Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நம் பெட் நியாபகம் இருக்கட்டும்.

2016 இல் சீமான் முதல்வர் -நீங்கள் 

ஒரு சீட்டும் கிடையாது -நான்

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இசை,

நம் பெட் நியாபகம் இருக்கட்டும்.

2016 இல் சீமான் முதல்வர் -நீங்கள் 

ஒரு சீட்டும் கிடையாது -நான்

கோசான்
சீட்டு கிடைக்கும் இல்லை என்தற்கு அப்பால் அடுத்த அடுத்த தேர்தலில் நிச்சயம் பெரிய கட்சிகளெல்லாம் தேடிப் போய் பேரம் பேசும் சக்தியாக பலமாக இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இசை,

நம் பெட் நியாபகம் இருக்கட்டும்.

2016 இல் சீமான் முதல்வர் -நீங்கள் 

ஒரு சீட்டும் கிடையாது -நான்

இப்பிடி ஒரு பெட் கட்டவில்லை.. பழைய பதிவுகளை புரட்டி எடுத்து போடவும்.. tw_blush:

2016 இல் லட்சியம்.. 2021 இல் நிச்சயம்.. இதுதான் அவர்களது நோக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்,

94-இன்று வரை மதிமுக செய்ததைதான் அண்ணனும் செய்யப்போறார்.

சீமான் தனித்தே நிண்டால் தமிழ் உணர்வுகொண்ட 4% வாக்கு வங்கியை தங்க வைப்பார். கூட்டுச் சேர்ந்தால் வைகோ, விஜயகாந்த் நிலைதான்.

தமிழ் தேசிய உணர்ச்சி தமிழ்நாட்டில் செல்லாக் காசு என்று மீண்டும் நிரூபிப்பார்.

இசை - எனக்கென்னமோ அப்படித்தான் பெட் பிடித்த நியாபகம்.

பரவாயில்ல்லை இன்று போய் 2021 இல் வாங்க. அப்பவும் தனித்து நிண்டால் பூஜ்ஜியம்தான்.

கூட்டுச் சேர்ந்தால் வாழ்நாளுக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

கூடவே நாயக்கர் குலம் மீதான சீமானின் அருவருக்கத் தக்க தாக்குதல் பச்சை சாதிவாதம்.

பல நூறு வருடங்களாய் தமிழாராய் வாழும் ஒரு சாதியை, கட்டப் பொம்மனுடன் சேர்ந்து போரிட்ட, பெரியார், வைகோ போன்ற தமிழ் உணர்வாளர்களின் சாதியை, தனியே சாதிவாரியக பிரித்து சீமான் தாக்குவது வெக்கம் கெட்ட அரசியல்.

ஜெயாவுக்கு பின் ஸ்டாலின் எதிர் அரசியலின் மையப்புள்ளியாக வைகோ வருவதை தடுக்க யாருக்காகவோ உழைக்கிறார் சீமான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழ்நாட்டு அரசியலை கூர்ந்து கவனித்திருந்தால் இப்பிடியெல்லாம் எழுதமாட்டீர்கள்..

தெலுங்கு நாயக்கர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல.. குறிப்பாக தென்மாவட்டங்களில்.. குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மன் கோயில் முரண்பாடு அண்மைய உதாரணம். இந்தப்பிரச்சினையில் பூர்வகுடிகளின் விருப்புக்கு எதிராக நாயக்கர்களின்பக்கம் நிற்பவர்தான் வைகோ. கீழவெண்மணி படுகொலைகள், கோபாலகிருஷ்ண நாயுடு, பெரியார் என நிறைய எழுதத்தான் ஆசை.. ஆனால் நேரமில்லை.

http://www.tamilhindu.com/2015/04/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/

  • கருத்துக்கள உறவுகள்

நாயக்கர் மீதான சீமானின் வன்மம், சீமானின் பேச்சுகள் எல்லாம் கிட்லரை நியாபகப் படுத்துகிறது.

தெலுங்கு நாயக்கர் என்பதே அபத்தமான சொல்லாடல். கன்னடத்தில் ஆந்திராவில் தமிழ் நாட்டில் எல்லா இடமும் பரந்து வாழும் ஒரு சாதிநாயக்கர். ஆனால் தமிழ் நாயக்கர் வேறு மொழி பேசினாலும் தமிழ்தான் அவர்கள் தாய்மொழி. சீமான் ஜாதி வெறியை கிளப்பும் வரை அப்படித்தான் பார்க்கக் பட்டனர்.

இதுக்குள் கண்டி அரசவம்சமே தமிழர் இல்லை. தெலுங்கர் என்றும். பண்டரநாயக்க தெலுங்கன் என்றும் சீமான் செய்வது சுத்தப் போக்கிரித்தனம்.

