Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த யாழ்ப்பாணம்

Featured Replies

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு பிடித்ததும், பிடிக்காததும் பற்றிய எனது அனுபவத்தை பற்றி எழுதவேண்டும்போல் இருந்தது....முதலில் பிடிக்காததை எழுதுகின்றேன்...
.
இரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலை ஏழுமணியளவில் யாழ்ப்பாணத்திற்குள்ளே....வந்து சேர்ந்ததுமே முதலில் பார்த்தது நாய்களைத்தான் பல ரோட்டில் அலைந்து திரிந்தன....மனிதரைவிட நாய்களே பெருமளவில் தென்பட்டன....அதில் பல குட்டைநாய்கள்...சிலவற்றிகு உடம்பில் மயிர் முழுதும் கொட்டிப்போய் புண்ணாகி இருந்தது....வீடு போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட நாய்களை கண்டுவிட்டேன்...ஏற்கனேவே நாய் என்றால் எனக்கு அலர்ஜி, கடித்தால் இருபத்தியொரு ஊசி போடவேண்டும்.....அதுவும் யாழ்ப்பாணத்து ஊசி என்றால் சொல்லதேவையில்லை.

ஒரு தடவை நடந்து போய்கொண்டிருக்கும்போது நடைபாதைக்கு குறுக்கே குட்டை நாய் ஒன்று காதை விடாமல் சொறிந்து கொண்டிருந்தது.....ரோட்டை cross பண்ணுவமென்றால் வாகனங்கள் விடாது போய்கொண்டிருந்தது......சிறிது கணம் நாயையே பார்த்துகொண்டிருந்துவிட்டு...படக்கென ஒரு சைட்டால் பாய்ந்து போய் திரும்பிப்பார்த்தால்....அதன் காதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

இன்னுமொருமுறை....சைக்கிளில் போய்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது......நானும் தூரத்திலிருந்தே பெல் அடித்துக்கொண்டு போனேன்...அது சைட்டால் திரும்பிபார்த்துவிட்டு அப்படியே அசையாமல் நின்றது....எனக்கு ஒருபயம் நாய் கலைக்குமா.....கலைத்தால்....காலை தூக்க ஆயத்தமாக இருக்கவேணும் (பழைய எக்ஸ்பீரியன்ஸ்)...கிட்டபோய் நாயை விலத்தி நடுரோட்டால் எடுக்க நினைத்தபோது அதுவும் சடக்கென நடுரோட்டுக்கு வந்துவிட்டது......ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலிக்கரையால் மரங்களுடன் தேய்படாமல் ஓடிவந்துவிட்டேன்.....இதில் முக்கியமான விடயம் எனக்கு பாலன்ஸ் பண்ண கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.....தொடந்து ஓடினால் சரியாகிவிடும். நாய்களினால் பல வீதி விபத்துக்கள் நடப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.....முன்புபோல் அல்லாமல் இப்போ நாம் தான் நாய்களை விலத்தி ஓடவேண்டும் அவ்வளவிற்கு நாய்களின் மனோபாவம் மாறிவிட்டது.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் அங்கு இல்லை, பக்கத்து வீட்டில் விசாரிப்போம் என போனால் அவர்கள் gate திறந்திருந்தது..... படக்கென கேட்டை சாத்திகொழுவி விட்டு ஹலோ என்று கூப்பிட்டால்.....கருப்பும்,மண்ணிறமும் சேர்ந்த களரில் கடிநாய் ஒன்று பாய்ந்து வந்து எட்டி எட்டி பார்த்து குரைதுக்கொண்டிருந்தது.....வீட்டுகாரர் வந்து நாயை கலைக்காமல் யார் நீங்கள், யாரை பாக்கபோகிறீர்கள் என சாவகசமாக கேள்வி கேட்டுகொண்டிருந்தார்......நாய் விடாமல் குரைத்து நாம் பேசுவதை குழப்பிகொண்டிருக்க, வெயில் ஒருபக்கம் கொளுத்தி எரிய.......எனக்கென்றால்....நல்ல கட்டை ஒன்று எடுத்து அந்த நாய்க்கு இறுக்கினால் என்ன என்றிருந்தது.....அரைகுறை பதிலுடன் நானும் நண்பியும் புறப்பட்டுவிட்டோம்.

