Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை

Featured Replies

maavai-vikneshvaran

வடக்கு மாகாண சபை முதல்வர் விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

http://www.colombomirror.com/tamil/?p=5722

சி.வி. – சி.வி.கே. பனிப்போர்

CV-CVK

வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிகின்றது.

முதல்வரை கட்டுப்படுத்த முடியாத கூட்டமைப்பின் தலைமை (சாம், சுமா, மாவை) இப்போது சி.வி.கே.யை தமது நோக்கங்களுக்குப் பயன்படுத்த முற்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

நெருக்கடிகளைக் கொடுத்து முதலமைச்சரை வெளியேற்றிவிட்டு சி.வி.கே.யை முதலமைச்சராக்கும் ரகசியத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகவும் மாகாண சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

சர்வதேச விசாரணையைக் கோரும் பிரேரணையை முதலமைச்சர் கடந்த வாரம் கொண்டுவந்த போது சி.வி.கே. அதற்கு அனுமதிக்க முடியாது என முதலில் அடித்துக் கூறிவிட்டாராம். நிகழ்ச்சி நிரலில் அதற்கு இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரியவந்திருக்கின்றது.

இருந்தபோதிலும், முதல்வரும், மற்றொரு அமைச்சரும் கடுமையாகப் போராடிய பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாம். அதன்பின்னர் அதற்கு எதிராக அவர்களால் வெளிப்படையாகச் செயற்பட முடியவில்லை.

அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலர் நிஷாவுடனான சந்திப்பையடுத்தே இவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு முதலமைச்சர் தீர்மானித்தாராம். முன்னரே நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்தால் அதற்கு எதிராக தலைமை செயற்படலாம் என்பதால்தான் இறுதி வரையில் விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.

சி.வி.கே.யின் முதலமைச்சர் கனவு நனவாகுமா?

http://tamilleader.com/?p=50818

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அவ்வெளையில் காங்கிரஸ் ஒன்றியிருந்தநேரம் அவ்வேளையில் நடைபெற்ற சிறீலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வினாயகமூர்த்தி உட்பட பலர் போட்டியிட்டிருதார்கள் சீ வீ கே யும் அவர்களில் ஒருவர் தேர்தலில் தோற்றுவிட்டார் அதன்பின் கஜேந்திரகுமார் அவர்கள் தனது வெற்றிக்காகப் பிரசாரங்களை முன்னின்று செய்யவில்லை என தமிழ்க்காங்கிரசிலிருந்து திரு சிவிகே சிவஞானம் அவர்கள்.விலகிவிட்டார். அதே தேர்தலிலோ அன்றேல் பிறிதொரு தேர்தலிலோ பொருளியல் ஆசான் திரு வரதராஜா அவர்கள் போட்டியிட்டிருந்தார் அவ்வேளையில் எனக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவர் என்னை வினாவினார் அவர் மற்றப்பாட்டியெல்லொ என யாழ்ப்பாணத்தில் மற்றப்பாட்டி என யாரைக்குறிப்பிடுவது தெரியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு இப்ப மனிசரையும் கடிக்க வெளிக்கிட்டினம். உந்த வெறி லேசில அடங்காது போல மாவை அன்ட் கோவுக்கு. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றியால் எல்லோரும் (சம்,சும்,மாவை) வெறி பிடித்து ஆடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றியால் எல்லோரும் (சம்,சும்,மாவை) வெறி பிடித்து ஆடுகிறார்கள்.

கெடுகுடி

சொல் கேளாது..

எவ்வளவோ செய்ய இருக்கு..

இதை மட்டும் கவனிக்கிறார்கள்

நேரம் செலவளிக்கிறார்கள்

மக்கள் தலைவர்கள்.....??????

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு திரியில் யாரோ எழுதினார்கள் ........!

இவர் இங்காலே பெட்டி அடிக்கிறாராம் 
அவர்கள் அங்காலே பெட்டி அடிக்கினமாம் 
இதுதானாம் ராஜ தந்திரம் என்று!

அப்படியே மக்களுக்கு பெட்டி அடிக்க தொடங்கத்தான் 
மாமா மாருக்கு பெட்டி அடிப்பு விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு திரியில் யாரோ எழுதினார்கள் ........!

இவர் இங்காலே பெட்டி அடிக்கிறாராம் 
அவர்கள் அங்காலே பெட்டி அடிக்கினமாம் 
இதுதானாம் ராஜ தந்திரம் என்று!

அப்படியே மக்களுக்கு பெட்டி அடிக்க தொடங்கத்தான் 
மாமா மாருக்கு பெட்டி அடிப்பு விளங்கும். 

யு மீண்" பொக்ஸ்".......பிறகு மற்றபாட்டி எல்லோரையும் சேர்த்து பொக்ஸ் அடிச்சு முடிச்சுவிடும்....

  • கருத்துக்கள உறவுகள்

யு மீண்" பொக்ஸ்".......பிறகு மற்றபாட்டி எல்லோரையும் சேர்த்து பொக்ஸ் அடிச்சு முடிச்சுவிடும்....

