Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?

Featured Replies

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் – இழுபறிக்கு இன்றைய கூட்டத்தில் முடிவு?

AUG 22, 2015 | 4:41by கார்வண்ணன்in செய்திகள்

tna-leadersநாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்று இன்று முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்களை வென்ற ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகிய கட்சிகளின் சார்பில், 27 உறுப்பினர்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

எனினும், கூட்டமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இரண்டு உறுப்பினர்களின் பட்டியலே எஞ்சியுள்ளது.

மொத்தமுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அது தனியாக வர்த்தமானி மூலம் வெளியிடப்படும்.

தேர்தல் முடிந்து ஒரு வாரத்துக்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், கூட்டமைப்பின் பட்டியல் சமர்ப்பிக்கப்படாததால், வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக இழுபறி நிலவி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

அதேவேளை, தமிழரசுக் கட்சிக்கு ஒன்றும், பங்காளிக் கட்சிகளுக்கு மற்றொன்றும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இரு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அம்பாறைக்கும், மற்றொன்றை திருகோணமலைக்கும் வழங்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கல்முனையைச் சேர்ந்த ஒருவருக்கு, தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க வேண்டும் என்று கோரியும், போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் இழுபறி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2015/08/22/news/9060

  • கருத்துக்கள உறவுகள்

இதனிடையே, இரு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அம்பாறைக்கும், மற்றொன்றை திருகோணமலைக்கும் வழங்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுரேசையும் காய் வெட்டினதாகுது. சம்பந்தனா கொக்காவா?

கிழக்கில் இருந்து இரு உறுப்பினர்களை எடுப்பது சரி. பியதாசாவை போலில்லா விட்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

சும் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என நிற்கிறார். வரவேற்கப்பட வேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

பல கட்சி கூட்டுக்களைக் கொண்ட சிங்களக் கட்சி எல்லாம் பங்கீடு செய்து பட்டியலும் விட்டிட்டாங்கள். இவை இரண்டை வைச்சு ஆலோசிக்கினம்.. ஆலோசிக்கினம்..! பாவம் இவையை நம்பி வாக்குப் போட்ட மக்கள். tw_blush:

மக்களால் வெறுக்கபட்ட இன்னும் இரண்டு பேயை சம் இம்முறையும்  கொண்டு வருவார் .

அட அதிலொரு பேய்தான் பின்வாசலால் வந்து 58 000 வாக்குகளுடன் முன்வாசலிலும் கோலம் போட்டுட்டுது, உங்கட ஓலம்தான் நின்றபாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட அதிலொரு பேய்தான் பின்வாசலால் வந்து 58 000 வாக்குகளுடன் முன்வாசலிலும் கோலம் போட்டுட்டுது, உங்கட ஓலம்தான் நின்றபாடில்லை.

கோலங்கள் போடலாம்.ஆனால் கொள்கையில் இருந்து மாறலாமோ
அது தப்போ இல்லையோ ?
பின் வாசலால் வந்தே இப்படியென்றால் இப்ப முன் வாசல் வழியென்றால் சிங்களத்திற்கு ஒரே கொண்டாட்டம் தான் போங்கோ

அது சரி யாழ்மாவட்டம் கல்விக்கும், அறிவிற்கும் பெயர் போன மாவட்டம். அங்கு பாமரன் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தவர்களும் தெளிவாகவே வாக்களித்துள்ளார்கள் . உங்களுக்கு சுமந்திரனை் பிடிக்காததற்கு காரணம் இருக்கலாம் ஆனாலும் 58 000 பேருக்கு பிடித்திருக்கே. தயவு செய்து ஜனநாயக பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மக்கள் சுமந்திரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கேலிப் பொருள் ஆக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யாழ்மாவட்டம் கல்விக்கும், அறிவிற்கும் பெயர் போன மாவட்டம். அங்கு பாமரன் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தவர்களும் தெளிவாகவே வாக்களித்துள்ளார்கள் . உங்களுக்கு சிறிதரனை பிடிக்காததற்கு காரணம் இருக்கலாம் ஆனாலும் 72,000 பேருக்கு பிடித்திருக்கே. தயவு செய்து ஜனநாயக பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மக்கள் சிறிதரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கேலிப் பொருள் ஆக்காதீர்கள்.

