 2009 யுத்தத்தின் இறுதி கட்டங்க்கள் இன்னும் நினைவு இருக்கும் என நினைக்கிறேன், அதை வெளியில் இருந்து பார்த்தால் வரும் உணர்ச்சிக்கும் அனுபவத்து பார்த்த பக்குவத்துக்கும் நிறைய வித்தாயம் இருக்கும். 

அதை சரிவர கையாண்டவர் சம்பந்தர். மிச்சத்தை நீங்களே யோசித்து முடியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் யாழ்கள உறாவுகளுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைவாக வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அமோகஆதரவைவழங்கி 2016ல் தமிழர்களுக்குத் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தவிர தமிழ்த் தேசிய மக்கள்முண்ணணி புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களது ஆதரவுத்தளத்தினை அல்லது கைக்கூலியாக அன்றேல் புலிவால்களது ஏஜண்டாகத் தேர்தல் களத்தில் நிற்கின்றது எனும் கருத்தில் பலமான நிலைகொண்டு புலத்தில் (தாயக மக்களால்) உள்ள மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் அதாவது எமது பிரச்சனையை நாமே பார்த்துக்கொள்கிறோம் உங்கட வேலையை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ என் புலம்பெயர் மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் போதும் எல்லாரும் பொத்திக்கொண்டு இருங்கோ, தெருவில இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுறம், நடைபயணம் போகிறம், சைக்கிள்  பயணம் போகிறம் ஜெனீவாவில ஒன்று கூடுகிறம், பொங்குதமிழ் பொங்காததமிழ் போன்றவறைச்செய்யுறம் என வெளிக்கிடாமல் சோலியைப்பாருங்கோ

விரும்பினால் சிறீலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளூங்கோ புலிக்கொடிக்குப்பதிலா சிங்கக்கொடியைத் தூக்குங்கோ, காசைச் சேத்து சிறீலங்கா போய் ஜாலியா இருங்கோ.

எதிர்வரும் சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்வு நான் வாழும் நாட்டில் நடக்கும்போது கட்டாயம் கலந்துகொள்வேன். இயலுமாகில் எனது நட்புவட்டத்தையும்  கூட்டிகொண்டுபோவதாக உத்தேசம்.

யாழ்களத்தில் யார்மீதும் எனக்கு எந்தவிதக்காள்ப்புணர்வும் இல்லை எல்லோரும் எனது நண்பர்களே அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிவிடும்போது உங்கள் நட்புக் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இலங்கைத்தீவில் இதேபோன்ற சூழல் எதிகாலத்திலும் தொடருமாகில் நாம் நிரந்தரமாகத் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை, புலத்து உறவுகள் கூறுவதுபோல் எமது மூன்றாவது தலைமுறை எக்காரணம்கொண்டும் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை பின்பு எதற்காக வீணாண சண்டை.

யாழ் கழத்தில் நான் இணைந்தகாலத்திலிருந்து யாரதுமனதினையும் புண்படுத்துமாப்போல் கருத்துக்கள் எழுதியிருந்தால் பகிரங்க மன்னிப்புக்கேட்கிறேன்.

யாவரும் இன்புற்றிருக்க,

அன்புடன்

எழுஞாயிறு.

கிட்டத்தட்ட எனது கருத்தும் இதுதான்.தாயக மக்கள் தங்கள் அரசியலைத் தீர்மானித்து விட்டார்கள்.அதன் பலாபலன்களை அனபவிக்கப் போவதும் அவர்கள்தான் புலத்தில் வேலை வெட்டியை விட்டுப் போட்டு ஊர்வலம் என்றும் >கூட்டம் என்று அங்குள்ள மக்களுக்காகப் போராடுவது வீண்வேலை போல் தெரிகிறது.அப்ப புலிகளையும் கூட்டமைப்பையும் எதிர்தவர்களெல்லாம் கூட்டமைப்பின் வெற்றியில் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் என்ன காரணம்????????

எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை.முஸ்லிம் காங்கிரஸ் ஐதேக உடன் கூட்டுச் சேர்ந்து கேட்டதாகச் சொல்கிறார்கள். இறுதி முடிவில் முகாவுக்கு 1 சீற் என்கிறார்கள் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

