Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாறுபட்ட தளத்தில் பணிபாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது: -புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
[Friday 2015-08-21 09:00]
எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணிபாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணிபாற்றுவதற்கான மபெரும் அங்கீகாரம் எனக்கு வழங்ப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வாக்களித்த யாழ். கிளிநொச்சி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், விருப்பு வாக்குகள் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மக்கள் மீண்டுமொரு தடவை எனக்கு மாபெரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்த அவர்கள் இரண்டு வருட காலப்பகுதிக்குள் என்னை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்து மாறுபட்ட தளத்தில் அவர்களுக்கு சேவையாற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளார்கள்.

அதனடிப்படையில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எனது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த காலத்தில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தபோது கற்றுக் கொண்ட விடயங்கள் பட்டறிந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு எனது சேவையைத் தொடரவுள்ளேன்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற மிகப்பெரும் பதவி நிலையை உங்கள் சேவைக்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=138688&category=TamilNews&language=tamil

  • Replies 59
  • Views 2.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வ்வுனியா "சேவையை" ஆற்றமாட்டீர்கள் என நம்புகிறேன். தாங்கள் வ்வுனியாவில் சேவையினூடாக வியர்வை சிந்தி உடல் வருத்தி சேர்த்த பணம்  இருப்பதால் அரசாங்க கொடுப்பனவுகளை பெறமாட்டீர்கள். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இதே மக்களால் ஆணை வழங்கப்பட்ட வரதராஜப் பெருமாள்.. அதே மக்களை கொன்று குவித்தார்.

இதே மக்களால் ஆணை வழங்கப்பட்ட டக்கிளஸ் தேவானந்தா.. அதே மக்களை கொன்று குவித்தார்.

கடந்த காலத்தில் வவுனியாவில் ஆணை வழங்கப்பட்ட போது அதே மக்களை கொன்று குவித்தார் இவர் சித்தார்த்தன். பின்னர் வவுனியா மக்கள் தேர்தல்களில் சங்கரியைப் போல.. விரட்டி அடித்தார்கள். 

இப்ப யாழ். கிளி மக்கள் மீண்டும் உங்களுக்கு வாக்குப் போட்டு உங்கள் பணியை தொடர இடமளித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் மனங்களில் கொலைகாரர்களுக்கு நிரந்தர இடம் உள்ளது போல. தொடர்ந்து கொலைகள் கடத்தல்கள் நடந்தால் தானே வெளிநாட்டில் அசைலம் அடிக்க கதை பின்ன வசதியா இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கடந்த கால பணிகள் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பமைப்பின் அறிக்கை.. 2013.

In some cases reported to Human Rights Watch, former detainees also pointed to the role played by members of pro-government Tamil paramilitary or armed groups, namely the Eeelam People’s Democratic Party (EPDP), People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), and the Karuna group. These groups acted in conjunction with security forces by providing information on alleged LTTE sympathizers and their families. Detainees frequently secured their release from detention by paying bribes to security forces using members of these groups as interlocutors. Often Tamil parliamentarians would play this role.

1.

Name: RC

Gender: Female

Age: 30

Date Detained: February 2010

Date Released: May 2010

Circumstances of detention: One day in mid-February 2010, RC was at her home in Kondavil, Jaffna when, at about 11 p.m., a white van stopped outside. Five men in civilian clothes entered her house after jumping over the boundary wall of the house. Two of the men grabbed her and dragged her out to the van.

 

RC told Human Rights Watch she was pushed into the van. She was then gagged, handcuffed, and blindfolded. The van drove for about 15 minutes and stopped; she was dragged out and taken into a room in a building.