நீங்க சுழியனல்லே....

அதை விடமாட்டீங்க போல....

ஆனால் இது மலையை மயிரால  இழுக்கிற சுழிப்பு....

கரணம் தப்பினால் 

மயிர் தானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கினேஸ்வரன் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை

 சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடப்போயினம் போலை கிடக்கு......

பலம்மிக்க நல்லதொரு எதிரணி உருவாக வழிசமைக்கிறார்கள் போலிருக்கு.....எல்லாம் நல்லதுக்குத்தான். tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

 சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடப்போயினம் போலை கிடக்கு......

பலம்மிக்க நல்லதொரு எதிரணி உருவாக வழிசமைக்கிறார்கள் போலிருக்கு.....எல்லாம் நல்லதுக்குத்தான். tw_thumbsup:

அடுத்த வருடம் எதையாவது பெறணும் என்றால் இதெல்லாம் தேவையற்றது

சிலவேளை 2016 யை இப்படியே இழுத்துவிடும் திட்டமாகவும் இருக்கலாம்....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மரண படுக்கைக்கு குழி வெட்டப்படுகிறது.

வேறு ஒரு திரியில் இதற்கான பதிலை இணைத்துளேன் இருந்தாலும்......

முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

 

இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?

மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?

உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?

ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?

எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?

நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.

உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிதான் அடிபடுகுது. பெட்டி அடிக்கிறோம் எண்டு சொல்லி அடிக்க இது என்ன ஆனந்தபுரமே?

இப்போ நடப்பவற்றின் சூட்சுமம் விளங்க  3,4 வருசம் போகலாம். சிலருக்கு சாகும் மட்டும் விளங்காது.

அது மூளைகொள்ளவு சம்பந்தமான பிரச்சனை.

எப்பிடி வந்தாலும் ஆப்படிகிராங்களே.. 

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிதான் அடிபடுகுது. பெட்டி அடிக்கிறோம் எண்டு சொல்லி அடிக்க இது என்ன ஆனந்தபுரமே?

இப்போ நடப்பவற்றின் சூட்சுமம் விளங்க  3,4 வருசம் போகலாம். சிலருக்கு சாகும் மட்டும் விளங்காது.

அது மூளைகொள்ளவு சம்பந்தமான பிரச்சனை.

 

 

 

ஓம் ஓம் நாலு வருசம் கழிச்சு இதத்தான் நாங்கள் சொன்னனாங்கள் என பிழையா இருந்தாலும் சரியாக இருந்தாலும் சொல்லுவியள். நீங்கள் நிறையப்படித்தவர்கள் எல்லோ சொல்லியாதரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னன்? சிலபேருக்கு கட்டையில ஏறும் மட்டும் விளங்காது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

விளங்குதோ விளங்கேல்லையோ சாகும்போது யாருக்கு என்ன பாவம் செய்தன் இப்படிப்பாயோட பறியோட கிடந்து பரிதாபமா உயிர் விடுகிறனே எனக் கவலைப்படமாட்டம் ஏனெண்டால் எங்களது மடியில் கனம் இல்லை.

/*

goshan_che  said:

பெட்டிதான் அடிபடுகுது. பெட்டி அடிக்கிறோம் எண்டு சொல்லி அடிக்க இது என்ன ஆனந்தபுரமே?

இப்போ நடப்பவற்றின் சூட்சுமம் விளங்க  3,4 வருசம் போகலாம். சிலருக்கு சாகும் மட்டும் விளங்காது.

அது மூளைகொள்ளவு சம்பந்தமான பிரச்சனை.

*/

மூலோபாஜத்தை மீறிய தந்திரோபாயம்!
பல பேர் ஏறி விழுந்த குதிரை, சக்கடத்தாரும் சறுக்கி விழபோறார், கவனம் விலத்தி நில்லுங்கோ.

 

பெட்டிதான் அடிபடுகுது. பெட்டி அடிக்கிறோம் எண்டு சொல்லி அடிக்க இது என்ன ஆனந்தபுரமே?

இப்போ நடப்பவற்றின் சூட்சுமம் விளங்க  3,4 வருசம் போகலாம். சிலருக்கு சாகும் மட்டும் விளங்காது.

அது மூளைகொள்ளவு சம்பந்தமான பிரச்சனை.

...."..............

... முள்ளிவாய்க்காலுக்கு முன்னம் பெட்டிகள் அடித்ததை கேள்விப்படவில்லையோ? ... முல்லைத்தீவு, ஓயாத அலைகள் 1,2,3, ஆணையிறவு .. பல ... அவைகள் வரலாறுகள்! வரலாற்றிலிருந்து எடுக்க முடியாது! பெட்டியென்ன வட்டங்களும் அடித்தவர்கள்! தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாமல்?