கஜே கோஸ்டி வந்தால் பசி தீர்ந்திடுமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் யாழ்கள உறாவுகளுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைவாக வடக்குக் கிழக்கில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அமோகஆதரவைவழங்கி 2016ல் தமிழர்களுக்குத் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தவிர தமிழ்த் தேசிய மக்கள்முண்ணணி புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களது ஆதரவுத்தளத்தினை அல்லது கைக்கூலியாக அன்றேல் புலிவால்களது ஏஜண்டாகத் தேர்தல் களத்தில் நிற்கின்றது எனும் கருத்தில் பலமான நிலைகொண்டு புலத்தில் (தாயக மக்களால்) உள்ள மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் அதாவது எமது பிரச்சனையை நாமே பார்த்துக்கொள்கிறோம் உங்கட வேலையை நீங்கள் பாத்துக்கொள்ளுங்கோ என் புலம்பெயர் மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் போதும் எல்லாரும் பொத்திக்கொண்டு இருங்கோ, தெருவில இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுறம், நடைபயணம் போகிறம், சைக்கிள்  பயணம் போகிறம் ஜெனீவாவில ஒன்று கூடுகிறம், பொங்குதமிழ் பொங்காததமிழ் போன்றவறைச்செய்யுறம் என வெளிக்கிடாமல் சோலியைப்பாருங்கோ

விரும்பினால் சிறீலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளூங்கோ புலிக்கொடிக்குப்பதிலா சிங்கக்கொடியைத் தூக்குங்கோ, காசைச் சேத்து சிறீலங்கா போய் ஜாலியா இருங்கோ.

எதிர்வரும் சிறீலங்காவின் சுதந்திரதின நிகழ்வு நான் வாழும் நாட்டில் நடக்கும்போது கட்டாயம் கலந்துகொள்வேன். இயலுமாகில் எனது நட்புவட்டத்தையும்  கூட்டிகொண்டுபோவதாக உத்தேசம்.

யாழ்களத்தில் யார்மீதும் எனக்கு எந்தவிதக்காள்ப்புணர்வும் இல்லை எல்லோரும் எனது நண்பர்களே அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிவிடும்போது உங்கள் நட்புக் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இலங்கைத்தீவில் இதேபோன்ற சூழல் எதிகாலத்திலும் தொடருமாகில் நாம் நிரந்தரமாகத் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை, புலத்து உறவுகள் கூறுவதுபோல் எமது மூன்றாவது தலைமுறை எக்காரணம்கொண்டும் தாயகம்நோக்கிப்போகப்போவதில்லை பின்பு எதற்காக வீணாண சண்டை.

யாழ் கழத்தில் நான் இணைந்தகாலத்திலிருந்து யாரதுமனதினையும் புண்படுத்துமாப்போல் கருத்துக்கள் எழுதியிருந்தால் பகிரங்க மன்னிப்புக்கேட்கிறேன்.

யாவரும் இன்புற்றிருக்க,

அன்புடன்

எழுஞாயிறு.

வணக்கம் சகோதரா..

ஏன் இந்த முடிவு???

நாம் சந்திக்காத தோல்விகளா?

நாம் இறங்காத படிகளா??

நாம் எதிர்கொள்ளாத ஏமாற்றுக்களா??

அமைதியாக சிந்தியுங்கள்

அந்த மக்கள் சொன்னார்களா? புலம் பெயர் தேசத்தவரின் நேசக்கரங்கள் வேண்டாமென்று??

சர்வதேசவிசாரணை வேண்டாமென்று??

எல்லா கட்சிகளும் கூட்டமைப்பு உட்பட அதைத்தானே மக்களிடம் சொன்னார்கள்.

அவர்கள் மூச்சுவிடட்டும்

நாம் வெளியிலிருந்து எம்மால் முடிந்தவரை அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு எழுஞயிறு, மக்கள் கஜே கோஸ்டியையும் அவர்கள் புலம்பெயர் போசகர்களையும் நிராகரித்து இருக்கிறார்கள். அவர்கள் தொல்லையில்லாமல் இருக்கவே விரும்புகின்றார்கள். இங்கு புலிவால்கள் வேறு புலம்பெயர் தமிழர்கள் வேறு என்பதனை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன். மக்களின் பிரதிநிதிகளுக்கு தொல்லைகொடுக்காமல் இருந்தாலே போதும்.

எழுநாயிறு  உங்கள் மனமாற்றம் புலம் பெயர்ந்த பலருக்கும் வரவேண்டும் .

நாட்டில் இருக்கும் மக்களின் அரசியலை புலம் பெயர்ந்தவர்கள் தமது பண ,ஊடக பலத்தால் நிர்ணயிக்கலாம் என்பதற்கான பதில் தான் இந்த தேர்தல் முடிவுகள் .

நேற்றிரவு லண்டன் IBC பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் இவர்கள் மாறப்போவதாக தெரியவில்லை .கூட்டமைபில் இருந்து சம் சும் கோஷ்டியை வெளியில் விட்டு தேசிய சக்திகளுடன் சேர்ந்து கூட்டமைப்பை மாற்றி அமைக்க போகின்றார்களாம் .(பேர்கர் பரமேஸ்வரன் ,நிராஜ் டேவிட் போன்றவர்கள் ). 