நான் தனிப்பட்ட முறையில் சில காரணங்களிற்காக சிறீதரனை முதன்மைப்படுத்த விரும்பி இருக்கவில்லை. ஆனால் மக்கள் தெரிவை மதிக்கும் பக்குவமும் ஜனநாயகப் பண்பும் எனக்கு நிச்சயமாக உண்டு.

எனது முன்னைய பதிவு

ஜீவன் சிவா added a post in a topic சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்    Thursday at 9:04 PM

கூட்டமைப்பிற்கு வெளிப்படையாகவே எனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தாலும் சிறீதரனின் தெரிவு எனக்கும் ஏமாற்றம்தான். சிறீதரனைப் பற்றி அறிந்த விடயங்கள் அப்படி. மக்கள் தெரிவை எனது அபிலாசைகளையும் மீறி மதிக்க வேண்டியுள்ளது.

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்றுகை 

news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
 
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
 
இதன்போது, தேசிய பட்டியல் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினரில் தமது கட்சிக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகலாதலிங்கம் ஆகியோரிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=625404211722342732#sthash.OOBHmcIA.dpuf

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்சிவா உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுடன் தனிப்பட்ட & அறிந்த சிலகாரணங்களால் அவர்களை முதன்மைப்படுத்த விரும்பவில்லை. 

நான் தனிப்பட்ட முறையில் சில காரணங்களிற்காக சிறீதரனை முதன்மைப்படுத்த விரும்பி இருக்கவில்லை. ஆனால் மக்கள் தெரிவை மதிக்கும் பக்குவமும் ஜனநாயகப் பண்பும் எனக்கு நிச்சயமாக உண்டு.

எனது முன்னைய பதிவு

ஜீவன் சிவா added a post in a topic சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்    Thursday at 9:04 PM

கூட்டமைப்பிற்கு வெளிப்படையாகவே எனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தாலும் சிறீதரனின் தெரிவு எனக்கும் ஏமாற்றம்தான். சிறீதரனைப் பற்றி அறிந்த விடயங்கள் அப்படி. மக்கள் தெரிவை எனது அபிலாசைகளையும் மீறி மதிக்க வேண்டியுள்ளது.

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்றுகை 

news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
 
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
 
இதன்போது, தேசிய பட்டியல் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினரில் தமது கட்சிக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஈ.பி.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகலாதலிங்கம் ஆகியோரிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=625404211722342732#sthash.OOBHmcIA.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அதிலொரு பேய்தான் பின்வாசலால் வந்து 58 000 வாக்குகளுடன் முன்வாசலிலும் கோலம் போட்டுட்டுது, உங்கட ஓலம்தான் நின்றபாடில்லை.

தமிழர் கூட்டமைப்பிலை பின்லாடன் வந்து லெக்சன் கேட்டாலும் வெற்றி அவனுக்குத்தான்.:innocent:

ஏனென்றால் கொள்கை அப்பிடி. அந்த கொள்கைகளை வளர்த்தெடுத்தவர்கள் நாங்களும் எங்களுக்கு முந்திய சந்ததியினரும் மட்டுமே. அதில் இப்போது கண்டவர் கிண்டவர் எல்லோரும் குளிர் காய்கின்றார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யாழ்மாவட்டம் கல்விக்கும், அறிவிற்கும் பெயர் போன மாவட்டம். அங்கு பாமரன் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தவர்களும் தெளிவாகவே வாக்களித்துள்ளார்கள் . உங்களுக்கு சுமந்திரனை் பிடிக்காததற்கு காரணம் இருக்கலாம் ஆனாலும் 58 000 பேருக்கு பிடித்திருக்கே. தயவு செய்து ஜனநாயக பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மக்கள் சுமந்திரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கேலிப் பொருள் ஆக்காதீர்கள்.