இன்னுமொரு கேள்வி?

ஒரு தெலுங்கன், தமிழ் இன துரோகியாய் உள்ள வைகோவையா தலிவர் நம்பிக் கெட்டார்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

கொஞ்ச நாளாக இதை எழுதணும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இதை facebook லும் பகிர்கிறன். 
நாம் தமிழர் கட்சி பல நிலைகள் அடைந்திருக்கிறார்கள். 1. திராவிடன் என்ற சொல் ஒரு மாயை. 2. அச்சொல் ஒரு கூட்டத்தின் குறிப்ப
ாக தெலுங்கர்களின் நலன் தமிழர்களின் நலன் என்ற பெயரில் காக்கப்பட்டது என்பதை உணர்த்தியது. 3. நாம் தமிழர் என்ற தேசிய உணர்வை எல்லாரும் அறியவும், சிந்திக்கவும்,பேசவும் வைத்திருக்கிறது. சீமான் அந்தப்பணியை உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. திராவிட கட்சிகள் இவரை பொது எதிரியாக பார்ப்பதில் இதை பட்டவர்த்தமாக பார்க்க முடிகிறது. ஒரு "கருத்து போதை"யில் இருந்து மீட்டு இன்னொரு கருத்தை ஆழமாக பதியவைப்பது மிக கடினம். அதுதான் புரட்சியின் அடிப்படை. அதற்கு கொஞ்சம் அதிகமாகவே தன் சக்தியை செலவழிதிருக்கிறார் செந்தமிழர் சீமான். இது மாபெரும் வரலாற்று பணி. கருத்தியல் ரீதியாக வடக்கு நோக்கி செல்லும் மக்களை தெற்கு பக்கம் திரும்புவதற்கு (A paradigm shift or a ideological shift or an epistemological shift) மிகவும் கடின உழைப்பை தந்திருக்கிறார் செந்தமிழர் சீமான். இத்தனை ஆயிரம் இளைஞர்களை எந்தவித பின்புலம் இல்லாமல் செய்வது எளியது அல்ல. தமிழ் இளைஞர்கள் சினிமாக்காரன் அல்லது அரசியலில் வெற்றிபெற்ற "தளபதி"கள் பின்னால் தான் போவார்கள். ஆனால், சீமான் பின்னால் போவது ஒரு "சீமான் விளைவு" (a seeman effect) என்று சொல்லலாம். இதை மறுப்பவர்கள், சிந்தனை பிறழ்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதை தக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அது தமிழ், தமிழர் நலன், நமது சந்ததியர் நலன், தமிழ் மண்ணின் நலன், தமிழ் இளைஞர்களின் ஆளுமை நலன் இவைகளில் அக்கறை கொண்ட அனைவரும் "ஒன்றிணைந்து" செய்யவேண்டும். இந்த கடமை ஒரு அறநெறி கடமை. இது வரலாற்று கடமை. அரசியல் கடமை. ஆம். ஆம். அரசியல் கடமை. தமிழ், தமிழர் நலம், தமிழ் நாட்டு நலன் காக்கப்பட நாம் அரசியலில் வென்றாக வேண்டும். வெல்லுவோம். உறுதியாக வெல்லுவோம். அதற்கு கொள்கைகளை படிக்க வேண்டும். கருத்து ரீதியாக விவாதம் செய்யணும். செயல் வீரர்களாக மாறணும். ஒவ்ஒரு நாளும் 1 முதல் 10 ஓட்டுகளை ஆதாயமாக்க வேண்டும். அந்த ஓட்டுக்களை நாம் தமிழராக மாற்றணும். நாம் தமிழரான பின், ஆளுமைமிக்க சீமான்களாக மாற்றணும். அதற்கு முதலில் நாம் ஆளுமைமிக்க சீமானாக மாறணும். மாறுவோம்.

https://www.facebook.com/mount.selvan

11 minutes ago, goshan_che said:

நாயக்கர் மீதான சீமானின் வன்மம், சீமானின் பேச்சுகள் எல்லாம் கிட்லரை நியாபகப் படுத்துகிறது.

தெலுங்கு நாயக்கர் என்பதே அபத்தமான சொல்லாடல். கன்னடத்தில் ஆந்திராவில் தமிழ் நாட்டில் எல்லா இடமும் பரந்து வாழும் ஒரு சாதிநாயக்கர். ஆனால் தமிழ் நாயக்கர் வேறு மொழி பேசினாலும் தமிழ்தான் அவர்கள் தாய்மொழி. சீமான் ஜாதி வெறியை கிளப்பும் வரை அப்படித்தான் பார்க்கக் பட்டனர்.