 

Account:

 

I was kicked and beaten. They beat my legs with a rifle. They told me, “You dance with these legs for LTTE. We will break your legs.” They knew that I worked for the cultural wing of the LTTE. I told them I did not support the LTTE but they kept beating me. When they left they opened my blindfold. The room was dark and smelled dusty. The next day, one senior army official and some other people came to see me. They fingerprinted me, took my photograph, and asked me to sign two blank sheets of paper. I refused to sign. They started beating me with the back of a rifle. I was very scared and signed the paper. They left after that. That night, the senior officer returned to my room. He smelled drunk. He locked the door from inside. He removed his clothes. He came close to me and started licking my face and my body. He spoke broken Tamil. He called me “cow” and said I must have good milk. I kept trying to push him away. At one time I managed to push him away. He grabbed me again. He tried to kiss me. When I wouldn’t allow him that, he bit my lips. He told me he would rape me. He was very angry with me. He pushed me on the ground, kicking and beating me. He was swearing at me in Sinhala. I did not understand anything else. He tore my clothes off and raped me. I lost consciousness. I did not see him leave the room.

 

The following night two other men came to my room. They blindfolded me and forced me into a van. We drove for a very long time. When we stopped they removed my blindfold and I saw a derelict house surrounded by some trees and a compound. I was taken into a room where a group of men in civilian clothes were present. They started questioning me about my involvement with the LTTE. They took my photograph and fingerprints. They beat me with a rifle.

 

I stayed in a bloodstained and dirty room in that house for nearly eight days. I was made to do menial work in that house. I was not sexually abused or tortured in this second detention. I got talking to someone who used to bring food into that house twice a day and learned that this was a People’s Liberation Organization of Tamil Eelam [PLOTE, a pro-government Tamil paramilitary group] camp. [131]

 

RC’s medico legal report, on file with Human Rights Watch, notes 29 scars on her body including nine near her genitals, provide “strong support to her account of sexual abuse.” In addition, the report notes, that “her pronounced anxiety and fear match the criteria for post-traumatic stress disorder.”

RC told Human Rights Watch she escaped from detention with the help of a man who delivered food to the PLOTE camp. She paid an “agent” to bribe authorities and facilitate her departure from Sri Lanka in May 2010.

2. EN told Human Rights Watch her relatives managed to secure her release from detention after bribing officials through a member of People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE).

3. NJ told Human Rights Watch she was released from detention after her family bribed soldiers through members of PLOTE.

https://www.hrw.org/report/2013/02/26/we-will-teach-you-lesson/sexual-violence-against-tamils-sri-lankan-security-forces

சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை: 2012

In August 2009, a confidential source with links to Sri Lankan military intelligence provided Amnesty International with details of several places where enforced disappearances, torture, and extrajudicial killings were alleged. These included camps where the Sri Lankan authorities acknowledged holding alleged LTTE detainees as well as facilities used principally for interrogation including the 211 Brigade Headquarters in Vavuniya, and the paramilitary organization PLOTE’s detention centre in Vavuniya, which the source said contained a small torture chamber.82 

http://files.amnesty.org/archives/asa370032012eng.pdf

பிபிசி விசாரணை அறிக்கை - 2011

Seven centres

She said that Amnesty International had cited 7 torture detention sites in northern Sri Lanka; five in Vavuniya and two in Mullaitivu.

Poonthottam Maha Vidyalaya, 211 Brigade headquarters, Vallikulam Maha Vidyalaya, the PLOTE paramilitary detention centre and Dharmapuram as five camps in Vavuniya while two camps were named from Mullaitheevu.

http://www.bbc.com/sinhala/news/story/2011/11/111108_torture.shtml

அம்னாஸ்ரி அறிக்கை - 99/2000 (தசாப்தங்கள் கடந்தும்... தொடருது  உங்கட சித்திரவதைச் சேவை) tw_angry:

SRI LANKA

Sivam Ashokumar (20)
Arumugam Pakkiri (alias Jeya) (35)
Two other men, names unknown

The men named above are believed to be held prisoner by the People's Liberation Organization of Tamil Eelam (PLOTE), an armed Tamil group fighting alongside the Sri Lankan security forces. Amnesty International believes they are at risk of torture or "disappearance".

Sivam Ashokumar, a labourer from Cheddikulam Road, Sambaltotam, Vavuniya, was working by the roadside when PLOTE members came and took him away in a minibus, at around 11.30am on 24 January 1999. On 23 January, two PLOTE members had reportedly come to his home to kill him, but left when his neighbours protected him. The reasons for this attack are unknown. Shortly after he was taken away, his relatives made inquires at the PLOTE camp in Kurumankadu, but PLOTE leaders apparently denied he was in their custody.