யாழ் மாவட்டத்தில் உள்ளவை எல்லாம் எப்ப அண்ணே அரசியல் ஞானிகள் ஆனவை. எந்தப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படிச்சுப் பட்டம் பெற்றவை. இப்பவும் ஈபிடிபிகாரன் கொடுக்கிற ஈஸ்ட்மன் கலர் சாறிகளுக்கு வாக்குப் போடும் நிலையில் தான் யாழ்ப்பாணத்தில் வறிய மக்கள் இருக்கினம். 

சுமந்திரனுக்கு விழுந்ததில் பாதி உள்ளுக்குள்ளால விழுந்ததாகக் கேள்வி. ஈபிடிபிக்கு உள்ளுக்குள்ளால விழேக்க.. சொறீலங்காவோடு கிரிக்கெட் விளையாடி.. சுதந்திர தினத்தை அலங்கரிச்சு.. சிங்களத்தோடு இதயத்தால் இணைந்த சுமந்திரனுக்கு..?! புளொட் நாயகனுக்கும்.. உள்ளுக்குள்ளால தானாம். இறுதி இழுபறியில்.. சரவணபவன்... முந்தினதும்... உள்ளுக்குள்ளால் தானாம். பின் கதவு ஆசாமிகளுக்கு இதெல்லாம்.. யுயுபி. என்று.. யாழ்ப்பாண மக்களே போனில பேசிக்கிறாங்க... புலம்பெயர் தங்கள் உறவுகளோடு. tw_blush: ஆனால் இஞ்ச கொஞ்சப் பேர்.. பெரிய மாய விம்பம் காட்டிக்கிட்டு திரியுறாங்க. :rolleyes:

214cs45.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டமைப்பிலை பின்லாடன் வந்து லெக்சன் கேட்டாலும் வெற்றி அவனுக்குத்தான்.:innocent:

ஏனென்றால் கொள்கை அப்பிடி. அந்த கொள்கைகளை வளர்த்தெடுத்தவர்கள் நாங்களும் எங்களுக்கு முந்திய சந்ததியினரும் மட்டுமே. அதில் இப்போது கண்டவர் கிண்டவர் எல்லோரும் குளிர் காய்கின்றார்கள்.:cool:

எப்பிடி அண்ணே... இப்பிடி சிந்திக்க முடியுது.
கூட்டமைப்பை.... அகில உலக கட்சியாக பதிவு செய்ய, சம்சும் கோஸ்டி முயற்சி எடுக்க வேண்டும்.:grin:

நேற்றைய  கூட்டத்தில் முடிவு எடுக்கப் படும் என்றார்கள்... அடுத்த நாளும் வந்திட்டுது, இன்னும் அந்தக் கூட்டம் முடியவில்லையா? :rolleyes:

தமிழர் கூட்டமைப்பிலை பின்லாடன் வந்து லெக்சன் கேட்டாலும் வெற்றி அவனுக்குத்தான்.:innocent:

ஏனென்றால் கொள்கை அப்பிடி. அந்த கொள்கைகளை வளர்த்தெடுத்தவர்கள் நாங்களும் எங்களுக்கு முந்திய சந்ததியினரும் மட்டுமே. அதில் இப்போது கண்டவர் கிண்டவர் எல்லோரும் குளிர் காய்கின்றார்கள்.:cool:

குமாரசாமி அண்ணை 

நீங்கள் கூறியது மிகவும் சரி. ஆனாலும் முக்கியமான இன்னொன்றை மறந்து விட்டீர்கள். அதாவது நாங்களே வளர்ப்பம் அப்புறம் எங்க தன்னைவிட வளர்ந்து விடுமோ என்று தேதாவிற்கு பயம் வர போட்டுத் தள்ளுவோம். மறுபடியும் வளர்ப்போம் மறுபடியும் போட்டுத் தள்ளுவோம். அப்புறம் போட முடியாவிட்டால் வெருட்டி அமைப்பாக்குவோம். அப்புறம்.....