இதுக்குள் கண்டி அரசவம்சமே தமிழர் இல்லை. தெலுங்கர் என்றும். பண்டரநாயக்க தெலுங்கன் என்றும் சீமான் செய்வது சுத்தப் போக்கிரித்தனம்.

இன்னுமொரு கேள்வி?

ஒரு தெலுங்கன், தமிழ் இன துரோகியாய் உள்ள வைகோவையா தலிவர் நம்பிக் கெட்டார்? 

நாயக்கர்கள் வேறு மொழி பேசுவதில்லை.. தெலுங்குதான் வீட்டிற்குள் பேசுவார்கள். tw_blush: நான் முன்பு அங்கு இருந்தபோது பக்கத்துவீட்டுக்காரர்களும் அவ்வாறேதான்.. பக்கா தமிழ் ஆட்கள் மாதிரி.. ஆனால் தெலுங்குதான் அவர்களது வாய்மொழி; தாய்மொழி எல்லாமே..

இனி ஒரு வரிசையைக் காண்போம்..

1) அறிஞர் அண்ணாவின் தாய் தெலுங்கு..
2) பெரியார் கன்னடர்
3) கருணாநிதி தெலுங்கர்
4) எம்.ஜி.ஆர். மலையாளி
5) ஜெயலலிதா கன்னடம்

இவர்கள் எல்லோரும் அதிகாரத்துக்கும், ஆட்சிக்கும் வந்தது சும்மா எதேச்சையாகத்தான்.. சும்மா போங்க சார்.. tw_blush:

நீதிக்கட்சி என்று இருந்ததை தமிழர் கழகம் என்று மாற்றப்பட இருந்தது.. அதை இடையில் புகுந்து திராவிடர் கழகம் என்று மாற்றியது ஏன்? இதைப் புரிந்துகொண்டால் சூழ்ச்சி விளங்கும்..

இந்தித்திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நூற்றுக்கணக்கில் தீக்குளித்தார்கள். இப்போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக்கழகம் பெருமளவில் ஆதரவு தந்து (ஒரு நாயக்கரும் தீக்குளிக்கவில்லை என்பதை கவனிக்கவும்..) காமராஜரை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துக்கொண்டது. இவ்வளவுக்கும் திராவிடம் என்கிற சொல்லே வடமொழியில் இருந்துதான் வந்தது.. அடக் கருமமே.. யாரை ஏமாற்ற?!

இந்தத் திராவிட அணிவகுப்பில் உள்ள கட்சிகளைக் காண்போம்..

திமுக‌
அதிமுக‌
மதிமுக‌
தேமுதிக‌

இப்போது அந்தக் கட்சிகளின் தலைமைகளைக் கவனியுங்கள்..

திமுக ‍ தெலுங்கு தலைமை (கருணாநிதி)
அதிமுக கன்னடர் தலைமை (ஜெயா)
மதிமுக தெலுங்கு நாயுடு தலைமை (வைகோ)
தேமுதிக தெலுங்கர் தலைமை (விஜ‌யகாந்த)

இதுவும் எதேச்சையாக ஏற்பட்டதுதான். தமிழனை ஆளவும், அடிமைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதுதான் திராவிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்போது சீமானின் திரியோடு மட்டும்தான் யாழில் இருக்கின்றார். சீமான் இந்தத் தேர்தலில் குப்புறக் கவிழ்ந்த பின்னர் யாழ் பக்கம் எட்டியும் பார்க்காமல் இருக்கத் திட்டம்போட்டுள்ளாரோ என்று சந்தேகமாக இருக்கின்றது.!:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12729115_184034311969825_681953061681924

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வேண்டாம் இன்பத்திராவிடம் என 80களிலே எழுதி புத்தகமாயும் வந்தவை தான் இவை. ஆனால் சீமான் நாயக்கர் மீது போடும் இதே தமிழன் அல்லாதவன் எந்த சொல்லை நாளைக்கு முதலியார்கள் மீதும், நாயர்கள் மீதும், ஏன் வன்னியர்கள் மீதும் கூடப் போடலாம்.

வன்னியர்களே தெலுங்கு மரபினரே. பல்லவர் தெலுங்கரே முன்னர் பாலி என்றைக்கப்பட்ட இப்பொதைய வன்னியர். அப்படிப்பார்த்தால் அரவாசி தமிழ்நாட்டின் ஜனத்தொகை தமிழர் இல்லை.

சேர சோழ பாண்டிய பல்லவரில், பாண்டியரையும் சோழரையும் தமிழர் மற்றயவர் அந்நியர் என்பது சுத்த கேமெடி.