Arumugam Pakkiri (alias Jeya), a carpenter, came to Vavuniya from Mannar on 6 February. He was taken from the lodge where he had been staying at 9am on 7 February by members of PLOTE, who confiscated his identity card and those of two other people who had travelled with him, and then took all three men away. Later that day PLOTE members brought Arumugam Pakkiri (alias Jeya) to the house of a relative in Rambaikulam, Vavuniya and said that he was being taken into custody on suspicion of being a member of the LTTE. When his relatives made initial inquires at the local PLOTE camp they were told that Arumugam Pakkiri (alias Jeya) was under investigation and could not be released.

Since then the relatives of both men have made inquires at PLOTE camps in the area including Malar Malagai, "Lucky House" and Kovilkulam. PLOTE members have denied that the men are in their custody. 

http://www2.amnesty.se/uaonnet.nsf/dfab8d7f58eec102c1257011006466e1/8fcba26a9c40b5cbc1256721004a4580?OpenDocument

Edited by nedukkalapoovan

இப்படி ஆதாரம் போட்டால்  கனடாவில் இருந்து வந்து செஞ்சுடுவம்:grin:

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் பராமிலிரரி ஆயுதக் கும்பல் பல தசாப்தங்களாக சொந்த மக்களுக்கு எதிராக நிகழ்த்திய பல துன்பங்களில்.. இவை ஒரு சில. இவற்றை அறிந்த எந்த சராசரி மனிதனும் இவர்களை தன் பிரதிநிதி என்று ஆக்கி மகிழமாட்டான். ஆனால்.. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மண்டை விறைச்ச மக்கள் இவங்களுக்கு வாக்குப் போடுவது வேதனையிலும் வேதனை. போர்க்குற்றவாளிகள் சிங்களவர்கள் மட்டுமல்ல.. இந்தச் சித்தார்த்த தரவழிகளும் கூட. இவர்கள் மனித குலத்தால் மன்னிக்கப்பட முடியாத கொடும் குற்றவாளிகளும் கூட. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வாழும் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்களும்
புளொட்டை  ஆதரிப்பவர்களும்
முன்னாள்  பா உ  தர்மலிங்கத்தின் ஆதரவாளர்களும் திருந்தினால் மட்டுமே

இப்படியானவர்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜர் போட்டி இன்றி தெரிவானார் என்று வாலியும் மீராவும் இன்னோர் திரியில் ஆதாரம் தந்துளார்கள்.

கருத்துகள் எவ்வகை லூசுத்தனமாயும் இருக்கட்டும், ஆனால் வரலாறு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மட்டுமல்ல.. இந்தக் கொடியவர்களை எல்லாம்.. தமிழ் தேசிய அடையாளப்படுத்தலோடு மக்கள் முன் நிறுத்தும் சம் சும் கும்பலும் சேர வேண்டிய இடம் சேர வேண்டும். tw_angry:

வரதராஜர் போட்டி இன்றி தெரிவானார் என்று வாலியும் மீராவும் இன்னோர் திரியில் ஆதாரம் தந்துளார்கள்.

கருத்துகள் எவ்வகை லூசுத்தனமாயும் இருக்கட்டும், ஆனால் வரலாறு முக்கியம்.

அதே திரியில் சரியான வரலாறு பதியப்பட்டுள்ளது. வால் பிடிப்பதை விட்டு.. உண்மைகளை வரலாறு என்று பதியவும்.. விடயங்களை சரிவர உள்வாங்கி எழுதவும்.. சம்பந்தப்பட்ட தலைப்புக்குள் மட்டும் அவற்றை முன் வைக்கவும் பழகிக் கொள்வது நல்லது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

"சித்தார்த்தன் அவர்களை தேர்ந்தெடுத்ததன் மூலம், வவுனியாவில் தமிழ் மக்களுக்கு எதிரான சித்திரவதைக் கொலைகளை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்..!"

இப்பிடி யாரும் அறிக்கை தரலையா? :innocent:

chuckling-gesture-smiley-emoticon.gif

வவுனியா மட்டுமா ? 

