Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் உங்கள் ரசிகன் ~ செங்கை ஆழியனின் படைப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவை ஏற்கனவே இங்கே பதியப்பட்டும் இருக்கலாம்.
கோஷன் அவர்கள் திண்ணையில் இட்டிருந்த அருமையான இணைப்பை இங்கே இணைகின்றேன்.
நன்றி கோஷன் 

  • கருத்துக்கள உறவுகள்

???

  • கருத்துக்கள உறவுகள்

சசிக்கு என்ன நடந்ததது?...திண்ணையில் எழுதினதை யாழில் கொண்டு வந்து போட முயற்சித்தாரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ... இதை கவனிக்க வில்லை...
செங்கை ஆழியானின் சிறு கதை தொகுப்பு ஒன்றை கோஷன் திண்ணையில் இணைத்து இருந்தார்.
மிகவும் அருமையான இணைப்பு ... அதனை இங்கே கொண்டு வந்து புதிய திரி திறந்து  இணைத்து விட்டேன்.
லின்கை காணவில்லை ... இனி கோஷனிடம் திரும்பவும் கேட்டுப் பதிவிட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://ta.m.wikipedia.org/wiki/க._குணராசா

http://www.madathuvaasal.com/2006/05/blog-post_18.html?m=1

செங்கை ஆழியான் பற்றிய பதிவுகளை மேலே காணலாம்.

சசி,

நான் திண்ணையில் கூறியது போல் இவர் ஒரு SLAS ஆபிசர் என்பதை விக்கி உறுதி செய்கிறது.

செம்பியன் செல்வனும் இப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடியில்  அவரின் வீடு இருந்தது. அங்கு ஒரு சிறு நூலகமும் இருந்தது. நானும் அதில் ஒரு உறுப்பினர். அங்குதான் நிறையப் புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்....!

  • கருத்துக்கள உறவுகள்

https://ta.m.wikipedia.org/wiki/க._குணராசா

http://www.madathuvaasal.com/2006/05/blog-post_18.html?m=1

செங்கை ஆழியான் பற்றிய பதிவுகளை மேலே காணலாம்.

சசி,

நான் திண்ணையில் கூறியது போல் இவர் ஒரு SLAS ஆபிசர் என்பதை விக்கி உறுதி செய்கிறது.

செம்பியன் செல்வனும் இப்படியே.

ஆம், நிர்வாக சேவை அதிகாரி தான். வன்னியில் சில காலங்கள் உதவி அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அந்த அனுபவங்களை வைத்தும் சில கதைகள் எழுதியிருக்கிறார்! நல்ல எழுத்தாளர். ஆனால் கொஞ்சம் மேல் மாடியில் கனம் அதிகம்! யாழ் பல்கலைப் பதிவாளர் பதவியைத் தனக்குத் தரவில்லை என்று வழக்குப் போட்டார், கிடைத்தது என்று நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

வீடு பிரவுண் ரோடில் அல்லவா?

செங்கை ஆழியனின் "மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து" என்ற நூல் பாடசாலையில் படிக்கும் போது நான் வாசித்த இவரது ஒரே ஒரு புத்தகம். எனக்குப் பிடித்திருந்தது. மீண்டும் வாசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்குது ஆனால் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"யானை" நாவலை இவரது வேறெந்த நூலும் அடிக்குமோ தெரியாது! வன்னிக் காட்டுக்குள் போய் வந்த அனுபவம் கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

வீடு பிரவுண் ரோடில் அல்லவா?

நீரவியடிப் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக பிறவுண் வீதியில்தான் அவரது வீடு இருக்கின்றது.  இந்தப் பிறவுண் வீதியை லெப். கார்னல் பொன்னம்மான் வீதி என்றும் சொன்னார்கள்.  க. குண்ராசா அவர்களுக்கு ரேணுகா, பிரியா, ஹம்ஸா என 3 மகள்கள் உள்ளனர். சிறிது காலம் யாழ் மாநகர ஆணையாளராகவும் பல்கலைக் கழகப் பதிவாளராகவும் இருந்திருக்கிறார். செம்பியன்செல்வன் என அறியப்படும் யாழ் இந்துவின் முன்னாள் ஆசிரியர் ஆ. ராஜகோபால் இவரது உறவினர். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகோபாலும் AGA தானே? நண்பர் என்று நினைத்தேன். பேராவில் ஒன்றாய் படிதுமுள்ளனர். 

இவரின் மேற்சொல்லப் பட்ட 3 படைபுக்களும் பற்றி எனக்குத் தெரியாது ?

ஜஸ்டீன்,

கடற்கோட்டையை விடவா?

ஆச்சி பயணம் போகிறாள்.... ஒரு நகைச்சுவை சூறாவளி.