... அப்ப ஏன் ஆனந்தபுரம் சறுக்கியது? ... சிங்களவனா ஆனந்தபுரத்தை உடைத்தவன்? அவனா அங்கு தனியே நின்றான் ... நிற்காதவர்கள் இல்லை! யார் அங்கு கொட்டியது?  என்னவெல்லாம் கொட்டப்பட்டவை? ...? ...? ...? ... ஆதாரங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, இப்ப சேர்ந்திருந்த உங்கள் ஒட்டுக்குழுக்கள்/தலைவர்கள் வாய் மூலமாகவும் வருகின்றன, இன்னும் வரும்! ஆனந்தபுரத்தில் காவியமானவர்களின் புகைப்பட்டங்கள் இன்னும் இணையத்தில் ... பாருங்கள் குண்டுகள் துளைத்தா அல்லது எறிகணைகள் வீழ்ந்து வெடித்து சிதறியா இறந்திருக்கிறார்கள் என்று? ... மீண்டும் அறிவிருந்தால் புரியும்!

... பெட்டி அடிக்கிறம், நல்ல அடி, போட்டுத்தள்ளினான், எல்லோரையும் தூக்கிட்டாங்கள், அவன் செய்தது சரி, செய்யத்தான் வேண்டும், காணாது... ... யாருக்கு எதிராக கொண்டாடுகிறீர்கள்? நீங்களும் இதே இனத்திலிருந்தா ...???

 

நியானி: பண்பற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

மாவையாரின் சம் சும் கும்பலின் சூட்சுமம் வெளிக்க 4- 5 வருசம் செல்லுமாம். அதுசரி அடுத்த தேர்தலும் வந்திடுமில்ல. இப்படி தேர்தலுக்கு தேர்தல்.. சூட்சுமம் வெளிக்கும் என்று காத்திருந்தே தமிழ் மக்கள் அடிமைகளாக வாழக் கடவ என்று ஆசீர்வதிக்க வேண்டியான். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சில விளக்கங்கள்

1)..."........

2) ஏனைய பெட்டியடிப்புகள் வென்றும் ஆனந்தபுரம் ஏன் தோற்றது? ரசாயன ஆயுதங்கள், வெளிநாட்டுப் படைகளை விட உள்ளே இருந்து வந்த தகவல்களே காரணம். சண்டைக்கு முதல்நாளே பெட்டியடிப்பு பற்றி வெஸ்மினிஸ்டர் முன்றலில் சமா நடந்தது.

புலிகள் ஆமிக்கு அறிவித்து விட்டு செய்த முதலாவது பெட்டி அடிப்பு இதுவே. அதுதான் தோற்றதுக்கு முதன்மைக் காரணி.

3) சீவி v சம் சும் நகர்வையும் இப்படி வெளிப்படையாக செய்தால். அதே கதிதான் ஆகும். இது மாவைக்கும் தெரியாமல் இருக்கலாம்.

4) இவை பற்றி பொதுவில் பேசவேண்டுமா?

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

என்ட ஞாபகத்திற்கு எட்டிய வரை ஆனந்தபுரம் சண்டையில் தீபன் போன்ற தளபதிகள் இறந்த செய்தியை கேட்டதும் தான் வெஸ்மினிஸ்டருக்கு முன்னாலே கூடினோம்...அதற்கு முதல் பாராளுமன்றத்திற்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டம் செய்தது ஞாபகம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அக்கா அதுக்கு மூன்று நாலு நாளுக்கு முன்னமே பாராளுமன்றக் கூடல் ஆரம்பித்து விட்டிருந்தது என்பதே என் நியாபகம்.

 

* ..."....

* நகர்வை அறிய 4 வருடம் செல்லும், அது மாவைக்கு தெரியாது .. நாலு வருசத்துக்குள் கிழவன் தொப்பெண்டு போயிடும் ... மாவைக்கு ஏற்கனவே குறைவு, இனி தெரியவே தெரிய வராது! 

* ஆமா, மாவைக்கு தெரியாத இரகசிய சம் வேர்சஸ் சிவி நகர்வு, உங்களுக்கு தெருஞ்சுட்டுது! அறிவு கூடினபடியாலோ? உதை விட வேறென்ன பொதுவில்??

* ஓ, பெட்டி உங்களுக்கு முன்னமே தெரியும்?  நம்புறோமுங்கோ! 

 

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்,நான் நிட்சயமாக சொல்வேன் தீபன் போன்ற தளபதிகள் இறந்திட்டார்கள் என்ட செய்தி கேட்டுத் தான் எல்லோரும் முதல்,முதலில் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் கூட வெளிக்கிட,காவல்துறை தாக்க டொக்டர் மூர்த்தியின் மகளுக்கு கை உடைந்தது...அது பற்றிய பதிவுகள் கூட யாழில் இருக்குது...நான் கூட அந்த நேரம் இவ்வளவு சனம் சாகும் மட்டும் பார்த்திட்டு இருந்து விட்டு தளபதிகள் இறந்தவுடன் தான் மக்கள் வீதிக்கு வருகிறார்கள்.என பேசி எழுதி இருந்தேன்

Edited by ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.