எமக்கு மூன்று நேரமும் உணவு சமைத்து தருபவர் எனது நண்பியின் அக்கா...நான் இருந்த வீட்டிலிருந்து....அக்கா வீட்டிற்கு பின்பாதையால் போகலாம். அவர்கள் வீட்டில் லக்கி என்ற பெயருடைய நாய் ஒன்று வளர்க்கிறார்கள்.....அதை இரவில் எல்லோரும் படுத்தபின் அவிழ்த்து விடுவார்கள்.......முதல்நாள் நண்பியுடன் (நண்பிக்கு லக்கியை ஏற்கனவே பழக்கம்) பின்னால் நடந்துபோகும் போது....லக்கி என்னைபாத்து பல்லை நெருமியபடி இருந்தது......அடுத்தநாள் தனியே போகவேண்டி வந்துவிட்டது....மெதுவாக எட்டிப்பார்த்தால் லக்கி கண்ணை மூடி படுத்திருந்தது.....நானும் மெதுவாக அடிவைத்து பின் பாய்ந்துகொண்டு போகும்போது.......தப்பவிட்டுவிட்டேன் என்ற மாதிரி குரைத்துதள்ளியது. அடுத்தநாள் நண்பியுடன் பக்கத்தில் ஒட்டியபடியே நடந்து போனேன்.....படுத்திருந்த நாய் பாய்ந்துதே ஒரு பாய்ச்சல்......நண்பி எனக்குமேல் சாய நான் தென்னைமரத்துடன் செருகுப்பட்டு என்கையில் சிராய்ப்பு......அவர்களும் அன்று பார்த்து நல்ல நீட்டு கைற்றில் கட்டியிருந்தார்கள்...அதன்பின் எப்பவுமே ரோட்டால் தான் சுற்றிப்போவேன்.

அத்துடன் யாழ்பாணத்தில் கள்வர்களின் தொல்லை அதிகம் அதனாலும் பலர் ஒன்றிற்கு மேற்பட்ட நாய்களை வளர்க்கிறார்கள். ஒருவர் கூறினார் தனக்கு மூன்று பெண்பிள்ளைகள் ஆண் துணை இல்லை, அதனால் வீட்டுக்கு வரும் நாய்களுக்கு சாப்பாடு போட்டுவருகிறாராம் அதனால் அவை இரவில் தனது வீட்டிலேயே தங்கிவிடுகின்றனவாம். இதில் ஒரு குட்டை நாயும் அடக்கம்.
மேலும் 2010இல் யாழ்பாணம் போயிருந்தபோது பல வீட்டு படலைகளிலும் தண்ணி போத்தல்களும் பிளாஸ்டிக் பைகளும் கட்டியிருந்தார்கள் அவை நாய்கள் gate இல் சிறுநீர் தவிர்ப்பதற்காக...அதே காட்சியை இன்று ஐந்து வருடங்களின் பின்னும் காணக்கூடியதாக தாக இருக்கிறது....

இதைவிடை நாய்களின் கழிவுகள் பெரும் தொல்லை....ரோட்டிலும் நடைபாதைகளிலும் கும்பம் கும்பமாக இருக்கும்....நடந்து போய்கொண்டிருக்கும்போது தூரத்தில் கண்டாலே வாயில் எச்சில் ஊறி துப்பத்தொடங்கி விடுவேன். நான் நிற்கும்போதே கனமழை பெய்யத்தொடங்கிவிட்டது......நினைத்தாலே அருவருக்கிறது. 
முன்பெல்லாம் கட்டாக்காலி நாய்களை பிடித்து கொண்டுபோய் பண்ணைகடலில் தள்ளிவிடுவார்கள். இந்த நாய்த்தொல்லைக்கு காரணம் மகிந்தராஜபக்ச என்கிறார்கள் அவரது ஆட்சியில் நாய்களை கொல்லக்கூடாது என சட்டமாம்....ஏன் என்ற காரணம் யாருக்கும் சரியாக தெரியவில்லை..:

நாய்கள் மட்டுமல்ல சில இடங்களில் மாடுகள் கூட ரோட்டில் அலைந்து திரிகின்றன, நானும் பக்கத்துவீட்டுபொண்ணும் ஒழுங்கையால் வந்துகொண்டிருக்கும் போது எமக்குமுன் மூன்று மாடுகள் வந்துகொண்டிருந்தன அவை போகும்வரை ஒரு கோயில் பக்கம் ஒதுங்கி நின்று பின் நடக்கத்தொடங்கினோம்...இதே நேரம் ஒதுங்க இடம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்....பக்கத்திலிருக்கும் வீடுகளுக்கும் போகமுடியாது gate சாத்தியிருக்கும், நாய்கள்வேறு, மாடு இடிக்காது என்று அலட்சியம் பண்ணாமலும் இருக்கமுடியாது..
...
மேலும் பிடிக்காதது தொடரும்....................

.

11059604_10153255506103354_9221149953513

12239908_10153255506203354_8560139081343

12247023_10153255506113354_2722578305117

12227686_10153255506243354_5254164921964

ம்ம் தொடர்ந்து பகிருங்கள் அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ...ஒருத்தருடனும் செல்பி எடுக்கவில்லையோ?

  • தொடங்கியவர்
4 hours ago, நவீனன் said:

ம்ம் தொடர்ந்து பகிருங்கள் அர்ஜுன்

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புனைவல்லாத பதிவுகள்!

இந்த கட்டாக்காலி நாய்கள் வெறும் தொல்லை மட்டுமல்ல, மனித ஆரோக்கியத்திற்கும் கூடாதவை!. முக்கிய பிரச்சினை -றேபிஸ் எனப்படும் விசர் நோய். இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 50 பேர் றேபிசினால் இறக்கிறார்கள். அனேகமான கேஸ்கள் மட்டக்களப்பில் தான்! ஒன்று கொல்ல வேண்டும் அல்லது தடுப்பூசியும் போட்டு, இனப்பெருக்கத் தடுப்பும் செய்ய வேண்டும். கொல்லப் போனால் மிருககாருண்ய அமைப்புகள் தடுக்கின்றன. இனப்பெருக்கத் தடைக்கு சத்திர சிகிச்சை செய்யப் பணம் தேவை. அரசிடம் பணம் இல்லை. எப்போதும் வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் தான் பண உதவி செய்கின்றன. தடுப்பூசியை கட்டாக்காலி நாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் போடும் பொறுப்பு ஏனோ உள்ளூர் சுகாதாரத்திணைக்களத்திடம் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இது சரியாகச் செய்யப் படுவதில்லை! இத்தனை நாய்களுக்குப் போட்டோம் என்று பொய்க்கணக்குக் காட்டிக் காசு வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள். சில ஊழியர்கள் நாய் தானே என்ற அலட்சியத்தில் ஒரே ஊசியை பல நாய்களுக்கும் பயன் படுத்துவார்கள். இதனால் டிஸ்ரெம்பர் என்ற தொற்று நோய் நாய்களிடையே பரவி அவை இறக்கின்றன. இதில் ஒரு சுவாரசியமான ஒரு விடயம், இந்த டிஸ்ரெம்பர் நோயின் அறிகுறிகளும் றேபிஸ் போல இருப்பதால், பல நாய் உரிமையாளர்கள் தடுப்பூசி போட்டதால்  தங்கள் நாய்களுக்கு றேபிஸ் வந்து விட்டதாக நம்பி விடுகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவு: தடுப்பூசி போட அடுத்த முறை சுகாதார ஊழியர்கள் வரும் போது கட்டாக்காலி நாய்களையும் துரத்தி, வீட்டு நாய்களையும் ஒழித்து வைத்து விடுவார்கள்!    