இங்கு இவரது உறவினர்கள் பலர் எனது நண்பிகள் .tw_blush:

ஊரிலேயே எனக்கு இவரை தெரியும் .இந்து கல்லூரிக்கு அருகில் தானே வீடு .ஸ்கூட்டர் வைத்திருந்தார் .வாடைக்காற்று  வாசிக்காத ஆட்கள் இல்லைதானே .

எனது அத்தானும் இவரும் ஒரே வருடம் தான் C.A.S  Exam pass பண்ணி AGA  ஆனார்கள் .இருவரும் பின்னொரு காலத்தில் வேலை நீக்கமும் பெற்றார்கள் .திரும்ப வேலையும் பெற்றார்கள் .

அத்தான் குச்சவெளியில் வேலை. வெள்ளைகளுடன் சேர்ந்து குடித்தே இறந்தார் .அவரும் ஒரு எழுத்தாளர்தான் .துருவன் என்ற பெயரில் எழுதினார்.

செங்கை ஆழியான் - ஈழத்து தமிழ் எழுத்தாளர்களில் வரலாற்றில் இவர் பெயரும் கட்டாயம் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

செங்கை ஆழியான்.. புவியியல் துறை பேராசிரியாராய் இருந்தவர் என்று நினைக்கிறேன்!

எனது தந்தையார் பேராவில் இவரது மாணவனாக இருந்தார்!

இவரது வாடைக்காற்று கதை எனக்கு மிகவும் பிடித்தது! ஆனால் நெடுந்தீவைப்பற்றிக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது!:rolleyes:

ஆச்சி பயணம் போகிறாவும் இவரது அருமையான கதைகளில் ஒன்று!

பிற்காலத்தில் தேவையில்லாது அரசியல் என்னும் சாக்கடைக்குள் இறங்கிச் சேறைப் பூசிக்கொண்டார் என்பது எனது கருத்து!

ஈழம் ஈன்றெடுத்த எழுத்தாளர்களில் ஒரு நிரந்தமான இடத்தைத் தனக்கெனத் தக்க வைத்துக்கொண்டவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

 

இவரின் மனைவியும் இவரது பழைய காதலியும் ( அவா பிறகு திருமணம் செய்யேலை) யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஒரே காலத்தில் ஆசியைகளாக இருந்தார்கள் என்று அறிந்தேன்... உண்மையா என்பது தெரியாது.....

 

Edited by மீனா

காட்டாறு நாவல் இவர் எழுதியதில் பிடித்தது , யானை, பனை சம்பந்தப்பட்ட ஒரு கதையும்  பிடித்தது 

'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும் முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பதாகக்குறிப்பிட்டிருந்த விடயமே அது.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாற்று ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது. புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம்) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற) ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றை வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியதாக ஞாபகம்.

இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இவரது நாவலான 'வாடைக்காற்று' ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.

என் மாணவப்பருவத்தில் நான் வாசித்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான். இவரது நந்திக்கடல் நூல் என்னிடமிருந்தது. சிரித்திரனில் தொடராக 'ஆச்சி பயணம் போகின்றாள்' நகைச்சுவை நாவல் தொடராக வெளியானபோது விரும்பி வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் சிரித்திரனில் வெளியான 'நடந்தாய் வாழி வழுக்கியாறு', வீரகேசரி பிரசுரமாக வெளியான 'வாடைக்காற்று', , அவரது சிறுகதையான ஈழநாடு வாரமலரில் வெளியான 'கங்குமட்டை' இவையெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றிய அவரது நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

செங்கை ஆழியான என்றதும் எனக்கு ஞாபகம் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அவரது அண்ணரான புதுமைலோலன் யாழ் நவீன சந்தைக்கு முன் நடாத்திய 'அன்பு புத்தகசாலை'தான். என் சிறுவயதில் நான் 'வெற்றிமணி' சஞ்சிகையினை வாங்குவதற்காக அங்கு செல்வதுண்டு. செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவலினையும் நான் அங்குதான் வாங்கினேன்.

செங்கை ஆழியான் அவர்கள் விரைவில் மீண்டும் பூரண சுகமடைந்து எழுத்துப்பணியில் ஈடுபட வேண்டுகின்றோம். அவரைப்பற்றி எழுத்தாளர் முருகபூபதி 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையினைக்கீழுள்ள இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.

இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.

இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்.
vaadai%2014.jpgபெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது. 
vaadai%2013.jpg
மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.

 

vaadai%2015.jpg
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள். vaadai%2012.jpg
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன். 
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம். 
vaadai%2011.jpg

நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.vaadai%2004.jpg

வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும். vaadai%206.jpg
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.


வாடைக்காற்று திரைப்படமான போது

 

vaadai%207.0.jpg
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
vaadai%209.jpg
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
vaadai%205.jpg

திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)


vaadai%208.jpg"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.