நாட்டு மக்களை போல புலம்பெயர் மக்களும் மிக தெளிவாக இருக்கின்றார்கள் .புலிகள் அமைப்பில் இருந்து இப்பவும் பணம் பதவியில் இருக்கும் ஒரு கூட்டம்  தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருந்து மக்களை குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள் .

முள்ளிவாய்கால் முடிவிற்கு பின் கூட்டமைப்புடன் சேர்ந்து ஏன் இவர்களால் பயணிக்கமுடியவில்லை .தாங்களே பல பிரிவுகளாக பிரிந்து அடிபட்டார்கள் பின்னர் இப்போ கூட்டமிப்பை உடைக்க முழு முயற்சி எடுகின்றார்கள் .

இவை எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் முப்பது வருடங்களாக அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு மற்றவர்கள் பின்னால் செல்ல அல்லது அவர்கள் சொல் கேட்க தயாராக இல்லை என்பதுதானே ஒழிய தமிழர்கள் தீர்வு பற்றிய அக்கறையோ அல்லது போர்குற்ற விசாரணை பற்றிய விடயங்களோ இல்லை .

இனம் இனத்தை தான்  நாடுமம் 

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல்
; பிரச்சினை தீர்ந்து விடும். தமிழர் பிரச்சினை தீர்ந்து விட்டால் வெற்றிலை ஆண்டாலென்ன.யானை ஆண்டாலென்ன. வீடு மெற்படி 2 இற்குள் அடங்கி விடும் தேர்தல் நேரத்தில் மட்டும் தனியாக நிற்கும். எனக்கு தமிழர் பிரச்சினை திர வேண்டும். அது 2016 இல் தீரும்

விருப்பு வாக்கு விபரங்கள்

விருப்பு வாக்கு விபரங்கள்

இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன.

மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்:

ஐக்கிய தேசியக் கட்சி

வசந்த அளுவிகார - 75926 வாக்குகள்

ஆர்.அளுவிகார - 74785 வாக்குகள்

ஆர்.கவிரத்ன - 41766 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

லக்ஷமன் டப்ளியூ பெரேரா - 79309 வாக்குகள்

ஜனக பி. தென்னக்கோன் - 61920 வாக்குகள்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

நாமல் ராஜபக்ஷ - 127201 வாக்குகள்

மஹிந்த அமரவீர - 84516 வாக்குகள்

சமல் ராஜபக்ஷ - 80621 வாக்குகள்

டி.வி.சானக்க - 51939 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சியின்

சஜித் பிரேமதாஸ - 112,649 வாக்குகள்

திலிப் வேதாராச்சி - 65,391 வாக்குகள்

மக்கள் விடுதலை முன்னணி

நிஹால் கலப்பத்தி - 12,162 வாக்குகள்

பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி

வசந்த சேனாநாயக்க - 75,651 வாக்குகள்

நாலக்க கோலோன்னே - 70,107 வாக்குகள்

சிடினி ஜெயரத்ன - 41,295 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

ரோஷான் ரணசிங்க - 76,825

சிறிபால கம்லத் - 63,909

பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி

ஹரீன் பிரணாந்து - 200,806 வாக்குகள்

ரவிந்ர சமரவீர - 58,507 வாக்குகள்

சமிந்த விஜேசிறி - 58,291 வாக்குகள்

அரவிந்த குமார் - 53741

வடிவேலு சுரேஷ் - 52378

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

நிமல் சிறிபாலடி சில்வா - 134,406 வாக்குகள்

சாமர சம்பத் - 64,418 வாக்குகள்

தேனுக விதான கமகே - 43,517 வாக்குகள்

மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி

ரஞ்சித் மத்துபண்டார - 82,316 வாக்குகள்

ஆனந்த குமாரசிறி - 44,007 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

விஜித பேருகோட - 74,313 வாக்குகள்

சுமேதா ஜயசேன - 69, 082 வாக்குகள்

உதயஷாந்த குணசேகர - 57,356 வாக்குகள்

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி

ஆர்.சம்பந்தன் - 33,834 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி

அப்துல்லா மஹருப் - 35,456 வாக்குகள்

இம்ரான் மஹருப் - 32,582 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

எஸ்.புஞ்சிநிலமே - 19,953 வாக்குகள்

மாத்தறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி

புத்திக பத்திரண - 98,815 வாக்குகள்

மங்கள சமரவீர - 96,092 வாக்குகள்

சாகர ரத்நாயக்க - 85,771 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

டலஸ் அழகப் பெரும - 105,406 வாக்குகள்

நிரோஷன் பிரேமரத்ன - 99,762 வாக்குகள்

மஹிந்த யாப்பா அபேவர்த்தன - 97,918 வாக்குகள்

காஞ்சன விஜேசேகர - 83,278 வாக்குகள்

சந்திரசிறி கஜதீர - 54,251 வாக்குகள்

காலி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சந்திமா வீரக்கொடி - 114851 வாக்குகள்

