Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா – பிரபாகரன் பிளவிற்கு என்ன காரணம் – உருத்திரகுமாரன் சாட்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

ரதியக்காவை மீண்டும் யாழுக்கு வரவைக்க என்ன செய்யலாம்? எண்டு ஒரு திரி திறக்கலாம் என்றிருந்தேன், என் ஐடியாவில் மண்ணை அள்ளிப் போட்டிர்களே ?

 

கருணா விடயத்தில் தேத நாகாக்கவில்லை என்று சொல்லியுள்ளீர்கள்.

விளக்கமாக சொல்ல முடியுமா?

  • Replies 57
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி உங்களுக்கு இதில் உள்ள உள் அரசியல் தெரியாது. நான் இதில் எழுத வந்தது எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்கு அல்ல. விசுகு அண்ணா போன்றவர்களது இரட்டை முகத்தை காட்டுவதற்குத் தான். நீங்கள் இதில் வந்து எழுதியவுடன் அவரது இரட்டை முகத்தை அவரே காட்டி விட்டார்.உங்களுக்கு நன்றி.

விசுகு அண்ணா புலிகள் உங்களுக்கு செய்த உதவிக்காக அதாவது இந்த யுத்தத்தை காட்டித் தானே உங்கள் முழுப் பரம்பரையும் புலத்திற்கு கூப்பிட்டு வைத்திருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் அவர்களுக்கு காலம் பூராவும் 100 மடங்கு நன்றியுள்ளவர்களாகத் தான் இருக்க வேண்டும்[அப்படி இல்லா விட்டால் தான் தப்பு.]...எல்லாம் நனறாகத் தெரிந்த நீங்கள் அந்த நன்றிக் கடனுக்காகத் தானே அவர்களை மு.வாய்க்காலுக்கு கொண்டு வந்து அழித்து முடித்தனீங்கள்.

போர்க் குற்றங்களுக்காக மகிந்த சகோதரங்களுடன் உங்களையும் சேர்க்க வேண்டும். இங்கே இருந்து பணத்தை மட்டும் அனுப்பிப் போட்டு அவர்கள்[புலிகள்] செய்தது எல்லாம் சரி என்று வாயை மூடிப் பார்த்துக் கொண்டு பார்த்து கொண்டு இருந்தனீங்கள்....மு.வாய்க்காலில் அவ்வளவு மக்கள் செத்ததிற்கு உங்களை போன்ற எல்லாம் தெரிந்தவர்களும் தான் காரணம்.

கருணா பிரான்சுக்கு வந்தவுடன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினீங்கள்.பிறகு நீங்களே அவரைத் துரோகி என்டீர்கள். தற்போது அவர் போர்க் குற்றம் பற்றி சொன்னால் அது சரியாய்த் தான் இருக்கும் என்டீர்கள்.நாளைக்கு அவரால் தான் ஒரு தீர்வு எடுத்துத் தர முடியும் என்று சொல்ல்லி அவர் பின்னால் போவீர்கள். உங்களை போல ஆட்கள் இதைத் தான் காலம்,காலமாய் செய்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்ற விசுகு அண்ணா,கு.சா அண்ணா கோசான் ஆகியோருக்கு நன்றிகள்.

கோசான் உந்தக் காணொளியில் கருணாவிடம் எதற்காக புலிகள் அமைப்பை விட்டுப் பிரிந்தீர்கள் என கேட்கும் போது 2004 ம் ஆண்டு ஜெனிவாயில் பேச்சு வார்த்தையில் தலைவரைக் கேட்காமல் திரு அன்ரன் பாலசிங்கத்தை தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்க தூண்டியதாகவும்,தமிழ் செல்வனும் அதற்கு சம்மதித்ததாகவும்,முதலில் தயங்கிய திரு பால்சிங்கம் பின்னர் அதில் கையெழுத்து இட்டதாகவும், உருத்திரக் குமார் மட்டும் இதற்கு எதிர்ப்பாக இருந்தாகவும் சொல்லி உள்ளார்.

கையெழுத்துப் போட்டவுடன் தான் வந்து தலைவருக்கு சொல்ல மாட்டேன் என்று பாலசிங்கம் ஜயா பயத்தில் லண்டனுக்கு போய் விட்டார். தானும்,த.செல்வனும் அதைக் கொண்டு போய் தலைவருக்கு கொடுக்கும் போது தன்னைக் கேட்காமல்
எப்படி கையெழுத்து போடலாம் என தலைவர் தன்னோட சண்டை பிடித்தார் என்றும்,இத்தனைக்கும் அதில் பெரிதாக ஒன்றுமே இல்லை "சுயாட்சி முறையிலான அரசியல் திட்டத்தை பரிசிலீக்கிறோம்" என்று மட்டுமே இருந்ததாம்.

தவிர கூட்டத்தை கூட்டி அத்தனை தளபதிகளுக்கு முன்பாக தான் மட்டுமே ஏதோ பெரிய பிழை செய்து விட்டு வந்த மாதிரி "மாத்தையாவுக்கு ஒப்பாக" தன்னைக் கதைதததால் தான் ம.களப்புக்கு போய் இயக்கத்தை விட்டு பிரிந்து செல்வதாக தான் அறிவித்ததாக கருணா சொல்லியுள்ளார்.