அப்படியாயின் சைமன் செபாஸ்டியன் என்ன தமிழனா அல்லது போத்துக்கீசனா?

தெலுங்கதாயால் அண்ணா தமிழர் இல்லை எனில் சீமானுடன் இருக்கும் முஸ்லிம்களின் மூதாதைகள் அரபிகள். அவர்கள் எப்படித் தமிழ் ஆனார்கள்.

அங்கால இங்கால தாவாமல்.. தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகளின் தலைமைகள் எப்படி வேற்றினத்தவரிடம் இருக்கு என்கிறதை மட்டும் சொல்லுங்க.. tw_blush:

நாம் தமிழர் என்று சீமான் சொல்லும்போது நாங்களும்தான் தமிழர்கள் என்று சொல்ல இவருக்கு முடியவில்லை.. எப்பிடி சுத்தி வளைக்கிறார் பாருங்கள்..!! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேற்று இனம் என்ற கருத்தே மொக்குத்தனமானது. நூற்றாண்டுகளாய் திருக்குவளையில் வாழ்ந்த தெலுங்கே அறியாத நட்டுவர் குடியினர்தான் கருணாநிதி குடும்பம். செல்வி வாழ்க்கைப் பட்டது ஒரு தெலுங்குக் குடும்பத்தில். அவர்களை தெலுங்கராய் ஏன் நாயக்கராய் கூட தெலுங்கரே ஏற்பதில்லை.

வைகோ தெலுங்கு பேசும் தமிழர். ஆனால் ஒரு ஈழத்தமிழனாக வைகோவை தமிழர் இல்லை என்றால் அது நான் எந்தாயை பழிப்பதுக்கு நிகர்.

அதிமுக - இவர் பிராமணத்தி அவாளுக்கு இனம் ஏது? மொழியேது? ஜாதி மட்டும்தான்.

விஜயபாஸ்கர் ராவ் - பக்காத் தெலுங்கர். ஆனால் இவரை பெரிய கட்சி தலிவர் என்பது காமெடி.

நீங்கள் வைகோவை நம்பி பிரபா ஏமாந்தாரா என்ற கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

தலைவர் வீரமணி, எம்.ஜி.ஆர்., பாரதிராஜா என்று எல்லாரையும் தான் சந்தித்தார். அவர் வைகோவை நம்பியிருந்தார் என்பது உங்கள் கற்பனை..

நிற்க.. தமிழக பிறமொழி ஆதிக்கர்கள் குறித்த உங்கள் புரிதல் நீங்கள் இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டியவர் என்பதை புலனாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்க,

சீமானின் மொக்குக்கதை, உண்மைக்குப் புறம்பான பேண்டசிதான் தமிழர் மொழியியல், இனப்பரம்பல் வரலாறு என்றால் - அதை அறியாமல் இருப்பதே மேல்.

யூதர்களை பலிகடாவாக்கி எப்படி கிட்லர் பொய்கதைகளை கூறி ஜேர்மனியர்களை புதை குழியில் தள்ளினானோ அப்படி ஒன்றையே சீமான் முயர்சிக்கிறார். நாய்க்கர் சாதியை பலிகடாவாக்கி.

நாளைக்கு கெளண்டரும் மலையாளி என்பார்.

இது தெந்தமிழகத்து சீமானின் சாதி வெறி. தமிழுணர்வில்லை.

இந்த சாதி வெறியன் சொல்கிவிடார் என்பதற்காக வைகோவை தமிழன் இல்லை என்று பழிக்க நான் முட்டாளுமில்லை, நன்றி கெட்டவனும் இல்லை.

தேர்தல் முடிவுகள் உங்களுக்கும் சீமானுக்கும் பாடம் படிப்பிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நன்றி.. tw_blush:

அடுத்ததாக, திருவெறும்பூர் தொகுதியில் நாம் தமிழர் செயற்பாட்டு வரைவு ..

12733374_178664819171822_257193491310193

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் கண நாளுக்குப் பொறவு வந்தாலும் ஒரு கரை காணுறது எண்டு தான் வந்திருக்கிறார் போல கிடக்குது.

சீமான் இந்த முறை வெல்லுவதாக சொல்லவில்லை. அவரது இலக்கு 2021. ஆனால், ஒரு பலத்த அடித்தளம் இட இம்முறை முனைகிறார்.

சீமான் இலங்கை சிங்கள அரசியல் முறையினை கைகொள்கிறார் போல் தெரிகிறது.