இன்னொரு பிரச்சினை: கட்டாக்காலி நாய்களின் கழிவில் இருந்து வெளிவரும் புழுக்களில் அன்சைலொஸ்ரோமா எனும் புழு எமது உடலில் தோலில் தங்கி வாழ்வதால் சொறி சிரங்கு போன்ற நிலைமைகள் வரும்.   

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாசிக்கும் போதே அதரியும் உங்கள் மனைவியின் பதிவு என்று.தொடருங்கள்.

2 hours ago, arjun said:

குறிப்பிட மறந்துவிட்டேன் மனைவி எழுதிய  பதிவு இது நவீனன் .

தெரியும் அர்யுன். நான் தொடருந்து பகிருங்கள் என்றதின் அர்த்தம் யாழ் கோட்டை பதிவையும். :)

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மீனா said:

நானும் யாழ்ப்பாணம் போய் வந்த மாதிரி இருந்தது வாசிக்கும் பொழுது... நல்ல எழுத்து நடை.... அண்ணியையும் கூட்டி வாங்கோ யாழுக்கு.... 

இணைப்புக்கு நன்றி அ.அண்ணா :)

அண்ணியை கூட்டி வாங்கோ.... Is she also anti tigers ? tw_tounge_wink:

Edited by putthan

இன்று வரை ஊருக்கு போக கிடைக்காத என் போன்றவர்களுக்கு என்றே  எழுதப்பட்ட   அனுபவக் கதைகள்......

.

விடுதலை புலிகளால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

சிங்கள அரசால்  தேடப்பட்டவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஏன்  கருணா, டக்கிளஸால் தேடப்படவர்களும் ஊருக்கு போய் வந்து விட்டார்கள்

ஆனால் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் மட்டும் இன்னும் சேர்க்கப்படாடவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள்...

பின் குறிப்பு;  அண்ணி வாறது முக்கியமில்லை  அண்ணிட நண்பியின் அக்காவையும் யாழுக்கு கூட்டி வரவும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

தொடர்ந்து பதியுங்கள் அண்ணா. வாசிக்க ஆவல்

அடுத்தது இலையான் மொய்க்கும் கதை வரும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

யாள்பானம் பெரிய நகரமாக இருக்குமென்னு பத்திர்க்கை செய்திகல படிக்கும்பொது நினைச்சிட்டுந்தேன். பார்த்தா பக்கா கிராமமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2015 00:22:27, nedukkalapoovan said:

யாழ்ப்பாணம் இன்னும் வெளிநாட்டு தமிழர்கள் அங்க போய் பந்தா காட்டும் நிலைக்கு தாழ்ந்தப்பட்டு தான் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது தாங்கள் போக விடுப்புக்காட்டிற இடமா இருக்கனும்.. தங்களை மதிக்காத நிலைக்கு.. அதிகம் முன்னேறி அபிவிருத்தி அடைந்துவிடக் கூடாது.. இதில் எம்மவர்களே மிகவும் கவனமாக இருக்கும் போது சிங்களவன்.. எப்படி இருப்பான்.

அண்மைய யாழ்ப்பாண காணொளிகளில் கண்டதை வைச்சு காண்கிற போது யாழ்ப்பாணம்.. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேற அனுமதிக்கப்படாது போலவே உள்ளது. tw_astonished:tw_anguished:

சீனக் குக்கிராமங்கள் எல்லாம் நவீனமயமாகி வரும் நிலையில்.. யாழ்ப்பாணம் மட்டும் இன்றும் அதே பழைய சீன்களோடு.. பாசிபிடித்த கட்டடங்களோடு.. மதில்களோடு.. குட்டைநாய்களோடு............................................................... இதுதான் வெளிநாட்டுக்கு ஓடியந்த தமிழர்களுக்கும் தேவை. பந்தாகாட்ட. தாங்கள் ஓடியாந்ததை பொருளாதார ரீதியில்.. நியாயப்படுத்த. :rolleyes:

100 வீதம் உண்மை.