அதற்குத் தான் மேலே எழுதி உள்ளேன். ஒரு இயக்கத்தை பல காலமாய் கட்டுப்கோப்பாய் வழி நடத்தின தலைவருக்கு கோபத்தில் தன் நாவை காக்கத் தெரியவில்லை. அதை விட ஆச்சரியம் அவரை சுத்தி இருந்தவர்கள் பலர் வாயை மூடிக் கொண்டு இருக்க,புகழேந்தி போன்றோர் அதற்கு தூபம் போட்டது. அது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிவதற்குள் மு.வாய்க்கால் வந்திட்டுது






  • கருத்துக்கள உறவுகள்

கருணா கும்மான் சொல்லுறார் இந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றி இல்லை என்று.

ரணிலார் சொன்னார் அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் ஒத்துழைப்பின்றி போரில் வெற்றி இல்லை என்று.

மகிந்த சொன்னார் ரஷ்சியாவின் மத்திய கிழக்கின் உதவி இன்றி யுத்தத்தில் வெற்றி இல்லை என்று.

சரத்பொன்சேகா சொல்கிறார் சீனாவின் உதவி இன்றி யுத்த வெற்றி இல்லை என்று.

கோத்தா சொல்கிறார் பாகிஸ்தானின் ஆயுதங்கள் இன்றி யுத்த வெற்றி இல்லை என்று.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க.. எங்கட புலம்பெயர் புத்திமான்கள் சொல்லினம்.. எல்லாம் கருணா கும்மானின் பிரிவால வந்த வெற்றி என்று. இன்னும் கொஞ்ச முன்னாள் ஒட்டுக்குழு கும்பல்கள் சொல்லினம் சிங்களவனின் அடிஅப்பட்டின்னு. 

மொத்தத்தில்... புங்கை அண்ணா சொன்னது போல.. கீதாச்சாரத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு சொன்னது தான் உண்மை போல.. எல்லாரும் கொன்ற பின் செத்த பாம்பை அடிச்சிட்டு.. நான் தான் கர்ணனைக் கொன்றேன் என்று எப்படி அர்ச்சுனா நீ உரிமை கோர முடியும் என்று.....................................:rolleyes:tw_anguished:

 

(வாங்க ரதி அக்கீ.. உங்களைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி. நீங்க கருணா கும்மான்.. முரளிதரனை எல்லாம் அவ்வளவு லேசில விட்டுக் கொடுக்க மாட்டியள்...என்றது உலகத்திற்கே தெரியும். ஆனால் எங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால்.. கருணா கும்மான் பற்றிய யதார்த்தம் என்னவோ.. அவரின் உளறல்களுக்கு அப்பால் வெகுதொலைவில் உள்ளது என்பது தான் நிதர்சனம். tw_blush:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்று மாத்தையாவைப் பிரித்ததுபோல பின்னாளில் கருணாவையும் பிரித்துவிட்டார்கள். மாத்தையாவைவிட ஒரு படி முன்னே யோசித்ததால் கருணா இன்று உயிருடன் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புகழேந்தி? இவருக்கும் கருணா பிரிவிற்கும் என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி ரதி அக்கா.

ஆனால் கருணா சொல்லும் கையெழுத்துக் கதை நம்பும் படி இல்லை.

1) பிரபாவிடம் கேட்காமல் பாலசிங்கம், சுனாபனா வாயு கூட விடமாட்டார்கள். உருத்திரகுமார் கூட இருந்து போட்டுக் கொடுப்பார் என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவே பிரபாவிடம் கேளாமல் கையெழுத்து வைத்தனர் என்பது நம்பும் படி இல்லை.

2) பிரியும் போது கருணா இதைச் சொல்லவில்லை. மாறாக வன்னி கிழக்கு மீது அதிகாரம் செலுத்துகிறது. பொட்டு, புகலேழ்ந்தி இன்னும் ஒருவரிடம் இருந்து கிழக்கு புலிகளை விடுவித்து பிரபாவின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பச்சை பிரதேசவாதம் இவற்றையே அவர் அப்போது முன்வைத்தார். 

3) லண்டன் வந்தபின் மீளத்திரும்பி போய் செய்த அட்டூழியங்கள் அவர் உயிருக்கு பயந்து ஆமியுடன் சேரவில்ல எனக் காட்டி நிற்கிறது.

 

கருணாவின் பேச்சில் பீத்தல்ப்பாய் போல் அத்தனை ஓட்டைகள்.

இதை பற்றி உருத்திரகுமார் ஏன் கள்ள மெளனம் காக்கிறார் என்று தெரியவில்லை.

முடியாத விவாதத்தில் இதுவும் ஒன்று. 

இதெல்லாம் முடிந்து போனது , என்னும் நடக்கவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கு. அனாலும் ஒன்று மாத்திரம் உறுதி இந்த புலம்பெயர் தற்குறி பினாமிகள் இருக்கும் வரை இந்த திரி எரிந்துகொண்டுதான் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா சுயாட்சியை பரிசீலிக்கலாம் என்றவுடன் TS உடனடியாகவே வன்னிக்கு தெரிவித்து விட்டார். (அந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் கருணா இருந்தாரா?)