அது தமிழருக்கு எதிரானது ஆயினும், சிங்கள அரசியல் வாதிகளை பொறுத்த வரை வெற்றி தந்த stategy. இதை தான் ஆந்திர, கர்நாடக, கேரள கட்சிகள் செய்கின்றன. மகாராஸ்திராவில் சிவசேன இம்முறையிலேயே பதவிக்கு வந்தது. ஆகவே இந்தியாவுக்கு புதியது அல்ல.

ஆனால் சிங்களவர்கள் தமிழர்களை முழுவதுமாக ஒழிக்க நினைத்தார்கள்.

ஆனால் சீமான் அவ்வாறு செய்ய முடியாது. காரணம் மத்திய அரசு. ஆகவே இலங்கை நிலைமை வர முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் விகடனுக்கு அளித்த நேர்காணலின் முழு நீள வடிவம்.. இவர் சொல்வதில் இம்மியளவுகூட தவறு காண முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

கோசன் கண நாளுக்குப் பொறவு வந்தாலும் ஒரு கரை காணுறது எண்டு தான் வந்திருக்கிறார் போல கிடக்குது.

சீமான் இந்த முறை வெல்லுவதாக சொல்லவில்லை. அவரது இலக்கு 2021. ஆனால், ஒரு பலத்த அடித்தளம் இட இம்முறை முனைகிறார்.

சீமான் இலங்கை சிங்கள அரசியல் முறையினை கைகொள்கிறார் போல் தெரிகிறது.

அது தமிழருக்கு எதிரானது ஆயினும், சிங்கள அரசியல் வாதிகளை பொறுத்த வரை வெற்றி தந்த stategy. இதை தான் ஆந்திர, கர்நாடக, கேரள கட்சிகள் செய்கின்றன. மகாராஸ்திராவில் சிவசேன இம்முறையிலேயே பதவிக்கு வந்தது. ஆகவே இந்தியாவுக்கு புதியது அல்ல.

ஆனால் சிங்களவர்கள் தமிழர்களை முழுவதுமாக ஒழிக்க நினைத்தார்கள்.

ஆனால் சீமான் அவ்வாறு செய்ய முடியாது. காரணம் மத்திய அரசு. ஆகவே இலங்கை நிலைமை வர முடியாது.

இந்தியாவில் ஒரு சட்டம் (அல்லது செயற்பாட்டு மரபு) இருக்கு.. வெளிநாட்டு குடிமகன் ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்று பிரதமர் ஆகலாம்.. ஆனால் அவரது முதல் தாய்நாட்டில் ஒரு இந்தியர் அந்நாட்டு குடியுரிமை பெற்று தலைவர் ஆகலாம் என்கிற நிலை இருக்க வேண்டும்.

சோனியா இந்தியப் பிரதமர் ஆக முயன்றபோது இது ஒரு பெரிய விவாதமாக வந்தது. இவ்வளவுக்கும் சோனியா முன்னாள் இந்தியப் பிரதமரின் மனைவி.. இந்தியக் கலாச்சாரம், இந்திய மொழி அறிந்தவர். பல ஆண்டுகாலம் இந்தியாவிலேயே வாழ்கின்றவர். அவரை ஏன் பிரதமர் ஆக முடியாமல் தடுத்தார்கள்? ஏனென்றால் அயலான் என்றும் அயலானே.. உன் வலி அவனுக்கு விளங்காது.

நாங்கள் மேற்கு நாடுகளில் வாழ்கிறோம். இரண்டாம் உலகப்போர் / பொப்பி மலர் எல்லாம் வெள்ளையனுக்கு உணர்வுபூர்வமான விடயங்கள். நமக்கு அப்படியல்ல. ஒருவேளை நாம் தலைவரானால் இந்த வெள்ளையர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்போமா? வேணுமானால் நடிக்கலாம்.

இந்தத் திராவிடக் கட்சிகளை யாரும் குறைசொல்லப் போவதில்லை.. அவர்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபிலித்து இருந்தால்..

1) தமிழ்நாட்டில் தமிழை ஏறக்குறைய கொன்றேவிட்டார்கள்.
2) தமிழ் வழிக்கல்வி இல்லாமலே செய்யப்படுகிறது.
3) ஈழப்பிரச்சினையில் தூக்கம் / துரோகம்
4) கேரளாவில் மறுக்கப்பட்ட அணு உலைகளை தமிழகத்தில் நிறுவ அனுமதித்தமை. அதன்மூலம் கர்நாடகா / கேரளாவுக்கு மின்சாரம்.
5) முல்லை / பெரியாறு / காவிரியில் தண்ணீர் பிரச்சினை.. பிரச்சினை ஆக்கப்பட்டது இவர்களது ஆட்சியில்..
6) காமராஜர் ஆட்சியில் ஊழல் என்பது ஒரு பிரச்சினையாகவே இல்லை. காமராஜர் தமிழர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். திராவிட ஆட்சியும் வந்தது. இலட்சம் கோடிகள் என்கிறார்கள் ஊழல் என்கிறார்கள். 