இறை ,உமையில் தொடங்கி முகாம்கள் ,சுழிபுரம் ,தமிழ் நாடு கடற்கரை கடைசியில் மன்னார்,வவுனியா,கொழும்பு  வரை தொடர்ந்தது .

ஆயுத போரட்டம் தொடங்கி ஆயுதத்தை தொட்டவுடன்  எமது இளைஞர்களுக்கு ஏற்பட்ட மனோ வியாதி இது .

உட்கொலை ,கொலைகள் செய்யாத ஒரே அமைப்பு ஈ பி தான் அதன் தலைமை அப்படி .  இந்திய இராணுவ வருகையுடன் அவர்களும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள் .இதில் யார் கூட குறைய என்று கணக்கு பார்க்க வெளிக்கிட்டால் புலிகளுக்கு கிட்ட மற்றவர்கள் நெருங்கவும் முடியாது .

அவ்வளவு கொலைகள் சித்திரவதைகள் மாற்று இயக்கத்தவர்களையும் பொதுமக்களையும் செய்து தொலைத்தவர்கள் அவர்கள் .துரையப்பா தொட்டு முள்ளிவாய்கால் வரை அது தொடர்ந்தது .பல வதை முகாம்களே வைத்திருந்தார்கள் .

இப்படியானவர்களை தலைவராகவும் தமிழர்களின் விடுதலைக்கான அமைப்பாகவும் அங்கீகரித்தவர்கள் சித்தரை பார்த்து சிரிப்பது அடுப்பை பார்த்து சட்டி கறுப்பு என்ற கதைதான் .

இந்திய இராணுவம் இலங்கையில் கொலைகளோ பாலியல் வல்லுறவோ செய்யவில்லை என்பது போலத்தான் வாலுகளின் நிலைபாடும் ஆனால் ஐ நா அறிக்கை பக்கம் பக்கமாக இருக்கு .

நெடுக்கர் பதிந்தது ஒரு பக்கம் புலிகள் செய்த கொலைகளை பதிய அது புத்தகம் ஆகிவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

இது யுத்தம் முடிந்த பின்னரும் தொடரப்பட்ட மனித இனத்துக்கு எதிரான படுகொலைகளை சித்திரவதைகளை உள்ளடக்கியது மிஸ்டர் அர்ஜூன். உங்களுக்கு புலிகள் மீது குற்றம் பிடிக்க தண்டிக்க உள்ள அக்கறை.. சித்தார்த்தன் போன்ற கொடியவர்கள் தண்டிக்கப்படனும் என்பதில் இல்லாமல் போனது உங்களின் போலித்தனமான மக்கள் அக்கறையை மட்டுமே வெளிப்படுத்தி நிற்கிறது.

இன்றும் எப்போதும் சர்ச்சைக்குரிய புலிகள் ஜனநாயக முலாம் பூசிக்கிட்டு தேர்தலை சந்திக்கவில்லை. தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு சிங்களப் பாராளுமன்றக் கதிரையில் குத்தவில்லை. அந்த வகையில்..என்றாலும் கூட.. புலிகள் எவ்வளவோ மேலானவர்கள்.. மதிக்கப்பட வேண்டியவர்கள். 

ஆனால் இந்த கொடிய கொலைகாரக் கும்பலின் தலைவன்.. இன்றும் தன்னை சனநாயக வாதியாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் உண்மையான சனநாய் அகவாதின்னா.. புளொட் கொலைகார அமைப்பை கலைத்துவிட்டு.. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க விட்டு.. தன் தலைமையிலான அமைப்பு செய்த மனிதப் படுகொலைகளுக்கான பொறுப்பை ஏற்று அரசியலில் இருந்தும் விலகி சட்டத்தின் முன் சரணடைந்து தண்டனை அனுபவிப்பதே சிறந்தது. அதுதான் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கான குறைந்த பட்ச தண்டனையாக இவருக்கு இருக்க முடியும். 