கருணா பேச்சுவார்த்தைக்கு என்று வந்து உண்மையில் என்ன செய்தார் என்று கருணாவை சந்தித்த சிலருக்கு தெரியும். 

தலைவர் மாத்தையாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதற்காக தான் பிரிந்தேன் எனும் இவர்,

1) மாத்தையா செய்தது பிழை என்று ஒப்புக் கொள்கிறாரா? & 

2) அப்படி பிரிந்தவர் கிழக்கில் ஆடிய நரபலி வேட்டைகளை என்ன என்று சொல்வது? 

ரதி கிழக்கில் அவர் செய்தவைகள் உங்களுக்கு தெரியாதா? அவர் முன்நிறுத்திய பிரதேசவாதம் புரியவில்லையா? 

 

 

 

விளக்கத்துக்கு நன்றி ரதி அக்கா.

ஆனால் கருணா சொல்லும் கையெழுத்துக் கதை நம்பும் படி இல்லை.

1) பிரபாவிடம் கேட்காமல் பாலசிங்கம், சுனாபனா வாயு கூட விடமாட்டார்கள். உருத்திரகுமார் கூட இருந்து போட்டுக் கொடுப்பார் என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவே பிரபாவிடம் கேளாமல் கையெழுத்து வைத்தனர் என்பது நம்பும் படி இல்லை.

2) பிரியும் போது கருணா இதைச் சொல்லவில்லை. மாறாக வன்னி கிழக்கு மீது அதிகாரம் செலுத்துகிறது. பொட்டு, புகலேழ்ந்தி இன்னும் ஒருவரிடம் இருந்து கிழக்கு புலிகளை விடுவித்து பிரபாவின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பச்சை பிரதேசவாதம் இவற்றையே அவர் அப்போது முன்வைத்தார். 

3) லண்டன் வந்தபின் மீளத்திரும்பி போய் செய்த அட்டூழியங்கள் அவர் உயிருக்கு பயந்து ஆமியுடன் சேரவில்ல எனக் காட்டி நிற்கிறது.

 

கருணாவின் பேச்சில் பீத்தல்ப்பாய் போல் அத்தனை ஓட்டைகள்.

இதை பற்றி உருத்திரகுமார் ஏன் கள்ள மெளனம் காக்கிறார் என்று தெரியவில்லை.

பச்சை கைவசம் இல்லை, 100% சரியான கருத்து. நானும் வீடியோவை பார்த்துவிட்டு இதையே நினைத்தேன். வேடிக்கை என்னவெறால் இதை அனைவரும் மறந்து, கருணா பேச்சாற்டல் மிக்கவர் அது இது எண்டினம்.

கருணாவின் காம்ப், கருணா குரூப்....பேந்து பிள்ளையான் குரூப் உருவாக்கப்பட்டு கருணாவுக்கு காத்து திறந்தது...........இப்புடி இன்னும் கனக்க இருக்க சனம் தேவையில்லாமல் அவன்ட பேட்டிய  தூக்கிப்பிடிக்கினம்.

எல்லாத்தையும்விட வேடிக்கை என்னவென்றால் கருணா கேள்விகளுக்கு பதில் சொல்லிமுடிக்கமுன் அடுத்த கேள்வி கேட்கப்படுகின்றது.

கிந்தியாவின் திட்டமிட்ட பேட்டியில் பலரும் சிக்கியிருப்பது வெளிச்சம்.

பாலா அண்ணா சுயாட்சியை பரிசீலிக்கலாம் என்றவுடன் TS உடனடியாகவே வன்னிக்கு தெரிவித்து விட்டார். (அந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் கருணா இருந்தாரா?)

கருணா பேச்சுவார்த்தைக்கு என்று வந்து உண்மையில் என்ன செய்தார் என்று கருணாவை சந்தித்த சிலருக்கு தெரியும். 

தலைவர் மாத்தையாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதற்காக தான் பிரிந்தேன் எனும் இவர்,

1) மாத்தையா செய்தது பிழை என்று ஒப்புக் கொள்கிறாரா? & 

2) அப்படி பிரிந்தவர் கிழக்கில் ஆடிய நரபலி வேட்டைகளை என்ன என்று சொல்வது? 

ரதி கிழக்கில் அவர் செய்தவைகள் உங்களுக்கு தெரியாதா? அவர் முன்நிறுத்திய பிரதேசவாதம் புரியவில்லையா? 

 

 

 

சரியான கேள்விகள் மீரா.  கிழக்கு இயக்கத்தையே சீர்குலைத்த கருநாய் கூறுகின்றது தனியொருவராய் விலத்திப்போனவராம்........ கேள்வி கேட்ட வெ.....ம் அதுக்கு கூட ஆமாப்போடுது.

என்னை வரவேற்ற விசுகு அண்ணா,கு.சா அண்ணா கோசான் ஆகியோருக்கு நன்றிகள்.