இதையெல்லாம் செய்தவர்கள் ஐநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழ்ந்திவரும் அயலானை தலைமையாகக் கொண்ட திராவிடக் கட்சிகளே.. இவர்களுக்கு தமிழர்களின் உணர்வுகள் ஐந்தல்ல.. ஐநூறு ஆண்டுகளேயானாலும் புரியாது என்பதே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அயலான் ஆட்சி எந்த இனத்திற்கும் ஆகவே ஆகாது..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

இசை இப்போது சீமானின் திரியோடு மட்டும்தான் யாழில் இருக்கின்றார். சீமான் இந்தத் தேர்தலில் குப்புறக் கவிழ்ந்த பின்னர் யாழ் பக்கம் எட்டியும் பார்க்காமல் இருக்கத் திட்டம்போட்டுள்ளாரோ என்று சந்தேகமாக இருக்கின்றது.!:rolleyes:

தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள திராவிட மாயையின் ஆதிக்கத்தை ஒரே தேர்தலில் புரட்டிப் போட முடியும் என்று சீமான் கூட நம்பவில்லை. இசை நம்புவாரா என்ன..?! ஆனால்.. சீமானின் இந்த முயற்சி அந்த புரையை தமிழினத்தில் இருந்து அகற்றுவதற்கான சிகிச்சையை அதற்கான எண்ணத்தை தமிழகத்தில் காத்திரமாக விதைக்கும் என்பதை நம்பலாம். அதுதான் நீண்ட கால ஒழுங்கில் அந்தப் புரையை தமிழகத்தில் இருந்து அகற்ற உதவும். அதற்கான தொடக்கப் புள்ளியை திடமாக இட இசை உதவுகிறார் என்று கொள்வதே இங்கு சாலப் பொருந்தும்.

ஒரு புரையை ஓரிரவில் உடலில் இருந்து அகற்றியதாக வரலாறில்லை.. அண்ணங்களா.

இவ்வளவு வாசிப்புப் புழக்கம் உள்ள உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகமோ..?! அல்ல.. அல்ல ஒரு குழப்பம். tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியம் தொலைக்காட்சிக்காக இன்று வழங்கிய நேர்காணல்.. நான் பார்க்கப் போகிறேன். நீங்களும் பாருங்கள்..! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருணாநிதி

ஒரு   ஜெ யலலிதா 

இவர்கள் ஆளநினைத்தபோது

ஆளும் போது வராத கேள்விகளும் தடக்குதல்களும்

ஒரு தமிழன் தமிழகத்தை ஆள நினைக்கும் போது வருகிறது

தமிழேண்டா...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள திராவிட மாயையின் ஆதிக்கத்தை ஒரே தேர்தலில் புரட்டிப் போட முடியும் என்று சீமான் கூட நம்பவில்லை. இசை நம்புவாரா என்ன..?! 

தொலைக்காட்சி விவாதங்களில் சீமானின் வாதங்களை, பங்குபற்றும் அடுத்தவர்கள், எதிர்வாதம் செய்ய முடியாமல் இருப்பதை அவதானிக்கலாம்.

தமிழரான காமராஜரை வீழ்த்த, கன்னட பெரியாரும், தெலுங்கு அண்ணாத்துரையும் எடுத்த முகமூடி 'திராவிடம்'.

இன்றுவரை அங்கே தமிழர் ஆட்சி இல்லை. இடையில் மலையாள எம்.ஜி.ஆரும் வந்து போய்விட்டார்.

தமிழர் சிவாஜி கூட முடியவில்லை, அந்தளவுக்கு திராவிட மாயை.

விட்டால், தமிழர் கமல் பார்த்திருக்க, ரஜனி முதல்வராவார்.

எமது பிரச்சனை சீமான் பேசுகிறார். ஆனாலும் எதையும் எதிர்பாராது, தமிழர் என்ற வகையில் அவர் வெல்ல வேண்டும் என விரும்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19 February 2016 at 8:31 PM, goshan_che said:

இருக்க,

சீமானின் மொக்குக்கதை, உண்மைக்குப் புறம்பான பேண்டசிதான் தமிழர் மொழியியல், இனப்பரம்பல் வரலாறு என்றால் - அதை அறியாமல் இருப்பதே மேல்.

