Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 இல் 2 ஆயிரம் மரங்களை நடுவோம் என்னும் செயற்றிட்ட மரநடுகை விழா!

Featured Replies

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 இல் 2 ஆயிரம் மரங்களை நடுவோம் என்னும் செயற்றிட்ட மரநடுகை விழா!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு 200இல் 2000(இரண்டாயிரம்) மரங்களை நடுவோம் என்னும் செயற்றிட்ட மரநடுகை விழா இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், சிறப்பு விருந்தினராக யாழ்.கல்வி வலய தொழில்நுட்ப பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேலினி பாலேந்திரா ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் மத்திய கல்லூரியின் சிநேகிதப் பாடசாலைகளான வேம்படி மகளீர் கல்லூரி யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் உத்தியோக பூர்வமாக முதலாவது மரத்தினை கல்லூரி வளாகத்தில் நட்டு வைத்தார்.

JCC%2065897e.jpg

JCC%2065898e.jpg

JCC%2065896e.jpg

 http://malarum.com/article/tam/2015/11/06/12430/யாழ்ப்பாணம்-மத்திய-கல்லூரியின்-200-இல்-2-ஆயிரம்-மரங்களை-நடுவோம்-என்னும்-செயற்றிட்ட-மரநடுகை-விழா-.html#sthash.f5qTGBMH.dpuf

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மத்திய கல்லூரியின் 200´வது, ஆண்டில்... 2000 மரம் நட்டது சந்தோசமான விடயம்.
அந்த மரங்களை..... கட்டாக்காலி ஆடு, மாடுகள் கடிக்காமல் பெரிய மரமாக வளர்த்துக் காட்டுவதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இதில்.... சமூகத்தின் பங்களிப்பும், மிக முக்கியம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கோட், சூட்,  உடனும்.... கூறைச்  சீலையுடனும் நடுவது மரம் அல்ல. பப்ளிசிட்டி என்னும் விஷம்.
எதனையும்.... ஒரு மனிதன், ஆத்மார்த்தமாக செய்யும் போதுதான்... அதன் ஆழம் வேரூன்றும்.
மிச்சமில்லாம்.... விழலுக்கு,இறைத்த நீர். 

  • கருத்துக்கள உறவுகள்

கோட், சூட்,  உடனும்.... கூறைச்  சீலையுடனும் நடுவது மரம் அல்ல. பப்ளிசிட்டி என்னும் விஷம்.
எதனையும்.... ஒரு மனிதன், ஆத்மார்த்தமாக செய்யும் போதுதான்... அதன் ஆழம் வேரூன்றும்.
மிச்சமில்லாம்.... விழலுக்கு,இறைத்த நீர். 

வாவ் சிறியண்ணா !
என்னுடைய மூளையை திருடி பயன் படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

உண்மையில் இதுதான் எழுத வந்தேன் ... 
வாசித்தவுடன் பிரமிப்பாக இருக்கு.

2000 மரத்திற்கும் எப்படி நீர் இறைப்பது ...
எப்படி பாதுகாப்பது 
இந்த மரங்கள் எந்த வகை மண்ணில் வளரும் 
போன்ற அறிவுதான் மரத்தை கொடுக்க முன்பு கொடுக்கபட வேண்டியவை.

மாறாக முதலில் மரத்தை கொடுத்து விடுகிறார்கள் .....
2000ல் 20 மரம் ஆனாலே பெரிய விஷயம். 

  • கருத்துக்கள உறவுகள்

 

வாவ் சிறியண்ணா !
என்னுடைய மூளையை திருடி பயன் படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

உண்மையில் இதுதான் எழுத வந்தேன் ... 
வாசித்தவுடன் பிரமிப்பாக இருக்கு.

2000 மரத்திற்கும் எப்படி நீர் இறைப்பது ...
எப்படி பாதுகாப்பது 
இந்த மரங்கள் எந்த வகை மண்ணில் வளரும் 
போன்ற அறிவுதான் மரத்தை கொடுக்க முன்பு கொடுக்கபட வேண்டியவை.

மாறாக முதலில் மரத்தை கொடுத்து விடுகிறார்கள் .....
2000ல் 20 மரம் ஆனாலே பெரிய விஷயம். 

JCC%2065896e.jpg

மருது...... 
இவர்கள் கட்டியுள்ள,  ரை... ,  இடுப்பில் வைத்துள்ள கை..... உதுகளைப் பார்க்கவே.... சிரிப்பு வந்துட்டுது.
திருந்தாத.... சனம்.

"ஒராள்..... வேலை செய்ய.... பத்துப் பேருக்கு, சம்பளம்"  என்று ஜேர்மனியில்... ஒரு பழ மொழி உள்ளது. :)

 

இரண்டாயிரம் மரங்களையும் இப்படி போஸ் கொடுத்து நடமாட்டர்ர்கள் .முதல் துவக்க விழா இப்படிதான் அநேகம் எங்கும் இருக்கும் .அனுபவமுள்ளவர்களுக்கு இப்படியான விடயங்கள் பற்றி தெரியும் .