கோசான் உந்தக் காணொளியில் கருணாவிடம் எதற்காக புலிகள் அமைப்பை விட்டுப் பிரிந்தீர்கள் என கேட்கும் போது 2004 ம் ஆண்டு ஜெனிவாயில் பேச்சு வார்த்தையில் தலைவரைக் கேட்காமல் திரு அன்ரன் பாலசிங்கத்தை தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்க தூண்டியதாகவும்,தமிழ் செல்வனும் அதற்கு சம்மதித்ததாகவும்,முதலில் தயங்கிய திரு பால்சிங்கம் பின்னர் அதில் கையெழுத்து இட்டதாகவும், உருத்திரக் குமார் மட்டும் இதற்கு எதிர்ப்பாக இருந்தாகவும் சொல்லி உள்ளார்.

கையெழுத்துப் போட்டவுடன் தான் வந்து தலைவருக்கு சொல்ல மாட்டேன் என்று பாலசிங்கம் ஜயா பயத்தில் லண்டனுக்கு போய் விட்டார். தானும்,த.செல்வனும் அதைக் கொண்டு போய் தலைவருக்கு கொடுக்கும் போது தன்னைக் கேட்காமல்
எப்படி கையெழுத்து போடலாம் என தலைவர் தன்னோட சண்டை பிடித்தார் என்றும்,இத்தனைக்கும் அதில் பெரிதாக ஒன்றுமே இல்லை "சுயாட்சி முறையிலான அரசியல் திட்டத்தை பரிசிலீக்கிறோம்" என்று மட்டுமே இருந்ததாம்.

தவிர கூட்டத்தை கூட்டி அத்தனை தளபதிகளுக்கு முன்பாக தான் மட்டுமே ஏதோ பெரிய பிழை செய்து விட்டு வந்த மாதிரி "மாத்தையாவுக்கு ஒப்பாக" தன்னைக் கதைதததால் தான் ம.களப்புக்கு போய் இயக்கத்தை விட்டு பிரிந்து செல்வதாக தான் அறிவித்ததாக கருணா சொல்லியுள்ளார்.

அதற்குத் தான் மேலே எழுதி உள்ளேன். ஒரு இயக்கத்தை பல காலமாய் கட்டுப்கோப்பாய் வழி நடத்தின தலைவருக்கு கோபத்தில் தன் நாவை காக்கத் தெரியவில்லை. அதை விட ஆச்சரியம் அவரை சுத்தி இருந்தவர்கள் பலர் வாயை மூடிக் கொண்டு இருக்க,புகழேந்தி போன்றோர் அதற்கு தூபம் போட்டது. அது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிவதற்குள் மு.வாய்க்கால் வந்திட்டுது





 

ரதி,

கருணா 2004இல் பிரிந்தவுடன் குடுத்த பேட்டிகள், அதற்குப்பிறகு கருநாயின் ஆட்டங்கள் எல்லாம் உங்களுக்கு மறந்துபோய், வெறும் பித்தலாட்ட பேட்டியைபார்த்து கதைப்பது வேடிக்கையாகவுள்ளது.

தொட்டதிட்கும் மு.வாய்காலை முடிச்சுப்போட்டு வேலையில்லை.

கருணா இதை இன்று சொல்லவில்லை பிரிந்த நேரமே சொன்னதுதான் .பாலசிங்கம் கூட லண்டனில் இது பற்றி கதைத்திருக்கின்றார் அழிய போகினம் ஆதங்க பட்டிருக்கின்றார் .

ரதி வாங்கோ என்று வரவேற்ற திரி அடுத்ததில் நிறம் மாறிய விதத்தை பார்த்தீர்களா ?

இவர்கள் திருந்தவே இடம் இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்றதிற்கு நன்றி நெடுக்கர்...என்னுடைய மச்சான் என்னை வரவேற்கவில்லை சோ சாட்.

மீரா,கடைசியாக தலைவர்,தளபதிகள்,கருணாவுடனான கூட்டத்தில் மற்றத் தளபதிகள் எல்லோரும் அமைதியாக இருக்கும் போது புகழேந்தியும் ஒரு சிலரும் தான் தலைவரை உசுப்பி விட்டார்கள் என கருணா சொல்கிறார்...புகழேந்தி தன் நிதியூழலை மறைக்க இந்த விடயத்தினை பெரிதாக்கி இருக்கலாம்.


கோசான்,கருணா இந்தக் காணொளி வெளியிட்டதில் உள் நோக்கம் இல்லாமல் இல்லை.

நீங்கள் சொன்ன மாதிரி தலைவரிடம் கேட்காமல் இவர்கள் ஒரு துரும்பை கூட
அசைக்க மாட்டார்கள் தான். ஆனால் கருணா சொன்ன மாதிரியும் நடந்திருக்க கூடும் அல்லவா.ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாத படியால் கருணாவின் தூண்டுதலால் திரு பாலசிங்கம் கையெழுத்து வைத்திருக்கலாம். பிறகு வன்னிக்கு போவதற்கு பயந்து போகாமல் இருந்திருக்கலாம்.சு.பா தன்னிம் முழு பழி வந்திடப் போகுது என்ட பயத்தில் தலைவரின்ட காலில் விழுந்திருக்கலாம்...உருத்திரக்குமார் கையெழுத்து வைப்பதற்கு எதிராக தான் இருந்தவர். கருணா சொல்வது பொய் என்டால் அவர் வாயைத் திறக்கலாம்.