அதனை தாங்கள் இவர்களுக்கு தங்கள் கருத்தில் பதிவிட முடியுமா. முடியாது. புலிகளை விட இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை 2014 வரையான சர்வதேச அறிக்கைகளே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை கண்டும்.. நீங்கள் இன்னும் திருந்தவோ... திருத்திக் கொள்ளவே இல்லை என்பது உங்கள் போன்றோரின் மனித குலத்துக்கு எதிரான  சொந்த மக்களுக்கு எதிரான மன வக்கிரங்களை இனங்காண முடிகிறது. நீங்கள் எல்லாம் உண்மையில் மனிதர்களாக மனதளவில் வாழ்வில்லை. கொலைகார மிருகங்களாவே மனித உருவில் உலா வருவதை இது இனங்காட்டுகிறது. 

Edited by nedukkalapoovan

நெடுக்கர் ,

எவ்வளவோ கொலைகள் செய்தவர் என்று தெரிந்தும் சுரேசை கூட்டமமைப்பில்  எப்படி சேர்த்தார்கள் .எப்படி எம் பி ஆக்கினார்கள்?

இதற்கு முதல் பதிலை சொல்லவும் .

தன்னுடன் ஒப்பிடும் போது சுரேஷ் செய்தது ஜுஜுப்பி என்று பிரபா நினைத்தாரோ தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் ,

எவ்வளவோ கொலைகள் செய்தவர் என்று தெரிந்தும் சுரேசை கூட்டமமைப்பில்  எப்படி சேர்த்தார்கள் .எப்படி எம் பி ஆக்கினார்கள்?

இதற்கு முதல் பதிலை சொல்லவும் .

தன்னுடன் ஒப்பிடும் போது சுரேஷ் செய்தது ஜுஜுப்பி என்று பிரபா நினைத்தாரோ தெரியாது 

சுரேஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைய முந்தியே அவரின் ஈபிஆர் எல் எவ் அணி சொந்த மக்களுக்கு எதிரான வன்முறைகளை கைவிட்டிருந்தது. சகோதர யுத்தத்தை முன்னெடுப்பதை நிறுத்தி விட்டிருந்தது. ரெலோவும் அதே. ஆனால்.. சிங்கள அரசு யுத்தம் முடிந்ததாக அறிவித்த பின்னும்.. இன்று ஐநாவில் விசாரணையில் உள்ள.. மானுடத்துக்கு எதிரான போர்க்குற்றங்களில்.. சித்தார்த்தனின் புளொட் அமைப்பும் ஈடுபட்டுள்ளமை சர்வதேச அறிக்கைகளில் இருந்தும் தெளிவாகிறது. இன்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள்.. மக்கள் விரோதச் செயல்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபடும் செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்த நிலையில்.. சுரேசா.. சித்தார்த்தனா...மிகக் கொடியவர்கள் இன்றும் கொடியவர்கள் என்று நோக்கின் சித்தார்த்தன் என்பது தெளிவு. 

ஒருவேளை யுத்தக் குற்றங்கள் தொடர்பில்.. இந்தியப் படைக்காலமும் உள்வாங்கப்படின்.. சுரேஸும் அதனை சந்தித்துதான் ஆக வேண்டும். தப்ப முடியாது. ஆனால்.. அதனை காரணம் காட்டி இன்றும் மக்களை வதைக்கும் சித்தார்த்தனை மன்னிக்கக் கோருவது மிகக் கேவலமாக மானுடத்தை வதைக்கும் செயலாகும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் ,

எவ்வளவோ கொலைகள் செய்தவர் என்று தெரிந்தும் சுரேசை கூட்டமமைப்பில்  எப்படி சேர்த்தார்கள் .எப்படி எம் பி ஆக்கினார்கள்?

இதற்கு முதல் பதிலை சொல்லவும் .