யூதர்களை பலிகடாவாக்கி எப்படி கிட்லர் பொய்கதைகளை கூறி ஜேர்மனியர்களை புதை குழியில் தள்ளினானோ அப்படி ஒன்றையே சீமான் முயர்சிக்கிறார். நாய்க்கர் சாதியை பலிகடாவாக்கி.

நாளைக்கு கெளண்டரும் மலையாளி என்பார்.

இது தெந்தமிழகத்து சீமானின் சாதி வெறி. தமிழுணர்வில்லை.

இந்த சாதி வெறியன் சொல்கிவிடார் என்பதற்காக வைகோவை தமிழன் இல்லை என்று பழிக்க நான் முட்டாளுமில்லை, நன்றி கெட்டவனும் இல்லை.

தேர்தல் முடிவுகள் உங்களுக்கும் சீமானுக்கும் பாடம் படிப்பிக்கும்.

ஹாஹா...

கோசன் நாயக்கரோ? :grin:

உண்மையில் இந்த நாயக்கர் வம்ச கண்ணப்பனே இலங்கை கண்டி கடைசி மன்னன். அது மட்டுமல்ல, பண்டார'நாயக்க', சேன'நாயக்க', தக'நாயக்க', திச'நாயக்க' என்று இலங்கையை சுதந்திரத்துக்குப் பின் ஆண்ட நாயக்கர்கள்....

நாயக்கர்கள், அந்தந்த இனமக்களுடன் சேர்ந்து, அவர்களே உணராவண்ணம் அவர்களை ஆளும் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

மீண்டும் அதே கேள்வி:  கோசன் நாயக்கரோ? :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

சோனியா பதவி ஏற்பதில் அவரின் பூர்வீகம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அந்த வெற்றிக்குப் பின் சோனியாவே தான் அந்த பதவியை ஏற்காமல் மன்மோகனை முன்னிறுத்தினார்.

இதற்க்கு சோனியா சொன்ன காரணம், 300 ஆண்டு ஐரோபிய அடிமைத்தனத்தின் பின் சுதந்திரத்தை போராடிப் பெற்ற நாட்டில், ஜனநாயகமுறையிலேனும் ஒரு ஐரோபியர் தலைமைவகிப்பது தனக்கு ஏற்பாக தெரியவில்லை என்பதே.

பிபிசி ஹார்ட்டாக் என நினைவு.

நாமு,

இங்கே என் வாதம் தமிழ் தேசிய அரசியல் கூடாது என்பதல்ல. திராவிடத்துக்கு நான் கூஜா தூக்கவும் இல்லை.

ஆனால் யார் தமிழர் எனும் சீமானின் வரையறை முட்டாள்தனமானது, பொய்யானது, சாதி அடிப்படையிலானது, நகைபுக்குரியது.

7 news சானல் அருமையாய் கேட்டிருக்கும். எல்லோருக்கும் ஒரு எதிரி தேவைப்படுகிறது நம்மை நிலை நிறுத்த. அப்படி நாயக்கர்களை உருவகப் படுத்துகிறாரா சீமான் என்று?

பாரிஸ் ஒப்பந்தம் தம்மை வஞ்சித்து விட்டதாய் வீழ்ந்து கிடந்த ஜெர்மேனியர்களை உங்கள் துன்பத்துக்கெல்லாம் யூதரே காரணம் என்று ஹிட்லர் ஜேர்மனியர்களை படுகுழி நோக்கி வழிநடத்தியதுக்கு ஒப்ப செயல் இது.

வைகோ மீதும் ஏனைய நாயக்கர் மீதும் என்ன குறைகண்டீர்கள்? அவர் தமிழினத்துக்கு செய்த துரோகம் என்று ஒன்றைக் காட்டுங்கள்?

கோசான் நாயக்கர் இல்லை. யாழ்பாண வேளாண் சமூகம் இந்தியாவின் பிள்ளைகள் வழிவந்தோரே. ஆனால் நாயக்கர் மீது சீமான் காட்டுவது பச்சை சாதிபேதம் என்பதை சுட்ட நான் நாயக்கனாய் இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தால் போதும்.

ஒரு கீழ் வெண்மணியை காட்டி நாயக்கர் சமூகத்தை ஒதுக்கி வைக்க முடியுமாயின் இதுவரை தலித்துகள் மீது செய்த குற்றத்துக்கு முக்குலத்தோரையும், வன்னியரையும் பூப்போட்டா கும்பிடச் சொல்கிறீர்கள்?

அண்ணா தெலுங்கர் எந்தக் ஒபாமாவை என்ன கென்யர் என்றா பார்கிறார்கள்?

பெஞ்சமின் டிஸ்ரேலி எனும் யூதன் அன்றே யூகேயில் பிரதமராகவில்லையா?