நான் இப்பவும் சொல்வேன் 2004ம் ஆண்டு கருணா பிரியும் வரை மட்டக்களப்பில் பிரதேசவாதம் இருந்தது.அதை நான் கண்ணாலே கண்டேன்...அந்த நேரம் அவர் பிரியும் போது புலிகளது உள் வீட்டுப் பிரச்சனை பற்றிபெரிதாக கதைக்காமல் பிரதேசவாதம் கதைத்திருக்கலாம். ஆனால் அந்த நேரமே இந்தப் பேச்சு வார்த்தையால் தான் பிரச்சனை வந்தது என்று பல பேருக்குத் தெரியும். சு.பானா தொலைபேசியில் போட்டுக் கொடுத்ததால் தான் திரு பால்சிங்கம் வன்னிக்கே போகவில்லை.இதெல்லாம் கருணா பிரியும் போதே வெளியால வந்தது தான்.
அவரை சுத்தி இருந்து உசுப்பேத்தவும் ஒரு கூட்டம் இருந்தது...தாராகி,ராஜன் சத்தியமூர்த்தி போன்றோர்...கடைசியில் புலிகள் தாரகிக்கு நாட்டுப்பற்றாளர் விருதும் கொடுத்தார்கள்.

எதை வைத்து அவர் உயிருக்கு பயந்து அட்டுழியம் செய்யவில்லை என்று சொல்கிறீர்கள்?...லண்டனில் இருந்து திரும்பிப் போனதும் எந்த வித பலனும் எதிர் பார்க்காமல் வைத்துப் பாதுகாக்க சிங்களவன் என்ன மடையனா? அல்லது புலிகள் தான் அவரை உயிரோடு இருக்க விட்டு இருப்பார்களா?

அவர் ஒன்றும் யோக்கியர் இல்லை...ஆனால் அவரைப் பார்த்து நீங்கள் யோக்கியர் இல்லை என்று சொல்லும் உரிமை தலைவரைப்,புலிகளை ஆதரிக்கும் மக்களுக்கும் இல்லை என்பது எனது கருத்தாகும்.அப்படி என்ன அட்டூழியம் அவர் செய்து விட்டார் மீரா?...புலிகளோடு இருக்கும் போது மற்றக் இயக்கங்களை சுட்டும்,வெட்டியும் கொண்டது உங்களுக்கு தெரியவில்லையா மீரா?...அப்படி பார்த்தால் எல்லோரும் ஒரே குட்டையில் ஏறிய மட்டைகள் தான்.இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.


சூறாவளி நடக்க வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு.நீங்கள் போய் அதைக் கவனியுங்கோ.பிறகேன் இந்த திரியில் வந்து மினக்கெடுகிறீர்கள்





  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் மனதுக்குள் இதயத்தால் வரவேற்றுவிட்டார்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா,

எளிய யாழ்மையவாதம் எப்போதும் இருப்பதுதான். ஆனால் அதை தன் சுயலாபத்துக்கு கருணா பயன்படுத்தினார் என்பதே நான் சொல்வது.

தப்பிவந்து லண்டனில் பிடிபட்ட பின் இங்கேயே தங்கி பாதுகாப்பாய் இருந்திருக்க முடியும். ஊர் திரும்பியது, நரவேட்டை ஆடியது எல்லாம் சுயநலத்தாலேதான்.

கருணா ஒரு புலி. என்ன கொஞ்சம் சுயநலம் கூடிய புலி. ஒருகாலத்தில் பிரபாவிற்கு கழுவினார், பின் மகிந்தவுக்கு இப்போ ரோவிற்க்கு கழுவுகிறார்.

இந்த சுயநலவாதி சொல்லும் எதையும் நம்ப முடியாது.

என்னைப் பொறுத்தவரைக்கும் கருணா செய்த / விட்ட பிழைகள் மன்னிக்க முடியாதவை. போராட்டத்தின் திசையை மீளமுடியாத தோல்வியின் பக்கம் திருப்பிய விடயத்தில் தமிழ்செல்வன் போன்றோரை விட அதிகம் பங்கு இருப்பது கருணாவிற்குத்தான். அத்துடன் பிரிந்த பின் அவர் செய்த படுகொலைகளும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் வன்னிக்கு வாகனத்தில் திரும்பிச் செல்லும் போது கடத்தி அதில் உள்ள பெண்களை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்தும், ஆண்களை குரூரமாக சித்திரவதை செய்து பின் அவர்களைக் கொண்டே புதைகுழி வெட்டி தாட்டதும், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரை BMICH இல் இருந்து கடத்தி கொன்றதும் என்று ஏராளமான குற்றங்களை தன் சொந்த இனத்தின் மேலே தன் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக செய்தவர்.