அண்ணை உந்தகாலம் எல்லாம் மலை ஏறீட்டுது. வளர்த்ததாக தம்பட்டம் அடிக்கும் நீங்கள் அழித்ததிற்கும் (அமீர் ......) தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

இல்லையென்றால் சந்திரனும் நாயும் போன்றதே உங்கள் பதிவும்.

நீங்கள் ஏதோ தமிழர் கூட்டமைப்பு என்பது புதிதாக வந்த கட்சி என்பது போல் நினைக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட உதாரணங்களிற்கு மிகவும். பொருத்தமானவர்கள் இந்த தமிழரசுக்கட்சியினரே. எத்தனை உட்கட்சி குத்துவெட்டுக்கள், குழிபறிப்புகள் தமிழரசுக் கட்சிக்குள் நடந்தன என்பது உங்களுக்கு தெரியுமா? தமது அரசியல் எதிரிகளை கொலை செய்ய தமிழரசுக்கட்சியினரால் கொம்பு சீவி வளர்ககப்பட்டவர்களே எல்லா இயக்கங்களும் என்பது  உங்களுக்கு தெரியுமா. தமது ஏவல்நாய்களாக இருக்க  தமிழரசுக்கட்சியால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் அவர்களை மீறி வளர்ந்து அவர் குறுக்கே சவாலாக அமைந்தது. 

எமது மட்டு மைந்தன் இராஜதுரையை ஒழித்துக்கட்ட கட்ட தமிழரசுக் கட்சி செய்த குழுபறிப்புக்கள் உங்களுக்கு தெரியுமா?  நியாயத்தின் பிரகாரம் இராஜதுரைக்கு வரவேண்டிய கட்சித்தலைவர் பதவியை அபகரிக்க அமிர்தலிங்கம் செய்த குழிபறிப்புக்கள் உங்களுக்கு தெரியுமா?

இப்படி  எத்தனையோ கேவலமான வரலாற்றுக்கு கொண்டது இந்த தமிழரசுக்கட்சி. இவற்றை எல்லாம் கணக்கில் கூட எடுக்காமல் வீட்டுக்கு உதயசூரியனுக்கு பலமுறை வாக்களித்தவன் நான். 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதோ தமிழர் கூட்டமைப்பு என்பது புதிதாக வந்த கட்சி என்பது போல் நினைக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட உதாரணங்களிற்கு மிகவும். பொருத்தமானவர்கள் இந்த தமிழரசுக்கட்சியினரே. எத்தனை உட்கட்சி குத்துவெட்டுக்கள், குழிபறிப்புகள் தமிழரசுக் கட்சிக்குள் நடந்தன என்பது உங்களுக்கு தெரியுமா? தமது அரசியல் எதிரிகளை கொலை செய்ய தமிழரசுக்கட்சியினரால் கொம்பு சீவி வளர்ககப்பட்டவர்களே எல்லா இயக்கங்களும் என்பது  உங்களுக்கு தெரியுமா. தமது ஏவல்நாய்களாக இருக்க  தமிழரசுக்கட்சியால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் அவர்களை மீறி வளர்ந்து அவர் குறுக்கே சவாலாக அமைந்தது. 

எமது மட்டு மைந்தன் இராஜதுரையை ஒழித்துக்கட்ட கட்ட தமிழரசுக் கட்சி செய்த குழுபறிப்புக்கள் உங்களுக்கு தெரியுமா?  நியாயத்தின் பிரகாரம் இராஜதுரைக்கு வரவேண்டிய கட்சித்தலைவர் பதவியை அபகரிக்க அமிர்தலிங்கம் செய்த குழிபறிப்புக்கள் உங்களுக்கு தெரியுமா?

இப்படி  எத்தனையோ கேவலமான வரலாற்றுக்கு கொண்டது இந்த தமிழரசுக்கட்சி. இவற்றை எல்லாம் கணக்கில் கூட எடுக்காமல் வீட்டுக்கு உதயசூரியனுக்கு பலமுறை வாக்களித்தவன் நா

உப்படியான பிரச்சனைக்கு தான் உடனே பகவத்கீதையை நாடவேண்டும்......எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது ,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நல்லாய் நடக்கும்...:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.