  • தொடங்கியவர்
On 11/23/2015, 6:22:27, nedukkalapoovan said:

நெடுக்கருக்கு பதில் எழுதுவது நேர விரயம் .எதற்கு எடுத்தாலும் உப்பு கூட அல்லது குறைய என்று குற்றம் பிடிக்கும் பேர்வழிகளில் ஒருவர் .பிறந்த வீட்டை சொந்த மண்ணை பார்க்கபோவது பந்தா காட்ட என்று ஒருவர் நினைத்தால் அவருக்கு ஏதோ பிரச்சனை .

போராட்டம் எனறவுடன் நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு நாட்டிற்கு இன்னமும் திரும்பவில்லை போலிருக்கு .நாட்டில் முப்பதுவருடங்கள்  போர் நடந்துதும் மறந்து விட்டது போலிருக்கு .போர் முடிந்தும் ராஜபக்சா ஆட்சியில் பயந்து போயிருந்த மக்கள் இப்போ தான் சற்று நிம்மதியாக ஏதோ செய்ய தொடங்குகின்றார்கள் அதுவும் தம்பிக்கு பிடிக்கவில்லை போலிருக்கு . 

அரசாங்கம் ரோட்டை போட்டால் குற்றம் ரெயினை விட்டால் குற்றம் .அபிவிருத்தி என்ற பெயரில் சுத்துகின்றார்கள் என்று ஒரு பக்கம் புலம்பல் எதுவும் செய்யாவிட்டால் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூச்சல்  .

மனைவியின் பதிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை உண்மை அதுதான் .என்னை திட்டும் அவசரத்தில் பிடிக்காத பக்கம் என்று மனைவி எழுதியதையும் கவனிக்கவில்லை போலிருக்கு .

எதற்கும் நெடுக்கரே நேரில் ஒருக்கா போய்வந்து பின்னர் கருத்து எழுதவும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

ஒன்றைச் சொல்லிக் கொண்டு இன்னொன்றைச் செய்வது தான் வீண் வேலை. எழுதுவது நேர விரயம் என்றால்.. எது எழுதத் தூண்டியது.. அங்கு பேசப்பட்ட யதார்த்தம் தான். வெளிநாட்டில் உள்ளவர்களில்.. உங்களில்.. எத்தனை பேர் தாயக அடங்காப்பற்றில்... அங்கு இப்போ நல்லாட்சி திரும்பி விட்டது என்ற களிப்பிலும்.. தாயகத்தை முன்னேற்றவும் என்று நிரந்தரமாகப் போய் இருக்கிறீர்கள். நீங்கள் போகவில்லை.. உண்மையான தாயகப் பற்றுள்ளவன் போராட்ட காலத்திலேயே தாயகம் திரும்பி இருக்கிறான். நிரந்தரமாகத் திரும்பி இருந்திருக்கிறான். அதில் சிலரைச் சொல்லலாம்.. ஒருவர் யோகரட்ணம் யோகி.. இன்னொருவர் போராசிரியர் துரைராஜா. அவர்கள் மக்கள்.. மண் என்று போனார்கள்.. நீங்கள்.. உங்கள் உறவுகள் போவது கட்டுரையும் கதையும் என்ற போர்வையில் உங்கள் பந்தாவை இனங்காட்டவே அன்றி வேறில்லை. அந்த மக்களின் வறுமையும்.. போராட்டக் காயங்களும் தான் உங்கள் செழிப்பு மிகுதியை வெளிக்காட்ட தோதான களம் என்பதை தெரிந்து போகிறீர்கள். இந்த பந்தாவை.. கனடாவில்.. பணக்கார வெள்ளைகளிடம் ஏன் காட்டமுடியவில்லை. ஏன்னா அவனுக்கு தெரியும் நீங்கள் கனடாவில் யாருன்னு. அவன் அகதின்னு அல்லது குடியேறி என்று... மூஞ்சில துப்பி அனுப்புவான்.

இங்கு.. நீங்கள் கட்டுரை கதைக்கு அப்பால்.. எதை அந்த மண்ணுக்காக ஆக்கினீர்கள்.. என்று சொல்லலாம். சொல்ல முடியவில்லையே.. ஏன்..???!