காலத்துக்கு காலம் காட்டிக் கொடுப்புகளால் தமிழர் போராட்டங்களும் அரசுகளும் வீழ்ந்த வரலாற்றின் தொடர்ச்சியில் கருணாவின் காட்டிக்கொடுப்பும் இடம்பெறுகின்றது.

ஆனால்,

கருணா பிரியும் போது தான் ஏன் பிரிகின்றேன் என்று பிபிசி தமிழோசைக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் தெரிவித்த காரணங்கள்  சரியானவையா அல்லது பிழையானவையா என்பதற்கு அப்பால் விடுதலைப் புலிகளின் தலைமையால் சரியாக / நேர்மையாக அணுகப்பட்டு பதிலளித்து இருக்க வேண்டிய கேள்விகள் அவை. யாழ்ப்பாண மையவாதத்தின் மேல் எறியப்பட்ட கேள்விகள் அவை. அன்று, புலிகளின் சமாதானச் செயலகம் போன்ற சிற்சில அமைப்புகளின் பொறுப்பாளர்களாக யாழ்ப்பாணத்தை அல்லது வடக்கை சார்ந்தவர்கள் தான் அதிகம் இருந்தனர் என்பதும் கருணாவின் கேள்விகள் அவற்றை ஒட்டியிருந்தன என்பது மறுக்கப்பட முடியாதவை. கருணா ஒரு பிரதேசவாதி என்றால் அநேக பொறுப்புகளில் யாழ்ப்பாணத்தவர்களின் ஆதிக்கத்தினை ஏற்படுத்தி இருந்த தலைமையை என்னவென்று சொல்வது? ஏற்கனவே மட்டக்களப்பு - யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டு இருந்த நிலையை வசதியாக மறந்ததை எப்படி அழைப்பது?

புலிகளின் தலைமை தம்மை நோக்கி தமக்கு எதிராக கேள்வி கேட்பவர்களை மண்டையில் போடுவதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளை மெளனிக்க வைக்க முடியும் என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்றி - கருணா உட்பட - பின்பற்றி வந்ததன் தொடர்ச்சியில் தான் கருணாவையும் அணுகப் பார்த்தனர். கருணா தாம் தனித்து இயங்கப் போவதாக அறிவித்த சில நாட்களில் அவரது சாரதியைக் கொண்டே அவரை கொல்ல முயன்றதும் இதன் தொடர்ச்சியில் தான்.  ஈற்றில் கருணாவுடன் சேர்ந்து பிரிந்த பெண் தளபதிகள் நிலாவினி, பிரேமினி மற்றும் இன்னும் சில பெண் போராளிகளை சமயோசிதமாக கிழக்கு அழைத்து வந்து பத்திரிகையாளர்களின் முன் பேட்டி கொடுக்க வைத்த பின் வன்னிக்கு கொண்டு சென்று காணாமல் போக்கடித்ததும் நிகழ்ந்தது.

என்னைப் பொறுத்தவரைக்கும், என் அரசியல் சிற்றறிவை பொறுத்தவரைக்கும் கருணா ஒரு பெரும் குற்றவாளி. இன்று தாயகத்தில் தமிழர்களின் போராட்டம் முடக்கப்பட்டு எதிரியின் காலை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையை கொண்டு வந்தததில் கருணாவின் பங்கு பெரியது. அதே நேரத்தில் கருணாவின் பிரிவை நேர்மையாக கையாளாமல் தான் தோன்றித்தனமாக திமிருடன் கையாண்டதில் புலிகளின் தலைமையின் பங்கும் மிகப் பெரியது.

---------------------

ரதியின் மீள்வரவுக்கு மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ரதியை.. மீண்டும், களத்தில் காண்பது மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதிப்பொறுப்பாளராக இருந்தவர் தமிழேந்தி. புகழேந்தி என்று மாற்றிக் கதைத்தால் குழப்பம்தான் வரும்.

கருணா அம்மான் தன்னை நிலைப்படுத்த தேவையான செயற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார் என்பதுதான் இந்தப் பேட்டி சொல்லும் செய்தி. அவரை காணாமல் செய்ய இப்போது ஒருவராலும் முடியாது!

பி.கு. ரதியை மீண்டும் களத்தில் கண்டது மகிழ்ச்சி.

 

...மாணை விடுங்கோ .. இப்போ எரியும் அடுப்பில் உள்ள கொதிக்கும் எண்ணைக்குள் விழுந்த நிலை, வெளியே யம் பண்ணினாலும் அடுப்புக்குள்ளைதான்! ... லண்டனில் ஒரு பிபிசி தமிழோசை செய்தியாளர், ..மாணின் நெருங்கிய கூட்டும் .. சொல்லிச்சாம், தெருநாய் படாத பாடாம் இப்ப, தூக்கி வச்ச சிங்களவன் காறி மேலை துப்புகிறான் கூட இல்லையாம்! தெரிநாய்க்கும் இருக்கிற மதிப்பு கூட இல்லையாம்! அவிட்ட கண்டும், மாடும் இடறப் போகுதாம்! இங்காலை மனுசி/பிள்ளைகளுக்கு ஸ்கொட்லண்டுக்கு போண் போட்டால், தூக்குதுகளே இல்லையாம்!..மாண். போற போக்கில் தன் பிஸ்டலாலையே, தன் மட்டைக்குள் ஓட்டை வைக்க போகுதெண்டு! ..