தன்னுடன் ஒப்பிடும் போது சுரேஷ் செய்தது ஜுஜுப்பி என்று பிரபா நினைத்தாரோ தெரியாது 

 

எல்லோரும் வந்து சேருங்கள் என்ற அழைப்பு விடுக்கப்பட டு உள் வாங்கப்பட்டார்கள்

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் செய்தார் இவர் கூடச் செய்தார் என்று முடிவின்றி வாதாடிக் கொண்டிருப்பதால் ஒருவருக்கும் பலனில்லை. புலிகளின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் புளொட்டைக் குற்றம் சாட்ட புலி ஆதரவாளர்களுக்கு உரிமையில்லை. அதே போல புளொட்டின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் புலிகளின் குற்றங்களைச் சுட்டிக் காட்ட நியாயமான காரணங்கள் இல்லை. இதை உணர்ந்து கொண்டாலே இந்தத் திரி நீளாமல் நின்று விடும் (ஆனால், அப்படி நிற்காது என்றும் எனக்குத் தெரியும்!:rolleyes:)  

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன சொல்லவாரீங்க. 10 = 1x 10 = 9+1 = 8+2 = 11-1 = 20/2 எல்லாம் சமன். கணக்குன்னு வந்திட்டா.. பெருக்கல்.. கூட்டல்.. கழித்தல்.. பிரித்தல் எல்லாம் ஒண்ணு தான். யுத்தத்துக்கு முன்னால.. பின்னால செய்தால் என்ன. நாம தப்பிட்டமில்ல..குடும்பமா. சோ.. அது மன்னிக்கப்படலாம்.. அக்கறை காட்டப்படாது. அது இது எல்லாம் ஒண்ணு தான். இல்லாத புலிக் கணக்கை காட்டி.. இருக்கிறவை எதுவும் செய்திட்டு போகட்டும். நமக்கு தான் என்ன நட்டமா.. என்றீங்க போல. ஆனால் மானுடத்தை மதிக்கும் உலகம்.. கணக்கை பகுத்தாயும் உலகம்.. இதனை அவ்வளவு இலகுவாக எடுக்காது கண்டியளோ. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற தத்துவார்த்தத்தை பின்பற்றும் அமெரிக்கா தான் ஜப்பானில் அணு குண்டு வீசியது. tw_angry:

அவரும் செய்தார் இவர் கூடச் செய்தார் என்று முடிவின்றி வாதாடிக் கொண்டிருப்பதால் ஒருவருக்கும் பலனில்லை. புலிகளின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் புளொட்டைக் குற்றம் சாட்ட புலி ஆதரவாளர்களுக்கு உரிமையில்லை. அதே போல புளொட்டின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் புலிகளின் குற்றங்களைச் சுட்டிக் காட்ட நியாயமான காரணங்கள் இல்லை. இதை உணர்ந்து கொண்டாலே இந்தத் திரி நீளாமல் நின்று விடும் (ஆனால், அப்படி நிற்காது என்றும் எனக்குத் தெரியும்!:rolleyes:)

 

இந்த திரியில் முதலாவது பின்னூட்டத்தை புடுங்கியிருந்தாலே இந்த நிலை வந்திராது .

Edited by arjun
சில மாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன சொல்லவாரீங்க. 10 = 1x 10 = 9+1 = 8+2 = 11-1 = 20/2 எல்லாம் சமன். கணக்குன்னு வந்திட்டா.. பெருக்கல்.. கூட்டல்.. கழித்தல்.. பிரித்தல் எல்லாம் ஒண்ணு தான். யுத்தத்துக்கு முன்னால.. பின்னால செய்தால் என்ன. நாம தப்பிட்டமில்ல..குடும்பமா. சோ.. அது மன்னிக்கப்படலாம்.. அக்கறை காட்டப்படாது. அது இது எல்லாம் ஒண்ணு தான். இல்லாத புலிக் கணக்கை காட்டி.. இருக்கிறவை எதுவும் செய்திட்டு போகட்டும். நமக்கு தான் என்ன நட்டமா.. என்றீங்க போல. ஆனால் மானுடத்தை மதிக்கும் உலகம்.. கணக்கை பகுத்தாயும் உலகம்.. இதனை அவ்வளவு இலகுவாக எடுக்காது கண்டியளோ. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற தத்துவார்த்தத்தை பின்பற்றும் அமெரிக்கா தான் ஜப்பானில் அணு குண்டு வீசியது. tw_angry:

நெடுக்கர், இது எனக்கா? விடயம் சிம்பிள், இவ்வளவு குழப்பம் தேவையில்லை. புலிகளின் குற்றங்களை விமர்சியுங்கள், ஏற்றாவது கொள்ளுங்கள். பிறகு நீங்கள் சித்தாவைப் பற்றியும் யாரைப் பற்றியும் பேசலாம்! இல்லையேல், இப்படியே புசத்திக் கொண்டிருங்கள்! உலகம் ஒன்றும் அழிந்து விடாது! :cool:

சித்தார்த்தன் வென்றதற்கு யாழ் படித்த மக்கள் தான் காரணம் கொலைகள் செய்வதில் புலிகளும் சலித்தவர்கள் அல்ல மாற்று இயக்கங்களும் சலித்தவர்கள் அல்ல இது மக்குளுக்கு நன்றாக தெரியும்  நடப்பவையைபற்றி.நிகழ்காலத்தைபற்றிசிந்தியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை அடுத்த வீட்டு நிகழ்வல்ல.மறக்க மறைக்க.இல்லாத புலிகள் மீது குற்றம் தேடுவதிலும் இருந்து கொண்டு இன்றும்  மானுடத்தை அழிப்பவர்களை சனநாய் அகத்தின் பெயரால் அனுமதிக்க நீதியின் பாற்பட்ட உலகம் இடம் தராது..அதன் குரல் தான் எமது.!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலை செய்தாலும் கொலைகாரன்தான் ஆயிரம் கொலைசெய்தாலும் கொலைகாரன்தான். குpறய கொலைகளைச் செய்தவன் பல கொலைகளைச் செய்தவனைப் பார்த்து நீ கொலைகாரன் என்று சொல்ல முடியாது.சித்தர் 2009 வரைக்கும் இன அழிப்புக்கு துணை போனவர். என்பது உண்மை.மகிந்த கொலைகாரன் என்றால் மகிந்தவுக்கு சப்போர்ட் பண்ணி இனஅழிப்ழப நியாயப்படுத்தியவர் சித்தர் என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்தே உங்களின் நடுநிலைமை விளங்குகிறது. 

அவரும் செய்தார் இவர் கூடச் செய்தார் என்று முடிவின்றி வாதாடிக் கொண்டிருப்பதால் ஒருவருக்கும் பலனில்லை. புலிகளின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் புளொட்டைக் குற்றம் சாட்ட புலி ஆதரவாளர்களுக்கு உரிமையில்லை.

அதே போல புளொட்டின் குற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் புலிகளின் குற்றங்களைச் சுட்டிக் காட்ட நியாயமான காரணங்கள் இல்லை. இதை உணர்ந்து கொண்டாலே இந்தத் திரி நீளாமல் நின்று விடும் (ஆனால், அப்படி நிற்காது என்றும் எனக்குத் தெரியும்!:rolleyes:)  

ஏன் நான் எழுதியில் தவறு உள்ளதா? அல்லது ஏதாவது விடுபட்டுள்ளதா? 

 

நீங்களும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களும் முதலில் அதை செய்யுங்கள்.  பச்சை வேற கொடுமை 

நெடுக்கர், இது எனக்கா? விடயம் சிம்பிள், இவ்வளவு குழப்பம் தேவையில்லை. புலிகளின் குற்றங்களை விமர்சியுங்கள், ஏற்றாவது கொள்ளுங்கள். பிறகு நீங்கள் சித்தாவைப் பற்றியும் யாரைப் பற்றியும் பேசலாம்! இல்லையேல், இப்படியே புசத்திக் கொண்டிருங்கள்! உலகம் ஒன்றும் அழிந்து விடாது! :cool:

யாழ: மேட்டுகுடிகளின் வாக்குகள் சித்தார்த்தனுக்குதான் கிடைக்கும்.   புளோட் மேட்டுகுடியின் இயக்னம் அதனால் தான் இந்தியாவே ஆயுதத்தை பறித்தது.புலிகள் அதனால் தான் புளோட்டை த.தே.கூட்டமைப்பைப்பில் சேர்க்கவில்லை.

அனந்தி எதுக்கு சித்தருக்கு பிரச்சாரம் செய்யபோனா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.