மிக நல்லவிடயம் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் எடுத்து பிரசுரிப்பு செய்தவனுக்கும் மூளையிலை களிமண்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரம் மரங்களையும் இப்படி போஸ் கொடுத்து நடமாட்டர்ர்கள் .முதல் துவக்க விழா இப்படிதான் அநேகம் எங்கும் இருக்கும் .அனுபவமுள்ளவர்களுக்கு இப்படியான விடயங்கள் பற்றி தெரியும் .

மிக நல்லவிடயம் வாழ்த்துக்கள் .

ரை....  கட்டிக் கொண்டு, பின்னால்... கை  கட்டிக் கொண்டு..... மரம் நடுகிற  விழாவை.....
இன்று தான்... முதன் முதல் பார்த்தேன்.

அரசன்,    எவ்வழியோ... குடிமக்களும் அவ்வழியே......

எதுவும் செய்யாதவர்களுக்கு இவற்றை பற்றி தெரிந்திருக்க நியாயம் இல்லை .

நாளை கனடாவில் ட்ரூடோ ஐயாயிரம் மரம் நடுகின்றார் என்று ஒன்றை துவங்கினால் அவர் ஒரு மரத்தை நட்டு படமும் எடுத்துவிட்டு போய் விடுவார் .மிகுதி அவர் சார்ந்த அந்த அமைப்பு செயற்படுத்தும் .

நான் யாழ்ப்பாணத்தில் மரம் நடும் அமைப்பிற்கு பொறுப்பாக இருந்து மா ,தென்னை ,எலுமிச்சை என்று யாழ் மாவட்டம் முழுக்க நட்டோம் .பின்னர் யாழ் பிரதிநிதியாக கொழும்பு சென்று கொழும்பு கண்டி நுவரெலியா எல்லாம் மரங்கள் நட்டோம் .அப்போது  இளைஞர் அமைச்சிற்கு ரணில் விக்கிரமசிங்கா தான் பொறுப்பாக இருந்தார் .கடைசி நாள் BMICH   ரணில் தலைமையில்  மரம் நடுகை நான் ஒரு நாலு ஐந்து மரங்கள் நட்டேன் .

அறுபது சிங்களவர்கள் மத்தியில் அங்கு சென்ற ஒரே ஒரு தமிழன் நான் மட்டுமே .

அப்போ பட்ட பாட்டை பற்றி ஒரு பதிவு பின்னர் எழுதுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் யாழ் மாவட்டத்தில் தாம் இருந்தோம் நீங்கள் மரம் நட்டதை காணவில்லை. யாழ் மாவட்டம் முழுக்க நட்டிருந்தால் எம் வீட்டுப் பக்கம் அட்லீஸ் எம்மூர் பக்கமாவது வந்திருப்பீர்கள். 

எதுவும் செய்யாதவர்களுக்கு இவற்றை பற்றி தெரிந்திருக்க நியாயம் இல்லை .

நாளை கனடாவில் ட்ரூடோ ஐயாயிரம் மரம் நடுகின்றார் என்று ஒன்றை துவங்கினால் அவர் ஒரு மரத்தை நட்டு படமும் எடுத்துவிட்டு போய் விடுவார் .மிகுதி அவர் சார்ந்த அந்த அமைப்பு செயற்படுத்தும் .

நான் யாழ்ப்பாணத்தில் மரம் நடும் அமைப்பிற்கு பொறுப்பாக இருந்து மா ,தென்னை ,எலுமிச்சை என்று யாழ் மாவட்டம் முழுக்க நட்டோம் .பின்னர் யாழ் பிரதிநிதியாக கொழும்பு சென்று கொழும்பு கண்டி நுவரெலியா எல்லாம் மரங்கள் நட்டோம் .அப்போது  இளைஞர் அமைச்சிற்கு ரணில் விக்கிரமசிங்கா தான் பொறுப்பாக இருந்தார் .கடைசி நாள் BMICH   ரணில் தலைமையில்  மரம் நடுகை நான் ஒரு நாலு ஐந்து மரங்கள் நட்டேன் .

அப்படி நீங்கள் மரம் நாட்டியிருந்தால் இன்று அவற்றின் நிலை என்ன ? நீங்கள் ஆரம்பித்து வைத்த ஆயுதப் போராட்டத்தால் இலட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டனவே. அதற்கு என்ன செய்தீர்கள். 

சில குறிப்பிட்ட கிராமங்களை தேர்ந்து எடுத்து தான் அதை செய்தோம் .அரியாலை ,நாவாந்துறை ,காங்கேசன்துறை மற்றது எனக்காக கோண்டாவில் .

இணுவில் ,கோண்டாவில் பார்ம் ஸ்கூல் இல் மா ,எலுமிச்சையும் அரியாலையில் தென்னையும்  வாங்கினோம் .பேரதேனியாவில் ஈ எல் சேனநாயக்கா பெரிய பார்ட்டி ஒன்றும் வைத்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

அரியாலை, நாவாந்துறை, காங்கேசன்துறை, கோண்டாவிலுமா யாழ்ப்பாணம்? 