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனிலும் கருணாவின் குணாம்சமே அண்டிப் பிழைப்பதுதான்.

பிரியும் வரை கருணா பிரபா துதி பாடியது போல் யாரும் பாடவில்லை. படுவான்கரை எங்கிலும் வன்னியில் தன் இமேஜை கூட்டுவதற்கு சிறார்களை கட்டாயமாய் பிடித்தார்.

பிரியும் வரை உறுத்தாத புலிகளின் யாழ் மையவாதம் பிரியும் போதுதான் ஆளுக்கு தெரிய வந்தது ?

அதேபோல் 2003 இல் இருந்து தெரியாத சுதந்திரக் கட்சியின் இனவாதம் இப்போ தெரிகிறது.

கிருபன்,

மட்டகளப்பு மக்கள் மிகத் தெளிவானவர்கள். கருணாவின் ஆட்டத்தை முதல் 3 மாதங்களிலே ஊகித்து விட்டார்கள். என்ன ஆயுத கலாட்சாரத்திற்கு அஞ்சி சும்மா இருந்தார்கள்.

இவரால் இப்போ ஒரு உள்ளூராட்சி சீட்டைக் கூட வெல்ல முடியாது.

இந்த அரசியல் அநாதைக்கு இப்போ போக்கிடம் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் சோத்துக்கே சிங்கி அடிக்கும் நிலை வரலாம்.

தவிர யுத்த குற்றவிசாரணையில் மாட்டுபதும் நிச்சயம்.

அதை தவிர்க்க மீண்டும் தமிழ்தேசிய வேடம் போட்டு, இந்திய தாளத்துக்கு ஆடுகிறது இந்த சர்கஸ் புலி, இல்லை குரங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உங்களுக்கு தமிழேந்திக்கும் புகழேந்திக்கும் வித்தியாசம் தெரியவில்லை. 

கருணா விலத்திய பிறகு கிழக்கில் அப்பாவி மக்கள் மேல் மேற்கொண்ட நரபலி ஆட்டங்களை மற்றைய இயக்க கொலைகளுடன் ஒப்பிடுகிறீர்களா? அப்படியாயின் அவர் விலத்திய பின்னரும் திருந்தவில்லையல்லவா?

கிழக்கு மக்களும் கருணாவின் பிரதேசவாத்த்திற்கு ஆரம்பத்தில் துணை போயினர், ஆனால் கருணாவின் நரபலி வேட்டை அவர்களை நோக்கி வந்த போதே கருணாவின் சுயரூபம் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது.

வடக்கிலிருந்து மட்டு.அம்பாறைக்கு செல்லும் போராளிகள் கருணாவினால் வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயம் பெறவேண்டும், அவ்அட்டையை பெற்றவர்கள் கருணாவின் உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவர், பெறாதவர்கள் உளவுப்பிரிவினரால் விசாரிக்கப்படுவர்.

தலைவரின் செல்லப்பிள்ளைகள் கருணாவும் சுனா பானாவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்,கருணா கள்ளப் பாஸ்போட்டில் வந்தது லண்டனை சுத்திப் பார்க்கவில்லை.இங்கேயே செட்டிலாகும் ஜடியாவுடன் தான்.இங்கு காவல் துறையினரால் பிடிபட்டு சிறையில் இருந்து பின்னர் நாடு கடத்தப்பட்டது எனக்குத் தெரியும்....ஆனால் உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன் இங்கு கள்ள கடவுச்சீட்டில் வந்து பிடிபட்டால் அசேலம் அடிக்க முடியுமா?


நிழலி,உங்களோட கருத்துத் தான் என்னோடதும்.ஆனால் ஒன்றும் மட்டும் விளங்கவில்லை.அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறீங்களா?...அவர் தன்னோட நிலையை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சொன்ன படுகொலைகளை எல்லாம் செய்து இருக்க கூடும்.ஆனால் அவர் புலிகளோடு இருக்கும் போது செய்த படுகொலைகளோடு ஒப்பிடும் போது இது வலு குறைவு என்பது தான் கருத்து.அதற்காக அவர் செய்தது சரி என நான் சொல்லவில்லை.ஆனால் புலிகளுக்காக அவர் படுகொலைகளை செய்த போது கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த கூட்டம். அவர் புலியை விட்டுப் பிரிந்த பின்னர் செய்த கொலைகளை தவறு என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

தவிர தற்கொலை செய்து இருக்கலாம் என்பது உங்கள் பதிலாயின்,தலைவர் இறந்து விட்டார் என நீங்கள் நம்புகிறீர்கள்.அவர் துப்பாக்கி காயத்தால் இறந்த படம் தான் வெளியாகி இருந்தது. ஏன் அவர் கடைசி வரைக்கும் சயனைட் கடிக்கவில்லை? இப்படி பல கேள்விகள் கேட்கலாம்.