கமல் தமிழர் என்கிறீர்கள் - நாளைக்கே பிராமணர் எல்லோரும் தமிழர் இல்லை என்பார் சீமான். என்ன செய்வீர்கள்? கமலை கைபர் கணவாய் வழி ஆப்கானுக்கு அனுப்புவீர்களா?

இவ்வளவு ஏன், தென் தமிழக, குறிப்பாக மதுரை முஸ்லீம்கள் - மொகலாய காலத்தில் ஆளவும், அடக்கவும் சுல்தான்களாயும் படைவீரராயும் வந்தோரே. அவர்களையே தமிழராய் ஏற்கும் சீமான், அதுக்கு பின்னே வந்த, அவர்களை விட தமிழுக்கு உழைத்த நாயக்கரை மட்டும் பழிப்பது ஏன்?

நான் முன்னே சொன்னது போல, நாயக்கர், வன்னியர், கெளண்டர், பிராமணர், முதலியார், கோனர் இப்படி  தமிழ் நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல் சீமானின் வரையடிப்படி தமிழரில்லை.

இவர் சொல்படி பார்த்தால் ஒரு தேவரோ, நாடாரோ ( அவர்களிலும் மலையாள கலப்பு உண்டு). அல்லது தமிழ் தலித்தோ மட்டுமே தமிழ் நாட்டை ஆளமுடியும். 

பால்தாக்ரே எல்லா மராட்டியர்களையும் ஒன்றாக்கி ஹிந்தி, தமிழ் பேசும் 50 வருடங்களுக்குள் பம்பாயில் குடியேறியோருக்கு எதிராயே போராடினார்.

வீரசிவாஜி காலத்தில் இருந்து மராடியரோடு கூடி, மராட்டியராயே வாழும் கட்சி குஜராத்திகளை, தனியே பிரித்து அவர்கள் மராட்டியர் இல்லை என்று கூறவில்லை.

கன்னடத்திலும் நாயக்கரை கன்னடர் இல்லை என்று கூறவில்லை.

அப்புறம் பண்டரநாயக்க, திசநாயக்க என்பது நாயக்கப் பெயர் என்பது கந்தபுரிதான் Canterbury என்றாகியது என்பதைப் போன்ற கேமெடி கதை.

சிங்களத்தில் நாயக்க என்பது தலைவனைக் குறிக்கும். திச என்பது குறிச்சி. குறிச்சியின் நாயகன் என்பதே திசநாயக்க. வன்னிநாய்க்க என்றால் ஒரு வன்னிமையின் தலைவன்.

இப்படி இவை எல்லாம் காரணப்பெயரே அன்றி சாதியை குறிக்கும் இடுகுறிப்பெயர்கள் அல்ல.

கண்ணுசாமி தெலுங்கன் என்பது இன்னொரு புரட்டு. மதுரையில் இருந்து வந்த நாயக்க வம்ச அரசிகளின் 3ம் தலைமுறை வாரிசே கண்ணுசாமி.

 கண்டிய ஆட்சியில் அரச கரும மொழியாய், அரசனின் தஸ்தாவேஜுகள் எழுதபடும் மொழியாய் தமிழ் இருந்திருக்கிறது. 

ஒரு சிங்கள நாட்டை தெலுங்கன் ஆளும் போது அங்கு தமிழ் ஏன் வருகிறது? யோசிக்க வேண்டாம்?

நீங்கள் சொல்வது போல நாயக்க என்று பெயர் முடியும் சிங்களர் எல்லாம் நாயக்கர் என்றே வைத்தாலும் அவர்கள் எல்லோரையும் pan singhalabiddost அடையாளத்துக்குள் எடுத்து, ஒற்றுமையாய் ஓரினமாய் வாழும் சிங்களவனின் கால்தூசுக்கும் வருமா? சீமானின் தமிழர்களை ஜாதிவாரியாக கூறுபோடும் அரசியல்?

ஆயிரக்கணக்கான வருடங்களாய் நீங்கள் சிங்களரிடம் தோற்றுப் போவதன் சூட்சுமம் இங்கேதான் இருக்கிறது.

அவன் எல்லோர்க்கும் சிங்களம் எனும் அடையாளம் கொடுத்து ( நீர்கொழும்பு தமிழரையும்) உள்வாங்கி கொள்ள, நீங்களோ சேர, சோழ பாண்டிய, பல்லவ, பின் வடக்கு கிழக்கு, இப்போ நாயக்கன் நாயக்கன் இல்லாதவன் இப்படி மேலும் மேலும் துண்டு துண்டாகி போகிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.