ரமேஷ் பத்திரண - 105434 வாக்குகள்

எம்.முத்துஹெட்டிகம - 75994 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி

கயந்த கருணாதிலக்க - 149573 வாக்குகள்

விஜிர அபேவிதாரன - 142874 வாக்குகள்

பி.பண்டாரிகொட - 66970 வாக்குகள்

யாழ்ப்பாண விருப்பு வாக்கு விபரங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி

எஸ. ஶ்ரீதரன் – 72058 வாக்குகள்

மவை சேனாதிராஜா – 58782 வாக்குகள்

எம்.ஏ.சுமந்திரன் – 58043 வாக்குகள்

சித்தார்த்தன் – 53740 வாக்குகள்

ஈ.சரவணபவன் – 43289 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி

விஜயகலா மகேஸ்வரன் - 13071 வாக்குகள்

ஈபிடிபி

டக்ளஸ் தேவானந்தா - 16399 வாக்குகள்

கண்டி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

லொகான் ரத்வத்தை - 129750

மஹிந்தானந்த அளுத்கமகே - 123393

டி.அமுணுகம - 104469

அனுராத ஜெயரத்ன - 93567

கெஹலிய ரம்புக்வெல்ல - 65687

ஐக்கிய தேசியக் கட்சி

லக்ஷ்மன் கிரியெல்ல - 199046

மயந்த திஸாநாயக்க - 111190

ரவூப் ஹக்கீம் - 111011

எம்.எச்.ஏ.கலீம் - 102186

லக்கி ஜே - 67461

புத்தளம் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி

பாலித்த ரங்கே பண்டார - 66960

நிரோஷன் பெரேரா - 59337

ஹெக்டர் அப்புகாமி - 55475

எஸ்.அபேசேகர - 36390

ஏ.பிரியந்த - 35418

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சனத் நிஷாந்த - 68240

பிரியங்கர ஜெயரத்ன - 59352

அருந்திகா பெர்னாண்டோ - 47118

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

குமார் வெல்கம - 218614

ரோஹித அபேகுணவர்த்தன - 127040

ஜெயந்த சமரவீர - 101039

ஐக்கிய தேசியக் கட்சி

ராஜித்த சேனாரத்ன - 142186

அஜித் பி பெரேரா - 131383

பாலித தேவப்பெரும - 118128

மக்கள் விடுதலை முன்னணி

நலிந்த ஜெயதிஸ்ஸ - 24855

குருநாகல் மாவட்ட விருப்பு வாக்கு விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

மஹிந்த ராஜபக்ஷ - 423529

தயாசிறி ஜயசேகர - 133532

டி.பி.ஏகநாயக்க - 82789

அனுர யாப்பா - 77057

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - 76714

சாலித திஸாநாயக்க – 54318

இந்திக பண்டாரநாயக்க – 46356

ஐக்கிய தேசியக் கட்சி

அகில விராஜ் – 286755

ஜே.சி.அலவதுவல – 106061

ஜெமினி ஜே.பி – 83346

என்.பண்டார – 80063

எஸ்.பி.நாவின – 76714

நுவரெலிய மாவட்ட விருப்பு வாக்கு விபரம்

ஐக்கிய தேசியக் கட்சி

பழனி திகாம்பரம் – 105528

இராதாகிருஸ்ணன் – 87375

டி.மயில்வாகனம் – 67761

நவீன் திஸாநாயக்க – 66716

கே.கே.பியதாஸ – 48365

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

ஆறுமுகன் தொண்டமான் – 61897

சீ.பி.ரத்நாயக்க – 45649

முத்து சிவலிங்கம் - 45352

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி

ஞானமுத்து சிறிநேசன் - 46421

சதாசிவம் வியாளேந்திரன் - 39321

சீனித்தம்மி யோகேஸ்வரன் - 34039

ஐக்கிய தேசிய கட்சி

அமீர் அலி முஹம்மது சிஹாப்தீன் - 16386

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அலிசாஹிர் மௌலானா செயிட் - 16111

(அத தெரண தமிழ்)

http://tamil.adaderana.lk/news.php?nid=71772

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.