மீரா முதலில் தமிழேந்தி,புகழேந்தி பெயர் தடுமாற்றத்திற்கு வருந்துகிறேன். உங்கள் கதையைப் பார்த்தால் ஏதோ ம.கிளப்பு மக்கள் தான் பிரதேசவாதம் கதைத்தார்கள் என்பது போல எழுதி இருக்கிறீர்கள்...கோசானும்,நிழலியும் எழுதி இருப்பதை வாசியுங்கள்...கருணா ம.கிளப்பில் செல்வாக்காக இருக்கிறாரா? அல்லது செல்லாக்காசாக இருக்கிறாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மற்றும் என்னை வரவேற்ற தமிழ்சிறி,நிழலி,கிருபன் ஆகியோருக்கு நன்றிகள்







  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா,

கள்ளப் பாஸ்போர்டில் வந்து அசைலம் அடிக்கலாம். இங்கே இருக்கும் இலங்கைத் தமிழரில் 70% அப்படித்தான் வந்தார்கள்.

கருணா அசைலம் அடித்து பின் தானாகவே அதை வாபஸ் பெற்று ஊருக்குப் போனார்.

நினைத்திருந்தால் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு இங்கே நிண்டிருக்கலாம்.

பாழாய் போன சுயநலத்தால் கோத்தாவின் பேச்சை கேட்டு நாடு திரும்பினார்.

 

மீரா,

மட்டகளப்பில் ராசதுரை உட்பட தமிழ் தேசியத்தை விட்டுப்போனவர்கள் யாரும் அரசியலில் எழ முடியாதவாறு மக்கள் மரண அடி கொடுத்துள்ளார்கள். கருணா, பிள்ளையான், அருண் தம்பிமுத்து, தங்கேஸ்வரி யாருக்கும் இதுதான் நிலை.

யாழ்ப்பாணத்தில்தான் டக்கிலசிக்கும் கலா அன்ரிக்கும் எப்போதும் மாறாத செல்வாக்கு இருக்கும்.

மட்டகளப்பில் இருக்கும் நியாயமான உணர்வு பிரதேசவாதமல்ல - யாழ்மையவாத எதிர்வினை.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் & ரதி கிழக்கு மக்களின் பிரதேசவாதம் / யாழ் மையவாத எதிர்வினை பல தடவைகள் வெளிப்பட்டிருக்கிறது. அண்மையில் மாவை யின் நியமனத்திற்கு எதிராக அங்கு ஏற்பட்ட பல சர்ச்சைகளை பார்த்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்.

கருணாவிற்கு தெரியும் தனக்கு ஒரு நாடும் தஞ்சம் தராது என்று, அதனால் அவரின் கூட்டாளிகளின் ஆலோசனைப்படி தனது மனைவியூடாக முயன்று பார்த்தார் (அதேவேளையில் கோடிக்கணக்கான பணம் இங்கு வந்தது, அவரின் கூட்டாளிகள் அந்தப் பணத்தில் தமது பெயரில் சொத்துக்களை வாங்கிகளின் குவித்தனர்) ஆனால் மனைவியின் வீசா கைகூடாமல் போனதும கோத்தாவின் உதவியுடன் இங்கு வந்தார். இங்கு வந்ததும் அவரின் கூட்டாளிகளே அவரைப் போட்டுக் கொடுத்தனர். Liverpool இல் கருணாவின் பணத்திலேயே வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது.

கருணா இங்கு பிடிபட்ட பிறகே அசைலம் கோரினார். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

கருணாவிற்க்கு 1951 சாசனப் படி அந்தஸ்து கிடைத்திராது காரணம் சரத்து 1F இன் கீழ் யுத்த, மனுகுலவிரோத குற்றம் புரிந்தோருக்கு அகதி அந்தஸ்து மறுக்கப் படும்.

ஆனால் ஐரோப்பிய மனித உரிமை சாசன ஆர்டிக்கில் 2 மற்றும்3 ப்படி எந்த கொடியவனையும் உயிராபத்து உள்ள நாட்டுக்கு திருப்ப முடியாது.

தவிர மனவி பிள்ளைகள் அகதிகள் எனும் வகையில் ஆர்டிக்கிள் 8 இன் கீழும் வழக்கு மிக வலுவாயிருந்தது.

இத்தோடு ஒதுங்கி இருங்கள் என்று அறிவுரை சொல்லப்பட்டு ஒரு 3 கிழமை அதை ஏற்றும் இருந்தார்.

 

ஆனால் ஆடிய கால் சும்மா இராதே?

பிள்ளையானின் ஏற்றம், அதிகாரமற்ற சப்பாணி லண்டன் சிறைவாசம், கோத்தாவின் ஆசை வார்த்தைகள் - விஸ்வரூப சுயநலம், ஆளை மீளவும் ரத்தச்சகதிக்குள் இழுத்து விட்டது.

லிவர்பூல் விடயம் உண்மையே.

மாவை - எங்கே அப்படி எதிர்ப்பு கிளம்பியது ?

90 களில் தேவை இல்லாமல் அம்பாறயில் மாவை போட்டி போட்டு ஒரு முறுகலை ஏற்படுத்தியது தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.