இங்கு என்ன விடயம் அலசப்படுகிறது என்று உங்களுக்கு விளங்கவில்லை. 

 

எதுவும் செய்யாதர்களுக்கு எதுவும் தெரியாது .

ஆழ்ந்த அனுதாபங்கள் 

கடைசி மரம் நடுகை பற்றி ஒரு வசனம் .tw_smiley:tw_smiley:tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆயிரம் மரம் நடுவது எனும் சிந்தனை சிறப்பானதும் 
தேவையானதும் .
எமது மூதையார் நட்டுவைத்த மரங்கள் மூலம் நாம் எவளவோ பயனை பெற்றோம் 
அதை அடுத்த தலைமுறைக்கும் பூமிக்கும் செய்வதில் 
மனதிற்கும் ஒரு ஆனந்தம். 

ஆனால் 2000 மரம் நடுவது என்பதை விட 
2000 கன்றுகளையும் எப்படி மரமாக்குவது என்ற கேள்விக்கு 
பதில்தான் முக்கியமானது.
அதற்கு விடை இல்லாத இடத்தில் ...
அது விழலுக்கு இறைத்த நீர் ஆக மட்டுமே எஞ்சும்.
இதுதான் எங்களுடைய கருத்து 
அர்ஜுன் அவர்கள் பிழையாக விளங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். 

ஒரு மரத்தை நடுவதற்கு ... செய்தவனுக்குதான் தெரியும் என்று சொல்பவர்.
ஒரு பூமியையே பேய்களிடம் இருந்து கட்டி காத்த புலிகள் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்று மறந்துவிடுகிறார்.

அதை பார்க்கும் போது இதை ஒரு சுயவிளம்பரமாக மற்றவர்கள் பார்க்கிறார்கள்.

ஒருவன் நல்லவனாக அல்லது கெட்டவனாகத்தான் இருக்க முடியும்.
மாதத்தில் 15 நாள் நல்லவன் 15 நாள் கேட்டவன் என்று யாரும் இருக்க  முடியாது.

பிரபாகரன் சர்வதிகாரி என்பவர்கள் .....
சம்மந்தர் சுமந்திரன் தம்பதிகள் சர்வாதிகாரிகளாக இருப்பதை பாராட்டி தேவாரம் பாடுவது 
முரண் ஆனது.
இங்கு சர்வாதிகாரம் பிரச்சனையாக இல்லை ...ஆட்கள்தான் பிரச்சனை.
மக்களாகிய எங்களுக்கு எல்லாமே பிரச்சனையாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ரம் நடுவது பாரப்பட வேன்டிய விடையம்தான்.ஆனால் மரம் நடும்போதே அதற்க்கு தண்ணீரும் வேண்டும் என்டும் யோசிக்க வேணும்.
மற்றது சிறியர் சொன்ன மாதிரி உடுப்பிலும் கவனம் செலுத்தியிருக்க வேணும்.இங்கை நிற்ப்பவர்கள் எந்த உடுப்பில் நின்று இருந்தாலும் அவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தொயும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மட்டத்தில் மரம் நடுகை எல்லாக் காலங்களிலும் நடத்தப்பட்ட ஒன்று தான். விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்த போதும் மரங்கள் நாட்டப்பட்டன. ரோட்டறிக்கழகம்.. லயன்ஸ் கழகம்.. சாரணியம்.. இவை பெரும்பங்கு வகித்தன. இப்ப... அதுவும் அரசியலாகிட்டுது.!

சொறீலங்கா முன்னேறாதததிற்கு முக்கிய காரணம் மக்களை சுதந்திரமாக சிந்திக்க செயற்பட விடாத அரசியல் தலையீடுகள் எங்கும்...! இப்படியான நாடு இன்னும் ஆயிரம் வருசம் சென்றாலும் இப்படியே தான் இருக்கும். tw_blush:

 

மாணவர்கள் மத்தியில் மரம் நடுகையை மட்டுமன்றி அவற்றின் பராமரிப்பின் அவசியம் பற்றியும் போதிப்பது அவசியம். 

Edited by nedukkalapoovan

மரங்கள் மாத்திரம் அல்ல முப்பது வருட போரில் அழிந்த அழித்த அனைத்தையும் தான் மீள் கட்டவேண்டும் .

போன உயிர்கள் மட்டும் திரும்பிவர வைக்க முடியாது .

இதற்குள் போர் முடிந்துவிட்டது என்று பல புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆதங்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மரம் நட்டது பற்றி ரீல் விட மனைவி மரம் தறிக்கிறார். சூப்பர் கொம்பினேசன், 

போன உயிர்களை திரும்ப வர வைக்க முடியாது என்பவர்கள் ஆயுத போராட்டத்திற்கு போனவர்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வாறீங்கள் மர நடுகையை தொடர வேணுமோ/இல்லையோ?
அல்லது
உடுப்பு போடாமல் நின்று மரம் நட வேண்டுமோ?
இது காலம்,காலமாய் நடந்து கொண்டு தான் இருக்குது.இப்ப இணைய வசதிகள் அதிகமாய் இருப்பதால் படம் எடுத்து போடினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.