நாங்கள் போராட்ட காலத்தில் 70-80% தத்தை அந்த மண்ணில் கழித்தவர்கள். 30 வருட போராட்ட வரலாற்றில் 25 வருடங்களை அந்த மண்ணில் ஆக்கிமிப்புக்கள்.. நில விடுவிப்புக்கள் இவை இரண்டையும் உணர்ந்தவர்கள். எமக்குத் தெரியும்.. எது சுதந்திரமானது.. எது பந்தாவானது என்று.. எது பயங்கரமானது.. எது காட்சிப்படுத்தலானது.. எது.. யதார்த்தமானது என்று. எங்களிடம் நடிப்புகள்.. நாடகங்கள் அவசியமில்லை. யதார்த்தம் என்பதை எங்களுக்கு இனங்காண எங்களாலேயே முடியும்.

நாம் மண்ணை முற்றாகப் பிரிந்தில்லை. மண்ணோடு அதன் நினைவொடு.. அதன் இயக்கத்தோடு தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்.. யாரும் பந்தாவுக்கு போய் வந்து தங்களின் சுய இன்ப துன்ப விருப்பு வெறுப்புக்களை வைச்சுப் புனையும் புனைவுகளில் உண்மையை தரிசிக்க வேண்டிய நிலையில்.. நாங்கள் இல்லை. 

கதை கதையாகவே இருக்கட்டும். அதை யதார்த்தம் என்றும் நியாயம் என்றும்.. அதிமதிப்பீடு அளிப்பதை நீங்கள் மற்றும் சில போய் வாற பந்தி விசுவாசிகள்.. கைவிட்டாலே.. அத்தகைய ஆக்கத்துக்குள் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது.  tw_blush: 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

9172-Jaffna%20Railway%20Station.jpg

15474199216_30680fca36.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்காட்டல்கள் தேவையில்லை. போர் என்பதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு தான் என்ன விலை கொடுத்தாலும் விடுதலை என்ற அந்த விலைமதிக்க முடியாத பொக்கிசத்தை உருவாக்க பாடுபட்டார்கள் பலர். இப்படி சகடை.. விமானத்தால்.. பீப்பா குண்டு போட்டு உடைத்த..  அதே சிங்களவனே.. உலக நாடுகளிடம்.. உதை பயங்கரவாதிகளின் நடவடிக்கை என்று காட்டி.. காசு வாங்கி... பழைய..கட்டிடத்துக்கு சீமேந்து வேலை செய்து வர்ணம் பூசிக்காட்ட என்று யாரும் போராடப் போகவில்லை. இதுதான் அந்த மக்களின் தேவை என்றிருந்தால்.. அந்த மண் போராட வேண்டிய தேவையே இல்லை ஏனெனில்.. இந்த இரண்டு நிலைக்கும் முந்தைய நிலை இது இரண்டையும் விட அவ்வளவு மோசமில்லை.

இன்று ஒரு குழந்தையிடம் இதனைக் காட்டிலுனாலும் அது கூகிளில் தேடி விபரம் அறியும்... உண்மை எது என்று ஆராய முற்படும். நீங்கள் படம் காட்ட பந்தா காட்ட யாழில் அதனை நம்ப ஒரு சில சிங்கள அடியேந்திகள் இருக்கலாம்.. மக்கள்.. எல்லாம் அறிவார்கள். tw_blush:

Edited by nedukkalapoovan

தொடர்ந்து இணையுங்கள் அ.அ :)

  • தொடங்கியவர்

முதலாவது நெடுக்கர் விரும்பும் யாழ் ஸ்டேசன் 

இரண்டாவது மக்கள் விரும்பும் யாழ் ஸ்டேசன் .

நெடுக்கு தம்பிக்கு ஒரு கொசுறு செய்தி -

நானும் யோகியும் ஒரு நாள் இடைவெளியில் தான் இந்தியா சென்றோம் .

யோகி சொந்த இயக்கத்தால் நகம் புடுங்கபட்டு பங்கருக்குள் அடைக்கப்பட்டு இருந்தார்.

எனக்கும் ஏறக்குறைய அந்த நிலை வந்தது ஒருவாறு தப்பி வந்துவிட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

இதைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு யாழ்ப்பாண மக்களும்... மண்ணும் விடுதலை ஆவதில்.. நவீன மயமாவதில் விருப்பமில்லை. அந்தப் பழைய நிலையை மெல்ல மெருகூட்டி காட்டி அந்த மக்களை மகா மட்டமான உலகில் வைச்சிருக்கனும்.இல்லாட்டி நீங்க எப்படி பந்தா காட்டிறது. எப்படி போய் வாறது. 

இன்று நாடு என்ற ஒன்று எம்மிடம் இருந்திருப்பின்.. 

lisbon-portugal-oriente-train-station-li

displaymedia3.png

நாங்கள் இப்படி வளர்ந்திருப்போம். நீங்கள் உடைந்ததை பூசிக்காட்டினதை விட இந்த நவீனத்தை இன்னும் அதிகம் மக்கள் வரவேற்றிருப்பார்கள்.. அதுவும் பூரண சுதந்திரச் சூழலில்..! 

யோகி விடயமாக.. ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்று வைச்சுக் கொண்டால்.. யோகி நகம் புடுங்கினதுக்கு பயந்து.. நாட்டை விட்டு ஓடேல்ல. கடைசி வரை தான் தன் கொள்கையில்.. உறுதியானவன்.. என்று மண்ணில் நின்று காட்டி நகம் புடுங்கினவைக்கே பாடம் எடுத்தார் பாருங்க. அவன்.. போராளி. நீங்க.. பந்தாவாளி. tw_blush: இப்ப புரியுதா வேறுபாடு. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஓடேலா அல்ல ஓட விடல .

லண்டனில் எவரை கேட்டாலும் சொல்லுவார்கள் யோகியின் உற்ற நண்பர் யார் என்று அவரிடம் போய் நடந்ததை கேட்கவும் .

தமிழ்கவியின் ஊழிகாலம் வாசிக்கும் போது இதை விட புதிய விடயங்கள் அறிந்தேன் பாஸ் என்று ஒரு விடயம் இல்லாவிட்டால் எப்பவோ முக்கால்வாசி சனம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடியிருக்கும் .

அப்ப நீங்கள் நகம் புடுங்ய சிங்கள இராணுவத்திற்கு போய் பாடம் எடுத்து போராளியாக மாறுங்க .

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் இல்லாமலும் அகதி அந்தஸ்துக்கு சனம் ஓடினதுதான்..இந்திய படை காலம் பற்றி புல்லுப்புடுங்கி தமிழ்கவிக்கு தெரியாது போல.

சொறீலங்கால  பாஸ்போட் விசா இல்லைன்னா சிங்களவன் எல்லாம் இத்தாலில.தமிழன் கனடாவில.

யோகி ஓடனுன்னு நினைச்சிருந்தா ஓடி இருக்கலாம். கருணவால்..முடிஞ்சது.. ஆனால் யோகிக்கி கொள்கை.. மண்..மக்கள்..தான் முக்கியமானார்கள். ???

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாராத சொந்தமான படைப்புகள் ஆக்கங்களில் கூட தேவையற்று அரசியலைத் திணித்து சலிப்பூட்டும் நிலை இப்ப கொஞ்ச நாட்களாக யாழில் அதிகரித்துக் காணப்படுகிறது. திரிக்குத் தேவையற்ற கருத்துக்களை அகற்றுவதோடு மட்டும் நின்று விடாமல், நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கைகள் ஏதாவது எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்! 

அர்ஜூன், சிறுபிள்ளைகளுக்கு எட்டாத விடயங்களை விளங்கப் படுத்துவதில் நேரத்தை விரயமாக்காமல் நாம் ஆவலுடன் வாசிக்கும் உங்கள் மனைவியின் ஆக்கத்தை தொடர்ந்து இணையுங்கள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.